Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 14
ஏ.கேவின் காதுகளில் மீராவின் வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தது……. அவனை நினைத்து அவனுக்கே அவமானமாக இருந்தது…… ‘ச்சே……. இன்னொருத்தரோட மனைவி மேலயா நாம இவ்வளவு நாளா காதல வளத்துக்கிட்டோம்…….’ என எண்ணி எண்ணி நொந்து கொண்டான்……. ‘எத்தனையோ பொண்ணுங்கள கடந்து வந்த எனக்கு ஏன் இவ மேல காதல் வந்தது……. ச்சே…….. தப்பு பண்ணிட்டேனே….. இன்னொருத்தனோட மனைவிய போய்…….?’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டவன்…… அமைதியாக காரை ஓட்டிச் சென்று மீராவை பிருந்தாவனத்தில் விட்டவன்….. கீழே கூட இறங்காமல் அப்படியே சென்றுவிட… அதை பார்த்த மீராவும் அமைதியாக சென்று அவள் வழக்கமாக அமரும் தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்தாள்…

ஏதேதோ தோன்ற… அப்படியே கண்மூடி ஓய்ந்துபோய் அமர்ந்து விட்டாள்… சிறிது நேரத்தில் தன் மடியில் ஏதோ பாரம் கூடுவது போல் தோன்ற கண்களை திறந்து பார்த்தாள். அவள் எதிரே நிரஞ்சன் நின்றிருக்க… மடியில் முகம் புதைத்து படுத்திருந்தவனை காண முயன்றாள்… முடியவில்லை… மீண்டும் நிமிர்ந்து நிரஞ்சனை பார்க்க அவன் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்… மறுபடியும் குனிந்து பார்த்தவளுக்கு இப்போது தன் மடியில் கிடப்பவனை அடையாளம் காணமுடிந்தது… அவன் பாலா… மீராவின் தம்பி பாலா… அவனது கேசத்தை மெல்ல வருட… தன் மடி ஈரமாவதை உணர்ந்தாள் மீரா…

பதற்றத்துடன் அவனை நிமிர்த்த முயல… ம்ஹூம்… முடியவில்லை… “என் தங்கம் அழவெல்லாம் கூட செய்யுமா…? எனக்கு இது தெரியாதே…” என கூற…

“ஏன்டி… இதுக்கு முன்னாடி நான் அழுது நீ பாத்ததே இல்லையா…?” என கோபத்துடன் நிமிர்ந்து கேட்க…

“ம்… பாத்துருக்கேன். ஆனாலும்… எனக்காக வர்ற இந்த கண்ணீர் மோர் இம்பார்ட்டண்ட்… தட்ஸ் பிகாஸ்… எனக்காக முதல் முதலா இந்த கண் சிந்தற கண்ணீராச்சே…” என அவன் கண்களை துடைத்தபடி கூற…

“பேச்ச மாத்தாத… அவன…” என அவன் கூற… அதை பாதியிலேயே நிறுத்தியவள்… “ம்ஹூம்…” என கண்டிப்புடன் கூறியபடி முறைக்க…

“சரி சரி… அவரு… ஏன்டி அவ..ரு… அவ்வளவு பண்ணியும் அவ..ருக்கு… ஏன் இவ்ளோ சப்போர்ட் பண்ணிட்டு இருக்க…” என அவள் கோபத்தை கையிலெடுத்தபடி பாலா கேட்க…

“சப்போர்ட் இல்லடா… தப்பு செய்யாத ஒருத்தர குறை சொல்றது எந்த விதத்துலயுமே சரி கிடையாதில்லயா…?” என பொறுமையாக கூற…

“நீ எப்படி இவ்ளோ பொறுமையான…?” என மீண்டும் கோபத்துடனே கேட்க…

பதில் கூறாமல் சிரித்தவளை பார்த்து மேலும் கடுப்பானவன் “நீ இப்புடியே உன் உணர்ச்சிய எல்லாத்தையும் அடக்கி வச்சுட்டே இரு… கடைசியில நம்ம ஊரு கெழவிங்க எல்லாம் சொல்லூங்களே… ‘நான் செத்தா கூட என் கட்ட வேகாதுன்னு…’ அப்புடி தான் ஆக போகுது…” என ஏக கடுப்புடன் கூற…

அதைக் கேட்டு மீரா சிரிக்கவும்… “என்னடி… நானென்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன்…” என குரலை உயர்த்தி கோபமாக கத்த…

“பின்ன என்னடா…? நான் செத்தா எரிக்கிறதா…? பொதைக்கிறதான்றத விட்டுட்டு வாழ வழி சொல்லுடா…” என…

“அவங்கள பழி வாங்கனும்…” என கண்கள் மின்ன கூறியவனை…

“இது என்னோட தனிப்பட்ட விசயம்… இதுல என்ன பண்ணனும்… பண்ணக் கூடாதுன்றத நான் மட்டும் தான் முடிவு பண்ணனும்… நீங்க யாரும் இதுல தலையிடாதீங்க…” என கடுமையுடன் கூறியவள்… பின்னர் தன்னை அமைதிப்படுத்தி கொண்டு “பாலா… நாம எப்பவுமே ஒரு விசயத்த செய்யும் போது பாசிடிவ் அண்ட் நெகடிவ் ரெண்டு தரப்பு கருத்தையுமே கேக்கவேண்டி வரும்… அதுவும் இந்த விசயத்துல ‘அவுங்க ஏதோ பெரியவுங்க தப்பு பண்ணிட்டாங்கப்பா… இந்த பொண்ணு தான் அனுசரிச்சு வாழனும்…’ அப்புடி தான் பேசுவாங்க… அதுமட்டுமில்லாம தடி எடுத்தவன்லாம் தண்டல் காரன்னு… இதுல நெறைய பேரு பஞ்சாயத்து பண்ண வந்துருவாங்க… ஒரு ஸ்டேஜ்க்கு மேல ஊருக்காரங்கள எதிர்க்க முடியாம அவங்க சொல்றத செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு வந்துருவோம்… நாமே நம்ம தலையில மண்ணள்ளி போட்ட கதையா மாறிடும்… அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்… ஓ.கே… யோசிச்சு பாரு…” என கூறி பாலாவை தனித்து விட்டுவிட்டு வீட்டினுள்ளே சென்றாள் மீரா…

மீரா சொன்னதை கேட்டு கோபத்திலும்…இ இயலாமையிலும்…இ ஆற்றாமையிலும் வெந்து கொண்டிருந்த ஏ.கே நேராக சென்றது பாரை நோக்கித்தான்… ஏ.கே குடிப்பான்… ஆபிஸ் பார்ட்டிஇ பிரண்ட்ஸ் பார்ட்டிகளில் கொஞ்சமாக மட்டுமே குடிப்பான்… ஆனால் இன்று இருந்த மனநிலையில் மொத்தமாக குடிகாரனாகவே மாறி குடித்தான்… தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்ததை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல்… மனக்குமுறலை மதுவை ஊற்றி குளிர்விக்க முயன்றான்…

எவ்வளவு குடித்தாலும் அவள் கூறியதை மறக்கவும் முடியவில்லை… ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை… குடித்து குடித்து சுயநினைவை இழக்கும் வேளையில் சத்யாவிடம் இருந்து கால்வர அதை அட்டண்ட் செய்து பேசியவனது குரலே உளறியபடி வெளிவர… கண்டுகொண்ட சத்யா “மச்சான் நீ எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லேன்…” என கேட்க…
“முடியாது… நீ எதுக்கு ஃபோன் பண்ணேன்னு சொல்லு…” என பிடிவாதம் பிடிக்க…
“டேய்… இப்ப எங்க இருக்கேன்னு சொல்லப் போறியா இல்லையா…?” என சத்யா அதட்டிக் கேட்க…
“முடியாதுடா… நான் இப்புடியே காணாம போகப்போறேன்.. மச்சி… நான் அவ்ளோ கேவலமானவனாடா…?” என கண்ணீருடன் கேட்க…
“என்னடா ஆச்சு.. யாருடா சொன்னது நீ கேவலமானவன்னு… நீ எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லு மச்சி.. ப்ளீஸ்டா…” என மீண்டும் கெஞ்ச…
“மச்சான்… நான் இப்புடியே எங்கயாவது போயிற்றேன்டா… என்னால.. இனி நான் எப்புடிடா அவ மொகத்துல முழிப்பேன்… ச்சே.. நான் எப்புடிடா இப்புடி ஒரு தப்பு பண்ணுனேன். என்ன நெனச்சா எனக்கே அறுவறுப்பா இருக்குடா…?” என அழுகையுடன் கேட்க…
தனக்கு தெரிந்த ஏ.கே இவ்வாறெல்லாம் அழுது கரைபவன் அல்லவே… ‘மச்சி எது நடந்தாலும் நடக்க முன்னாடி மாத்தனுமே தவர… நடந்து முடிஞ்சப்புறம் அத நெனச்சு கவலப்படக்கூடாது… சமாளிக்கனும்…’ என எப்போதும் கலங்காமல் கூறுபவன் இன்று இவ்வாறு கூற உண்மையிலேயே மிரண்டுதான் போனான் சத்யா…
“மச்சி எங்க இருக்கேன்னு சொல்லு… நாம ரெண்டு பேரும் பேசி முடிவெடுப்போம்…” என சத்யா மீண்டும் கேட்க… என்ன நினைத்தானோ தான் இருக்கும் இடத்தை கூறினான் ஏ.கே…
மீரா பேசிவிட்டு சென்றபின் அதை பற்றி யோசித்துப் பார்த்த பாலாவிற்கு ‘இது சாதாரண பிரச்சனை இல்ல… ரொம்ப சென்சிடிவான பிரச்சனை… மீரா சொன்னது சரிதான். ஊர்க்காரங்க பஞ்சாயத்துன்னு வச்சா அவங்கள மீறி பெருசா நாம ஒன்னும் பண்ணிட முடியாது… சோ நாம இத கொஞ்சம் யோசிச்சுதான் செய்யனும்… ஆனாலும் அவங்க பண்ணுன துரோகத்துக்கு பதிலடடி குடுக்காம சும்மா விடமுடியாது… எதாவது செஞ்சே ஆகனும்…’ என நினைத்தவன் ‘இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வாய்ப்பு.. ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போயிடும்.. கிடைக்கட்டும்… அப்பறம் இருக்கு. நான் யாருன்னு காட்டுறேன்’ என நினைத்துக்கொண்டே தன் கையில் அணிந்திருந்த காப்பை முறுக்கி விட்டுக்கொண்டான்… (பாவம் அவன் நினைத்த வாய்ப்பு கிடைத்தும் அதை தானே வேண்டாம் என நினைத்து விரட்டப்போவது தெரியாமல் மனதினுள் சபதம் எடுத்துக் கொண்டான்)
மனதை மிகவும் கடினப்பட்டு சரிசெய்து வீட்டினுள் நுழைந்தவன் சிறிது நேரத்தில் விடைபெற்று செல்ல… விடை கொடுக்க வந்த மீராவை அணைத்து “சீக்கிரமா வீட்டுக்கு வாம்மா… நீ இல்லாம அப்பா ரொம்பவே உடைஞ்சு போய்ட்டார். அட்லீஸ்ட் ஃபோன்ல கூட பேசுமா…” என நிரஞ்சன் கூற…
“நான் இல்லாதத தாங்க முடிஞ்ச அவரால நான் ஃபோன்ல பேசுறத தாங்க முடியாதுண்ணா… ரொம்பவே கஷ்டப்படுவாரு… அப்பறம் எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ண இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு… அதுக்குள்ள நான் என்ன கண்டிப்பா சரிசெஞ்சுட்டு வந்துடுவேன்… நீங்க உங்க லவ்ஸ் கூட டூயட் பாடுற வேலைய மட்டும் பாருங்க பிரதர்…” என குறும்புடன் காலை வார… சிரித்தபடி விடைபெற்றனர் நிரஞ்சனும் பாலாவும்…
இவர்கள் வந்ததிலிருந்து மீராவை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் நிவேதிதா… இவனுங்க யாரு…? இவள ஏன் பாக்க வந்தானுங்க…?’ என்ற கேள்வி வேறு தலையை உடைக்க… இவர்களை பற்றி மதியிடம் விசாரித்த நிவேதிதாவிற்கு நிரஞ்சன் மதியரசியின் தோழி மதுவின் மகன் என்றும் பாலா அவனது தம்பி எனவும் தெரியவர… அவங்க ஏன் மீராகிட்ட உரிமையோட பழகுறாங்கன்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை… ஏ.கேவும் மீராவும் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது ஏ.கே வாசலோடு சென்றது இவர்கள் இருவருக்கிடையில் ஏதோ நடந்திருப்பதை உறுதிப்படுத்த… அதையும் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டுமே…? என நினைத்தவள் மீராவை கண்காணித்துக் கொண்டே இருந்தாள்…
ஏ.கேவை தேடிச் சென்ற சத்யாவிற்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது… முழுமையாக குடித்துவிட்டு உட்கார கூட தெம்பில்லாமல் டேபிள் மீது கவிழ்ந்து கிடந்தான் ஏ.கே… வேகமாக அவன் அருகில் சென்றவன் “அரவிந்த்… டேய்… எழுந்திரிடா” என உலுக்க…
தலையை நிமிர்த்திப் பார்க்கவே மிகவும் சிரமப்பட்டான் ஏ.கே… கண்கள் போதையில் சொருக நிமிர்ந்து பார்த்தவன் “மச்சான்…” என்றபடி மீண்டும் கவிழ்ந்துவிட வேறு வழியின்றி அவனை தூக்கி சென்று காரில் படுக்க வைத்தவன் சத்யாவின் வீட்டிற்கு கூட்டிச் சென்று படுக்கவைத்தான்…
இரவு எட்டு மணிக்கு மேல் உறக்கம் கலைய அவனால் கண்களை கூட திறக்க இயலவில்லை… விடாமல் ஒலித்த மொபைல் சத்தத்தில் கடினப்பட்டு கண்விழித்துப் பார்ப்பதற்குள் கால் கட்டாகி விட்டது. யார் அழைத்ததென்று பார்க்க மொபைலை எடுத்து பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்… அவன் அன்னையிடம் இருந்து எழுபத்தி இரண்டு மிஸ்டு கால் “ச்சே…” என தலையிலடித்துக் கொண்டவன் தன் தாயை அழைக்க…
“கண்ணா… எங்கடா இருக்க…” என பதட்டமாக வந்தது அவரது குரல்…
“என்னாச்சுமா… ஏதாவது பிரச்சனையா…?” அவரது பதட்டத்தில் இவனும் சிறிது பதட்டத்துடன் கேட்க…
“ஆபிஸ்க்கும் போகாம… கால் பண்ணா ஆன்சரும் பண்ணாம இவ்வளவு நேரம் அப்படி எங்கதான்டா போன…? உனக்கு… நீ நல்லா தான இருக்க…?” தாயாய் பதறினார் மதியரசி…

Advertisement