Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 4
உன்னுடன் இருக்கும்….. 
ஒவ்வொரு நொடியும்…..
என்மனம்…….. பறவையில் 
இருந்து பிரிந்த இறகாய்
பறந்து திரிவதும்…..
ஏனடா…..? என் காதல் கண்ணா…!!!
காரிலிருந்து இறங்கிய ஏ.கே மொபைல் ரிங் கேட்க தோட்டத்தை நோக்கி சென்றான். அங்கே தன் முன்னால் அடிக்கும் மொபைலை பார்த்து சந்தோசமாக ஆன் செய்தாள் மீரா.
“ஹலோ….” துள்ளலுடன் ஒலித்தது அவள் குரல். 
“………”
“ஹேய்….. காண்டாமிருமே! நீ ஒரு பொண்ண லவ் பண்ணதே பெருசு. இதுல… அப்புடி ஒரு ப்ரபோசல். ச்சே…..சான்ஸே இல்ல. ஆமா எப்படி வீடியோ எடுத்த. என் மனச அப்புடியே உன் ப்ரபோசல் உன் பக்கமா சாச்சுடுச்சுடா”அதை கண்ட ஏ.கே புகைந்தான். யாரென்றே தெரியாத அவன்மேல் கோபம் கண்மண் தெரியாத அளவிற்கு வந்தது.
“……….”
“எனக்கு காட்ட….. இத நம்புற அளவுக்கு நான் முட்டாளா இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும்ல”
“……….”
“பின்ன…. உன் லவ்வு….. அந்த பத்ரகாளிய என்கிட்ட காட்டவேயில்ல… அட்லீஸ்ட் போன்ல ஹலோவாவது சொல்லவச்சியா…?  இவ்ளோ நாள்கழிச்சு இப்போதான் போட்டோவே காட்டுற” என்றாள் மீரா. இதை கேட்டபின் தான் ஏ.கேவிற்கு மூச்சே சரியாக வந்தது.
“……….”
“எப்போ வர்ர” ஆர்வமாக கேட்டாள் மீரா.
“……..”
“போடா….. போன வை நீ மொதல்ல”
“………”
“நிஜமாவா”
“……….”
“ஓ.கே. உனக்கு ஆபிஸ்க்கு டைமாச்சு…. நைட் கால் பண்ணு” என்றபடி மொபைலை அணைத்தவள் தன்னையே பார்த்தபடி நின்ற ஏ.கேவை பார்த்தாள்.
“என்ன மிஸ்டர் அரவிந்த் கிருஷ்ணா. எப்போ பார்த்தாலும் பின்னாடி நின்னு இப்புடி பாக்குறீங்க. ஆமா…. இந்த பார்வைக்கு என்னதாங்க அர்த்தம்” என்று கேட்க
“சும்மா… என ஆரம்பித்தவன் வாயில் விரலை வைத்து மூடினாள் மீரா.
திடீரென அவள் நெருங்க, அதுவும் வாயில் விரலை வைத்ததும் பதறி அவன் விலகவும் அவள் வாயில் விரல் வைத்து “உஷ்….” என்றாள். ஏ.கே புரியாமல் பார்க்கவும் ஒரு இடத்தை கை காட்டினாள். அங்கு பார்த்தவன் சிரித்தான் சத்தம்வராமல்…. 
மீராவோ ரசனையுடன் பார்த்தாள். அதைக்கண்ட ஏ.கே “அடுத்தவங்க கிஸ் பண்றத பாக்ககூடாது. தப்பு….” என மெதுவாக கூறியபடி கன்னத்தில் போட்டுக்கொள்ள…
மீராவோ, சிரித்தபடி “நான் தப்பே செய்யாத உத்தம சிகாமணின்னு உங்களுக்கு யார் சொன்னது கிருஷ்”
“ஹேய்…. சொல்லவே இல்ல. எத்தன பேர பாத்துருப்ப” என….. படக்கென திரும்பி முறைத்தாள்.
“கூல் பேபி….. எத்தன பேர் கிஸ் பண்ணத பாத்துருப்பன்னு கேட்டேன்”
“ம்….. அக்கியூரெட்டா தெரியல. பட் எப்புடியும் உங்க அளவுக்கு பாத்துருக்கமாட்டேன்”
“வாட்”
“பின்ன நான் இன்னுமே ரசிச்சு பாக்குறேன். ஆனா, நீங்க அப்புடி இல்லயே”
“யார் சொன்னா? நானும் ரசிச்சுதான் பாத்துட்டு இருந்தேன்” என்று கூறியபடி திரும்பி பார்த்தான் ஏ.கே.
“எங்க காணோம்”
“ம்….. மகாராஜா சரியா பாக்கலைன்னு இங்கயே நின்னுட்டு இருக்குமா”
“ஹேய்… அங்க இருக்கு. வா… நான் எப்புடி ரசிக்குறேன்னு பாரு” என்று மீராவின் கைபற்றி இழுத்தபடி நகன்றான்.
மீராவோ, ஏ.கேவின் கையை பற்றி நிறுத்தி “ஏன் கிருஷ் உங்களுக்கு இந்த கொலவெறி. அதுங்க இங்க இருந்தும் பறந்துடப்போகுதுங்க….”
“ஆமா. இது என்ன பறவ”
“புறா”
“ம்ப்ச்…. அது எனக்கு தெரியாதா? என்ன புறா”
“கள்ளிப்புறா”
“ஹேய்… எனக்கு தெரியலைன்னு சும்மா கதையளக்காத”
“இது கள்ளிப்புறா. சுமாரா 100 கிராம் எடை இருக்கும். மொத்தமாவே நம்ம ஊருல 300 – 350 தான் இருக்கும்” எனவும்…. அதிசயமாக அவளை பார்த்தான் ஏ.கே.
“உனக்கு பறவைங்கன்னா ரொம்ப புடிக்குமா?” என்று கேட்டான்.
“ம்…. ரொம்ப” என்றவள் நினைவு வந்தவளாக “ஆமால்ல. மறந்தே போய்ட்டேன் பாத்தீங்களா” எனவும்….
“என்ன?” என்றான் ஏ.கே புரியாமல்
“என்ன ஏன் அப்புடி பாத்தீங்க?” 
“அது….. உன் முடி எப்புடி இவ்ளோ நீளமா இருக்கு”
அவனை எகத்தாளமாக பார்த்தவள் “ம்….. யூரியா போட்டு வளத்தேன்” என்றாள் அதே எகத்தாளத்துடன்.
“ஓ….” என்றான் ஏ.கே சீரியஸாக….
அவன் முன்னே சென்று நின்றவள், “உங்க பார்வைக்கு என்ன தான் அர்த்தம் கிருஷ்” என்றாள்.
அவளை தவிர்த்து தாண்டி சென்றவன் “நீ நம்பலைன்னா எனக்கு ஒன்னுமில்ல. நான் உன் முடியதான் பாத்தேன்” என்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.
அவன் சென்ற திசையை பார்த்து சிரித்தவள், ‘ஒரு நாள் இந்த கேள்விங்க தீந்துடும். அப்போ என்ன சொல்றீங்கன்னு நானும் பாக்குறேன்’ என நினைத்தவள் “பரவாயில்ல. இவர்கூட நம்ம நாள் போரடிக்காது. ம்…. இன்ட்ரஸ்ட்டிங்” என்றாள் ரசனையாக. அதே துள்ளலுடன் உள்ளே நுழைந்தவள் மதியரசியும் ஏ.கேவும் பேச அதை கவனித்தபடி வாசலிலேயே நின்றுவிட்டாள் மீரா.
‘என்ன கண்ணா…. கார் வந்த சத்தம் கேட்டு ரொம்ப நேரமாச்சு. இவ்ளோ நேரமா என்னப்பா செஞ்ச?”
“அ…. அது…. அது வந்துமா…. நான்….”என திணறினான் ஏ.கே.
மகன் திணறுவதை கண்டு மனதிற்குள் சிரித்த மதி அவனை மேலும் சோதிக்காமல் “அதுசரி…. ஏதாவது போன் வந்துச்சாப்பா” என பேச்சை மாற்ற…. 
“ஆமாம்மா. அதான் தோட்டத்துல நின்னு பேசிட்டு வறேன்” என அவர் கூறியதை பற்றிக்கொண்டு ஏ.கேவும் சொன்னான். அதன் பிறகு பேச்சு அவர்கள் தொழிலை பற்றிமாற….. மீரா தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
அறைக்கு வந்த மீராவிற்கு 
யோசனையாக இருந்தது. ‘ஏன் கிருஷ் தோட்டத்துல என்கூடதான் இருந்தேன்னு சொல்லல? ஏன் பொய் சொன்னார்?’ என்று யோசித்தபடியே இருந்தாள்.
மறுநாள் விடியல்…..
ஆதவன் தன் கதிர்களால் பூமியை ஆக்கிரமித்த பின்பே மீரா கண்விழித்தாள். அவசரமாக குளித்து வெளியேற…. ஏ.கே ஜாகிங்கிற்கு கிளம்பினான். 
“குட் மார்னிங் கிருஷ்”
“மார்னிங்”
“எங்க”
“நொய்யல் ஆத்தங்கரையில ஜாலியா ஒரு ஜாகிங்” என்றான் புன்னகையுடன்.
“வாவ்… ஆத்தங்கரையா? எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் உங்க கூட வரவா?” என்றாள். மீராவின் ஆர்வம் அவளது கண்களில் பிரதிபலித்திட, மறுக்க நினைத்தும் முடியாமல் சம்மதம் சொன்னான் ஏ.கே.
ஏ.கே அவளை பிருந்தாவனத்தின் பின்னே அழைத்துச் சென்ன்றான். ‘கார்கூட எடுக்காம இங்க எதுக்கு கூட்டிட்டு வர்றார்’ என யோசித்தாள் மீரா. தோட்டத்தை தாண்டி பின்புறம் வீட்டை விட்டு வெளியேற ஆற்றங்கரை இருந்தது.
“ஹேய்….. என்னதிது. வீட்டுக்கும் ஆறுக்கும் இருபதடி தொலவுதான் இருக்கு” ஆச்சர்யமும், சந்தோசமும் கண்களில் மின்ன கேட்பவளை இமைக்காமல் பார்த்தான் ஏ.கே.
அவன் முகத்திற்கு முன் சொடுக்கிட்டு சுயநினைவிற்கு அழைத்து வந்தவள் “இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் கிருஷ்” என்றாள் குறும்பு குரலில் மின்ன… இப்போ என்ன சொல்வான் என்ற ஆர்வத்துடன் அவன் முகம் பார்க்க….
“அது….. இந்த காதோரமுடி நீயே வெட்டுனியா? இல்ல பார்லர்ல வெட்டுனிங்களான்னு பாத்தேன்” எனவும்….. வாய்விட்டு பலமாக சிரித்தாள் மீரா.
பின்னர் தன்னை நிலைப்படுத்தியவள் ‘ஏதோ ஒன்ன சொல்லிடுறார்டா மனுசன். சமாளிக்குறதுக்குன்னே பொறந்துருக்கு பயபுள்ள’ என்று நினைத்துக் கொண்டே ஏ.கேவை பார்க்க…. அவனோ இவள் சிரிக்க ஆரம்பித்ததும் சிலையானவன் தன்னை மீட்கவே இல்லை.
மீண்டும் சொடுக்கிட்டு ஏ.கேவை தன்னிலைக்கு மீட்டவள் “சரி…. உங்க ஆராய்ச்சி முடிவ சொல்லுங்க கிருஷ்” என்றாள் குறும்புடன்….
“எ…. என்ன….. ஆ…ரா…ய்..ச்.சி” என்றான் திக்கித்திணறி
“அதான் என்முடி எங்க?…. யார்….? வெட்டுனதுன்னு”
“அது….. ம்ப்ச்…. யார் வெட்டுனா எனக்கென்ன” என்றான் கோபமும், எரிச்சலுமாய்…..
அவனுக்கு அவன்மீதே கோபமாய் வந்தது. ‘நான் ஏன் இவள இப்புடி பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்தது மாதிரி பாக்குறேன்’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.
“உங்க ஆராய்ச்சி சரியான முடிவ சொல்லலையா கிருஷ்” என்றாள் தலை சாய்த்து கண் சிமிட்டி….
“ம்ப்ச்…..” என சலித்தவன் தன் ஜாகிங்கை ஆரம்பிக்க….. மீரா ஆறையும் அதன் கரையின் பசுமையையும் ரசித்தபடி வந்தாள்.
“நீ எல்லாத்தையும் ரசிப்பியா ” என்றான் ஏ.கே.
“அழகா இருந்தா ரசிக்கதானே செய்யும் கண்”
“ம்…..” என்றவன் அமைதியாய் ஜாகிங் செல்ல, மீரா ஆற்றங்கரையை ரசித்தவாறு நடந்தாள்.
‘நான் என்ன நெனக்கிறேன். ஏன் இவ என்ன மறக்க வைக்குறா? இவ என்கூட இருந்தா ஏன் எம்மனசு சந்தோசப்படுது’ என்று பல கேள்விகளை தன்னுள்ளே கேட்டபடி தன் ஜாகிங்கை தொடர்ந்தவன் தன் மொபைலில் ஓடிய பாடல் மாறவும்…. அதை கேட்டு ஆணியடித்தது போல் நின்றுவிட்டான்.
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்..!
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்..!
(வீசும் காற்றுக்கு…)

என்னையே திறந்தவள் யாரவளோ?
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?
வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..
மேகமே மேகமே அருகினில் வா..
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..
(வீசும் காற்றுக்கு…)

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…
விழிகள் முழுதும்.. நிழலா இருளா..
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..
சருகென உதிர்கிறேன் தனிமையிலே..
மௌனமாய் எரிகிறேன் காதலிலே..
(வீசும் காற்றுக்கு…)

மேகம் போலே என் வானில் வந்தவளே..
யாரோ அவள்.. நீதான் என்னவளே..
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..
(வீசும் காற்றுக்கு…) 

ஏ.கேவிற்கு குழப்பமாக இருந்தது. ‘நான் லவ் பண்றேனா? அதுவும் பாத்து ரெண்டு நாள் ஆன பொண்ண? மொதல்ல எனக்கு எப்புடி லவ் வரும்…. வராது. ஆமா, லவ் எப்புடி இருக்கும் ‘ மொத்தமாய் குழம்பிப் போனான்.
“ஹலோ….” என்று உச்சஸ்தாதியில் கத்தினாள் மீரா.
“ஆ…… ம்…. ம்.. என்ன” என்றான் திடுக்கிட்டு திணறியபடி….
“ஹாங்….. என்னவா….? ஒரே எடத்துல பதினஞ்சு நிமிஷமா நின்னுட்டு இருக்கீங்க…. ஆமா.. எப்போ பாத்தாலும் ஸ்டன்னாகி நின்னு அணுசக்தி ஆராய்ச்சி பத்தி யொசிச்சுட்டு இருப்பீங்களா? ” என்றாள் கிண்டலாக…..
“ஏன் அணுசக்தி ஆராய்ச்சி பத்திதான் யொசிச்சுட்டு இருக்கனுமா? நான் ஒரு ஆளபத்தி யோசிச்சேன்” என்றான் தோளை குலுக்கியபடி..
“பார்ரா….. ஒரு ஆளபத்தியா.. இல்ல……. உங்க ஆளபத்தியா….?” என்றாள் மீரா.
“ம்ப்ச்” என்றபடி வீட்டை நோக்கி நகர்ந்தான் ஏ.கே.
“ஒரு நாள் இல்ல ஒருநாள் நான் இதேபோல நீங்க கேக்குற கேள்விக்கு சலிச்சுட்டு போகல….. நான் நாராயணன் பேத்தி இல்ல” என்றாள் சவால் விடும் தொனியில் மீரா.
அவளை திரும்பி பார்த்து சிரித்தவன் “உனக்கு சவால் விட தெரியல பேபி. எல்லாருமே அம்மா மேலதான் சபதம் பண்ணுவாங்க” என்றான் மேலும் சிரித்தபடி
“அதுவா….. எனக்கு தாத்தான்னா ரொம்ப புடிக்கும். நீ யார்ன்னு கேட்டாகூட நாராயணன் பேத்தின்னுதான் சொல்லுவேன். அதான்…..” என்றாள் அசடு வழிந்தபடி. 
அதை பார்த்து மேலும் சிரித்தவன் “சரி வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்துச் சென்றான்.
ஆபிஸ் சென்ற ஏ.கேவிற்கு யோசனையாகவே இருந்தது. ‘உண்மையாவே நான் லவ் பண்றேனா? லவ்னா என்னன்னு எப்புடி தெரிஞ்சுக்குறது’ ஏன்று ஏ.கே தீவிரமாக சிந்திக்கும் போது அவனது மொபைல் ரிங்கானது. யாரென்று பார்த்தவன் மகிழ்ச்சியாக அழைப்பை ஏற்றான்.
“கரெக்டான நேரத்துல கால் பண்ணிட்டடா” எனவும் சத்யாவிற்கு தலைகால் புரியவில்லை.
“ஹலோ, அரவிந்த் தான பேசுறது” என மெதுவாக கேட்டான் சத்யா.
“நான் தான்டா மச்சான்”
“அத சொல்லித்தொலடா மொதல்ல. நான்கூட தப்பான நம்பர டையல் பண்ணிட்டனோன்னு நெனச்சேன்”
“ஏன்டா மச்சான்”
“பின்ன… எப்போ கால் பண்ணாலும் சாரி மச்சான் வேலையிருக்கு அப்பறமா பேசுறேம்ப… இப்போ என்னமோ கரெக்டான நேரத்துல கால் பண்ணிட்டடான்னா நம்பற மாதிரியா இருக்கு” என்றான் சத்யா ஆதங்கத்துடன்.
“சரிடா இப்போ எதுக்கு கால் பண்ண” என்றான் ஏ.கே.
“மச்சான் ஜாப் கன்பார்ம் ஆயிடுச்சு” என்றான் சந்தோசமாக
“மச்சி….. எங்கடா போஸ்டிங்” நண்பனுக்கு குறையாத மகிழ்ச்சியில் கேட்டான் ஏ.கே.
“மதுரைல மச்சான்”
“சூப்பர்டா…. சீக்கிரமா நம்ம ஊருக்கு மாத்திட்டு வந்துரு”
“சரி மச்சி. ஆமா, என்னடா ஏதோ கரெக்ட் டைம்ல கால் பண்ணதா சொன்ன ” என்று நினைவு வந்து கேட்டான் சத்யா.
“அது…. மச்சி லவ் எப்புடிடா வரும்”
“ட்ரெயினேறி வரும் மச்சி”
“போடா நாயே….. உன்ன போய் கேட்டேன் பாரு. என் புத்திய….” எனவும்
“ஐயய்யோ….. சாரி மச்சி. நீ எப்பவும் ஆபிஸ்க்கு ஷூ தானே போட்டுட்டு வருவ. வீட்டுக்கு போய் மறக்காம அடிச்சுக்கோ….” என்றான் சத்யா.
“டேய் உன்ன……”
“இப்போ ஏன் மச்சி உனக்கு இந்த கேள்வி”
“அது…. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் ஹெர் மச்சான்”
“யாரடா”
“மீரா மச்சி”
“மச்சி…. ஆர் யூ சீரியஸ். யாருடா அவ” என்றான் கிண்டலை விட்டு…….
“தெரியல மச்சி”
“போடா…..”
“ஆனா, என் வீட்ல தான் இருக்கா”
“புரியுற மாதிரி சொல்லித்தொலடா” என சத்யா எரிச்சல் படவும்….. மீராவை பற்றியும் அவளுடனான தன் சந்திப்புகளை பற்றியும் கூறினான்.
ஏ.கே கூறியதை கேட்ட சத்யா “மச்சி…. நீயா இது? அவ அவ்ளோ அழகாடா? ” என்றான்.
“ம்….. அழகா தான்டா இருந்தா…. ஆனா நான் இவளவிட அழகான பொண்ணுங்கள பாத்துருக்கேன்” என்றான் ஏ.கே. இது அளது அழகை மட்டும் மையமாக கொண்ட ஈர்ப்பு அல்ல என்பதை போல.

Advertisement