Advertisement

“நானும் இப்ப தான் குளிச்சேன். இங்க இருந்துருந்தா சேந்து குளிச்சிருக்கலாம். இல்லையா மது?”
“இப்படியே பேசாதீங்க அத்தான். எனக்கு ஒரு மாதிரி இருக்கு”
“ஒரு மாதிரினா?”
“நீங்க வேணும்னு தோணுது போதுமா?”
“எனக்கும் தான் டா. உன் அருகாமை வேணும்னு மனசும் உடம்பும் ஏங்குது. தேங்க்ஸ் மது. மனசுக்குள்ள நிறைய போராட்டமா இருந்தது. இந்த கல்யாணம் நடக்காதோன்னு பயந்துட்டேன். ஆனா நீயே  எனக்கு தான் சொந்தம்னு  புரூவ் பண்ணிட்ட. உன்னை எனக்கு தரலைனா மனசுக்குள்ள சஞ்சலத்தோட இருந்திருப்பேன் மது மா. எப்ப டா  கல்யாண நாள் வரும், நீ என் பக்கத்தில் இருப்பேன்னு  ஆசையா இருக்கு”
“நானும் அதையே தான் அத்தான் நினைச்சிட்டு இருந்தேன். அதான் போன்  பண்ணேன். அப்புறம்  இப்ப தான் இந்த செயின் ஓப்பன்  பண்ணி பாத்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை தெரியுமா? சூப்பரா  இருக்கு. தேங்க் யூ”
“அது வெறும் செயின் இல்லை மது. என்னோட மொத்த காதலும் அது தான் மது. நீ தான் என்னோட உலகமே”
“இந்த வார்த்தை கேட்டதே போதும் அத்தான். மனசு நிரஞ்சு போய் இருக்கு. இப்பவே என் உயிர் போனா கூட சந்தோசம் தான்”
“இப்படி எல்லாம் பேசுனா, நாளைக்கு வரும் போது கடிச்சு வச்சிருவேன்  டி, ராட்சஸி. ரொம்ப வருசம் சந்தோசமா வாழணும்னு  நினைக்காம இப்படி பேசி கஷ்ட படுத்தாத மது மா”
அவன் வருந்துவது பொறுக்காமல் “எப்படி கடிப்பீங்க? இன்னைக்கு கடிச்சு வச்ச  மாதிரியா? ரொம்ப எரிஞ்சது குளிக்கும் போது தெரியுமா?”, என்று சிரித்தாள் மது.
“சாரி டி. முதல் தடவை வேறயா? ரொம்ப உணர்ச்சி வச பட்டுட்டேன். என்னையே அறியாம … ரொம்ப வலிச்சதா மது?”
“வலிக்குதுன்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசமாம் ஐயாவுக்கு? மருந்து போடும் எண்ணம் எதுவும் இருக்கோ?”, என்று சீண்டினாள் மது.
“நான் எப்படி மருந்து போட? கண்ணு தெரியாதே”
“அத்தான். இப்படி பேசினா போனை வச்சிருவேன். இன்னொரு தடவை கண்ணு தெரியலைன்னு நினைக்க கூடாது”
“அதை சொல்லலை டி லூசு. முழுசா தான் கேளேன்”
“என்ன?”, என்று முறைப்புடன் கேட்டாள் மது,
“கடிச்ச இடத்துல உதட்டால ஒத்தடம் கொடுக்கலாம்னு தான். அதுக்கு பார்வை வேணுமே, இல்லைனா எக்கு தப்பா எங்கயாவது உதடு போச்சுன்னா?”
“இன்னைக்கு மட்டும் போகலையோ?”
“ஹா ஹா  ரொம்ப சாப்ட் டி நீ”
“சி போங்க அத்தான்.  உங்களை…..”
“சரி டா . உன்னை வேற ரொம்ப படுத்தி எடுத்துட்டேன். நீ தூங்கு. காலைல ஒன்பது மணிக்கு நீ இங்க என்னோட ரூம்ல இருக்கணும். சொல்லிட்டேன்”
“நான் வீட்டுக்கு தான் வருவேன். ரூம்கு எல்லாம் வர மாட்டேன்”, என்று சிரித்தாள் மது.
“ஏண்டி நான் மறந்திருந்தாலும் நீ ஏத்தி விடுவ போலயே? நாளைக்கு வா. பெரிய தண்டனையா யோசிச்சு வைக்கிறேன்”
“என்னோட அத்தான்  என்ன தண்டனை கொடுத்தாலும் சந்தோசமா ஏத்துக்குவேன். ஐ லவ் யூ சோ மச்”
“ஐ லவ் யூ சோ மச் மது குட்டி. குட் நைட் காலைல பேசுறேன்”
“ஹ்ம் சரி வைக்கிறேன்”, என்று வைத்தவள் சந்தோசமாக படுக்கையில் விழுந்தாள்.
கட்டிலில் அமர்ந்த தேவாவுக்கு அப்போது தான், அவள் எழுதி கொடுத்த பேப்பர் நினைவில் வந்தது. அடுத்த நிமிடம் தன்னுடைய நண்பன் மனோஜை அழைத்தான்.
“என்ன டா தேவா? இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க? எதாவது முக்கியமான விஷயமா?”, என்று கேட்டான் மனோஜ்.
“இல்லை டா, நீ நாளைக்கு ஒரு ஏழு இல்லைன்னா எட்டு மணிக்கு வீட்டுக்கு வர முடியுமா?”
“கண்டிப்பா வரேன்   டா, நீ கூப்பிட்டு வராம இருப்பேனா? அது மட்டும் இல்லாம நானே வரணும்னு தான் நினைச்சேன். இந்த வருசம் புரொடக்சன் பத்தி பேசணும். லாபத்தை லேபர்க்கும் நமக்கும் ஷேர் பிரிக்கணும்ல?”
“என்ன டா,  இதை போய் என்கிட்ட கேட்டு கிட்டு. எல்லா மாசம் மாதிரி நீயே செஞ்சிரு”
“இப்படி சொன்னா எப்படி தேவா. இத்தனை நாளும் செய்வேன் தான். ஆனா உன்கிட்ட ஆலோசனை கேட்டுட்டு தான் செய்வேன். இப்ப தான் நீ இங்க வர முடியாத நிலைமை. ஆனாலும் நான் உன்கிட்ட எல்லாம் சொல்லணும்ல?”
“அதெல்லாம் சொல்ல வேண்டாம் டா. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நீயும், நானும் பார்ட்னர் தான். நீ ஒன்னும் எனக்கு கீழே வேலை செய்யலை ஓகே. நீயும் ஓனர் தான். எல்லா முடிவும் எடுக்கலாம்”
“இப்படி நம்புற? நான் உன்னை ஏமாத்திட்டேன்னா என்ன செய்வ தேவா?”, என்று கேட்ட மனோஜின் குரலில் நெகிழ்வு இருந்தது.
“இந்த உலகத்தில் என்னை விட நான் உன்னை நம்புறேன் டா. நீ என்னோட நண்பன் டா மனோஜ்”
“இதுக்கு நான் என்ன கைம்மாறு டா செய்ய போறேன்? ஒன்னும் இல்லாத அனாதையை கூட படிச்ச அப்படிங்குற காரணத்தால கூடவே வச்சிருந்து, உனக்கு விவசாய நிலமே ஏக பட்டது இருக்கும் போது எனக்காக கம்பெனி ஆரம்பிச்சு அதுல என்னையும் பாட்னரா ஆக்கி என்னையே உயர்த்திருக்க மச்சான்”
“இந்த கண்ணால ஒண்ணுக்கு அடிக்கிறதை விடு டா பக்கி. அப்புறம் யாரும் இல்லைனு சொல்லாத. அம்மா கேட்டா உன்னை கொன்னுருவாங்க”
“ஆமா டா, சாவித்ரி கிட்ட சொல்லிராத. என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. நான் உனக்கு அம்மாவா தெரியலையானு அப்புறம் ஒரு வாரம் மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருப்பாங்க. ஏற்கனவே என் மேல கோபமா இருக்காங்க”
“அப்புறம் இங்க எங்க கூடவே தங்குன்னு கூப்பிட்டா, நீ எதுக்கு மனோஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்க?”
“இது ஹாஸ்டல் இல்லை டா தேவா. நாலு பேச்சிலர் தங்கிருக்குற ரூம்”
“ஆமா இது ரொம்ப முக்கியம். போடா”
“எனக்கு கல்யாணம்னு ஒன்னு ஆகட்டும் டா. பொண்டாட்டியோட வந்து டேரா போட்டுறேன் சரியா?”, என்று சொல்லி தேவாவை சமாதான படுத்தினான் மனோஜ்.
“ஹ்ம்ம் சரி சரி”
“டேய் மச்சான். உன் கல்யாணம் எந்த லெவல்ல இருக்கு. ஆபிஸ் விசயத்துல அதை கேக்க மறந்துட்டேன் பாரு? சிஸ்டர் பேசுனாங்களா?”
“பேசுனாங்களாவா? அதெல்லாம் இப்ப தான் மேடம் வந்து பாத்துட்டு போறாங்க. இவ்வளவு நேரம் அவ கூட தான் பேசிட்டு இருந்தேன்”
“டேய், இத்தனை நாள் பேசலையானு கேட்டதுக்கு கல்யாணம் அப்புறம் தான் அவ கிட்ட பேசுவேன்னு சொன்ன? எங்க அந்த மானஸ்தன்?”
“அந்த மானஸ்தன் செத்து, ரொம்ப நேரம் ஆகிருச்சு. சரி கல்யாண விஷயம் தான் பேசணும். ரொம்ப முக்கியமான விஷயம். நீ வந்து சேரு”
“ரொம்ப அவசரமா டா? நான் வேணா இப்பவே வரட்டா தேவா”
“மனோஜ்னா, மனோஜ் தான். எப்படி இந்த நேரத்துக்கு கூப்பிடன்னு யோசிச்சேன். நீயே வாயை விட்டுட்ட. அடுத்த அரைமணி நேரத்துல நீ இங்க இருக்கணும்”
“இது தான் தவளை தன் வாயால் கெடுறதா மச்சான்?”
“அதே! அதே! நீ வா வா. அப்புறம் இங்கயே தங்கிட்டு காலைல போகலாம் மனோஜ்”
“சரி, மாட்டேன்னு சொன்னா கேக்கவா போற? போனை வை, கிளம்புறேன்”, என்று சொல்லி வைத்து விட்டு கிளம்பினான் மனோஜ்.
அங்கு இருந்த சட்டையை எடுத்து போட்ட மனோஜ் “நாளைக்கு ஆபிஸ் போட போற டிரெஸ்ஸையும் எடுத்துக்கலாம்”, என்று ஒரு நிமிடம் யோசித்தான்.
“சே வேண்டாம். அதை தூக்கிட்டு அலையனும். இங்க வந்தே கிளம்பிக்கலாம்”, என்று முடிவு செய்து கூட தங்கி இருந்த நண்பர்களிடமும் சொல்லி விட்டு தேவா வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.
அங்கே தேவாவோ மது எழுதி கொடுத்த பேப்பரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.
“நீயே என்னோட கண்ணா என் கூட இருக்கிறப்ப, நான் எதுக்கு மது உன் கண்ணு வேணும்னு கேக்க போறேன்? எனக்கு என் மது தான் வேணும். மது மது… பித்து பிடிக்க வைக்கிற டி. எப்படி இது சாத்தியமாச்சு? நீ எப்படி என் வாழ்க்கையில் வந்த? இப்ப நீயே என் வாழ்க்கையாகிட்ட. மிஸ் யு கண்ணம்மா”, என்று பிதற்றி கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில வாசல் செக்யூரிட்டி மனோஜுக்கு கேட் திறந்து விட்டு வணக்கம் தெரிவித்து கொண்டிருந்தான்.
“வணக்கம் நாராயணன் சாப்பிட்டீங்களா?”, என்று அவரிடம் விசாரித்து பேசி விட்டு உள்ளே வந்து பெல் அடுத்தவனை வரவேற்றது சாவித்ரி தான்.
அவனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள்.
“சாவி இதெல்லாம் அநியாயம். இப்படி முகத்தை திரும்பினா உன் பையன் பாவம் தான?”, என்று அவளுடைய நாடியை பிடித்து கொஞ்சினான் மனோஜ்.
“என் பையன்னா, நம்ம வீட்ல இருக்காம எதுக்கு டா வெளிய தங்கியிருக்க?”
“நீ மட்டும் இப்படி செய்யலாமா சாவி?”
“சாவி, பூட்டுன்னு  கொஞ்சிட்டு இருந்த கொன்னுருவேன். நான் என்ன டா செஞ்சேன்?”
“பின்ன நீ தேவாவுக்கு மட்டும் தான பொண்ணு பாத்த? எனக்கு பாத்தியா? நான் தான் முன்னாடியே சொல்லிட்டேன்ல? கல்யாணம் முடிச்சு வை. உன்கூடவே இருக்கேன்னு”
“அடிங்க…. நாயே… உனக்கும் சேத்து பாத்ததுக்கு அவனுக்கு அப்புறம் பாருன்னு சொல்லிட்டு பேச்சை மாத்துற?”
“சரி சரி விடு கொஞ்சாத. அவனுக்கு முடிச்சிட்டு பாரு. சரி நான் அவனை போய் பாக்குறேன். வர சொன்னான்”
“வர சொன்னானா? என்ன டா ஏதும் சோகமா பேசுனானா?”
“சோகமாவா? நல்ல கேள்வி கேட்ட போ. அவன் உன் மருமக கூட டூயட் பாடிட்டு இருக்கான்”
“கடவுளே ரொம்ப சந்தோசம் டா. ஆனா நீ அப்புறமா அவனை போய் பாரு. இப்ப வந்து கொட்டிக்கோ”
“நான் சாப்பிட்டேன் சாவி மா”
“கிழிச்ச. ரெண்டு காஞ்சி போன தோசையை முழுங்கிருப்ப. ஒழுங்கா வந்து சாப்பிடு. அப்ப தான் தூக்கம் வரும்”, என்று கிட்சன் நோக்கி நடந்தாள்.
“அர்த்தராத்திரியில் அம்மாவை தொந்தரவு செய்றேனே”, என்று நொந்து கொண்டு அவர் அன்புடன் பரிமாறியதை சாப்பிட்டான் மனோஜ்.
“வயிறு நிறைஞ்சிருச்சு சாவி மா. நீங்க தூங்க போங்க. நான் அவனை போய் பாக்குறேன். அர்த்த ராத்திரியில் எழுப்பிட்டேன்ல?”
“போடா படவா. நீ வந்த பிறகு தான் வீடே நிறைஞ்ச மாதிரி இருக்கு. கல்யாணம் வரைக்கும் இங்கயே இரு டா மனோஜ்”
“சரி சாவி. நீ சொல்லி கேக்காம இருப்பேனா? நாளைக்கே திங்க்ஸ் எடுத்துட்டு வரேன். அப்புறம் கல்யாணம் முடிஞ்சதும் அங்க போயிருவேன்”
“டேய்….”
“பொறு பொறு. அவன் கல்யாணம் அப்புறம் பொண்ணு பாத்து எனக்கு கட்டி வை. நானும் அவளும் இங்கயே இருக்கிறோம் ஓகே வா. குட் நைட் பேபி”, என்று சொல்லி விட்டு துள்ளி குதித்து மாடிக்கு சென்றான்.
“தேவா, வதனி கல்யாணம் முடிஞ்சதும் மதுவை இவனுக்கு பாக்கணும்னு நினைச்சேன். கடைசில இப்படி ஆகிட்டு. ஆனால் கடவுள் தேவாவுக்கும், மதுவுக்கும் தான் முடிச்சு போட்டுருக்கார் போல? எல்லாம் நன்மைக்கே”, என்று நினைத்து பெருமூச்சு விட்டு விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றாள் சாவித்ரி.

காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement