Advertisement

அத்தியாயம் 11
வலியால் துடித்துக் 
கொண்டிருக்கும் இதயதிற்க்கு 
மருந்திடு இல்லை என்றால் 
சாந்தி கொடு அன்பே!!!
“நீ மட்டும் ஹனிமூன் போற? நாங்களும் உங்க கூட வறோம்”, என்று சிரித்தான் தேவா.௧
“நாங்களுமா? யாரெல்லாம்? எங்க வறீங்க?”
“நானும், மதும் செகண்ட் ஹனிமூன் கொண்டாட உங்க கூட வறோம்”, என்று சிரித்தான் தேவா. தலையில் அடித்து கொண்டாள் மது.
“அட பாவி”, என்று வாயை பிளந்தான் மனோஜ்.
அனைவரின் பார்வையும் தன்மேல் படிவதை உணர்ந்து வெட்கத்துடன் சிரித்த மது “நான் வேண்டாம்ணு சொல்றேன். உங்க பிள்ளை கேக்க மாட்டிக்கார் அத்தை”, என்று சிணுங்கினாள்.
அவள் வெட்கத்தை அனைவரும் ரசித்தர்கள்.
“அதெல்லாம் செல்லாது. எனக்கு தான் கல்யாணம் ஆகியிருக்கு. எனக்கு தான் ஹனிமூன். நீங்க ரெண்டு பேரும் வர கூடாது. ஒழுங்கா இருந்து ஆஃபீஸ் பாத்துக்கோ”, என்றான் மனோஜ்.
“டேய் படுபாவி, நண்பனா டா நீ? துரோகி. இப்படி எல்லாம் தனியா போறேன்னு பேராசை பட கூடாது. நாங்களும் வருவோம். ஆனா உங்களை கண்டுக்க மாட்டோம், கவலை படாத”, என்றான் தேவா.
“அப்ப ஆஃபீஸ்?”
“இவன் ஒருத்தன். நானே அவளை கஷ்ட பட்டு சம்மதிக்க வச்சிருக்கேன். நாம திரும்பி வர வரைக்கும் எல்லாம் பாத்துக்க ஒரு அடிமை சிக்கிருச்சு”
“யாரு மச்சான் அது?”
“வேற யாரு? என் மாமனார், உன் அப்பா தான்”
“கேசவ் அப்பாவா?”
“ஆமா அவர் பாத்துக்குறேனு  சொல்லிட்டார். இந்த ஒரு வாரம் அவரை எதுக்கு ஆபிஸ்க்கு கூட்டிட்டு போனேன்னு நினைச்ச? வேலை சொல்லி கொடுக்க தான்.  அதனால நாம நாலு  பேரும்  போக போறோம்”, என்று சிரித்தான்.
பிளைட்டில்  அவன் அருகே அமர்ந்த மது தேவாவை  முறைத்தாள்.
அவள் தோளில் கை போட்டு இறுக்கி கொண்ட தேவா  “என்ன செல்லம் முறைக்கிறீங்க?”, என்று கேட்டான்.
“இப்படி அழும்பு பண்றீங்க? எல்லாரும் நம்மளை என்ன நினைப்பாங்க?”
“யார் என்ன நினைச்சா நமக்கென்ன? எனக்கு இந்த டிரிப்ல முக்கியமான வேலை இருக்கு”
“என்ன வேலை?”
“கல்யாணம் ஆகி ஒரு மாசம் மேல ஆகிட்டு “
“ஆமா அதுக்கென்ன?”
“அதனால என் பிள்ளைக்கான அடித்தளத்தை  ஸ்ட்ராங்கா போட போறேன் அதான்”
“சி போங்க அத்தான். நீங்க ரொம்ப மோசம்”
“உனக்கு மட்டும் நான் கெட்டவனாவே  தான் இருப்பேன் டி, என் பொண்டாட்டி”, என்று  அவளை  கொஞ்சினான்  தேவா.
சொன்னது போல் இரண்டு ஜோடிகளும்  அங்கே ஆனந்தமாக நேரத்தை செலவிட்டார்கள். ஆனால் வெளியே சுற்றாமல் அறைக்குள் அடைந்தே.
அவரவர் அறையில் இருந்து வெளியே வராமல் மனைவியே கதி என்று கிடந்தார்கள். இரண்டு மூன்று நாள் கழித்து தான் வெளியே சுற்றி பார்க்க போனார்கள். அதுவும் மீராவும், மதுவும் கெஞ்சியதால்.
மனோஜ் காதல் மன்னனாக திகழ்ந்ததை பார்த்து  மீராவே  விழி விரித்தாள். “இவன் இந்த அளவுக்கு என்னை தேடுவானா?”, என்று நினைத்து அவனுக்குள்ளே  கரைந்து போனாள். அவனுடைய தொடுகையில் சிலிர்த்து அடங்கியது அவள் தேகம். இது வரை அறியாத புதிய காதல் உலகை அவளுக்கு அறிமுக படுத்தினான்.
தேவாவோ, மதுவை விட்டு விலகுவேனா என்று அடம் பிடித்தான். அவனுடை சேட்டைகளை ஆனந்தமாகவே ரசித்தாள் மது.
நால்வரும் திரும்பி வந்த பின்னர் வாழ்க்கை சாதாரணமாக அதே நேரம் அழகாக சென்றது அனைவருக்கும்.
அதே நேரம் தன்னுடைய அறையில் சோகமாக அமர்ந்திருந்தாள் மதுவதனி.
ஊரில் இருந்து கோபத்துடன் கிளம்பி பாரின் வந்த பிறகு அனைவரின் மேல் கோபமாக தான் இருந்தாள்.
அவள் ஆசை பட்டது கிடைக்காததுடன், அம்மா அப்பாவின் பாராமுகமும் சேர்ந்து  அவளுக்கு எரிச்சலை தந்தது.
தன்னுடைய வேலைகளில் தன்னை மூழ்கடித்து கொண்டாள். ஆனாலும் அது அந்த வருடம் இறுதி, ஆதலால் ஆபிஸ்கே லீவ் விட்டு விட்டார்கள்.
வேலையும் இல்லாமல் பொழுது போகாமல் முதல் முறை தனிமையை உணர்ந்தாள். நண்பர்களுடன் ஊரை சுற்றலாம்  என்று பார்த்தால் அவர்களும் குடும்பத்துடன் சென்று விட்டது தெரிந்தது.
தன்னுடைய குடும்பத்தை நினைத்து பார்த்தாள். தனிமை சூழ்ந்திருந்த வேளையில் அவள் மனது அனைத்தையும் நினைத்து பார்த்தது.
அதுவும் அவள் கண் முன்னே மதுவும், தேவாவும்  கொஞ்சி பேசியதும், அவன் கண்களில் அவள் மேல் வழிந்த காதலும் இப்போது நினைவில் வந்து இம்சித்தது.
மெல்ல மெல்ல யோசித்தத்தில் முன்னர் சரியாக தெரிந்த அனைத்தும் இப்போது  தவறாக  பட்டது.
முதலில் பணக்காரன் என்று நினைத்து தேவாவை  அடைய நினைத்தவள் இன்று அவன் பொழியும் காதலை பெரியதாக நினைத்து பார்த்தாள்.
வாழ்க்கையில் பெரியதாக எதையோ இழந்தது  போல  இருந்தது.
ஆன்லைன் சென்று பேஸ்புக் பார்த்தாள். அதில் மது ஐ டி கண்ணில் பட்டதும் அதை ஓபன்  செய்தாள்.
‘மதுமிதா தேவேந்திரன்’ என்று பெயரை  மாற்றி  இருந்தாள் மது.
முன்னர்  அவளுடைய புகை படத்தை மட்டும் வைத்திருந்த மது இப்போது தேவாவும், அவளும் இருக்கும் படத்தை வைத்திருந்தாள். மது போட்டிருந்த அனைத்து புகை படங்களையும் பார்வை இட்டாள் வதனி.
மது, தேவா, மனோஜ், மீரா ஊர்  சுற்றிய போட்டோக்கள் தான் அதிகம் இருந்தது. மற்றும்  நால்வருடன் சேர்ந்து அன்னம், கேசவன், சாவித்திரி மூவரும் இருக்கும் போட்டோவையும் போட்டிருந்தாள்.
அம்மா, அப்பா முகத்தை பார்த்ததும் அவர்கள் பாசத்தை நினைத்தாள் மதுவதனி.
அவள் கண்களில் கண்ணீர் வந்தது. பாரினில் பயன் படுத்தும் போனை எடுத்து வீட்டு நம்பருக்கு அழைத்தாள்.
ரிங் போய் கொண்டே இருந்தது. ஒருவரும் எடுக்க காணும். “மது வீட்டுக்கு போயிருப்பார்கள்”, என்று நினைத்து கொண்டு அப்பா நம்பருக்கு அழைத்தாள்.
அவர் அவளுடைய நம்பரையே பிளாக் செய்திருந்தார். அதை அறிந்ததும் மேலும் அழுகை வந்தது. கண்ணை துடைத்து கொண்டு சாப்பிட அமர்ந்தாள். சாப்பாடும் உள்ளே போவேனா என்று அடம் பிடித்தது.
முதன் முதலில் தனிமை வலியை அனுபவித்தாள். உடனே அவள் கண்ணில் மார்க் முகம் வந்தது. உடனே அவனை அழைத்து விட்டாள்.
ஆனால் அவள் நம்பரை பார்த்து அவன் கட் பண்ணி விட்டான். அவனை உதாசீன படுத்தியது நினைவில் வந்தது. மறுபடி மறுபடி அவனை அழைத்து கொண்டே இருந்தாள்.
எரிச்சலில் அவள் அழைப்பை ஏற்றவன் “தேவை இல்லாம என்னை தொந்தரவு பண்ணாத. வேண்டாம்ணு சொல்லிட்டு போனவ தான நீ?”, என்று கத்தி விட்டு வைத்து விட்டான்.
மார்க் வெகு அழகானவன். அவளை பார்த்ததும் அவன் தான் வந்து காதலை சொன்னான். ஆனால் அவனை பதிலுக்கு காதலிக்கிறேன் என்று சொல்லாமல் அவனுடைய காதலை மட்டும் ஏற்று கொண்டாள் வதனி.
ஒரு டைம் பாஸ் காக தான் அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள். ஆனால் இப்போது தனிமையில் அவனுடைய அன்பை அதிகமாக தேடினாள். அவன் பொழிந்த காதலை நினைத்து பார்த்தாள்.
ஏதோ தனக்கென்று யாருமே இல்லை என்ற எண்ணம் உருவானது வதனிக்கு.
அதன் பின் வந்த நாள்கள் அவளுக்கு சோகமாக கழிந்தது. நிம்மதியாக அவளால் சாப்பிட கூட முடிய வில்லை. தான் செய்ய இருந்த கேவலமான வேலையும், அதனால் இழந்த தன்னுடைய அம்மா அப்பாவின் பாசம், என்ன திட்டினாலும் வதனி, வதனி என்று பாசம் காட்டும் மது என்று அனைத்தையும் இழந்தே விட்டாள்.
“கடைசியில் வேலை எனக்கு இருக்குன்னு சொல்லி மார்கையும் இழந்துட்டேனே”, என்று நினைத்து  துடித்தாள்.
இந்த கவலை எல்லாம் சேர்ந்து, ஒழுங்காக சாப்பிடாததால் அவளுடைய உடம்பும் மெலிந்தது.
தன்னுடைய அழகில் எப்போதுமே வதனிக்கு கர்வம் உண்டு. அவளை மாதிரி அழகுடன் இருக்கும் மதுவை பார்த்து அதனால் தான் வெறுப்பு வரும் அவளுக்கு.
ஆனால் இன்று அவளுடைய அந்த அழகே காணாமல் போனது போல் ஒல்லியாக, கன்னத்து  எலும்புகள் தெரியும் அளவுக்கு மாறி போனாள். அழகை பற்றி அவளுக்கு துளி கூட இப்போது எண்ணம் இல்லை. தோள் சாய யாருமில்லாத அனாதை மாதிரி உணர்ந்தாள்.
அப்போது அறைக்குள்ளே இருந்தால் பைத்தியம் முற்றி விடும் என்று நினைத்து வெளியே கிளம்பி  போனாள்.
சிறிது தூரம் சென்றதுமே மயங்கி கீழே  விழுந்தாள். அங்கிருந்தவர்கள் தான் ஹாஸ்ப்பிட்டலில்  சேர்த்தார்கள்.
ஆனால் கண் விழித்ததும் அவள் கேட்ட செய்தி அவளுக்கு சந்தோசத்தை  அள்ளி தந்தது.
அவள் வயிற்றில் மார்க்கின் குழந்தை வளர்ந்தது.
“இந்த விசயம் தெரிஞ்சா ஊருல எல்லாரும் காரி துப்புவாங்க”, என்று நினைத்த வதனி “எனக்கே எனக்குன்னு  கடவுள் என்னை மன்னிச்சு  கொடுத்திருக்கிற பொக்கிஷம்”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்தாள்.
ஒரு நண்பரை பார்க்க அங்கே வந்திருந்த மார்க், வதனியை பார்த்து திகைத்தான்.
அவளோ அவனையே பார்த்த படி அசையாமல் நின்றாள்.
அவளுடைய தோற்றத்தையும், அவள் கண்களில் வழிந்த காதலிலும் ஒரு நிமிடம் தடுமாறிய மார்க் அடுத்த நிமிடம் அவளை கடந்து சென்று விட்டான்.
ஒரு விரக்தி புன்னகையை சிந்தி விட்டு வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தாள் வதனி.
உள்ளே போன மார்கோ, வதனியை பற்றி தான் கேட்டு  அறிந்து கொண்டான்.

Advertisement