Advertisement

அத்தியாயம் மூன்று.
அதே வாடிப்பட்டி கிராமத்தில் மற்றுமொரு பெரியகுடும்பத்தில் ஆட்களின் சலசலப்பு அதிகம் கேட்டபடி பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள் அவ் வீட்டின் சொந்தங்கள்.
தற்போது நேரம் மாலை மூன்று மணி இன்னும் ஒரு மணி நேரத்தில் அவ்வீட்டின் இளவரசி நம் நாயகி எழிலரசியை பரிசம் போடுவதற்கு மதுரை நகரில் இருந்து இவர்களின் அளவிற்கு பெயர்போன குடும்பம் வருகின்றார்கள்.
ஆனால் தனது பொண்ணின் விஷேசம் அன்றும் சாந்தியின் முகத்தில் அதற்கான  மகிழ்ச்சி கொஞ்சமும் இன்றி ஒருவித இயலாத தன்மையை காட்டியபடியே வேலைகளை செய்த படி வளையவந்தார்.
இதை பார்த்த முத்தரசி சாந்தியை தனியே அழைத்துச்சென்றார்.
“ஏன் மா சாந்தி உன் புருசனை பற்றி உனக்கு தெரியாததா என்ன இப்ப மட்டும் புதுசாகவா அவன் உன்னை அலட்சியமாக நடத்துறான் கூறுகெட்டப்பய கிளி மாதிரி பொண்டாட்டி கிடைச்சிருக்க நீ வசந்தி அவனுக்கு கிடைக்கலனு அதுவும் உன்னாலனு நினைச்சி  முப்பத்தியொருவருசமாக உன்னை ஓதுக்கியேதான் வச்சிருக்கான்.”
“அவனோட பொண்ணு விஷேசத்திற்கு அவன் சம்மந்தி வீட்டுல சொல்லாம விட்டுடான் ஆயிரம்தான் வீட்டுக்கு நான் பெரியவன்னாலும் அவனுக்கு விருப்பமில்லாத ஒண்ணை நானும்  அவனை எதிர்த்து பண்ணுறது சரியில்லன்னு தான் சாந்தி நானும் சொல்லாம விட்டுடேன்  உனக்கு இது எம்புட்டு மனவருத்தம்னு எனக்கும்  புரியுது இதுவும் கடந்து போகும்னு மனச தேத்திக்கிட்டு உன்னோட பொண்ணு விஷேசம் நீ சரிச்சமுகமா வளையவந்தாதான் போற இடத்துல நம்ம எழில் நல்லா வாழும் சாந்தி உன்னோட தங்கமான குணத்துக்கு நீ எப்புடி வாழவேண்டிய பொண்ணு இத்தினை வருசமா இவனை நீ அனுசரித்து போற கூடிய சீக்கிரம் இதுக்கு நல்ல முடிவு வரும் மூர்த்தி உன்னை புரிஞ்சுக்கிற காலம் தூரம் இல்லன்னு என் மனசுக்குப்படுதுமா சாந்தி.”
முத்தரசி பேசியதை கேட்ட சாந்தி ஒருவித விரக்தி சிரிப்புடன்  “அத்த இதுக்கு மேல என் வாழ்க்கையில நல்ல முடிவு வந்துதான் என்னவாகப்போகுது. நான் யாரையும் மனசளவில கூட நினைச்சதில்ல நீங்கதான் வந்து என்னை பொண்ணு கேட்டு உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க அவருக்கு வசந்தியை பிடிக்கும்னு எனக்கு தெரியாது அத்த வசந்தியும் எனக்கு மாறன் அத்தானைதான் கட்டிவைங்கனு சொன்னாள் இவர் அவளிடம் விருப்பம் சொன்னதை என்னிடம் வசந்தி சொல்லவேயில்ல எனக்கு தெரிந்திருந்தால்  நானே விலகிபோயிருப்பேன் யாருக்கும் இப்புடி ஒரு கஷ்டமே வந்திருக்காது அத்த.” என்று அவரது விரக்தியை குரலில் காட்டி வேதனையுடன் பேசினார் சாந்தி.
” இது எல்லாமே எனக்கும் தெரியுமா சாந்தி உன்ன மாதிரி தங்கமான குணம்கொண்ட  பொண்ணை அந்த அகிலம் குடும்பத்துக்கு சட்டுனு தூக்கி குடுக்குறதுக்கெல்லாம் எனக்கு அம்புட்டு பெரிய மனசெல்லாம் இல்லமா சாந்தி அதுதான் அவுக முந்திக்கிறதுக்கு முதல் நானே போய் உன்னை பெண் கேட்டுட்டேன் ஏன்னா என்குடும்பம் ஒரு நல்ல மருமகளை இழந்திடக்கூடாது பாரு அதுனாலதான் நான் அப்புடி பண்ணினேன் மா ஒரு வேலை உன் மாமனார் இப்ப உயிரோட இருந்திருந்தாலாவது உன் வீட்டுகாரன் கொஞ்சம் வாலை சுருட்டிக்கிட்டு இருந்துருப்பான் அதுக்கும் இப்ப வழியில்ல அந்த மவராசன் என்னை இவனோட போராடுன்னு ஒத்தையில விட்டுப்போட்டு தூக்கத்துலயே மாரடைப்புனு லேசா கண்ணமூடிட்டாரு இப்ப இவனோட நான்தானே கிடந்து அல்லாடுறேன்.சரிமா சாந்தி வா நாம போய் வேலையை பார்ப்போம் இந்த அத்தைக்காக கொஞ்சம்  சிரிச்சமாதிரி முகத்தை வச்சிக்கோடா தங்கம்.” என்று சாந்தியின் முகம் தடவி அழைத்துச்சென்றார் அன்பு மாமியார் முத்தரசி.
ஆயிரம்தான் யாரும் சமாதானம் சொன்னாலும் பிறந்தவீட்டு சொந்தம் இருந்தும் அழைக்கவில்லை என்ற மனவருத்தம் ஒரு பொண்ணை சாதாரனமாக இருக்கவிடுவதில்லை அது போன்றுதான் சாந்தியும் இதுக்கு முன்னர் எப்படி அனைத்து ஆசைகளையும் மனதில் போட்டு புதைத்துக்கொண்டு வாழ்ந்தாரோ அது போன்றே இன்றும் தனது பொண்ணின் விஷேசதிற்காக அனைத்தையும் மனதின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டு சுபநேரம் நெருங்குவதனால் மாப்பிள்ளை வீட்டாரை எதிர்பார்த்து சிரித்தமுகத்துடன் வாசலில் காத்திருக்கின்றார் சாந்தி மூர்த்தியுடன்.
நல்லதம்பியும் நமச்சிவாயமும் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பி நல்லதம்பியின் தாய் அவர் பிறந்ததும் இறந்துவிட்டார் அதனால் நமச்சிவாயத்தின் தாய்தான் இருவருக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தார்.
அவர்களும் வளர்ந்து அண்ணன் தம்பி என்பதை விட ஒரு தோழமையுடன் தான் பழகிவந்தனர்.
இவர்களை பிரிக்கவென்றே மாணிக்கத்தின் தந்தை செல்வம் நட்பு என்ற போர்வையில் இவர்களுடன் இணைந்தார்.
இதை இவர்கள் அறியமுடியாத படி நன்றாக காய் நகர்த்தி நமச்சிவாயத்தின் தாய் இவர்களுக்கு ஒன்றாக பாலூட்டி ஒருதாய் பிள்ளையாக வளர்த்ததை சொத்திற்க்காக பண்ணியதாக இட்டுக்கட்டி இருவரிடமும் கதை மாற்றிச்சொல்லி இருவரும் உண்மை தெரியாமல் செல்வம் சொன்னதை உண்மை என்று நம்பி நமச்சிவாயம் சண்டைக்குச்செல்ல நல்லசிவம் நான் அவ்வாறு சொல்லவில்லை என்று எடுத்துச்சொல்லியும் தன் தாயின் பாசத்தை தப்பாக பேசியதாக நம்பி வாய்தர்க்கம் அதிகமாகி கை சண்டையில் முடிந்து இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.
செல்வத்தின் காரியம் முடிந்ததும் அவர் திருமணமாகி மதுரை சென்றுவிட்டார்.
அன்று பிரிந்த இருவரும் திருமணமாகி குடும்பம் பிள்ளைகள் என்று ஆனபின்கூட இணையவில்லை.
இது நமச்சிவாயத்தின் இறப்புவரை தொடர்ந்தது.
வீட்டு பெண்களுக்கோ பிள்ளைகளுக்கோ அவர்கள் ஏன் ஒன்றாக இருந்து பிரிந்தார்கள் என்று காரணம் நமச்சிவாயத்தின் இறப்புவரை செல்வம் மீண்டும் வாடிப்பட்டி வரும் வரை தெரியாமல் இருந்த விசயம் அன்று ஊருக்கே அம்பலப்படுத்தி நல்லசிவத்தை நமச்சிவாயத்தின் தாயின் பாலை  குடித்து வளர்ந்து அதையே நல்லசிவம் சொத்திற்காக தான் அத்தாய் பண்ணியாத  தப்பாக நினைத்ததாக சொல்லி துரோகப்பட்டம் வாங்கி கொடுத்துவிட்டு சென்றார் செல்வம்.
அதன்பின் இரண்டு குடும்பத்து பெண்களுக்கும் இடையிலிருந்த ஒரு இலகுதன்மை காணாமல் போய் காணும் இடங்களில் முறைப்பும் சடைப்புடனும் கடந்து செல்வர் இருவரும் அதுவே அகிலம் சாந்தியை கேட்டதும் முத்தரசி முந்திக்கொண்டு சாந்தியை மருமகளாக்கிக்கொண்டார்.
நமச்சிவாயம் முத்தரசியின் ஒரே ஒரு தவப்புதல்வன் தான்  சுந்தரமூர்த்தி அவருக்குதான் முத்தரசி சாந்தியை திருமணம் செய்துவைத்தார்.
மூர்த்தி வசந்தியை சந்தித்து அவரின் விருப்பத்தை சொன்னார்.
அவரும் ஆண்மகனிற்கே உரிய அனைத்தும் கொண்வர் அவருக்கு அமைதியான சாந்தியை விட துறு துறுப்பான வசந்தியை பிடிக்கும் இயற்கை அழகை விட செயற்கை அழகை விரும்பினார் மூர்த்தி.
மூர்த்தியின் முசுட்டு குணத்தை பார்த்துதான் அவரைவிட அமைதியான நெடுமாறனை கல்யாணம் செய்து கொள்ளவதற்கு விசம் உண்ணப்போவதாக சாந்தியையும் பூமணியையும் பொய்யாக நம்பவைத்து தனது காரியத்தை சாதித்துக்கொண்டார் வசந்தி.
இது தெரியாமல் மூர்த்தி வசந்தி கிடைக்காமல் போனதற்கு சாந்திதான் தன் தாய் கேட்டதற்காக தன்னை பிடிவாதமாக கல்யாணம் பண்ணிக்கொண்டார் என்று நினைத்துதான் தனது அன்பும் காதலும் சாந்திக்கு கிடைக்ககூடாது என்று நினைத்து சாந்தியை ஒதுக்கிவைத்தார் மூர்த்தி.
அதனால் இருவரும் திருமணம் செய்து வாழ்வை ஆரம்பிக்காமல் மூர்த்தி தள்ளியே நின்றார்.
ஊராரின் வாயிக்கு சாந்தி குழந்தை உண்டாகமால் இருந்தது  அவலாக  போய்விட்டாது மலடி என்ற பட்டத்தையும் இலகுவாக சூட்டிவிட்டனர்.
இதை தாங்காமல் ஒருநாள் முத்தரசி முதல்முதலாக அன்பை காட்டிய மாமியார் கண்டிப்பாக நடந்துகொண்டார் சாந்தியிடம்.
முத்தரசி அதட்டி கேட்கவும் இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பிக்காமல் போகும் விதத்தை சொல்லி அழுது கதரவும் இதை சற்றும் எதிர்பார்காத முத்தரசி மலைத்துப்போனார்.
இதை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் கோவிலில் சோகமாக இருந்த முத்தரசியை பார்த்த அகிலம் மனது தாங்காமல் அருகில் சென்று என்னவென்று கேட்டகவும் இதை பற்றுகோலாக பற்றிப்பிடித்த முத்து அகிலத்திடம் மனம் திறந்து நடந்தது அனைத்தையும் சொன்னார் கூடுதலாக அவர் சாந்தியை மருமகளாக்கியதையும் சொன்னார்.
இதை கேட்ட அகிலம் வசந்தியை திட்டியபடி அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு வெளியூர் ஆட்களை தயார் பண்ணி மூர்த்தி இருக்கும்  இடங்களுக்கு சென்று அவரது ஆண்மையை தவராக பேசி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர் என்று திட்டும் படி தொடர்ந்து வேறு வேறு ஆட்களை பணம் கொடுத்து நெடுமாறனிடம் சொல்லி ஏற்பாடு செய்தார் அகிலம்.
இந்த திட்டம் தொடர்ந்து நடக்கவும் ஒரு நாள் முத்தரசியே மூர்த்தியிடம் ஊரில் இவ்வாறு பேசுகிறார்கள் என்னால் இதை தாங்க முடியவில்லை இதனால் சாந்தியின் வாழ்க்கை கெடுவது பிடிக்கவில்லை இந்த கல்யாணத்தை பஞ்சாயத்தில் ரத்து பண்ணி சாந்திக்கு வேறு திருமணம் பண்ணிவைத்து நன்றாக வாழவைக்கப்போவதாக அவரின் பங்கிற்க்கு மூர்த்தியை மிரட்டினார் முத்தரசி.
இதை தாங்காது மனவுளைச்சலுக்கு ஆளான மூர்த்தி சாந்தியை அடித்து துன்புறுத்தினார்.
அதில் காச்சல் வந்து சாந்தி படுத்துக்கொள்ளவும் சாந்தியை பார்த்த முத்தரசி பதை பதைத்து அவருக்கு கசாயம் வைத்துக்கொடுத்து குணப்படுத்தியதும் மூர்த்தியிடம் வாயால் பேசி பயனில்லை என்பதை உணர்ந்துகொண்டவர் செயலில் செய்து காட்ட எண்ணி சாந்தியிடம் கொஞ்சி கெஞ்சி ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்தார் முத்தரசி.
சாந்தி சம்மதம் சொன்னதும் நேராக பூமணியிடம் விசயத்தை சுருக்கமாக சொல்லி பயம்கொள்ளவேண்டாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று அவரை தைரியப்படுத்தி சாந்தியை அங்கு விட்டுவிட்டு வந்துவிட்டார்.
நாட்கள் மாதங்களாக ஆறு மாதம் கழித்து மாப்பிள்ளை பார்பது நாள் குறிப்பது என்று அனைத்தையும் அகிலம் நடந்ததாக மூர்த்தியை நம்பவைத்தார்.
இதெல்லாம் உண்மை என்று நம்பிய மூர்த்தி  திருமண நாள் அன்று கோபத்துடன் நேராக கோவிலுக்கு வந்த மூர்த்தி மீண்டும் சாந்தியின் கழுத்தில் தாலி கட்டி அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
அதன் பின் முழு மனது சம்மதிக்காவிட்டாலும் இருவரின் வாழ்விலும் இது ஒன்றே திருமணம் வேறு பொண்ணோ ஆணோ நுழையமுடியாது என்பதை நன்கு புரிந்துகொண்டவர் வாழ்க்கை ஆரம்பித்தனர்.
ஆரம்பித்தும் அவர்கள் நினைத்ததும் குழந்தை பிறந்துவிடுமா என்ன அதன் பின் குழந்தை இல்லாமல் இருக்கவும் முத்தரசி நன்கு பயந்துவிட்டார் எங்கு பொய் சொன்னது உண்மையாக பலித்துவிடுமோ குழந்தை பிறக்காதோ என்று கடும் தீவிரமாக நேர்த்திவைத்து விரதமிருந்து என்று கஷ்டப்படவும் பன்னிரண்டு வருடம் கழித்து தான் சாந்தி குழந்தை உண்டாகி எழிலரசி பிறந்தாள்.
ஒரு பிள்ளையாகி போகவும் அதனால் தான் அவள் நினைத்தது தான் அவ்வீட்டில் சட்டம்  சமையல் சாப்பாட்டிலிருந்து அனைத்து எழில் விருப்படிதான் அங்கு நடக்கும் ஆனால் முத்தரசி தான் கண்டித்து வைப்பார் எழிலை.
ஆனால் இன்றோ அவள் விரும்புபவனை விட்டு தந்தை அவளிற்கு மாப்பிள்ளை பார்த்து பரிசம் போடுவதற்கு தயார்படுத்திவிட்டார்.
தாய் பெண் இருவரின் வேறு வேறு காரணத்தால் விருப்பமில்லாமலே கணேசன் என்னும் ஆணுடன் எழிலரசிக்கு பரிசம் போட்டு தட்டு மாத்தி பூவைத்து சீர் வரிசைகளை பேசி முடித்தனர். 
பரிசத்திற்கு வந்திருந்த நல்லசிவம் அகிலத்தை முத்தரசிதான் வரவேற்று உபசரித்தார் மூர்த்தி அவர்களின் அருகில் கூட வரவில்லை சாந்தியை பார்க்க நேரும் என்று வேலை இருப்பதாக சொல்லி வராமல் நெடுமாறன் நலுவி விட்டார் அவர் போகாததினால் இதுதான் சந்தர்ப்பம் என்று அவரை காரணம் காட்டி வசந்தியும் போகாமல் மீண்டும் அன்புக்கொடியிடம் சண்டை இடுவதற்கு சென்றார் வசந்தி.
அங்கு சென்று கதவை தட்டவும் கதவு தானாக திறக்கவும் உள்ளே சென்றவர் சமையலரையில் அன்பு பால்கலக்கிக் கொண்டிருக்கவும் அவளை அழைக்க சென்றவர் அறை வாயிலில் ஒரு நிழலாடவும் அதை என்னவென்று திரும்பி பார்த்தவர் அங்கு நின்றதை கண்டதும் அலரி துடித்து வெளியே ஓடி மூச்சிறைக்க ஓட்டமும் நடையுமாகவே அவரின் வீட்டிற்கு வந்து விட்டார் சாந்தி.
எதை கண்டு பயந்தார்??.. நினைவு தொடரும்..
அகிலம் பாட்டி
8453
முத்தரசி பாட்டி.8454

Advertisement