Advertisement

அத்தியாயம் ஒன்று.
அதிகாலை நான்கு முப்பது மணி மெல்லிய சத்தம் வைத்துதான் அவ்வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது.
விடியக்காலை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாததால் மெல்லிய சத்தமும் அதிகமான சத்தாமாக கேட்டது  அதனால் அந்த சத்ததில் கண் முழித்தவன் “என்னடா இது நம்ம வீடுதானா?? சாமி பாட்டெல்லாம் போகுதே” என்று நினைத்துக்கொண்டு அவனது வழமை போன்று நேற்றைய நாளை பற்றி என்ன நடந்தது என்று சிந்தித்துக்கொண்டு இன்றைய நாள் என்ன வேலை செய்யவேண்டும் என்பதை வரிசை படுத்திக்கொண்டே கண்ணை கசக்கி தூக்கத்தை விரட்டி விட்டு எழுந்து அவனது இரண்டு பிள்ளைகளையும் அவன் மேல் இருந்து விளக்கி அவர்கள் எழுந்து கொள்ளாதவாறு அணை வைத்துவிட்டு எழுந்து அவனது காலை கடன்களை முடித்துவிட்டு அறையை விட்டுவெளியே வந்தான்.
வந்தவன் ஒரு வித லயத்தோடு அப்படியே நின்று விட்டான். ஏன் என்றால் அவன் இவ்வீட்டிற்கு குடிவந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்றுவரை அவ்வீட்டில் சாமியறை திறந்து இருந்தோ ஒரு விளக்கு ஏற்றி பூவைத்தோ அவன் பார்த்ததுமில்லை ஆனால் இன்றோ வீடு சாம்பிராணி புகையுடன் ஒருவித மங்களகரமாக இருந்தது இது போன்று ஒரு சுகந்தத்தை அவன் இதுவரை அனுபவித்ததுமில்லை.
 ஒரு சிறியளவில் சாமியறை இரண்டு படுக்கறை ஒரு ஹால் ஒரு பின்கட்டு சமையலறை. சிறிய வெளிமுற்றம் அதனை அடுத்து சிறிய தோட்டம் அதில் மரக்கறி பழவகை , பூ மரங்கள் என்பன அவனது தேவைக்கான அளவு மட்டுமே வீட்டில் செய்திருக்கின்றான்.
அவனது வேலையை பார்பதற்கு அவன் சென்று விடும் முன் வந்து  சமையல் வேலை பிள்ளைகளை பார்பது என்று அனைத்து உள்வேலைகளையும் அவன் வீடு திரும்பும் வரை ராசாத்தியம்மாள் பார்த்துக்கொள்வார் .
அவன் வந்ததும் இரவு உணவை எடுத்து அவன் சாப்பிடுவதற்கு வசதியாக வைத்துவிட்டு பிள்ளைகளுக்கு பால் கலக்குவதற்கு சுடுதண்ணீர் பால் மா ஏனைய தேவையானவற்றை அவன் தேடாத படி கண்முன் எடுத்துவைத்துவிட்டே செல்வார் ராசாத்தி..
அறையைவிட்டு நேரடியாக சமையலறைக்கு சென்றான் இன்னும் சற்று நேரத்தில் வழமையான நேரத்திற்கு அவனது இரண்டு பெண் குழந்தைகளும் அலாரமே இன்றி அவனை எழுப்பிவிட்டுவிடுவார்கள் அவ்வளவு சத்தமாக கத்தி அவர்களின் பசியை தெரியப்படுத்துவார்கள்.
சிறுபிள்ளைகள் அதிகம் கத்தினால் தொண்டை காய்ந்துவிடும் என்பதை ராசாத்தி சொல்லிருந்தமையால் அவனது பிள்ளைகளுக்கு  அந்நிலையை அவன் வரவிட்டது இல்லை அதற்கு முன்பே அவன் இதமான சூட்டில் பாலை கலந்து அவனது காயப்பட்ட மனதை இளம் புன்னகையினால் குளிர்விக்கும் இளவரசிகளின் பசியை தீர்த்துவிடுவான்.
அவனே சமையல்லறையில் அனைத்தையும் செய்து பால் கலப்பான் இன்றானால் அவன் வரும்முன்பே பால் கலந்து குடிப்பதற்கு ஏற்றவாறு இளம் சூட்டில் வைத்திருந்தாள்.
யார் இதை செய்திருப்பார்கள் என்று தெரியும் அவனிற்கே அதனால் தற்போது அவனது கோபத்தை காட்டுவதற்கு நேரமில்லை அந்தபாலை கையில் எடுத்துக்கொண்டு அறையை நோக்கி சென்றான்.
அங்கோ அவனது பெண்ணரசியில் மூத்தவள் தமிழ்ச்செல்வி இளயவள் கலைச்செல்வி இருவரும் தாங்கள் இரட்டையர்கள் என்பதை உண்மை படுத்துவது போன்று படுக்கையில் எழுந்து அமர்ந்து அழுகைக்கு தயாரானார்கள் அவனது இரண்டு வயதேயான பெண்ணரசிகள்..
அவர்களை ஏமாற்றாமல் சரியான நேரத்திற்கு பால் குடிக்கவைத்து துடைத்துவிட்டு அவர்களை மீண்டும் வசதியாக படுக்கவைத்துவிட்டு வெளியே வந்தான்.
நேரம் ஆறு மணியை நெருங்கியது அப்போது ” அடியே எடுபட்ட நாயே எங்கடி  இருக்கிற வெளிய வாடி வேலைக்கார நாய்க்கு வசதியான வாழ்க்கை கேட்க்குதோ??.. ” .என்று வசந்தி அகங்காரமாக கத்தியபடி விரந்தைக்கு வந்துவிட்டார்.
சத்தம் கேட்டு அவரின் முன் வந்து நின்றாள் அன்பு.
“ஏய் என்னடி தெனாவெட்டா வந்து நிக்கிற வேலை செய்ய வந்த இடத்துல பொண்டாட்டி இல்லாமல் புள்ளையோட என் மகன் இருக்கவும் வளைச்சு போடலாம்னு பார்த்தியோ?.. அது நான் இருக்கிறவரை நடக்காது ஒழுங்கு மரியாதையா நீயே வெளிய போய்டு இல்லான்னா உன்னை எப்புடி துரத்திவிடுறதுன்னு எனக்கு தெரியும் பார்த்துக்கோ” என்று அன்பின் தலைமுடியை கொத்தாக கையில் பிடித்தபடி கத்திக்கொண்டிருந்தார் வசந்தி.
வலியை முகத்தில் காட்டாத படி நீ என்ன வேண்டும் என்றாலும் செய்து திட்டிக்கொள் என்று திடமாக நின்றிருந்தாள் அன்பு.
”  என்ன சத்தம் இங்க என் பொண்ணுங்க தூக்கம் கலைந்திடும் வாங்க வெளியே  முதல்ல அவளோட முடியை விடுங்க யாரு உங்களை என் வீட்டுக்கு வரச்சொன்னது முதல் என்ன தைரியத்தில வந்திங்க வந்தது மட்டும் இல்லாமல் அவளோட வீட்டுலயே அவளை திட்டி வெளிய போகச்சொல்ல நீங்க யாரு கையை எடுங்கன்றன்ல ” என்று நான் உன் மகன் உனக்கு சலைத்தவனில்லை என்று காட்டினான் மாறன். 
“டேய் மணி உன்னை ஏமாத்தினவளுக்கு நீ பரிஞ்சுபேசுறியா இது நல்லா இல்ல சொல்லிட்டேன் இந்த வேலைக்காரிக்காக உன் அம்மாவையே அசிங்கப்படுத்துறியா நீ  நேத்து அத்தின பேருக்கு முன்னால வாய் கூசாம ஒரு பொட்டச்சி பொய் சொல்லி உன்னை தலைகுனிய வச்சி கண்டவனெல்லாம் உன்னை கை நீட்டி பேசுறமாதிரி பண்ணிட்டாளேன்னு பெத்த மனசு கொதிச்சுபோய் வந்திருக்கிறேன் நீ என்னடான்னா இவளுக்கு பரிஞ்சு பேசி என்னை துரத்தி விடுறியா?? “
” நீங்க எனக்கு நம்ப வச்சி பண்ணின துரோகத்தைவிட இது பெரிசா தெரியல எல்லாருமா சேர்ந்து என் வாழ்க்கையை ரொட்டி மாவு மாதிரி உங்க விருப்பத்துக்கு வடிவமைச்சி விளையாடுறிங்க  பண்ணவேண்டியது எல்லாத்தையும் பண்ணுங்க இதுக்கு முடிவு என்னன்னு நானும் பார்க்கிறேன்.”
” நான் இல்லாதப்பவும் சரி இருந்தாலும் இனிமே இப்புடி நீங்க வந்து கத்தி பேசுறது இதுதான் கடைசியாக இருக்கனும். நீங்க இங்க வராமல் இருந்தாலே நான் நிம்மதியாக என் வேலையை பார்பேன்.  என் வாழ்க்கை நான் பார்த்துப்பேன் என்ன நான் சொல்லுறது புரிஞ்சுதா??.. இப்ப போங்க அங்க போய் உங்க மாமியார்கிட்ட உங்களோட மாமியார் தனத்தை முடிஞ்சா காட்டிங்கோங்க.”
என்று மாறன் கடுகடுப்பாக முகத்தை வைத்தபடி அவனது தாயை அனுப்பிவைத்தான்.
வசந்தியும் அன்பை எதுவும் பண்ணமுடியவில்லை என்ற கோபத்தில் அவளை திட்டியபடியே இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவர்களின் பெரியவீட்டிற்கு சென்றார்.
மதுரை வாடிப்பட்டி கிராமம் அங்கு இரண்டு பெரியகுடும்பம் உள்ளது அதில் ஒரு குடும்பத்தலைவர்தான்    நல்லசிவம் அவரின் மனைவி அகிலம் இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என்று இரண்டு பிள்ளைகள்.
அதில் பெண்ணை பக்கத்து ஊரில் அவர்களின் சம அந்தஸ்து உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்தனர் பத்து வருடத்திற்கு முன் ஏனெனில் முதல் ஆண் பிறந்து பதினைந்து வருடம் கழித்து ஒரு பெண்பிள்ளை வேண்டும் என்று மீனாட்சியம்மனிடம் வேண்டி கேட்டதும் பெண் பிள்ளையாக அழகம்மை பிறந்தார்.
முதல் ஆண்பிள்ளை நெடுமாறன் அவரின் மனைவி அவரின் குணத்திற்கு நேர் எதிராக அவர் ஆசைபட்ட பெண்ணிற்கு பதிலாக வசந்தியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் அதில் மூத்த ஆண் நம் நாயகன் மணிமாறன் 30வயது ஆன திராவிட நிறம் கொண்டு தீட்சன்ய பார்வையுடன் கூடிய கட்டிளம் காலை.  
இளயவன் கவிமாறன் 25 வயது இளம் கன்று நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கும் புத்திசாலி.
இதுவே மணிமாறனின் அழகான குடும்பம் ஆனால் அவனது தாய் வசந்தி பண்ணிய துரோகத்தின் விளைவினால் கடந்த மூன்று வருடத்திற்கு முன் இந்த அழகிய கூட்டை விட்டு பிரிந்து அவனிற்க்கென்று ஒரு சிறிய தனிக்கூட்டை அமைத்துக்கொண்டு அவ் ஊரிலேயே வேறு ஒரு சிறிய வீட்டை வாங்கி பிரிந்து சென்று விட்டான் மணிமாறன்.
வீடு நெருங்கவும் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு உள்ளே சென்றார் வசந்தி.
” என்னடியம்மா இந்த காலையில இப்புடி வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வாறிங்களாம்??..  அம்மணி என்ன நான் கேக்கிறேன் நீ மசமசனு நின்னா ஆச்சா வாயத்தொறந்து பதில் சொல்லுடி முட்டை கீழே விழுந்துறாது.”
” அது வந்து மணி வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டுவாறேன் அத்த ” என்று அன்பிடம் காட்டிய ஆகங்கரத்திற்கு நேர் எதிராக தனது மாமியாரிடம் பம்மினார் வசந்தி.
” ஏனாம் அங்க போய் உன் மருமககிட்ட மாமியார் தனத்தை காட்டிட்டு வாறிங்களாக்கும். இங்க பாருடி இனிமேலும் அம்மா மாமியார்ன்னு நீ அந்த வீட்டுக்கு போய் என் பேரன் வாழ்க்கையில அத இத பண்ணி குறுக்க நின்னு அதுகல கஷ்டப்படுத்தின அப்புடி எதுவும் இனி நடந்திச்சி இந்த வயசுலயும் நீ உன் அம்மா வீட்டுக்கு போகவேண்டியது வரும் பார்த்து சூதானமாக இருந்துக்கோ அம்புட்டுதான் சொல்லுவேன்.”
  
“இவளே அடங்கமாட்டா இவ ஒரு அடங்காபிடாரியை என் பேரனுக்கு கட்டிவச்சி அவன் வாழ்க்கையில ஒரு சுகம் காணும் முன்ன கையில ரெண்டு பொண்ணுங்களை வச்சிகிட்டு தவிக்கிறானே இங்கயும் வராமல் புள்ள ஒத்தையில சிரமபடுறானேன்னு நாங்க தவிக்கிறோம் தங்க விக்கிரகமாட்டம் அந்த மீனாட்சி தாயே என் பேரனுக்கு ஒரு பொண்ணை முடிச்சு போட்டுடாளே இனியாவது அவனோட வாழ்க்கை செழிக்கட்டுமேன்னு நாங்க பரிதவிச்சா அதுல கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பெத்த நீ நேத்தும் அந்த அன்பு பிள்ளையை எப்புடி திட்டி தீர்த்த இன்னைக்கும் அங்கயே போய் உன்னோட வேலையை காட்ட போயிட்டியாக்கும் இனி நீ நாங்க யாரும் இல்லாமல் என் பேரன் வீட்டு வாசல்படி மிதிக்ககூடாது அம்புட்டுதான் சொல்லுவேன் போ போய் காப்பி தண்ணி சூடா கலந்து எடுத்துட்டு வா உன்னோட கத்தியே தொண்டை வரண்டு போயிட்டு.” என்று செருமியபடி தனது கணவனுக்கு வெத்திலை இடித்துக்கொண்டிருக்கின்றார் அகிலம்.
“அப்பத்தா என்ன காலங்காத்தால மாமியா மருமக சண்டையா ??”
“அட இல்ல பேரான்டி உங்க அம்மாகாரி ஏதோ சீமையில இருந்து வந்து இந்த வாடிப்பட்டில குதிச்சதாட்டம் உன் மதினி அன்புக்கொடியை போய் திட்டிட்டு வந்திருக்கா நீயே சொல்லு இது சரியா?” 
” சரி இல்லதான் அப்பத்தா ஆனா அம்மா இனிமேலுமா திருந்தும் நீ தப்பு பண்ணிட்ட அப்பத்தா அப்பாக்கு எப்புடியாவது சாந்தி பெரியம்மாவயே கட்டி வச்சிருக்கனும் அப்புடி நடந்திருந்தா நம்ம குடும்பம் இந்நேரம் சந்தோஷமாக இருந்திருக்கும் அண்ணனும் வீட்ட விட்டு வெளிய போயிருக்காது.”
” என்னடா பேரான்டி பண்ணுறது எல்லாம் விதி நாங்க சாந்தியதான் கேட்டுப்போனோம் ஆனா அந்த முத்தரசி கிழவி முந்திட்டாளே யாருக்கு யாருன்னு விதிச்சபடிதான் நடக்கும் எங்க காலம் முடியுறதுக்குள்ள என் ராசா மணி புள்ளகுட்டியோட இந்த வீட்டுக்கு வந்திடனும் அது மட்டும்தான் என் ஒரே ஆசை அதையும் சீக்கிரமாக அந்த மீனாட்சி தாய்தான் பண்ணிக்கொடுக்கனும்.” என்று நீண்ட பெருமூச்சு விட்டபடி இடித்த வெத்திலையை தனது கணவர் நல்லசிவத்திடம் கொடுத்தார் அகிலம்.
இதை அனைத்தும் கேட்டபடி இருந்த கவிமாறனோ ” சரி அப்பத்தா யோசிக்காத எல்லாம் நல்லபடி நடக்கும் நான் மில்லுவரைக்கும் போயிட்டு மாமாவை ஒரு எட்டு பார்த்துடு மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடுவேன்.”
” ஏன்யா கவி காலம்பர இன்னும் சாப்புடாம போறியேப்பா”
” சாப்புட எதுவும் இல்ல அப்பத்தா நான் அண்ணவீட்ட போய் மதினி எதுவும் பண்ணிவச்சிருக்கும் அங்கபோய் சாப்புடுறேன்.” என்று கூறியபடியே கவி அவனது ஹீரோவில் ஏறி சென்றுவிட்டான்.
” என்னத்த பேச வெளியபோற புள்ள வெறும்வயித்தோட போகுது அதெல்லாம் பார்க்கிறத விட்டுபுட்டு நாட்டாம பண்ணபோயிட்டுவாறாக இந்த வீட்டு மகராசி இனி இந்தவீடு என் பொறுப்புல இருந்தமாதிரி செழிப்பாக இருக்கனும்ன்னா அன்பு இங்க வந்தா தான் முடியும் அதுக்கு உண்டான வேலையைதான் நாம இனி பார்க்கனும் என்னங்க நான் சொல்லுறது.”
” நீ ஒரு விசயம் சொல்லி நான் எப்ப அதை மறுத்துருக்கேன் அகிலா நீ முடிவெடுத்து ஒண்ணு பண்ணினா அது தப்பாகாதுன்ற என்னோட நம்பிக்கையை நீயும் அறுபது வருஷமாக காப்பாத்திக்கிட்டுதான் வார அதுனாலதானே இதுக்கு முதலும் அன்பு விசயத்தை நீங்க முடிவெடுத்தது எதுலயும் நான் தலையிடவே இல்லயே இனியும் நீ உன்னால முடிஞ்ச நல்லத செய்து உன் பேரனுகளோட வாழ்க்கையை செழிக்கவை யாருவேணாம்ன்னா” என்று அவரது சம்மதத்தை தெரிவித்துவிட்டு எழுந்து உள்ளே சென்றார் நல்லசிவம்.
“ஏய் என்னடி கொழுப்பா இதுநாள் வரை நீயா எனக்கு சாப்பாடு எடுத்துவச்ச நான் சாப்புடுறதுக்கு ஒழுங்கா நான் வீட்டுல இருந்தா நீ பின்பக்கம் போய் இருக்கனும் என் கண்ணுலயே படக்கூடாது  புரியுதா??”
“ஏன் மாமா என் கையால சாப்பிட்டா செறிக்காதாக்கும் எங்க அம்மா அவிக்கிற இட்டிலிய விட நான் அவிச்சது பூப்போல மெதுவாத்தான் இருக்கு வயசு ஆம்புள வாய்க்கு ருசியாக நல்லத சாப்பிடனும் மாமா”
” அடியே என்ன நேத்து சப்புன்னு கன்னத்தில வச்ச அப்பு மறந்திடுசாக்கும் வாயி ரொம்ப நீளுது சுண்டெலிக்கெல்லாம் மாமாவாம் மாமா” 
” ஏன் நீங்க வேணும்ன்னா இப்பயும் அப்பு வைங்களேன் யாரு வேணாமின்னது இப்பவே எப்புடி இருந்திச்சின்னு சொல்லுறேன் சும்மா சாப்புடுவிங்களா?? அத விட்டு கண்டதையும் பேசிக்கிட்டு” 
“ஏய் இங்க பாருடி சும்மா என்ன மிரட்டுற வேலை வச்சிக்கிட்ட தொலைச்சிடுவேன் ஒழுங்கா ஊருக்காக இந்த வீட்டுல இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கோ அம்புட்டுதான் சொல்லுவேன்.”
” வழமையாக ராசாத்தியம்மா இன்னைக்கும்  வரும் புள்ளைகளை பார்க்கிறதுக்கு நீ எதுவும் பண்ணக்கூடாது சொல்லிட்டேன் என் பேச்ச மீறின என்ன பண்ணுவேனோ தெரியாது.”
” வரட்டும் யாரு வாரதுன்னு நானும் பார்க்கிறேன் இந்த அன்புக்கொடியை மீறி என் வீட்டுல யாரு என்னையவே ஓரமாக இருக்கவைக்கிறதுன்னு அது என்னை பெத்த ராசாத்தியம்மாவா இருந்தாலும் சரி ஒரு கை பார்க்காம விடுறதா இல்ல நான்.”
” என் பிள்ளைகளையும் புருஷனையும் பார்த்துகிறத விட வேற எனக்கு வெட்டிமுறிக்கிற வேலை என்ன இருக்குது.” என்று அன்பு மாறனிடம் வாய்தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தாள்.
” ஏன்டி நான் தெரியாமத்தான் கேக்கிறேன் உன் பிள்ளைன்னு சொல்லுறியே நீயா பத்துமாசம் சுமந்து பெத்து பேருவச்ச அடிங்க அவ புள்ளையாம்ல நீ நேத்து பண்ணின கூத்து எனக்கு நெஞ்சில ஆழமாக பதிஞ்சிட்டு அது என்னைக்கு மறந்து நான் உன்ன ஏத்துக்கிறேனோ அதுவரை நீ உன்னோட எல்லையிலதான் இருக்கனும் அதவிட்டு மாமான்னு ஒட்டிக்கலாம்ன்னு பார்த்த தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை ராஸ்கல்.” என்று மாறன் திட்டவும். 
“மாமோய் இதுக்கெல்லாம் அசரமாட்டோமில்ல உன் கோபம் எல்லாம் தெரிஞ்சேதானே நான் இந்த வாழ்க்கையை விரும்பியே தெரிவுசெய்தேன் அதனால நீ இதவிட மோசமாக திட்டி அடிச்சே துரத்தினாலும் நான் மீண்டும் எழுந்து வருவனே தவிற அழுதுகிட்டு வீட்டு மூலையில ஒதுங்கி  இருபேன்னு மட்டும் நினைக்காத ஆமா சொல்லிட்டேன் இந்தா இன்னும் ரெண்டு இட்லி வச்சிக்க என்னத்த இந்த ராசாத்தி இந்த மூணு வருசமாக ஆக்கி போட்டுசோ இப்புடி துறும்பா இளச்சிட்டியே மாமா.” என்று அவன் அவளை திட்டியதையும் பெரிது படுத்தாமல் படையெடுப்பு செய்தாள் அன்பு.
மகனை பார்க்க வந்த நெடுமாறன் 
இவர்களது பேச்சினை வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்.
“மணி என்னது இது பேச்சு போறதிசை சரியில்ல உன்னோட வாழவந்த பிள்ளையை நீ இப்புடிதானா காயப்படுத்துவ? இந்த கோபம் ஒரு நல்ல குடும்பஷ்த்தனுக்கு அழகு  இல்ல சொல்லிட்டேன் பாரு அன்பு முகம் வாடிக்கெடக்கு அவன்கிடக்கிறான் அன்பு நீ இதெல்லாம் மனசுல போட்டுக்காதம்மா.”
“சாப்பிட்டிங்களா மாமா??”
” இல்லம்மா உங்க அத்தை எங்க அதெல்லாம் நேரா நேரத்து தாராளா??.. என்ன வீட்டுலயும் இன்னும் ஒருத்தரும் சாப்பிடலம்மா அன்பு”
” என்ன மாமா சொல்லுறிங்க தாத்தா பாட்டியெல்லாம் பசி தாங்குவாங்களா?.. இதோ நீங்க சாப்பிடுங்க நான் இட்லி வேகவைக்கிறேன் அவங்களுக்கு எடுத்துட்டு போங்க மாமா.”
” உனக்கு ஏன்மா சிரமம்”
” இதுல என்ன மாமா சிரமம் நான் இப்போதான் சந்தோசமாக இருக்கிறேன்.” என்று அவள் சொல்லவும் மீண்டும் தூக்கம் கலைந்து பிள்ளைகள் எழுந்துவிட்டார்கள் போல் அழுகை சத்தம் மெதுவாக கேட்டதுமே உடனே அங்கு சென்றுவிட்டாள் அன்பு.
” என்ன அப்பா நானும் நேத்துல இருந்து பார்க்குறேன் நீங்களும் இவளுக்கே ஆதரவாக பேசுறீங்க இது சரியில்லயே யோசிக்கவேண்டிய விசயமா இருக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுறது வரை நீங்க தப்பிச்சுக்கிட்டே இருங்க யாரோட உதவியும் இல்லாமல் இந்த சுண்டெலிக்கு இம்புட்டு தைரியம் வந்திருக்காது என்மேல வீண் பலி போடுறதுக்கு இதுக்கு பின்னாடி யாரு இருக்கிறான்னு கண்டுபிடிக்கிறேன்.” என்று அவனது தந்தை நெடுமாறனை ஒருவிதமாக பார்த்துக்கொண்டு ஒரு நாளில் அவனது வாழ்வு மாறிப்போன விதத்தை சிந்தித்துக்கொண்டிருந்தான் மாறன்.
நேற்று வழமையாக வரும் நேரத்திற்கு ராசாத்தி வரவில்லை என்னவென்று ஆள்விட்டு பார்த்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லையாம் அதனால் இன்று வரமுடியவில்லைனு தகவல் சொல்லியனுப்பியிருந்தார் ராசாத்தி.
ஆனால் இவனின் கஷ்டம் புரியவும் தனது மகள் அன்புக்கொடியை பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்கு அனுப்பிவைத்திருந்தார்.
அவளும் வந்தவள் பிள்ளைகளுடன் விளையாடி அவர்களை கவனித்து  சமைத்து என்று வேளைகளை செய்து முடித்துவிட்டு சற்று நேரம் அவர்களுடன் தூங்கிப்போனாள். 
எழுந்து நேரம் பார்த்தால் மாலை நெருங்கி விட்டது இன்னும் பிள்ளைகள் எழுந்ததாக தெரியவில்லை இவள் எழுந்து முகம் கழுவி  சற்று நேரம் இருந்தாள் அப்பொழுது ஒரு ஆள் வந்து இதுதான் சரியான நேரம் காலம் நீ போ என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டு அவனின் வரவிற்க்காக காத்திருந்தார்.
வெளியே சென்ற அன்பு நேராக பஞ்சாயத்து தலைவர் நெடுமாறனின் வீட்டிற்கு சென்று பஞ்சாயத்து கூட்டும்படி சொல்லி கூட்டியும் விட்டாள். 
அவசரமாக பஞ்சாயத்திற்கு வரவும் என்று ஆள்விட்டு மணிமாறனிற்கு தகவல் அனுப்பபட்டது.
அவனும் என்னவோ எதோ என்று வந்து சேர்ந்தான்.
வந்தவன் அவன் மீது குற்றம்  சுமத்தப்பட்டு அவனது தந்தையே அவனை இத்தினை பேர் முன்னாள் வைத்து கேள்வி கேட்கவும் இன்னும் அவன் வாழும் காலம் வரை என்னவெல்லாம் பார்க்கவேண்டுமோ என்று மனம் நொந்துவிட்டான் மணிமாறன். 
அப்பொழுது அவனது தோளில் ஆதரவாக ஒரு கை விழுந்து தோலோடு அணைத்து பிடித்தது.
யார் அது என்ன நடந்தது. 
நினைவு தொடரும்.

Advertisement