Advertisement

அத்தியாயம் 5
காலம் கடந்த பின்னும் 
கல்வெட்டாய் பதிகின்றன 
என் மீது நீ கொண்ட காதல்!!!
வீட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கி, அந்த பக்கம் வந்து அவன் கையை பிடித்து கீழே இறங்க உதவி செய்தவள், அவன் கையை பிடித்து கொண்டே உள்ளே சென்றாள்.
“வந்துடீங்களா ரெண்டு பேரும்? இப்ப தான் என்ன டா இன்னும் காணுமேன்னு நினைச்சேன்”, என்று சிரித்தாள் சாவித்திரி.
“ஆமா அத்தை. கொஞ்சம் நேரம் ஆகிட்டு. நீங்க சாப்பிடீங்களா?”, என்று கேட்டாள் மது.
“நான் சாப்ட்டேன்.மனோஜுக்கும் கொடுத்து விட்டுட்டேன். நீங்க ரெண்டு பேர் தான் பாக்கி. ஆமா நீ என்ன தேவா அமைதியா இருக்க?”
“அப்படி எல்லாம் இல்லை மா. சும்மா ஏதோ யோசனை”
“ஓ! சரி, டாக்டர் என்ன சொன்னாங்க?”
“யாராவது ஐ டொனேட் பண்ணா ஆபரேஷன் வச்சிக்கலாம்னு சொல்லிருக்காங்க”
“நல்ல விஷயம் தானே டா. அப்புறம் ஏன் உம்முனு இருக்க?”
“மது என் கூட பேச மாட்டிக்கா”, என்று சிறு பிள்ளை போல் கோள் மூட்டினான் தேவா.
திடுக்கிட்டு அவனை பார்த்தாள் மது. “லூசு எப்படி சொல்றான் பாரு? அத்தை என்ன நினைச்சிக்குவாங்க?”, என்று முழித்தாள்.
“என் மருமக கோப படுற மாதிரி நீ என்ன டா செஞ்ச?”, என்று சிரித்தாள் சாவித்ரி.
“நான் ஒன்னும் செய்யலை மா. நியாயமா பாத்தா நான் தான் அவ மேல கோப படணும்”
“என்ன டா தேவா ஆச்சு?”
“அங்க டாக்டர் கிட்ட வந்து, அவ கண்ணை எனக்கு வைக்க சொல்றா மா. அவர் மறுத்துட்டார். நானும் தான். அதுக்கு என்கிட்டே பேசாம உம்முன்னு வாரா”
“மதுமா”, என்ற படி அழுது விட்டாள் சாவித்ரி.
“அத்தை என்ன இது?”
“நீ மருமகளா வந்ததுக்கு கடவுள் கிட்ட எத்தனை நன்றி சொன்னாலும் தகாது. ஆனா அவனுக்கு நீ கண்ணா இரு, அது போதும். உன் கண்ணை கொடுத்து தான் உன் காதலை நிரூபிக்கணும்னு இல்லை. அவனுக்கு கண்டிப்பா கண்ணு கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க பாரேன். சரி சாப்பிடுங்க, ரெண்டு பேரும்”, என்று கண்ணை துடைத்து விட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
சாவித்ரி போன பிறகு தேவாவிடம் சீறினாள் மது. “உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்ப எதுக்கு இதை அத்தை கிட்ட சொன்னீங்க? நானே கடுப்புல இருக்கேன். நீங்க கூட கொஞ்சம் பண்றீங்க?”
“இப்ப என்ன கடுப்பு உனக்கு?”
“என்னோட கண்ணை எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க? என்னை வேற யாரோன்னு நினைக்கிறதுனால தான இப்படி சொல்றீங்க?”, என்று அழுது விட்டாள் மது.
“லூசு”, என்ற படியே அவளை இழுத்து அணைத்து கொண்டவன் “நான் உன்னை வேற யாரோன்னு நினைச்சு வேண்டாம்னு சொல்லலை. நீ வேணும்னு நினைச்சு தான் வேண்டாம்னு சொல்றேன். புரியலையா? நீ என்னை கவனிச்சிக்கிறது பிடிச்சிருக்கு. எனக்கு பல்லு விளக்கி, குளிக்க வைக்கிறது, டிரஸ் மாத்தி விடுறது. உன் கை என்மேல படுறது எல்லாமே பிடிச்சிருக்கு”, என்றான். 
“ச்சீ”, என்று சிணுங்கி கொண்டே அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் மது.
“என்ன ச்சீ? நீ என்னை குழந்தை மாதிரி பாத்துக்குறதை நான் ரசிக்கிறேன். எனக்கு அது வேணும். எனக்கு கண்ணு எல்லாம் வேண்டாம். நீ தான் வேணும். உன் தொடுகை தான் வேணும்”
“போங்க அத்தான்”
“போங்கவா? நீ இல்லாம எங்க போறதாம்? சரி சரி வா பசிக்குது. சாப்பாடு ஊட்டி விடு”, என்று சொல்லி அவளை அழைத்து  கொண்டு  சென்றான்.

சாப்பிட்டு முடிந்ததும் அவனை ரூமுக்கு அழைத்து வந்தாள் மது.

உள்ளே வந்தது தான் தாமதம், அவளை இழுத்து அணைத்தவன் அவள் முகம் முழுவதும் முத்தங்களால் அர்ச்சித்தான்.

“அத்தான் என்ன இது?”

“என்னோட பொக்கிஷம் கண்ணம்மா நீ. என்னோட அன்பை என்னால இப்படி தான் காட்ட முடியும்”, என்று சிரித்தான் தேவா.

“இப்ப எதுக்கு பாசம் பொங்குதாம்?”

“இப்படி எனக்காகவே வாழ நினைக்கிற உன் மேல காதல் பொங்காம என்ன செய்யுமாம்”

“ரொம்ப ஐஸ் வைக்கிறீங்க? ஐயாவுக்கு என்ன வேணுமாம்”

“நீ வேணும்னு சொன்னா கொடுக்க போறியா?”

“அடி வாங்க போறீங்க? இன்னும் ஒரு வாரம் தான் பா இருக்கு”

“ஒரு வாரம் இருக்கு”
“சீக்கிரம் நாள் ஓடிரும்”
“சரி அதெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு முத்தம் கொடேன். ரொம்ப கிக்கா இருக்கணும்”
“கிக்காவா? கிக் வரணும்னா எங்க முத்தம் கொடுக்கணும்?”
“எங்க வேணும்னாலும் கொடு”
அவன் நெற்றியில் உதட்டை பொருத்தியவள் “ஓகே வா?”, என்று கேட்டாள்.
“இல்லை”
அவன் இரண்டு கன்னத்திலும் முத்த மிட்டுவிட்டு நிறுத்தினாள். அதுவும் இல்லை என்றான் தேவா.
அவன் கீழ் உதட்டை மட்டும் பல்லால் இழுத்தவள், அதை தன்னுடைய நாக்கால் ஈர படுத்தினாள்.
“ஆ”. என்றவன் அவளுடைய உதடுகளை பிச்சி தின்று விட்டான்.
அவனுடைய முத்தத்தில் மிரண்ட மது “நான் கீழ போறேன், போங்க அத்தான். இங்க இருந்தா நீங்க இப்படியே தான் செய்வீங்க”, என்று சிணுங்கினாள்.
“சரி சரி ஒன்னும் செய்ய மாட்டேன். சும்மா பேசிட்டு இருக்கலாம்”
“ஒன்னும் வேண்டாம். உங்களை பத்தி தெரியாதா? பேச்சுன்னு ஆரம்பிச்சு முத்ததுல போய் முடியும். இன்னைக்கு நான், அத்தை, அப்பா, அம்மா எல்லாரும் டிரஸ் எடுக்க போறோம். மனோஜ் அண்ணா வந்தவுடனே கிளம்புறோம்”
“நிஜமாவா?”
“ஆமா, சரி உங்களுக்கு ரிசப்ஷனுக்கு என்ன கலர் வேணும்?”
“ரிசப்ஷன் வைக்க வேண்டாம் மது”
“ஹ்ம்ம், சரி வேண்டாம்”
“எப்படி டி என் விருப்பத்தை பெருசா மதிக்கிற. நான் வேண்டாம்னு சொன்னா வேண்டாமா?”
“எனக்கு உங்க சந்தோசம் தான் அத்தான் முக்கியம். வேற எதுவும் ஆசை இல்லை”
“நீ கிளம்பு. போய் உங்க அத்தையவே கொஞ்சு”
“இப்ப எதுக்கு விரட்டி விடுறீங்க?”
“ஆமா, நீ இப்படி எல்லாம் ஆசையா பேச வேண்டியது. அப்புறம் எனக்கு மூட் வரும் போது ஓடிருவ”
“எப்பவும் அந்த நினைப்பு தான். உங்களை… உக்காந்து கந்த சஷ்டி கவசம் சொல்லுங்க. நாங்க ஷாப்பிங் போய்ட்டு வரோம். மனோஜ் அண்ணா இப்ப வந்துருவாங்க”
“சரி டா, உனக்கு புடிச்ச கல்யாண சேலையை வாங்கு. எவ்வளவு விலைன்னாலும் பரவால்ல சரியா?”
“சரி அத்தான். நாளைக்கு பாப்போம்”, என்று கிளம்பி கீழே போன மது, கேசவன், அன்னம் வந்தவுடன் மனோஜ் பொறுப்பில் தேவாவை விட்டுவிட்டு  சாவித்ரியை அழைத்து கொண்டு கடைக்கு சென்றார்கள்.
“இவங்க கடைக்கு போனா இப்ப வருவாங்கன்னு நினைக்கிற? கேசவன் அப்பா முழி பிதுங்க போறாரு”, என்று சிரித்தான் மனோஜ். 
“ஆமா டா. அவர் ஒரு அப்பிராணி”, என்று சிரித்தான் தேவா.
“சரி டா. நீ இரு நான் குளிச்சிட்டு வரேன். ரெண்டு பேரும் தோட்டத்துக்கு போவோம்”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான் மனோஜ்.
அப்போது தேவா மொபைல் அடித்தது. எடுத்து காதில் வைத்தவன் “யாரு?”, என்று கேட்டான்.
“நான் டாக்டர் தேவசகாயம் பேசுறேன் தேவா. இன்னைக்கு பாத்துட்டு போனீங்களே”
“ஓ எஸ் டாக்டர் சொல்லுங்க”
“ஒரு குட் நியூஸ் தேவா. அமெரிக்கால பெரிய ஐ டாக்டர் இருக்கார். அவர் விஞ்ஞானியும் கூட. அவர் இப்ப டெல்லி யூனிவெர்சிட்டில ஒரு கான்பெரன்ஸ்காக வந்திருக்காராம். அது மட்டும் இல்லாம மது உங்க மேல வச்சிருக்க லவ்வை பார்த்து நான் பிரமிச்சு போய், டெல்லில வேலை பாக்குற என் பிரண்ட் கிட்ட  கண் கிடைச்சா சொல்ல சொன்னேன்.  அவன் தான் சொன்னான், அந்த சைன்டிஸ்ட் வந்துருக்குறதா”, என்று சந்தோசமாக சிரித்தார் டாக்டர்.
“ரொம்ப சந்தோசம் டாக்டர். ஆனா ஐ கிடைக்கணுமே”
“அது தான் கடவுளரோட அதிசயம் மிஸ்டர் தேவா. ஒரு பெரிய அரசியல் வாதிக்காக கண் கிடைச்சிருக்கு. ஆனா அது அவருக்கு  பொருந்தலையாம். அதான் உங்களுக்கு ட்ரை பண்ணி பாப்போமேன்னு கேட்டேன். அவன் உடனே வர சொன்னான்”
“அடுத்த வாரம் கல்யாணம் முடிஞ்ச பிறகு வரலாமா டாக்டர்”
“தேவா அந்த கல்யாணத்தை பாக்குறதுக்கு, உங்களுக்கு பார்வை வேண்டாமா? உங்க மதுவையும் அந்த கல்யாணத்தையும் நான் நீங்க கண்ணால பாத்து ரசிக்கணும்னு ஆசை படுறேன். முயற்சி செய்து பாக்கலாமே. இன்னைக்கு பிளைட்ல கிளம்புனா நாளைக்கே ஆபரேஷன் வச்சிக்கலாம். ரெண்டு நாள் ரெஸ்ட். அப்புறம் கட்டு பிரிக்கணும். என்ன கல்யாணத்துக்கு முந்துன நாளோ இல்லை கல்யாணத்தன்னைக்கோ தான் நீங்க வர முடியும். பட் கடவுள் கொடுத்துருக்குற வாய்ப்புன்னு நினைச்சு கிளம்புங்க தேவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. எல்லாம் நல்ல படியா நடக்கும்”
“கண்டிப்பா டாக்டர். எனக்கும் நம்பிக்கை இருக்கு. நான் கிளம்ப இப்பவே ஏற்பாடு செய்றேன்”
“ஆனா பணம் அதிகமா செலவாகும் தேவா”
“அது பரவால்ல டாக்டர், இப்படி பட்ட சூழ்நிலை வரும்னு நினைச்சு தான் கடவுள் எனக்கு நிறைய பணத்தை கொடுத்துருக்காரோ என்னவோ? கிளம்ப எல்லா ஏற்படும் செய்றேன்”
“நீங்க இங்க இருந்து கிளம்புனா போதும். டெல்லில நீங்க இறங்குனதுல இருந்து திரும்பி வர வரைக்கும் என்னோட பிரண்ட் உங்களை கவனிச்சுப்பான் சரியா?”
“தேங்க்ஸ் டாக்டர் நான் அங்க போனதும் உங்களுக்கு கால் பண்றேன்”, என்று சொல்லி போனை வைத்த தேவா,  அடுத்த நொடி “மனோஜ்”, என்று கத்தினான்.
அவனுடைய அலறலில் பயந்த மனோஜ் பாதி குளியலில் இருந்து அப்படியே ஓடி வந்தான்.
“என்ன டா எதுக்கு இப்படி கத்துன?”
“மச்சான் எனக்கு கண்ணு வர போகுது டா. உங்களை எல்லாம்  நான் பாக்க போறேன்”
“டேய் மச்சி நிஜமாவே வா?”
“ஆமா டா. ஆனா வாய்ப்பு இல்லாமலும் போகலாம். கிடைக்கவும் செய்யலாம்”
“எனக்கு நம்பிக்கை இருக்கு டா”, என்ற படி தேவாவை அணைத்து கொண்டான் மனோஜ்.
“ச்சி நாயே, இப்படியா டா ஒண்ணுமே இல்லாம ஓடி வரது?”
அப்போது தான் ஒண்ணுமே அணியாமல் ஓடி வந்ததே புரிந்தது மனோஜ்க்கு. “நீ அலறுனதுல நான் பயந்தே போய்ட்டேன் டா. நல்லதா போச்சு. என் மானம் தப்பிச்சது. நீ மட்டும் பாத்துருந்த என் டார்லிங்கை நான் எப்படி சமாளிக்கிறது?”
“டார்லிங்கா? என்ன டா மனோஜ் சொல்ற?”
“நான் கட்டிக்க போறவளை தவிர யாரும் என்னை முழுசா பாக்க கூடாது”
“அட ச்சி, இவன் அல்ட்ரா மாடல் பிகர், இவனை பப்பி சேமா பாக்க இங்க தவம் இருக்காங்க. நீ குளிச்சது போதும். உடனே டெல்லிக்கு டிக்கட் இருக்கான்னு பாரேன்”
“இதோ பாக்குறேன் டா”, என்று ஆரம்பித்த மனோஜ் “இன்னும் ரெண்டு மணி நேரத்துல இருக்கு டா. இல்லைனா நைட் தான்”, என்றான்.
“மதுவையும் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன் டா. பார்வை வந்தா அவளை தான் முதலில் பாக்கணும்”, என்று யோசனையாக சொன்னான் தேவா.
“நாளைக்கு ஆபரேஷன் வச்சாலும் கண் கட்டு பிரிக்க ரெண்டு நாள் ஆகும் டா. அப்ப நான் அம்மாவையும் மதுவையும் அங்க வர வைக்கிறேன். முதலில் நாம போகலாம் டா”

Advertisement