Advertisement

“மது மா. எனக்கு பதறுது டி. நீ சொல்றது எல்லாம் நிஜமா?”
“நிஜம் தான் மா. இங்க பாருங்க. அன்னைக்கு அத்தான் எனக்கு போட்ட செயினை”
“ஐயோ, இந்த சனியன்  ஏன் இப்படி செஞ்சான்னு தெரியலையே”
“அம்மா எனக்கு அத்தான் வேணும் மா. அவளுக்கு எல்லாமே நான் விட்டு கொடுத்திருக்கேன். என்னோட உங்களை, உங்களோட  பாசத்தை, எனக்கு பிடிச்ச படிப்பை, வேலையை, எனக்கு பாத்துருக்க மாப்பிள்ளையையும் விட்டு கொடுத்தேன். ஆனா இப்ப அவர் என்னோட புருஷன் மா. என்னால அவரை விட்டு கொடுக்க முடியாது. எனக்கு அவர் வேணும் மா”
“நீ கிளம்பு மது. இன்னையோட இதுக்கு ஒரு  முடிவு கட்டலாம். நீங்களும் கிளம்புங்க”, என்று சொன்ன அன்னம் அடுத்த நொடி அடுப்பை அணைத்து விட்டு அனைத்தையும் மூடி வைத்து விட்டு கிளம்பி விட்டாள்.
அறைக்குள்ளே சென்று ஒரு சுடிதாரை எடுத்து போட்ட மது  கண்களில் நீருடன் வெளியே வந்தாள்.
ஆட்டோ பிடித்து அம்மாவையும், மகளையும் அமர வைத்த கேசவனும் அதில்  ஏறி கொண்டார். 
வதனியை கொலை செய்யும் அளவுக்கு அவருக்கு கோபம் வந்தது. 
அங்கே வீட்டுக்கு சென்ற வதனியை “மீராவும் மனோஜும் இன்னைக்கு வெளிய இருக்காங்க. நீ அம்மாவுக்கு சமையலுக்கு உதவி செய்”, என்று சொல்லி விட்டு மேலே சென்று விட்டான் தேவா.

உள்ளே போனவனுக்கு மனமெல்லாம் கொதித்தது. எரிச்சலின் உச்சத்தில் இருந்தான். 

அவன் மேலே போனதும், “நான் இங்க சமையலுக்கு உதவி செய்யவா வந்தேன்? சே”, என்று நினைத்து கொண்டு அந்த வீட்டையே பார்த்தாள். “எவ்வளவு பெரிய வீடு? இது எனக்கே எனக்கு தான். யாரு இந்த மனோஜ்? யாரு இந்த மீரா? இப்ப எப்படியும் மது வேற எந்திச்சு பிரச்சனை கிளப்புவா. அவளை யாரு நம்ப போறா? நம்புறதுக்கு அவளுக்கும் தேவாவுக்கும் இடையில இருக்குற அந்தரங்கத்தை மட்டும் தான் கேக்க முடியும்? ஆனா அப்படி கேட்டு தான் மது அவளை நிரூபிக்கணும்னு சொன்னா கண்டிப்பா அதை செய்யவே மாட்டா. அவ தான் ரோச காரியாச்சே. தேவா அவளை நம்பலைன்னு தெரிஞ்ச உடனேயே, தேவாவை விட்டு பிரிஞ்சிருவா”, என்று நினைத்து கொண்டாள்.

“வந்துட்டியா மது மா. வா வா, இந்தா இந்த காயை மட்டும் வெட்டி கொடு. இப்ப சமையல் முடிஞ்சிரும். நீ வேற பசி தாங்க மாட்டேன்னு தான் சீக்கிரம் ஆரம்பிச்சேன். ஆனாலும் நேரம் ஆகிட்டு”, என்று குரல் கொடுத்தாள் சாவித்திரி.

போலி சிரிப்புடன் அவள் அருகே சென்றவள் காயை வெட்ட ஆரம்பித்தாள். 

“இவளை இங்க அனுப்பிட்டு அங்க மதுவுக்கு என்ன தூக்கம்? இப்ப வரட்டும்? வந்த உடனே அவளுக்கு இருக்கு”, என்று நினைத்து கொண்டே பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் பாய்ந்து உள்ளே ஓடி போனாள் மது.

அவளுடைய தவிப்பை கண்ட பெற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் வேதனையாக பார்த்து கொண்டார்கள்.

சாவித்ரி அருகில் அமர்ந்து சிரித்து கொண்டே காய் வெட்டி கொண்டிருந்த வதனியை பார்த்து உச்ச கட்ட எரிச்சலானாள் மது.

அடுத்த நொடி “அத்தை”, என்று அலறினாள்.

வதனியும், சாவித்திரியும் திரும்பி பார்த்தார்கள்.

“பிரச்சனை பண்ண வந்துட்டா”, என்று நினைத்து கொண்டாள் வதனி.

“ஓ வதனியா? என்ன மா அங்கேயே நின்னுட்ட? உள்ள வா. நீ வந்துருக்குறதா மது சொன்னா. எப்படி இருக்க?”, என்று கேட்டாள் சாவித்ரி.

தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது மதுவுக்கு. “அத்தைக்கும் என்னை தெரியலையா?”, என்று மறுபடியும் அங்கே அழுதாள்.

குழப்பத்துடன் விழித்தாள் சாவித்ரி. அப்போது தான் உள்ளே வந்தார்கள் கேசவனும், அன்னமும். அவர்களுடன் மனோஜும், மீராவும் வந்து விட்டார்கள்.

நடு வீட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்த மதுவை பார்த்து அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.

“வா கேசவா, எதுக்கு வதனி அழுதுட்டு இருக்கா”, என்று கேட்டாள் சாவித்ரி. 

“என்னை மன்னிச்சிருங்க அக்கா. உங்க கிட்ட இருக்குறது மது இல்லை. அவ தான் வதனி. இங்க அழுதுட்டு இருக்குறவ தான் மது”, என்று அனைவருடைய தலையிலும் இடியை இறக்கினார் கேசவன்.

அடுத்த நொடி “நீங்க எனக்கும் அப்பா தான பா? என்னை பாத்து இப்படி சொல்றீங்க? உங்க மதுவை உங்களுக்கு அடையாளம் தெரியலையாப்பா?”, என்று உருக்கமாக பேசி நடித்தாள் வதனி.

“சும்மா நடிக்காத டி. மாப்பிள்ளை போட்ட செயின் இவ கழுத்துல தான் கிடக்குது”, என்றாள் அன்னம்.

“சே, இது சாதாரண செயின் னு நினைச்சு கண்டுக்காம விட்டுட்டோமே”, என்று நினைத்து கொண்டு “அம்மா ஒரு செயினை வச்சா நீங்க உங்க பொண்ணை கண்டு பிடிப்பீங்க? வதனி தான் என் செயின் நல்லா இருக்கு. ரெண்டு நாள் போட்டுட்டு தரேன்னு கேட்டா. நான் கழட்டி கொடுத்தேன்”, என்றாள்.

“பொய் சொல்லாத வதனி. மது அந்த செயினை கொடுக்கவே மாட்டா”

“அம்மா, அது அத்தான் போட்டதுனு எனக்கு தெரியாதா? அத்தானே  எனக்குன்னு இருக்கும் போது அந்த செயின்ல என்ன இருக்குனு நினைச்சு தான் நான் கழட்டி கொடுத்தேன். அவ என்ன கேட்டாலும் நான் கொடுத்துருவேன்னு உங்களுக்கு தெரியும் தான? ஆனா இப்ப என்னையே நான் இல்லைனு சொன்னா என்ன அர்த்தம் மா?”, என்று கேட்டாள் வதனி.

இப்போது பெற்றவர்களும் குழம்பி போனார்கள்.  மீரா திகைப்புடன் மனோஜை பார்த்தாள்.

அவன் பொறு என்பதாய் கண்களால் சைகை செய்தான்.

“என்ன அன்னம் இது? இப்படி குழப்புறாங்க. ஐயோ என் மருமக யாருன்னு தெரியலையே. ரெண்டு பேர்ல யாரு வதனியா இருந்தாலும் சரி கெஞ்சி கேக்குறேன் மா. தயவு செஞ்சு இங்க இருந்து போய்ரு. மது கூட என் மகன் சந்தோசமா இருக்கணும். அவனே இப்ப தான் பெரிய கண்டதுல இருந்து தப்பிச்சு வந்திருக்கான்”, என்று அழுகவே செய்து விட்டாள் சாவித்ரி.

“அத்தை உங்களுக்கும் என்னை தெரியலையா அத்தை?”, என்று அழுது கொண்டே  கேட்டாள் மது.

“உன்னை எப்படி தெரியும்? அவங்க மருமக நான் தானே? நான் தான மது. அப்ப என்னை தான அவங்களுக்கு தெரியும்”, என்றாள் வதனி.

“அன்னம், கேசவா நீங்க தான அவங்களோட அம்மா அப்பா. நீங்களாவது கண்டு பிடிங்களேன்”, என்று சாவித்திரி சொன்னவுடன் அவர்களும் “எங்களாலே முடியாதே”, என்று சொல்லி விட்டனர்.

“ஏன் வதனி இப்படி பண்ற? எதுக்கு இப்படி என் வாழ்க்கையை கெடுக்கணும்னு நினைக்கிற?”, என்று மதுவை பார்த்து கேட்டாள் வதனி.

“நான் உன் வாழ்க்கையை கெடுக்குறேனா? நீ தான் டி அப்படி பண்ற? ப்ளீஸ் வதனி. இங்க இருந்து போயிரு”, என்றாள் மது.

“இவ்வளவு பிரச்சனை நடக்கு. இந்த தேவா எங்க?”, என்று நினைத்து கொண்டு மேலே பார்த்தான் மனோஜ்.

அங்கே கைகளை கட்டி கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் தேவா. 
மெதுவாக மாடியில் இருந்து இறங்கினான் தேவா. அனைவரும் அந்த சத்தத்தில் அவனை திரும்பி பார்த்தார்கள்.
அவனை பார்த்ததும் ஏக்கமாக அவன் மீது படிந்தது மதுவின் விழிகள்.

அதை அவனும் பார்த்தான். அவன் பார்வையை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் மது.

“நீங்க என்னை நம்பலைன்னாலோ, என்னை கண்டு பிடிக்கலைன்னாலோ அடுத்த நிமிடம் நான் உயிரோட இருக்க மாட்டேன் அத்தான். நீ யாருன்னு என்னை பாத்து கேட்டாலே நமக்குள்ள ஒண்ணுமே இல்லாம போயிரும். என்னை நீங்க உணரலைனா, உங்க மேல உள்ள காதலுக்கு மதிப்பே இருக்காது. என் வாயில் இருந்து நான் தான் மதுன்னு இனி ஒரு வார்த்தை வராது”, என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவன் முகத்தையே பார்வை இட்டாள் மது.

“அத்தான் பாருங்க. உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போனவ, இப்ப வந்து அவ தான் நான்னு சொல்லி பிரச்சனை பண்றா அத்தான்.  இவளை வீட்டை விட்டு விரட்டுங்க”, என்று சொன்னாள் வதனி.

ஏக்கத்துடன் தன் முகத்தையே பார்த்து கொண்டிருந்த மது அருகில் சென்றான் தேவா.

“தேவா எங்க எல்லாருக்குமே குழப்பமா இருக்கு பா. பெத்தவங்களுக்கே கண்டு பிடிக்க முடியலை. நம்ம மது யாரு பா? எனக்கு பயமா இருக்கு”, என்றாள் சாவித்ரி.

“பயப்படாதீங்க அத்தை. நான் தான் மதுன்னு அத்தானுக்கு தெரியும்”, என்றாள் வதனி.

ஆனால் அவனோ யார் பேச்சையும் கேக்காமல், மது எதிரே நின்று அவள் முகத்தையே பார்த்தான்.

“என்ன சொல்ல போறானோ”, என்று உயிரை பிடித்து கொண்டு அவன் முகத்தை கலங்கிய கண்களுடன் பார்த்தாள் மது.

அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் தேவா.

அங்கு இருந்த சோபாவில் போய் விழுந்தாள் மது. ஆனால் விழுந்த அடியை விட அவன் தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற வலி தான் அவளுக்கு அதிகமாக இருந்தது.

இங்கே வதனி “அப்பாடி தேவா அவளை கண்டு பிடிக்கலை. அடிச்சிட்டான். இனி இந்த வீடு, இவ்வளவு சொத்து, அழகான புருஷன் எல்லாமே எனக்கு தான். மாமியா கிழவியை ஈஸியா சமாளிச்சிறலாம்”, என்று நினைத்து கொண்டாள்.

“தேவா என்ன இது, யாருனு தெரியாம இப்படியா கை நீட்டுறது?”, என்று கேட்டாள் சாவித்ரி.

“யாருன்னு தெரிஞ்சு தான் மா அறைஞ்சேன். ஏய் எந்திரி டி”, என்றான் தேவா.

கண்களில் ஒரு வலியுடன் எழுந்தாள் மது. “போச்சு, எல்லாமே போச்சு. என் அத்தான் இனி எனக்கு இல்லை”, என்று நினைத்து கொண்டு நேராக நின்றாள்.

“உனக்கு அறிவு இல்லை. படிச்சவ தான நீ?”, என்று கேட்டான் தேவா.

“அறிவு இல்லாம தான் இருந்துருக்கேன். என் காதல் மேல மொத்த நம்பிக்கையும் வச்சிருந்தேன். அது இப்படி தூள் தூளா போகும்னு நான் நினைக்கவே இல்லையே. அதுலயே தெரியலையா நான் அறிவில்லாதவன்னு. பெத்து வளத்தவங்களுக்கே என்னை தெரியலை. அத்தான் கண்டு பிடிக்கிறது கஷ்டம் தான். ஆனா உண்மையான காதல் இருந்தா கண்டு பிடிச்சிருப்பாங்களோ?”, என்று மனதுக்குள்ளே பேசினாள் மது.

அப்ப அழுது கொண்டிருப்பவள் தான் வதனி என்று அனைவருமே நினைத்து அவளை முறைத்து பார்த்தார்கள்.

அனைவரின் பார்வையை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பு வந்தது மதுவின் உதட்டில். “இப்ப நான் இந்த வீட்டை விட்டு போகணும். ஆனா எங்க போக? சாகணுமா? சாகணுமா ஏன் சாகனும்? இத்தனை நாள் அத்தான் கூட வாழ்ந்து சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிச்சிட்டேன். ஒரு நாள் வாழ்ந்துட்டு செத்து போகணும்னு முன்னாடி யோசிச்சிருக்கேனே. ஆனா இப்ப எத்தனை பொக்கிஷமான நினைவுகள் கிடைச்சிருக்கு. அதை அசை போட்டுக்கிட்டே மீதி காலத்தை ஓட்டிரனும்”, என்று நினைத்து கொண்டு அவன் முகத்தை பார்த்தாள்.
“உன்னை பாத்தா அடிச்சி கொல்லணும்னு வெறி வருது டி”, என்றான் தேவா.
“எனக்கு இப்ப கூட இறுக்கி கட்டிக்கணும் போல இருக்கே”, என்று மனதில் நினைத்தாள் மது.
“இப்படி கண்டவ வந்து அவ தான் மதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கா. அவளை இழுத்து நாலு அரை விடாம கண்ணை கசக்கி கிட்டு இருக்க?”, என்று கேட்டான் தேவா.
“அத்தான்”, என்று ஆச்சர்யமாக அழைத்தாள் மது. அதிர்ச்சியாக முழித்தாள் வதனி. குழப்பமாக பார்த்தார்கள் அனைவரும்.
“என்ன அத்தான்?  உன் அக்காவே ஆனாலும் நமக்கு அவ கண்டவ தான்.  எவளோ ஒருத்தி வந்து என் வீட்ல நின்னுகிட்டு என் பொண்டாட்டின்னு சொல்றா. நீ என்ன செஞ்சிருக்கணும்? அவளை செருப்பால அடிச்சு வீட்டை விட்டு வெளிய துரத்திருக்கனுமா இல்லையா? நாய் மாதிரி நடு வீடு வரைக்கும் வந்திருக்கா. நீ என்ன செய்வன்னு பாக்குறதுக்கும், அவ எந்த அளவுக்கு போறான்னு பாக்குறதுக்கும் தான் காத்துட்டு இருந்தேன். விரட்டி விட வேண்டிய நீ அகதி மாதிரி அழுதுட்டு இருக்க? உன்னை அடிச்சே கொல்லணும் டி”, என்று தேவா சொன்னதும் சந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் பெருகியது மதுவுக்கு.
“அவ வெக்கமே இல்லாம திமிரா நின்னுட்டு இருக்கா. கண்டவளை எல்லாம் பொண்டாட்டின்னு நினைக்க நான் என்ன மிருகமா? நான் மனுஷன். உங்க வீட்ல வச்சு இவ என் கூட கிளம்பி வரும் போதே எனக்கு தெரிஞ்சிட்டு. என்னோட பொண்டாட்டி வாசனை எனக்கு தெரியாதா? உன் சேலையை எவ கட்டி இருந்தாலும் நான் ஏமாந்துருவேனா? உன் கூட ஒரு மாசத்துக்கு குறைவான நாள் வேணா நான் வாழ்ந்துருக்கலாம். ஆனா அது என்ன சாதாரண வாழ்க்கையா மது? நம்மளோட காதல் மது அது. அது ஒரு நாளும் தோத்து போகாது டி”
….
“நீ வந்து இவளை சப்புன்னு நாலு அரை அறைஞ்சு விரட்டுவன்னு பாத்தேன். நீ அழுதுட்டு இருக்க. எனக்கு கோபமா வருது டி”
அடுத்த நொடி “அத்தான்”, என்று அழைத்து கொண்டே அவன் அருகில் ஓடி போனாள் மது.
அவளை இறுக்கி அணைத்து கொண்டான் தேவா. அவன் நெஞ்சில் சாய்ந்தவளுக்கு எல்லை இல்லா நிம்மதி வந்தது. அவள் வடித்த கண்ணீர் அவன் நெஞ்சத்தை அணைத்தது.
சுற்றி இருந்த அனைவரின் கண்களும் கலங்கியது. வதனி முகம் மட்டும் விகாரமாக மாறி இருந்தது.
“அழாத மது மா”, என்றான் தேவா.
“நான் ரொம்ப பயந்துட்டேன் அத்தான்”
“நீ பயப்படலாமா மது? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“அம்மாவுக்கே என்னை தெரியலையே அத்தான்”, என்று அழுதாள் மது.
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement