Advertisement

அத்தியாயம் ஏழு.
மதுரையின் பிரபலமான தனியார் மருத்துவமனை.
அவசரசிகிச்சை பிரிவு அறையின் முன் மிகுந்த கவலையுடன் அழுது சோர்ந்து முத்தரசியின் தோளில் சாய்ந்திருக்கின்றாள் எழிலரசி.
காலையில் தாலி கட்டி மனைவியானவளை பார்ப்பதா அக்காவை பார்ப்பதா என்று தடுமாற்றத்துடன் மணியின் அருகில் நிற்கின்றான் அன்புச்செழியன்.
தற்போது மாலை ஐந்து மணி இன்று காலை பத்துமணியளவில் தான் மாரடைப்பினால் சாந்தியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதல் அட்டாக் என்பதால் ஒரளவு பயமில்லை என்று அதற்க்கான சத்திரசிகிச்சை செய்தனர்.
இன்னும் சாந்தி கண்முழிக்கவில்லை தாயின் நிலையை எண்ணி கவலைகொண்டு அழுததாலும் தந்தையுடன் போராடியதாலும் நேற்று மதியத்தில் இருந்து உணவு உண்ணாமல் இருந்ததால் என்று பல காரணத்தினால்  வந்த  சோர்வில் மயங்கிவிட்டாள் எழில் அவளுக்கும் சிகிச்சை அளித்து ட்ரிப்ஸ் ஏற்றித்தான் ஓரளவு திடமாக இருப்பதனால் மீண்டும்  தற்போது அழதபடியே தான் இருக்கின்றாள்.
அவளை பார்த்துத்தான் செழியனும் கவலை கொண்டு இனி தான் எவ்வாறு அவளை கையாண்டு அவளை சரி பண்ணி தன் பக்கம் அவளை திருப்புவது என்று யோசித்தபடி அக்கா கண் விழித்தால் என்ன செய்வது என்ற தீர்க்கமான முடிவெடுத்தபின் சற்று அசுவாசமானான் செழியன்.   
அப்போதுதான் மாறனின் திடீர் திருமணம் சாந்திக்கு இன்று நடந்தவை என்று விசயங்கள் கேள்விப்பட்டு நெடுமாறனின் ஒரே தங்கை அழகம்மை அவரது ஏழு வயது மகன் தீபன் மற்றும் அன்புக்கொடியுடன் அங்கே வந்தார்.
” தம்பி மாறா என்னாடா இதெல்லாம் இந்த அத்தையோட துணை இல்லாமலே கல்யாணமெல்லாம் பண்ணிகிட்டியாம் ரெண்டு புது ஜோடிக்கும் சாந்தி மதினி குணமாகி வீட்டுக்கு வரட்டும் அப்புறம் இருக்கு சங்கதி இம்புட்டு காலம் இருந்துட்டு மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் ரெண்டு நாள் வித்தியாசத்துல அதிரடியாக கல்யாணம் பண்ணிருக்கீங்க இது சரியில்ல ஏதோ ஒண்ணு இருக்கு எல்லாம் சரியாகி வீட்டுக்கு வாங்க நாலு பேரும் அப்புறம் இருக்கு உங்களுக்கெல்லாம் அத்தை கொடுமைனா என்னான்னு காட்டுறேன் சரி நான் இப்ப மதினிய பார்த்துட்டு வாறேன்.” என்று அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையை அவரது கலகலப்பான பேச்சினால் சகஜமாக்கிவிட்டு சென்றார் அழகம்மை.
அன்பு இரவு உணவை சமைத்து எடுத்துக்கொண்டு வந்தாள் ” ஏய் உன்னை யாருடி இங்க வரச்சொன்னது பொண்ணுங்களை தனியாகவா விட்டுடு வந்த வரவர உனக்கு  ஏத்தம் கூடிப்போய்டுச்சி ஏன் நீங்க சமைத்தது சாப்புட்டா பெரியம்மா சீக்கிரம் குணமாகிடுவாங்கனு யாரும் சொன்னாங்களோ நல்லா இந்த மூணு நாள்ளயே என் பிள்ளைகளை உனக்கு பழக்கி வச்சிருக்க மாயக்காரி ரெண்டு வருசமாக நான் இல்லாம ஓழுங்கா தூங்காத பிள்ளைகள் நீ வந்ததும் என்ன மாயம் பண்ணுனியோ பகல்லயும் சரி இரவு தூங்கும் போதும் சரி நீ தான் வேணும்னு அடம்பண்ணுறாங்க என் செல்லங்கள்.”
” உன்னை ஓரமா இருக்கச்சொன்னா நீ என் வீட்ல என் பிள்ளைகள்கிட்ட இருந்து என்னை ஓரம்கட்டி வச்சிடுவ போலயே இது சரியில்ல சாந்தி பெரியம்மா குணமாகி வீட்டுக்கு வரட்டும் அதுக்கு அப்புறம் உன்னோட சங்கதி என்னன்னு பார்க்கிறேன் ஒழுங்கா வந்த வேலையை பார்த்துட்டு கெளம்புற வழியப்பாருடி அம்புட்டுதான்.” என்று அன்பை காச்சி எடுத்தான் மாறன்.
” கொஞ்சம் தள்ளிப்போ மாமா உன்னோட சங்கதி தெரியாதாக்கும் அன்னைக்கு இரவு நீ கோபமா அறைக்குள்ள வந்ததை பார்த்து  நானும் கொஞ்சம் பயந்தது என்னவோ உண்மைதான் ஆனா நீ அதுக்கெல்லாம் சரியான ஆள் இல்ல சும்மா வெட்டி நியாயம் பேசாம அங்கிட்டு தள்ளி நில்லுங்க கையில இம்புட்டு கனமான பை வச்சிருக்கேன் அத கொஞ்சம் வாங்கி வைப்போம்னு இல்லாம வாய்சவடால் பேசிக்கிட்டு நிக்கிறத பாரு உங்க பொண்ணுங்களை ராசாத்தியம்மா தான் பார்த்துகுது சரியா பொண்ணுங்க மேல வச்சிருக்க அக்கறை பாசத்துல கொஞ்சமாவது கட்டின பொண்டாட்டி மேலயும் காட்டுறது மாமோய் ம்கூம் அதுக்கெல்லாம் நமக்கேது கொடுப்பினை.” என்று தோளில் முகவாயை இடித்து ராகமாக சொல்லிவிட்டு சாந்தியை பார்க்க சென்றுவிட்டாள் அன்பு.
சாந்தியை பார்த்துவிட்டு வந்த அழகம்மை மாறன் அன்பு இருவரையும்  குறு குறுவென பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்து விட்டு முத்தரசியின் அருகில் அமர்ந்து அவரது தோளில் சாய்ந்திருந்த  எழிலை நிமிர்த்தி         ” போ எழிலு அன்பு காப்பி கொண்டுவந்திருக்கு போய் ஒருவாய் குடிச்சிட்டு குளிர் தண்ணில முகத்த கழுவிட்டு வா மதினிக்குதான் பெரிசா ஒண்ணுமில்லையே ஏதோ இந்தமட்டுக்கு முடிஞ்சதே யாரு பண்ணின புன்னியமோ அதயே நினைத்து கவலைப்பட்ட எதுவும் ஆகாது இம்புட்டு நடந்தும் உங்கப்பா இன்னும் மதினியை வந்து பார்க்கலயே அந்த மகராசி என்ன வரம் வாங்கி வந்து பொறந்து உங்கப்பாக்கு வாக்கப்பட்டுச்சோ இந்த கஷ்டப்படுது. இனியாவது நீ உங்கம்மாக்கு நான் இருக்கேன்னு தைரியம் சொல்லி தேற்றி நல்லபடியா அன்பா கவனிச்சிப்பார்த்துக்கோ  முன்ன மாதிரியே நல்லா குணமாகிடுவாங்க இப்பதான் உன்னை அவங்க தம்பிக்கு கட்டிக்கொடுக்கனும்ற பாதி ஆசை நிறைவேறிட்டே அந்த சந்தோசமே அவங்களை குணப்படுத்திடும் மிச்ச பாதி உங்க அப்பா எப்போ அவங்களோ அன்பா பேசுறாரோ அப்போதான் முழுசா மனதளவிலயும் உடளவிலயும் அந்த சீதேவி குணமடையும் அது காலத்துட கைய்ல தான் இருக்குது இதுக்கே வராதா சுந்தரண்ணே இனி எங்க மாறப்போகுது.”
என்று எழிலையும் பேசிப்பேசியே எழுந்து அன்புடன் முகம் கழுவ அனுப்பிவைத்தார்.
“ஏன் பெரியம்மா அக்கா இங்க படுக்கையா கிடக்குறாளே அதை வந்து பார்க்காம இந்த வசந்தி மதினி என்ன பண்ணுது ஆளயே காணோம்.”
” அட உனக்கு விசயமே தெரியாதா அழகு நேத்து நம்ம எழிலோட பரிசத்துக்கு உங்க அம்மா அப்பா எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க அப்போ நெடுமாறனும் வீட்ல இல்லயா இது தான் சந்தர்ப்பம்னு அன்பை திட்டுறதுக்கு மணியோட வீட்டுக்கு போனாளாம் அங்க நம்ம அன்பு சமைச்சிக்கிட்டு இருக்கும் போது அறையில ஏதோ சத்தம் கேக்குதேனு திரும்பி பார்க்க வசந்தி அன்பை திட்ட வாய்திறக்கும் போது காலுக்கு பக்கத்திலயே பெரிய பாம்பு ஒண்ணு  நிக்கிதாம் அப்போ அன்புதான் அத்தை நகராதிங்க சத்தம் போடாதிங்கனு மெதுவாக சொல்லிட்டு பாம்புக்கு பின்பக்கம் வரும்போது வசந்தி அன்பை திட்டி அவளை தொடர்ந்து பிடிக்கப்போகும் போது சட்டுனு பாம்பு கால்ல ஒரு போடு போட்டுடுச்சாம் அது சேலைக்கு மேல பட்டதால இது தெரியாம திரும்பி பார்க்கும்போது அன்பு அந்த பெரியபாம்பை கைல பிடிச்சிகிட்டு அதோட பேசிக்கிட்டு இருந்தாளாம் அத பார்த்து அரண்டு போய் ஓட்டமும் நடையுமா வீட்டுக்கு போகவும் கலைப்பா இருக்கவும் படுத்துட்டாளாம் நெடுமாறன் வந்து பார்க்கும் போது கண் சொருகி காய்ச்சல் நெருப்பா கொதிக்குதாம் உடனே அந்த நேரத்துல பக்கத்துல இருந்த நாட்டு வைத்தியர்கிட்ட கொண்டுபோய் காட்டவும் அவரும் தண்ணிப்பாம்புதான் சும்மா கடிச்சிருக்கு பெரிதாக விசமேறல பாம்ப பார்த்த பயத்துலதான் குளிர்ஜுரம் வந்துருக்கு பயப்புட ஒண்ணுமில்லனு மருந்து குடுத்து வீட்டுக்கு அனுப்பிருக்காராம் அதனாலதான் அந்த பிடாரி இங்க வரவில்லை வராம இருக்குறதே நல்லதுதான்.” 
” ஓஹோ அதுதான் இந்த கலவரத்துல மேலும் குட்டைய குழப்ப வசந்தி மதினி வரலயோ அதுவும் நல்லதுதான் பெரியம்மா.” என்றார் அழகு.
அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த அன்பு  ” பாட்டி நீங்களும் எழிலும் இவளோடயே வீட்டுக்கு வண்டில போயிடுங்க இருட்டி நேரமாகுது பாருங்க நான் மாமாக்கு தொணையா இங்க இருக்குறேன் சரியா??. அத்தை நீங்க இப்போ எங்க போகப்போறிங்க?.”
” மருமவனே உன் மாமா ஒண்ணும் பயந்தவனில்ல போறது எல்லோரும் பொண்ணுங்க நீ அவங்களோட தொணைக்கு போ அதுதான் சரி. நான் எங்க  போக என் வீட்டுக்குதான் போவேன் என் அம்மா வீட்டுல இரண்டு கல்யாணம் அடுத்தடுத்து நடந்திருக்கு யாராவது என்னை மதித்து சொன்னாங்களா?? என்ன இல்லயே அப்போ எப்புடி நான் அங்க போறது.”என்று நொடிந்தபடி முகத்தை திருப்பினார் அழகு.
” மணி யாராவாது பொண்ணு இருக்கனும் சாந்தியை அவசரத்துக்கு பார்த்துக்க அதனால நானும் செழியனும் இருக்கிறோம் நீ அன்பையும் எழிலையும் நேரமே கூப்பிட்டு கெளம்பு” என்றார் முத்துப்பாட்டி.
” இல்ல அம்மாவ விட்டு நான் எங்கையும் போகமாட்டேன் நானும் அம்மா குணமானதும்  கூப்பிட்டு தான் வீட்டுக்கு வருவேன் இனி நான் தான் என் அம்மாவ பார்த்துக்கப்போறேன் அப்பத்தா. எனக்கு அம்மாச்சியும் அம்மாவுமே சமையல் சொல்லித்தருவாங்க அதன்படி சமைத்து சாப்பாடு குடுத்து அவங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துபேன் மாறன்ணே நான் வீட்டுக்கு வரல நீ அன்பையும் அப்பத்தாவையும் கூப்பிட்டு கெளம்பு.”
” சரி எழில் அப்போ நாங்க போய்ட்டுவாறோம் செழியன் உன்னோட இருப்பான் நீ கவனமாக இருந்துக்கோ காலையில வாறோம். அப்பு செழியா எழில கொஞ்சம் பார்த்துக்கோ புள்ளையை எங்கையும் ஒத்தையில போக விட்டுடாத சரியா சூதானமா இருங்க சாந்தி  கண்முழிச்சதும் ஒரு தகவல் சொல்லுங்க செழியா அப்போ நாங்க வாறோம்.  நீயும் கவனமாக மாப்பிள்ளையோட போ ம்மா அவங்க கதையை விட்டுடு நீ சாந்தி வந்ததும் வீட்டுப்பக்கம் வா அழகு சரியா??. நாங்க போயிட்டு வாறோம் வாங்க அன்பு மணி நேரமாகுது.” என்று பெரியவராக அனைவருக்கும் பத்திரம் சொல்லி சென்றார் முத்தரசி.
பெண்களை முன்னாள் அனுப்பிவிட்டு மாமனின் அருகில் வந்த மணி ” மாமோய் எழில் சொல்லுறத பார்த்தா இனி சமையல் கத்துக்கிட்டுதான் ஆக்கி போடும் போல அதுவும் அம்மாச்சிக்கும் பெரியம்மாவுக்கும் மட்டும்தானாம் நீ நல்லா காயப்போற பட்டினிதான் போல மாமா என் தங்கச்சிகிட்ட கொஞ்சம் அனுசரித்து போ அப்போதுதான் போற போக்குல கஞ்சியாவது கிடைக்கும் போல  உன் நிலைமை மோசம் தான் மாமா.” என்று செழியனை சீண்டி விட்டான் மாறன்.
” ஏன்டா மாப்பிள்ளை அங்க மட்டும் என்ன வாழுதாம் நீயும் காஞ்சி போய்த்தானே கெடக்குற அதுக்குள்ள என்னை சொல்ல வந்துட்டாரு போ போய் பொழப்ப பாரு வீட்டுக்கு போய் அன்பு என்ன போடு போடப்போகுதோ அதை எப்புடி சமாளிக்கலாம்னு நல்லா யோசி. இந்த சூப்பியை எப்புடியாவது என் பக்கம் திருப்பிடுவேனாக்கும் அவ கையால வக்கனையா நானும் கறி கஞ்சி சாப்புடுவேன் பாரு மாப்புள.” என்று மார்தட்டினான் செழியன்.
” ஏன்ய்யா மணி மாமனும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்து ஆறுதலா குசுகுசுனு பேசிக்கோங்க இப்ப நேரமாகுதில்ல அன்பு வேற பிள்ளைகள்  தன்னை தேடுவாங்கனு பதட்டப்படுது வா நேரமா போவோம்.” என்று மாறனை இழுக்காத குறையாக அழைத்துச்சென்றார் முத்துப்பாட்டி.
அவர்கள் சென்று சற்று நேரத்தில் சாந்தி கண்முழித்ததும் எழில் அவரின் அருகில் சென்று டாக்டர் சொன்னதற்க்காக கவலையை முகத்தில் காட்டாமல் அழுது புலம்பாமல் சிரித்தபடி உணவு கொடுத்து தாயுடன் கதைபேசி அவரையும் சிரிக்கவைத்த படி இருந்தாள் எழில்.
தன்னைப்போன்று அன்னிய ஆணை கட்டி மகள் வாழ்வை பாலாக்காமல் தன் தாய் தம்பியிடமே மகளை மகிழ்ச்சியாக பல போராட்டத்தின் பின் தான் தன் தம்பியின் கையில் ஒப்படைத்து விட்டுதான் ஓய்ந்து விழுந்தார் சாந்தி.
தற்போது மகள் புதுத்தாலி மின்ன முகத்தில் புதுவித பூரிப்போடு சிரித்தபடி பேசுவதை பார்த்து சோர்விலும் மணம் நிறைந்தபடியே கண்ணயர்ந்தார்.
தான் பேசுவதை தாய் கேட்கின்றார் என நினைத்து பேசியபடியே இருந்த எழில் தாயின் அசைவு இல்லாமல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்து தாய் கண்மூடி இருக்கவும் படித்திருந்தும் சட்டென்று அதை யூகிக்காமல் பயத்துடன் டாக்டரை அழைத்தாள்.
அவளது சத்ததில் அக்காவை ஒரே நாளில் பாதியாக ஆய்ந்து ஓய்ந்து போய் படுத்திருக்கும் இந்த நிலையில் பார்க்கமுடியாமல் வெளியே இருந்த செழியன் என்வோ என்று ஓடி வந்தான்.
“என்ன சூப்பிமா ஏன் கத்தி வைத்தியரை கூப்பிட்ட அக்காவுக்கு என்ன ?? ஏன் அமைதியா இருக்க வாயத்தொறந்து பேசு மா.” என்று சாந்தியின் அருகில் சென்று என்ன வென்று பார்த்தபடியே எழிலிடம் கேட்டான் செழியன்.
” அம்மா அசைவே இல்லாம இருக்காங்க.”
” அக்கா தூங்குதுபோல பயப்படாத நான் போய் தாதியர்  யாரைவது கூப்பிட்டு வாறேன் நீ பக்கத்துலயே இரு.” என்ற படி வெளியே சென்றான் செழியன்.
செழியன் அழைத்து வந்தது டாக்டரை சாந்தியை பரிசோதனை செய்து “அவர் ஆழ்ந்து உறங்குகின்றார் இனி பயமில்லை தொந்தரவு பண்ணவேண்டாம் அதிர்ச்சியான விசயங்கள் எதுவும் சொல்லவேண்டாம் அதை தாங்குமளவு அவரது இதயம் பலமாக இல்லை பொதுவாக கண்ணாடி பாத்திரம் கையாள்வது போன்று அவரையும் அவரது மனதையும் கவனித்து கொள்ளுங்கள்.” என்று சாந்தியின் நிலையை சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.
இவர்கள் இருவரும் இரவு உணவை உண்டுவிட்டு சாந்தியை வைத்திருக்கும் அறையிலயே பெஞ்சில் இருந்தனர்.
அப்போது டாக்டர் சொன்னதையே சுவரில் சாய்ந்து யோசித்தப்புடி இருந்தான் செழியன்.
அப்போது தூக்கத்தில் அவனது தோளில் தலை சாய்த்தாள் எழில் அவனும் அவளை சுகமாக தாங்கியபடியே அவள் படுப்பதற்கு வசதியா சற்று இறங்கி சாய்ந்து இருந்தான். 
நேரம் நள்ளிரவை தாண்டியதும் சௌவ்கரியமில்லாமல் இருந்ததனால் திடீரென்று  கண்முழித்து நிமிர்ந்து தாயை பார்த்துவிட்டு அருகிலிருக்கும் செழியனை பார்த்தாள் எழில்.
பார்த்தவள் பரிதவித்துப்போனாள்.
அடுத்த நாள்,
“ஏய் அங்கயே நில்லு உள்ள வந்த காலை வெட்டிடுவேன்டி சுண்டெலி. என்ன காரியம் பண்ணி வச்சிருக்க அது மட்டுமில்லாம ஊர் சுத்த போய்ட்டு வாறிங்களோ உள்ள வராதடி அப்புறம் முட்டி போட வச்சிருவேன் பார்த்துக்கோ.” என்றான் மணிமாறன்.
” மாமா இனி இப்புடி பண்ண மாட்டேன் இந்த முறை விட்டுடுங்களேன்.”
” இல்லவே இல்ல அதுக்கு வாய்ப்பே இல்ல சுண்டெலி.”
என்ன பண்ணி மாட்டிக்கிட்டாளோ??..    அன்புக்கொடி.
சுவாசம் தொடரும்.

Advertisement