இரவும் பகலும் வேகமாக நகர ஜானவி வயிற்றில் இருக்கும் கருவும் அன்னையின் வயிற்றில் பாதுகாப்பாக வளர, நவிலனுக்கு இப்போது எல்லாம் ஆவிகளை பார்த்து பேச ஆரம்பித்து இருக்க, ஆனால் சரவணன் வீட்டை சுற்றி இருக்கும் பாதுகாப்பு சக்ரத்தை இன்னும் எடுக்காமல் இருந்ததினால் எந்த ஆவியினாலும் பேயினாலும் வீட்டிற்கு உள்ளே வராமல் வெளியே போக்கு காட்ட, சரவணன் மறுபடியும் கழுத்தில் தாயத்து அனிந்ததில் இருந்து லோலிட்டா குரலை கேட்காமல் நிம்மதியாக இருக்கிறான் சரவணன், நடுவில் ஜானவியும் சரவணனும் செல்ல சண்டைகளும் கரண்டி சண்டைகளும் போட, ஜானவியின் எட்டாம் மாதம் தொடங்கி அப்போது தான் இருக்க!
இதன் இடையில் இளங்கோ தன் தாய் தந்தையை சரி கட்டி தனது முரட்டு சிங்கிள் வாழ்கைக்கு குட் பாய் சொல்லி சீத்தாவை திருமணம் செய்து திருமணம் வாழ்க்கையில் மிங்கிள் ஆகி இப்போது ரிஷப்ஷனில் சிரித்தபடி கணவன் மனைவி இருவரும் அனைவரையும் வரவேற்க!
சரவணன் அருகில் உம்மென்று உட்கார்ந்து இருந்த ஜானவியோ சரவணனிடம் புலம்ப ஆராம்பித்து இருந்தாள், அங்கே பாரு அதுங்க இரண்டும் ஃபோட்டோக்கு விதவிதமா ரகரகமா போஸ் குடுக்குறது என்ன, ஆனால் நம்ம கல்யாணத்துல என்னை பாதி நேரம் அழுக வைச்சேனா, மீதி நேரம் கோபபடுத்தியே வெச்சு இருந்த,கேட்டா நம்மோடதும் காதல் திருமணம்னு சொல்லுவே!
கண்டிப்பாக சொல்லுவேன் நம்மோடது காதல் திருமணம் என்று எவ்வளவோ கஷ்டப்பட்டு உனக்கு பேசுன என் பிரென்ட் பக்கிட்ட நான் லவ் பண்ற பொண்ணுன்னு சொல்லியும், பக்கி உன்னை பெண் பார்க்க வந்தா எனக்கு கோபம் வருமா வராதா, அப்புறம் அவன்டபேசி உன் தங்கச்சி மாயவை பிடிக்கும் சொல்ல சொல்லி நிப்பாட்டி ஹாப்பா என்று மூச்சு விட்டு நிமிர்ந்தா,தேவி கோயிலில் தரிசனம் தராங்க எனக்கு என்றவன் மனைவியை பார்க்க!
நான் பயந்துட்டேன் உங்களை கோயிலில் பார்த்து என்று ஜானவி சொல்ல!
சொல்லுச்சு உன் கண்ணு என்றவன்,நீ அப்பவே என்ட விழுந்துட்ட தானே என்று சிரித்தபடி சரவணன் கேட்க!
மக்கும்……. இரண்டு பக்கமாக தலையாட்டியவள்,ஓய் ஜானம்மா என்ன எதுவும் சொல்லாமல் போறே என்று கேட்ட அந்த ஒரு வார்த்தை இங்கே உயிர் வர போச்சு என்றவள் அவனுடைய நெற்றியில் முட்ட!
நவிலன் நோ முட்டு அம்மா முட்டி கோம்பு வயும் என்று விளையடியே நவிலன் சொல்ல!
அச்சோ அப்பாக்கு கோம்பு முளைச்சிடிச்சாடி தங்கம் என்று சரவணன் நவிலனிடம் கேட்க!
நவிலன் சிரித்தபடி ஆமாம் சொல்ல!
அச்சோ என்னோட அழகு தலைல கோம்பு முளைச்சா யாரு என்ன பார்ப்பா!
அவன் தலையை தன்னை நோக்கி திருப்பிய ஜானவி ஏனுங்க இந்த தலைய நான் மட்டும் பார்த்தா போதும்குங்க!
அச்சோ என் பொண்டாட்டிக்கு என் மேலே எவ்ளோ பாசம் என்றவன் ஆனாலும் கோம்பு இந்த முகத்திற்கு நல்லா இருக்காது அதானாலே டிஷ்யும் என்று ஜானவி தலையில் சரவணா முட்ட!
அதே நேரம் இவர்களையே இரு கண்கள் வெறுப்பாகவும் அன்பாகவும் நோக்க!
இதனை அறியாத சரவணன் ஜானவி தம்பதியினர் பேசி கொண்டும் உறவினர்களோடு களிப்பாக இருக்க!
சற்று நேரம் கழித்து அந்த திருமணம் மண்டபத்தில் பாதுகாவலர்களுக்கும், அரசு காவலர்களின் கண்ணை மறைத்த படி ஜானவி நவிலன் கடத்த பட்டனர்!
ஜானவி நவிலன் கேரளாவில் ஓரு மலைஅடிவார கிராமத்தில் உள்ள வீட்டில் கைகால்களில் உள்ள கட்டுகள் எல்லாம் நீக்க பட்டு மயக்கம் தெளிந்து தன் முன்னே நின்றவனை கண்டு சற்று மகிழ்ந்தவள், ஆதிசேஷன் சார் நல்ல நேரத்தில் வந்திங்க,யாரோ எங்களை கடத்தி வந்தாங்க நீங்க வந்து காப்பாத்திட்டிங்க சரவணனுக்கு கொஞ்சம் கால் போடுங்க இல்லை என்றால் அவன் பயந்துடுவான், நாங்கள் இங்கே இருக்கோம் என்று தகவல் கொடுங்க ஆதிசேஷன் என்று ஜானவி பேச!
சரவணன் சரவணன் சரவணன் அவனை தவிர நான் உன் கண் முன்னாடி நிற்பது தெரியலையா ஜானவி, எதுக்கு நீ நான் உன்னை தேடி வரது குள்ள
சரவணனை திருமணம் பண்ண? என்று ஆதிசேஷன் கேள்வி எழுப்ப?
நீங்கள் என்ன சொல்லுறீங்க ஆதிசேஷன்?
நான் தான் உன்னை கடத்துனது ஜானவி,அது எப்படி என்னோட பொண்டாட்டி பிள்ளை அடுத்தவனை உறவு சொல்லி கூப்பிடுவது எனக்கு எவ்வளவு வலி கொடுக்கும் தெரியுமா அந்த வலியை நீ தினமும் எனக்கு தந்துட்டு இருக்குற தெரியுமா!
அவன் தன் மனைவி என்று தன்னை கூறுவதை பொறுக்காத ஜானவி ஏய்…… என்று தான் கர்ப்பமாக இருப்பதையும் மறந்து கோபத்தில் கத்தியவள் வயிற்றில் அசையும் குழந்தையின் அசைவை வைத்து பைத்தியமாட நீ , அடுத்தவன் குடும்பத்தை தன்னோடது சொல்லுற முட்டாளா நீ?!
ஆமாம் முட்டாள் தான் போன ஜென்மம் உறவை நினைச்சு இந்த ஜென்மத்திலும் நம்ம பந்தம் தொடரனும் நினைச்சது என்னோட முட்டாள்தனம் தானே, அதனால் தானே என்னோட கங்கையை வெற ஒருத்தனுக்கு மனைவியாகி இருப்பதையும் என்னோட மகன்,மகள் வேற ஒருத்தனை அப்பா என்று கூப்பிட்டு கேட்பது எவ்வளவு கொடுமை தெரியுமா என்று ஜானவிக்கு புரியாத படி ஆதிசேஷன் பேச!
இவன் பேசுவதை புரியாமல் இவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த ஜானவி லோலிடாவை அழைக்க அய்யகோ, இவள் அழைப்பு இந்த வீட்டை சுற்றி இருந்த மந்திர கண்டு தாண்டி லோலிட்டாவை சென்றடையவில்லை!
ஆதிசேஷன் உனக்கும் எனக்கும் திருமணம் நாளைக்கே நீ திருமதி ஜானவி சரவணனில் இருந்து ஜானவி ஆதிசேஷன் அகுவ , கேட்கவே எவ்வளவு நல்லா இருக்குல பட்டும்மா!
நான் என்றும் என் உயிர் உள்ள வரை திருமதி ஜானவிசரவணன் தான் என்று ஜானவி கோபமாக சொல்ல!
சரவணன் இருக்கும் வரை நீ ஜானவிசரவணன் தான் , ஆனால் சரவணன் இறந்து விட்டான் என்றால் நீ ஜானவிஆதிசேஷன் கண்மணி என்று சிரித்தபடி ஆதிசேஷன் சொல்ல!
“ஜானவி” சீ…….. இந்த கண்மனி , பட்டும்மா என்று என்னை கூப்பிட்டதே கேட்கவே நரசாமா இருக்கு! அப்புறம் என்ன சொன்ன என்னோட சரவணன் டச் பண்ண முடிஞ்சா பன்னிக்கோ டா பண்ரோட்டி தலையா!
ஹா……..ஹா……… நல்ல பெயர் எனக்கு வைச்சுருக்க பாரு, இன்னும் கொஞ்ச நேரத்தில் சரவணன் எப்படி இறக்க போகிறான் லைவ் டேலிகேஸ்ட் பண்ணுறேன் அப்புறம் சொல்லு நான் டச் பண்ணுறேன்னா இல்லை தூக்கிட்டேன்னான்னு !
இவர்கள் இங்கே இப்படி பேசிக்கொண்டு இருக்க!
அதே நேரம் சரவணன்,“ஜானவி நவிலன் காணாமல் போனதை அறிந்ததில் இருந்து எல்லாம் பக்கமும் தெடி அலைந்தவன் எந்த பேய் மற்றும் ஆன்மாக்களின் குரல் கேட்க கூடாது என்று பயந்து தாயத்து போட்டானோ அந்த தாயத்தை கழட்டி வைத்து பிறகு சரவணன் லோலிடாவை அழைத்தவன் ஜானவி எங்கே இருக்கிறாள் என்று கேட்க!
லோலிட்டா என்னால ஜானவிய நெருங்க முடியலை சரவணன் ,அவ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியலை,அவ குரல் கொடுத்தால் அந்த திசையை நோக்கி நான் எங்கிருந்தாலும் போவேன் ஆனால் எனக்கு அவளோட குரல் கூட கேட்க மாட்டிங்குது!
உனக்கு தெரியும் கண்டுபிடிச்சிடலாம் என்று கேட்டால் நீ தெரியாது என்று சொல்லுறே என்று வருத்தப்பட்டபடி சரவணன் கூற!
அன்று இரவு பல பூஜைகள் அந்த சிறிய வீட்டிற்குள் செய்ய பட ஜானவிக்கும் நவிலனிற்கும் உடம்பு தீயாய் எரிய கூடவே சரவணனுடன் சுற்றி திரிந்த லோலிடாவிற்கு உடம்பு தீயாய் எரிய சரவணன் ஜானு ஏதோ பெரிய பிரச்சினைல மாட்டி இருக்குறா யாரோ பூஜை பண்ணுறாங்க போல என்று லோலிட்டா சொல்ல!
அதே நேரம் சரவணன் போனிற்கு அழைப்பு வர, அழைப்பை எடுத்தவன் அந்த பக்கம் ஆதிசேஷன் ஜானவி நவிலனை நான் கண்டு பிடிச்சிட்டேன் நீ கேரளாவில் அந்த மலை கிராமத்திற்கு வரும் படி ஆதிசேஷன் அழைப்பு விடுக்க!
சரவணன் எதுவும் யோசிக்காமல் தனது பாதுகாவலர்களுடன் ஏர்போர்ட் வந்தவன் கேரளாவிற்கு செல்லும் அந்த விமானத்தில் அமர்ந்தவன் மனைவியையும் குழந்தையையும் நினைத்து கவலை கொண்டு இருக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் சரவணன் கேரளா வந்தடைய, அதற்குள் லோலிட்டாவினால் பல பேய் மற்றும் ஆன்மாக்களின் உதவியோடு ஜானவி எங்கு இருக்கிறாள் என்பதை கேட்டறிந்தவளிற்கு பெரும் பயம் உண்டாக, இங்கு வந்து கொண்டு இருந்த சரவணனை திரும்பி போகச் சொல்ல!
அதே நேரம் சரவணனை கண்ட ஆதிசேஷன் சரவணன் அருகில் வந்தவன் எதற்கு இத்தனை பேரையும் அழைச்சிட்டு வந்து இருக்கான் இவன்,இதனால் என்னுடைய காரியம் இடேறாது போல இருக்கே? என்று நினைத்தவன் சரவணனை அவனுடைய பாதுகாப்பு படையினரையும் அழைத்து ஆதிசேஷன் செல்ல!
அது இரவு வேலை ஆகியதால் அந்த கிராம பகுதியே இப்போது காடு போல் திகிலாக காட்சி அளிக்க, இதனிடையே சரவணனுடன் வந்த பாதுகாப்பு படையினர் ஓருபுகைமுட்டதுடன் மாயமாகிவிட , அவர்கள் மாயமாகிய மறுவினாடி லோலிட்டாவின் பெய்கூட்டம் இப்போது பாடிகார்டஸாக பின் தொடர!
அந்த பௌர்ணமி இரவில் ஆதிசேஷனை பின் தொடர்ந்த சரவணனுக்கோ சேம திகிலாக இருக்க தன்னுடன் வந்த லோலிட்டாவோ பெய்களுக்கே தெரியாமல் அதனுடன் புலம்பிய படியும் சத்தமிட்ட படியும் லைவ் அப்டேட்ஸ் வாயில் சொல்லி கொண்டே வர!
ஏற்கனவே லோலிட்டாவின் குரலிலே பயப்படும் சரவணன் பின்னாடி வரும் ஆவி கூட்டத்தை நினைத்து ஒரு பக்கம் பயம் வர, மறுபக்கம் இந்த ஆதிசேஷனை நினைத்து கட்டுக் கடங்காத கோபம் வர ,அதே நேரம் இந்த சதிகாரன் ஏதோ சதி வேலை செய்து இருக்கிறான் என்று லோலிட்டா சொல்லியது போல!
அங்கே சிகாமணி கருப்பு உடை அணிந்து நெற்றியில் சந்தனமும் கருப்பு மையிட்டு நான்கு ஐந்து பேருடன் யாருமே வணங்க பயப்படும் அந்த சின்னமஸ்தா தேவியின் ஃபோட்டோவை வைத்து பூஜை செய்ய!
தன்னைத் தியாகம் செய்தல்” என்ற கோட்பாட்டின் உருவகமே அரிதலைச்சி. சுயகட்டுப்பாடு, கலவி வேட்கை, கலவியாற்றல் முதலான பல கோட்பாடுகளின் உருவகமாகவும் இவள் கொள்ளப்படுகிறாள். தேவியின், வரமருளும் – வாழ்வைச் செறுக்கும் இரு குணங்களும் அரிதலைச்சிக்குப் பொருந்துகின்றன. குரூரமான தோற்றமும், ஆபத்தான வழிபாட்டு முறைகளும், உலகியலாளர்களுக்கும் சாதாரண தாந்திரீகர்களுக்கும், சின்னமஸ்தையின் வழிபாட்டைத் தடை செய்கின்றன.
அப்படி பட்ட வழிபாட்டை சீகாமணி இந்த இரவு வேளையில் செய்வது தன் மகனுக்காக அல்ல அவன் வாழ்வுக்காகவும் அல்ல, தனக்காக ஆம் சரவணன் ஜானவி நவிலன் ஜாதகம் அரியது தெய்வ அருளோடு பிறக்கும் ஜாதகருக்கு மட்டுமே ஆன்மாவோடு பேசும் வாய்ப்பு அமையும் அது இவர்கள் மூவருக்கும் அமைய பலநாள் தேடி கிடைத்தது, இன்று தன் முன்னே இருக்கும் மகனிற்கு மறுபிறவி பற்றி நன்றாக மனதில் பதிய வைத்து கடத்தி இதோ சரவணனை பலியிட்டு ஜானவியை ஆதிசேஷனிற்கு திருமணம் செய்து வைத்து ஜானவியையும் குழந்தை நவிலனையும் பலி கொடுத்தால் பல சக்திகளுக்கே அதிபதி ஆகிவிடலாம் ஆன்மா உலகிற்கே கடவுளாகி ஆன்மாகளை ஆட்டி படைத்து தனக்கு கிடைக்க போகும் சக்தியை இருமடங்கு ஆக்கலாம், ஆனால் இது யாவும் ஜானவியின் இரண்டாவது குழந்தை பிறப்பதிற்குள் செய்ய வேண்டும்!