Advertisement

அத்தியாயம் ஐந்து.
சுந்தரமூர்த்தி சாந்தியை திருமணம் செய்து மறுவீட்டிற்கு கூட மாமியார் வீட்டிற்கு வரவில்லை வசந்தியின் கல்யாணத்திற்கு கூட அவரோ சாந்தியோ வரவில்லை அதன் பின் இன்று வரை இங்கும் எந்த நல்லது கெட்டதும் நடக்கவில்லை  செழியனையோ பூமணியையோ அவரது வீட்டிற்கும் எந்த விதமான நல்லது கெட்டதிற்கும் அழைத்ததே இல்லை இந்த முப்பத்தியொரு வருடத்திலும்.
எழிலரசின் சடங்கிற்கு கூட நாலு வெளி மனிதர்கள் போல் பொது மண்டபத்தில் சடங்கு செய்ததனால் தாய்மாமன் முறை சீரை செழியனும் அவனுடன் துணைக்கு மணியும் நின்று செய்து முடித்துவிட்டு மண்டபத்தோடு திரும்பி விட்டனர்.
சுந்தரமூர்த்தி சாந்தியுடன் வாழவேண்டும்  என்ற கட்டாயத்தில் நீண்ட போராட்டத்தின் பின் வாழ்வை ஆரம்பித்தார் அதன்பின் விரதம் நேர்த்திக்கடன் என்ற மற்றுமொரு ஐந்துவருட போராட்டத்தின் பின் தான் எழிலரசி பிறந்தாள்.
அவரை ஆண் இல்லை குழந்தை  பிறக்கவில்லை என்று ஆட்கள் கேலிபேசியதை இல்லை நானும் முழுமையான ஆண் மகன்தான் என்பதை எழிலரசி பிறந்ததும் நிருபித்துவிட்டார்.
அதன் பின் சாந்தியிடம் அதிகமாக ஒதுக்கம் காண்பித்தார் அவர் உணவு உண்ணவரும் நேரம் உணவை மேசையில் வைத்துவிட்டு சாந்தி சென்றுவிடவேண்டும்.
அவரது வெளி வேலைகள் முடிந்து வீடு திரும்பும் வரை சாந்தி சுகந்திரமாக அவ்வீட்டிலோ முற்றத்திலோ நடமாடலாம் அவர் வந்தது அவருக்கு காப்பி கொடுத்துவிட்டு ஒதுங்கி விடுவார்.
இல்லையென்றாள் யார் மனம் நோக மூர்த்தியின் வாயில் திட்டுக்கேட்பது அதனால் அவரே அனுபவப்பட்டு ஒதுங்கிவிடுவார்.
இரவிலும் எந்தவித பேச்சோ தொடுகையோ இருக்காது சாந்தி கீழே பாயில் படுத்துக்கொள்வார்.
இதுவே காலத்திற்கும் தொடர்ந்தது. 
ஆரம்பத்தில் இருந்த மன வருத்ததினால் சாந்தியை அடித்து துன்புறுத்தினார் எழில் பிறந்ததும் காலப்போக்கில் சாந்தியை ஒரு பொருட்டாக மதிக்காமல் எதற்கும் பேச்சு தொடுகை என்று அறவே இல்லாமல் வாழ்கின்றனர் இருவரும்.
இருவருக்கிடையிலும் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்திருந்த முத்தரசி ஒருநாள் மீண்டும் சாந்தி காச்சலில் எழும்பவும் முடியாமல் படுத்திருந்த போது அவர்களது அறைக்குள் மூர்த்தி  வெளியே சென்றதும் போய் பார்த்தார்,
அவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருவரும் தனித்தனி படுக்கையில் படுப்பதை அப்போது எதுவும் கேட்காமல் சாந்தி நன்கு குணமடைந்ததும் தான் மீண்டும் மிரட்டி அதட்டி விசயம் கேள்விப்பட்டு பதறிவிட்டார்.
அவரின் ஒரே ஆறுதலான அகிலத்திடம் சொல்லிப்புலம்பினார்.
அதற்கு அகிலமோ ” இனி நாம் இருவருக்கும் இடையில் தலையிடுவது முறையில்லை காலப்போக்கில் சாந்தியை புரிந்துகொண்டு மூர்த்திதான் வாழவேண்டும் இல்லையென்றால் அவர்களின் உறவு இறுதி காலம் வரை நீடித்து நிலைக்காது நாம் மீண்டும் எதுவும் பண்ணி இருப்பதையும் கெடுக்காமல் தற்போது நாம் செய்வது அவர்கள் இருவரும் வெகு சீக்கிரம் புரிந்துகொண்டு அன்பு செலுத்தி வாழவேண்டும் என்று மீனாட்சி தாயிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது மட்டும்தான் நீ கலங்காமல் கோவிலுக்கு சென்று நேர்த்திவைத்து வேண்டுதல் பண்ணு நீ சாதாரணமாக இருந்தால் தான் சாந்திக்கும்  கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் இனி எல்லாமே காலத்தின் கையில் தான்” என்று  முத்தரசியை ஆறுதல் படுத்தி அனுப்பிவைத்தார் அகிலம்.
அதன் பின் முன்பை விட அதிக அன்போடும் அக்கறையோடும் சாந்தியை பார்த்துக்கொண்டார் முத்தரசி.
அதன் பின் எழிலை வளர்ப்பது வீட்டுவேலை மாமியாரின் அன்பான கவனிப்பு என்று ஒவ்வொரு நாளும் கழிந்து இதோ முப்பத்தியொரு வருடங்களும் இதோ ஓடிவிட்டது. 
அன்புச்செழியனின் வீட்டில்.
வெளி முற்றத்தில் மல்லிகை பந்தலின் கீழ் கதிரை போட்டு சட்டமாக அவரது அனைத்து கோபங்களையும்  பிடித்தமின்மை அனைத்தையும் ஒதுக்கி விட்டு தனது செல்ல மகள் பண்ணிய நம்பிக்கை துரோகத்தை மனதின் ஆழத்தில் புதைத்துவிட்டு மகளின் நல் வாழ்விற்காக இதுவரை எதற்கும் வராத அவரது மாமியார் வீட்டு வாசலில் இன்று அவரது பொண்ணிற்காக வந்திருக்கின்றார் சுந்தரமூர்த்தி.
நேற்று கணேசன் வீட்டிலிருந்து பரிசம் போட்டு பூ வைத்து உறுதிப்படுத்திவிட்டு சென்றனர்.
அதன் பின் எழிலை அழைத்துச்சென்றார் சாந்தி.
இதுவரை தாயை பெரிதாக எழிலரசியும் மதித்து நடந்ததில்லை தந்தையுடன் தான் எப்பொழுதும் அன்பாய் பேசுவதும் செல்லம் கொஞ்சுவதுமாகதான் இருப்பாள்.
அவளிற்கு திருமணப்பேச்சு மூர்த்தி எடுத்த பின்தான் முத்தரசியும் அவளை அழைத்து அவளது தாயின் வாழ்க்கை முறையை சுருக்கமாக சொல்லி ” சாந்தியை மூர்த்தி ஏற்றுக்கொள்வதற்கும் பூமணி குடும்பத்துடன் இணைவதற்கும் சாந்திக்கு மதிப்பு மரியாதை கிடைப்பதற்கு அனைத்திற்கும்  ஓரே தீர்வு செழியனை நீ கல்யாணம் முடிப்பதுதான் அப்பொழுது தான் சாந்தி இத்தனை வருடங்கள் பட்ட துன்பதிற்கும் பலன் கிடைக்கும் இதுதான் நீயும் உன் தாயை காயப்படுத்தியதற்கும் நீ செய்யும் ஓரே நன்மை எங்களுடனே இங்கே இருக்கலாம் அத்துடன் சம்மந்தியம்மாவும் உன்னை நன்கு பார்த்துக்கொள்வார்.
மாமியாராக இல்லாமல் அம்மாச்சியாக அவர்கள் உனக்கு இதுவரை காட்ட கிடைக்காத பாசம் காட்டி அன்பா பார்த்துப்பாங்க உன் மாமன் தங்கமான குணம் கொண்டவன் உன்னை பிள்ளைமாதிரி பார்த்துப்பான் நீ தான் இனி யோசித்து உன் வாழ்வை அமைச்சிக்கனும் சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன்.
வாழுறது ஒரு வாழ்க்கை நாமளும் நல்லா சந்தோசமாக வாழனும் நம்மளை சுத்தி இருக்கிற சொந்தங்களோட ஆசிர்வாதத்தோடு எல்லாரும் சந்தோசமாக வாழனும் அது உங்க கல்யாணத்துல நடந்தா நானும் சந்தோசப்படுவேன் தங்கம்.” என்று அவளது முகம் தடவி முத்தமிட்டு சென்றார் முத்தரசி.
கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும் கிராமத்து  பழக்கவழக்கம் பாரம்பரியம் எதுவுமில்லாமல் தான் நவீன காலத்திலிருக்கும் பெண்கள் போன்றுதான் அவளது செயல்கள் இருக்கும் ஆனால் உடை விசயத்தில் முத்தரசி போட்ட கட்டுப்பாடு மட்டுமே அவளிடம் எடுபட்டது. 
அதனால் உடையில் மட்டும் பாரம்பரியத்தை அவளிடம் காணலாம் வெளியே செல்லும் போது தாவனி பாவாடை. வீட்டிலிருக்கும் போது சுடிதார் அணிந்துகொள்வாள்.
ஒரு சுடுநீர் கூட வைக்க  அடுப்பை பற்ற வைக்க தெரியாத நவீன மங்கை எழிலரசி.
இதெல்லாம் பார்த்துதான் தன் மகள் தன் தாயிடமும் தம்பியிடமும் இருந்தால் மட்டுமே மகளுக்கு தாய் அனைத்தையும் கற்றுக்கொடுப்பார் தம்பியும் அனுசரித்து பொருமையாக போவான் என்று நினைத்து எழிலை அழைத்து தற்போதைய நிலையை எடுத்துக்கூறி செழியனை திருமணம் பண்ணிக்கொள்ளும் படியும் அப்போதுதான் நீ காலம் முழுவதும் மகிழ்வாக வாழமுடியும் நீ அடம்பிடித்தாவது சம்மதம் வாங்குமாறும் கூறிவிட்டு செல்வதற்கு திரும்பியவரை கை பிடித்து நிறுத்தினாள் எழில்.
” ம்மா” என்று எழில் அழைக்கவும் ஏக்கமாக திரும்பினார் சாந்தி.
“என்னடாமா”
“என்னை மன்னிச்சிடுமா அப்பத்தா எல்லாமே சொன்னாங்க தப்பே செய்யாம தண்டனை அனுபவிக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை நீயும் இத்தினை வருசம் பட்ட கஷ்டத்துக்கு என்னால தீர்வு கிடைக்கும்னா நான் கண்டிப்பாக என்னவேணும்னாலும் பண்ணுவேன்மா உனக்காக அந்த காட்டானையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீ படும் கஷ்டம் தெரியாம நானும் உன்னை மதிக்காம காயப்படுத்தியிருக்கேன் மா ரொம்ப கவலையா இருக்குதுமா நானே அப்பாகிட்ட பேசுறேன் மா நீ கவலையே படாத இனி தாராளமாக என்னை பார்க்க வாரதுக்காக அம்மாச்சி வீட்டுக்கு அடிக்கடி வரலாம் சீராடலாம் சந்தோசமாக இருக்கலாம் அப்பா இனி உன்னை தடுக்கவே மாட்டாரும்மா சரியா இனி இந்த கல்யாணம் முடியுறது வரை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் அம்மா வீட்டுல எப்புடி சீராடலாம்னு கனவு கண்டு சிரித்த முகமாக இரும்மா அப்போதுதான் இன்னும் அழகாக இருப்ப நீ” என்று தாயை கேலி செய்து சிரிக்கவைத்தாள் எழில்.
” ஏய் கேடி பொண்ணு இப்ப நீ தான் கல்யாணப்பொண்ணு சிரித்த முகத்தோடு அழகாக இருக்கனும் போடாமா அம்மா சாப்பாடு எடுத்துவைக்கிறேன் சாப்பிட்டு நல்லா தூங்குமா” என்று தலையை தடவி உச்சிமுத்தம் வைத்து சென்றுவிட்டார் சாந்தி.
அவள் அறிந்து தாயை அனுமதித்து கிடைக்கும் பாசமான முதல் முத்தம் சிலிர்த்துப்போனாள் பெண்ணவள்.
இரவு உணவையும் சாப்பிட்டு படுத்தும் விட்டாள் ஆனால் தாயை பற்றி கேள்விப்பட்டதும் தாயும் அப்பத்தாவும் பேசியவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப்பார்த்தாள் 
அதனால் தான் எப்படி இன்று வந்தவர்களை தடுத்து தந்தையை சம்மதிக்க வைத்து அந்த காட்டானை எப்படி கல்யாணம் பண்ணுவது என்றே யோசித்தபடி தாமதமாகதான் தூங்கினாள் எழில்.
அந்த இருள் சூழ்ந்த நள்ளிரவு  நேரத்தில் அவளது அறையின் ஜன்னல் தட்டப்பட்டது ஆழ்ந்த உறக்கமில்லாமல் இருந்ததால் உடனே கண்முழித்தாள் எழில்.
முழித்தவள் யாரென்று தெரியாமல் திறக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவும் தொடர்ந்து தட்டப்பட்டது.
சரி யாரென்று பார்கலாம் என்று திறந்தாள்.” ஐயோ நீயா??. இந்த நேரம் வந்திருக்க போ யாரும் பார்த்தா பிரச்சினையாகிடும் சீக்கிரம் போ இங்கயிருந்து.” என்று பதட்டதுடன் வந்தவனை துரத்தினாள் எழிலரசி.
” நீ இப்போ வெளிய வரலன்னா நான் கையை அறுத்துப்பேன் இன்னைக்கு வந்தவங்களுகே உன்னை முடிக்கப்போறாங்களாம்னு பேசிக்கிறாங்க நீ உடனே வா நாம எங்கயாவது போகலாம்.” என்று கையில் அறுப்பதற்கு வசதியாக பிளேட் வைத்தபடி நின்றான்.
” உன்னோட இதே தொல்லையா போச்சி எங்கயும் போகவேணாம் நீ முதல் இங்கயிருந்து போ இல்லன்னா சத்தம் போடுவேன்.”
” நீ சத்தம் போட்டா நான் என் கையிக்கு பதிலா கழுத்தை அறுத்துப்பேன் உனக்கு பரவாயில்லையா? உன்னோட வாழமுடியாட்டி உன்னால சாகவாவது செய்றேன் சந்தோசமா சரியா?? எழில்.” என்று மிரட்டவும் இவளும் பயந்து யாருக்கும் சத்தம் கேட்காத படி மெதுவாக பூனை பாதம் வைத்து வெளியே வந்துவிட்டாள் எழிலரசி
வந்தவள் கையை பற்றி இழுத்துச்சென்றான்.
“ஏய் கையை விடு என்னை எங்க இழுத்துட்டுப்போற நானும் உன்னை பிடிக்கல என் பின்னாடி வராதனு பல முறை சொல்லிட்டேன் உன்னை பார்த்தா என்னை உண்மையாக விரும்புற மாதிரியா இருக்கிற எங்க அப்பாவோட சொத்தை அடையுறதுக்கு வந்திருக்கனு உன்னோட திட்டத்தை தெரியாமலா இருக்கிறேன்.”
” நீ கழுத்த அறுத்துக்கோ இல்ல செத்துக்கூடப்போ  நான் இப்ப வெளிய வந்தது உன்னோட ஓடிப்போறதுக்கில்ல நல்ல படியா உன்னை பேசி அனுப்பிவைக்கத்தான் நீயா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பித்து போயிடு இல்லன்னா வரப்போற பின் விளைவிற்கு நான் பொறுப்பில்ல ” என்று இப்போது அவனை எழில் மிரட்டினாள்.
” ஏய் என்னடி லந்தா ஆமா உன் அப்பனோட சொத்தை அடைந்து இந்த ஊர்லயே நானும் நிரந்தரமாக இருந்து உன் நொண்ணே அந்த மணியையும் மாமன் அன்பையும் ஒரு வழியாக்கி வெத்துபசங்களா ஆக்கனும்கிற திட்டத்தோடதான் அந்த மணி பய நேத்து அந்த சபையில அம்புட்டு பேருக்கு மத்தியில என்னை எட்டி உதைச்சிட்டான் அவனுக்கு நான் யாருனு காட்டல நான் மாணிக்கம் இல்லடி வாடி உன்னை நாசம் பண்ணி உன் அப்பனையும் கதற வைக்கிறேன்.”
” ஏய் விடுடா எடுபட்ட பொறுக்கி நாயே நான் உனக்கு ஜோடியா?? இது உனக்கே கமெடியாத்தெரியல ” 
” ஏய் எனக்கு என்னடி கொறச்சல் நான் ஆம்புளடி இன்னும் பத்து மாசத்துல உன்னை அம்மாவாக்கி காட்டுறனா இல்லையானு பாரு அப்போத்தெரியும்”
” டேய் அதுவரை ஏன் காத்திருக்கனும் இதோ வா நீ ஆம்பிளையா? இல்லையானு என்கிட்ட உன் தைரியத்தை காட்டு பார்க்கலாம்” என்று கூறிய படியே மாணிக்கம் எதிர்க்கும் முன்பே எட்டி உதைந்தான் மணி.
” டேய் மாப்புள நீ கை வைக்கவேணாம் இதுல நம்ம சூப்பியும் சம்மந்தப்பட்டுயிருக்கா இத என்ன பிரச்சினைனு விசாரித்துதான் தெரிஞ்சுக்கனும் இவனையும் இழுத்துக்கிட்டு வா மூர்த்தி மாமா வீட்டுல இவள வீட்டுடு நாம இவனை இழுத்துக்கிட்டு போவோம்.”
” ஏய் காட்டான் நான் உனக்கு சூப்பியா?? இனி இப்புடி சொன்ன என்ன நடக்கும்னு பாரு இவரு எனக்கு பேர் வச்சமாதிரி சூப்பியாம்ல யார்கிட்ட எழிலரசி.”
” மாமா இவன்கிட்ட நமக்கு என்ன பேச்சி நேத்து வாங்கினதை மறந்திட்டான் போல டேய் நீ கெட்ட கேட்டுக்கு என் தங்கச்சி கேக்குதாக்கும் பல்லை பேத்துருவேன் பார்த்துக்க” என்று மாமனிடம் ஆரம்பித்து மாணிக்கத்தை அடித்து நிறுத்தினான்.
” வாம்மா எழில் உன்னை வீட்ல விட்டுடுறோம் இவனை நாங்க பார்த்துக்கிறோம் இனி இவனோட தொல்லை உனக்கு இருக்காது உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணி சந்தோசமாக இரு மா வா போகலாம் எழில்.” என்று அவளது கையை பிடித்தான் மணி.
” அண்ணே வா நாம அம்மாச்சி வீட்டுக்கு போகலாம் காலையில அங்க அப்பா வந்து என்னை கூப்பிட்டு போகடும்.”
” என்னமா சொல்லுற அம்மாச்சி வீட்டுக்கு நீ வரியா உங்க அப்பா அங்க வருவாரா?. என்ன மா இதெல்லாம் ஏன் இப்புடி பண்ணுற?.”
” அதெல்லாம் இப்ப சொல்லமுடியாது எனக்கு தூக்கம் வருது  எல்லாம் காலையில எங்க அப்பாவும் வருட்டும் அங்க பேசிக்கலாம்.” என்று சொன்னபடியே கொட்டாவி விட்டாள் எழில்.
” டேய் மாப்புள இத்தனை வருசத்துல முதல் முதலா சூப்பியே நம்ம வீட்டுக்கு வாரன்னு சொல்லுது அத இத பேசி கெடுத்திடாம எப்புடியாவது நீ அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வா அம்மா இவளை பார்த்தா ரொம்ப சந்தோசப்படும் மாப்புள இவனை நான் நம்ம பம்புசெட்டு அறையில விட்டு பூட்டிட்டு வீட்டுக்கு வாறேன் டா சரியா?.”
” என்ன மாமா நீ ஒண்ணு சொல்லி நான் பண்ணாம விடுவனா என்ன?. எழிலே வாரனு சொல்லுது நான் கூட்டிட்டு போறேன் நீ போய்டு சீக்கிரமாக வீட்டுக்கு வா ” என்று மாமனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்க்காக எழிலை அழைத்துக்கொண்டு சென்றான் மணி.
செழியனின் வீட்டிற்கு சென்று கதவை திறந்தான் அந்த சத்தத்தில் உடனே கண்முழித்துவிட்டார் பூமணி.
“அம்மாச்சி இன்னும் தூங்கலயா? நீங்க இம்புட்டு நேரம் முழிச்சிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.”
” அடடே!. மணியா என்ன ராசா இந்நேரத்துல நீ வந்திருக்க உன் மாமன் அன்பு எங்கப்பா?. அவனுக்கும் காலா காலத்துல நான் கண் மூடும் முன்ன ஒரு கல்யாணம் பண்ணி பொண்டாட்டிகிட்ட அவனை ஒப்படைச்சிட்டா அவ அவன பார்த்துப்பானு நானும் நிம்மதியா தூங்குவேன் எங்க அதுக்குதான் அந்த மீனாட்சி தாய் இன்னும் ஒரு வழி விடலயை.” என்று அவரது கவலையை சொல்லி புலம்பினார் பூமணி.
” நான் நினைக்கிறேன் அம்மாச்சி உங்க மகன் காட்டானுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடந்திடும்னு.”
” ஐயோ என்ன பெத்த ராசாத்தி என் பேத்தியா இது இன்னம்மா இந்நேரத்துல நீயும் உன் அண்ணணோட வந்திருக்க வாடா தங்கம் ஐயோ கையும் ஓடல காலும் ஓடல இருங்க ரெண்டு பேரும் சாப்புட்டிங்களா?? என்னம்மா இன்னைக்குதான் பரிசம் போட்டுருக்கு வீட்ட விட்டு இந்நேரம் வந்திருக்க எங்க உன் அம்மா எதுனா பிரச்சினையா?.  தங்கம்.” 
” எந்த பிரச்சினையும் இல்ல அம்மாச்சி நான் ஒரு வேலையாதான் வந்திருக்கிறேன் காலையில அப்பா வந்ததும் எங்க வீட்டுக்கு போயிடுவேன் இப்ப குடிக்க எதுனா தாங்க அம்மாச்சி.”
” நீ வந்ததே போதும் தங்கம் கருப்பட்டி தே தண்ணி குடிப்பியா? நீ உன் மாமன் அதுதான் விரும்பி குடிப்பான்.”
” பரவாயில்லை அம்மாச்சி தாங்க குடிச்சிப்பார்ப்போமே.”
 இவர்கள் பேக்கொண்டிருக்கும் போதே செழியனும் வந்துவிட்டான் இவர்களுடன் அவனும் தேநீர் குடித்துவிட்டு மணியை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ” டேய் மாப்புள நல்லாவே நேரமாகிட்டு நீ வீட்டுக்கு போ ரெண்டு குழந்தைகள ஒத்தையில வச்சிக்கிட்டு அன்பு கஷ்டப்படும்.”
” யாரு அந்த சுண்டலியா பயப்புடும் இன்னைக்கு சாயந்தரம் என்ன நடந்துசினு உனக்கே நல்லாத்தெரியுமே மாமா வீட்டுக்கு வந்த அம்மாவே தெரிச்சு ஓடிடுச்சாம் இதெல்லாம் தெரிஞ்ச நீயே அவளை இப்புடி பேசலாமா?. சரி போறேன் காலையில அந்தாள் வந்து என்ன ஒரண்டையை இழுக்கப்போறாறோ தெரியல விடியக்காலம நேரத்தோடயே வந்துடுவேன் நீயும் போய் தூங்கு மாமா.” என்று செழியனிற்கு தைரியம் சொல்லியபடி சென்றான் மணி.
அதன் பின் ஆளுக்கு ஓர் இடத்தில் படுத்தனர் புது இடம் வசதியின்மையால் எழில் தூங்கவில்லை இதோ மூன்று மணி நேரத்தில் நன்கு விடிந்து விட்டது. 
விடிந்ததும் எழுந்த எழில் மூர்த்தியை அவள் அழைத்ததாக இங்கு வரும்படி தகவல் சொல்லி ஆள் அனுப்பிவைத்தாள்.
அதற்குள் மணி அவனது குடும்பம் என எல்லோரும் அவ்வீட்டின் முன் மல்லிகை பந்தலின் கீழ் அமர்ந்திருக்கின்றனர். 
மூர்த்தியின் வரவிற்க்காக.
புலி வந்தால் என்ன நடக்குமோ?. சுவாசம் தொடரும்.

Advertisement