Advertisement


உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 5
என் வாழ்வில்…..
நான் காணும்
பல ஆயிரம் முகங்களில்….
உனது முகம் மட்டும் 
என் மனத்திரையில்…..
பதிய வேண்டுவதும்
ஏனடி… என் சகியே…..
மனதில் நீங்கா என்
கண்ணம்மா….!!
மீரா அழகுதான்….. அதிலும் ரோஸ் நிறமும், குண்டு கண்களும் அவளை பேரழகியாகவே காட்டும். ஆனாலும் அவளை வெறும் அழகியாக மட்டும் தன் மனம் எண்ணவில்லை என ஏ.கே முழுமையாக உணர்ந்தான். அதையே தன் நண்பனிடமும் கூறினான்.
“மச்சான் உன்ன மாத்துன அந்த பொண்ண நான் பாக்கனுமேடா…..” என்றான் சத்யா ஆவலுடன்.
“டேய்….. நானே லவ் பண்றேனா…. இல்லயான்னு குழப்பத்துல இருக்கேன்.. இதுல நீ வேற ஏன்டா…..?” என்று சலித்துக்கொண்டான் ஏ.கே.
“மச்சான்…. நீ தான் லவ் பண்றேன்னு சொன்ன.. இப்போ நீயே இப்புடி சொன்னா என்ன அர்த்தம் மச்சி”
“ஏய்…. லவ் பண்றேன்னு நெனைக்கிறேன்னு தானடா சொன்னேன்”
“ஓ…. சாரி மச்சான். காயப்போட்டுட்டு சொல்லு. அப்புறமா பாப்போம்”
“டேய்….. என் கண்ணு முன்னாடி மட்டும் இருந்த…. நீ போடுற மொக்க வரவர எல்லய மீறி போகுதுடா” என்றான் ஏ.கே கடுப்புடன்.
“சரிடா சீரியஸ்….. சொல்லு உனக்கு இப்ப என்ன தான் பிரச்சனை” என்றான் சத்யா.
“மச்சி லவ் எப்புடி மச்சி வரும்….”
“அதான் சொன்னேனேடா ட்ரெய்ன் பிடிச்சு”
“டேய்…… நீ மொதல்ல போன வை” என்று ஏகத்துக்கும் கடுப்பானான் ஏ.கே.
“மச்சான்….. என்ன விட்டா நீ வேற யார்கிட்டயும் இதபத்தி பேச மாட்ட. சோ…. உனக்கு வேற வழியே இல்ல நான் பேசுறத எல்லாம் கேட்டுதான் ஆகனும். சொல்லு சொல்லு” எனவும் தன் நிலையை நொந்து மீண்டும் சொன்னான்.
“இது லவ்தானா இல்ல சும்மா வெறும் ஈர்ப்பு தானான்னு தெரியனும்டா”
“ஓ….. அதுவா மச்சி… அவள பாக்கும் போது…. சோன்னு மழை, சில்லுனு காத்து, உன்ன சுத்தி வயலின் சத்தம், அவ மேல பூமழை இதெல்லாம் நடந்தா அது தான் மச்சான் லவ்” என்றான் சத்யா குறும்புடன்.
“டேய்….. இதென்ன சினிமாவா? இதெல்லாம் நடக்க….”
“தெரியுதுலடா வெண்ண!  மச்சான்….. நீ ஒரு பொண்ண பத்தி பேசிட்டு இருக்கடா…. அதுவும் இவ்ளோ நேரமா….. ஐ திங்க் ஸீ இஸ் த ஒன் மச்சி” என்றான் இன்பமாய்….
“மச்சி…. அப்புடினா…. நான் அவள லவ் பண்றேன்னு சொல்றயாடா? ” என்று கூறினான் ஏ.கே அப்போதும் குழப்பமாக…
“அது எனக்கு சரியா தெரியல மச்சான்… ஆனா அவகூட இருந்தா என்ன மறந்துடறேன்னு சொன்ன பாரு…. அவ தான்டா உனக்கானவ” என்றான்.
“அப்போ… நான் போய் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணவா….”
“எப்போ மச்சி”
“ம்…. இப்போ….. கால் பண்ணி சொல்றேன்”
“மச்சி நான் ஒன்னு கேக்கவா….”
“கேளுடா… மச்சி”
“நீ ஏன் இன்னும் சாகல”
“டேய்….”
“பின்ன என்னடா…? போன் பண்ணி லவ் சொல்றானாம். நீ எல்லாம் லவ் பண்ணலைன்னு யாருடா அழுதது” என்றான் கோபமாக…
“டேய்…. வேற எப்புடி தான்டா சொல்றது”
“மச்சான்… இப்போ உன்ன நெனச்சா என் மனசுல என்ன தோனுது தெரியுமா”
“சொல்லித்தொல… கேக்கலைன்னா மெஜேஜ் பண்ணியாச்சும் சொல்லிருவ…. அதுக்கு இப்பவே சொல்லு கேட்டுத் தொலையிறேன்” என்று சலித்துக்கொண்டான் ஏ.கே.
“டேய் எரும… அடுத்தவன் என்ன சொல்ல வர்ரான்னு கேட்டுட்டு பேச மாட்டியா? உன்ன கண்டிப்பா மதி ஆன்ட்டி பெத்துருக்க மாட்டாங்கடா….. ஆஸ்பத்திரில மாத்தி தூக்கிட்டு வந்துருப்பாங்க” என்றான் சத்யா கோபத்துடன்.
“ஏய்… சொல்லித்தொலடா மொதல்ல”
“மச்சான், ரெண்டு நாள் முன்னாடி ஆன்ட்டி கால் பண்ணாங்க. நீ பேசுனத சொல்லி ரொம்ப பீல் பண்ணாங்கடா. நான் உங்கிட்ட பேசறேன்னு சொன்னதுக்கு கூட வேண்டான்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்க நம்பிக்கையா சொன்னாங்க மச்சி…. என் பையனுக்கு ஏத்த பொண்ணு அவன தேடி வருவா… அவனே வந்து இவதான் என் பொண்டாட்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேப்பான்னு சொன்னாங்க. இன்னிக்கு அது நடந்துடுச்சு மச்சி. சந்தோசமா இருக்குடா” என்றான் சத்யா உண்மையான மகிழ்ச்சியுடன்…..
“உண்மை தான்டா…. ஏன்னே தெரியாம கல்யாணத்துல வெறுப்பா இருந்தேன். நான் இதுவரைக்கும் பாத்த பொண்ணுங்க மாதிரி தான் எல்லா பொண்ணுங்களும்ன்னு நம்பிட்டு இருந்தேன். எல்லாத்தையுமே அவ மாத்திட்டாடா” என்று கண்களில் கனவு மிதக்க கூறினான் ஏ.கே.
“சரி மச்சி…. கண்டிப்பா மதுரைக்கு போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து உன் மனச மாத்துன தேவதைய பாத்துட்டு போறேன். அதுவரைக்கும் கனவு கண்டுட்டு இரு. ஆனாலும் மச்சி…. உங்கிட்ட இந்தளவுக்கு எதிர்பாக்கலடா” எனவும் ஏ.கே சிரித்தான்.
“சரி வா மச்சான்” என்று அழைப்பை துண்டித்த ஏ.கேவிற்கு நம்ப முடியவில்லை. ‘நான் லவ் பண்றேனா? ‘ சிரித்துக்கொண்டே கண்மூடி தலைகோத ‘இந்த பார்வைக்கு என்னதான் அர்த்தம் கிருஷ்’ என கேட்டுக்கொண்டு மூடிய கண்களுக்குள் வந்து நின்றாள் மீரா. அப்போது கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஏ.கேவின் பி.ஏ கதிர். வெளியே கேட்ட பாடல் தன்னையும் அறியாமல் ஏ.கே உதட்டோரம் புன்னகை பூக்க செய்தது…..

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஏ… காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

எத்தனை நாட்களாய் இத்தனை காதலை
உனக்கென சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

நேற்றிரவு விழித்திருந்தேன்
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ
அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

உனை பிரிந்து எங்கே போனாலும்
நினைவோடு நீயும் வருவாயே
நீ இல்லா இடமும் எனக்கேது

உன்னருகில் சேர்ந்தே இருந்தாலும்
கண் முழுதும் நீயே நிற்பாயே
இமைகள் அது பாவம் இமைக்காது
எனை எதோ செய்கின்றாய்

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ… செய்தேனோ…
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

வீட்டு சுவற்றில் கிறுக்கும்
சிறு பிள்ளை போல நானும்
உந்தன் பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்

உன்னை பார்க்கும் நொடியில்
கண்ணாடி பார்க்க தோன்றும்
உந்தன் கண்ணில் என்னை நான் பார்க்கின்றேனே

ஒரு கனவாகி நீ கலைந்து போனாலும்
இரவெல்லாம் தொலைந்தே கனவுக்கு காத்திருப்பேன்

உளறியது வார்த்தை அல்ல
நீ வசிக்கும் இதயம் என் கண்ணே
உருகியது நானுமல்ல
நீ கொடுத்த காதல் பெண்ணே

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

கேளாமல் ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் கதிரிடம் “என்ன விசயம் கதிர்” என்று வினவினான் ஏ.கே. கவனமாக அறைக்கதவை திறந்தே வைக்க சொன்னான்.
“சார்… இன்னைக்கு நைட் டின்னர்க்கு நீங்க கார்த்திக் சார் பார்ட்டிக்கு போகனும்ன்னு சொன்னீங்க…. அதா நியாபகப்படுத்தலாம்ன்னு வந்தேன்” என்றான் கதிர் பவ்யமாக
“ம்…. ஓ.கே கதிர். நான் பாத்துக்குறேன்” என்று அவனை அனுப்பியவன் தன் தாயிற்கு அழைத்து இரவு வர தாமதமாகும் எனவும், தனக்காக காத்திருக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டு பார்ட்டிக்கு சென்றான்.
பார்ட்டி முடிந்து ஏ.கே வீடு திரும்ப நள்ளிரவானது. வீட்டினுள் நுழையும் முன் தோட்டத்தை பார்த்தான். ‘இன்னைக்கு மீராவ பாக்க முடியாது’ என்று பெருமூச்சுடன் வீட்டிற்குள் சென்றான்.
மீரா ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி கண்மூடி சோபாவில் சாய்ந்திருந்தாள். இந்த காட்சியை கண்ட ஏ.கேவிற்கு ஏகத்திற்க்கும் குஷி பொங்க மீராவை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான். எவ்வளவு நேரம் நின்றானோ பின் தன்நிலை அடைந்து அவளிடம் சென்றான். ‘நல்ல வேள பாக்கல ராச்சசி இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டே சாவடிப்பா’ என்று நினைத்தவன் ஒருபுறம் இருந்த ஹெட்செட்டை எடுத்து கேட்டான்.
காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ…..
தன்னையறியாமல் புன்னகைத்தான். ஹெட்செட்டை எடுத்தவுடன் விழித்த மீரா அவ்வளவு நெருக்கத்தில் ஏ.கேவின் முகத்தை கண்டு திகைத்து விழித்தாள். 
அதை கண்டு மேலும் சிரித்தவன் “இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் மீரா” என்றான் அவளை போலவே.
அதில் தன்னை மீட்டவள் “ப்பா….. நல்ல வேளை பேசுனீங்க கிருஷ். இல்ல மூச்சடச்சு செத்துருப்பேன்” என்றாள் பெருமூச்சு விட்டவாறு….
“ஏன்….?” என்றான் ஏ.கே.
“பின்ன….. உங்க முகத்த க்ளோஸ் அப்ல பார்த்து ரத்தக்காட்டேரி ரத்தம் கேட்டு வந்துடுச்சோன்னு பயந்துட்டேன்” என்றாள் பயந்தவள் போல முகத்தை வைத்து
“உன்ன….” என்று முன்னே சென்றவன் கையில் சிக்காமல்….. “சாப்பிட வாங்க” என்று நழுவிவிட்டாள் மீரா.
சாப்பாடு பறிமாறியவள் அவளும் அமர்ந்து உண்ணவும் “ஹேய்….. இவ்ளோ நேரமா சாப்பிடாம என்ன செஞ்ச” என்றான் ஏ.கே. 
“ம்….. சும்மா, உங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம்னு தான். ஆன்ட்டி தான் சொன்னாங்க என் பையன் நான் கூட உட்கார்ந்து சாப்பிட்டா தான் நல்லா சாப்பிடுவான்னு. ஆனா, அவங்க டேப்லட் சாப்பிடனும் இல்ல….. அதனாலதான் அவங்களை சாப்பிட்டு தூங்க சொல்லிட்டேன். உங்களுக்கு நான் கம்பெனி கொடுக்கிறேன்” என்று பாவனையுடன் சொல்லி முடித்தாள் மீரா. 
சாப்பிடும் போது “நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன் கிருஷ்” 
“ம்…. கேளு” 
“நான் வந்தன்னைக்கு மதியம் சாப்பாடு நல்லாதான் இருந்துச்சு… ஆனா, நேத்து காலையில சத்தியமா சாப்பாட வாயிலயே வைக்க முடியலங்க” எனவும் அவள் முகம் போனபோக்கை பார்த்து சிரித்துவிட்டான் ஏ.கே. “நிஜமாதான்….. நான் காரமா சாப்புட்டே பழகுனவ”  என்றாள் மீரா.
“தெரியும்” என்றான் சிரித்தபடியே
“எப்புடி “
“ம்….. சன் நியூஸ்ல சொன்னாங்க” என்று ஏ.கே கூறவும்…..
“ஹே….. என்கூட சேந்து உங்களுக்கும் ஹூயூமன் சென்ஸ் வந்துடுச்சு கிருஷ்” என்றாள் உதடு வளைத்து கையை வியப்பது போல ஆட்டி…
“ஏய்….. அதென்ன உங்கூட சேந்து நான் எப்பவுமே அப்புடிதான்”
“ம்….. சொன்னாங்க.. சொன்னாங்க” என்றாள் ஏளனமாக
“யார் சொன்னா”
“ம்…… பாலிமர் நியூஸ்ல சொன்னாங்க” என்றாள் கிண்டலாக…..
“ஹேய்….. காப்பி கேட். சரி… யார் சொன்னாங்கன்னு சொல்லு”
“உங்க அம்மா தான் சொன்னாங்க. என் பையன் ஒரு சிடுமூஞ்சின்னு…..” என்றாள் மீரா சிரித்துக் கொண்டே…..
“ம்க்கும்…. என்ன அசிங்கப் படுத்துறதுக்குன்னே எங்க அம்மா இருக்காங்க” அவள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்க “போதும்…..இந்த முகத்த பாத்தா பாவமாயில்ல. இப்புடியா சிரிச்சே கலாய்ப்ப”
“உங்க முகத்த பாத்தாலே கலாய்க்க தானா வரும் கிருஷ்” 
“நீ வேற எதுவோ என் கிட்ட சொல்லிட்டு இருந்த” மீரா சிரித்துக் கொண்டே இருக்கவும் பேச்சை மாற்றினான் ஏ.கே.
“ம்…. ஆமா… அதுக்கப்புறமா சாப்பாடு டேஸ்ட்டா இருக்கே எப்புடி கிருஷ்” என்றாள் அவன் கண்களை பார்த்தவாறே
“அது….. அம்மா உனக்காக சமைக்க சொல்லிருப்பாங்க” என்றான் ஏ.கே தோளை குலுக்கியபடியே…
“ம்ஹூம்…..” என்றவள் எதுவும் பேசாமல் எழுந்து “குட்நைட் கிருஷ்” என்று சென்றுவிட்டாள்.
அன்றைய பொழுது இனிமையாக கழிய….. அழகிய ஆதவன் அன்பு கரங்களை நீட்டி ஆதரவாய் தன் காதலியை அணைக்கும்….. அதிகாலை பொழுது அழகாக விடிந்தது.
மீரா எழும்போதே சோர்வாக உணர்ந்தாள். ஏனென்று புரியாததால் குளித்து வெளியே சென்றாள்.
கீழே மீராவிற்காக ஏ.கே காத்திருந்தான். “மீரா உனக்காக தான் வெய்ட்டிங்…. போலாமா” எனவும்
“எங்க” என்றாள் புரியாமல்
“ஏய்…. என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்க”
“இல்ல…. ஜஸ்ட் டயர்ட். நைட் லேட்டா தூங்குனதா இருக்கும்” என்று சிரமப்பட்டு புன்னகைத்து கொண்டே கூறினாள் மீரா.
“சரி. நீ போய் ரெஸ்ட் எடு…. நான் ஜாகிங் போய்ட்டு வந்துடுறேன்” என்று சென்றான்.
திரும்பி அறைக்கு வந்த பிறகு தலை சுற்றுவது போல் உணர்ந்தவள் கட்டிலில் சரிந்தவள் அப்படியே அரை மயக்க நிலைக்கு சென்றுவிட்டாள். மீனம்மா வந்து எழுப்பியதும் தான் தன் உணர்வு பெற்று எழுந்தாள்.
“என்ன மீனம்மா” என்றாள் சோர்வுடனே….
“சாப்பிட வாம்மா…. எல்லாரும் உனக்காகதான் காத்துருக்காங்க” என்றார் மீனம்மா வாஞ்சையுடன்.
“இல்ல மீனம்மா. டயர்டா இருக்கு…. நீங்க எனக்கு சாப்பாட சிரமம் பாக்காம மேல எடுத்துட்டு வந்த தரீங்களா. ப்ளீஸ்” என கேட்க…..
“ஐயோ….. ஏம்மா! இதோ ரெண்டு நிமிசத்துல எடுத்துட்டு வந்துர்றேன்” என்றபடி கீழே சென்றார் மீனம்மா.
அவரை அனுப்பி வைத்த மீரா தன்னை தானே நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. எவ்வளவு பெரிய தவறு இது. 
‘எல்லாம் தெரிஞ்சிருந்தும் நான் எப்புடி இப்புடி ஒரு தப்ப பண்ணினேன். சே! எது தெரிய கூடாதுன்னு நெனச்சு நான் இவ்ளோ தூரம் வந்தேனோ….. அது இங்க தெரிய படுத்த இது ஒன்னே போதுமானதா இருந்துருக்கும். அது மட்டுமா….. எனக்கு ஏதாவதானா இவுங்களுக்கும் எவ்ளோ பிரச்சன வரும்’ என யோசித்தாள்.
நேற்று இரவு வெகு நேரம் கழித்து உறங்கிய மீரா அவள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை எடுக்க மறந்துவிட்டாள். அதன் விளைவே இந்த சோர்வும், தலைசுற்றலும். இது முதல் முறை….. அதனால் என்ன செய்ய வேண்டுமென அவளுக்கு தெரியவில்லை. 
“ஐயோ” என தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டாள் மீரா.
“ஏய்….. ரொம்ப வலிக்குதா?” என்றபடி வந்து மீராவின் அருகில் அமர்ந்தான் ஏ.கே.
“இல்ல…. தலை வலிக்கல…. சுத்துது.. மயக்கமா வருது கிருஷ்” என்றபடி அவன் தோளிலேயே சாய்ந்துவிட்டாள் மீரா.
“என்னாச்சுடாம்மா…..” என்றபடி நிமிர்த்த…..
கடினப்பட்டு எழுந்து அமர்ந்தாள் மீரா. “சாப்பாடு” எனவும் ஏ.கே எடுத்து கொடுக்க சாப்பிட்டு மாத்திரைகளை உண்டாள் மீரா.
“மீரா….. என்ன மாத்திர இது…..”
எதுவுமே பேசாமல் அமைதியாக படுத்து விட்டாள் மீரா.
“மீரா….. மீரா…..” பயத்துடன் எழுப்ப முயற்சித்தான்.
கண் விழித்து பார்த்தவள் “கிருஷ்….. தூக்கம் வருது…. ப்..ளீ…..ஸ்” என்றவள் அப்படியே படுத்துவிட்டாள்.
தூங்கி எழுந்தா எல்லாமே சரியாயிடும் என நினைத்த ஏ.கே ஆபிஸிற்கு சென்றான்.
மீராவிற்கு என்ன நடந்தது என அவளது கிருஷிற்கு தெரியவருமா? அப்படி தெரியவந்தால் அவனது காதல் நிலைக்குமா? நிறைவேறுமா? காத்திருந்து காண்போம்….

Advertisement