Advertisement

அத்தியாயம் 12 
உன்னுடைய நினைவுகள் 
என் கண்ணீர் துளி 
வழி வெளியேறுமானால் 
அழுவதையே நிறுத்தி 
விடுவேன் அன்பே!!!
“சந்தோசம் மது. அத்தை மாமா  கிட்ட  சொல்லு. அவங்களுக்கு  உன் அக்கா  மேல கோபம் இருந்தாலும்  என்ன செய்றாளோ  அப்படிங்குற  தவிப்பு  இருக்க  தான் செய்யுது. தெரிஞ்சா  சந்தோச படுவாங்க”, என்று  சிரித்தான்  தேவா.

“உங்களுக்கு  அவ  மேல  கோபம்  இல்லையா  அத்தான்?”
“அதான்  முன்னாடியே  சொல்லிட்டேனே. அவ  அப்படி  செஞ்சதுனால  தான  நீ  எனக்கு  கிடைச்ச? அப்புறம் அவ செஞ்சது எனக்கு கோபம் இருக்கு. ஆனா அதையே நினைச்சிட்டு இருக்க தான் எனக்கு நேரம் இல்லை. அதெல்லாம் முடிஞ்சு போனது மது மா. மன்னிப்பு கேட்டுடாள்ல? அவளே அவ தப்பை உணர்ந்திருப்பா. அது மட்டும் இல்லாம என்னோட தேவதையோட அக்காவாச்சே. வர சொல்லு”, என்று  சொல்லி  அவள்  கன்னத்தில்  அழுந்த  முத்தமிட்டான்  தேவா.

“ஹ்ம்ம்”, என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே “மன்னிப்பு  எல்லாம் வேண்டாம்  வதனி. நீ அப்படி செஞ்சதுனால  தான் எனக்கு அத்தான் கிடைச்சிருக்காங்க. இது தான் விதி போல? பழசை எல்லாம் மறந்திரு. உனக்கும் கல்யாணம் ஆகி இப்படி குழந்தைங்க  இருக்கும்னு நான் நினைக்கலை. எனக்கு சந்தோசமா இருக்கு. உன் குழந்தைகளை பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோசம்”, என்று அனுப்பி வைத்தாள்.

ஒரு வாரமாக தான் அனுப்பிய மெசஜ்க்கு பதில் வராமல் மார்க்கை போட்டு மண்டையை உடைத்தாள் வதனி. 

இன்று அவளிடம் இருந்து பதில் வந்ததும், சந்தோஷத்தில் கத்தியவள் மார்க்கை இறுக அணைத்து கொண்டாள்.

“தேங்க்ஸ் தேங்க்ஸ் மது. ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னோட பதில் பார்த்து. என் மேலே நிஜமா கோபம் போயிடுச்சுனா அங்க இருந்து எல்லாரும் இங்க வாறீங்களா பாப்பாக்களை பாக்குறதுக்கு. அம்மா, அப்பாவையும் கூட்டிட்டு வரியா? எங்கயாவது தூரத்தில் இருந்தாவது அவங்களை  பாத்துக்குறேன்”, என்று அனுப்பினாள் வதனி.

“சாரி வதனி. அடுத்த வாரம் எனக்கு டேட் சொல்லிருக்காங்க. பிரசவத்துக்கு நாள் நெருங்கிட்டு. இன்னும் கொஞ்ச நாள் எங்கயும் வர முடியாது. அப்புறம் அம்மா, அப்பாவுக்கு உன் மேல இருக்குற கோபம் எல்லாம் போயிருச்சு. நீ முடிஞ்சா குடும்பத்தோட இங்க  வா. இங்க யாரும் உன்னை எதுவும் கஷ்ட படுத்த மாட்டாங்க”, என்று மது சொன்னவுடன் இந்தியா கிளம்ப ஆயத்தமானாள் வதனி. 

ஒரு  வாரம்  கழித்து  அழகான  ஆன்  குழந்தை  பிறந்தது  மதுவுக்கு. தேவா  அந்த  ஹாஸ்ப்பிட்டலையே  ஒரு  வழி  செய்து  விட்டான்.

குடும்பம்  மொத்தமும்  சந்தோசமாக  இருந்தது. தேவாவை  உரித்து  வைத்திருந்த குழந்தையை  அனைவருக்கும்  பிடித்து  போனது. 
தேவாவை  மாதிரி  இருந்ததில்  மது  முகம்  சந்தோஷத்தில்   மிளிர்ந்தது
அதை  காதலாக  பார்த்தான்  தேவா. இரண்டு  நாளில்  வீட்டுக்கு  அழைத்து  செல்ல  பட்டாள்.

மதுவுக்கு பையன் பிறந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அவனை பார்க்க தான் அன்னமும், கேசவனும் கிளம்பி கொண்டிருந்தார்கள். மதுவை தேவா “எங்கேயும்  அனுப்ப மாட்டேன்”, என்று சொல்லி விட்டதால் தங்கள் பேரனுடன்  தேவா வீட்டிலே ஒரு மாசமாவது இருக்க தான் இருவரும் கிளம்பினார்கள்.

அப்போது  காலிங்  பெல்  அடித்தது.  கதவை திறந்த அன்னம், குடும்பத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்ற வதனியையும், கூட இருந்த மார்கையும் அவர்கள்  கையில்  இருந்த  இரு குழந்தைகளையும் பார்த்து அதிர்ச்சியானாள்.

அவள் முகத்தில் இருந்த அதிர்ச்சியில் “மது சர்ப்ரைஸ் கொடுக்க அம்மா, அப்பா கிட்ட  என்னை பத்தி சொல்லலை போல?”, என்று நினைத்து கொண்டாள் வதனி.

பையை தூக்கி கொண்டு வந்த கேசவன், அன்னம் வாசலை பார்த்து கொண்டு அதிர்ச்சியாக இருப்பதை பார்த்து “யாரு அன்னம் வந்திருக்கா?”, என்று கேட்டு கொண்டே அங்கு  வந்தார்.

வந்தவருக்கும் அதிர்ச்சி தான். “என்னை மன்னிப்பீங்களானு தெரியாது. ஆனா நான் மனசார திருந்தி வந்திருக்கேன். உங்களை ஒரு தடவை பாத்து , இந்த பிள்ளைங்களை உங்க கிட்ட காட்டணும்னு நினைச்சு வந்தோம். உங்களை பாத்துட்டோம். என்னை மன்னிச்சிருங்க பா. என்னை மன்னிச்சிருங்க மா. நாங்க வரோம்”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள் வதனி. 

அவள் போவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்த அன்னம் “இரு டி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

“இவர் தான் மாப்பிள்ளையா?”, என்று கேட்டார் கேசவன்.

அவர் பேசியதே போதும் என நினைத்து கண்களில் வழிந்த நீருடன் “ஆமா பா”, என்று சொன்னாள்.

மார்க்கும் அவரை பார்த்து சிரித்து வணக்கம் என்று சொன்னான். 

உள்ளே சென்ற அன்னம் ஆரத்தி எடுத்து  “உள்ள வா டி, வாங்க மாப்பிள்ளை”, என்று சொல்லி  உள்ளே அழைத்தாள்.

இருவர் காலிலும் வதனியும், மார்க்கும் விழுந்து வணங்கினார்கள். வதனி  மீது  தீராத  கோபம்  இருந்தாலும்  எங்கே  இருக்காளோ?  என்ன  செய்றாளோ? என்று  பெற்றவர்கள்  தவிக்க  தான்  செய்தார்கள். ஆனால்  இன்று  குடும்பம், குழந்தைகள்  என்று  வந்ததை  பார்த்து  இருவரையும் ஆசிர்வதித்த பெற்றவர்களுக்கும் கண்களில் கண்ணீர் வந்தது.

இருவர் காலையும் பிடித்து கதறி  அழுது கொண்டிருந்த மகளை தூக்கியவர்கள் அடுத்து பேத்தியை கொஞ்ச ஆரம்பித்தார்கள்.

தேவா  வீட்டில்  தங்க  எடுத்து வைத்திருந்த பையை வீட்டிலே வைத்து விட்டாள் அன்னம்.

“என்ன?”, என்று காரணம் கேட்டார் கேசவன். “மதுவை பாத்துக்க அண்ணி இருக்காங்க. ஆனா, இப்ப வதனியை பாத்துக்கணுமே. வதனி  இங்க   இருக்குற  வரைக்கும் அப்ப அப்ப போய் நாம  மதுவை  பாத்துக்கலாம். அங்க  அவளை  தாங்க  எல்லாரும்  இருக்காங்க. தப்பு  செஞ்சாலும்  வதனியும்  நம்ம  பொண்ணு  தானேங்க”, என்று சொல்லி விட்டாள் அன்னம்.

அடுத்து எல்லாருமே மதுவை பார்க்க கிளம்பினார்கள். 
குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள் மது. தன்னுடைய லேப்டாப்பை தூக்கி கொண்டு அறைக்குள் வந்த தேவா அவள் அருகில் அமர்ந்தான்.
“இப்ப யாரு உங்களை உள்ள வர சொன்னா. போங்க குறு குறுன்னு என்னையே பாத்துட்டு இருப்பீங்க? எனக்கு வெக்கமா இருக்கும் போங்க”, என்று அனுப்பி வைத்தாள் மது.
அவளை பார்த்து முறைத்தவன், “என் பொண்டாட்டியை சைட் அடிக்க விடு டி”, என்றான்.
இப்போது அவனை அவள் முறைத்தாள்.
அவளை நெருங்கி அமர்ந்தவன் “இப்ப ரொம்ப அழகா மாறிட்ட டி மது. கொழுக் மொழுக்னு இருக்க. இங்க பாரு, கன்னம் எல்லாம் பெருசா ஆகிட்டு”, என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகம்  முழுவதும்  வலம் வந்தது.
“பாத்தீங்களா? இதுக்கு தான் சொன்னேன். சும்மாவே இருக்க மாட்டுக்கீங்க போங்க அத்தான்”
“எப்ப பாத்தாலும் போ போ ன்னு விரட்டுற போடி. என் பையன் பெருசா ஆகட்டும். உன்னை அடிக்க சொல்றேன்”, என்று சொல்லி கொண்டே தன்னுடைய மகன் தலையை தடவி கொடுத்தான்.
“ஆமா ஆமா இப்பவே ஆள் சேருங்க”, என்று சிரித்தாள் மது.
“மது எனக்கு ஒரு சந்தேகம்”, என்று சிரித்தான் தேவா.
“போச்சு, எதோ விவகாரமா கேக்க போறான்”, என்று நினைத்து என்ன என்பதாய் அவனை பார்த்தாள்.
“இல்ல மூடி வச்சு பையனுக்கு பால் கொடுக்குறியே? நான் ஏற்கனவே பாத்தது…”, என்று கேக்க ஆரம்பித்தவனின் உதடுகளை தன் கையால் மூடியவள் “கெட்ட பேச்சு பேசுனீங்க, வாயில சூடு போட்டுருவேன். பாக்க தான் டீசன்ட்டான ஆள்னு பேரு. ஆனா பேச்சை பாரு”, என்று முறைத்தாள்.
“எவனாவது பொண்டாட்டிகிட்ட டீசன்ட்டா நடந்துக்குவானா? போடி, உன்னை நைட் பாத்துக்குறேன்”
“நைட்டா? அத்தை என்  கூட  தான்  படுப்பாங்க”
“ஐயோ, அதெல்லாம்  முடியாது. எனக்கு  உன்னை  கட்டி  புடிச்சு  தூங்கலைன்னா  தூக்கம்  வராது  டி. நான்  போய்  அம்மா  கிட்ட  பெர்மிஷன்  கேக்குறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டான்.
தலையில்  அடித்து  கொண்டு  “இன்னைக்கு  என்  மானத்தை  வாங்க  போறான்”, என்று  சிரித்து  கொண்டாள்.
சிறிது நேரத்தில் அனைவரும் வந்து விட்டார்கள்.
வாங்க என்று சொன்ன தேவா, மார்க் கையை பற்றி கொண்டான். அவர்களுடன் மனோஜும் சேர்ந்து பேசி கொண்டிருந்தான். ஆனால்  பேருக்கு  கூட  வதனியை  பார்த்து  வா  என்று  தேவா  சொல்லவும்  இல்லை. அவள்  இருக்கும்  பக்கம்  அவன்  பார்க்கவும்  இல்லை.  அவளுக்கும் அவனிடம் பேச குற்றவுணர்வு தடுத்தது.
இயல்பாக சாவித்திரியும், மீராவும் வதனியின் குழந்தைகளை ஆளுக்கொன்றாக தூக்கி கொண்டார்கள்.
சாவித்ரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் வதனி.
அதன் பின் அனைவரும் மது அறைக்கு சென்றார்கள்.
கும்பலாக வந்ததை பார்த்து திகைத்த மது, வதனியை பார்த்து அழகாக சிரித்தாள்.
“வா வதனி, ஹே குட்டிஸ்”, என்று குழந்தைகளை தூக்கி கொஞ்சினாள்.
மதுவை பார்த்து கண்களில் நீர் கோர்த்தது வதனிக்கு. “ஏய் அழாத டி”, என்று சமாதான  படுத்தினாள் மது.
“என்னை மன்னிச்சிரு மது”
“பழசை எல்லாம் பேச வேண்டாம் வதனி. அம்மா, இந்த குட்டி பாப்பாக்களை பாரேன். அப்படியே நானும் வதனியும் இருக்குற மாதிரி இருக்குல்ல. எனக்கும் வதனி மாதிரியே ட்வின்ஸ் பொறந்திருக்கலாம்”, என்று சிரித்தாள் மது.
“என்னது உனக்கு ட்வின்சா? ஒரு பிள்ளை நீ சுமந்ததுக்கே, உன் புருசன் என் பொண்டாட்டிக்கு வலிக்கும்னு ஒரு வழி செஞ்சிட்டார். ரெண்டுன்னா, உனக்கு பதில் அவர் மயங்கிருப்பார்”, என்று சிரித்தாலும்  தன் மருமகனை பற்றி பெருமையாக சொன்னாள்  அன்னம்.
“சரியா சொன்ன அன்னம். அவனோட பெரிய ரோதனையா இருக்கு. இப்ப கூட  என் கிட்ட வந்து நைட் நான் மது கூட தான் தூங்குவேன்னு  சண்டை போட்டுட்டு இருக்கான்”, என்று சிரித்தாள் சாவித்திரி. அதில் முகம் சிவந்து போனாள் மது.
“அண்ணா  தான் மதுவை விட்டு நகர மாட்டாங்கன்னு தெரியும் தானே மா”, என்று சிரித்தாள் மீரா.
“அதை சொல்லு. அது என்னவோ சரி தான். ஆனா அவனாவது பரவால்ல. இந்த  மனோ பையன் இப்பவே ஆரம்பிச்சிட்டான். என்னமோ அவன் மாசமா இருக்குற மாதிரி  உனக்காக துடிக்கிறான்”, என்று மீராவையும் கிண்டல் செய்தாள் சாவித்திரி.
மதிய விருந்து முடிந்து வதனி,  கேசவன், மற்றும் அன்னம் அனைவரும் கிளம்பினார்கள்.
“அடிக்கடி இந்தியா வா வதனி”, என்று சந்தோசமாக அனுப்பி வைத்தாள் மது.
“உன் உடம்பு சரியான உடனே எல்லாரும் பாரின் வாங்க. நான் போய் கால் பண்றேன். அம்மா, அப்பா கூட இன்னும் பத்து நாள் இருந்துட்டு தான் போகணும். போகுறதுக்கு முந்துன நாள் உன்னை பாக்க  வரோம் மது. உடம்பை பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள் வதனி.
அனைவரும் போன பிறகு, “நீ இப்ப ரெஸ்ட் எடுக்கணும். ஒழுங்கா வா”, என்று மீராவை இழுத்து கொண்டு சென்றான் மனோஜ்.
தலையில் அடித்து கொண்ட சாவித்திரி, “உன்னை விட மோசமா இருக்கான் தேவா. நான் கொஞ்ச நேரம் பேரனை பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு தூக்கி கொண்டு போனாள்.
சிரித்து கொண்டே அறைக்குள் வந்த தேவா மதுவை இறுக அணைத்து கொண்டான்.
“எப்ப டா  கட்டி புடிக்க சான்ஸ் கிடைக்கும்னு அலைய வேண்டியது”, என்று சிரித்த மதுவும் அவனை அணைத்து கொண்டாள்.
“நீ கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்ட மது”, என்றான் தேவா.
“என்ன அத்தான் சொல்றீங்க?”
“கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை எடுத்துக்க கூடாதுன்னு நல்ல பையனா விலகினவனை எவ்வளவு சமத்தா கட்டி புடிச்சி இழுத்த? ஆனா கல்யாணம் அப்புறம் போங்க, போங்கன்னு சிணுங்குற. கெட்ட  பொண்ணா  மாறிட்ட டி”
“யாரு நான் கெட்ட பொண்ணா ? உங்க வாய் பேசினாலும், உங்க கை இப்ப  என்ன வேலை செஞ்சிட்டு இருக்கு தெரியுமா? அதனால தான் நான் திட்டுறேன்”
அவன் கைகள் அவள் சட்டையின் பட்டனை அவிழ்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தது.
“அழகா இருக்க, அதான்”, என்று அசடு வழிந்தான் தேவா. அவன் நெஞ்சில் சந்தோசமாக சாய்ந்து கொண்டாள் மது.
வாழ்க்கை என்பது 
அழகான கவிதைகளே 
உன்னைக் கண்ட பின்னர்!!!
போராட்டம் முடிந்தது. ஆனால் காதல் தொடரும்…..முற்றும்!!!

Advertisement