Advertisement

அத்தியாயம் 04.
மூன்று நாட்களுக்கு முன்.
ஒரு அழகிய மாலை நேரம் இன்னும் சற்று நேரத்தில் இருள் சூழ்ந்துவிடும்.
அந்த நேரத்தில் தான் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவரும் மணிமாறனின் தந்தையுமான நெடுமாறன் வீட்டிற்கு  வேக நடையிட்டு சென்றாள் அன்புக்கொடி.
சென்றவள் வெளி வாயிலில் நின்று அவரை அழைத்து ” உங்க மகன் என்னை ஏமாற்றிவிட்டார் நீங்கதான் பஞ்சாயத்து கூட்டி 
எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கி எனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சித்தரனும் ஐயா.” என்றாள் அன்பு.
“என்னமா சொல்லுற??. புரியும்படி சொல்லுமா மொத நீ உள்ள வந்து சொல்லுமா அன்பு என்னோட எந்த பையன் ?. என்ன பண்ணினான் மொட்டயா ஏமாத்திட்டான்னா என்ன அர்த்தம்.”
” உள்ள வருவது இருக்கட்டும் நீங்க இப்பவே பஞ்சாயத்த கூட்டுங்க அங்கயே நான் என்ன நடந்ததுனு விபரமாக சொல்லுறேன்.” என்றவள் 
மீண்டும் பஞ்சாயத்து கூடும் அரசமரத்தடிக்கு சென்றுவிட்டாள் அன்பு.
அன்பின் பேச்சை கேட்டு சிரித்தபடியே  தனது தாயை பார்க்க சென்றார் நெடுமாறன்.
“அகிலமும் சிரித்தபடி காச்சலுக்கு கசப்புன்னு தெரிஞ்சும் கசாயம் குடிச்சாதானே குணமாகும் அது மாதிரிதான் மணிக்கு இந்த வைத்தியம் மாறா நீ எதை பற்றியும் பயப்படாத அம்மா அப்பா உன் அத்தை பூமணி எல்லாரும் உன்னோட உனக்கு துணையாக எப்போதும் இருப்போம் உன் மகனுக்கு சாதகமான தீர்பை சொல்லி அவனோட வாழ்வை அன்போடு மலரவை எல்லாம் நல்லபடியாக நடக்கும்.”
” அம்மா நீங்க சொல்லுறது சரிதான் ஆனா நான் நேர்மையை மீறி வேலை பண்ணுறனேன்னு மனசுக்கு உறுத்துதுமா இதுக்கு பின்னாடி நாமதான் இருக்கோம்னு மணிக்கு தெரிஞ்சது நாம இருந்தபாடில்ல ம்மா ஏற்கனவே  வசந்தி ஒரு பொய் சொல்லிதான் நிர்மலாவை மணிக்கு கல்யாணம் பண்ணி வச்சாள் காலப்போக்கில் அவனுக்கே அது தெரியவந்துதான் நம்மல விட்டுப்போய் இப்ப தனிய கஷ்டப்படுறான். 
இப்போ இதுவும் நாம செய்தோம்னு தெரிஞ்சா என்னவாகுமோனு நினைச்சாலே நடுங்குதும்மா.”
” டேய் மாறா நீ அவனோட அப்பாடா இப்புடி பயப்புடுற நாலு பேர் நல்லா இருக்கனும்னு தானே நாம இவ்வளவு வேலை பண்ணுறோம் என்னை பாரு என்னோட வயசுக்கு நான் இதெல்லாம் பண்ணலாமா? ஆனா பண்ணுறனே என் பேரன் வம்சம் தலைக்கனும்னு அவன் சந்தோசமான குடும்ப வாழ்வு வாழனும்னு நினைத்து அந்த மீனாட்சி தாய் மேல பாரத்தை போட்டுடு பண்ணுறேன் நீதான் மாறா சொதப்பிடாம சரியா ஒரு நாட்டாமை மாதிரி கம்பீரமாக விசாரித்து தீர்ப்பு சொல்லனும் நம்ம சுப்யையாவும் சாட்சி சொல்லுவான் உனக்கு எந்த குழப்பமும் வேணாம் நீ தைரியமாக பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டு அம்மா நான் சொல்லுறேன்ல இனி வரும் காலத்தில உன் மகன் அவன் நினைத்த மாதிரி குடும்ப வாழ்க்கை வாழுவான் நீயே இருந்து பாரு அப்போ உனக்கு இது தப்பா தெரியாது மாறா சொல்லுறது புரியுதா??..”
” நல்லாவே புரியுதுமா ஆனா மாறனுக்கு தெரிஞ்சா பொய் சொன்னா பிடிக்காதவன் அதுதான் யோசனையாக இருக்குதுமா எனக்கு.”
” என்ன மாறா நீ குழந்த பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லுற இதுல யாரு  சம்மந்தப்பட்டுருக்கா?. நீ நான், சம்மந்தியம்மா பூமணி, முத்தரசி அம்புட்டுபேரும்தானே எனக்கு முத்துதான் இந்த யோசனையவே சொன்னா நாம மூர்த்திக்கு பண்ணுன அதிரடி மாதிரி மணிக்கு எதுவும் பண்ணினாதான் அவன் குடும்பமாக வாழுவான் அவன் எனக்கும் பேரன்தான் பொம்பள பிள்ளைகளை வேற வச்சிருக்கான் நாலபின்ன அவன் ஒத்தையில நின்னு கஷ்டப்படக்கூடாது நாம கண்ண மூடுறதுக்கு முன்ன அவங்களுக்கு பண்ணவேண்டியத பண்ணிப்புடனும்னு சொன்னா அப்போ நாம யாரும் இதை வெளிய யார்கிட்டையும் சொல்லமாட்டோம்.
அன்பும் தலைகீழா நின்னாலும் மணிக்கிட்டையோ வேற யாரிடமோ சொல்லவே மாட்டா சொல்லி மேலும் அவளோட வாழ்க்கையை சிக்கலாக்கிகொள்ள மாட்டாள் சூதானமான புள்ள நீ வேணும்னா பாரு தினமும்  சண்டபுடிச்சோ அன்பு காட்டியோ மணியை ஒருவழிக்கு கொண்டுவந்து நல்லபடியாக உன் மகனோட வாழ்ந்து பிள்ளைகளை பெத்து குடும்பம் நடத்தும்.
உன் மவனுக்கு பெத்த தாய்தான் சரியில்ல அப்பா நீயாவது அவனுக்கு  
உன்னால முடிஞ்ச நல்லத பண்ணு மாறா ஒரு நேரம் மணிக்கு இந்த வேலையை நாமதான் பண்ணினோம்னு தெரியவந்துன்னா அப்போ சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி என்ன பண்ணி அதை நான் சரி பண்ணணுமோ நான் பண்ணுவேன்.
அதுவரை எக்காரணம் கொண்டும் இது வசந்திக்கு மட்டும் தெரியகூடாது தெரிஞ்சது காரியமே கெட்டுப்போயிடும்.
அங்க புள்ளைகளை பார்த்துக்க சம்மந்தியம்மா பூமணி வந்துருப்பாங்க போல அதுதான் திட்டப்படி அன்பு இங்க வந்துட்டா இப்ப நீ தான் எல்லாம் பண்ணணும் மணி மேல கடும் கோபம் காட்டி கவியிடம் அவனை திட்டி எங்க இருந்தாலும் உடனடியாக பஞ்சாயத்துக்கு வரச்சொல்லி கவிகிட்ட சொல்லிட்டு நீ அவன் வந்ததும் இது உண்மையாக ஒரு பொண்ணுக்கு நடந்திருக்கும் போது நீ எப்புடி ஆவேசமாக கோபமாக விசாரிச்சு தீர்ப்பு சொல்லுவியோ அப்புடி யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நீ விசாரித்து அவசரப்படாம பொறுமையாக தீர்ப்பு சொல்லனும் அந்த தீர்ப்பு மணியோட வாழ்க்கையைவே மாத்திடனும் எல்லாத்தையும் குழந்த பிள்ளைக்கு சொல்லுறது மாதிரி விபரமாக சொல்லிட்டேன் மாறா உனக்கு இனி உன் கைலதான் உன் மகனோட நல்ல எதிர்கால வாழ்க்கை அடங்கியிருக்கு அம்புட்டுதான் சொல்லுவேன் இப்பவே அன்பு பாதிப்பேரை பஞ்சாயத்துக்கு கூட்டியிருப்பாள் இனி அங்க உனக்காகதான் எல்லாருமே காத்திருப்பாங்க இப்ப நீ போ நானும் அப்பாவும் கொஞ்சம் தாமதமாக வாறோம்.” என்று மிக நீண்ட விளக்கத்தை கொடுத்தார் நெடுமாறனிற்கு அகிலம்.
” சரிமா நீங்கதான் என் தைரியம் தாமதிக்காம வாங்க நான் முன்ன போறேன்.” என்று கூறியபடியே என்னவெல்லாம் பண்ணவேண்டும் பேசவேண்டும் என்று மனதினுள் ஒத்திகை பார்த்தபடியே பஞ்சாயத்து நடைபெறும்  இடத்திற்கு சென்றார் நெடுமாறன்.
தாய் சொன்னது போன்றே கவியிடம் சொல்லி மணிமாறனை அங்கு வரவழைத்தார்.
அவரும் அங்கு சென்றதும் விசயம் கேள்விப்பட்ட அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரத்தொடங்கினர். 
ஒரளவு ஆட்கள் கூடியதும் பஞ்சாயத்து தலைவர் அன்புவிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்தார்.
” இந்த சபையில் கூடியிருக்கும் அனைவருக்கும் எனது இன்நேர வணக்கம்.
சொல்லும்மா அன்பு நீ ஏன் பஞ்சாயத்து கூட்டியிருக்கிற யாரு மேல குற்றம் சொல்லுற என்ன நடந்ததுனு விபரமாக சொல்லுமா.”
” என்னதங்க ஐயா சொல்லுறது இதோ நிக்கிறாறே சின்னையா என்னை தொட்டு ஏமாத்திப்புட்டாருங்க இத போய் நான் எப்புடி என்னன்னு விபரமாக சொல்லுவேன்ங்க இதுக்கு என் வாழ்க்கைக்கு  நீங்கதான் நல்ல தீர்ப்பு சொல்லி என்னை நல்லபடியாக சின்னையாவோ வாழவைக்கனும்ங்க அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன்.” என்று போட்டாலே ஒரு போடு அன்புக்கொடி.
“ஊரில் ஒருவர் மாறன் ஐயா ஒரு காலமும் உங்க தீர்ப்பு தப்பா போனதில்ல அது போல குற்றம் உங்க மவன் மேலன்னாலும் ஏழை பொண்ணு அன்புக்கு நல்ல தீர்பை சொல்லுங்க சின்னையாக்கு சார்பா தீர்பை சொல்லாதிங்க ஐயா.”
” ஏய் யாருடா அது எம் மவன் நியாயத்தையே தப்பா பேசுறது. அவனுக்கு பஞ்சாயத்துனு வந்துட்டா குடும்பம் புள்ளைனு எல்லாம் பார்க்க மாட்டான் ஒரே சொல் ஒரே தீர்ப்பு இவன் கெடக்குறான் கூறுகெட்ட பய நீ உம் மவனையும் விசாரிச்சுப்புட்டு சரியான தீர்பை சொல்லு மாறா.” என்று நன்றாக தைரியம் சொன்னார் தாய் அகிலம். 
” ஏன் நீ வரத்தாமதம் மணி??.. என்ன நடந்ததுனு உன் தரப்பு விளக்கத்தை சொல்லு.”
”  அது வந்துங்க அண்ணணுக்கு கைப்பேசில கூப்புட்டேன் போகலங்க அதுதான் நம்ம முனியனை அனுப்பி கூட்டியரச்சொன்னேங்க அதுதான் அண்ணே வரத்தாமதமாகிட்டுங்க ஐயா.” என்று அண்ணனிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான் தம்பி கவிமாறன்.
“கவி நான் உன்கிட்டயா? கேட்டேன். மணி நீ பதில் சொல்லாம அமைதியா நின்னா என்ன நிலமைன்னு நாங்க எப்புடி தெரிஞ்சிக்கிறது.” 
அப்பொழுதும் மணி யாரிடமோ கேள்வி கேட்கும் பாவனையோடு
அதற்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லாதது போன்ற ஒரு தோரணையில் நின்றான். 
அப்போது ” ஏன் ராசா நீ அமைதியா நின்னா நாங்க என்னத்தப்பு எண்ணுவோம் நீ தான் இதுல உன் தரப்பு நியாயத்த சொல்லனும் அப்பதானே உன் அப்பன் சரியான தீர்ப்ப சொல்ல முடியும்.” என்றார் அகிலம்.
  
அரசமரத்தடியில் மக்கள் திரண்டு நின்று ஆளுக்கொன்றாக இட்டு கட்டி பேசியே ஒருவனை தூண்டிவிட அந்த எரிமலையோ எப்போது வேண்டுமானாலும்  வெடிக்கும் என்ற நிலையில் நின்றான் மணிமாறன்.  
“ஏன்பா என்ன சத்தம் உங்களுக்குள்ள மணியும் வாயத்தொறக்குறானில்ல நான் என்னதான் பண்ணடும்.” என்று கத்தினார். பஞ்சாயத்து தலைவர்.
அப்போதுதான் காச்சலினால் உடல் நலம் சரியில்லாமல் இருந்த ராசாத்தியம்மாளுக்கு விசயம் தெரிந்து என்னவோ ஏதோ என்று ஓடி வந்தார்.  
” அடியேய் கூறுகெட்டவளே ஒரு நாள் உடம்பு சரி இல்லனு உன்னை சின்னையா வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினனே என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கடி நீ என் நெஞ்சில நெருப்ப அள்ளிக்கொட்டிட்டியே பாவி மகளே. அந்த மவராசன் நமக்கு சோறுபோடுற சாமிடி அவருமேல இப்புடி ஒரு பழியை சொல்லுறியே யாராவது நம்புவாங்களா??  இந்த ஊர் சின்னராசா டி அவர் ஒருகாலமும் இப்புடி ஒரு செயலை சின்னையா பண்ணமாட்டாரு. நீ தான் பொய் சொல்லுற டி” என்று அவரது ஆசை மகளை போட்டு அடி மொத்தினார் ராசாத்தியம்மாள்.

Advertisement