Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 9
தன் நினைவில் உழன்று கொண்டிருந்த மீரா…… கடினப்பட்டு தான் தன்னை மீட்டுக் கொண்டு வந்தாள்….. ஏ.கேவிடமும் மதியிடமும் எவ்வளவுதான் முயன்றும்…… அவளால் இயல்பாய் பேச முடியவில்லை….. எனவே அமைதியாக உணவு உண்ண ஆரம்பித்தாள்…..
ஏ.கேவிற்கும், மதியரசிக்கும் மீரா உண்மையை மறைக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது….. ஆனால் ஏன் என்பது தெரியாமல் அவர்களால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்பது விளங்க….. மதியரசி அமைதியாகவே இருந்தார்….. 
ஆனால் ஏ.கேவிற்கு சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது…… அதை எப்படி வெளிக்கொண்டு வருவது என யோசித்தவன்….. மீராவிடம் இருந்தே ஆரம்பிப்போம் எனத் தோன்ற….. “ஆமா….. மீரா உன் கண்ணு ஏன் இவ்ளோ செவந்து இருக்கு…..” எனக் கேட்க…..
“அ….. அது….. நைட்டு சரியா தூங்கலையா….. அதனாலதான்…… வேற ஒன்னுமில்ல……” 
“என்னது…… நைட்டு சரியா தூங்கலையா…… ஆனா….. நல்லா தூங்கினதுனால தான் காலைல எந்திரிக்க லேட்டாயிடுச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன……. இப்ப என்னடான்னா நைட்டு சரியா தூங்கலைன்னு சொல்ற…..” என ஏ.கே கேட்கவும்…… திணறித்தான் போனாள் மீரா……
“அ….. அது…… அது…… நைட் நீங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணேன் இல்லையா……? அதுக்கு அப்புறம் கூட தூக்கம் வர ரொம்ப நேரம் ஆயிடுச்சு…. அதனாலதான் சரியா தூங்கலைன்னு சொன்னேன்…….” என்றவள்…. ஏ.கே மீண்டும் ஏதோ கேட்க வர…… “என் போன் ரிங் ஆகுற மாதிரி இருக்கு….. நான் போயி என்னன்னு பார்த்துட்டு வரேன்……” என்று கூறியபடியே அங்கிருந்து நழுவிச் சென்று விட்டாள்…..
‘இவளுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சே ஆகணும்…’ என மனதில் பதிய வைத்துக் கொண்டான் ஏ.கே…..   
அறைக்கு சென்ற மீராவிற்கு….. ஏனோ பழைய நினைவுகள் அதிகம் வந்தது….. பாலாவிடம் பேச வேண்டும் என தோன்றியது….. ஆனால் நிரஞ்சன் கூறியது ஞாபகம் வர…… அமைதியாய் அமர்ந்து விட்டாள்……. தலை வலிப்பது போல் தோன்றியது…… தன்னிடம் இருந்த மாத்திரையை போட்டுக்கொண்டு நிரஞ்சன் கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்…….
மீராவை இங்கு விட்டுச்சென்ற மறுநாள் மீரா நிரஞ்சன்னுக்கு கால் செய்து பேசினாள்……
“மீரா….. உனக்கு அங்க எல்லாம் ஓ.கே தான…..” என…..
“ஹாங்….. எல்லாம் ஓ.கே தான்ண்ணா…… வீட்ல எல்லாரும் நல்லா தான இருக்காங்க……” என கேட்டாள்……
“ம்….. ஏதோ ஓரளவுக்கு ஓ.கே…… ஊர்ல இருக்கிறவங்க கேக்குற கேள்விதான் தாங்க முடியாத அளவுக்கு போய்க்கிட்டு இருக்கு……”
“என்னண்ணா சொல்லி சமாளிச்சிங்க……”
“அது….. உனக்கு உடம்பு சரியில்ல…… அதனால டாக்டர் சித்த மருத்துவம் ட்ரை பண்ண சொன்னார்….. வைத்தியசாலையில் கொண்டு போய்விட்டு இருக்கோம்ன்னு சொல்லி வச்சிருக்கோம்……” எனவும்……
“சரிண்ணா…… நீங்க என்ன பத்தி கவலைப்படாதீங்க…. நான் கண்டிப்பா என் லைஃப் வேஸ்டா போக விடமாட்டேன்….. கண்டிப்பா…… கூடிய சீக்கிரமே நம்ம ஊருக்கு வருவேன்……” என உறுதி கூறினாள்…..
அதோடு, “யாரும் வைத்தியசாலையில வந்து பாக்கக் கூடாதுன்னு வைத்தியர் சொல்லிட்டாருன்னு சொல்லிட்டேன்மா……? எல்லாரையும் ஓரளவுக்கு சமாளித்துட்டேன்……” என்றான் நிரஞ்சன்……
அவள் அன்று இருந்த நிலையில்…… அது சரியாகவே பட்டது…… ஆனால், இன்று மனம் ஏனோ வீட்டினரை நினைத்து மிகவும் ஏங்கியது……. அந்த நேரம் நிரஞ்சனிடமிருந்து மீராவிற்கு அழைப்பு வந்தது…….
“ஹலோ……”
“என்னாச்சு மீரா…… ஏன் ஒரு மாதிரியா பேசுற…….” என்றான் கவலை தோய்ந்த குரலில்…….
“ஒண்ணும் இல்லண்ணா.. நான் நல்லா தான் இருக்கேன்…… வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க…..?” என்றாள் முயன்று வரவழைத்த சாதாரண குரலில்…..
“எல்லாரும் நல்லா இருக்காங்க…… அது….. மீரா….. பாலா உன்கூட பேசணும்னு சொல்றான் மீரா……”
“பாலாக்கு எப்படிண்ணா விஷயம் தெரியும்…..” என…..
“இ….. இல்ல…… இல்லம்மா பாலாவுக்கு எந்த விஷயமும் தெரியாது……” என்றான் அவசரமாக……
“நீங்க பொய் சொல்றீங்கண்ணா….. உங்க குரல் எடுக்க பதட்டமே அதை காட்டிக் கொடுத்துடுச்சுண்ணா…..” 
“அது…… அது……” என நிரஞ்சன் திணரவும்…… “நீங்க இப்போ உண்மையை சொல்லித்தான் ஆகணும்” என மீரா கூறிவிட…..
“அது……. அந்தப் பையனை போய் நேர்ல பாத்து இருக்காம்மா…….”
“எந்த பையன சொல்றீங்க…….” என சந்தேகமாக கேட்டாள் மீரா……
தன் சந்தேகம் சரியென உறுதிப்படுத்தும் விதமாக அந்தப் பெயரை கூறினான் நிரஞ்சன்……. “சஞ்ஜீவ் ……” இந்தப் பெயரைக் கேட்டதும் மீரா எவ்வாறு உணர்கிறாள் என்பது அவளுக்கே புரியாமல் போனது…… ஏதோ பாரம் வந்து மனதை அழுத்த…… “அப்புறமா பேசறேன்……” என மொபைலை அணைத்து விட்டாள்…….
அந்தப்பெயர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பது போல் இருந்தது…… ‘சஞ்ஜீவ்…… சஞ்ஜீவ்……. சஞ்ஜீவ்……’ காதுகளை இறுக்கமாக மூடி கொண்டாள்……. மறுபடியும் பழைய நினைவுகள் வந்து மனதை ஆக்ரமித்துக் கொண்டது……  
சஞ்ஜீவ்…… சந்தோஷ் சஞ்ஜீவ்…… சந்தோஷத்தை நிரந்தரமாக கொடுக்கும்…. இந்த பெயரின் அர்த்தம் அதுதான்……. ஆனால்….. மீராவோ…… மொத்த சந்தோஷத்தையும் பறிகொடுத்ததற்கு காரணம்……. இந்தப் பெயருக்கு சொந்தக்காரன் தான்…… அவன்தான் என்பதைவிட…… அவனது பெற்றோர் தான் என்பது 
சரியாக இருக்குமோ…..? 
அன்று…… பாலாவும் மீராவும்….. தனியாக நடந்து செல்வதாக கூறிவிட்டு ஒத்தையடிப் பாதையில் திரும்பினர்…… 
அதிகாலை நான்கு மணி ஆகியிருந்தது…… “மீரா…… ரொம்ப குளிருதுல்ல…..”
“ம்……”
“ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போறியா……?”
“ம்….. அப்படியெல்லாம் போக முடியாது…… வேணும்னா சால்வ தரேன் பொத்திகிட்டு வா……” என்றாள் மீரா…..
“ஏய் மீரா…… நீ என் செல்ல அக்கா தான….. ஒரு பத்து நிமிஷம் மட்டும் முன்னாடி போடி…… ப்ளீஸ்…..” என பாலா கெஞ்ச…….
“டேய்….. முடியாதுன்னா முடியாது போடா…….” என்று விடவும்…… 
“அப்ப நீ வேமா நட…..” என கையை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு ஓடினான்…..
“டேய் குரங்கு…… விடுடா கைய……. ஏன் இப்படி இழுக்குற……. வலிக்குது…” என்று கூறியபடியே முறைத்துக் கொண்டே தன் கையை தடவிக் கொடுத்தாள்……
“அப்போ ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போயேன்…… ப்ளீஸ்டி….. ரொம்ப குளிருது……”
“ம்…… ஓ.கே….. ஆலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வரட்டும் அங்க நான் உட்கார்ந்திருக்கேன்….. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் டைம்……. டீலா…. நோ டீலா….” என கட்டைவிரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கேட்க……
“ஹாங்…… டீல்…. டீல்….. வந்து தொலை…..” என்றபடி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்…
சிறிது தூரம் சென்ற பாலா “இன்னும் அந்த பஸ் ஸ்டாண்டுக்கு எவ்வளவு தூரம் மீரா இருக்கு…..” என…….
“இன்னும் ரெண்டு வளைவு திரும்பி மூன்றாவது வளைவு வந்ததும் பஸ்ஸ்டாண்ட் வந்துரும்……” என்றாள்……
மீண்டும் சிறிது தூரம் சென்றபின்……. “இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு மீரா……”
“இப்பதானே ஒரு வளைவு திரும்பியிருக்கு…… இன்னும் ரெண்டு வளைவு இருக்கு…..” என…..
“மீரா…… இது எப்படி இருக்கு தெரியுமா …..?” எனக் கேட்டான் பாலா…..
“எப்படி…..” என புரியாமல் கேட்டாள் மீரா…….
“ம்….. இந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்துல வரும்ல்ல….. இன்னும் கித்னா கிலோமீட்டர் பையா…… அப்படின்னு கேட்டா….. தோ கிலோமீட்டர் தோ கிலோமீட்டர்ன்னு சொல்லியே அந்தக் கிழவன் கூட்டிட்டு போவான் பாரு….. அப்படித்தான் இருக்கு நீ சொல்றதும்…….” என்றான் நக்கலுடன்……
“போடா குரங்கே……” என்றவள் இன்னும் சிறிது தூரம் சென்றபின்…… “தங்கம் வந்துட்டோம்டா….. இன்னும் ஒரே ஒரு வளைவு தான் இருக்கு…..” என மீரா கூறவும்…..
“……..” 
பாலா பேசாமல் வரவும்….. “ஏண்டி தங்கம் பேசாமலேயே வர்ற……”
“நான் எதுவுமே பேச விரும்பல….. பேசாம வந்துரு…..” 
மீண்டும் சிறிது தூரம் சென்றபின்…… “டேய்…… அங்க பாரு அது தாண்டா அந்த பஸ் ஸ்டாண்டு…..” என மீரா கூற…….
“டேய்….. அங்க பாருடா….. அதுதாண்டா உங்க அப்பன்…… அப்ப பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறது யாருமா……? அவள தான்டா உங்கப்பன் வச்சிருந்தான்…….” என நக்கல் பேசியவன்……. “போடி அந்தப்பக்கம்…… நானே வந்து இரண்டு கண்ணால பார்த்து அதுக்கு அப்புறம் தான் நம்புவேன்……” என்றான் பாலா கடுப்புடன்……
“அட போடா நம்பலைனா…” என்றபடி முன்னே செல்ல பாலாவும் பின்னே சென்றான்…..       
இவர்கள் இருவரும் அந்த பஸ் ஸ்டாண்டை நெருங்கும்போது…… அதன் எதிர்ப்பக்கம் யாரோ ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்…….
“டேய்……” என பாலாவின் தோளை பற்றி நிறுத்தினாள் மீரா…..
“என்ன…… அதான் பஸ் ஸ்டாண்ட் வந்துதிருச்சில இப்பவாவது தனியா விடு…… ப்ளீஸ்….. முடியலடி…….” என்றபடி அவள் கைகளை விலக்கி விட்டு அந்த பஸ் ஸ்டாண்டின் பின்புறம் செல்ல…… மீரா பஸ் ஸ்டாண்ட் முன் சென்று அமர்ந்தாள்…….
‘இந்த ஆள் பாக்க ஏன் இவ்வளவு வித்தியாசமா இருக்கான்…… ஏன் இப்படி வெறிச்சு பாத்துட்டு இருக்கான்……? பயந்தது மாதிரி வேற இருக்கான்….’ என எதிரில் நின்றவனை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள் மீரா…… ஒருவேளை அன்றே இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் ஏன் என்று கண்டுபிடிக்க இயலாவிட்டாலும்…… அவனால் ஏற்படப்போகும் பிரச்சினைகளை தவிர்த்து இருப்பாளோ……?   
கதவு தட்டும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தவள்…… சென்று யாரென்று பார்த்தாள்……. அங்கே ஏ.கே கையில் சாப்பாடு தட்டுடன் அறை வாசலில் நின்று கொண்டிருந்தான்… “நீங்க ஏன் கிருஷ் சாப்பாடு எடுத்துட்டு வந்தீங்க…… நானே வந்து சாப்பிட்டு இருப்பேனே……” என குற்ற உணர்வுடன் கூறினாள் மீரா…….
“நீ மேல வந்து ஒரு மணி நேரம் ஆச்சு மீரா…..” என்றான் ஏ.கே அழுத்தத்துடன்….. ‘அதில் நீ வந்து சாப்பிடணும்னு நினைச்சிருந்தா…… இவ்ளோ நேரம் கீழே வராமல் இருந்திருக்க மாட்டாய்…..’ என்று பொருள் புரிந்திருக்க…… பதில் பேச முடியாமல் அமைதியாக தட்டை வாங்கியபடி அறையின் உள்ளே சென்றாள்…….
அவள் பின்னாடியே உள்ளே வந்த ஏ.கே அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்….. ‘இவர் ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்காரு…..?’ என யோசித்துக்கொண்டே உணவை அருந்தி முடித்தவள் வழக்கமாக தான் உட்கொள்ளும் மருந்துகளையும் எடுத்து சாப்பிட்டாள்…….
“நீ போய் தட்ட வச்சுட்டு வா மீரா……” என்றவன் அவளுக்கு சந்தேகம் வராதவாறு…… அவளுக்கு முன்பே அறையை விட்டு வெளியேறி விட்டான்……
மீரா தான் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி செல்ல…… ஏ.கே மீராவின் அறைக்குள் நுழைந்து……. அவள் உண்ட மருந்துகளை தன் மொபைலில் படம் எடுத்துக் கொண்டான்……
ஏ.கேவிற்க்கு சந்தேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது……. ‘பெயர் மீரா… தன் தாய் மதியரசியின் தோழிக்கு தெரிந்தவள்……’ இந்த இரண்டு விஷயங்களைத் தவிர….. ஏ.கேவிற்கு வேறு எதுவும் தெரியாது மீராவை பற்றி….. அவனுக்கு மட்டுமல்ல அவன் தாய்க்கும் எதுவும் தெரியாது……. ‘மீரா என்பவள் அவன் வாழ்வில் ஒரு புதிராகவே இருந்தாள்…… ஆனாலும்…. ஏதோ ஒரு விதத்தில் அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள்…….’ ஏ.கேவிற்கு அவன்மீது. அவனுக்கே கோபமாக வந்தது……. ‘நான் ஏன் இப்படி ஆனேன்……? எத்தனையோ பொண்ணுங்க என் பின்னாடி சுத்தினப்ப கூட யாரையும் திரும்பிக்கூட பார்க்காத நான்…… ஏன் இவள காதலிக்க ஆரம்பிச்சேன்……’ என யோசித்துக் கொண்டிருந்தவன்……
மொபைல் அழைக்கும் சத்தம் கேட்டு சுயநிலையை அடைந்தான்……. யாரென பார்த்தவன்…. தன் மாமா அழைத்திருந்தது பார்த்து… மீண்டும் அழைத்து பேசினான்…..  
“ஹலோ…… சொல்லுங்க மாமா…..” என ஆரம்பித்தவன்….. சுய விசாரிப்புகளுக்கு பிறகு…. “என்ன மாமா….. என்ன விஷயமா கூப்பிட்டு இருந்தீங்க……” என கேட்க…
 
“அது ஒன்னும் இல்லப்பா அரவிந்த்….. நம்ம வேதி அங்க வரணும்னு ஆசைப்பட்டாள்….. அதான்பா…… இன்னைக்கு நைட் கிளம்பி நாளைக்கு காலையில அங்க வந்துடுவா….. பாத்துக்கோ……… அதை சொல்ல தான் போன் பண்ணேன்…… வேற ஒன்னுமில்ல…….”
“சரி மாமா…… வரட்டும் நான் பாத்துக்குறேன்……” என்றவன் அழைப்பை துண்டித்து விட……
மொபைலை கண்டவனுக்கு காலையில் எடுத்த படங்கள் நினைவு வந்தது…… உடனே டாக்டரை அழைத்து பேசினான்…….
“ஹலோ…….. டாக்டர் நான் ஏ.கே பேசுறேன்……” எனவும்……
“சொல்லுங்க ஏ.கே…… அம்மா நல்லா இருக்காங்களா……?” என கேட்டார்……
“யா டாக்டர்……. அம்மா நல்லா இருக்காங்க…… எனக்குதான் ஒரு சின்ன கிளாரிஃபிகேஷன் தேவைப்படுது டாக்டர்…… நீங்க ஒரு நாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தீங்கன்னா……. நான் நேர்ல வந்து உங்களை பார்க்கிறேன் டாக்டர்…….”
“ஓ…… பட் நான் இப்போ……. மீட்டிங் ஒன்னு அட்டென்ட் பண்ண டெல்லி வரைக்கும் வந்திருக்கேன்……. உங்களுக்கு அவசரம்னா வேற டாக்டர் ரெபர்  பண்ணட்டுமா…….?” என கேட்க……
“நீங்க எப்போ டாக்டர் வருவீங்க…….” என்றான் ஏ.கே……  
“நான் ஒரு வாரத்துல வந்துடுவேன்…… உங்களுக்கு ஓ.கேன்னா வெய்ட் பண்ணுங்க…..” எனவும்……
“இட்ஸ் ஓ.கே டாக்டர்….. நான் வெயிட் பண்றேன்…..” என்று கூறி மொபைலை அனைத்தான் ஏ.கே…..
மீண்டும் மனதிற்குள் பல எண்ணங்கள் தோன்றியது…… மீரா யாரு…..? அவ ஏன் இங்கே தங்கியிருக்க…..? அவளுக்கு என்ன பிரச்சனை…..? அவை ஏன் தினமும் மருந்து சாப்பிடுறா…..? இந்தக் கேள்விகள் போதாதென்று…… இந்த நிவேதிதா இப்போ வர்றா….? அதுக்கு காரணம் என்னவா இருக்கும்…..? என்ற கேள்வி வேறு தலையை பிய்த்துக் கொள்ள வைக்க தலை வலியே வந்துவிட்டது ஏ.கேவிற்கு….
மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும்…… மனதில் முதலில் பதில் கண்டுபிடிக்க வேண்டியது என மீரா ஏன் தினமும் மருந்து எடுக்கிறாள்……? அப்படி அவள் உடம்புக்கு என்ன பிரச்சனை……? என்பது தான் என உறுதி படுத்திக்கொண்டான்…..
நாளையிலிருந்து நிவேதிதாவையும் சமாளித்தாக வேண்டும்….. எனநினைத்தவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி தன் தாயிடம் நிவேதிதா வரப்போகும் விசயத்தை கூற சென்றான்…..
அப்போது மீண்டும் ஏ.கேவின் மொபைல் ஒலி எழுப்ப…… அதை எடுத்து பார்த்தவன்……. “மச்சி….. யார்கிட்ட சொல்லன்னு தெரியாம தவிச்சுட்டு இருந்தேன்….. கரெக்ட்டா கால் பண்ணிட்டடா…….” என்றான் ஏ.கே…..
“முன்னாடி எல்லாம் நான் கால் பண்ணா….. வேல இருக்கு…. வேல இருக்குன்னே சொல்லுவானே ஒரு சின்சியர் சிகாமணி அவன எங்கயாச்சும் பாத்தியா மச்சான்…..” என்றான் சத்யா……
“சத்யா…… ப்ளீஸ் பீ சீரியஸ்…..” என பல்லை கடிக்க…… ஏதோ பெரிதாக நடந்திருப்பதை அறிந்தவன்…… 
“மச்சான்…… நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்…… எதுவா இருந்தாலும் நேர்ல பேசலாம்……” என்றவன் அழைப்பை துண்டித்து விட ஏ.கே தன் தாயின் அறையை நோக்கி சென்றான்……
சஞ்சீவ், மீரா இடையில் என்ன நடந்தது……? மீரா வாழ்வில் நடந்தது ஏ.கேவிற்கு தெரியவந்தால் என்ன நடக்கும்……? மீராவின் உடல் நிலை என்ன……? ஏன் மீரா மருந்து உட் கொள்கிறாள்…..? நிவேதிதா வந்தால் என்ன நடக்கும்……? சத்யா தன் நண்பனின் வாழ்வை சரிசெய்வானா…….? காத்திருந்து காண்போம்….!

Advertisement