Advertisement

அத்தியாயம் 7
இதயம் என்ற நினைவு 
பெட்டகத்தில் நான் 
சேமித்து வைத்த 
உன் நினைவுகளுடன் 
வாழ்வதே வரம்!!!
தேவா மனம் முழுவதும் பரவசமாக இருந்தது. இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என்று எதிர் பார்த்து, எல்லாரும் தன்னை பரிதாபமாக பார்ப்பார்கள் என்றெல்லாம் நினைத்தது, மாறி இன்று கண் பார்வையுடன், மனதுக்கு பிடித்த காதலியுடன், எல்லாருடைய சந்தோஷமான பார்வையிலும் இந்த கல்யாணம் நடப்பது அவனுக்கு சந்தோசமாக இருந்தது.

“கடவுள் காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார் போல”, என்று நினைத்தான்.
“நான் மதுவை தான் கல்யாணம் பண்ணிருக்கேன்னு எனக்கு தெரியும் அப்படிங்குற விசயத்தை மது கிட்ட இன்னைக்கு நைட் சொல்லணும். அப்ப அவ முகம் சந்தோஷத்துல விரியும். எதாவது மனசுல அவளுக்கு உறுத்தல் இருந்தா கூட மாயமா போயிரும்”, என்று நினைத்து கொண்டான். 

மனோஜுக்கும் ஒவ்வொரு நொடியும் தவிப்பாக தான் இருந்தது. அவன் கண்களும் மீராவுக்காக தான் காத்திருந்தன. ஹாஸ்பிட்டலில் அவளை நர்ஸ் உடையில் பார்த்தான். அதன் பின்னும் சுடிதார் தான் அணிந்திருந்தாள்.
“ஆனா நேத்து சாவிம்மா புடவை கொடுத்தாங்க. அதை கட்டிட்டு தான் வருவா. சேலைல எப்படி இருப்பா?”, என்று நினைத்து அவன் எண்ணங்களும் தறி கேட்டு ஓடியது. 

இருவருடைய எதிர்பார்ப்புக்கு விடையாய் அங்கே மது அழைத்து வர பட்டாள். கூடவே மீராவும் வந்தாள். மனோஜ் பார்வை மீராவையே தான் அளவிட்டது. வதனி நகையை மீராவுக்கு போட்டு விட்டிருந்தாள் அன்னம். மனோஜ்  அப்படியே அவள் அழகில் மயங்கி விட்டான். 
ஒரு பக்கம் மீராவும், மறு பக்கம் சாவித்திரியும் வர நடுவில் அழகு ரதி என தலை குனிந்த படி வந்தாள் மது.

அழகான பட்டு புடவை, அதுக்கு தகுந்தது போல நகை, முகத்தில் பளபளப்பு. உதடுகளில் வெட்கம் அனைத்துமே தேவாவை ரசிக்க தூண்டியது. தேவாவின் பார்வை  அதிசயத்தை பார்த்தது போல மலர்ந்தே போனது. “அழகு ராட்சசி டி”, என்று கொஞ்சி கொண்டான்.

மீராவின் பார்வை மனோஜை கண்டதும் அவன் கண்களில் வழிந்த ஆசையில் அவள் உள்ளம் சிறகில்லாமல் பறந்தது. அவன் பார்வையை தாங்க முடியாமல் அவனை முறைக்க முயன்று தோற்றாள். அதில் மனோஜ் உதடுகளிலும் புன்னகை மலர்ந்தது. தன்னை மீட்டு கொண்டவன் தேவாவை பார்த்தான். அவன் மது நடந்து வருவதையே பார்த்து கொண்டிருப்பதை கண்டவுடன் “வாய்க்குள்ள கொசு போகுது டா. இங்க திரும்பு”, என்று கிண்டல் அடித்தான்.
அசடு வழிந்தான் தேவா. எல்லாருடைய மனமே நிம்மதியாக சந்தோசமாக இருந்தது. இருவருக்கும் முதலில் நிச்சயம் செய்தார்கள். 
ஐயர் மந்திரம் சொல்லி தாலி எடுத்து கொடுக்க, அத்தனை சொந்தங்களின் ஆசிர்வாதத்துடன் மது கழுத்தில் தாலியை கட்டினான் தேவா.

கட்டும் போது  அவள் காதில் “ஐ லவ் யு மதுமிதா”, என்று சொல்லி கொண்டே தான் கட்டினான்.
ஆனால் மதுவுக்கு அவன் சொன்ன ஐ லவ் யு மட்டும் தான் கேட்டது. அந்த மேள சத்தத்தில் அது கேட்டதே பெரிய விஷயம். 

அவளுக்கு நாத்தனார் முடிச்சை மீராவை போட சொன்ன போது மீராவின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது. 

தலை குனிந்து அவன் தாலியையும், அவன் அணிவித்த குங்குமத்தையும் வாங்கி கொண்ட மதுவுக்கு உலகையே வென்ற ஆத்ம திருப்தி. இந்த ஜென்மத்தில் பிறவி பலனை அடைந்து விட்டது போல பரவசமாக இருந்தது. 

அவனுக்கு கண் கிடைக்க உதவி செய்த டாக்டரும் வந்திருந்தார்.

அதன் பின் சடங்குகள், போட்டோ எடுப்பது உறவினர்கள் வந்து வாழ்த்துவது, பரிசளிப்பது என்று எல்லாமே நடந்தது. 

மணமக்களை சாப்பிட சொல்லும் போது  டேபிள் அடியில் அவள் கையை பிடித்து கொண்டே சாப்பிட்டான் தேவா. 

கிடைத்த தனிமையில்  அவனிடம் ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள் மது. அது “ரூமுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு”, என்று.
“என்ன இது இப்படி சொல்றா, முகத்தை பார்த்தா கோபமாவும் தெரியலை. அப்புறம் ஏன் இப்படி சொன்னா?”, என்று நினைத்து கொண்டான். 

அதன் பின் மறுவீடு சென்று அன்று மாலையே திரும்பி விட்டார்கள்.

வீட்டுக்கு வந்தவர்களுக்கு, பாரின் போக டிக்கட்டை கையில் கொடுத்தான் மனோஜ். 

எல்லாருக்குமே அது சர்ப்ரைஸாக இருந்தது. தேவா ஹனிமூன் போகணும் என்று நினைத்திருந்தான் தான். ஆனால் ஒரு இரண்டு நாள் கழித்து போகலாம் என்று நினைத்தான்.

ஆனால் மனோஜோ “எப்படியும் உனக்கு இப்போதைக்கு ஓய்வு தேவை. ஓய்வு எடுத்த மாதிரியும் ஆச்சு. ஹனிமூன் போன மாதிரியும் ஆச்சு. எனக்கு வாழ்க்கையவே கொடுத்த உனக்கு என்ன கிஃப்ட் கொடுக்கன்னு தெரியலை டா. இது ஒன்னு தான் தோணுச்சு. நீங்க போய் இறங்குன உடனே நம்ம கூட படிச்ச பிரசாத் வந்து கூப்பிட்டு போவான். பொறு பொறு. அவன் வீட்ல நீங்க தங்க போறது இல்லை. உங்களுக்கு அவன் காட்டேஜ் புக் பண்ணிட்டான். சுத்தி பாக்க காரும் டிரைவரும் தயாரா இருக்கும். நீங்க சுத்தி பாத்தாலும் சரி, ரூம்லே இருந்தாலும் சரி. என்னமும் செஞ்சிக்கோங்க. சந்தோசமா போயிட்டு வா டா”, என்றான்.
அவனை அணைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டான் தேவா.

சாவித்ரி, அன்னம், கேசவன், மீரா அனைவரிடமும் சொல்லி விட்டு அன்றே கிளம்பி விட்டார்கள்.

“கல்யாணம் முடியிற வரைக்கும் மீரா என் ரூம்ல தான் தூங்குவா”, என்று சொல்லி மனோஜை வெறுப்பேத்தி விட்டு கூட்டி சென்று விட்டாள் சாவித்திரி.

பாவமாக பார்த்து கொண்டிருந்த மனோஜை பார்த்து சிரித்து விட்டு சென்றாள் மீரா. அந்த சின்ன சிரிப்பிலே பைத்தியமானான் மனோஜ். 

தேனிலவு சென்றவர்கள் அடுத்த நாள் அங்கே இறங்கும் போதே அவர்களை வரவேற்க வந்து விட்டான் பிரசாத். 

“மனைவி மாசமா இருக்காங்க டா. அதான் தனியா விட்டுட்டு கல்யாணத்துக்கு வர முடியலை. சரி இங்க தான வர போறான்னு நினைச்சி சமாதான படுத்தலாம்னு நினைச்சிட்டேன் மச்சி. கங்கிராட்ஸ் டா, வாழ்த்துக்கள் சிஸ்டர்”, என்றான் பிரசாத். 
அடுத்து அவர்களை அவனுடைய வீட்டுக்கே அழைத்து சென்றவன் மனைவியை அறிமுக படுத்தி விட்டு சாப்பிட வைத்து காட்டேஜில் போய் விட்டான். 

அவர்கள் அவர்களுடைய அறைக்கு போகும் போது, மதியம் மூன்று மணி. 

அவள் தனியே சிக்கியவுடன் கதவை இறுக்கி அடைத்தவன் அவளை அள்ளி கொண்டு கட்டிலில் கிடத்தினான்.

“வந்த உடனேவா அத்தான்? ப்ளீஸ் எங்கயாவது வெளிய போகலாம்”
“போடி நானே ஒரு நைட் வீணாகிட்டேனு இருக்கேன். நீ வெளிய போகணுமாம். ட்ரைவரை நாளைக்கு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன். இப்போதைக்கு இந்த ஒரே வேலை தான்”, என்று சொன்னவனின் உதடுகள் அவள் கழுத்து வளைவில் புதைந்தது. 

அவன் உதடு பட்டதும் கூசி சிலிர்த்தவள், அவன் முதுகில் கையை படர விட்டாள்.
அதை உணர்ந்தவன் வெற்றி புன்னகையுடன் அவள் காதில், கழுத்தில் என்று உதடுகளால் ஊர்வலம் நடத்தினான். 

கண்களை மூடி கொண்ட மது எதுவோ ஒரு சுழலுக்குள் சிக்கியது போல அவன் தொடுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.

அவள் காதில் பல் படும் படி கடித்த தேவா “எதுக்கு டி நேத்து அப்படி சொன்ன?”, என்று கேட்டான்.

“ம்ம் என்ன சொன்னேன்?”, என்று கண்களை மூடி கேட்டாள் மது.

“ரூமுக்கு வாங்க இருக்குனு சொன்னல்ல?”

“ஹ்ம்ம் அதுவா? பட்டு வேஷ்டி சட்டைல தாடி எல்லாம் எடுத்துட்டு எப்படி இருந்தீங்க தெரியுமா? எனக்கு அங்கேயே உங்களை கிஸ் பண்ணனும் போல இருந்தது அதான்”

“ஏய் நிஜமாவா? எனக்கும் அப்படி தான் டி இருந்தது. நான் தாடி எடுத்தது உனக்கு பிடிச்சிருக்கா மது?”

“ரொம்ப ரொம்ப… அன்னைக்கு ரொம்ப குத்திருச்சு… தெரியுமா?…”, என்று கேட்க ஆரம்பித்தவளின் முகம் முழுவதும் முத்தமிட்டவன் அவள் உதடுகளை ஒரு வழி செய்து விட்டான்.
முத்த சண்டையை நிறுத்தி விட்டு, கண்களை மூடி படுத்திருந்த அவளை எழுப்பி அமர வைத்தவன் அவளுடைய ஸ்வட்டரை கழட்டினான். 

“அடுத்து என்ன ஆகும்?”, என்று நினைத்து அவள் உடல் முழுவதும் சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பை உணர்ந்தவனோ அவள் முந்தானையை பிடித்து இழுத்தான். அது சரிந்து கீழே விழுந்தது. அவன் கண்களின் பார்வை அவள் அழகில் விழுந்தது.

அவன் பார்வையை உணர்ந்து தன்னாலே மார்புக்கு குறுக்காக கைகளை வைத்து மறைத்தாள் மது. 
மறுபடியும் அவளை படுக்க வைத்தவன் அவள் மேலே விழுந்து  “அன்னைக்கு எது எது எங்க இருந்தது, எப்படி இருக்குனு கூட தெரியலை. இன்னைக்கு அணு அணுவா ரசிக்கணும்”, என்று அவள் காதில் கிசுகிசுத்தான். 
அவன் பேச்சில், செயலில் வெட்கம் தாங்காமல் அவன் நெஞ்சிலே புதைந்து கொண்டாள் மது.

அவள் முகத்தை பிரித்து மறுபடியும் முத்த சேவையை ஆரம்பித்தவன் அவளை முழுவதுமாக அவனுக்கென்றே எடுத்து கொண்டான். 

அவர்களை அறியாமலே களைத்து தூங்கும் போது தான் அவளை விடவே செய்தான் தேவா. 

அவனுடைய செயல்களை அனைத்துமே ரசித்தாள் மது. 
நீ தான் மதுமிதா என்று சொல்லணும் என்று நினைத்தவனோ அந்த நினைப்பையே மறந்து அவளுடன் பின்னி கிடந்தான். 

அடுத்து வந்த நாள்கள் வண்ணமயமானதாக இருந்தது. 

பகலில் அந்த தேசத்தை ரசிப்பதும் இரவில் தன்னுடைய துணையை ரசிப்பதும் என்று சென்றது அவர்களுடைய பொழுதுகள். 
இங்கே மனோஜோ, மீராவிடம் பேச நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான். ஆனால் அது மட்டும் அமைவேனா என்று அடம் பிடித்தது.

தேவாவும், இவனும் சில நாள் அலுவலகம் போகாததால் அங்கே வேறு வேலைகள் குமிந்து கிடந்தது. தேவா வந்ததும் அவனுக்கு வேலை இருக்க கூடாது என்று நினைத்து அனைத்தையும் முடிக்கும் மனநிலையில் இருந்தான் மனோஜ். 

இரவு சாவித்ரி, மீரா, மனோஜ் மூவரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவார்கள்.

மீராவும், மனோஜும் பார்வையாலே மட்டும் தான் காதலை பறி மாற்றிக்கொள்ள முடிந்தது. சாவித்ரி பின்னாலே அம்மா அம்மா என்று திரிந்து கொண்டிருக்கும் அவளை எப்படி தனியே இழுப்பது என்று தெரியாமல் தவித்தான் மனோஜ். 

இதில் ஒரு நாள் அவளுக்கு சைகை செய்ய நினைத்து டேபிள் அடியில் மீராவின் காலை சுரண்டுவதாக நினைத்து சாவித்ரியின் காலை சுரண்டி பரிதாபமாக விழித்தான். 
அவனை பார்த்து தலையில் அடித்து கொண்ட சாவித்ரி “மீரா இத்தனை நாள் ரெண்டு தடியன்களும் ஒரு ரூம்ல தான் தூங்கிட்டு இருந்தானுங்க. இப்ப மதுவும், தேவாவும்  திரும்பி வந்தா தனி ரூம் தான் வேணும். தேவா ரூம் பக்கத்து ரூமை கிளீன் பண்ணி மனோஜ்க்கு கொடுத்துரு. மனோஜ் அவளுக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ணு”, என்று சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்றாள்.
அந்தோ பரிதாபம். அவன் அவளுக்கு கிளீன் பண்ண உதவி மட்டும் தான் செய்தான். அவன் அவளை நெருங்கவே இல்லை. பக்கத்தில் போனாலே வாயில் இருந்து காத்து தான் வந்தது. இதில் எங்கே அவளை கட்டி பிடிப்பது? முத்தம் கொடுப்பது?
அவளுக்கும் அந்த தடுமாற்றம் இருந்ததால், அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள்.
ஆனாலும் பல்லியை பார்த்தால் பயத்தில் அவளாகவே கட்டி கொள்வாள் என்று நினைத்து “மீரா உனக்கு பல்லினா பயமா?”, என்று கேட்டான்.
ஆனால் அவளோ “ஏன் கேக்குறீங்க? நான் பாம்புக்கே பயப்படமாட்டேன்”, என்று சிரித்தாள்.
ஆனாலும் ஒரு முறை தைரியத்தை கூட்டி அவள் அருகில் சென்றவன், அவள் இடுப்பில் கை வைத்தான், ஆனால் அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் மீரா. இருவருமே திகைத்தார்கள். அவள் சாரி என்று தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கும் போது “சாரி”, என்று சொல்லி விட்டு அவன் விலகி இருந்தான்.

தேனிலவு சென்றவர்களுக்குள் காதல் போரும், இங்கே இருவருக்குள்ளும் பனி போரும் நடந்து கொண்டிருந்தது. 

Advertisement