Advertisement

அத்தியாயம் 3
ஒற்றைப் பார்வையில் 
மயங்க செய்யும் 
மந்திர கண்களை 
உனக்களித்தது யாரோ?!!!

தேவாவின் கையை பிடித்து அழைத்து வந்த மது, அவனை சாவித்திரி அருகில் அமர வைத்தாள்.

“சரி அக்கா, தம்பியே வந்துருச்சு. நாங்க கிளம்புறோம். போகும் போது  பத்திரிகை ஆஃபீஸ் வேற போகணும்”, என்றார் கேசவன்.

“மாமா”, என்று அழைத்தான் தேவா.

இப்போது அவன் மாமா என்று அழைப்பதில்  இருந்தே அவன் முழு சம்மதத்தை உணர்ந்தார்கள் அனைவரும்.

“சொல்லுங்க தம்பி”, என்று சந்தோசமாக கேட்டார் கேசவன்.

“மது, இங்கயே இருக்கட்டுமா? அவ இருந்தா கொஞ்சம் அம்மாவுக்கும் ஹெல்பா இருக்கும். பேசாம நீங்களும் அத்தையும் இங்கயே வந்துருங்களேன்”

அவன் இப்படி கேப்பான் என்று எதிர்பார்க்காமல் முழித்த சாவித்திரி, “தேவா, என்ன பா இப்படி கேக்குற?”, என்று கேட்டாள்.

“இல்லை மா  தோணுச்சு. தப்பா கேட்டுட்டேனா?”

“அப்படி இல்ல தேவா. அவங்க இங்க தங்க யோசிப்பாங்க. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியேனா, எப்படி பா? அவங்க நிலைமைல இருந்தும் யோசிக்கணும்ல பா?”
“விடுங்கக்கா. தம்பி ஒண்ணும் தப்பா கேக்கலை. ஆனா நீங்க சொல்ற மாதிரி, எங்களுக்கு தர்ம சங்கடம் தான். இப்பவே இங்க வந்து தங்குனா ஊர், உலகம் என்ன சொல்லும்? ஆனா தேவா தம்பி ஆசையா கேக்குறார்.  அதனால மது வேணும்னா பகலில் இங்க வரட்டும். சாயங்காலமா நான் மதுவை கூட்டிட்டு போறேன் சரியா தம்பி?”, என்றார் கேசவன்.

அவர் ஒத்து கிட்டதே பெருசு என்று நினைத்தவன் “சரி மாமா”, என்றான்.

“சரி நாங்க கிளம்புறோம். போகலாமா அன்னம்?”, என்று கேட்ட கேசவன் எழுந்து கொண்டார்.

“போகலாங்க. வரோம் அண்ணி. கிளம்புறோம் மாப்பிள்ளை”, என்று இருவரும் எழுந்தார்கள்.

அவர்களிடம் சரி என்ற தேவா “மது என்னை ரூமில் கொண்டு போய் விட்டுட்டு கிளம்பேன்”, என்றான்.

மறுபடியும் அவன் கை பற்றி அவனுடைய அறைக்கு அழைத்து  சென்றவளை, இழுத்து அனைத்து கொண்டான் தேவா.

“பிராடு”, என்று சிணுங்கிய மது அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.

“பிராடுன்னு சொல்லிட்டு, எதுக்கு மேடம் இப்படி என் மேல சாஞ்சு இருக்கீங்களாம்?”, என்று சிரித்தான் தேவா.

“ஏன்னா பிராடு பண்றது எனக்கு  பிடிச்சிருக்கே அதான். அப்புறம் அத்தான், அப்பா என்னை இங்க தங்க விடலைன்னு அப்பா மேல கோபமா உங்களுக்கு?”

“சே சே அதெல்லாம் இல்லை மது. அவர் தான் பகலில் இங்க விடுறேன்னு சொல்லிட்டாரே? அப்புறம் என்ன? அது மட்டும் இல்லாம, நைட் என்கிட்ட இருந்தா, இன்னைக்கு நடந்த மாதிரி  மறுபடியும் ஏதாவது ஆகும்”

அவன் கையை கிள்ளிய  மது “இப்ப பகலில் மட்டும் எதுவும் ஆகலையோ?”, என்று கேட்டாள்.

“ஹா ஹா மது ப்ளீஸ்  நீ கிளம்பி போயிரு டி. இப்படியே போச்சுன்னா, கல்யாணாமாவது ஒன்னாவது, என்கூடவே இருந்துருன்னு  இருக்க வச்சிருவேன். கொஞ்ச நேரம் முன்னாடி நடந்ததை நினைச்சாலே வெறி வருது டி”

“ஹ்ம் கிளம்புறேன்”, என்று சொன்னவள் மறுபடியும் அவன் நெஞ்சில் இறுக்கமாக சாய்ந்து அவனை கட்டி கொண்டாள்.

அவளும் அவனை போலவே விலக மனமில்லாமல் இருப்பதை உணர்ந்தவனுக்கு, மனம் எல்லையில்லா நிம்மதியை அடைந்தது.

“காலைல ஒன்பது மணிக்கு எல்லாம் நீ இங்க இருக்கணும் மது மா”, என்று சமாதான படுத்தி அனுப்பி வைத்தான் தேவா.

கீழே சாவித்ரியிடம் சொல்லி கொண்டு மூவரும் கிளம்பினார்கள். 

நேராக பத்திரிகை அடிக்க கொடுத்திருக்கும் கடைக்கு சென்று மாற்றங்களை சொல்லி விட்டு நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார்கள். 

அறைக்குள் சென்ற மது, முகம் முழுவதும் புன்னகையுடன் தலைக்கு குளிக்க சென்றாள். 

குளித்து முடித்து வந்தவளிடம் “என்ன டி இந்நேரம் தலைல தண்ணி ஊத்திட்டு வந்திருக்க?”, என்று கேட்டாள் அன்னம்.

“கச கசன்னு இருந்தது மா”, என்று  சமாளித்தாள் மது.

“சரி சாப்டுட்டு  போய் தலையை காய வை. அப்படியே படுத்திராத”

“சரி மா”, என்று சாப்பிட அமர்ந்தவளுக்கு சாப்பாடு உள்ளே போவேனா என்று அடம் பிடித்தது. அம்மாவுக்காக உள்ளே தள்ளியவள் போதும் என்று எழுந்து உள்ளே போய் விட்டாள்.

தேவாவே அவள் மனக்கண்ணில் சுற்றி வந்தான். அவனுடைய வாசனை இப்போதும் அவள் மேலே ஒட்டி இருப்பது போல இருந்தது மதுவுக்கு.

“கல்யாணம் முன்னாடியே பர்ஸ்ட் நைட் முடிச்சிட்டான் பாவி”, என்று சிரித்தாள்.

“அவன் வேண்டாம்ணு விலகும் போது, பிடிச்சு இழுத்தது யாராம்?”, என்று கேட்டது மனசாட்சி.

சிரித்து  கொண்டே அவன் அணிவித்த செயினை எடுத்து பார்த்தாள். அதுக்கு ஒரு முத்தம் கொடுத்தவள் அப்போது தான் அதில் இருந்த டாலரை உற்று பார்த்தாள். “இது என்ன இப்படி பிரியுற மாதிரி இருக்கு?”, என்று நினைத்து கொண்டு அதை விரித்தாள்.

அதில் ஒரு பக்கம் அவனுடைய புகைப்படம் இருந்தது. அடுத்த பக்கம் என்ன இருக்கும் என்று அனுமானித்து விட்டாள்  மது. 

“கண்டிப்பா வதனி போட்டோ வச்சிருப்பான். ஐயோ இப்ப இதை கழட்டவும்  முடியாது”, என்று நினைத்து பயத்துடனே கண்களை அந்த பக்கம் கொண்டு சென்றவள் அதிர்ந்தே போனாள். அங்கு இருந்தது அவள் சேலை கட்டி எடுத்திருந்த படம்.

திக் பிரம்மை பிடித்தவள் போல அதையே பார்த்தாள் மது.  அது அவளே தான். 

“ஒரு வேளை வதனியும்  சேலை கட்டி இந்த போட்டோ எடுத்திருப்பாளோ? ஆனா என்னை மாதிரி தான இருக்கு? நான் தான் இப்படி தலை சீவுவேன். நான் தானான்னு எனக்கே அடையாளம் தெரியலையே.  இது தெரியலைன்னா என் மண்டையே  வெடிச்சிரும்”, என்று நினைத்தவள் அம்மாவின் அறைக்தவை தட்டினாள்.

ஆசை கொண்ட மனது அவளுடைய புகை படத்தை கூட நம்ப மறுத்தது. “நானா இருக்கணும். தேவா என்னை தான் முதலில் பாத்திருக்கணும். என்னோட போட்டோ தான் அவன் கையில் கிடைச்சிருக்கணும்”, என்று மனதார கடவுளை வேண்டி கொண்டு கதவு திறக்க காத்திருந்தாள் மதுமிதா.

“என்ன மது தூங்கலையா?”, என்று கேட்டவாறே கதவை திறந்தாள் அன்னம்.

“இல்ல மா  அது வந்து, நீங்க அத்தை கிட்ட வதனியோட  எந்த போட்டோ கொடுத்தீங்க?”

“இப்ப ஏன் அதை கேக்குற மது மா? நான் அவ போட்டோ  கொடுக்கல மது. அவ எங்க சேலை கட்டிருக்கா? ஆனா தரகர் சேலை கட்டினது வேணும்னு சொன்னாரு. ரெண்டு பேரும் ஒண்ணா தான இருக்கீங்கன்னு உன்னோடதை தான்  கொடுத்தேன் மது”

“அம்மா”, என்று சொல்லி கொண்டே அன்னத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள் மது.

“என்ன மது?”

“அத்தான் எனக்கு இந்த செயின் பிரெஸெண்ட் பண்ணாங்க மா. அதுல இங்க பாருங்க யார் இருக்கான்னு”, என்று விரித்து காண்பித்தாள்.

அதை பார்த்த அன்னம் முகமும் மலர்ந்தது.

“மாப்பிள்ளைக்கு நீ தான் ஜோடின்னு  முன்னாடியே கடவுள் எழுதி வச்சிட்டான் போல மது. நீ ரொம்ப நல்லவ டா. எல்லாம் நல்லதா தான் நடக்கும். நீ கிளம்பும் போது, அந்த தம்பி முகமே சரி இல்லை. இப்ப தூக்கம் வரலைன்னா போன் பண்ணி பேசு மது”

“நீங்கலாமா பேச சொல்றீங்க? வதனி பேசுறேன்னு சொன்னப்ப கூட அதெல்லாம் கல்யாணம் வரைக்கும் வேண்டாம்னு சொன்னீங்களே மா?”

“சாஸ்திரம் சம்ப்ரதாயம் படி எதுவுமே இப்ப நடக்கலையே மது. உன்னோட மனசு சரினு சொன்னதுனால தான இந்த கல்யாணமே நடக்குது. அப்படி இருக்கிறப்ப, மனசு சந்தோஷத்துக்காக என்ன செஞ்சாலும் தப்பு இல்லை டா. உன்னை அவங்க வீட்லயே இருக்க சொன்னாருன்னா, அவர் உன்னை எந்த அளவுக்கு தேடிருக்கணும்? போன் பேசுறதுனால என்ன குறைஞ்சிற போகுது? போய் பேசு”

“சரி  மா”, என்று சிரித்து கொண்டே உள்ளே ஓடினாள் மது.
“என்ன ஆச்சு அன்னம்? மது என்ன சொல்றா?”, என்று கேட்டார் கேசவன்.

நடந்தததை சொன்னாள் அன்னம்.

“முன்னாடியே இந்த வதனி குழப்பம் உண்டு பண்ணலைன்னா, எல்லாம் நல்ல படியா போயிருக்கும். இப்ப சின்ன சங்கடம் வந்துருச்சு அன்னம். அக்கா வதனி விசயத்துல ஏதாவது நம்மளை நினைப்பாங்க தான?”

“அவ பண்ணத்துக்கு நம்ம பொறுப்பாக முடியுமாங்க. அண்ணி அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. இப்ப நடக்குறதும் நல்லதுக்கு தான். மதுவை கொண்டாடுவாங்க பாருங்க”

“மது சந்தோசமா இருந்தா, அதுவே போதும் அன்னம்”

“அவ சந்தோசமா தான் இருப்பா. தேவா தம்பி அவளை தேடுனதை பாத்தீங்க தான? நீங்க கவலை படாம படுங்க”

அறைக்குள் வந்த மதுமிதா, உடனே தன்னுடைய போனை எடுத்து அவனை அழைத்தாள். ஆனால் அந்த பக்கம் அவன் வேறு யாருடனோ பேசி கொண்டிருந்தான்.

“கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம்”, என்று நினைத்து வைத்து விட்டாள் மது.

அங்கே “தேவா சார் நான் பத்திரிக்கை ஆபிசில் இருந்து மணி பேசுறேன்”, என்று தேவாவின் போனுக்கு அழைத்து  பேசினான் மணி.

“சொல்லுங்க மணி. என்ன விசயம்?”, என்று கேட்டான் தேவா.

“உங்க மாமனார் கேசவன் வந்திருந்தார்.  அது மட்டும் இல்லாம பேரை மாத்தி அடிக்க  சொன்னார். நான் இந்த வீக் தான் உங்க வேலை முடிக்கணும்னு  நினைச்சேன். அதான் கண்பார்ம் பண்ண கால் பண்ணேன். அப்பவே  பண்ணேன். நீங்க எடுக்கலை”

“குளிச்சிட்டு இருந்தேன் மணி. அதான் எடுக்கலை. அவர் சொன்ன மாதிரியே அடிச்சிருங்க”

“சரிங்க சார். வைக்கவா?”

“ம்ம் சரி, ஆன்… மணி ஒரு நிமிசம்”

“சொல்லுங்க  சார்”

“பேர் மாத்துறது பத்தி மாமா என்ன சொன்னாங்க? சரியா சொல்லிருக்காங்களானு  கேக்க தான் கேட்டேன்”, என்றான் தேவா. கேட்டவன் மனதுக்குள் பட படத்தது. அவன் நினைத்தது சரியா என்று அவன் சொல்லும் பதிலில் தான் தெரியும்.

“மதுவதனினு முன்னாடி கொடுத்த பேரை மதுமிதான்னு மாத்த சொன்னாங்க சார். சரி தான சார்?”
“ஹ்ம் சரி அப்படியே போட்டுருங்க”, என்ற படி போனை வைத்தான் தேவா.
மனம் முழுவதும் சிந்தனையாக ஓடியது. அவனுடைய போன் மறுபடியும் அலறியது.
அட்டண்ட் செய்து காதில் வைத்த தேவா  “யார்  பேசுறது?”, என்று கேட்டான்.
“உங்களோட மஹாராணி பேசுறேன்”, என்று சிரித்தாள் மது.
அவள் குரலை கேட்டதுமே இருந்த மனசஞ்சலம் எல்லாமே பறந்து போனது தேவாவுக்கு.
அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“எந்த கோட்டைக்கு மஹாராணியாம்?”, என்று கேட்டு சிரித்தான் தேவா.
“உங்களோட இதய கோட்டைக்கு நீங்க தான் ராஜான்னா அங்கே குடியிருக்குற நான் தான ராணி”
“ராணி அம்மா, ராஜா பக்கத்தில் இருக்காம, எதுக்கு போனில்  கூப்பிடுறாங்களாம்”
“என்ன செய்ய? சேந்து இருக்க இன்னும் நாள் இருக்கே”, என்று பெருமூச்சு வந்தது மதுவுக்கு.
அவள் குரலில், அவனுக்கான அவளின் தேடலில் பெருமிதம் கொண்டான் தேவா.
“மது”, என்று ஆழ்ந்து ஒலித்தது தேவாவின் குரல்.
அவன் குரலில் திகைத்த மது “என்ன ஆச்சு அத்தான்?”, என்று கலவரமாக கேட்டாள். அவனுடைய நெருக்கமான குரலில் அவள் மனதில் இருந்த காதல் பொங்கி ததும்பியது.
தன்னை சமாளித்து கொண்டவன் “என்ன பண்ற?”, என்று கேட்டான்.
“எனக்கு…. எனக்கு நீங்க வேணும் அத்தான்”, என்ற படியே அழுது விட்டாள் மது.
“மது மா,  என்ன ஆச்சு டா ? அழுறியா என்ன?”
“ஹ்ம் எனக்கு உங்களை ரொம்ப தேடுது. உங்க கூட இருக்கணும். உங்க நெஞ்சில் சாஞ்சிக்கணும்னு  இருக்கு அத்தான்”
“கண் இருந்துச்சுன்னா உடனே வந்து உன்னை பாத்துருவேன்  கண்ணம்மா. இப்ப தான் எதுக்கு கண்ணு போச்சுன்னு  கவலையா இருக்கு? ஆனா இது கூட நல்லது தான். கண்ணு போனதுனால தான நீ எனக்கு கிடைச்சிருக்க?”, என்று உளறிய பின்னர் நாக்கை கடித்து கொண்டான் தேவா.
“என்ன அத்தான் சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மது.
“இல்லை மது, கல்யாணத்துக்கு முன்னாடியே நீ எனக்கு முழுசா கிடைச்சியே? அதை சொன்னேன்”
“ச்சி  போங்க அத்தான்”
“உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன் மது”, என்று சிரிப்புடன் ஒலித்தது அவன் குரல்.
“இப்ப எதுவோ விவகாரமா பேச போறான்”, என்று நினைத்த மது “என்ன அத்தான்?”, என்று கேட்டாள்.
“இல்லை இங்க உடம்புக்கு குளிச்சிட்டு போனியே? அங்க போய் தலைக்கு குளிச்சியா?”
“அடி வாங்க போறீங்க. இப்ப தான் குளிச்சேன்”

Advertisement