Advertisement

இருபது நாள் கழித்து, சந்தோசத்துடன் திரும்பி வந்தார்கள் மதுவும் தேவாவும். 

எல்லாருக்கும் வாங்கி வந்த பொருள்களை கொடுத்து, அங்கு பார்த்த இடங்களை பற்றியும் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார்கள். 
அவர்கள் வந்தது அறிந்து அன்னமும், கேசவனும் பாக்க வந்தார்கள். “ஒரு பத்து நாள் மது வீட்ல போய் இருந்துட்டு வாங்க டா”, என்று சாவித்ரி சொன்னவுடன் “அடுத்த வாரம் வரோம் மாமா, அத்தை”, என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான் தேவா. 
“சரி தேவா தம்பி. இப்ப தான் நீங்களும் வந்துருக்கீங்க. கொஞ்சம் ஆற அமர வந்துட்டு போங்க”, என்று சொல்லி விட்டு தான் அவர்களும் கிளம்பினார்கள்.
வீட்டுக்கு வந்தவுடன் மதுவை பற்றியும், தேவா பற்றியும் அன்னமும், கேசவனும் பேசி கொண்டிருக்கும் போது கேசவன் போன் அடித்தது.

யாரு என்று எடுத்து பார்த்தவர் புருவம் உயர்த்தினார்.

“யாரு பா போன் பண்றா?”, என்று கேட்டாள் அன்னம்.

“வில்லங்கம்”

“என்னது வில்லங்கமா? புரியலையேப்பா”

“வதனி போன் பண்றா”

“வதனியா? எதுக்கு? சரி என்ன பிரச்சனையோ அவளுக்கு? என்னனு கேளுங்க”

“நீயே கேளு”, என்று கொடுத்து விட்டு சென்றார்.

தனக்கும் மகள் மேல் கோபம் இருந்தாலும் சரி எப்படி இருக்கா என்று விசாரிப்போம் என்று நினைத்து எடுத்தாள்.

“அம்மா எப்படி இருக்கீங்க?”, என்று சந்தோசமாக ஒலித்தது வதனியின் குரல்.

“எந்த குற்றவுணர்வும் இல்லாம பேசுறா பாரு. இவ எப்ப தான் மாற போறாளோ?”, என்று நினைத்து கொண்டு “நாங்க நல்லா  இருக்கோம். நீ எப்படி இருக்க?”, என்று கேட்டாள் அன்னம்.

“நானும் நல்லா இருக்கேன் மா. நான் தான் இத்தனை நான் என் மேல கோபமா இருப்பீங்கன்னு பயத்துல போன் பண்ணாம இருந்தேன். நீங்களாவது பண்ணிருக்கலாம்ல?”

“சுயநலமா யோசிச்சிட்டு போனவ கிட்ட என்ன பேச?”

“இன்னும் என் மேல கோபம் போகலையாம்மா?”

“அது போகுமான்னு தெரியலை. சரி இப்ப எதுக்கு போன் பண்ண?”

“எப்படி இருக்கீங்கன்னு கேக்க தான் போன் பண்ணேன். அப்பா எப்படி இருக்காங்க? மது எப்படி இருக்கா?”

“எல்லாருமே நல்லா இருக்கோம்”

“அப்பா கிட்ட கொடுங்களேன், நான் பேசணும்”

“அவர் குளிச்சிட்டு இருக்கார்”

“ஓ மதுகிட்டயாவது கொடுங்க மா”

“அவ அவ வீட்ல இருக்கா”

“அவ வீடா? என்ன மா சொல்றீங்க?”

“என்ன நொண்ண மா? ஆமா அவ வீட்ல தான் இருக்கா. அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு இருபது நாள் மேல ஆகிட்டு. இப்ப அவங்க வீட்ல இருக்கா”

“என்னது கல்யாணம் முடிஞ்சிட்டா? என்கிட்ட சொல்லவே இல்லை. சரி யாரு மாப்பிள்ளை?”

“வேற யாரு நீ வேண்டாம்னு சொன்ன தேவா தம்பி தான்”

“அம்மா உங்களுக்கு பைத்தியமா புடிச்சிருக்கு? நான் தப்பிச்சிட்டேன்னு நினைச்சேன். நீங்க செண்டிமெண்ட் பேசி அவளை மாட்டி விட்டுடீங்களா? அந்த குருடனை எதுக்கு கட்டி வச்சீங்க?”

“ச்சி வாயை மூடு டி. குருடன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா? நாளைக்கே உனக்கும் அதே நிலைமை வரலாம்”
“அம்மா”
“ச்சி என்னை அப்படி கூப்பிடாத. அப்புறம் நல்லா கேட்டுக்கோ. அவருக்கு கண் பார்வை இப்ப தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைக்கு பார்வை வந்திருச்சு. நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான். ஆனா நீ அவங்க கிட்ட இருந்து தப்பிக்கல டி பாவி. அவங்க தான் உன் கிட்ட இருந்து தப்பிச்சிருக்காங்க. மதுவை அந்த வீட்ல கொண்டாடுறாங்க. நீ எப்பவுமே ராசி இல்லாதவ டி. நல்ல பணம் இருக்குற, நல்ல குணம் இருக்குற குடும்பத்துக்கும், அழகும் அறிவும் இருக்குற மாப்பிள்ளைக்கும் நீ கொடுத்து வச்சிருக்கணும். ஆனா உனக்கு அந்த கொடுப்பனை இல்லை. எல்லாம் மதுவுக்கு கிடைச்சிருக்கு. நீ ராசி இல்லாதவ. நீ சாத்தான் மாதிரி குணம் படைச்சவ. ஆனா மது தேவதை. இனி அம்மானு சொல்லி எனக்கு போன் பண்ண கொன்னுருவேன் வை போனை”, என்று வைத்து விட்டாள் அன்னம்.
கோபத்தில் திட்டிய இந்த வார்த்தைகள் மதுவின் கண்ணீருக்கு காரணமாகும் என்று தெரியாமலே அன்னம் அவ்வாறு திட்டி இருந்தாள்.
ஆனால் அங்கே வதனி முகமோ பயங்கரமாக மாறி இருந்தது. பெற்ற அன்னையே சாத்தான் என்று சொன்னதாலோ என்னவோ அவள் முகம் சாத்தான் போலவே தான் இருந்தது.
அருகில் இருந்த படுக்கையை பார்த்தாள். அங்கே மார்க் உறங்கி கொண்டிருந்தான்.
அவன் முகம் அருகே குனிந்தவள் “டார்லிங் நான் இந்தியா போறேன்”, என்று சொன்னாள்.
அதை கேட்டவன் “நோ பேபி”, என்றான்.
“இல்லை போயே ஆகணும். டிக்கட் புக் பண்ணு”, என்று சொல்லி விட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
வதனி குளித்து முடித்து வெளியே வரும் போது, அவளை முறைத்த படி நின்றான் மார்க்.

அவன் பார்வையை கண்டு கொள்ளாமல் கண்ணாடி முன்னே அமர்ந்தாள் வதனி.

“நீ சென்னை போக கூடாது”, என்று ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னான் மார்க்.

அவனுடைய அதட்டலில் அவள் முகம் எரிச்சலில் சுளித்தது. “அதை கேக்க நீ யார்?”, என்று கோபத்தில் கேட்டாள் வதனி.

“நீ அங்க போறது, அவங்க எல்லாரையும் பாக்க அப்படின்னா சந்தோசமா போயிட்டு வா. ஆனா நீ அதுக்காக தான் போறேன்னு என்னால ஏத்துக்க முடியாது. உன் கண்ணுல ஒரு துளி கூட பாசம்  இல்லை”

“தெரியுதுல்ல? அப்புறம் ஏன் தடுக்குற? கண்டிப்பா அவங்க நிம்மதியை கெடுக்க தான் போறேன். அந்த மது சந்தோசமா இருக்க கூடாது”

“இது தப்பு வதனி. அவ உன் தங்கை”

“அது தான் அவ செஞ்ச பாவமே. இந்த தடவை அவளை ஒளிச்சு கட்ட போறேன்”

“நான் உன்னை போக விட மாட்டேன்”

“என்னை தடுக்க நீ யார்?”

“நைட் முழுக்க என்னோட பெட்ல இருக்கும் போது உனக்கு தெரியலையா நான் யார்னு?”

“ப்ச், அது டைம் பாஸ்”

“என்னோட மனைவி எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலைனு தான் நான் உன்னை தேர்ந்தெடுத்தேன் வதனி. இப்ப நீ என்னை உதாசீன படுத்துனா நான் உன்னை விட்டு போக வேண்டி இருக்கும்”

“போ, யார் வேண்டாம்னு சொன்னது? எனக்கு என்னோட வேலை இருக்கு. அதை வச்சு என்னால வாழ முடியும். நீ போணும்னா போ. நான் இந்தியா போறது உறுதி”, என்று சொல்லி விட்டு கிளம்ப ஆரம்பித்தாள்.

“எந்த பொண்ணுங்களும் உண்மையான காதலை எனக்கு தர மாட்டாங்க போல?”, என்று நினைத்து கொண்டே அங்கு இருந்து அவளை விட்டு கிளம்பி விட்டான் மார்க். 

அடுத்து இரண்டு நாளில் வீட்டுக்கு வந்து நின்றவளை அன்னமும், கேசவனும் வா என்றும் சொல்லவில்லை. வெளியே போ என்றும் சொல்ல வில்லை. அமைதியாக அவளுக்கு வழி விட்டார்கள்.

அவர்கள் அப்படி செய்ததில் வந்த எரிச்சலை மறைத்து கொண்டு அம்மா, அப்பா என்று பாசமாக பேசினாள் வதனி.
காதில் போனை வைத்து கட்டிலில் அமர்ந்து அன்னத்திடம் பேசி கொண்டிருந்தாள் மது.
அவள் அருகில் அமர்ந்த தேவா, அவள் கழுத்தில் உதடு பதித்து அவளிடம் வம்பு செய்து கொண்டிருந்தான்.
அம்மாவிடம் பேசவும் முடியாமல், அவன் செய்ததை தாங்கவும் முடியாமல் தவித்த மது “நான் நேர்ல வந்து பேசுறேன் மா. உங்க மாப்பிள்ளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்காம். அவருக்கு உதவி செய்ய போறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டு அவனை பார்த்தாள்.
மாய கண்ணன் போல் அழகாக புன்னகைத்தான் தேவா.
அவனை முறைக்க முயன்று தோற்று போனவள் “அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன்ல ஏன் இப்படி பண்ணீங்க?”, என்று கேட்டாள்.
“குளிச்சிட்டு பிரெஷா வந்தியா? கழுத்துல குட்டி குட்டியா தண்ணி இருக்குறது அப்படியே வைரம் மாதிரி ஜொலிக்குது. அதான் ஒரு மாதிரி ஆகிட்டு. பகல் முழுவதும் உன் அம்மா கிட்ட பேசு. யார் வேண்டாம்னு சொன்னா? ஆனா இப்ப உன் வாசனை எனக்கு வேணும் டி “, என்று சொல்லி கொண்டே அவள் மேல் படர்ந்தான்.
“நான் குளிச்சிட்டேன் தெரியுமா?”, என்று சிணுங்கினாள் மது.
“மறுபடி நானே உன்னை திருப்பியும் குளிக்க வைக்கிறேன்”, என்று சொல்லி அவன் வேலையை ஆரம்பித்தான்.
அவர்கள் இருவரும் மறுபடி குளித்து முடித்து வெளியே வர ஒரு மணி நேரம் ஆகி இருந்தது.
ஆபிஸ் கிளம்பி வெளியே போக பார்த்தவனை கையை பிடித்து நிறுத்தினாள் மது.
“என்ன மது?”, என்று கேட்டான் தேவா.
மதுவின் முகம் கொஞ்சம் பட படப்பை காட்டியது.
அதை விசித்திரமாக பார்த்தவன், அவளை கட்டிலில் அமர வைத்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
“சொல்லு மது மா. உனக்கு ஏன் இப்படி வேர்க்குது? என்ன விஷயம்?”
“அத்தான்..”
“சொல்லு மது குட்டி”
“நான் உங்க கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன். இல்லை இல்லை உண்மையை மறைச்சிட்டேன்…”
“என்ன மது?”
“அது வந்து.. அதை சொன்னா என்னை வெறுத்துருவீங்களா?”
“நீ என் கழுத்துல கத்தியை வச்சு கொன்னா கூட நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன் கண்ணம்மா”
“கொன்னா தப்பா நினைக்க மாட்டிங்க தான். ஆனா நம்ப வச்சு ஏமாத்துனா உங்களுக்கு என் மேலே வெறுப்பு வந்துருமே அத்தான்?”
“இப்ப எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குற? நீ மதுவதனி இல்லை மதுமிதான்னு சொல்ல போற? இப்ப உன்னோட அக்கா ஊருக்கு வந்திருக்கா. அவளை பாக்க போகணும். அது தான விஷயம்?”, என்று சாதாரணமாக கேட்டான் தேவா.
ஆ என்று வாயை பிளந்து அவனை பார்த்து கொண்டிருந்தாள் மது.
அவன் உதடுகளை விரலால் சுண்டி விட்டவன் சிரித்தான்.
“உங்களுக்கு…உங்களுக்கு…”
“எனக்கு தெரியும் டி என் மக்கு பொண்டாட்டி”
“எப்படி… எப்படி.. நாங்க யாருமே உங்க கிட்ட சொல்லலையே”
“உங்க அக்காவை நான் ஒரு தடவை தான் பாத்துருக்கேன். உன்னையும் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை தான் பாத்துருக்கேன். இன்னும் சொல்ல போனா, உன்னை தான் என் பொண்டாட்டியா நினைச்சு பாத்துருக்கேன். பேசியிருக்கேன். அப்ப நீ பொண்ணு இல்லைனு சொன்னப்ப உள்ளுக்குள்ள ஒரு ஏமாற்றமா இருந்தது. ஆனா உன்னோட வாசனை, என் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு மது. உங்க அக்கா என்னை பாக்க வந்தப்ப, அவ கிட்ட என்னால அஞ்சு நிமிஷம் மேல பேச முடியலை. அம்மா கிட்ட பொண்ணு பிடிக்கலைனு சொல்லணும் போல இருந்தது. ஆனா முடியலை. அன்னைக்கு நீ எங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு என் பக்கத்துல வந்தப்பவே நீ மதுமிதான்னு எனக்கு உன் வாசனை சொல்லிருச்சு. ஆனா உனக்கு என் மேல காதல் இருக்கும்னு எல்லாம் நான் எதிர் பார்க்கலை. அதான் நீ எதுக்கு கல்யாணத்துக்கு சரினு சொல்றன்னு சந்தேகம் வந்தது. அப்புறம் தான் உன்னையே எனக்கு கொடுத்த. காதல் இல்லாம அது சாத்தியம் இல்லைனு புரிஞ்சது. அப்புறம் நீ எழுதி கொடுத்த பேப்பர்ல மகாராணி எப்பவும் போல மதுமிதான்னு தான் கையெழுத்து போட்டிருந்த. மாமாவும் பத்திரிக்கை அடிக்கிற இடத்துல மதுமிதான்னு தான் சொல்லி இருந்தாங்க. சோ கண்டு புடிச்சிட்டேன்”
“அத்தான்…”, என்று அவன் நெஞ்சில் சாய்ந்தவள் “கல்யாணம் முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?”, என்று கேட்டாள்.
“தெரியும் டி பொண்டாட்டி. அப்புறம் தாலி கட்டும் போது கூட ஐ லவ் யு மதுமிதான்னு தான சொன்னேன் கேக்கலையா?”
“இல்லையே”
“அப்புறமும் சொல்லணும்னு நினைச்சேன் கண்ணம்மா. எங்க? உன்னை பாத்தாலே, உன்னை என்னனென்னவோ செய்யணும்னு தான் தோணுது. கதை எங்க பேசுறது? இன்னைக்கு ஆபிஸ் போய்ட்டு வந்த அப்புறம் நிறைய பேசணும் சரியா? உனக்கு எப்ப என் மேல காதல் வந்துச்சு? எதனால அந்த காதல் குருடனை கட்டிக்க சம்மதம் சொல்லுச்சு. எனக்கு எல்லாமே சொல்லணும் சரியா டா?”
“ஹ்ம்ம்”
“இப்ப கிளம்பலாமா? ஆபிஸ் போகும் போது உன்னை உன் அம்மா வீட்ல விட்டுட்டு போறேன். சாயங்காலம் கூட்டிட்டு வரேன் சரியா?”
“ஹ்ம்ம் வதனி மேல கோபம் இல்லையா?”
“எப்படி கோபம் இருக்கும்? அவ அப்படி செய்யாம இருந்தா நீ எனக்கு கிடைச்சிருப்பியா?”
“லவ் யு அத்தான்”
“சரி வா போகலாம்”
“ம்ம்”
“என்ன டி? ம்ம் ம்ம்னு சொல்லிட்டு அசையாம சஞ்சிட்டு உக்காந்துருக்க?”
“அத்தான்?”
“என்ன மது?”
“இன்னொரு தடவை குளிக்கலாமா?”, என்று கேட்டு முகத்தை அவன் நெஞ்சிலே மறைத்து கொண்டாள் மது.
புரியாமல் விழித்தான் தேவா. அதை உணர்ந்தவள் “எனக்கு நீங்க இப்ப வேணும். அப்புறமா கிளம்பலாம் ப்ளீஸ்”, என்று வெக்கத்துடன் சொன்னாள்.
எப்படா சாக்கு கிடைக்கும் என்று காத்திருப்பவன் அவள் வாய் விட்டு கேட்டும் விடுவானா? அடுத்த நொடி அவளை கட்டிலில் சரித்திருந்தான். எப்போதும் விட இந்த முறை அவனிடம் அதிகமாக நெருக்கத்தை காண்பித்தாள் மது. அவளுடைய காதலில் அவளிடம் இருந்து விடு பட முடியாமல் தவித்தான் தேவா.  
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement