Advertisement

“எனக்கு ஒன்னும் இல்லம்மா… பிரண்ட்ஸ் கூட வெளிய வந்தேன்… மொபைல் சைலண்;ட்ல இருந்தத கவனிக்காம விட்டுட்டேன்… சாரிமா…” என்றான் ஏ.கே குற்றவுணர்வுடன்…
“சரி அதவிடு… நீ எப்போ வீட்டுக்கு வருவ…?” என…
“அது… நான் வர லேட் ஆகும்மா… நீங்க சாப்பிட்டு படுங்க… நான் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டுக்கிறேன்… குட்நைட்மா…” என சமாளித்துவிட்டு மொபைலை கீழே வைத்தவனை கொலை வெறியுடன் முறைத்தபடி நின்றிருந்தான் சத்யா…
“டேய்… உனக்கெல்லாம் கொஞ்சமாவது ஏதாவது இருக்கா…? இப்ப உனக்கு என்ன கேடுன்னு இப்புடி போதையாகுற அளவுக்கு குடிச்ச…” என கோபத்துடன் இரைய…
“ம்ப்ச்…” என சலித்தவன் எழுந்து நிற்க முயல முடியாமல் மீண்டும் தள்ளாடியபடியே கட்டிலில் விழுந்தான்.
“சொல்லித் தொலடா… என்ன தான் பிரச்சனை உனக்கு… நீ சொல்லல நான் அம்மாவுக்கு கால் பண்ணி நடந்ததெல்லாம் சொல்லிடுவேன்…” என மிரட்ட அவனை முறைத்தவன் வேறு வழியின்றி காலையில் கோவிலில் நடந்ததை சத்யாவிடம் கூறினான் ஏ.கே…
அவன் கூறியது அனைத்தையும் கேட்டு சிறிது நேரம் அமைதியாக யோசித்துவிட்டு “மச்சி… அவ கழுத்துல தாலியோ… இல்ல கல்யாணமான பொண்ணுங்களுக்கு உண்டான எந்தவொரு அடையாளமாவது பாத்துருக்கியா…?” என சந்தேகமாக கேட்க…
சட்;டென பிரகாசமானான் ஏ.கே “இல்ல மச்சி… ஒரு மெல்லிசான செயின் போட்டிருந்தா… ஆனா இன்னிக்கு சாரி கட்டும் போது அதக்கூட மாத்தி ஒரு நெக்லஸ் தான் போட்டிருந்தா… ஆனா தாலிய கழட்டி வச்சுருந்தா…?” என கேட்க…
“வாய்ப்பில்லடா… நான் பாத்த வரைக்கும்… கீதா சொன்னவரைக்கும் சந்தியா அந்த மாதிரி பொண்ணு இல்ல…” என உறுதியுடன் கூறியவன் சற்று தயங்கி “ஆனா மச்சான் அவ புருசன் இப்ப.. உயிரோட இல்லைன்னா… இப்போவெல்லாம் எல்லாரும் பொட்டு வைக்கிறாங்க தானே…?” என சந்தேகமாக கேட்க…
“ஆனா… காலையில கோவில்ல குங்குமம் குடுத்தாங்களே.. அவ அத வாங்கி வச்சுக்கிட்டாளே… பொட்டு வைப்பாங்க ஓ.கே.. குங்குமம் வைக்க மாட்டாங்களே…” என கேட்க…
“இப்ப இருக்க பொண்ணுங்க எத செய்வாங்க செய்யமாட்டாங்கன்னு யாராலையும் சொல்ல முடியாது மச்சான்…”
“ஆனா ஏனோ என் மனசு அவ எனக்கானவன்னு சொல்லுதுடா மச்சி…” என நிறுத்தியவன் “மச்சி நாளைக்கு ஊருக்கு போனதும் அவள பத்தின முழு டீடெய்ல்சும் அனுப்பப்பாருடா… நான் அதுக்குள்ள அவ வாயாலையே உண்மைய சொல்ல வைக்க ட்ரை பண்றேன்…” என்றவன் விடைபெற்று கிளம்பிவிட… மறுநாள் பயணத்திற்கான ஏற்பாட்டை செய்ய சென்றான் சத்யா…
காரில் சென்றவன் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு யோசனை செய்தான்… அவனுக்கு தெளிவாக தெரிந்தது ‘இதுக்கு ரெண்டு பாசிபிலிடிஸ் இருக்கு… ஒன்னு மீரா சொன்னது போல கல்யாணம் ஆகியிருந்தா அவ ஹஸ்பண்ட் கூட அவ ஏன் இல்ல…? ரெண்டு மீரா சொன்னது பொய்… ஆனா அவ ஏன் பொய் சொல்லனும்;… காரணம் நிவேதிதாவா…? இல்ல அம்மாவா…?’
‘உண்மையிலேயே கல்யாணமாகி இருந்து எவனாவது வந்து இது என் பொண்டாட்டின்னு வந்து நின்னுட்டா…?’ நினைக்கவே நாராசமாக இருந்தது. “ம்ஹீம்… அப்புடி எதுவும் நடக்காது. அவ எனக்கானவ… எனக்கே எனக்கு மட்டும் தான்” என காரினுள் இருந்து தனக்கு தானே கூறி தெம்பூட்டிக் கொண்டு காரை எடுத்தான் ஏ.கே.
பார்வையை சாலையில் பதிக்க அவனுக்காகவே எழுதி வைக்கப்பட்டது போல இருந்தது ஒரு வாசகம் “நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே… நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி…’ லெனினின் வாசகம் தாங்கிய கட்-அவுட் அவன் நின்றிருந்த சாலையின் ஓரம் அப்போதுதான் ஊன்றிக் கொண்டிருந்தனர்… முடிவெடுத்துவிட்டான் ஏ.கே ‘யாருக்காகவும் உன்ன விட்டுக் குடுக்கமாட்டேன் பேபி’ என சிரித்துக் கொண்டவன் சந்தோஷமாகவே காரை ஓட்டிக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்…
காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி செல்லும்போது “ஹலோ… ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்… அவ அவ இருக்குற கடுப்புல… என்ன மொதல்ல புரிஞ்சுக்கோடா” என திட்டும் குரல் கேட்டு அங்கே செல்ல ஏ.கேவிற்கு முதுகுகாட்டி நின்றபடி யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள் மீரா…
“ம்… இப்புடி கேட்டா என்ன சொல்ல… புடிக்கும் தான். இங்க வந்ததிலிருந்து நான் அதிகமா பேசியதுன்னு பாத்தா அது கிருஷ் தான்.. ஆனா…” என இழுக்க…
“ஆனா… சொல்லு. எதுவானாலும் இன்னைக்கு பேசிதான் ஆகனும். நீதான பேசனும்ன்னு சொன்ன… உன் மனசுல என்னவெல்லாம் இருக்கோ அத எல்லாத்தையுமே சொல்லிடு.” என ஊக்க…
“நான் அப்போ இருந்த இக்கட்டான சூழ்நிலையில… இப்போ அத சால்வ் பண்ண முடியாம தவிக்கிறப்போ என்னால… என்ன சொல்றதுன்னு தெரியல… அண்ட் என்னோட பிரச்சனையில தேவையேயில்லாம கிருஷ குழப்பி விட்டுட்டேனோன்னு தோனுது…” என குழப்பத்துடன் கூற…
காலையில் செல்வாவிடம் இரவு பேசுமாறு கூறியிருக்க… அதேபோல பேசியவனிடம் இன்று நடந்த அனைத்தையும் கூற ‘நீ கிருஷ்க்கு ஓ.கே சொல்லு’ என அவன் கூற… அதை மறுக்க எவ்வளவு சொன்னாலும் பதிலுக்கு ஏதாவதொன்றை சொல்லி வாயை அடைத்து ‘சரின்னு சொல்லு’ என வற்புறுத்திக் கொண்டிருக்கிறான்.
“இங்க பாரு மீரா… நீ என்ன தான் சொன்னாலும் சரி… நான் விசாரிச்ச வரைக்கும் கிருஷ் ரொம்ப நல்ல பையன். அதுமட்டுமில்ல அவன் இதுவரை யாரையும் லவ் பண்ணது கூட கிடையாது. உனக்கு ஏத்த பையன் ப்ளீஸ் சரின்னு சொல்லு” என கெஞ்ச…
“சீரியஸ்லி… அவர் எனக்கு பெர்பெக்ட் மேட்ச்சா இருக்கலாம். பட் ஐ அம் நாட் பெர்பெக்ட் டூ ஹிம்” என கோபத்துடன் கூற…
“மீரா…” என ஏதோ கூற வந்தவனை தடுத்து… “என்னோட ப்ராப்ளம் என்னன்னு தெரிஞ்சும் நீ இப்புடி பேசுறத என்னால தாங்கவே முடியல… சரி எல்லாத்தையும் விடு நீ கிருஷ் எடத்துல இருந்து யோசிச்சு பாரு. உன்னால இத ஏத்துக்கிட்டு சந்தோஷமா வாழ முடியுமா…?” என ஆற்றாமையுடன் கேட்க… அமைதியானது மறுபுறம்.
விரக்தியாக சிரித்தவள் “அடுத்தவங்கள ஆயிரம் சொல்லலாம். ஆனால் நாம அந்த இடத்துல இருந்தால்ன்னு வரும்போது”
“பத்மாவுக்கு இப்புடி நடந்துருந்தா கண்டிப்பா அவள விட்டு போகமாட்டேன் மீரா…” அவள் பேசியதை பாதியிலேயே நிறுத்திய செல்வா உறுதியுடன் கூற…
“ஹேய்… நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கடா. அவளுக்கு நல்லதோ கெட்டதோ அதுல உனக்கும் பங்கு இருக்கு. பட் நாங்க அப்புடி இல்ல. கிருஷ்க்கு ஒரு நல்ல லைஃப் காத்துட்டு இருக்குடா.. அது”
அப்போது அவளது பேச்சை தடுத்து “ஐ ஸ்டில் லவ் யூ பேபி. நீ இல்லாம எனக்கு தனியா லைஃப் இல்ல” என்ற குரல் காதருகில் கேட்க… தூக்கிவாரிப் போட திரும்ப… ஏ.கேவின் மீது மோதி பேலன்ஸ் தவறி கீழே விழப்போக தடுத்து நிலையாக நிற்க வைத்தவன் அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி மீராவை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்…
“தேங்க்ஸ் பிரதர். நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. எனக்காக என்ன லவ் பண்ண சொல்லி ரொம்பவே கன்வென்ஸ் பண்ணீங்க. தேங்க்யூ வெரிமச்” என கூற…
“தேங்க்ஸ் எல்லாம் வேணாம் பிரதர் இதுல என் சுயநலமும் இருக்கு. மீராவோட லைஃப் சரியான ஒருத்தர் கூட அமையனும்ன்னு நாங்க காத்துட்டு இருக்கோம். அது நீங்களா இருந்தா இன்னும் சந்தோஷம் தான்” என…
“ஹீம்… உனக்காக சொல்லலைன்னு மறைமுகமா சொல்றீங்க… பரவாயில்ல. எனக்கு சாதகமா பேசினதால அந்த தேங்க்ஸ நீங்களே வச்சுக்கோங்க. இப்ப நான் மீராகிட்ட பேசனும் அதனால ப்ளீஸ் ஃபோன கட் பண்றீங்களா…?”என கேட்க…
“சார் ஒரு நிமிஷம்”
“ம்… சொல்லுங்க. ஆனா சார் வேணாம். மச்சான்னு கூப்பிட சொன்னா” எனும்போதே மீரா முறைக்க “அரவிந்த்ன்னு கூப்பிடுங்க. என் பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன அப்படிதான் கூப்பிடுவாங்க” என்றான் அவளை குறும்புடன் பார்த்துக்கொண்டே…
“ஓ.கே. ஆனா அரவிந்த விட கிருஷ் ஈசியா இருக்கும். மீரா எப்பவும் கிருஷ்ன்னுதான் உங்கள சொல்லுவா” எனவும்…
“நோ. நோ.. அது ஒருத்தருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட உரிமை. நீங்க அரவிந்த்ன்னே கூப்பிடுங்க” என கள்ளப்பார்வையுடன் கூற… அவன் எதை குறிப்பிடுகிறான் என புரிந்துகொண்ட மீரா ஏகத்திற்கும் அவனை முறைக்க…
“ம்… ஓ.கே. உங்க ஸ்பெஷல் பர்சனே அப்புடி கூப்பிடட்டும்” என கேலியாக கூறியவன் “அரவிந்த் மீரா ரொம்ப செல்லமா வளந்து அவ பேரன்ட்ஸ் செய்த தப்பால பெரிய பிரச்சனையில சிக்கி அளவுக்கு அதிகமாவே கஷ்டப்பட்டுட்டா. ப்ளீஸ் அவள எந்த சூழ்நிலையிலையும் கஷ்டப்படுத்திறாதீங்க” என்றான் சீரியஸாக…
“நான் அவள நல்லாவே பாத்துப்பேன். நீங்க கவலப்படாம இருங்க” என ஆறுதல் கூறி வைத்தவன்…
மீராவை பார்த்து குறும்புடன் “அது சரி பேபி… நான் லவ்வ சொன்னதுக்கு நீ ஏன்டா செல்லம் பதில் பேசாம வந்துட்ட” என்றான்.
“கிருஷ்… நீங்க பேசுறது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல. நான் தான் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டேனே. அதுக்கப்பறமும் நீங்க இப்படியெல்லாம் பேசுறது சுத்தமா சரியில்ல” என கோபக் குரலில் கூற…
“அட அத நான் கேக்கல பேபி. உனக்கு கல்யாணமானா எனக்கென்ன… ஆகலைன்னா எனக்கென்ன… என்ன லவ் பண்றியா இல்லையா” என மீண்டும் கேட்க…
“கிருஷ் இன்னொருத்தர் மனைவிகிட்ட” என கூறும்போதே “அடிச்சேன்னு வை… பல்லு பேந்துரும்” என கையை ஓங்கி சத்தமாக கூற… மிரண்டுதான் போனாள் மீரா.
அவளது மிரண்ட பார்வையை பார்த்தவன் “பேபி கல்யாணமாயிருச்சு.. கல்யாணமாயிருச்சுன்னு கத்துனா மட்டும் போதாது பேபி. ப்ரூப் வேணும் தாலி, மெட்டி அந்தமாதிரி மெட்டீரியல் ப்ரூப் எதுவுமே உங்கிட்ட இல்ல…” என கூறிக்கொண்டிருந்தவன் அவள் குறுக்கே பேச வருவதை கண்டு அவளை பேச விடாமல் தடுத்து “அப்புடியே நீ கலட்டி வச்சுட்டேன்னு வந்து நின்னாலும் கலட்டி வச்சவனுக்காக நீ ஏன் காத்திருக்கனும். என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுவேன்” என்றவன் மீரா அப்படியே அதிர்ந்து நிற்பதைக் கண்டு “ நாளைக்கு என்ன சொல்லி இவன சமாளிக்கலாம்ன்னு நல்லா யோசி. ஓ.கே பேபி.. பாய்” என்றுவிட்டு சென்றுவிட… மீராவிற்கு ‘இந்த வேதாளத்த எப்புடி முருங்கமரத்துல இருந்து கீழ இறக்குறது’ என ஆயாசமாக வந்தது.
ஏ.கே தன் காதலை மீராவிடம் நிலைநாட்டுவானா…? உண்மையில் மீராவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா…? காத்திருந்து காண்போம்…

Advertisement