Advertisement

அத்தியாயம் 10 
காதல் பேசிய கண்களையும் 
கவிதை சொன்ன 
உன் உதடுகளையும் 
பார்க்க துடிக்கிறேன் அன்பே!!!
“முன்னே பின்னே திருட்டு தனம் செஞ்சா தானே பிளான் பண்ண தோணும்? அதான் சொதப்பிட்டு. என்னையே மறந்து என் கை எழுத்தை போட்டுட்டேன் போல? ஆனா அதுக்கு முன்னாடியே அம்மா, அப்பா, அத்தை எல்லாரும் மதுனு சொல்லி மாட்டி விட்டுட்டாங்க”
“அப்ப தான் எனக்கும் பொறி தட்டுச்சு மது. வதனி வதனினு சொல்லிட்டு இருந்த அம்மா எப்படி மாத்தி பேசுவாங்கனு யோசிச்சேன். அப்புறம் நீ தான் மதுனு தெரிஞ்சது. உன் வாசனையும் எனக்கு உணர்த்துச்சு. ஆனா காதல்னு நினைக்கலை. ஆனா எனக்கு நீ பொண்ணா கிடைச்சது ரொம்ப சந்தோசம் தான். ஆனா அக்கா வேண்டாம்னு சொல்லிட்டு, தங்கச்சி எதுக்கு ஒத்துக்கணும்? அதுவும் குருடனைனு யோசிச்சு தான் குழப்பம் வந்து, உன்னை கேட்டது. நீ என்னோட தொடுகைல நெகிழ்ந்தப்பவே நீ பணத்துக்காக சம்மதிக்கலைனு புரிஞ்சது. ஆனா எல்லாம் முடிஞ்ச அப்புறம் எத்தனை பொண்ணுங்க வந்தாலும் என்னை உங்களால உணர முடியுமான்னு கேட்ட தெரியுமா? அப்ப நீ என் மனசுக்குள்ள முழுசா வந்துட்ட டி”
“ஐ லவ் யு அத்தான்”
“நானும் டி ரொம்ப ரொம்ப”, என்று சொல்லி கொண்டே அவள் இறுக்கி கொண்டான்.
“அதும் லெட்டர் படிச்சதும் டோட்டலா பிளாட் ஆகிட்டேன். மனோஜ் தான் படிச்சு காமிச்சான். அவனே நெகிழ்ந்து போய் மது தான் என் தங்கச்சின்னு சொன்னான். அப்புறம் நடந்தது தான் தெரியுமே. ஆனா நேத்து என்ன ஆச்சு மது? தெளிவா சொல்லு. அவ ஏன் இப்படி செஞ்சா?”
“தெரியலை அத்தான். சேலை நல்லா இருக்கு. எனக்கு தான்னு சொன்னா. சரினு கொடுத்துட்டு நைட்டி மாத்தினேன். ஜூஸ் குடுத்தா. குடிச்சேன். மயக்கமா வந்துட்டு. முழிச்சு பாத்தப்ப இருட்டா இருந்தது. நான் தூங்குறேன்னு நினைச்சு விட்டுட்டு போய்ட்டிங்களோன்னு நினைச்சேன். ஆனா அம்மா வதனினு என்னை கூப்பிட்டாங்களா? நொந்து போய்ட்டேன் அத்தான்”
“விடு டா. இனி இப்படி நடக்காது. எத்தனை பேர் வந்தாலும் நம்மளை பிரிக்க முடியாது. நம்ம ரெண்டு பேருக்கும் தான் கடவுள் முடிச்சு போட்டிருக்கார். ஆனா எனக்கு அவ வந்த உடனே செம கோபம் டி. அவளை அனுப்பிட்டு நீ எப்படி தூங்கலாம்னு எரிச்சல் வந்தது. முன் சீட்ல ஜூஸ் கொட்டிட்டு அவளை பின்னாடி உக்கார சொன்னேன். உன்னை தவற அவ என் பக்கத்துல உக்காராலாமா? ஏன் அவ இப்படி பண்றான்னு தெரிஞ்சிக்க தான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டே வந்தேன். ஆனா நீ வந்து என் அத்தான் எனக்கு வேணும்னு சண்டை போடுவன்னு நினைச்சேன் டி, பொண்டாட்டி. ஆனா நீ ஊ னு அழுதுட்டு இருக்க, அதனால  ஒன்னு கொடுத்தேன் கன்னத்துல. வலிச்சிருக்கும்ல? சாரி டி”
“ஆனா நீங்க என்னை நம்பாம அடிக்கிறீங்கன்னு நினைச்சேன் தெரியுமா? அதனால தான் அழுகை  வந்துச்சு தெரியுமா அத்தான்?”
“உன்னை நம்பலைன்னா  எங்கயாவது என்னை நினைச்சு வாழலாம்னு முடிவுல இருந்தீங்களோ மேடம்?”
“ம்ம்”
“ம்மா, கொன்னுருவேன் டி. நீ என்னோட பொண்டாட்டி. என்னோட மது. இது உன் வீடு. இங்க இருந்து நானே நினைச்சா கூட வெளிய போக வைக்க முடியாது. என்னோட உயிரில் கலந்துருக்க கண்ணம்மா நீ. என்னோட காதலை உன்னால மட்டும் தான் தாங்க முடியும். என்னோட தேவையும் நீ தான் தீர்க்க முடியும். என்னோட பிள்ளை உன்னோட வயித்துல தான் பிறக்கும். இத்தனை விசயத்தை விட்டுட்டு தனியா போக விட்டுருவேனா?”, என்று கேட்டு கொண்டே அவள் இதழில் முத்தமிட்டான்.
“ச்சி பல்லு விளக்கலை”, என்று சிணுங்கினாலும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் மது.
“ஏன் மது எனக்கு ஒரு சந்தேகம்”, என்று விஷமமாய் சிரித்தான் தேவா. 
“ஏதோ ஏடாகூடமா கேக்க போறான்”, என்று நினைத்த மது “என்ன அத்தான்?”, என்று கேட்டாள்.
“ஏண்டி ஒரு பையன் முன்னாடி இப்படி ஒரு டிரெஸ் கூட இல்லாம இருக்கியே? உனக்கு வெக்கமா இல்ல?’, என்று சிரித்தான் தேவா.
“அட பாவி பிராடு. டிரெஸ்ஸை போட விடாம, போட்டதையும் கழட்டி விட்டுட்டு, இப்ப இந்த பேச்சா? சரி, சார் மட்டும் எதுக்கு இப்படி  பப்பி சேமா இருக்கீங்களாம்?”
“ஹ்ம்ம் இதுக்கு தான்” என்ற படி அவள் மேலே கவிழ்ந்த தேவா “வீணா எதுக்கு அதை போடுவானேன்? அப்புறம் கழட்டுவானேன். அதான் இப்படி”, என்று சிரித்து கொண்டே தன் வேலையை தொடர்ந்தான்.
“அத்தான் விடிஞ்சிருச்சு”, என்று முனங்களாக வந்தது மதுவின் குரல்.
“அதுக்கு?”
“எழுந்து போகணும்?”
“மணி ஆறு தான் ஆகுது. மெதுவா எழுந்து போகலாம்”, என்ற படியே வேலையை தொடர்ந்தான் தேவா. 
காலை ஒன்பது மணிக்கு குளித்து முடித்து கீழே வந்தாள் மது. அவன் தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
மதுவை பார்த்ததும் அவள் கையை பற்றி கொண்டு “என்னை மன்னிச்சிரு மது மா. நேத்து நானும் உன்னை அழ வச்சிட்டேன்”, என்றாள் சாவித்ரி.
“அந்த சூழ்நிலைல நீங்க என்ன செய்வீங்க அத்தை? விடுங்க”, என்று சாவித்ரி கையை பற்றி கொண்டாள் மது.
அப்போது மீராவும் அங்கு வந்து விட்டாள்.
“நான் பயந்தே போய்ட்டேன் மா. என்ன ஆகும்னு கவலையா போச்சு. நல்லதா போச்சு, அண்ணா கண்டு பிடிச்சிட்டாங்க”, என்று சிரித்தாள் மீரா.
“ஆமா மீரா. இந்த தேவாக்கு மட்டும் மதுவை தெரிஞ்சிருக்கு பாரேன்”, என்று ஆச்சர்யமாக சொன்ன சாவித்ரி “சரி நீங்க ரெண்டு பேரும் இந்த காபியை குடிங்க. நான் பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போய்ட்டு வரேன். அப்புறம் இட்லி ஊத்திட்டேன். சட்னி வச்சிட்டேன். ரெண்டு தடியன்களும் வந்ததும் எல்லாரும் சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“அண்ணனுக்கு மட்டும் தானே மதுவை தெரிஞ்சிருக்கும்? இதுல அம்மாவுக்கு எதுக்கு ஆச்சர்யம் வரணும்?”, என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள் மீரா.
“ஓட்டாத மீரா”, என்று சிணுங்கினாள் மது.
“இப்படி சிணுங்கினா அண்ணா உன்னை விட்டு விலகவே மாட்டாங்க மது. இது வரை உன்னை தெரிஞ்சுக்கிட்டது பத்தாதுன்னு இன்ச் இன்ச்சா தெரிஞ்சிக்க தான் நினைப்பாங்க”
“ஏய், நாளைக்கு உனக்கும் இதே நிலைமை தான். கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு தெரியுமா? அப்ப நானும் கிண்டல் செய்வேன் மீரா”
“ப்ச், அது ஒன்னு தான் குறைச்சல்”, என்று சொன்ன மீரா குரல் சோகத்தில் ஒலித்தது.
அவள் குரலில் திகைத்தவள் “என்ன ஆச்சு மீரா? உனக்கும் மனோ அண்ணனுக்கும் எதாவது சண்டையா?”, என்று கேட்டாள்.
“சண்டை எல்லாம் இல்லை. ஆனா நான் தெரியா தனமா செஞ்ச தப்பு அவங்க மனசை கஷ்ட படுத்திட்டு. ஆஸ்ரமத்தில் இருந்தப்ப ஒரு நாள் குளிச்சிட்டு வந்து பிரேயர் பண்ணிட்டு இருந்தேன் மது. அப்ப இடுப்புல ஏதோ ஊறுற மாதிரி இருந்தது. என்னன்னு பாத்தேன். எங்க சர்ச் பாதர், இடுப்புல கை வச்சு ஒரு மாதிரி இளிச்ச மாதிரி இருக்கான். அப்புறம் அவனை அடிச்சிட்டு தப்பிச்சு, மேடம் கிட்ட கம்பளைண்ட் பண்ணி அந்த பிரச்சனை சரியாகிட்டு. ஆனா அந்த நிகழ்வு மறக்கவே இல்லை. அதனால மனோஜ் அப்படி கிட்ட வந்தாங்களா? டக்குனு யோசிக்காம அடிச்சிட்டேன் மது? அதுல இருந்து என்கிட்ட பேசவே மாட்டிக்காங்க. விலகி போறாங்க. நான் அதை பத்தி பேச போனாலும், இனி உன் கிட்டயே வரமாட்டேன். செஞ்சது தப்பு தான்னு சொல்றாங்க மது. நானும் அப்படி செஞ்சிருக்க கூடாது. ஆனா அவங்களும் புரிஞ்சிக்க மாட்டிக்காங்க”, என்று அழுதாள்.
“மீரா, இதுக்கா இப்படி அழுவ? இது சாதாரண பிரச்சனை. விடு சரியாகிரும். மனோஜ் அண்ணா புரிஞ்சிப்பாங்க. கல்யாண பொண்ணு அழலாமா? சரி வா. அவங்க ரெண்டு பேரும் எப்ப சாப்பிட வர? எனக்கு பசிக்குது சாப்பிடலாம்”, என்று அவளை சமாளித்து அழ விடாமல் செய்த மது “மனோஜிடம் பேசணும்”, என்று நினைத்து கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்து பேசி கொண்டிருக்கும் போது தான் தேவா கீழே இறங்கி வந்தான்.
முகம் முழுவதும் புன்னகையுடன் இறங்கி வந்தவன், மீராவை பார்த்து சிரித்து விட்டு “மது பசிக்கிது சாப்பாடு தாயேன்”, என்று சொல்லி அவள் கையை பற்றி இழுத்து டைனிங் டேபிளுக்கு சென்றான்.
அங்கே நின்று கொண்டு சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தவன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
ஒரு நொடி அவன் முத்தத்தில் மெய் மறந்தவள் அடுத்த நொடி அவனை தள்ளி விட்டு இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“என்ன டி முறைக்கிற?”
“முறைக்காம உங்களை கொஞ்சுவாங்களா?”
“கொஞ்சினா நல்லா தான் இருக்கும். ஆனா எங்க?”
“அடி வாங்க போறீங்க? நம்ம ரூம் குள்ள என்னமோ விலகி இருக்குற மாதிரி, இங்க வந்து எல்லாரும் அடிக்கடி  வந்து போகும் இடத்துல வச்சு முத்தம் கொடுக்கீங்க? உங்களை என்ன செய்யலாம்?”
“என்ன வேணா செய்யலாம் தான். ஆனா நீ முறைக்கிற? இந்த கிரீன் சேலைல கும்முன்னு இருக்க மது”
“பேச்சை மாத்தாதீங்க. இப்ப எதுக்கு இங்க வச்சு முத்தம் கொடுத்தீங்க?”
“அப்ப ரூம்க்கு போய் கொடுக்கவா?”
“உங்களை… வேலைக்கு போகணும்னு எண்ணமே இல்லையா?”
“இன்னைக்கு ஐயாவுக்கு லீவு”
“யார் கொடுத்தது?”
“என் கம்பெனி டி. யாரு கொடுக்கணும்? நம்மளா எடுத்துக்க வேண்டியது தான்.”
“அதுக்கு, லீவு எடுக்கணுமா?”
“சரி சரி போறேன் போறேன். சாப்பாட்டை போடு. அப்புறம் எதுக்கு தெரியுமா முத்தம் கொடுத்தேன்?”
அவனுக்கு தட்டில் இட்லியை வைத்து கொண்டே “எதுக்காம்?”, என்று கேட்டாள் மது.
“சாப்பிடுறதுக்கு முன்னாடி சுவீட் சாப்பிடணுமாம். அதான்”
“நீங்க அடங்கவே மாட்டிங்க. ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பி போங்க”
“சரி டி செல்லம். நீ சாப்பிட்டியா? மீரா சாப்பிட்டாளா? அம்மாவை வேற காணும்”
“நானும் மீராவும் சாப்பிட்டோம். அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க. மனோ அண்ணாவை தான் இன்னும் காணும்”
“சரி நான் சாப்பிட்டுட்டு அவனை பாக்குறேன்”, என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தான்.
அங்கே மீராவும் மாடியை தான் பார்த்து கொண்டிருந்தாள். மனோஜ் எப்போது இறங்கி வருவான், அவன் முகத்தை பார்க்கலாம் என்று ஆவலாக அமர்ந்திருந்தாள்.
சாப்பிட்டு மாடிக்கு போன தேவா, மனோஜ் அறை கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான்.
அங்கே கட்டிலில் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
“இவ்வளவு நேரம் தூங்க மாட்டானே”, என்று நினைத்து கொண்டு அருகில் சென்றான்.
அவன் முகம் வாடி போய் இருந்தது. அவன் நெற்றியில் கை வைத்து பார்த்த தேவாவுக்கு புரிந்தது அவனுக்கு காய்ச்சல் என்று.
தேவாவின் தொடுகையில் கண் விழித்த மனோஜ், “தேவா”, என்று சொல்லி சிரித்தான்.
“எப்ப இருந்து டா பீவர்?”
“நைட் லேசா இருந்தது மச்சான். இப்ப தான் அதிகமா ஆகிட்டு”
“சரி டாக்டரை வர சொல்றேன். நீ ரெஸ்ட் எடு. நான் ஆபிஸ் கிளம்புறேன்”
“ஹ்ம்ம் சரி டா. பாத்து போ. வேகமா போகாத”
“ஹ்ம்ம் சரி டா. ஒரு தடவை வேகமா போய் செஞ்ச தப்பை இன்னொரு தடவை செய்ய மாட்டேன். அம்மா கஞ்சி கொடுப்பாங்க. சாப்பிடணும் சரியா?”, என்று சொல்லி விட்டு கீழே வந்தான் தேவா.
“என்ன அத்தான் அண்ணாவை இன்னும் காணும்?”, என்று கேட்டாள் மது.
“அவனுக்கு காய்ச்சல் அடிக்குது மது. பக்கத்துல இருக்குற கிளிக் டாக்டருக்கு போன் செஞ்சிட்டேன். இப்ப வந்திருவார். அம்மா இன்னும் வரலையா? சரி நீ கஞ்சி வச்சு கொடுத்துரு. நான் கிளம்புறேன். மதியம் சாப்பாடுக்கு வர மாட்டேன் மது. அவனை பாத்துக்கோங்க. வரேன் மீரா. அம்மா கிட்ட சொல்லிரு”, என்று கிளம்பி போனான்.
அவன் போன கொஞ்ச நேரத்திலே டாக்டர் வந்து விட்டதால், அவரை அழைத்து கொண்டு அவனுடைய அறையை காண்பித்தாள் மது.
அடுத்து அவர் சூடான தண்ணீர் கேட்டவுடன் எடுத்து சென்று கொடுத்த மது, சோர்ந்திருந்த மனோஜை பார்த்து புன்னகைத்தாள்.
“உனக்கு எக்ஸ்டரா வேலை வச்சிட்டேனா மது?”, என்று சிரித்தான் மனோஜ்.
“என் அண்ணனுக்கு செய்றது எல்லாம் வேலையா?”, என்று அவனை பார்த்து சிரித்த மது, “எதனால டாக்டர் திடிர்னு காச்சல்? ஹாஸ்பிட்டல் வரணுமா?”, என்று கேட்டாள்.
“சாதாரண பீவர் தான். ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிரும். இன்ஜெக்ஸன் போட்டுருக்கேன். இந்த டேப்லெட் கொடுங்க”

Advertisement