Advertisement

“ஏய் பொண்டாட்டி, கோயிலுக்கு போயிட்டு எப்ப டி வந்த?”, என்று சிரித்தான் தேவா.
அந்த வார்த்தையில் அவள் அடிவயிற்றில் பல மின்னல்கள் வெடித்தது. அவள் கண்களில் காமத்தை உணர்ந்தவன் “என் பொண்டாட்டிக்கு மூட் வந்துருச்சு போல”, என்று சிரித்தான்.
அவன் கைகளில் கிள்ளிய “மது இப்படி எல்லாம் பேசாதீங்க அத்தான். எனக்கு என்னவோ போல இருக்கு”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
கல்யாணத்துக்கு முந்தைய நாள், வந்து சென்னையில் இறங்கினார்கள் ஐவரும். 
இங்கே கல்யாணத்துக்கு அனைத்து ஏற்பாட்டையும் பார்த்து கொண்டனர் கேசவனும், அன்னமும்.
கண்களில் ஒளியுடன் வந்து இறங்கிய மருமகனையும், முகம் கொள்ளா சிரிப்புடன் வந்து இறங்கிய மகளையும் கண்டு பெற்ற அவர்கள் வயிறும் குளிர்ந்தது.
தயக்கத்துடன் வந்த மீராவை அன்னமும் அணைத்து கொண்டார். கேசவனும் “வா மா”, என்று சந்தோசத்துடன் வரவேற்றார்.
ஆச்சர்யத்துடன் பார்த்தவளை “நான் தான் அம்மா அப்பா கிட்ட போனில் விவரம் சொன்னேன் மீரா”, என்று சிரித்தாள் மது. 
அனைவரும் நேராக தேவா வீட்டுக்கே சென்றார்கள். அவனை ரெஸ்ட் எடுக்க சொல்லி கொண்டிருந்தாள் மது. அவளை இறுக்கி அனைத்தவன் “நாளைக்கு எப்ப டா வரும்னு இருக்கு மது. அன்னைக்கு கண் இல்ல. அதனால எதுவுமே தெரியலை”, என்று சொல்லி கண்ணடித்தான்.
 
அவளுக்கும் அவனுடன் இருக்க வேண்டும் என்று தவிப்பு வந்ததால், அவளாகவே அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். 
ஆச்சர்யத்துடன் சிரித்தான் தேவா. “என்ன ஆச்சு பொண்டாட்டி? ஓவர் பீலிங்கா?”
“இந்த வார்த்தையை சொல்லாதீங்க? எனக்கு என்னமோ பண்ணுது”
“பொண்டாட்டியை பொண்டாட்டின்னு தான் சொல்லணும். சரி உனக்கு  என்ன பண்ணுது?”, என்று கேட்டவனின் கைகள் அவள் வயிற்றில் ஊர்ந்தது.
“என்னனென்னவோ தோணுது. சொல்ல தெரியலை”
“அன்னைக்கு மாதிரியே சேலை கட்டிருக்கலாம் மது. சுடிதார் நல்லாவே இல்லை, கை வைக்க இடைஞ்சலா இருக்கு”
“போங்க, இங்க இருந்தா இப்படியே தான் பேசிட்டு இருப்பீங்க. நல்ல பிள்ளையா படுத்து தூங்குங்க. மனோஜ் அண்ணா இப்ப வருவாங்க”, என்று சொல்லி அவனுக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு அவனை படுக்க வைத்து விட்டு கீழே வந்தாள்.
“நாளைக்கு எனக்கு கல்யாணத்துக்கு ஹெல்ப் பண்ண மீராவை நான் கூட்டிட்டு போறேன் அத்தை. நாளைல இருந்து நாம எல்லாம் இங்கயே இருக்கலாம். போகலாமா மீரா?”, என்று கேட்டாள் மது.
அவள் தயக்கத்துடன் சாவித்ரியை பார்த்தாள்.
“நானே அதை பத்தி தான் சொல்லணும்னு நினைச்சேன் மது. நீ மீராவை கூட்டிட்டு போ. காலைல ஏழரைக்கு முகூர்த்தம். நாங்க ஏழு மணிக்கு பொண்ணை அழைக்க வரோம். அப்புறம் மீரா, இந்தா கல்யாணத்துக்கு சேலை”, என்று புது சேலையை கொடுத்தாள் சாவித்ரி. அன்னத்திடம் தான் சாவித்ரி அந்த சேலையை எடுத்து வைக்க சொல்லி இருந்தாள். 
“ஏன் அக்கா, பேசாம மீராவுக்கு, மனோஜ்கும் நாளைக்கு மது, தேவா கல்யாணத்தோடே சேத்து கல்யாணம் வச்சா என்ன?”, என்று கேட்டார் கேசவன்.
“இல்லை கேசவா. ரெண்டு ஜோடி கல்யாணம் ஒரே மேடையில வச்சா ஒரு ஜோடி தான் தழைக்கும்னு சிலர் சொல்லுவாங்க. உண்மையா பொய்யா தெரியலை. இருந்தாலும் எதுக்கு அதை யோசிக்கணும். அடுத்த முகுர்த்தத்துல பாத்துக்கலாம்”
“ஹ்ம்ம் அதுவும் சரி தான். சரி நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.
கண் இமைக்கும் நேரத்தில் மனோஜ் முகத்தை தொட்டு தழுவியது மீராவின் பார்வை.
“போய் வா”, என்னும் விதமாய் கண்ணடித்தான் மனோஜ். 
தன்னுடைய அறைக்கு மீராவை  அழைத்து வந்தாள்  மது.
அந்த அறையை சுற்றி பார்வை இட்ட மீரா, அங்கு மதுவும், வதனியும் ஒன்றாக எடுத்திருந்த போட்டோவை பார்த்து திகைத்தே போனாள்.
“எப்படி மது இது? ரெண்டு பேரும் ஒண்ணு போல இருக்கீங்க? கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியலை”
“ஆமா மீரா. நாங்க அப்படி தான். அம்மாவால  கூட சில நேரம் கண்டு பிடிக்க முடியாது. நாங்களா உண்மையை சொன்னா தான் உண்டு. சரி நீ குளிச்சிட்டு இந்த நைட்டி மாத்திக்கோ. சாப்பிட்டுட்டு தூங்கலாம். காலையில் சீக்கிரம் எந்திக்கணும்”
“நான் சாப்பிட்டுட்டு தூங்குவேன் மது. ஆனா நீ தூங்குவியா? உன் கனவில் அண்ணா  தான வருவார்? அப்புறம் எங்கே தூங்க”
“ஹா ஹா, அதுவும் சரி தான். ஆனால் அத்தான் தூங்கும் நேரம் எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டாங்க”, என்று புன்னகையுடன் சொன்னாள் மது.
“அது சரி தான். இன்னைக்கு ஒழுங்கா  தூங்காம இருந்துட்டு நாளைக்கு நைட்  நீ தூங்கிட்டா  என்ன செய்றது?”, என்று சிரித்தாள் மீரா.
மது முகத்தில் வெக்கம் படர்ந்தது. தேவாவின் ஆலிங்கனத்தை நினைத்து கொண்டாள். அவள் உடலில் ஒரு பர பரப்பு வந்தது. அவன் நெஞ்சில் இப்போதே முகம் புதைக்க வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்தது.
அவள் வெட்கத்தை ரசித்த மீரா “தேவா அண்ணா உன்னை தேவதைன்னு சொன்னாங்க மது. ஆனா இப்ப அது தான் உண்மைன்னு  எனக்கும் தோணுது. அழகா  இருக்க. உடல் அழகை மட்டும் சொல்லலை. மனசுக்குள்ளயும் நீ அழகு தான் மது”, என்றாள்.
“என்னது தேவதையா? என்னையா? உங்க அண்ணாவா? எப்ப சொன்னாங்க?”
“ஹாஸ்ப்பிட்டலில் வச்சு தான் சொன்னாங்க. நீ அவரோட தேவதையாம்”
“இல்லை மீரா, எனக்கு அவர் தான் கடவுளே. அந்த அளவுக்கு நான் அவரை நேசிக்கிறேன்”
“சரி தான் ரெண்டு பேரும் இன்னும் கதை தான் பேசுறீங்களா? காலம் முழுவதும் ஒரே வீட்ல தான வாழ போறீங்க? அப்புறம் பேசலாம். சீக்கிரம் சாப்பிட வாங்க”, என்று அழைத்தாள் அன்னம்.
இருவரும் குளித்து சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து படுத்ததும் மதுவின் மொபைல் சிணுங்கியது.
அந்த ரிங்க்டோனிலே யார் என்று உணர்ந்தவளுக்கு முகம் முழுவதும் மலர்ந்தது.
அதை பார்த்த மீரா, “அழைப்பு வந்துடுச்சு போல. சரி சரி பேசு”, என்று சிரித்தாள்.
“ஹ்ம்ம்”, என்று வெட்கத்துடன் அதை எடுத்து கொண்டு மொட்டை மாடிக்கு போகும் படிகளில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள் மது.
அவள் எடுத்ததுமே “மது”, என்று காதல் போதையுடன் வந்தது தேவாவின் குரல்.
அந்த குரலில், இவளுக்கும் உணர்வுகள் பெருக்கெடுத்தது. உதட்டை பல்லால் கடித்து கொண்டு “ம்ம்”, என்று சொன்னாள்.
“என்ன டி செய்ற?”
“இப்ப தான் படுக்கலாம்னு வந்தோம்”
“தூக்கம் வருதா?”
“வரலை. ஆனா தூங்கணும். காலைல சீக்கிரம் எந்திக்கணும்”
“எனக்கும் தான் டி. அப்படியே உன்னை தூக்கிட்டு வந்து ரேப் பண்ணனும் போல இருக்கு”
“ச்சி. என்ன பேச்சு இது? அடி வாங்க போறீங்க?”
“உண்மையிலே தான் மது மா. உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். எப்படா நாளைக்கு வரும்னு இருக்கு”
“இப்ப நீங்க போனை வச்சா தான் நான் தூங்க முடியும். தூங்குனா தான் காலைல விடியும்”
“ஆமா ஆமா, காலைல விடிஞ்சா தான் நைட் வரும். நைட் வந்தா தான் நீ என் கிட்ட இருப்ப? அப்புறம் அப்புறம்….”
“அத்தான்…”
“சரி சரி. ஆனா கண்டிப்பா நாளைக்கு உன்னை தூங்க விட மாட்டேன் டி”
“நீங்க ரொம்ப மோசம்”
“பாரு டா, மேடம்கு மட்டும் ஒண்ணுமே தோணலை. நாங்க நம்பணும். அன்னைக்கு விலகினவனை முதுகுல கை போட்டு இறுக்குனது யாராம்?”
“ஐயோ போங்க. அதையே சொல்லாதீங்க ப்ளீஸ்”
“சரி சரி வெக்க படாத. சொல்லலை. ஒரே ஒரு உம்மா கொடு”
“நாளைக்கு தான் அதெல்லாம்”
“நாளைக்கா? நாளைக்கு உன்கிட்ட எவன் கேட்டுட்டு இருக்க போறான்? அந்த உதட்டை அப்படியே சாப்பிட்டுருவேன்”
“ப்ளீஸ் அத்தான், எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் தூங்க போறேன். மீரா வேற தனியா படுத்துருக்கா”
“சரி சரி நான் தரேன். உம்மா உம்மா. குட் நைட் பொண்டாட்டி. நாளைக்கு பாக்கலாம். நாளைக்கு  சும்மா அப்படியே என்னை மயக்குற மாதிரி ரெடி ஆகி வரணும். அப்புறம் இன்னோன்னு. நாளைக்கு எல்லாரும்  புகுந்த வீட்டுக்கு போகணும்னு நினைச்சு அழுவாங்கல்ல? உங்க அம்மா, அப்பாவை நீ நடு ராத்திரி பாக்கணும்னு நினைச்சா கூட நான் கூட்டிட்டு போறேன். ஆனா நீ மட்டும் கண் கலங்க கூடாது சரியா மது மா?”
அவன் காதலில் நெகிழ்ந்தவள் “ஐ லவ் யு அத்தான்”, என்று சொல்லி அவனிடமும் அந்த வார்த்தையை பெற்று கொண்டே போனை வைத்தாள்.
படுத்திருந்த மீரா அருகில் வந்து படுத்து தூங்கி போன மது, நடுராத்திரியில் எதுவோ ஒரு சத்தத்தில் கண்களை திறந்தாள்.
“என்னை விடு, ச்சி தொடாத. கிட்ட வந்தா செத்துருவேன். பாதரா இருந்துகிட்டு இப்படி பண்ணுறியே? ச்சி வெக்கமா இல்லை. பொறுக்கி நாயே விடு டா. நாளைக்கு உன்னோட மானத்தை நான் வாங்கலை என் பேரு மீரா இல்லை”, என்று புலம்பி கொண்டிருந்தாள் மீரா.
அதை கேட்ட மதுவுக்கு அவளுடைய கடந்த காலத்தில் நடந்த விஷயம் என்று புரிந்தது. மீரா அருகில் சென்று அவள் தலையை வருடி கொடுத்தவள் “ஒன்னும் இல்ல மீரா. ஒண்ணுமே இல்ல தூங்கு மா”, என்றாள். மீராவும் அலைப்புறுதல் இன்றி தூங்கி போனாள். அவள் தூங்கியதை பார்த்த மது அதன் பின் தன்னுடைய தூக்கத்தை தொடர்ந்தாள்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது.”மது, மீரா எந்திரிங்க. மணி அஞ்சு ஆகிருச்சு பாரு. மேக்கப் போட ஆளுங்க இப்ப வந்துருவாங்க. குளிச்சிட்டு தயாராகுங்க”, என்று எழுப்பி விட்டாள் அன்னம்.
கண்ணை கசக்கி கொண்டு எழுந்த மது, அருகில் தூங்கி கொண்டிருந்த மீராவை பார்த்தாள். மீராவின் கை மதுவை பற்றி இருந்தது.
“பாவம், இத்தனை நாள் யார் பக்கத்துலயும் தூங்கி இருக்க மாட்டா. தனியாவே இருக்குறது ரொம்ப கஸ்டம் தான்”, என்று நினைத்து கொண்டு மீராவை எழுப்பினாள் மது.
எழுந்து திரு திருவென்று முழித்தாள் மீரா.
“என்ன மீரா, மனோஜ் அண்ணா வந்து கனவுல டூயட் பாடினாங்களா? இடையில் புகுந்து கெடுத்துட்டேனா?”, என்று சொல்லி கண்ணடித்தாள் மது.
“அப்படி எல்லாம் இல்லை மது. எப்பவும் தனியா இருப்பேனா? இன்னைக்கு உன்னை எதிரில் பாத்ததும் ஒரு நிமிசம் ஒண்ணுமே புரியலை. ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?”
“அதெல்லாம் இல்லை. அம்மா இப்ப தான் எழுப்பினாங்க. சரி போய் குளிச்சிட்டு வா. நான் வதனி ரூம்ல குளிச்சிக்கிறேன்”, என்று எழுந்து போனாள்.
அதன் பின் வேலைகள் வேகமாக நடந்தது.
மதுவுக்கு அழகு நிலைய பெண் வந்து ஒப்பனை செய்து விட்டாள்.  சாவித்திரி பெண்ணழைக்க வரும் போது அனைவரும் தயாராக இருந்தார்கள்.
மீராவின் கண்கள் மனோஜை தேடியது. அவள் பார்வையை உணர்ந்த சாவித்திரி “அவன் தேவாவுக்கு துணைக்கு இருக்கான் மீரா. இந்த சேலை உனக்கு அழகா இருக்கு”, என்றாள்.
வெட்கத்துடன் அழகாக சிரித்தாள் மீரா.
“எங்கே என் மருமக?”, என்று கேட்டு கொண்டே உள்ளே சென்று மதுவை பார்த்த சாவித்திரி அசந்து விட்டாள்.
“மது மா, உன்னை பாத்ததும் என் மகன் மணமேடைலேயே மயங்கி விழ போறான் பாரு. அவ்வளவு அழகா இருக்க கண்ணம்மா?”, என்றாள்.
“போங்க அத்தை”, என்று அழகாக சிணுங்கினாள் மது. பெண்ணழைப்பு ஆரம்பித்தது.
அங்கே மணமேடையில் அமர்ந்திருந்தான் தேவா.  அவன் கண்ணுக்கு பாதிப்பு  ஏற்பட கூடாது என்று நினைத்து  “புகை போட வேண்டாம், ஹோம குண்டம் வேண்டாம்”, என்று சொல்லி விட்டான் மனோஜ்.
வெறும் மந்திரத்தை மட்டும் உச்சரித்து கொண்டிருந்த ஐயரை பார்த்து தேவாவுக்கே சிரிப்பு வந்து விட்டது. ஆனாலும் சாஸ்திரம், சம்பிரதாயம் என்று பார்த்து கண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாதே.
தேவாவின் கண்கள் வாசலையே பார்த்து கொண்டிருந்தது.
“என்ன மச்சான், வழி மேல் விழி வைத்து காத்திருக்க போல?”, என்று கிண்டல் செய்தான் மனோஜ்.
“அடுத்த கல்யாணம் உனக்கு தானே மகனே. அப்ப இருக்கு டா”, என்று சிரித்தான் தேவா.
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement