Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 8
மதுரத்திற்கு மனது உறுத்திக்கொண்டே இருந்தது……. ஏனெனில், மீரா மனது படபடவென்று அடிக்கிறது என்றால்…… ஏதாவது ஒன்று நிகழ்ந்தே தீரும்….. அது நல்லதா கெட்டதா வென்றால் நடக்கும் போதே தெரியும்….. இதை அறிந்ததால் தான் மதுரம் மனதிற்குள் பயந்து கொண்டிருந்தார்….. ‘கடவுளே….. எது நடந்தாலும் நல்லதாவே நடக்கணும்பா…..’ என மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தார். 
சிறிது தூரம் சென்றபின், பாலா “ஏய்…… எவ்வளவு தூரம் வந்திருக்கோம்ன்னு பாரு மீரா” என்றான்.
“டேய்…… அதுக்குள்ள கேக்குற….. உனக்கு பாதை தெரியாதா…..?” 
“யாருக்குத் தெரியும்……”
“என்னது பாதை தெரியாதா…… சித்தப்பா கூட அடிக்கடி கோவிலுக்கு  போவியேடா……”எனவும் 
“ஆமா….. அவர் பின்னாடி ஏறி உட்கார்ந்ததும் ஹெட்செட் எடுத்து காதுல மாட்டிக்குவேன்…… கோயில்ல போயி இறங்குற வரைக்கும் பாட்டு மட்டும்தான் கேட்பேன்……” என்று அலட்சியமாக கூறினான்…
“பெரியம்மாட்ட சொல்லவா….” என்றாள் மீரா குறும்புடன்…..
“ஏய்…… அந்த அபூர்வ வகை டைனோசர் எலும்புக்கூட என் மேல ஏவி விடுவதே நீதாண்டி….. சூனியக்காரி…… இப்ப எவ்வளவு தூரம் வந்திருக்குன்னு பார்த்து சொல்லுவியா……. மாட்டியா……?” என்றான் கோபத்துடன்……
“கோவிச்சுக்கிட்டயாடி தங்கம்……” என நக்கலுடன் கேட்க…..
“இல்ல…… இன்பமாய் இருக்கிறது…..” என்றான் நக்கலுடன் சிலாகித்தபடி… 
“சரி சரி…… மூஞ்சிய அப்படி வச்சுக்காதடா…… பார்க்க சகிக்கல…..” என்றபடி கூகுள் மேப்பை ஓபன் செய்து…. பார்க்க…..
“அப்போ உனக்கு தெரியாதா….. தெரியாம தான் என்ன இன்ன வரைக்கும் பாடா படுத்துனியா…..?”
“லூசு…… நான் உன்கிட்ட கேட்டது பாத தெரியுமான்னு…… நீ என்கிட்ட கேட்டது எவ்வளவு தூரம் வந்திருக்கேன்னு…… நம்ம இப்ப பத்து கிலோமீட்டர் வந்திருக்கோம்……” என்றாள் மீரா…..
“ஹேய் பத்து கிலோமீட்டர் வந்துட்டோம் அதுக்குள்ள…. இன்னும் அஞ்சு கிலோ மீட்டரா…..? பத்து கிலோமீட்டரா…..?” என ஆர்வத்துடன் கேட்டான் பாலா……
“எது….? பத்து கிலோமீட்டரா…..? முப்பது….. முப்பது கிலோமீட்டர்……” எனவும் நடுரோட்டில் அப்படியே அமர்ந்துவிட்டான் பாலா…..
“டேய்….. எந்திரிடா…… நடுரோட்டில் இப்படி உட்கார்ந்து இருக்க….. ஆளுங்க பாக்குறாங்க…. எந்திரிடா…… மானத்தை வாங்காதே…..” என அதட்டி…. வேடிக்கை பார்ப்போரை காட்ட…. அமைதியாக எழுந்தான் பாலா….
“எங்க….. எங்க இந்த இரண்டு எலும்புகூட…… என்னை இப்படி நடக்க வச்சே சாக அடிக்கிறீங்க…” என்றபடி திரும்பிப்பார்க்க.. யாரையுமே காணவில்லை….. “எங்கடி நம்ம பின்னாடி வந்தவங்கள……” என கோபமாக திரும்பி மீராவிடம் கேட்டான்…
“நாயே….. கைய புடிச்சு தரத்தரன்னு  இழுத்துட்டு வந்துட்டு….. கேள்வியா கேக்குற…… அவங்க இன்னும் வரவே இல்ல” என்றாள் கோபமாக 
“என்னது வரலையா……? இப்ப எப்படி போறது….. எனக்கும் பாத தெரியாது… ஃபர்ஸ்ட் நாம இதுவரைக்கும் வந்தது கரெக்ட் தானா…..?” என சந்தேகமாக கேட்க…..
“கரெக்டுதான் அதெல்லாம் வா போலாம்…..”
“ஹேய்….. எப்படி சொல்ற…. உனக்கு பாதை தெரியுமா….?” என அப்போதும் சந்தேகமாக கேட்க….. 
அவன் மொபைலை எடுத்து கையில் திணித்தவள்….. “நம்பிக்கை இல்லைன்னா நீயே சர்ச் பண்ணி பார்த்துக்கோ…… அப்படி இல்லேன்னா….. அவங்க வர்ற வரைக்கும் இங்கேயே உட்கார்ந்திரு…” என்றவள் விறுவிறுவென நடக்க தொடங்கினாள்….
“சரி சரி….. கோவப்படாத…. என் செல்ல அக்கால்ல…. இந்த தங்க தம்பி தான சொன்னா…..”
“ஐஸ் வைக்கிறதுல உன்னை மிஞ்சிட முடியாதுடா…..”     
“சரி….. நான் ஒன்னு கேட்பேன் உண்மையை சொல்லுவியா…..?” என பாலா கேட்க…..
“கவலப்படாதடி தங்கம்…. இன்னும் முப்பது கிலோமீட்டர் இல்ல….. இருபத்தி ஒன்பது புள்ளி ஒன்பது கிலோமீட்டர் தான் இருக்கு…..” என்றாள் மீரா. அதோடு “இததான இவ்வளவு பீடிகையோட கேட்க வந்த….” எனவும் 
“ராட்சசி….. ரத்தக்காட்டேரி….. இதுக்கு நீ டைரக்டா முப்பது கிலோ மீட்டர்ன்னே சொல்லி இருக்கலாம்டி….. பிசாசே….” என்று வசை பாடியபடியே வந்தான்… அந்த நேரம் மீராவின் மொபைல் அழைக்க……
“அந்த அபூர்வ வகை டைனோசர் எலும்புக்கூடு தான் கூப்பிடும் பாரு…..” என்றான் பாலா…. மீரா மொபைலை எடுத்துப் பார்க்க மீனாட்சிதான் அழைத்திருந்தார்….
மீரா பாலாவைப் பார்த்து “எப்படிடா…..” என…..
“ஆமா…… இதுக்கெல்லாம் போயி ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டிலயா கோர்ஸ் எடுத்து நடத்துவாங்க….. அந்த கழுகுக்கு நாம ரெண்டு பேரும் இல்லைன்றது தான் மூக்குல வேர்த்துரும்ல….” என்றான் ஏளனத்துடன்…
“போடா லூசு…..” என்றவாறு மொபைலை ஆன் செய்து காதில் வைத்தவுடன் பொரிய தொடங்கினார் மீனாட்சி “எங்க போனீங்க ரெண்டு பேரும்….. சேந்து போக மாட்டீங்களா…..? நடு ராத்திரியில இப்படி தனியாவா போவீங்க…..? அறிவில்ல உங்களுக்கு…. வயசு பொண்ணு மாதிரியா நடந்துக்கிற மீரா….. இப்போ எங்க இருக்கீங்க……?” எனவும்….
“கிருஷ்ணா மெஸ் பக்கத்துல இருக்கோம் பெரியம்மா…..”
“எந்த கிருஷ்ணா மெஸ்…..”
“அ…. அது….. அது…..” என தயங்கியவள்….. ஒரு ஃபேமஸான பாரின் பெயரை சொல்லி….. “அந்த பாருக்கு கீழ….. கீழ் ஃப்ளோர்ல இருக்குற…. கிருஷ்ணா மெஸ் பெரியம்மா…..” எனவும் அவள் நினைத்தது போலவே…. வசை மழை பொழிந்தார் மீனாட்சி…..
“அந்த பார்ல இந்த நேரத்துக்கு எத்தனை பேர் எப்படி எப்படி இருப்பாங்கன்னு தெரியுமா…..? நீங்க எதிர்ல இருக்குற அசோக் பவன்ல இருங்க….. கொஞ்ச நேரத்துல வந்துருவோம்”  என்று பேசுவதற்கு இடமே அளிக்காமல் மொபைலை அணைத்து விட்டார்…
மீனாட்சி மொபைலை அணைத்த பிறகு “ஊப்ஸ்…..” என அடக்கிவைத்த மூச்சை வெளியிட்டாள் மீரா.
“என்ன…..? பாராட்டுப் பத்தரத்த பலமா வாசிச்சுச்சா எலும்புக்கூடு…..” என பாலா கேட்கவும்….. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு….. “ஈஈஈ……” என கேவலமாக சிரித்துக் கொண்டனர்….
பின்னர் பாலா “சரி விடு….. நானும் சரி நீயும் சரி பெரியம்மாட்ட திட்டு வாங்குறது என்ன புதுசா… என்ன பெருசா சொல்லியிருக்கும்….. இங்கே ஏதாவது ஒரு முளையை பார்த்து உட்கார சொல்லிருக்கும்…. வா போவோம்…..” எனவும் இருவரும் எதிரிலிருந்த அசோக் பவனில் சென்று அமர்ந்தனர்….. சரியாக பதினைந்து நிமிடம் கழித்து….. மதுரமும் சந்திரனும் வந்தனர்….
“மத்தவங்கள எங்கம்மா…..” என மீரா கேட்க….
“பின்னாடி வந்துட்டு இருக்காங்க” என்றார் மதுரம்….
உடனே பாலா “அப்ப வாங்க வாங்க கிளம்பலாம்…..” என அவசர படுத்தவும் 
“ஏன்டா இவ்ளோ அவசர படுத்துற…..? கொஞ்ச நேரம் உக்காந்து எந்திரிச்சு போலாம்….. காலு ரொம்ப வலிக்குது…..” என சந்திரன் கூற…..
“ஐயோ….. அந்த எலும்புக்கூடு வந்தா எங்க ரெண்டு பேரையும் திட்டியே தீர்த்திடும்….. வாங்க கிளம்பலாம்….”
“டேய் கால் வலிக்குதுடா…..”
“அட பரவால்ல பெரிப்பா….. போற வழியில பாத்துக்கலாம் வாங்க…” என் அவசரப்படுத்தி ஒரு வழியாக இழுத்துச் சென்றான் அனைவரையும்….. சிறிது தூரம் ஒன்றாக சென்றவர்கள்….. மீண்டும் முதியவர்கள் பின்தங்கி விட….. மீராவும் பாலாவும் முன்னே சென்றனர்…… ஆனாலும் ஜாக்கிரதையாக ரொம்ப தூரம் முன்னே சென்றுவிடாமல் மூத்தவர்களின் பார்வையிலேயே சென்றார்கள்…….
“இப்போ எவ்வளவு தூரம் வந்து இருக்குன்னு பாரு மீரா…..” என பாலா சோர்வுடன் கூற…..
“இருபத்தஞ்சு கிலோமீட்டர் வந்துட்டோம்டா….. இன்னும் பதினைந்து கிலோமீட்டர் தான்….. வா போலாம்” என்றாள் மீரா.
“என்…..னா…….து….. பதினஞ்சா……. ஐயையோ நான் வரமாட்டேன்….. போடி….. மொத்த குடும்பமும் சேர்ந்து என்ன கொடுக்க பாக்கறீங்க……” என அருகிலிருந்த போஸ்ட் கம்பத்தை பற்றிக்கொண்டு நகர மறுத்தான்…..
“என்னடா உளர்ற….. உன்னை யாருக்குடா குடுக்கப் போறாங்க….” என அவனைப் பற்றி இழுத்தபடியே மீரா கேட்டாள்…
“ம்….. வேற யாருக்கு சாமிக்கு தான்…… கோவிலுக்கு கூட்டிட்டு போறேன் கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு….. அந்த கோவிந்தன் கிட்டயே கூட்டிட்டு போயிருவீங்க போலடி” எனவும்
“டேய்….. நீ எப்ப பாரு ரோட்டிலேயே நிண்டு சீன் போட்டுட்டு இருக்க….. இப்ப மட்டும் மரியாதையா வரல…..” என மீரா மிரட்டல் தொனியுடன் நிறுத்த……
“என்னடி பண்ணுவ….. சொல்லு….. என்னடி பண்ணுவ….. பாப்போம்” என்றான்..
“ம்….. மீனாட்சி பெரியம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க….. நீ இப்படி கம்பத்தை புடிச்சுகிட்டு நிற்கிறத பார்த்தா இப்பவே சித்தப்பாக்கு போன் பண்ணி போட்டு கொடுத்துடுவாங்க…… எப்படி வசதி….. போகலாமா…..? இல்லை இப்படியே நிக்கலாமா….?” எனவும் 
“ஆப்வியஸ்லி மீரா….. நாம ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்கோம்….. வா போலாம்…..” என்று கூறி முன்னே நடக்க தொடங்கினான்.
அவன் தோளைத் தொட்டு திரும்பியவள் “உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்லை இல்ல” என்றாள்.
பாலா வெகு சாதாரணமாக “ச்சீ..ச்சீ… அதெல்லாம் இருந்தா உனக்கு தம்பியா பெறக்க முடியுமா……?” என்றான்.
“தூ….. இதெல்லாம் ஒரு பொழப்பு…..” என்றுவிட்டு நடக்கத் தொடங்கினாள்… பாலாவும் மீரா தன்மேல் துப்பாத எச்சிலை துடைத்துக்கொண்டு கிளம்பினான்…
சிறிது தூரம் சென்றவர்கள்….. கால் வலிக்க…… “மீரா ஒரு இடத்துல உட்கார்ந்து போகலாமா…..” என பாலா கேட்கவும்…..
“ம்…… அது அந்த பஸ் ஸ்டாண்டில் உட்காருவோம்….. வா…..” என தூரத்தில் தெரிந்த பஸ் ஸ்டாண்டை நோக்கி கூட்டி சென்றாள்…. 
இருவரும் அங்கு சென்று அமரவும்….. சிறிது நேரத்தில் மதுரமும் சந்திரனும் வந்தனர்…… அவர்களும் அங்கு சென்று அமர்ந்து கொண்டனர்…… பதினைந்து நிமிடங்கள் கழித்து “சரி வாங்க நடப்போம்….” என அழைத்தான் பாலா….
“பொறுமையா இருடா….. எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் போகலாம்…..” என்றார் சந்திரன்…
“சரி” இன்னும் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருக்கலாம் என்ற ஆசையில் உடனே ஒத்துக்கொண்டான் பாலா…… மற்றவர்களும் வந்து சேர்ந்து…… அவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு….. மீண்டும் நடக்கத் தொடங்கினர்….. இந்தமுறை அனைவரையும் முன்னே செல்ல விட்டு…… மீராவும் பாலாவும் பின்னே வந்தனர்…..
“ஆமா….. ஒரு ஒத்தையடிப் பாதை வருமே மீரா….. அது ஏன் இன்னும் வரல……” என்றான் பாலா..
“அதுவா…… இந்த பாலத்தை ஏறி இறங்குவதும் ரைட் சைடு திரும்பினாலும் ஒத்தையடிப்பாதை வந்துரும்…..”
“ஓ….. அப்ப கிட்ட வந்துட்டோம்…..” எனக்கு குதூகலத்துடன் பேசினான்…
நக்கலாக சிரித்தவள்….. “ஆனா….. இந்த பாலத்தை ஏறி இறங்குவதில் ஒரு குட்டி பிரச்சினை இருக்கு…..” எனவும்…., சுதாரித்தான் பாலா….
“என்ன பிரச்சனை…..” ‘ரத்தக்காட்டேரி…… இரத்தத்தை குடிக்காம விடமாட்டாள்…… இப்ப என்ன சொல்லப் போறாளோ…..’ என மனதிற்குள் மீராவை திட்டினான்..
“ஒன்னும் பெருசா இல்லடி தங்கம்…… இந்தப் பாலம் வெறும் அஞ்சு கிலோ மீட்டர்தான்……” எனவும் அப்படியே நின்றுவிட்டான் பாலா…..
“டேய்….. பாலா….. பாலா பெரியம்மா கூப்பிடுறாங்கடா……” எனவும்……   
“மீரா….. நீ சும்மா தான சொன்ன…..” நட்பாசையுடன் கேட்டான்…
“சேச்சே….. உன் கிட்ட போய் விளையாடுவேனாடி தங்கம்……. நெஜமாவே அஞ்சு கிலோ மீட்டர்தான்….. வா வா போலாம்…..” என்றபடி நடந்தாள் மீரா….
அனைவரும் பாலத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்றதும்…… பெரியவர்கள் பின் தங்கி விட….. பாலாவும் மீராவும் முன்னே சென்றனர்…… பாலாவின் மொபைலில் ஹெட்செட் மாட்டி…… இருவரும் பாடலை கேட்டபடியே நடந்தனர்…… அப்போது அங்கிருந்த செக்போஸ்டில் இருந்த இரு காவலர்கள் இவர்கள் இருவரையும் அழைத்தனர்……
“போய் என்னன்னு கேட்டுட்டு வாடா…..” என்றபடி மீரா அதே இடத்தில் நின்று விட….. பாலா மட்டும் அவர்களிடம் சென்றான்…..
“யார் நீங்க…..” எனக் கேட்டார் அந்த காவலாளி…..
“நாங்க தச்சம்பதுல இருந்து வர்ரோம் சார்…..”
“அந்த பொண்ணு யாரு……?”
“என் அக்கா…..”
“இங்க எங்க போறீங்க…..” எனவும் அவர்களின் கோவில் இருக்கும் ஊரை சொல்ல…. “அந்த கோயிலுக்கு போறோம் சார்…..” என்றான் பாலா….
“அந்தக் கோவில் இன்னும் இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் போகணுமே…. தனியாவா போறீங்க…..” என்றார் அந்த காவலாளி சந்தேகமாக…..
“இல்ல சார்….. எங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் பின்னாடி வந்துட்டு இருக்காங்க….” எனவும்….. அனைவரும் அங்கு வந்து சேரவும்…… சரியாக இருந்தது… மீனாட்சி சந்திரனை சென்று பார்த்து வரும்படி கூறினார்….. சந்திரன் அங்கு சென்றதும்….. அவரை விசாரித்த காவலாளி….. அனைவரையும் அருகில் வருமாறு அழைத்தார்…..
இவர்கள் அனைவரும் சென்றதும் “ஏம்மா….. ராத்திரில தனியா நடந்து போறீங்களே…… நகை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு வந்தால் என்ன……?” என்றார் கோபமாக……
“சார் எல்லாருமே தாலி செயின் போட்டு இருக்கோம் சார்…… இதை எப்படி கழட்டி வைக்கிறது….”
“அது சரி….. இந்த பையன் எதுக்குமா போட்டு இருக்கான்….. அதுலயும் ரெண்டு பட்டனை கழட்டி விட்டிருந்தா….. பாக்குறவங்க கண்ண உறுத்த தானே செய்யும்…. முதல்ல பட்டன மாட்டுடா…” என அதட்டினார்….
நாங்க வருடா வருடம் இப்படித்தான் நடப்போம் என்று ஒருவழியாக புரியவைத்து…… அவர்கள் அந்த இடத்தை காலி செய்ய அரை மணி நேரம் கடந்திருந்தது…..
அனைவரும் நடந்து ஒத்தையடிப்பாதை அடைந்தபோது….. கால் வலிப்பதாக கூறி அமர்ந்துவிட்டனர்….. பாலாவும் மீராவும் மட்டும் தனிய அந்த ஒத்தையடி பாதையில் செல்லத் தொடங்கினர்…….
நினைவுகளை நெட்டித் தள்ளி மீண்டவள்…… கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து சென்று திறந்து பார்த்தாள்…… அங்கே ஜானகியம்மா நின்றுகொண்டிருந்தார்…..
“என்னாச்சு ஜானகியம்மா……” என மீரா கேட்க….. 
“மணி எட்டரை ஆச்சும்மா…. நீங்க இன்னும் கதவைத் திறக்கவே இல்ல….. எல்லாரும் கீழே உங்களுக்காக வெயிட் பண்றாங்கமா……” எனவும் மணியைப் பார்த்தவள்……
‘சே….. இவ்வளவு நேரமா கண்டதையும் யோசிச்சு டைமன் அதுகூட தெரியாம உட்காந்து இருக்கோமே…..’ என மனதிற்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டவள்…… “பத்து நிமிஷத்துல வந்துடறேன்…… நீங்க போங்க……” என அனுப்பி விட்டு…… அவசர அவசரமாக குளித்து கீழே இறங்கிச் சென்றாள்……
படிகளில் இறங்கும்போது ‘ஒருவேளை நாம இன்னைக்கு தனியா போய் இருந்திருக்கக் கூடாதா…….?’ என எண்ணியவள்…… தலையைக் குலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு…… பழைய நினைவுகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஏ.கே விடமும், மதியரசியிடமும் புன்னகை முகத்துடன் குட்மார்னிங் கூறியவள்…… “சாரி ஆன்ட்டி…… நல்லா தூங்கிட்டேன்…… அதான் லேட்டாயிடுச்சு…..” என்றால் மன்னிப்பு வேண்டும் விதமாக……
  இந்த பயணம் மீராவின் வாழ்வில் எதை தரப்போகிறது…..? என பொறுத்திருந்து பார்ப்போம்……  
 

Advertisement