Advertisement

அவனுக்குமே சந்தோசமாக இருந்தது. ஆனால் அவள் குணம் அவனுக்கு தெரியும் ஆதலால் “இப்ப எதுக்கு வந்திருக்கா? குழந்தையை கலைக்கவா?”, என்று அந்த நர்ஸிடம் கேட்டான்.
இல்லை என்று அவர்கள் விடை சொன்னதும் அடுத்த நிமிடம் அவள் வீட்டை நோக்கி வண்டியை வேகமாக  செலுத்தினான்.
வீட்டுக்கு வந்ததும் அடி வயிற்றில் கை வைத்து “குட்டி பாப்பா நீ எப்ப வருவ? உனக்கு பிடிக்கிற மாதிரி இந்த அம்மா இருப்பேன், என்னடா? இனி நீ மட்டும் தான் எனக்கு எல்லாமே. யாருமே உன் அம்மாவுக்கு இல்லை டா. உன் அம்மா ரொம்ப தப்பு பண்ணிட்டேன் டா செல்ல குட்டி. இனி அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் தங்கம்”, என்று தனக்கு தானே வதனி பேசி கொண்டிருக்கும் போது வீட்டு அழைப்பு மணி சத்தம் கேட்டது.
சோர்வாக வந்து கதவை திறந்தவள் திகைத்தாள். அங்கே அவளை பார்த்தவாறே நின்றிருந்தான் மார்க்.
“மார்க்”, என்று கூவி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் வதனி. அவன் கைகளும் அவளை வளைத்து கொண்டது.
“என்னை மன்னிச்சிரு  மார்க். நான் தப்பு பண்ணிட்டேன். ரொம்ப கெட்டவளா,  சுயநலமானவளா  இருந்துட்டேன். எனக்குனு யாருமே இல்லை மார்க். என் தப்பை  உணர்ந்துட்டேன். எங்க வீட்டில எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்க. உன்னையும் நான் கஷ்ட  படுத்திட்டேன். இப்ப உன்னை விரும்புறேன் மார்க். ரொம்ப ரொம்ப உன்னை தேடுறேன். நீ என்னை மன்னிப்பியா ? நான் முன்னாடி உன் மேல கூட காதலா எல்லாம் பழகல. எனக்கு ஒரு துணையா உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன். ஆனா வேற யார் கூடவும் அப்படி பழகல மார்க். என்னை நம்புவ தான? நம்ம குழந்தை என்  வயித்துல வளருது மார்க். அது சத்தியமா உன்னோட குழந்தை தான் மார்க். நீ  நம்புவ தான?”, என்று கேட்டு கொண்டே கதறி அழுதாள் வதனி.
“நீ உடனே என் கூட கிளம்பு”, என்றான் மார்க்.
“என் மேல கோபம் உனக்கும் போகாதா மார்க்? எங்க கிளம்ப?”
“நமக்கு குழந்தை பிறக்குறதுக்கு  முன்னாடி  கல்யாணம் பண்ணணும்ல ? அதுக்கு அப்ளை பண்ணனும் வா”
“மார்க்”
“உன் கண்ணுல காதல் இல்லாம தான் உன்னை விட்டு போனேன். எப்ப அது கிடைச்சதோ இனி நீ தான் எனக்கு எல்லாம். உன்னை நான் நம்புவேன். நல்லா பாத்துக்குவேன். ரிஜிஸ்டர் பண்ணிட்டு வெளிய போய் சாப்பிட்டுட்டு  வருவோம். ரொம்ப  மெலிஞ்சு  போய்ட்ட.  இன்னைக்கே என்னோட வீட்டுக்கு போயிரலாம். என்னோட அம்மா உன்னை பாத்துப்பாங்க டா”, என்று சொல்லி அழைத்து சென்றான்.
சில நாள்கள் கழித்து இருவருக்கும்  திருமணம் நடந்தது. அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த வதனி “அம்மா, அப்பா கிட்ட பேசலாமா மார்க்? கல்யாணத்தை  பத்தி  சொல்லலாமா?”, என்று கேட்டாள்.
“நீ அவங்களுக்கு கொடுத்திருக்கிறது பெரிய வலி  டா. கொஞ்ச நாள் போகட்டும். காயம் கொஞ்சம் மறைஞ்ச பிறகு பேசலாம் சரியா?”, என்று சொல்லி விட்டான் மார்க்.
அதே நேரம்  கட்டிலில் சோர்வாக படுத்திருந்தாள் மது. அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த தேவா  வீடே அமைதியாக இருப்பதை பார்த்து திகைத்தான்.
கதவை பூட்டி விட்டு வந்த மனோஜும், தேவாவை பார்த்து புருவம் உயர்த்தினான்.
“என்ன டா அமைதியா இருக்கு?”, என்று கேட்டான் தேவா
“எனக்கும் தெரியலையே. அம்மாவை  கூட காணும். அம்மா அம்மா, சாவி எங்க இருக்க?”, என்று அழைத்தான் மனோஜ்.
“இப்ப எதுக்கு டா எட்டூருக்கு கேக்குற மாதிரி கத்திட்டு இருக்க?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்தாள் சாவித்ரி.
“இல்ல மா, நாங்க வரும் போது இங்க மூணு பேரும் உக்காந்து கதை அளந்து கிட்டு இருப்பீங்க? இன்னைக்கு மூணு பேரையும் காணுமே? அதான் கேட்டோம்”, என்றான் தேவா.
“மதுவுக்கு உடம்பு சரி இல்லை டா. சோர்வா இருக்குன்னு சொன்னா. அதனால ரூம்ல படுத்திருக்கா”, என்று சொன்ன அடுத்த நொடி அவர்கள் அறைக்கு பாய்ந்திருந்தான் தேவா.
“சொல்றதை முழுசா கேக்குறானா பாரு முழுமாடு?”, என்று முறைத்தாள் சாவித்ரி.
“மதுவுக்கு என்ன ஆச்சு மா?”, என்று கேட்டான் மனோஜ்
“நல்ல விஷயம் தான் மனோஜ். வீட்டுக்கு வாரிசு வர போகுது. இப்ப தான் மீரா அவளை செக் பண்ணா. அப்புறம் ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போயும் செக் பண்ணிட்டு வந்தாங்க”
“ஐ அப்படியாமா? சந்தோஷமான நியூஸ் தான். குட்டி வர போகுறான் வீட்டுக்கு”
“ஆமா மனோஜ். இந்தா சுவீட் செஞ்சேன். சாப்பிடு”
“மீரா எங்க மா?”
“மாடில காய வச்ச துணி எடுக்க போனா பா. சரி நீயும் நல்ல விஷயம் சொன்னா அம்மா இன்னும்  சந்தோச படுவேன். சீக்கிரம் பேர பிள்ளையை பெத்து கொடு டா. இந்தா மீராவுக்கு சுவீட் கொடுத்துட்டு சாப்பிடு. நீ வந்த பிறகு சாப்பிடுவேன்னு சொன்னா”, என்று சொல்லி அவன் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
சந்தோசமாக அறைக்கு வந்தான் மனோஜ். அப்போது தான் துணியை  காய போட்டு  விட்டு வந்த மீரா அவனை  பார்த்ததும்  முகம்  மலர்ந்து  “இப்ப தான் வந்தீங்களா ?”, என்று கேட்டாள்.
“ஹ்ம்ம், இப்ப தான் வந்தேன். ஆமா அது என்ன கழுத்துல?”
“என்னது  கழுத்துலயா? என்னது? ஐயோ  எதாவது  பூச்சா?”, என்று சொல்லி கொண்டே தடவி  பார்த்தாள் மீரா.
“இரு  இரு  நான்   எடுக்குறேன்”, என்று சொல்லி கொண்டே அருகில்  வந்தவன்  அவள்  கழுத்தில்  முகம்  புதைத்தான்.
அவள்  கையில் இருந்த  துணிகள்  அனைத்தும்  நழுவி  கீழே  விழுந்தது.
அவளை கைகளில் அள்ளி கொண்டவன்,  படுக்கையில் அவளை கிடத்தி  அவள்  மேல்  படர்ந்தான்.
“பிராடு”, என்று முணுமுணுத்தது  மீராவின்  உதடுகள்.
அவள்  இதழ்களை  சுவைத்தவன், “அப்படி  தான் டி  செய்வேன்”, என்று அடாவடி செய்தான்.
“அம்மா விஷயம்  சொன்னாங்களா?”
“ஹ்ம்ம்  ஆமா மீரா. ஆனா  நீ  எப்ப  என்னை அப்பாவா  ஆக்க  போற?”
“அது  என்  கையிலா  இருக்கு?”, என்று முகத்தை  மூடி  சிரித்தாள்  மீரா.
அடுத்த நொடி அவளை இறுக்கமாக  அனைத்திருந்தான்  மனோஜ். அங்கே  அழகான  கூடல்  ஆரம்பித்தது.
ஆனால் பதட்டமாக  அறைக்குள் சென்ற தேவாவோ “மது மா என்ன டா ஆச்சு? என்ன செய்யுது? டாக்டர் வந்தாரா?”, என்று கேள்வி கேட்டு அவளை குடைந்து எடுத்து விட்டான்.

அவனுடைய பதட்டத்தை ரசித்த மது, “ஹ்ம்ம் ஆமா உடம்பு சரி இல்லை. டாக்டரை பாத்தாச்சு”, என்று சிரித்தாள்.

“என்ன மா செய்யுது? டாக்டர் என்ன சொன்னார்? ஏன் நீ சோர்வா இருக்க? ஆனா சிரிக்கிற?”

“இதுக்கு காரணம் நீங்க தான். உங்களால தான் உடம்பு சரி இல்லை”

“நானா? நான் நேத்து கூட மெதுவா தான செஞ்சேன். வலிக்கும் படி….”, என்று சொன்னவன் வாயை அடைத்தவள் “அடித்தளத்தை ஸ்ட்ராங்கா போட்டா அப்படி ஆகாம என்ன செய்யுமாம்?”, என்று கேட்டு சிணுங்கினாள்.

ஒரு நொடி  திகைத்தவன்  “லட்டு செல்லம் நிஜமாவா?”, என்று கேட்டு கொண்டே அவள் சேலைய விலக்கி அவள் வயிற்றில் தன் கையை பதித்தான் தேவா. 

“ஹ்ம்ம், அத்தை சுவீட் தரலையா? உங்க கிட்ட சொல்லலையா?”

“அவங்க சொன்னதை நான் எங்க முழுசா  கேட்டேன்? உனக்கு   உடம்பு சரி இல்லைனு சொன்ன உடனே பாஞ்சி வந்துட்டேன். என்னை நல்லா  கிழி கிழின்னு கிழிச்சிட்டு இருப்பாங்க”

“அவங்க திட்டினா மட்டும் நீங்க பயந்துருவீங்க?”

“பயப்பட தான் டி செய்றேன். மாமியாரும், மருமகளும் சேந்து இந்த பச்சை பிள்ளையை ஒரு வழி செய்றீங்க. ரெண்டு பேரும் உன்னை கொஞ்சவே விடமாட்டிக்கீங்க. நீ விரட்டுற. அம்மா உன்னை நெருங்க விடமாட்டிக்காங்க”

“யாரு? நீங்க பச்சை பிள்ளை? இப்ப இந்த பச்சை பிள்ளை எதுக்கு இந்த வேலை செய்யுது?”

“என்ன வேலை?”, என்று கேட்டவனின் உதடுகள் அவள் வயிற்றில் பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. 

சில மாதங்கள் கழித்து….

குடல் வெளியே வரும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டிருந்தாள் மீரா. அவள் தலையை தாங்கி பிடித்து கொண்டிருந்தான் மனோஜ்.

இப்போது தான் அவளுக்கு மூன்றாம் மாதம் என்பதால் அவளை கண்ணில் வைத்து தாங்கி கொண்டிருந்தான் மனோஜ். 

அதே நேரம் தேவா அறையிலோ தன்னுடைய பெரிய வயிறை தூக்கி கொண்டு அலைந்து கொண்டிருந்தாள் மது.

அவளை சைட் அடித்து கொண்டே அமர்ந்திருந்தான் தேவா.

அதுக்கு மேல் முடியாமல் அவன் அருகே அமர்ந்தவள் “என்னால நடக்க முடியலை. இன்னைக்கு போதும்”, என்று சொல்லி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“சோம்பேறி”, என்று சிரித்தவன் அவளை அணைத்து கொண்டான். இப்போதும் அவன் கரங்கள் அவள் வயிற்றில் பதிந்திருந்தது. 

“யாரு, நானா சோம்பேறி? போங்க அத்தான்”, என்று சிணுங்கியவள் “அந்த போன் எடுத்து தாங்களேன்”, என்றாள்.

எடுத்து கொடுத்தான். அடுத்து தண்ணி, தலையணை என்று ஒவ்வொன்றாக கேட்டு அவனை படுத்தி எடுத்து கொண்டிருந்தாள்.

அவள் செய்கையை சிரிப்புடன் ரசித்து கொண்டிருந்தான் தேவா.

கடைசியில் அவனை அவளுடைய கால் இருக்கும் இடம் தள்ளி, அவன் மடியில் காலை வைத்து கொண்டாள்.

“வலிக்குதா?”, என்று கேட்டு அவளுக்கு கால் பிடித்து விட ஆரம்பித்தான் தேவா.

மகாராணி தோரணையில் அவனை காலை பிடிக்க விட்டுவிட்டு மொபைலை குடைந்து கொண்டிருந்தாள் மது.

அப்போது கண்ணில் பட்டது வதனியிடம் இருந்து வந்த மெசேஜ்.

கொஞ்சம் படபடப்பாக அதை ஓபன் செய்தாள். சிறு வயதில் இருந்து செய்த தவறு அனைத்துக்கும் மன்னிப்பை வேண்டி இருந்தாள். 

அது மட்டும் இல்லாமல், தன்னுடைய குழந்தைகளின்  புகைப்படத்தையும், குடும்பத்துடன்  இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி  இருந்தாள் வதனி. 

“இது என்னோட  குழந்தைங்க  மது. நம்மளை  மாதிரி அவங்களும்  ட்வின்ஸ். அவங்களை  பாக்கும்  போது நம்ம  நினைவு  வருது. அழகா  ஒற்றுமையா  வாழ  இருந்த  வாழ்க்கையை  கெடுத்துட்டேன்ல  மது? நீ எப்படி இருக்க? உன் வீட்ல  எல்லாரும் எப்படி இருக்காங்க? அம்மா, அப்பா  என் மேல இன்னும்  கோபமா தான் இருக்காங்களா? உன்னை  அவங்க கிட்ட  இருந்து பிரிச்சதுக்கு தான், இப்ப நான் அவங்க கிட்ட  இருந்து நிரந்தரமா  பிரிஞ்சு  இருக்கேன்  போல? குழந்தைகளுக்கு  உன்னோட நினைவா  மதுமிதா  சுஸ்மிதானு  பேர்   வச்சிருக்கேன்  மது. அவங்களும்  உன்னை மாதிரியே  ஒழுக்கமா  நல்லவங்களா  வளரனும். முடிஞ்சா மன்னிக்க  முயற்சி  செய் மது. லவ்  யு  சோ  மச்”, என்று அனுப்பி இருந்தாள்.

அதை பார்த்ததும்  மது முகத்தில்  புன்னகை  வந்தது. கூடவே  கண்களில்  கண்ணீரும்.

“என்ன டா?”, என்று கேட்டான்  தேவா. அவனை அருகில்  இழுத்து, அவன்  நெஞ்சில்  சாய்ந்தவள்  அதை காண்பித்தாள்.
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement