Advertisement

உன்னவன் உனக்கே….
உன்னவன் – 3
என் தாயின் வயிற்றில்….. 
அனுவாகி….. கருவான நாள் முதல்…..
 என் வாழ்வில் நான் கொண்ட தவத்தை 
நிவர்த்தி செய்து வரமளிக்க வந்த என்னை நீயும் …. 
உன்னை நானும்…. கண்டறியும் நாளும் 
எ(ன்)ந்நாளடா…..? என் கண்ணா…! 
மனங்கவர் மன்னா….!!!
இரவு வீட்டிற்கு வந்த ஏ.கே யோசனையுடன் அமர்ந்திருந்த மதியை கண்டு அவர் அருகில் சென்றான்.
“அம்மா, என்னம்மா யோசிக்குறீங்க”
மகனை கண்டவர் என்ன சொல்ல என யோசித்து “ஒன்னுமில்லப்பா…. நீ இன்னும் வரலையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்” என திணறிக்கொண்டே கூறினார்.  
மணியை பார்த்தவன் தன் தாய் தன்னிடம் உண்மையை மறைக்கிறார் என புரிந்து அமைதியாக ரூமிற்கு சென்று ப்ரெஸ் ஆகி வந்தான்.
“வா கண்ணா சாப்பிட போலாம்” என மகனுடன் உணவுண்ண சென்றார் மதியரசி.
உணவை பரிமாறிய மீனம்மா, “அம்மா, அந்த பொண்ணு சாப்பிட வரலையே நான் போய் கூட்டியாரவா?” என கேட்க…
“இல்ல மீனம்மா, ட்ராவல் பண்ண களைப்புல அவ தூங்கறா. தொந்தரவு பண்ண வேணாம்” என அனுப்ப…. தன் தாயை தீயாய் முறைத்தான் ஏ.கே.
“இவதான் உங்கள பாத்துக்க போறாளா..” என கோபமாக கேட்டான்.
“இப்போ என்ன? அவ டயர்டா இருந்தா நான் தான் போய் ரெஸ்ட் எடும்மான்னு அனுப்பி வச்சேன்” எனவும்…. அவரை ஆழமாக ஒருமுறை பார்த்தவன் அமைதியாக உணவை உண்டுவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.
அறைக்கு வந்தவனுக்கு தன் தாய் ஏன் இவ்வாறு கூறினார் என்று புரியவில்லை….. எதற்காகவோ அவள் இந்த வீட்டில் இருந்தே ஆகவேண்டும் என்று அவர் நினைப்பது போல் தோன்றியது. 
மதியும் அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தார்…. தான் கூறியதை தன்மகன் நம்பவில்லை என்பது அவருக்குத் தெரியும். என்ன ஆனாலும் சரி…. அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பும் சந்தர்பத்தை தன் மகனுக்கு தரக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். அவருக்கு ஏனோ அவள்தான் தன் மகன் வாழ்வையும், எண்ணத்தையும் மாற்றுவாள் எனத்தோன்றியது.
நாளை அவள் இங்கே தங்க சம்மதித்த காரணத்தை பற்றி பேசியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் உறங்கினார்.
தன் தாயை கவனிக்க வேண்டும்…. ஏன் அவளை இங்கே தங்க வைக்க முடிவெடுத்தார் என தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்த பின் தான் உறக்கம் வந்தது ஏ.கேவிற்கு…….
மறுநாள் விடியல்….. அதிகாலை ஐந்து மணி….
தன் உறக்கத்திலிருந்து விழித்த மீரா ஒரு நிமிடம் எங்கிருக்கிறோம் என விழித்தவள் முன் எல்லாம் நிழற்படமாய் ஓட….. எழுந்து சென்று குளித்துவிட்டு கீழே சென்றாள்.
மதுரம் தன் வீட்டில் அனைவரும் குளித்ததும் பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டே ஆகவேண்டும் என்பார். அந்த பழக்த்தில் நேரே பூஜையறை உள்ளே சென்றாள். 
விளக்கேற்றிவிட்டு சுத்திப் பார்க்க அங்கு சிவன் படமே அதிகம் இருந்தது. ஏனோ அவளுக்கு பாடத் தோன்றியது. கண்மூடி அமர்ந்தவள்….

போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என ஆரம்பித்து…..
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
முடித்து இறைவனை வணங்கி எழுந்து திரும்ப அங்கு தாயும், மகனும் நின்றிருந்தனர். ஆரத்தி தட்டை நீட்ட மதி கும்பிட….. பிரம்மித்து அவளையே பார்த்திருந்தான் ஏ.கே. மதி அவனை உலுக்க தன்னிலை அடைந்தவனிடம் தட்டை காட்டியவளிடம் “நான் குளிக்கல” என்றான்.
தட்டை மீண்டும் உள்ளே வைத்து திரும்பியள் அப்போதும் அவளையே பார்த்தபடி நின்ற ஏ.கேவிடம் வந்தாள்.
“ஏன் இப்புடி பாக்குறீங்க ” என்றவளிடம்…..
‘சே… இப்புடி மானத்த வாங்கிட்டியேடா? கெத்து கெத்து ‘என்று மனதில் கூறிக்கொண்டு….
“உன் ஹைட் என்ன?” என்றான்.
அவன் கேட்ட விதத்தில் சிரித்தவள், “இத கேக்கவா இப்பிடி பாத்தீங்க” 
“ம்ப்ச்….” என சலித்தவனிடம்
“ஓ.கே…ஓ.கே.. கூல்.. ம்…… ஒரு மூன்றயடி இருப்பேன்” எனவும்
“வாட்” என அதிர்ந்தான்.
“ஐயோ…. இல்லையா? அப்போ ரெண்டரை” என அப்பாவியாக கூறினாள்.
அவன் திரும்பி நடக்க …. “ரிலாக்ஸ் பாஸ் பைவ் டென்” என்றாள். அவனோ திரும்பி பாராமல் சென்று விட்டான்.
“நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டே…. ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே?” என்று அவள் கூற நின்று திரும்பிப் பார்த்தான். 
புரியாமல் “என்ன கேள்வி” என்று கேட்டான். 
“அதாங்க நீங்க ஏன் என்ன அப்புடி பாத்தீங்கன்னு” 
“அதான் சொன்னேனே” 
“நீங்க சொன்னத கேட்கல….. உண்மை தான் கேட்டேன்” 
“உண்மை அதான் நீ நம்பினாலும் நம்பலன்னாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை” என்றவுடன் நிற்காமல் திரும்பி சென்றான். 
ஏனோ ஏ.கேவை வம்பிழுக்க மீராவிற்கு மிகவும் பிடித்திருந்தது…… அதோடு மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அவன் சென்ற திசையை பார்த்து சிரித்துக்கொண்டாள்.
காலை உணவு வேளையில் மூவரும் உணவு உண்ண அமர்ந்தனர். இட்லியை ஒருவாய் வைத்த மீராவின் முகம் அஷ்ட கோணல் ஆனது…. ஏனெனில், அது பத்திய சாப்பாடு…. மதியரசி இதய நோயாளி எனவே அவருக்கு பத்திய சாப்பாடு தான் வேண்டும். தனக்கு மட்டும் எதுவும் புதிதாக சமைக்க வேண்டாம் என ஏ.கே கூறிவிட்டான். எனவே அந்த வீட்டில் எப்போதும் பத்திய சாப்பாடு மட்டுமே…. 
“என்னம்மா லேம்ப் போஸ்ட் சாப்பாடு எப்படி இருக்கு” அவள் முகத்தை பார்த்து வேண்டுமென்றே கேட்டான். 
“ம்….. நல்லாருக்கு” என்றாள் ஒரு மாதிரி இளித்துக்கொண்டே…
அவள் முகத்தைப் பார்த்தவன் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கினான். “மீனம்மா…. இன்னும் ரெண்டு இட்லி வைங்க… விருந்தாளியை நல்லா கவனிக்க வேண்டாமா” 
“ஐயோ வேணாம்… அது… நான் நிறைய சாப்பிட மாட்டேன்” என்று அவசரமாகக் கூறினாள் மீரா.          
 அதற்கு மேலும் அவளை சங்கட படுத்தாமல் “ஆமா…. உன் பேர் என்ன சொல்லவே இல்ல” என்றான். 
அவன் முகத்தைப் பார்த்தவள் “நிஜமாவே தெரியாதா இல்ல….. சும்மா கேட்குறிங்களா”  என சந்தேகமாக கேட்டாள். 
“ம்ப்ச்…… சொல்றதுன்னா சொல்லு இல்லேன்னா பேசாம இரு” 
“மீரா. உங்க பேரு” 
“நான் உன்ன கேட்டதுக்கு நீ என்ன கேக்குறியா” 
“அப்படிலாம் இல்ல நெஜமாவே தெரியாது… சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்”  
“அரவிந்த் கிருஷ்ணா”
“ம்…. பேர் ரொம்ப பெருசா இருக்கே…. ஷார்ட் ஃபார்ம் என்ன”
“ஏ.கே”
“ஆஹா…. பார்ரா.. கெத்து….. நான் அப்புடிலாம் கூப்பிட மாட்டேம்பா”
“சரி வேற எப்புடி கூப்புடுவ”
“ம்…… கிருஷ்ணர் எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி அதனால கிருஷ்” என்றாள்.
“ம்…. நல்லாதான் இருக்கு. சரி அப்புடியே கூப்பிடு” என ஒப்புதல் அளித்தான்.
மதியரசி இதை கவனித்துக்கொண்டு தான் இருந்தார். ஆனால் அவரைதான் இவர்கள இருவரும் கவனிக்கவே இல்லை. இதை பார்த்தவர் தன் மகன் விரைவில் திருமணத்திற்கு சம்மதித்து விடுவான் என நம்பினார். 
அனைவரும் சாப்பிட்டதும் கிருஷ், மீராவை அழைத்து “இது எல்லாம் அம்மா சாப்பிட வேண்டிய டேப்லெட்ஸ்” என அனைத்தையும் எடுத்து எந்தெந்த வேளைக்கு எதெதை சாப்பிட வேண்டுமென கூறினான்.
அதை கேட்டுக்கொண்டவள் அவன் கூறி முடித்ததும் “ஒரு நிமிஷம் கிருஷ்” என்றுவிட்டு தன்னறைக்கு சென்றாள்.
கிருஷ் மருந்துகளை பற்றி சொல்லவும் தான் மீராவிற்கு தான் சாப்பிட வேண்டிய மருந்துகள் நினைவிற்கு வந்தது. ஏனோ திடீரென மனம் பாரமானது போல தோன்றியது. கடினப்பட்டு தன்னை சரிசெய்து கீழே வந்தாள் மீரா.
“என்னாச்சுமா.. ஏன் அவசரமா மேல போன” என மதியரசி கேட்டார்.
“ஒன்னுமில்ல ஆன்ட்டி ஒரு முக்கியமான கால் வர வேண்டியது இருந்தது…. மொபைல மேல வச்சிட்டேன்… அதனாலதான்” என்றாள் மீரா.
அதன்பின் தன் தாயின் வழமையைப் பற்றி மேலும் சொன்ன கிருஷ் இருவரிடமும் விடை பெற்று அலுவலகம் சென்றான். மருந்துகளை உண்டபின் மதியரசி ஓய்வெடுக்க சென்றார்.
தோட்டத்திற்கு சென்ற மீரா தன் வீட்டிற்கு அழைத்து பேசினாள். பின் தன் பொழுதை நெட்டித் தள்ள மாலை நேரம் பேச வேண்டுமென மதியரசி அழைத்தார்.
“எனக்கு நீ ஒரு பெரிய ஹெல்ப் பண்ணனும்மா”
“ஹெல்ப்பா…. என்னன்னு சொல்லுங்க ஆன்ட்டி” 
“எனக்கு செய்யறேன்னு வாக்கு கொடும்மா” 
“ப்ளீஸ் ஆண்ட்டி…. வாக்கு மட்டும் கேட்காதீங்க. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு…. வாக்கு கொடுத்தால் மாற மாட்டேன். அதனால நீங்க பஸ்டு என்னன்னு சொல்லுங்க  அதுக்கப்புறம் நான் சொல்கிறேன் என்னால முடியுமா முடியாதான்னு.சாரி ஆன்ட்டி” என்றாள். 
“மீரா நான் உனக்கு ஒரு வேலை பார்த்திருக்கிறதா சொன்னேன்ல அது என்னன்னா….. என் பையன கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணுமா” 
“இதுல நான் என்ன ஆன்ட்டி பண்ணமுடியும்” என்று புரியாமல் கேட்டாள். 
“என் பையனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலைமா…. ஆனா, கல்யாணமே வேணாம்னு முடிவா சொல்றான்…. அது ஏன் எதுக்குன்னு அதப்பத்தி அவன் எதுவுமே சொல்லவே இல்ல. அவனை எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கனும். அத நீ தாம்மா பண்ணனும்” 
“இதை நான் எப்படி ஆன்ட்டி பண்ண முடியும்…” குழப்பத்துடனும், ‘என்ன இவங்க எப்படி இப்படி பண்ண சொல்றாங்க’ என்று எரிச்சலுடனும் கேட்டாள். 
மேலும் அவளே தொடர்ந்து “எனக்கு அவர பத்தி ஒன்னுமே தெரியாதே ஆன்ட்டி…. அப்படி இருக்கும்போது நான் சொன்னா எப்படி கேட்பார்” 
“மது உன்ன பத்தி போன் பண்ணி சொன்னப்போ…. நீதான் என் பையனோட வாழ்க்கைய மாத்த போறேன்னு என் மனசுக்கூ தோணுச்சு…. நீ எனக்காக முயற்சி மட்டும் பண்ணுமா. அதுக்கு மேல கடவுள்விட்ட வழி. ப்ளீஸ்மா…. எனக்காக” 
“ஐயோ ப்ளீஸ் எல்லாம் வேணாம் ஆண்ட்டி. என்னால முடிஞ்சத உங்களுக்காக பண்றேன். ஆனா உங்க பையனுக்கு என்ன நடந்தது எப்ப இருந்து இப்படி மாறுனாருன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்” 
“எனக்கே தெரியலம்மா கல்யாணம் பண்ணிக்க சொன்னா இப்ப வேண்டாம் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தான். ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் வேண்டாம்னு தீர்மானமா சொல்லிட்டான்” 
“ஆனா எதுவுமே தெரியாம நான் என்ன ஆன்ட்டி பண்ணமுடியும்ன்னு நினைக்கிறீங்க” 
“என் பையன் எந்த பொண்ணையும் மதிக்க மாட்டான். ஆனா உன் கூட நல்லா பழகுறான். அது ஏன்னு அவனுக்கே தெரியல…. அதனாலதான் சொல்றேன் நீ நினைச்சா இத பண்ண முடியும்” 
“என்னால முடிஞ்சத பண்றேன் ஆன்ட்டி” 
“அது போதும்மா எனக்கு” மீராவின் கைகளைப் பற்றி கண்கலங்கி கூறினார் மதி. 
“ப்ளீஸ் ஆன்ட்டி அழாதீங்க…. என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரை பண்றேன்.”
“ஆனா ஆன்ட்டி உங்க பையன் யாரையுமே மதிக்கமாட்டார் என்ன மட்டும் மதிக்குறார்ன்னீங்க. இப்போ நான் இப்படி பண்ணா அது மாறிடாதா”
“அப்புடி ஒரு நெலம வந்தா…. நான் கண்ணன்கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லிடுறேன்மா”
“சரிங்க ஆன்ட்டி…. எனக்கும் கொஞ்சம் மைண்ட் டைவர்சன் வேணும். நான் என்னால முடுஞ்சத கண்டிப்பா செய்யறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்று யோசிக்க ஆரம்பித்தாள். 
‘இத நாம எப்படி பண்ண முடியும்… இவங்க ஏன் நம்மள பண்ண சொல்றாங்க…. இதைப்பத்தி நாம பேசினா கிருஷ்  என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவாரு…. எல்லாத்துக்கும் மேல நான் ஏன் அவங்ககிட்ட முடியாதுன்னு சொல்லாம வந்துட்டேன்’  இப்படி விடை தெரியாத பல கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள். 
ஆபீஸுக்கு சென்ற ஏகேவிற்கு மீராவை பற்றிய யோசனை தான் இருந்தது ‘நாம ஏன் இவகிட்ட இவ்வளவு க்ளோஸா பழகினோம். ஏன் இவ மேல நம்ம அறியாமலேயே நமக்கு மரியாதை வருது’ 
‘நான் பண்ணறது சரிதானா? இவள நெருங்க விடலாமா? ஏன் இவகூட இருக்கும்போது என்னயே நான் மறந்துடறேன். அவகிட்ட என்னமோ இருக்கு’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஏகே வாழ்வில் தன் தாயைத் தவிர வேறு எந்த பெண்ணிற்கும் மரியாதையும் கொடுத்ததில்லை.
ஏகே இயல்பிலேயே சற்று கருமை நிறம் கொண்டவன். அது காரணமாக தாழ்வு மனப்பான்மையும் உண்டு. அவனது பணத்திற்காக நிறைய பெண்கள் அவனிடம் பழகினர். அதனால் பெண்கள் என்றாலே அவனுக்கு ஏரிச்சலும் மரியாதை இன்மையும் மட்டுமே தோன்றும். எந்த பெண்ணிடமும் நெருங்கிப் பழக மாட்டான். ஆனால் மீராவிடம் பழகுவது அவனுக்கே புதிதாக இருந்தது. ஏனோ மிகவும் பிடிக்கவும் செய்தது.
ஆனால் இது சரியாக வருமா என குழம்பினான். இது சரி வருமா? மீரா மத்திய அரசுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாளா? ஏ கே திருமணத்திற்கு சம்மதிப்பானா? 

Advertisement