Advertisement

உனக்கானவன் உனக்கே 
உன்னவன் – 2 
நம்……. உணர்வுகளை 
நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
அது……. நம்மை 
கட்டுப்படுத்தக் கூடாது ………
கோயம்புத்தூர்…. வெள்ளலூர்……. பிருந்தாவனம் என்ற அந்த பிரம்மாண்டமான நவீன ரக வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்புறம் இருந்து இறங்கிய நிரஞ்சன் பக்கத்து கதவை திறந்து விட மீரா இறங்கினாள். அவளது அழகிய முகம் கலை இழந்து காணப்பட்டது.
 நிரஞ்சன் “நீ தங்க இந்த வீட்டுல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இங்க உன் பிரச்சனைய பத்தி யாருமே பேச மாட்டாங்க. நீ அதவிட்டு  எவ்வளோ சீக்கிரமா வெளிய வர முடியுமோ வரப்பாருமா” என்று கூறியவாறு வீட்டை நோக்கி சென்று அழைப்புமணியை அழுத்தினான். 
கதவை திறந்துவிட்டவரிடம் “மதி அன்ட்டியை பார்க்கனும்” என்று கூறினான். அவர் அழைத்துச்சென்று ஹாலில் உள்ள சோபாவில் அமர சொல்லிவிட்டு சென்றார். 
அவர் சென்ற பின் நிரஞ்சன் ” மீரா, நீ இன்னொரு முறை நல்லா யோசிச்சு சொல்லு. இங்கே தங்கி தான் ஆகனுமா? ஏன் இவ்வளவு பிடிவாதம் உனக்கு” என்று இயலாமையுடன் கேட்டான். 
தான் நேற்று அவ்வளவு கூறி இளகாதவள் இன்று தான் பேசியதை கேட்டு இளகி விடமாட்டாள் என நன்கு தெரிந்தும் மனம் கேளாமல் கேட்டுவிட்டு அவள் முகம் பார்த்தான் நிரஞ்சன். 
“அண்ணா, நான் அங்க நம்ம வீட்டுல இருக்க மாட்டேன்னு மட்டுமே நான் சொன்னேன். அண்ட் அங்க எல்லாருக்கும் காட்சிப்பொருளாக எனக்கு சுத்தமா விருப்பமேயில்லை. ப்ளீஸ் இதப்பத்தி நாம நெறய பேசிட்டோம் திரும்பவும் வேண்டாமே” என்று முடித்துவிட்டு…….
“சரி இங்க என்ன சொல்லி தங்க வைக்க போற அதப்பத்தி சொல்லு” என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு…..
“நீ இங்க நம்ம அம்மாவுக்கு ரொம்ப முக்கியமான ஒருத்தரோட பொண்ணாதான் அறிமுகமாகப்போற. அவங்களுக்கு உன்ன பத்தியோ உனக்கு நடந்த பிரச்சனைய பத்தியோ எதுவும் தெரியாது” என்றான்.
“பின்ன ஒரு விசயம் என்று நிரஞ்சன் ஆரம்பிக்க மதி அங்கே வந்து சேர இவர்கள் இருவரின் பேச்சு தடைபட்டது.
தன் தாயின் தோழி என்றவுடன் தன் தாயை போன்ற ஒருவரை தான் நிரஞ்சன் எதிர்பார்த்தான். ஆனால் வந்தவர் தன் தாயின் வயதை ஒட்டிய ஆளுமையும், கம்பீரமும் ஒருங்கே அமைந்தவராய் இருந்தார். அதோடு அவர் கண்கள் எதிரில் இருப்பவர் மனதில் இருப்பதை துல்லியமாய் கணக்கிடுவது போல் இருந்தது.
வந்தவர்.., இவர்களிடம் “மது சொன்னா நீங்க வருவீங்கன்னு….. நீ…. மது பையன் நிரஞ்சன்  தானேப்பா.” எனக் கேட்டவர்…, சம்பிரதாய விசாரிப்பில் தொடர்ந்து அவர்கள் வீட்டு விசேஷம் எவ்வாறு நடந்தது என்று நிறுத்தும்போது மீரா தன் மனவோட்டத்தை மறைக்க…. “நான் என் லக்கேஜெல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டாள்.
இவள் வெளியேறும் போது நிரஞ்சன் பதில் கூறினான்.”கல்யாணம் ரொம்ப கிராண்டா நடந்துச்சு ஆண்ட்டி.  அம்மா உங்கள ரொம்ப எதிர்பார்த்தாங்க” என்றான்.
உண்மையும் கூட அதுதான் எனும்போது தடுமாறாமலும் கூறினான். 
“அங்கிள் இறந்தபிறகு நான் வெளியில போறதவே விட்டுட்டேம்பா. பெரும்பாலும் இந்த வீட்டுக்குள்ளதான். அதிலும் நல்ல காரியத்துக்கு போறதேயில்லை.” என்று தான் வரமுடியாமல் போன காரணத்தை விளக்கினார்.
சிறிது நேரம் தோட்டத்தில் உலவியவள்…. தன் மனதை ஒருவாறு சமாதானம் செய்துவிட்டு வீட்டினுள் தன் உடைமைகளோடு நுழைந்தாள் மீரா.
அவள் வருவதை கண்ட மதி, ஜானகி என அழைத்து, “இவங்களுக்காக தயார் செஞ்ச ரூமுக்கு அழைச்சிட்டு போ. என உத்தரவிட்டவர் நீ போய் ப்ரெஸ்ஸாகி வாம்மா ” என்று அனுப்பி வைத்தார்.
மீரா, ஜானகி என அழைக்கப்பட்ட பெண்ணுடன் சென்றாள்.
பதிநைந்து நிமிடங்கள் கழித்து எளிமையான சுரிதாரில் தேவதையென வந்த மீராவை மதியரசிக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
மணி இரண்டை கடந்திருக்க மதி அனைவரையும் உணவு உண்ண அழைத்து சென்றார்.
உண்ணும்போது மதி.., நிரஞ்சனிடம் “நிரஞ்சா, மது மீராவுக்கு நல்ல வேலை ஒன்னு பார்க்க சொன்னா. நான் ஒரு வேலை பார்த்து வைச்சிருக்கேன். பிடிக்கலைன்னா நம்ம கம்பெனியிலயே வேற வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்கலாம். நீ என்னம்மா சொல்ற? ” என நிரஞ்சனிடம் ஆரம்பித்து மீராவிடம் முடித்தார்.
“சரிங்க ஆன்ட்டி, ஆனா…. நீஙக தப்பா எடுத்துக்கலைனா நாம இதபத்தி நாளைக்கு பேசலாமே ஆன்ட்டி. ப்ளீஸ்” என கெஞ்சலாக கேட்க மதியும் ஒத்துக்கொண்டார்.
“ட்ராவல் பண்ணி வந்தது டயர்டா இருக்கும். நாம நாளைக்கே பேசலாம்மா” என ஆதரவாக கூறினார்.
முதல் நாள் இரவு உண்டது எனவே அண்ணண், தங்கை இருவரும் தன்னையும் அறியாமல் நன்றாகவே உண்டனர்.
அனைவரும் உண்டு முடித்தபின் நிரஞ்சன் கிழம்ப தயாராகினான்.
மதியரசி நிரஞ்சனை மீராவுடன் தனியாக பேச அனுமதித்து ஓய்வெடுக்க சென்றார். 
அதுவரை அமைதியாக இருந்த மீரா அண்ணா என விளித்து “எனக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் வேணும். கொஞ்சம கொடுக்குறியா” எனக் கேட்க  அதிர்ந்து போய் பார்த்தான் நிரஞ்சன்.
“நீ டாக்டர் குடுத்த எல்லா மருந்துமே குடுத்துட்ட… ஆனா.., ஸ்லீப்பிங் பில்ஸ் மட்டும் குடுக்கவே இல்ல. நான் எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டேன். ஏன்னா… நான் அந்த அளவுக்கு கோழை இல்ல. சாரிணா இப்போ நான் இருக்க மனநிலையில என்னால சரியா தூங்க முடியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ….” என்றவுடன் மனம் கனத்துப்போனது நிரஞ்சனுக்கு.
தன் தங்கையின் கஷ்டத்தை தீர்த்து வைக்க முடியாமல் உள்ளுக்குள் மறுகினான். அதோடு அவள் கேட்ட மாத்திரைகள் நிறைந்த பாட்டிலை எடுத்து கொடுத்தான். அதை வாங்கியவள் அதிலிருந்து இரண்டு மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த பாட்டிலை நிரஞ்சனிடமே தந்தாள். 
“இது உன் திருப்திக்காக….” கண்ணுக்கு எட்டாத சிறு புன்னகையுடன் கூறியவள், “உன்கிட்ட யாரு இந்த விஷயத்தை சொன்னது” எனக்கேட்க……
“எ…எந்த.. விசயம்…” என்று திக்கித்திணறி கேட்க…. அவள் பார்த்த பார்வையில் அடங்கி….
“அப்பா டாக்டர் கிட்ட சொன்னப்போ கேட்டேன்” என்று கூறினான் நிரஞ்சன்.  
“நீ ஏன் இத இப்டியே விட்டுட்ட மீரா. நாம இதுக்கு பதிலுக்கு ஏதாவது அவங்களுக்கு செஞ்சே ஆகணும். அவுங்க உன் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு யோசிக்கவே இல்லயில….” என்று கோபமாக கூறவும்….,
சிறு சிரிப்புடன் “அவங்க அவங்க பசங்க நல்லாயிருக்கனும்ன்னு நெனச்சாங்க. இத தப்புனு சொல்லமுடியாதுல்லயா? அந்த பையன் எடத்துல நான் இருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க…..” என்று அமைதியாக கேட்டாள்.
“நீ நல்லா வாழனும்ன்னு நெனச்சுருப்போம். ஆனா… நாங்க கண்டிப்பா இப்புடி ஏமாத்தியிருக்கமாட்டோம்”
“கண்டிப்பா….. உங்களுக்கு ஏமாறமட்டும் தான் தெரியும்.” அப்போதும் அதே அமைதியுடன் தான் கூறினாள்.
இப்போதுதான் நிரஞ்சன் தங்கையின் நடவடிக்கையையும், டாக்டர் அவளைப்பற்றி கூறியதையும் கவனித்தான். நேற்றைய இரவுகூட தந்தை இடிந்து, குழம்பி, வலியுடன் என பலவகையான உணர்வு கலவையுடன் இருந்தார். ஆனால் மீராவோ நிர்மலமான முகத்துடன் இருந்தாள்.
அது இப்போது அவனை உறுத்த “மீரா, உன் அமைதி எனக்கு பயமா இருக்கு. எதுவும் மனசுல இருந்தா சொல்லு…. செய்வோம், ஆனா உன் அமைதி….” என்று முடிக்காமல் நிறுத்த….
சின்ன சிரிப்புடன் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். நிரஞ்சன் சென்றபின் உள்ளே போன மீரா, ஜானகியை அழைத்து “ஆன்ட்டி எங்க ” என்றாள்.
“அம்மா சாப்பிட்டதும் ரெஸ்ட் எடுக்க போயிடுவாங்கமா…..”
“நான் மேல போறேன். நைட் நான் வரலைன்னா டிஸ்டர்ப் பண்ணவேண்டாம். நானே காலைல வந்து பாக்குறேன்னு சொல்லுங்க” என்றவள் தன்னறைக்கு சென்று  மாத்திரைகளை விழுங்கி படுத்துவிட்டாள். 
********
காரில் பயணப்பட்ட நிரஞ்சன் மீராவை பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தான்…..
சிறு வயதில்…..
தச்சம்பது…. வைகை ஆற்றங்கரை…..
நிரஞ்சன் அவன் நண்பன் ரவியுடன் சேர்ந்து அந்த ஊர் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட…… அதில் ஒருவன் “டேய் பண்ணக்காரா” என்று தன் வீட்டில் வேலை செய்பவரின் மகனை அழைக்க……
அவர்கள் இருவருக்கும் சண்டை வந்து, கைகலப்பாக மாறி மற்றவர்களும் இணைந்து இரண்டு டீம் சண்டையாக மாறியது. அது பஞ்சாயத்து வரை செல்ல கங்காதரன் ஊரார் முன் வைத்து நிரஞ்சனை வெளுத்து வாங்கிவிட்டார். ஆனால் நிரஞ்சன், தவறு செய்தவன் தன் நண்பன் தான் எனவும், அவனிடம் மன்னிப்புதான் கேட்க கூறினான். இதை மீரா எவ்வளவோ எடுத்துக்கூறியும் கங்காதரன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்….
“நீ சின்ன பொண்ணுமா….. இது எவ்ளோ பெரிய பிரச்சனையா மாறும்ன்னு தெரியாம பேசற. ஜாதி பிரச்சனையா வந்திருந்தா சமாளிச்சுருக்கவே முடியாது” என……
“நீங்க என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது தப்புதான். தப்பே செய்யாத ஒருத்தர ஊருக்காக நீங்க எப்புடிப்பா அடிக்கலாம்? ” என்று அழுகையுடன் கூறியவள் சென்றுவிட்டாள்.
ஆனால், அதன்பின் வந்த இரண்டு நாட்கள் அவள் எதுவுமே சாப்பிடவில்லை. அனைவரும் எவ்வளவோ கெஞ்சினர். 
கங்காதரன் “மீரா, சாப்பிடுமா….. அப்பா செஞ்சது தப்புனு நீ நெனச்சா அப்பாக்கு என்ன தண்டனை குடுக்க நெனக்கிறியோ குடுடா….. ப்ளீஸ்மா….. தயவுசெய்து சாப்பிடு” என்று கெஞ்ச….. நிரஞ்சன் “மீரு அம்மா சாப்பாடு பிடிக்காம தான சாப்பாடு வேனான்ன.., நான் வேணா உனக்கு ஹோட்டல்ல வாங்கிட்டு வரவா” என்றான்.
“நான் எப்போவாது உன்ன போடான்னு சொல்லிருக்கேன்…” அவள் சொன்ன விதத்தில் வாயை தானாக முடிக்கொண்டான்.
மதுரமும் தன்னால் ஆனமட்டும் கெஞ்சி…. இறுதியில் இரண்டு நாட்கள் கழித்து தானே உணவை ஊட்டிவிட்டார்.
“ஏம்மா உன்ன நீயே கஷ்டபடுத்திக்கிட்ட…. உனக்கு எம்மேல கோபமிருந்தா என்கூட சண்ட போடு அதவிட்டு ஏன் இப்படி பண்ண? ” என கங்காதரன் கேட்க……
“நான் சண்ட போட்டுருந்தா உங்களுக்கு இந்தளவு வலிச்சிருக்குமா?” எனவும் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டார் கங்காதரன்.
அதுமட்டுமல்ல…… அதன் பிறகும் அதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளது. அவளுக்கு காயம் தரும் சம்பவம் ஏதாவது நடந்தால் அதற்கு காரணமானவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை திரும்ப காயப்படுத்தாமல் விடமாட்டாள். அதில் தானே காயப்பட்டாலும் கூட……..
மீரா கல்லூரி முதல் வருடம் படிக்கும்போது…… கல்லூரி ஆரம்பித்து ஒருவாரம் கழிந்த நிலையில்….. சீனியர் மாணவன் செல்வா, “ஏய்.. பிங்க் சுடி இங்க வா” என அழைத்தான்.
பதுமையாய் தன்முன் நின்றவளை “எந்த டிபார்ட்மென்ட்” என கேட்டான்.
“பி.எஸ்சி சீ.எஸ்” என்றாள் நிமிர்ந்து அவனை பார்த்தவாறு
“ஓ… சரி ஒரு குட்மார்னிங் சொல்லு”
“குட்மார்னிங்” பல்லை கடித்தவாறு கூற…..
“ஏய்…. பார்த்து பல் உதிந்துர போகுது.. சரி உங்க டிபார்ட்மெண்ட் பைனல் இயர் மேனகாகிட்ட இத குடுத்துடு” என்று லவ்லெட்டரை எடுத்து நீட்டினான் அவன்.
“நான் ஒன்னும் தூதுபுறா இல்ல. நீங்க இத வேற யார்கிட்டாயாவது சொல்லுங்க” என்றுவிட்டு அவளது கிளாஸ்ரூமிற்கு சென்றுவிட்டாள்.
அன்று கல்லூரி முடிந்து வெளிவரும்போது மீராவுக்காக காந்திருந்த செல்வம் “ஏய்….”
அவள் திரும்பவும் “நீ நாளைக்கு இந்த லெட்டர கொடுக்கனும்.” கோபத்துடன் கூற…..
“முடியாது” என்றவள் அவன் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.
மறுநாள்… காலை கல்லூரிக்கு வந்த மீரா நோட்டீஸ் போர்டு அருகே கூட்டமாக இருப்பதை கண்டு அங்கு சென்றாள். அங்கே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் திகைத்து, கோபப்பட்டு பின் தன் மனதை சமனப்படுத்தி யாரிப்படி செய்திருப்பார்கள் என யோசித்தவள்…… அடுத்து நின்றது தன் சீனியர் முன்தான்.
அவளை பார்த்த செல்வம் “அடடே, புறா வந்திருக்கு மச்சி…. என்னம்மா விசயம்” என சிரிப்புடன் வினவவும்…..
“ஏன்டா நாயே அறிவில்ல உனக்கு…. என ஆரம்பித்தவள் தன் போக்கில் திட்டிக்கொண்டு செல்ல…
‘ஏய் நிறுத்துடி….”
“டியா… டேய் காண்டாமிருகமே, உன்ன….” என்றவள் ப்ரொபசர் வரவும் அமைதியானாள்.
திரும்பவும் திட்ட வாய் திறக்க….. செல்வா, “ஏய் இப்ப என்னடி…. நான்தான் உன் போட்டாவ நோட்டீஸ் போர்டுல ஒட்டினேன். அதுக்கு இப்போ என்ன செய்ய போற” எனவும்……
ஆத்திரம் அதிகமாக இருவரும் சண்டையிட…. காலேஜே அங்கு கூடிவிட்டது. இந்த விஷயம் கல்லூரி முதல்வர்வரை செல்ல… இருவரையும் அழைத்தார்.
“ஏன் சண்டை போட்டுக்கிட்டீங்க ரெண்டு பேரும்” என முதல்வர் வினவ
“இல்ல சார்…. சும்மாதான். இவர் என்ன குட்மார்னிங் சொல்ல சொன்னார் அதான் ” என்றாள் மீரா.
“குட்மார்னிங் கேட்டா எதுக்கு சண்ட போடனும்” புரியாமல் கேள்வி கேட்டார்.
“சார்…. உங்களுக்கு போன் போட்டு குட்மார்னிங் சொல்ல சொன்னார். காலைல நாலு மணிக்கு அத நான் செய்யலன்னதும் சண்ட போடுறார்” எனவும்….. தன் பார்வையில் சக்தி இருந்தால் எரித்திருப்பார் எனுமளவு முறைத்தார் முதல்வர்.
அப்போது அங்கு வந்த ப்யூன் “சார் இந்த போட்டோவும், அதுக்கு கீழ இந்த பேப்பரும் நோட்டீஸ் போர்டில ஒட்டியிருந்துச்சு” என கொடுத்துவிட்டு செல்ல… செல்வா பயந்து மீராவை பார்க்க அவளோ அவன் புறம் திரும்பவே இல்லை.
அந்த பேப்பரை பார்த்த முதல்வர் “வாட் நான்சன்ஸ் இஸ் திஸ்? ஹூ தெ ஹெல் இஸ் டூ திஸ்? ” என கோபத்தில் கரைய
“தெரியாது” என்றாள் மீரா.
“தெரியாதா? ” என்றவர் அவள் தலையை ஆட்டவும். “தென் யூ சஸ்பெண்டட் பார் ஒன் வீக்” என்றார்..
“சார் நான் என்ன பண்ணுனேன். என்ன ஏன் சஸ்பெண்ட் பண்ணறீங்க”
“அப்போ யார் பண்ணாங்கன்னு சொல்லு”
“எனக்கு எப்புடி தெரியும். இந்த போட்டோ நான் ஆபிஸ்ல குடுத்தது. நீங்க அவங்க கிட்ட விசாரிங்க சார்” எனவும்….
“ஏன்? உனக்குதான் தெரியுமே நீ சொல்லு”
“எனக்கு தெரியாது”
சஸ்பெண்ட் ஆர்டரை கையில் கொடுத்து “நவ் கெட் லாஸ்ட்” என…. இருவரும் வெளியேறினர்.
“மீரா….”
“மூதேவி…. அறிவிருக்காடா உனக்கு ஏன்டா அப்புடி ஏழுதி ஒட்டின”
“அது….. கோவத்துல…. நீ புறாவான்னு கேட்ட….. அதான் காதல் புறான்னு ஒட்டிட்டேன்” என……
“போடா”
“சாரி”
“காண்டாமிருகமே” என்ற மீரா திரும்பி பாராமல் சென்றுவிட்டாள்.
ஒரு வாரம் கழித்து…
“மீரா”
திரும்பியவள் அங்கு நின்ற செல்வாவை கண்டு திரும்பி நடக்கத் தொடங்க…. “மீரா…. ப்ளீஸ் ஐம் சாரி” எனவும்…..
“அடடா காண்டாமிருகத்துக்கு சாரிகூட கேக்க தெரியுமா…. போடா” என்றவள் செல்ல
“நீ ஏன் மீரா நான்தான் நோட்டீஸ் போர்டுல ஒட்டுனேன்னு சொல்லல” என…. சிறிது யோசித்தவள் “ம்….ப்ச்.. தெரியல” என்றாள்.
“காபி” என்றான்.
“ம்ஹூம். டீ” எனவும், சிரித்தபடி கேன்டீன் சென்றனர் இருவரும்.
அதன்பின் இருவரும் இன்றுவரை நண்பர்கள். தன் தங்கை கஷ்டபடுத்துபவர்களை பழிவாங்கினாலும் மன்னிப்பு கேட்பவர்களை மன்னித்தும் விடுவாள்.
ஆனால், இன்று…. என்ன மனநிலையில் இருக்கிறாள் என கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று மட்டுமல்ல என்றுமே அவள் ஒரு புரியாத புதிர் தான்.
 
*******
ஆபிஸ் முடிந்தபின் கிளம்பிய ஏ.கே ‘வீட்டுக்கு போனா அந்த பொண்ணு இருப்பாளே…. அவள எப்புடி சமாளிக்க ‘ என்ற கேள்வியுடன் தன் காரில் ஏறி கிளம்பினான்.
*******
“ஜானகி, போய் மீராவ அழச்சிட்டு வந்து சாப்பிட சொல்லு” என்றார் மதியரசி.
“அம்மா, அவங்க நைட் கீழ வரலைன்னா டிஸ்டர்ப் பண்ண வேணான்னு சொல்லிட்டாங்கமா” என்றவள் சென்றுவிட மீராவை பற்றிய யோசனையில் ஆழ்ந்தார் அவர்.
*******
மீராவின் வீடு….
“ஏங்க மீராவுக்கு போன் பண்ணீங்களா? ” என்றபடி தன் கணவரிடம் அமர்ந்தார் மது.
“பண்ணினேன். ஆனா, அவ எடுக்கல. நிரஞ்சன் கிட்ட பேசுனேன் அவன் கிளம்பிட்டானாம். அங்க எல்லாமே ஓ.கேன்னு சொன்னான்” என்றார்.
ஆனால், அவள் ஏன் போனை எடுக்கவில்லை என அனைவருமே யோசித்தனர்.
*******
இப்படி அனைவரின் நினைவுகளையும் ஆக்கிரமித்த மீராவோ, தான் தொலைத்த இரண்டு நாள் தூக்கத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து கொண்டிருந்தாள்.

Advertisement