Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 6
ஏ.கே அலுவலகம் சென்று அரை மணி நேரம் கழிந்தபின் தான் தன்னிலை அடைந்தாள் மீரா. மயக்கம் தெளிந்த பின்பும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. ஏ.கே வந்து பேசியபோது சுயநினைவில் தான் இருந்தாள். ஆனால் பதில் சொல்லதான் முடியவில்லை. ஏனோ மனம் மிகவும் சோர்ந்து காணப்பட்டது. அப்படியே மீண்டும் படுத்தவள்….. உறங்கி போனாள்….
மதிய உணவு நேரத்தில் எழுந்து வந்தவளை…… “இப்போ எப்புடிமா இருக்கு” என்று விசாரித்தார் மதியரசி.
“ம்….. நல்லா இருக்கேன் ஆன்ட்டி” என்றாள் மாறாத புன்னகையுடன்…..
“என்னம்மா ஆச்சு…..” என கவலையுடன் வினவ….
“அது….. ஒன்னும் இல்ல ஆன்ட்டி…. நைட் தூங்க கொஞ்சம் நேரமாயிடுச்சு. அதனால…. வெறும் தலைவலி தான் ஆன்ட்டி…… நீங்க கவலப்படுற அளவு ஒன்னும் இல்ல….” என்றாள் சமாளிப்பாக…
மதியரசி நம்பாமல் பார்க்கவும் “பசிக்குது ஆன்ட்டி….. சாப்பிட போகலாம் வாங்க” என்றவள்…. “மீனம்மா, சாப்பாடு வாசன வாசல் வரைக்கும் வருது….. அப்புடி என்ன சமச்சு வச்சுருக்கீங்க. வாங்க…… வாங்க ….. சீக்கிரமா எடுத்து வைங்க” என்றபடி சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து விட….. மதியரசியும் அவள் எதிரில் அமர்ந்தார். 
இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து எழவும் தொலைபேசி அழைக்க மீரா சென்று எடுத்தாள்.
“ஹலோ…..”
மீரா முடிக்கும் முன்னே மறுபுறம் பொறியத் தொடங்கியது. “ஏய்….. போன எங்கடி வைச்சுத் தொலஞ்ச….. உனக்கெல்லாம் எதுக்கு போன்….. தலைய சுத்தி தண்ணியில போட வேண்டியதுதான….. ஒரு மனுசன் எத்தன தடவதான் போன் பண்ணுவான்….. அறிவில்ல……” எனவும்….
“சாரி சார்….. நீங்க ஏதோ தப்பான நம்பர்க்கு கால் பண்ணிருக்கீங்க…. ப்ளீஸ் செக் பண்ணுங்க….” என்றாள் மீரா. ‘பாவம் என்ன அவசரமமோ….. யாரோன்னு நெனச்சு நம்மகிட்ட பேசிட்டாங்க’ என்று நினைத்து இவள் சொல்ல…..
“என் வீட்டு நம்பர் எனக்கு ரொம்ப நல்லா தெரியும் மீரா” என்றது எதிர்முனை….. அப்போது தான் புரிந்தது மீராவிற்கு…..
“கிருஷ்” வாய் தானாக கூற….
“ஆமா” என்றான் ஏ.கே
“சாரி கிருஷ்….. சாப்பிட வந்தேன். போன் ரூம்ல இருக்கு….. எடுத்துட்டு வர மறந்துட்டேன்” என்றாள் மீரா தணிவாக…..
“அம்மா போன் என்னாச்சு….. ஏன் அவங்களும் போன எடுக்கல” அப்போதும் கோபம் குறையாமல் கேட்டான். 
“அவங்களும் சாப்பிட வந்தாங்க….. போன் ரூம்ல இருந்துருக்கும் போல….. கவனிக்கல கிருஷ்” 
“சரி….. இப்போ நீ ஓ.கே தான”
“ஹாங்….. நல்லா இருக்கேன்” என்றதும்…..
“வச்சுடுறேன்” என அணைத்து விட்டான்.
அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அலுவலகம் வந்தவனுக்கு மீராவின் நினைவுகளை தடுக்க முடியவில்லை. முக்கியமான மீட்டிங் இருக்க….. அதை முடித்தவுடன் மீராவிற்கு அழைத்தான்….. அது எடுக்கப்படடாமல் போக….. தன் தாயிற்கு அழைக்க…… அதுவும் எடுக்கப்படாமலே இருக்க மாறி மாறி அடித்து ஓய்ந்து போனான்….. தீடீரென பயம் வந்து சூழ உடனே கிளம்பி விட்டான் வீட்டிற்கு…… அப்போதுதான் அன்று நடந்த மீட்டிங் பற்றி பேசுவதற்காக கதிர் ஏ.கேவின் அறைக்குள் நுழைந்தான்.
“சார்… இன்னைக்கு மீட்டிங்ல….” என ஆரம்பித்தவனை தடுத்தவன்…..
“எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம் கதிர். இப்போ நான் கிளம்பறேன்….. பாத்துக்கோ…..” எனவும்…..
“என்னாச்சு சார்….. ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க” என்றான்.
“வீட்ல அம்மா போன் அட்டண்ட் பண்ணல…… என்னாச்சுன்னு தெரில. போய் பாத்துட்டு வந்துடறேன்……” என்று கூறியபடியே கிளம்பினான் ஏ.கே.
“சார்…..”
“கதிர்….. எதா இருந்தாலும் அப்பறம் பேசலாம்” கண்டிப்புடன் வந்தது வார்த்தை….
“இல்ல சார்….. லேண்ட் லைன்க்கு ட்ரை பண்ணி பாக்கலாமே” தயங்கியபடி கூற…..
“எனக்கு ஏன் இது தோனல…..” என்றவன் அவசரமாக அழைப்பை ஏற்படுத்த….. அதையும் மீராவே எடுக்க…… அவளிடம் பொறிந்து தள்ளிவிட்டான்….. இருந்தும் கோபம் தணியாமல் இறுக்கத்துடன் அமைதியாக அமர்ந்துவிட்டான
போனை வைத்துவிட்டு திரும்பிய மீராவிடம் “என்னம்மா…. இந்த நேரத்துல கண்ணன் கால் பண்ணிருக்கான்…. என்ன விசயம்…?” என விசாரித்தார் மதியரசி….
“தெரியல ஆன்ட்டி….. போன் அட்டெண்ட் பண்ணலன்னு கோபமா பேசிட்டு வச்சுட்டாரு” 
“ஏன்…? உன் மொபைல எங்கம்மா….?”
“ரூம்ல இருக்கு ஆன்ட்டி”
“ஏம்மா….. எதுக்கு கால் பண்ணானோ தெரியல….. இனிமே இப்புடி மறக்காதமா… இப்போ அவனுக்கு கால் பண்ணி என்ன விசயம்ன்னு கேளுமா….” எனவும் நம்பரை கேட்டு டயல் செய்ய ரிங் முழுவதும் சென்று அணைந்துவிட….. அது எடுக்கப்படவில்லை.
“எடுக்கல ஆன்ட்டி….. கோபமா இருப்பாரு… அப்பறமா பேசிக்கலாம்” என்றாள்.
“அவன் கோவத்த அவ்வளவு லேசா நெனைக்காதமா….. என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது….. சரியான முரடன்” என்றார் பயத்துடன்….
“ம்…… சரி ஆன்ட்டி… அவர் வந்ததும் நான் பேசறேன் நீங்க கவலப்படாதீங்க” என்று தைரியம் சொல்லி ஓய்வெடுக்க அனுப்பி வைத்தாள்.
இரவு மணி பத்தாகியும் வராததால் மீண்டும் கால் செய்து பார்த்தாள்….. முதல் முறை எடுக்கப்படாமல் போக மீண்டும் அழைத்தாள்…… அப்போதும் எடுக்காததால்….. மதியரசியை வற்புறுத்தி சாப்பிட வைத்து தூங்க அனுப்பியவள் மணியை பார்க்க….. பதினொன்றிற்கு பக்கமாய் இருக்க மீண்டும் ஏ.கேவை அழைக்க……
“………” அட்டென்ட் செய்து பேசாமல் இருந்தான்.
“கிருஷ்”
“………”
“கிருஷ்….. சாரி. நிஜமா சாரி கிருஷ்….. ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க” என்று கெஞ்சினாள்.
“நீ போய் தூங்கு…. நான் வர லேட்டாகும்” எங்கே இன்று போல எதுவும் ஆகிவிடுமோ என்பதற்காக கூறினான்.
“இல்ல….. நீங்க வாங்க….. நான் வெயிட் பண்றேன்” 
“ஏய்…. போன வச்சுட்டு போய் படுடி” என்று கத்தியவன் அழைப்பை துண்டித்துவிட….. மொபைலை வெறித்தபடி அமைதியாக அமர்ந்துவிட்டாள் மீரா….
என்னதான் கோபமாக பேசினாலும் அவள் காத்திருந்தால்….? என்ற கேள்வி எழ ஒரு நொடிகூட தாமதிக்காமல் கிளம்பிவிட்டான்…..
அவன் நினைத்தது சரியே என்பது போல சோபாவில் அமர்ந்து இவனுக்காக காத்திருந்தாள். இதை பார்த்ததும் கோபம் பறந்தோட….. அவள் அருகில் சென்று “ஓய்….. உன்னதான் சாப்பிட்டு தூங்க சொன்னேன்ல….. ஏன் இன்னும் இங்கயே உக்காந்துட்டு இருக்க…..”
“ஏன் என்ன டின்னு சொன்னீங்க” என்று மீரா கேட்கவும் திகைத்து விழித்தான் ஏ.கே.
“அது…. எப்போ….?” என்றான் அறியாதவன் போல…
“ம்…. இன்னைக்கு போன் பேசும்போது….. ரெண்டு தடவயுமே சொன்னீங்க”
“சரி விடு….. ஏதாவது கோபத்தில சொல்லிருப்பேன்” என்றான் ஏ.கே சமாதானமாக
“இனிமே சொல்லாதீங்க”
“ஏன்”
“எனக்கு பிடிக்காது”
“அப்போ நான் அப்புடி தான் கூப்புடுவேன்”
“அப்போ…. நானும் உங்களுக்கு ஒரு பேர் வச்சுருக்கேனே…. அப்புடி தான் இனிமே உங்கள கூப்புடுவேன்” என்றாள் இதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து கண்களில் குறும்பு மின்ன….
“அடிப்பாவி…. இவ்ளோ நேரமா விளையாண்டியா…..?” என்றான் ஏ.கே.
“ஹ்ம்ம்ம்…. நான் உங்கள விட ஆறு வயசு சின்னவ…. நான் உங்கள பேர் சொல்லி தான கூப்பிடுறேன்”
“ம்…. சரி.. என்ன எப்புடி கூப்புடுவ”
“ம்….” என்றவள் இரண்டடி பின்னே சென்றவள் “பனமரம்ன்னு கூப்புடுவேன்” 
“ஏய்….” என்று ஏ.கே கூவவும் ஓடிவிட்டாள்….. ஒரு நிலையில் ஓட முடியாமல் மூச்சு வாங்க நின்றவளை நெருங்கியவன்….. வேகமாக தண்ணீர் எடுத்துவந்து பருக கொடுத்தான்.
“மீரா… உனக்கு ஏன் இவ்ளோ மூச்சு வாங்குது…..” என்றான் கவலையுடன்
“அ…. அது….. அது இப்போ ஓடி வந்தேன்ல.. அதான். வேறொன்னுமில்ல” என்றாள் புன்னகையுடன்….
அவளை விளக்க முடியா பார்வை பார்த்தவன்…. “சரி….. ஏன் காலையில டேப்லட் எடுத்துக்கிட்ட…. அது…. என்ன டேப்லட் மீரா” என்றான்.
“அது….. தலவலி டேப்லட் கிருஷ்….. தல வலிச்சுச்சு …..அதான்…. சரி வாங்க லேட்டாயிடுச்சு சீக்கிரமா சாப்பிட்டு தூங்கலாம்” என்றாள் பேச்சை மாற்றும் விதமாக…..
அவள் பேச்சை மாற்றுவது தெரிந்தும் எதுவும் பேசாமல் சென்றான். அவன் அமைதி பொறுக்காமல் “கிருஷ்…. ஆன்ட்டி என்கிட்ட ஒன்னு சொன்னாங்க” என்றாள்.
“என்ன சொன்னாங்க”
அதுவா….. என் பையன் முரடன்…. எந்த பொண்ணையும் மதிக்க மாட்டான்…. எந்த பொண்ணோடையும் பேசமாட்டான்… நீ என் பையன்கிட்ட அதிகமா பழகாதன்னு சொன்னாங்க…. நான் என்ன பண்ணட்டும் கிருஷ்”
“என் அம்மா அப்புடி சொன்னாங்களா மீரா….?” என்றான் ஏ.கே அறியாதவனை போல…..
“ம்…… ஆமா கிருஷ்” என்றாள் மீராவும் அவனை போலவே….
“நம்பிட்டேன்… போடி”
“சரிடா பனமரம்”
“ஏய் பனமரம்ன்னு சொல்லாதடி” என்றான் கோபமாக
“கோபப்படுறீங்களா கிருஷ்”
“ஆமா….”
“அப்போ அப்புடி தான் கூப்புவேன்….. பனமரம்”
சிரித்துக்கொண்டே….. “ஏன் பனமரம்ன்னு சொல்ற”
“அதுவா….. நீங்க ரொம்ப உயரமா கருப்பா இருக்கீங்க….. அதான்”
“ஏய்….. நான் ஒன்னும் கருப்பு இல்ல… நீ ரோஸ் கலர்ல இருக்கேன்னு என்ன கருப்புன்னு சொல்லுவியா…?” என்றான் ஏ.கே.
“ஆமா….. நான் ரோஸ் கலர்தான்…. நீங்க என் பக்கத்துல நின்னா கருப்பா தான தெரிவீங்க” எனவும் முறைத்தான் ஏ.கே.
“மீரா… நான் ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவியா….?” எனக் கேட்டான் சீரியசாக…..
“ம்……”
“நீ ஏன் இங்க வந்த” ஏ.கே கேட்டவுடன் சாப்பிட எடுத்து சென்ற கை அப்படியே அந்தரத்தில் நின்றது.
“அ….அது….அது…..” அவள் திணறவும்…
“எனக்கு உண்மை மட்டும் தான் வேணும் மீரா…..” என்றான் அழுத்தத்துடன்
அவள் அமைதியாக தலைகுனிந்து விடவும்….. அவனே தொடர்ந்தான் “உனக்கு மெடிக்கல் ப்ராப்லம் எதுவும் இருக்கா……?” அவன் இதயம் வேகமாக துடித்தது…. இல்லைன்னு சொல்லிடுடி என்று கூறிக்கொண்டே இருந்தான்.
ஆனால் மீராவோ எந்த பாதிப்பும் இல்லாமல் “நீங்க அதிகமா யோசிக்குறீங்க கிருஷ்….. அந்த அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்றாள்.
“ஆனா…. என ஆரம்பித்த ஏ.கேவை தடுத்தவள்…… “நானே சொல்றேன் கிருஷ்….. யூ நோ வாட்….. எங்க அம்மாகிட்ட கூட நான் சொல்லாத விசயத்தபத்தி கேக்குறீங்க….. டைம் வேணும் கிருஷ்….. நானே உங்ககிட்ட எல்லா விசயத்தையும் சொல்றேன்” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்….
என்ன முயன்றும் அவளால் தன் நினைவில் இருந்து மீள முடியாமல் போய்விட்டது…… அறைக்கு வந்து மறக்காமல் மருந்தை உண்டு படுத்தவள் கண்களை மூட அவள் வாழ்வில் நடந்தது கண் முன்னே ஓடியது…..
“நீ என் இடத்துக்கு நடந்து வாத்தா….. நான் நீ நெனச்சத நடத்தி காட்டுறேன்” என்றார் மீராவின் பெரியப்பா சுந்தரம்.
“நான் எப்புடிப்பா நடப்பேன்….. நீங்க எல்லாரும் விரதமெல்லாம் இருக்கீங்க….. நான் அப்புடியா….. இப்புடி கடைசி நேரத்துல சொன்னா எப்புடி…..? நான் ஆக்சுவலா கோயிலுக்கு போற ஐடியாலயே இல்ல” என்றாள் மீரா…..
“நான் என்னம்மா செய்வேன்….. நானா சொன்னேன்… சாமி சொல்லுது…..” 
“போங்க அந்தப்பக்கம்….. நீங்களும் உங்க சாமியும்…..”
“செருப்பால அடி நாய….. சாமி சொல்லிருச்சு ஒழுங்கா கிளம்பு…..” என முடித்துவிட்டார் சுந்தரம்….
“அப்பா….” கங்காதரனிடம் ஆதரவு தேட….. அவரோ….. “நீங்க சொன்னா சரிதான்….. மீராவையும் கூட்டிட்டு போங்க” என்றுவிட….. கூகுள் மேப்பை தட்டி ஊரிலிருந்து குலதெய்வம் கோவில் எவ்வளவு தூரம் என பார்வையிட தொடங்கினாள்….. ‘அய்யோ….. கார்ல போனாளே ஒன்றரை மணி நேரமாகும்…. இதுல நடந்து வேற….. கடவுளே…..’ என நினைத்துக்கொண்டே பார்க்க அது காட்டிய செய்தியில் தன்னை மறந்து “ஐயய்யோ……” என அலறினாள் மீரா….
“என்னாச்சு…..” என மீராவின் பெரியம்மா மீனாட்சி கேட்டார்…
“பெரியம்மா…… இதென்ன நம்ம கோவிலுக்கு முப்பத்தொம்பது புள்ளி ஒம்பது கிலோ மீட்டர்ன்னு காட்டுது….. அவ்ளோ தூரமா நடந்து போகனும்…..” எனவும் மீனாட்சி கோபத்தில் கொந்தளித்தார்……
“ஏன்டி இன்னும் கிளம்பவே இல்ல…. அதுக்குள்ள ஏன்டி அபசகுனம் பிடிச்ச மாதிரி…… அய்யய்யோன்ற….. அவ்ளோ தூரமா நடக்கனும்ன்ற…… மரியாதையா வாய மூடிட்டு இரு…. ஏதாவது நடந்து கோவிலுக்கு மட்டும் போக முடியாம ஆச்சு….” என மிரட்டல் தொனியுடன் நிறுத்தினார்……
மீரா சுதாரித்தாள்…… ‘அய்யய்யோ….. இவுங்க சாதாரணமா நடக்குறதவே நாம வாய் வச்சதால தான் அபசகுனமா நடந்துட்டதா சொல்லுவாங்க… இதுல நாம வேற வாய குடுத்துட்டமே….. சமாளி மீரா…..சமாளி… சிக்கிறாத..’ என நினைத்து சமாளிப்பாக…..”ச்சே…. ச்சே அப்புடி எதுவும் ஆகாது பெரியம்மா….. ‘ஆனா என்ன வச்சு செஞ்சுருவீங்களே….’ இப்ப என்ன நான் நடக்கனும் அவ்ளோ தான….. நடந்துட்டா போச்சு….. ‘மாட்டேன்னு சொன்னா மட்டும் விட்றவா போறீங்க’ நான் நல்லா இருக்கனும்ன்னு தான இதெல்லாம் பண்றீங்க….. உங்களுக்கு தப்பா எதுவுமே நடக்காது…… ‘எப்புடி நடக்கும்…. எல்லாத்தையும் நீங்க தான் எனக்கு நடத்திடுறீங்க….. அப்பறம் எப்புடி உங்களுக்கு நடக்கும்’ ” என்று அவள் பேசியதற்கு அவள் மனசாட்சியே கவுண்டர் விட்டது மீராவிற்கு…..
இதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மதுரம் மீனாட்சியிடம் “அக்கா…. அவ பேச்ச நம்பாதீங்க….. எப்ப பாத்தாலும் அபசகுனமாவே பேசுறா….. என்னன்னு கேளுங்க” என்றார்…
மீனாட்சி திரும்பவும் ருத்ர அவதாரம் எடுக்க…… “ம்ஹூம்….. அப்புடி எல்லா இல்ல பெரியம்மா….. ஒருநாள் மாயா சித்தி பால் கேட்டாங்க….. அன்னைக்கு பால பூனை குடிச்சுடுச்சு….. நான் பார்த்துட்டு பால் இல்ல சித்தின்னு சொன்னேன். அதுக்கு அவங்க பால் ஸ்ரீதேவி அத இல்லைன்னு சொல்லாத….. அப்புடின்னு சொன்னாங்க….. இது அபசகுனமா பேசுறதுக்கு அர்த்தமா பெரியம்மா” என்றாள்….
“நீ ஏன் இல்லைன்னு சொல்ற…. தீந்து போச்சுன்னு சொல்லு” என்றார் மீனாட்சி……
“அப்போ…… ஸ்ரீதேவிய தீந்து போச்சுன்னு சொல்லலாமா பெரியம்மா…..”
“மொதல்ல எதிர்த்து எதுத்து பேசுறத நிறுத்து…” எனவும் அமைதியானாள்.
“அது மட்டுமா….. விளக்கு ஏத்தி வச்சா என்ன சொன்னான்னு கேளுங்கக்கா” என்றார் மதுரம்…..
“என்ன சொன்ன……” என்றார் மீனாட்சி.
“அது….. விளக்கேத்தி ரொம்ப நேரமா எரிஞ்சுட்டு இருந்துச்சு….. அதான்….. விளக்க அமத்தி வைன்னு…..”
“அதென்ன அமத்தி வை…… மலை ஏத்தி வைன்னு சொல்ல முடியாதா உன்னால…..” என்று சீறினார்……
“அது…. வாய் தவறி….”
“அது அப்புடி இல்ல…. உனக்கு சாமின்னா கொஞ்சம் கூட பயம்…. பத்திரம் இல்லாம போச்சு…. கடைசியா எப்போ கோவிலுக்கு போன….?” 
மீனாட்சி இப்படி கேட்பார் என எதிர்பார்க்காத மீரா ‘ஐயோ…. இன்னைக்கு உனக்கு வேட்ட தான் மீரா உனக்கு….. எஸ்கேப்பாக ப்ளான் பண்ணு’ என எண்ணியவாறே…… “பொங்கலுக்கு…..” என்றாள்.
“ம்….. இப்போ என்ன விசேஷம்”
“சிவராத்திரி”
“அப்போ…. ஏதாச்சும் நல்ல நாள்….. பெரிய நாள்ன்னா தான் கோவிலுக்கு போவ அப்புடி தானே”
“இனிமேல் கரெக்ட்டா போறேன் பெரியம்மா….” எனவும்தான் அமைதியானார் மீனாட்சி.
 மீனாட்சி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே மதுரத்தின் அருகில் வந்தவள்….. அவர் மீண்டும் “அக்கா….” என ஆரம்பிக்க….. “அம்மா….. நீ மட்டும் இப்போ அமைதியா இல்ல…. ராத்திரி உன் வீட்டுக்காரர் சாப்பிட வரும்போது போட்டுவிட்டு…… சண்டபோட வச்சு…. சாப்பிட விடாம பண்ணிடுவேன்….. வசதி எப்புடி…..?” எனவும்….. செஞ்சாலும் செய்வா என நினைத்தவர்….. “ராட்சசி” என்றுவிட்டு “அக்கா….. அவள போய் மேல காய போட்ட துணிய எடுத்துட்டு வரச்சொல்லுங்க…..” எனவும்….. ‘விட்டா போதும்டா சாமி…..’ என்று ஓடிவிட்டாள் மீரா….
அவள் சென்றபின் அனைவரும் சிரித்தனர்…… “அத்தன பேரையும் அரட்டுறவ உங்ககிட்ட மட்டும் தான் அடங்குறா மதினி” என்றார் கங்காதரன்.
“அத விடுங்க தம்பி….. இப்போ மது காதுல என்ன சொன்னான்னு கேளுங்க” என்றார் நமட்டு சிரிப்புடன்…..
அவர் மீரா கூறியதை சொல்லவும் அனைவரும் சிரித்தபடி…. கோவிலுக்கு போக நாளை துணி எடுக்க செல்லலாம் என முடிவெடுத்தனர்……
இந்த பயணம் மீராவின் வாழ்வில் எதை தரப்போகிறது…..? என பொறுத்திருந்து பார்ப்போம்……

Advertisement