Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 7
என் வாழ்வின்………..
அழிக்க முடியா………
அத்தியாயத்தை நோக்கி……… 
முதல் அடி……. எடுத்து வைத்துள்ளேன் 
அழிக்க நினைக்கும்……….
அத்தனை நிகழ்வும்………
மனத்திரையில்……….
அழிந்து விடுவதில்லை
ஏனோ…….? என் கண்ணா……..!!! 
இரவு நெருங்கும் நேரம் நிரஞ்சன் வரவும்……. நடந்ததை கூறி அவனையும் உடன் வரச்சொல்ல அவனோ….. “இல்லம்மா….. போன தடவ நடந்ததே கால மூணு நாளைக்கு மடக்க முடியல…. இதுல இன்னொரு முறையா….? சத்தியமா முடியாதுமா…. என்ன விட்டுடுங்க” என்றுவிட்டு நகர்ந்து விட்டான்.
அந்த நேரம் மீனாட்சி வீட்டினுள் வர.. மீரா அறையை விட்டு வெளியே வந்தாள்…. மீனாட்சி “நிரஞ்சா…. கோயிலுக்கு போக தடங்கல் எதுவுமே சொல்லக்கூடாது…. தெரியாதா….?” என்றார் கடுமையுடன்…
“அ…அது… சைட்ல நெறய வேல இருக்கு பெரியம்மா” என்றான் தப்பிவிடும் எண்ணத்துடன்….
“அத அப்பறம் பாக்கலாம்பா…. கோவில்ல ரெண்டு நாள் மட்டும் தான நாம தங்க போறோம்”
“ஆனா…. பெரியம்மா… வந்த பிறகும் மூணு நாளுக்கு நடக்கவே முடியாது…. மொத்தமா அஞ்சு நாள் வேல பாக்கமுடியாது”
“அப்ப நீ கோயிலுக்கு வரமாட்டியா….?”
“நான் வந்துடுவேன் பெரியம்மா…. ஆனா நடந்து வரமுடியாது அவ்ளோ தான்”
“அப்போ வயசுப்பொண்ண கூட்டிட்டு நாங்க பொம்பளைங்க தனியாவா போறது”
“ஏன் பெரியம்மா…. சந்திரன் பெரியப்பா வர்றார்ல…. அது போக நீங்க அஞ்சு பேர் போறீங்க… பின்ன என்ன பெரியம்மா”
“நாங்க அஞ்சு பேருமே பொம்பளைங்க தாம்பா” என மீனாட்சி சொல்லும்போதே உள்ளே நுழைந்தான் பாலா…. பாலா மீராவின் சித்தப்பா கிருஷ்ணன் – சந்தியாவின் மூன்றாவது மகன்.
அவனைப் பார்த்த நிரஞ்சன் “பாலா சும்மா தானே இருக்கிறான் பெரியம்மா….. அவனை கூட்டிட்டு போங்க”
“எங்க…..” புரியாமல் கேட்டான் பாலா 
“கோயிலுக்குடி தங்கம்…… நடந்து போறோம்…..” என்றாள் மீரா நக்கலுடன்… 
“போங்க…… எனக்கு என்ன வந்துச்சு…….” 
“நாங்க மட்டும் போறதுக்கு எதுக்கு உன்னை கேட்டுட்டு இருக்கோம்…. நீயும் தான் வர்ற….” 
“நான் வர்றேனா…..? யார் சொன்னது……? நானெல்லாம் வரமாட்டேன்…..” 
“என் தங்கம் இல்ல…. வாடி செல்லம்….. போயிட்டு வந்துருவோம் ஜாலியா இருக்கும்…..” 
“போடி இவளே….. உன் ஜாலிக்கு நான் தான் கிடைச்சேனா….. என்னால் எல்லாம் நடக்க முடியாது” 
“டேய்….. போடின்னு சொல்லாதடா மானங்கெட்டவனே….. அக்காவ போடின்னு சொல்ற….. அக்கா சொல்லு” என்றார் மீனாட்சி…  
“ஆமா ஆமா நொக்கா”
“டேய் என்ன சொல்ற….. இப்ப நீ வருவியா மாட்டியா” 
“வரமாட்டேன்”
“தம்பி நீங்க கிருஷ்ணனுக்கு போன் பண்ணுங்க…. வர வர ஒரு சொன்னபடி கேட்க மாட்டேன்றான்…… நீங்க போன் பண்ணுங்க நான் சொல்றேன்” என்றார் மீனாட்சி கங்காதரனிடம் 
“ஐயோ பெரியம்மா…. இதுக்கெல்லாம் எதுக்கு அப்பாவ டிஸ்டர்ப் பண்றீங்க….. இப்ப என்ன… நான் உங்க கூட கோயிலுக்கு வரனும் அவ்வளவுதானே….. வந்துட்டா போச்சு…..” என்று சமாதான கொடியை நீட்டியவாறு ‘சதிகாரி சிக்க வச்சிட்டல்ல…. உன்ன… நான் பாத்துக்குறேன்டி’ என மனதுக்குள் மீராவை திட்டினான்  
அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல……. பாலா மீராவை நோக்கி சென்றான். 
“பிசாசே…… ஏண்டி என்ன சிக்க வச்ச….” 
“டேய்….. நான் என்னடா செஞ்சேன்……. உங்க அண்ணன் தானே உன்ன கூட்டிட்டு போகச் சொன்னது” 
“ஏய்……. எங்க அண்ணன பேசாதடி……” 
“ஆமாமா….. வானத்தைப் போல அண்ணன் தம்பி இவங்க…… பேசினா குறைஞ்சு போயிடும்… போடா” என்றால் மீரா நக்கலுடன்…. 
“இப்ப எதுக்குடி என்ன வர சொல்லுறீங்க”  
“அது ஒன்னும் இல்லடி தங்கம்….. என்ன மட்டும் நடக்க சொன்னாங்க…… எனக்கு ஒரு கம்பெனி வேணும் இல்லையா…. அதனால தான் உன்னையும் கூட்டு சேர்த்துக் கொண்டேன்” என்றாள் சிரித்துக்கொண்டே…… 
“உனக்கு கம்பெனி வேணும்னு… அதுக்காக…….. என்னை ஏன் நீ பாடா படுத்துற” 
“வாடி செல்லம்….. அக்கா போறேன்ல… கூட வந்தால் ஜாலியா இருக்கும்” 
“உன்னை யாரு போ சொன்னா….. உன்னை யாரு போ சொன்னா….. அதிலேய என்ன வர சொன்னது மட்டுமில்லாம….. எங்க அண்ணனையும் பேசுறியா…..”  என்று மீராவின் தலையில் கொட்டினான்.. 
“ஐயோ…. அம்மா……. பெரியம்மா……… வாங்க” என்று வேண்டுமென்றே அலறினாள் மீரா. 
“டேய்…. பொம்பள பிள்ளைய அடிக்காத….. இன்னும் எத்தனை தடவை சொல்ல….. விட்ரா அவல…. அறிவே வராதா உனக்கு” என்று வசை பாடிக் கொண்டே வந்தார் மீனாட்சி. 
“அடிக்காதேன்னு சொல்லுங்க பெரியம்மா….. அதுக்காக இவளை பொம்பள பிள்ளைன்னு எல்லாம் சொல்லாதீங்க” 
“ஏன்டா…. அவளுக்கு என்ன” 
“ஆமா அவளுக்கு ஒன்னும் இல்ல….. நான் எத்தனை பொய்தான் தாங்குவேன்…… பாவம் பெரியம்மா சின்ன பையன தெரியுமா….” 
“யாரு…..? நீ….. சின்ன பையன்.. உனக்கு இருக்கிற வாய்க்கு” 
“அப்படி இல்லேன்னா உங்களையெல்லாம் சமாளிக்க முடியாதுல….. போய் சமைக்கிற வேலையை பாருங்க பெரிம்மா…… பசிக்குது…. போங்க போங்க…” 
“நீ எல்லாம் திருந்தவே மாட்டடா..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார் மீனாட்சி.. 
“ஏய்…. உண்மைய சொல்லுடி… நான் அடிச்சது உனக்கு வலிச்சுதா” என்றான் கோபத்துடன் பாலா. 
“இல்லையே…..” என்றால் தோள்களைக் குலுக்கியபடி மீரா. 
“அப்புறம் ஏன்டி அப்படி கத்துன…” 
“சும்மா தான்…. உன்ன பெரியம்மா கிட்ட மாட்டி விடலாம் இல்ல….. அதுக்காக” என்றாள் அலட்சியமாக.. 
“என்னை ஏன்டி அந்த எலும்புக்கூடு கிட்ட  மாட்டி விடுற…. எப்ப பார்த்தாலும் அது என்னையே கட்டம் கட்டி அடிக்குது….” 
“அதுக்கு உன் வாய் தான்டா காரணம்….: என்றாள் சிரித்துக்கொண்டே.. 
“ஆமா எப்ப பார்த்தாலும்….. உங்க அப்பா உங்க அப்பா சொல்லி….. எதையாவது சொல்லி….. என்னை எங்க அப்பாகிட்ட அடிவாங்கி விட்டுகிட்டு தான் இருக்கு” 
“டேய்….. பெரியம்மா ரொம்ப பாசக்காரங்கடா” 
“ஆமாமா… ஊருகுள்ள சொன்னாங்க” 
“போடா லூசு…” 
ஒரு வழியாக ஒரு வாரம் கடந்து ஓடியது…… கோயிலுக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது….. 
“ஏய்…… மீரா…. இது என்ன டிரஸ் போய் டிரஸ் மாத்திட்டு வா……” என்று அதட்டினார் மீனாட்சி. 
“இந்த ட்ரெஸ் தான் பெரியம்மா கம்பர்டபில இருக்கும்……..” 
“ஆம…… இது என்ன டிரஸ் மேலே இருந்து கீழே வரைக்கும் ஒரே மாதிரி இருக்கு” 
“நைட்டு தானே பெரியம்மா நடக்கிறோம்……. பெருசா எதுவும் வெளியில் தெரியாது……. ப்ளீஸ்…. விடுங்களேன்” என்று கூறியபடியே அவரை விட்டு நகர்ந்தாள் மீரா. 
“ஏய்……… நில்லு…..” என நிறுத்தியவர் “எங்கடி பேண்ட்…… போய் பேண்ட் போட்டு வாடி…… மேல துப்பட்டாவும் போடாம இருக்க” 
“பெரியம்மா ப்ளீஸ்……. ஏன் இப்படி பண்றீங்க……… நைட்டு தானே நடக்கிறோம்……. அவ்வளவு தூரம் நடக்கும்போது கால் வீங்கும்ல அதனாலதான் பெரியம்மா பேண்ட் போடல” 
“அதுக்காக பேண்ட் போடாமல் வருவ….” 
“பெரியம்மா இது கவுன்…… சுடிதார் இல்லை….. இந்த டிரஸ்சுக்கு  யாரும் பேண்ட் எல்லாம் போட மாட்டாங்க… தெரியுமா…..”  
“சரி சரி…… இந்த நகை போடு” 
“மா…… யாராவது நைட்ல நகை போடுவாங்களா…..? அதுவும் தனியா நடந்து போறோம்.. சேஃப்டி இல்ல பெரியம்மா….. உள்ள வைங்க காலைல போட்டுக்கலாம்” 
“ஆமாமா…. கோயிலுக்கு போகையில வெருங்கழுத்தோடையா  போவாங்க….. போடுன்னா போடு…” 
அமைதியாக நகையை வாங்கி அணிந்து கொண்டாள்….. பாலா வந்ததும் அனைவரும் கிளம்பினர்….. சென்றவர்களில் பாலாவும் மீராவும் மட்டுமே இளம் வயதினர் மற்றவர்கள் அனைவருமே வயதானவர்கள். 
“ஏய் போயும் போயும்…. நைட்ல…… உன் கைய பிடிச்சு நடக்குற அளவுக்கு வந்துட்டேன்டி….. என் ஆள் கூட போனா இப்ப எப்படி இருக்குன்னு தெரியுமா…… என் கெரகம் இதெல்லாம்..” என தலையில் அடித்துக்கொண்டு சலித்தான். 
மீரா அமைதியாகவே வந்தாள்…… அதை கண்ட பாலா…. “ஏய்……. இப்ப என்னடி பிரச்சனை உனக்கு……… ஏன் இப்ப அமைதியா வர்ற…..” என கோபமாக கேட்டான். 
“தெரியலடா…….. ஏதோ என் மனசு படபடனு அடிச்சுகுது…….. ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுதுடா……… ரொம்ப பயமா இருக்கு……..” எனவும் 
“இதுக்குதான் அந்த எலும்பு கூட சேராதேன்னு சொன்னேன்….. கேட்டியா…….? இப்போ அதுக்கு புடிச்ச லூசு உனக்கும் பிடிச்சிருச்சு” 
“டேய்….. வாய மூடிட்டு சும்மா இருடா…. நானே குழப்பத்தில் இருக்கேன்… நீ வேற ஏன்டா..?”  
“சரி……. என்ன ஆச்சுன்னு சொல்லு… கேட்போம்…. பொழுதாவது போகும் இல்ல…..” 
“அதான் சொன்னேன்ல… தெரியலடா……. ஆனா ஏதோ நடக்கப் போகுதுன்னு மட்டும் என் மனசு சொல்லுது” 
“அத நடக்கறப்ப பாக்கலாம்… இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சு இருக்க……” 
“போடா லூசு….. ஏதாவது பேசுவ…….” 
“சரி ஏதாவது பாட்டு போட்டு கேட்டுகிட்டே நடக்கலாமா…….?” 
“ம்….” என சம்மதம் செல்லவும் பாடலை போட ஆரம்பித்தான்……..
ஆசை தோசை அப்பளம் வடை……
ஆசைப்பட்டதை செய் செய் செய்…… 
மீரா திரும்பி பார்த்து முறைக்க……….. பாலா பாட்டை மாற்றினான் 
மொச்ச கொட்ட பல்லழகி…….
முத்து முத்து சொல்லழகி………
சீமையிலே பேரழகி………..
ஞ்சு வச்ச மார் அழகி……..
 என பாடல் தொடங்க மீரா சிரித்துவிட்டாள் 
“டேய்……… குட்டிசாத்தான் எனக்குதான் குத்து பாட்டு பிடிக்காதுன்னு தெரியும் இல்ல…… அப்புறம் ஏன்டா அதவே போட்டு கொல்ற” 
“எனக்கும்தான் மூஞ்சிய தூக்கி இருந்தா புடிக்காது…… நீ ஏன் அப்படி  இருக்க…..?” 
“அது…… சரி விடு இப்ப பாட்டு போடுவோமா……….” பாடல் ஒலிக்கத் தொடங்கியது………. 
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…………
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…………
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…………
கொடி நான்  உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி நான்…..
என் எண்ணம் என்னவோ………… 
“டேய்…….. கோயிலுக்கு போகையில என்ன பாட்டு போட்டு இருக்கீங்க…….” மீனாட்சி அதட்டவும்…… பாலாவும் மீராவும் மதுவிடம் சென்றனர். 
“பெரியம்மா………   உங்க அக்கா ஓவரா பண்ணுது…… என்னன்னு கேளுங்க……” என்றான் பாலா கோபமாக….. 
“அம்மா……. பெரியம்மா ரொம்ப திட்றாங்க மா……… இந்த டிரஸ் போட்டதுக்கு கூட கிட்ட திட்டு வாங்கிட்டு தான் வந்தேன்…..” என்றாள் மீரா சோகமாக…….. 
“அட விடுங்க……… பெரியம்மா இன்னும் ரெண்டு நாளைக்கு இருப்பாங்களா………..? அப்புறம் அவங்க வீட்டுக்கு போயிருவாங்க…….. அப்ப யாரு கேக்க போறா…….? நீங்க பாட்டுக்கு இருங்களேன்……. ரெண்டுநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க….” 
“அம்மா…… உண்மைய சொல்லு………. நீ திட்ட முடியாததை அவங்க திட்டுறாங்கன்னு  தான  அமைதியா இருக்க……..” என்றாள் மீரா. 
“ஏய்…….   அவங்களுக்கு குழந்தை இல்லடி……. அவங்க பேசுறதை போய் பெருசா எடுத்துக்கிட்டு இருக்க…..” 
“இப்படி சொல்லி தான் என் வாயை அடிச்சுட்டே இருக்க……. ஒரு வார்த்தை எதிர்த்து பேச விடுறியா அவங்கள…….. என்னமோ பண்ணு…….” 
“பெரியம்மா…….. உன் மகளுக்கு ஏதோ மனசு சரியில்லையா…… என்னன்னு கேளு……….” பாலா சொன்னான். 
“என்னடி…..” 
“ஒன்னும் இல்லமா…… ஏதோ……? என்னன்னு தெரியல……” 
“சரி விடு…….” என்றுவிட்டு மூவரும் முன்னே செல்ல….. மற்ற நால்வரும் பின்னே வந்தனர். 
மீரா நினைத்தது நடக்குமா……? இல்லை…… அவள் பயந்தது போல எதுவும் நடக்குமா………? பொறுத்திருந்து பார்ப்போம்………… 

Advertisement