Advertisement

அத்தியாயம் இரண்டு .
பூமணி திடகாத்திரமான பெண் கணவன் இறந்ததும் தளர்ந்துபோகாமல் அவரது இரண்டு பெண்களையும் அதே ஊரில் பெரியகுடும்பங்களில் கட்டிக்கொடுத்திருக்கின்றார்.
அடுத்து இருப்பதோ ஒரு ஆண்மகன் அவனிற்கு வயதோ 32 ஆகிவிட்டது இன்னும் திருமணமாகவில்லை அதுவே அவரின் தற்போதைய பெருங்கவலை வயதோ அறுபத்திஐந்தை கடந்துவிட்டது முன்புபோல் வேலைகள் செய்யமுடிவதில்லை. 
மகனிற்கு ஒரு திருமணம் செய்து முடித்துவிட்டால் மருமகளிடம் மகனையும் வீட்டுப்பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு சற்று ஓய்வாக இருக்கலாம்  என்று நினைத்தார்.
ஆனால் காலம் அதற்கு வழிவிட்டால் அல்லவோ அதெல்லாம் நடப்பதற்கு.
கவலையிலும் பெருங்கவலை அவரது மகள் வயிற்றுப்பேத்தி எழிலரசிக்கு இன்று பரிசம் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
ஆனால் ஒருவர் கூட அவருக்கோ தாய் மாமன் என்கின்ற முறையில் அன்புச்செழியனிற்க்கோ ஒரு வார்த்தை சொல்லவில்லை.
பூமணி கணேசன் தம்பதியினரும் அதே வாடிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர்கள் தான் முப்பது  வருடத்திற்கு முன் கணவன் இறந்ததும் மூன்று பிள்ளைகளையும் யாரின் உதவியுமின்றி வளர்த்து இரண்டு பெண்களுக்கும் அதே ஊரில் பெரியகுடும்பத்தில்   திருமணம் முடித்துக்கொடுத்து விட்டார்.
அதில் மூத்த பெண்தான் சாந்தி பெயருக்கு ஏற்றார் போல் சாந்தமானவர்தான் மிகுந்த அமைதியும் பகுத்தறிவும் கொண்டவர் அவரின் இந்த அடக்கமான அழகை கண்டுதான் ஒரே ஊரில் இருக்கும் இரண்டு பெரியகுடும்பத்து ஆண்களுக்கும் அவர்களின் தாயார் பெண்கேட்டுச்சென்றனர். 
ஆனால் யாருக்கு யார் என்று இறைவன் வகுத்தபடிதானே நடக்கும் அதுபோன்றே மூத்த பெண் சாந்தியை அதே ஊரில் இருக்கும் மற்றொரு குடும்பத்தில் திருமணம் செய்துவைத்தார்.
இரண்டாவது  பெண் வசந்தி அவரோ தாயின் ஏழ்மை நிலையை புரிந்துகொள்ளாமல் அழகு ஆடம்பரம் என்ற குணத்தில் ஊறி வளர்ந்துவிட்டார் அது பூமணியை மிகவும் யோசிக்கவைத்தது ஒருவழியாக அவரால் முடிந்தளவு வசந்திக்கும் செய்தார்தான்.
 ஆனால் அது வசந்திக்கு பகட்டாக தெரியவில்லை உடைகளோ உணவோ எதுவும் பிடித்தமில்லை இதனை பார்த்த சாந்தி அவருக்கு புதிய உடை எடுக்கும் பணத்தையும் தாயிடம் சொல்லி தங்கைக்கே கொஞ்சம் நல்லதாக எடுத்துகொடுக்க சொல்லுவார்.
இது பூமணிக்கு பிடிப்பதில்லை அவர் இரண்டு பெண்களுக்கும் ஒரே மாதிரியே அவருக்கு தகுந்த வசதியில் பொங்கல் தீபாவளிக்கு உடை எடுத்துக்கொடுப்பார்.
அதேபோன்று தான் திருமணத்திலும் நெடுமாறன் சாந்தியைதான் அவரின் அன்பான அடக்கமானகுணத்துடன் இருப்பதால் விரும்பி பெண்கேட்க அவரது வீட்டாரிடம் கூறினார். 
ஆனால் இந்தவிசயம் கேள்விப்பட்ட முத்தரசியோ சாந்தியை தன் வீட்டிற்குதான் மருமகளாக்கவேண்டும் என்று முடிவுடன் அவர்களுக்கு முன் பெண்கேட்டு சென்று விட்டார்.
ஆனால் தாயின் விருப்பம் மகனிற்கு பிடிக்கவில்லை அவரோ அமைதியை விட அழகைதான் விரும்பினார்.
அவர் சற்று கோபக்காரர் சட்டென்று எதிரில் பேசுவோரின் மனதை காயப்படுத்தும் குணமுடையவர் அதனால் அவரை மணந்தால் தனது ஆசைப்படி வாழமுடியாது என்று தனது அக்கா சாந்தியிடம் கூறி தனக்கு நெடுமாறனை மணம்முடித்து தருமாறு கேட்டார் வசந்தி.
இந்த பேச்சு பூமணிக்கு பிடிக்காமல் போகவும் அவர் வசந்தியை கண்டித்தார்.
அது பிடிக்காமல் அவரின் பிடிவாதத்தை சாதிப்பதற்க்காக வசந்தி அரலி விதையை அரைத்து உண்ணும் சரியான நேரத்தில் பதறித்துடித்து வந்து பூமணியும் சாந்தியும் தடுத்து விட்டனர்.
இதனை பார்த்து பூமணி மிகவும் மனம் சோர்ந்துவிட்டார்
இனி ஓன்றும் செய்யமுடியாதென்று முத்தரசி கேட்டபடியே சாந்தியை அவரின் மகன் சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு இரண்டு வருடம் கழித்தே வசந்தியை நெடுமாறனிற்கு கட்டிவைத்தார்.
அதன் பின் அவரும் மகன் செழியனுமே அந்த அழகிய சிறு கூட்டில் வாழ்கின்றனர் இது நாள் வரை தந்தை இறக்கும் நேரம் இரண்டே வயதான செழியன் வளர வளர தாயின் கஷ்டத்தை நன்கு அறிந்து மூத்த அக்கா சாந்தியின் குணத்தையே பின்பற்றி அன்பாகவும் பகுத்தறிவோடும் வளர்ந்தான்.
அவனிற்கு இருபத்திஐந்து வயதில் இருந்தே பூமணி பெண் தேடுகின்றார் அப்போது தேடினால் சரியாக ஒரு வருடமோ இரண்டு வருடமோ தாமதமானாலும் வயது சரியாக இருக்கும் என்று நினைத்து தேடலை ஆரம்பித்தார்.
அவர் வசதியாக இருந்து பெண்களுக்கு சீர் செய்து திருமணம் செய்யவில்லை பெண்னெடுத்த குடும்பம் வசதியில்லாததனால் பெண்மட்டும் போதும் வேறு ஒன்றும் கடன்பட்டு செய்யவேண்டாம் என்றுவிட்டனர் இரண்டு குடும்பமும்
அதனால் அவருக்கு வரும் மருமகளும் அன்புடனும் குடும்பத்தை நன்கு வழிநடத்தும் துறு துறுப்பான பெண்ணாகவும் தான் பார்த்தார் பூமணி.
தம்பிக்கு பெண் பார்க்கும் படலம் கேள்விபட்டு தாயை கோவிலில் சந்தித்து சாந்தி அவரது விருப்பத்தை கூறினார்.
தனது பெண்ணிற்க்கு தற்போது பதினைந்து வயது இன்னும் மூன்று வருடம் சென்றதும் தனது பெண் எழிலரசியை தம்பிக்கு திருமணம் முடித்துக்கொள்ளலாம் அதுவரை பெண் தேட வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார் சாந்தி.
அவர் இவ் விஷயம் சொன்னதில் இருந்து நடந்தால் நல்லதுதான் என்று எண்ணினார் பூமணி.
தாயும் அக்காவும் பேசியது செழியனுக்கு தெரியவந்தது அப்போதிருந்து இது நடக்காத ஒன்று என மனதில் பதித்துக்கொண்டான்.
தாயிடமும் கூறினான் “ம்மா இது இந்த காலத்துல நடக்காதுமா மூர்த்தி  மாமா ஒரு காலமும் பண்ணித்தரமாட்டாரு அவங்க அளவுக்கு  நம்மகிட்ட ஒண்ணும் வசதியில்லம்மா சும்மா நீயே ஆசையை வளர்த்து ஏமாந்துக்காத அம்புட்டுதான் சொல்லுவேன் மற்றது நீ நினைக்கிற மாதிரி உன் பேத்தியும் இல்ல அக்காவோட எந்த நல்ல பழக்கமும் அவளிடம் இல்லமா மாமா நல்லா செல்லம் குடுத்து வளர்த்து வச்சிருக்காரு அவளுக்கு இந்த வீடோ நானோ செட்டாகவே மாட்டோம் இதுதான் எதார்த்தமான உண்மை அத மனசில வச்சிக்கிட்டு நீ உனக்கு மருமகளை தேடு சரியா கிடைக்கலன்னா நான் இப்புடியே உன்னோடவே இருந்துடுவேன் போதுமா.” என்று உண்மை நிலையை தாயிடம் எடுத்துக்கூறினான் செழியன்.
ஆனால் பூமணியோ தனது மகள்வயித்து பேத்தியே இந்தவீட்டு மருமகளாக வந்தாள் சொந்தம் விட்டுப்போகாது அடிச்சாலும் புடிச்சாலும் சொந்த ரெத்தம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு விட்டுக்கொடுத்து வாழுவாங்களே என்ற நினைப்பை மனதில் ஆழமாக பதித்துவிட்டார்.
அதோ இதோ என்று செழியனின் 32 வயதிலும் அவனுக்கு இன்னும் திருமணம் சரியாக அமையவில்லை அந்த கவலை அவரது மனதை அரிக்கவும் இன்றானால் எழிலரசிக்கு பரிசம் வேறு போட வருகின்றார்கள் தங்களை அழைக்கவில்லை என்று நினைத்து மிகவும் சோர்ந்துபோனார் பூமணி.
“என்ன மாமா மூஞ்சு ரொம்ப அழகா இருக்கு என்ன மேட்டரு “
” டேய் மாப்புள இன்னை நம்ம சூப்பிய பரிசம் போட வாராங்களாம் அத நினைச்சி அம்மா ரொம்ப கவலையா இருக்குதுடா நானும் எடுத்து சொன்னேன் இது சரிவராதுனு அக்கா சொல்லிச்சாம்னு அதயே நினைத்து இன்னும் எனக்கும் கல்யாணம்  முடியமாட்டுதுனு எல்லாதையும் போட்டு குழப்பிக்கிட்டு சோர்ந்துபோய் இருக்குடா மணி அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு எனக்கும்.”
” அட என்ன மாமா நீ இப்போ என்னை எடுத்துக்கோ உன்னவிட ரெண்டு வயசு கம்மி உனக்கு அக்கா மகன் ஆனா ஆரம்பத்துல உன் அக்கா பண்ணின ரகளையால ஒரு கல்யாணம் நடந்துது இப்போ நேத்து  அந்த சுண்டெலி ஒரு கூத்துபண்ணி கல்யாணம் நடந்துச்சி ஆனா கடைசியில என்னாச்சி நீ கட்டாம பிரம்மசாரியா இருக்குற நான் கட்டி நாலு வருசமாக பிரம்மசாரியா இருக்கிறேன்.”
” மொத்தத்துல மாவு ஒண்ணுதான் ஆனா பண்ணுற டிபன் தான் வேற கவலைய விடு மாமு அம்மாச்சிய நான் பார்த்துக்கிறேன் நீ வா நாம கேட்டுருந்த நெல் வந்துருக்குதாம் அந்த மாணிக்கம் பய நமக்கு தரக்கூடாதுனு சொல்லுறானாம் அழகன் வந்து சொல்லிட்டு போறான் நாம யாருனு அவனுக்கு ஒரு காட்டு காட்டினாதான் பய சரிப்பட்டு வருவான் மாமா.”
” அது இருக்கட்டும் போவோம் உங்களுக்கும் சொல்லலயாடா மணி சூப்பிக்கு இன்னைக்கு பரிசம் வாங்கன்னு”
” சொல்லாம இருப்பாங்களா??.. தாத்தாவுக்கு வந்து சொல்லிட்டுபோனாங்களாம்னு கவி சொன்னான் சாயந்தரம் அப்பத்தாவும் தாத்தா அம்மா அப்பா எல்லாரும் போவாங்கபோல எனக்கு யாரும் சொல்லிக்கல மாமா.”
” மூர்த்தி மாமா ஏன்டா இப்புடி இருக்குறாரு பாவம் சாந்தி அக்காவும் முத்து அத்ததான் கொஞ்சம் அக்காவுக்கு ஆறுதலாக இருக்குது இல்லன்னா அக்கா நிலமையை யோசிச்சாலே என்னவோனு இருக்குது உங்க அம்மா நல்லாத்தான்டா மணி திட்டம்போட்டு காய் நகர்த்தியிருக்குது நான் மட்டும் விபரம் தெரிஞ்ச பெரியவனா இருந்திருக்கனும் வசந்தியக்காவ ஒரு வழி பண்ணிருப்பேன் மாப்புள அது பண்ணின ஒரு வேலையால அத தவிற மற்ற எல்லாரும் கஷ்டபடுறாங்க அது இன்னும் அக்காவும் புரிஞ்சு நடந்துக்கதான் மாட்டேங்குது என்னத்த சொல்ல மணி.” என்று அன்புச்செழியன் நீண்ட பெருமூச்சை விட்டான் அவனது அக்காக்களின் வாழ்வை நினைத்து.
” நம்ம கைல ஒண்ணும் இல்ல மாமா நீ ஒரு வார்த்த சொல்லு இன்னைக்கே வீடு பூந்து எழில தூக்கிட்டு வந்துடுவோம் நானும் கவி அழகன் எல்லாருமா சேர்ந்து என்ன சரியா??. பண்ணிறளாமா??.. மாமா.”
” அட நீ வேற மணி சும்மா இரு நாம இப்புடி பேசுறோம்ன்னு நூல் கிடைச்சாலே மூர்த்தி மாமா தாம்தூம்ன்னு எகிறி குதிப்பாருடா.”
” அவரு கிடக்குறாரு சத்தம் போடதான் ஆள் வேற ஒண்ணும் இல்ல சரி நீ சொல்லு எழில நீ மனசுல நினைக்கிறியா மாமா பிறந்ததுல இருந்து ஒண்ணு மண்ணா ரெண்டு பேரும் திரியிறோம் மாமா மருமகனா இல்லாம நண்பர்களா ஆனா இதுவரை நீ உன் மனசை திறந்து என்கிட்ட எதுவுமே பேசினதே இல்ல உண்மையை மட்டும் சொல்லு மாமா.”
” உண்மையிலயே ஒரே ஊர்ல இருக்குறோம்னுதான் பேரு ஆனா நான் சூப்பிய பார்த்து கிட்டதட்ட ஒரு வருசம் இருக்கும் மாப்புள கடைசியா போன திருவிழா நேரம் பார்த்தது அதுக்கு பிறகு இன்னும் நேர்ல பார்க்கலடா ஆனா அம்மாகிட்ட சொன்னதுதான் சூப்பி நம்ம வீட்டுக்கு செட்டாகாது நல்லா படிச்சவன வெளியூர்ல பார்த்துருக்காங்கலாம் அவன கட்டிக்கிட்டு நல்லா இருக்கட்டும். இனி இந்த பேச்சே வேணாம் மணி வா உன்னோட வீட்ட ஒரு எட்டு போய் மோர் குடித்துட்டு நெல்ல பார்க்க போகலாம்.”
” சரி மாமா ஏதோ சொல்லுற ஆனா எழில உன்ன விட யாரும் நல்லா பார்த்துக்க மாட்டாங்க எதுவோ நல்லது நடக்கட்டும்.” என்று மணிமாறன் அவனது தாய் மாமா அன்புச்செழியனிற்க்கு ஆறுதல் சொல்லி அவனது வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.
” அன்பு “
” அட வாங்க சித்து உள்ள வாங்க இருங்க குடிக்க மோர் எடுத்துவாறேன்.”
” பாருடா மாப்புள நாம அதுக்குதான் வந்துருக்கோம்னு தெரியாமலே அன்பு எடுத்துட்டு வரப்போகுது இதுதான் அன்பை காட்டுற பொண்ணுங்களோட மனசு ‘தாய்க்கு பின் தாரம்ன்னு’ பெரியவங்க சும்மாவா சொன்னாங்க அம்(மா)திரி பொண்டாட்டியால மட்டும்தான் சுயநலமில்லாம நமக்காக வாழமுடியும் அந்த வகையில உன் மனசு அறிந்து நடக்குற பொண்ணு அன்பு நீ குடுத்து வச்சவன் மணி கடந்த காலத்த மறந்துட்டு உனக்காவே உன்னை தேடி வந்துருக்கிற அன்பை நல்லபடியாக பார்த்து சூதானமாக பொழச்சிக்க அம்புட்டுதான் சொல்லுவேன் நான்.”
” ஐயோ மாமா சுண்டெலிக்கெல்லாம் அம்புட்டு சீனே இல்ல நீ வேற சும்மா இரு இவ செய்த காரியம் இலேசுல மறந்து ஏற்றுக்கொள்ளுற மாதிரியா இருக்குது இதுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லனும் மாமா என் கைல எதுவும் இல்ல இந்தா சுண்டெலி வருது பேசாம இரு.”
 ” இந்தாங்க அன்பு சித்து “
அன்பு கொடுத்த மோரை வாங்கி குடித்த செழியன் அஹா ஓஹோ என்று புகழ்ந்தான் ” ஏன்மா அன்பு எல்லமே கச்சிதமாக நல்ல ருசியா இருக்குதுமா அடிச்சு கொழுத்துற வெயிலுக்கு அப்புடி இதமா இருக்குது இத குடிக்குறதுக்காகவே நான் தினமும் வருவேன்.” என்று செழியன் சொல்லவும்.
இதை கேட்ட மணி தனது மாமனை மிகுந்த பாசமாக பார்த்திருந்தான்.
” இதெல்லாம் சிலருக்கு தெரியுறதில்ல சித்து குடுத்தாலும் ஏதோ நஞ்சு குடிக்குறது மாதிரி மூஞ்ச சுழிச்சிக்கிட்டுதான் குடிப்பாங்க இன்னும் நல்லதா நாலு சொல்லிக்குடுங்க உங்க மருமவனுக்கு அப்பயாவது புத்தி தெளியட்டும்.” என்று கொதித்துப்போய் இருந்த மணிமாறனை இன்னும் வெறுப்பேற்றினாள் அன்புக்கொடி.
” ஏய் என்ன லந்தா இந்த ஜாடை பேசுறதெல்லாம் என்னிடம் வச்சிக்காத நான் ஒருவிதமான ஆளு வாயெல்லாம் பேசாது கைதான் பேசும் சொல்லிட்டேன் இதுதான் கடைசி இது மாதிரி இனி அமைதியா போகமாட்டேன்.”
” யாரு இங்க ஜாடை பேசினா மாமோய் நீங்க என் எதிர்லதான் இருக்குறிங்க உங்கள பத்திதான் சித்துக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறேன் இது நம்ம மூணு பேருக்குமே தெரியும் இது என்னத்த நான் ஜாடை பேசினதை கண்டிங்கலாம் நீங்க ம்கூம்.” என்று முகவாயை தோளில் இடித்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் அன்பு.
” ஏன்மா அன்பு எங்க கலை தமிழ் ரெண்டு சுட்டீஸும் சத்தமே இல்ல.”
” அது சித்து ராசாத்தியம்மா வந்து தடுப்பூசி போடனும்னு தூக்கிட்டு போயிடுச்சு நானும் வாறேன்னு சொன்னேன் அது சின்னையா வீட்டுக்கு இடையில வருவாறாம் இருக்கட்டுமாம்னு சொல்லிட்டு தூக்கிட்டு போயிடுச்சு.”
” ஏன் மாமா இதுல என்ன தப்ப கண்டாளாம் ராசாத்தியம்மா தான் ரெண்டு வருசமாக குழந்தைகளை அவுகதான் வளர்த்து பார்த்துகிறாக அப்போ அவுகளுக்கு தானே தெரியும் எப்போ என்ன பண்ணணும்னு இதுல மூஞ்ச தூக்குறதுக்கு என்ன இருக்காம். நீ வா மாமா நேரமாகிட்டு அந்த மாணிக்கம் பயல ஒரு கை பார்க்கனும்.” என்று மணி தனது மாமனிடம் பேசிய படியே எழுந்து வெளியே சென்றான்.
அன்று நள்ளிரவு தற்போதுதான் எழில் உறங்க ஆரம்பித்தாள் அவளது தாய் சாந்தி பேசியதை இன்று பொறுமையாக கேட்டிருந்தாள் அதனால் அதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தவள் அப்போதுதான் கண்ணயர்ந்தாள்.
அந்த இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில் அவளது அறையின் ஜன்னல் தட்டப்பட்டது ஆழ்ந்த உறக்கமில்லாமல் இருந்ததால் உடனே கண்முழித்தாள் எழில்.
எழிலரசி.
8437
அன்புச்செழியன்.
8438
சாந்தி.
8439
முழித்தவள் யாரென்று தெரியாமல் திறக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவும் தொடர்ந்து தட்டப்பட்டது.
சரி யாரென்று பார்கலாம் என்று திறந்தாள்.” ஐயோ நீயா??. இந்த நேரம் வந்திருக்க போ யாரும் பார்த்தா பிரச்சினையாகிடும் சீக்கிரம் போ இங்கயிருந்து.” என்று பதட்டதுடன் வந்தவனை துரத்தினாள் எழிலரசி.
” நீ இப்போ வெளிய வரலன்னா நான் கையை அறுத்துப்பேன் இன்னைக்கு வந்தவங்களுகே உன்னை முடிக்கப்போறாங்களாம்னு பேசிக்கிறாங்க நீ உடனே வா நாம எங்கயாவது போகலாம்.” என்று கையில் அறுப்பதற்கு வசதியாக பிளேட் வைத்தபடி நின்றான்.
” உன்னோட இதே தொல்லையா போச்சி எங்கயும் போகவேணாம் நீ முதல் இங்கயிருந்து போ இல்லன்னா சத்தம் போடுவேன்.”
” நீ சத்தம் போட்டா நான் என் கையிக்கு பதிலா கழுத்தை அறுத்துப்பேன் உனக்கு பரவாயில்லையா? உன்னோட வாழமுடியாட்டி உன்னால சாகவாவது செய்றேன் சந்தோசமா சரியா?? எழில்.” என்று மிரட்டவும் இவளும் பயந்து யாருக்கும் சத்தம் கேட்காத படி மெதுவாக பூனை பாதம் வைத்து வெளியே வந்துவிட்டாள் எழிலரசி.
வந்தது யார்??.. சுவாசம் தொடரும்..

Advertisement