Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 13
நாம் உணர்ச்சிகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும் போது………
நாம் பேசும் மொழி மௌன மொழியாக
இருக்க வேண்டும்……. ஏனெனில் நம்
உணர்ச்சிகள் வார்த்தைகள் ஆகும்போது
அது நம் எதிரில் இருப்பவரை
காயப்படுத்தும் வாய்ப்பை மடியில்
ஏந்திக் கொண்டே வரும்…..!
மௌனம் என்றொரு சிறந்த மொழி……!!
மௌனமே சிறந்த மொழி…….!!!
ஒரு வாரம் அமைதியாக கழிய…… அன்று எப்போதும் போல ஏ.கேவுடன் மீரா ஜாகிங் சென்றாள்…… நிவேதிதாவும் இவர்களுடன் செல்ல…. அவர்களை முன்னே செல்லவிட்டு மீரா நொய்யல் ஆற்றின் காலைப்பொழுது அழகில் மெய்மறந்து ரசித்தபடி மெதுவாக வந்துகொண்டிருந்தாள்…… அதை கண்ட ஏ.கேவும் “வேதி…… நீ வீட்டுக்கு போ… நான் சிவாகிட்ட பேசிட்டு வர்றேன்……” என தூரத்தில் வந்த இளைஞனை கை காட்டி சொல்லிவிட்டு முன்னேறி சென்றுவிட……. வேறு வழியின்றி நிவேதிதாவும் பிருந்தாவனத்தை நோக்கி சென்றாள்……
நிவேதிதா சென்ற பின் மீராவை நோக்கி சென்ற ஏ.கே அவளை தன்புறம் இழுக்க…… திடீரென நடந்த தாக்குதலில் தன்னை சமாளிக்க முடியாமல் அவன் மீது மோத இருந்தவளை நொடி நேரத்திற்கு முன் தன்மீது மோத விடாமல் தடுத்து நிறுத்தினான் ஏ.கே…… மீரா நிமிர்ந்து அவனை பார்க்க… அவனும் கண்களில் தன் முழுகாதலையும் தேக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்……. அவன் பார்வை அவளிடம் ஏதோ கூற வர…… அதை படிக்க இயலாமல்…… தெரிந்து கொள்ள விரும்பாமல்…… தன் பார்வையை தாழ்த்திக்கொள்ள…… அவளை “மீரா……” காதருகில் சென்று பெயருக்கு வலிக்குமோ எனும் விதமாக மெதுவாக ஹஸ்கி வாய்சில் அழைக்க…… மெதுவாக மேலே நிமிர்ந்து பார்த்தாள் மீரா…… அவள் அவன் முகம் பார்க்க அவன் திரும்பி ஆற்றை பார்த்தான்……. அவன் பார்வையை தொடர்ந்து தன் பார்வையை அங்கே பதித்தவள் முகம் நொடிக்கு நொடி பிரகாசத்தை வாரி வழங்க…… அவளது முகத்தையே ரசித்தபடி இருந்தான் ஏ.கே……
அங்கே சூரியன் பிரகாசிக்க……. தங்கப் பாலமாய் ஆற்று நீர் ஜொலிக்க…… அதன் நடுவே பல பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தது……. காலைப் பொழுதின் ரம்யத்தை கூட்டும் இந்த காட்சி மனதிற்கு ரம்யத்தையும் அமைதியையும் சேர்த்து கொடுத்தது…….. தன் முகத்தை ரசித்துக் கொண்டிருந்த ஏ.கேவை கவனிக்காமல் அந்த பறவைகளை ரசித்துக் கொண்டிருந்தவள் பறவை கூட்டம் கண் மறைந்ததும் தன்னை பற்றியிருந்தவனை நிமிர்ந்து பார்க்க…… அவன் அவள் முகத்தை கண்களில் காதல் நிரம்பி வழிய பார்த்தபடி நின்றான்……
அதைக் கண்டவளுக்கு ‘இப்படியே எப்பபாரு பாத்துட்டே இருக்காரு….. அப்புடி இந்த பார்வைக்கு என்னதான் அர்த்தம்’ என யோசித்தவள்…… “கிருஷ்…… இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் கிருஷ்……” என கேட்க…..
“தியா…… இன்னைக்கு வெளியில எங்கயாச்சும் போகலாமா…….?” என…… காற்றில் கலந்து காற்றைப் போலவே வந்தது ஏ.கேவின் குரல்…..
அந்த மாயக் குரலின் மாயத்திற்கு கட்டுப்பட்டவள் “ம்……” என்றாள் அவன் கண்களை பார்த்தபடியே…… அப்போது மீராவின் மொபைல் ஒலிக்க…… தன் உணர்வு பெற்றவள் விலகி நின்று மொபைலை எடுத்துப் அட்டெண்ட் செய்து பேச…… “எங்க பேலாம்ன்னு யோசிச்சு சொல்லு……” என்றபடி நகர்ந்து சென்றுவிட…… அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் போனில் கேட்ட குரலில் தன் மனதை திருப்பி……
“ஹலோ……” என……
“என்ன மேடம்;…… இன்னும் எழல போலையே…… கனவுல பேசற மாதிரியே பேசிக்கிட்டு இருக்க……” என வம்பளக்க……
“செல்வா……” எனவும்…… அவள் அழைப்பிலேயே அவளது மனநிலையை யூகித்தவன்…….
“என்னம்மா………” என்றான் வாஞ்சையாக……
“நான் உன்கிட்ட சில விசயங்களை பத்தி பேசனும்……. உனக்கு என் வாழ்க்கையில இந்த மூனு மாசமா என்ன நடந்ததுன்னு தெரியுமா……?” எனவும்……..
திடீரென இப்படி ஒரு கேள்வியை அவளிடமிருந்து எதிர்பாராதவன்…… “அ….. அது…… சஞ்சீவ்……. நீதான் சொன்னியே……. என்ன சொல்றாரு சார்……” என முதலில் தடுமாறினாலும் பின்பு கேலி போல பேச……..
“ரொம்ப கேவலமான சமாளிப்பு மிஸ்டர் காண்டாமிருகம்…… உங்களுக்கு தெரியும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்………. ஐ நோ ஹ_ ஆர் யூ…… அண்ட் என் அண்ணன் என்னப்பத்தி கவலைப்படாம…… கால் பண்ணாம இருக்காங்கன்னு நம்பற அளவுக்கு நான் முட்டாள் இல்ல….. ஹீ இஸ் ரைட்…… நான் உன்கிட்ட சொல்லுவேன்னு நினச்சது கரெக்கட் தான்……. நைட் கால் பண்ணு……. நிறைய பேசனும்…….” எனவும்…….. சரி எனக்கூறி காலை கட் செய்ய…… மீராவும் பிருந்தாவனத்தை நோக்கி சென்றாள்……..
சோபாவில் அமர்ந்து சத்துமாவு கஞ்சி குடித்துக் கொண்டிருந்தவன்……. மீரா உள்ளே வருவதை பார்த்தவுடன் எழுந்து அவளருகே சென்றவன் “எங்க போறதுன்னு யோசிச்சியா…….?” எனவும்……
“ம்…… அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு போகலாம்……” என்றவள் தன்னறைக்கு சென்றுவிட……. ஏ.கேவும் சந்தோஷமாகவே அவனறைக்கு சென்று தயாராகினான்…..
அறைக்கு வந்த மீராவிற்கு குழப்பமாக இருந்தது…….. எங்க தப்பு நடந்துச்சு……. நம்ம மேல இன்ட்ரஸ்ட் வர்ற அளவுக்கு அவர்கிட்ட நாம ரொம்ப க்ளோஸா பழகிட்டோமோ…..? என்ன பத்தின எல்லா உண்மையையும் கிருஷ்கிட்ட இப்போவே சொல்லிடறது நல்லது……. இன்னைக்கு சொல்லிடுவோம்…… என முடிவெடுத்தவள்……. அமைதியாக சென்று கிளம்பினாள்…….
அடர் நீல நிற புடவையில் இறங்கி வந்தவளை பார்த்து மெய்மறந்தான் என்றான் மிகையாகாது…… சும்மாவே பார்ப்பான்………. புடவையில் வேறு வந்தால்…… பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல பார்த்து வைக்க மீரா தன் முடிவில் மேலும் உறுதியானாள்…… இருவரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல மீரா யோசனையுடன் அமைதியாகவே வந்தாள்……. பயணம் முழுவதும் அமைதியிலேயே கழிய…… கோவில் வந்ததும் இறங்கி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளிவரும்போது ஏ.கே ஒரு இடத்தை காட்டி “இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்……” என அழைக்க…… இருவரும் அங்கே சென்று அமர்ந்தனர்……
காரமடை அரங்கநாதர் கோவிலில் மட்டும் மற்ற எந்த வைணவ தலங்களிலும் இல்லாத ஒரு சிறப்பாக ராமபானம் உள்ளது…… ராமபானத்தின் ஒருபக்கம் சுதர்சன சக்கரமும் மறுபக்கம் சயன கோலத்தில் அரங்கநாதரும் இயந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கும்…….. இந்த ராமபானத்தை பக்தர்கள் தலைமீது வைத்து ஆசிர்வாதம் செய்தால் எப்படிப்பட்ட தீராத நோயும் குணமாகி தேக ஆரோக்கியம் மற்றும் மனஅமைதி உண்டாகும் என நம்பப்படுகிறது…… பொதுவாக வைணவ தலங்களில் சடாரி மட்டுமே உபயோகப்படுத்தப்படும்….. ஆனால் இதில் மட்டுமே ராமபானம் உண்டு…… மகா உற்சவமான மாசி தேர்த்திருவிழாவின் போது ஐந்தாம் நாள் அம்மன் அழைப்பன்று ராமபானத்தை அர்ச்சகர் நான்கு ரத வீதிகளிலும் ஆவேகமாக சுற்றி வந்து மீண்டும் கர்பகிரகத்தில் சேர்ப்பார்…….
“சன்னதியில ராமபானம் வச்சு ஆசிர்வாதம் வாங்கினா தீராத நோய் கூட தீர்ந்துடும்ன்னு ஒரு நம்பிக்கை…….” என ஏ.கே கூறவும்……..
இதைக் கேட்ட மீரா சிரிக்கவும்……. “ஹேய்…… உண்மையிலேயே தான்…… அப்படி தான் இங்க இருக்குற எல்லாரும் நம்பறாங்க……” எனவும்…….
“எங்க ஊருபக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க கிருஷ்……. கிரகம் சரியில்லைன்னா தான் வீட்டுக் கூரையே தலைமேல விழுந்துரும்ன்னு…… மாத்த முடியாததுன்னு நிறைய விசயம் இருக்கு……… தீராத நோய்ன்னும் வாழ்க்கையில இருக்கத்தான் செய்யும்…….” என எங்கோ பார்த்து கூற……
“சரி சரி….. அதவிடு… நான் ஏன் நாம வெளிய போகலாமான்னு கேட்டேன் தெரியுமா…….?”
“அடுத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு இன்னும் சரியா புரிஞ்சுக்க தெரியல கிருஷ்……. நான் ஏதாவது தப்பா சொல்லிடப் போறேன்…… நீங்களே சொல்லிடுங்க……” என மீரா கூறவும்…….
“மீரா எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது………. ஐ லவ் யூ தியா…….” என கண்கள் முழுவதும் காதலை தேக்கி வைத்து கூற……. ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டாள்….. இப்படியும் இருக்குமோ…? என நினைத்தது அப்படியே என வந்துவிட்டது……
அவள் நினைத்தது நடந்துவிட்டது……… எத்தனை நாட்கள்……? எத்தனை கோவில்கள்……? எத்தனை தெய்வங்கள்……? அனைத்து இடங்களிலும் வேண்டிய ஒன்றே ஒன்று……. ‘எனக்கே எனக்குன்னு ஒரு காதல்………’ இன்று நிகழ்ந்தே விட்டது……. அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை……. எத்தனை நாட்களாய் நடக்கவே போவதில்லை என ஏங்கியிருப்பாள்……… இன்று தன் மொத்த காதலையும் கண்களில் தேக்கியபடி இதோ என் கண் முன்னால் நிற்கின்றானே…… கிட்டாது என நினைத்த பொருள் இதோ என் கை எட்டும் தூரத்தில்……. ஆனால்…… என் எதிரில் நிற்பவன் எனக்கானவன் இல்லையே……
கல்லூரி படிப்பு முடிந்த இந்த இரண்டு வருடத்தில் அவள் கேட்கும் ஒரே விசயம் ‘காதலை திகட்ட திகட்ட அள்ளி அள்ளி குடுக்குற ஒரு கணவன் வேணும்……..’ என்பது மட்டும் தான்…….. ஆனால் அவள் வாழ்வில் அது கிடைக்கவும் இல்லை….. கிடைக்கப் போவதும் இல்லை……
ஏ.கேவின் கண்களில் அத்தனை காதலையும் பார்த்த மீராவிற்கு அத்தனை நாட்கள் தன் வாழ்வில் தேக்கி வைத்த வைராக்கியம் உடைந்து ‘எனக்கு ஏன் காதல் கிடைக்கல…….’ என கதறி அழவேண்டும் போல தோன்றியது……… அப்போது மீராவின் தாய் மதுவும் மீராவும் பேசியது அவள் கண்முன் படம் போல ஓடியது………
மீரா கல்லூhயில் படிக்கும் போது தன் உடன் படிக்கும் மாணவன் காதலை சொன்னான் என தன் தாயிடம் கூற…… மதுரமோ அவளிடம் “உன்னோட விருப்பம் என்ன…..?” என கேட்க……
“எனக்கு லவ் மேரேஜ் பண்ணனும்ன்னு ஆசைம்மா…… ஆனா அது அந்தப் பையனா இருப்பானான்னு தெரியல…… நான் என்னம்மா சொல்ல அந்த பையன்கிட்ட……”
“அந்த பையன்கிட்ட மட்டும் இல்லம்மா……. வேற எந்தப்பையனையுமே நீ லவ் பண்ணக்கூடாது……. ஊனக்கு லவ் மேரேஜ் பண்ணிக்கனும்ன்னு ஆசைன்னு சொன்ன…….. உன் ஆசைய விட என் குடும்ப கௌரவம் எனக்கு ரொம்ப முக்கியம்……” என கூறிவிட……. அதன் பிறகு தன்னிடம் யாரும் காதல் என்ற வார்த்தையை கூறி நெருங்காத அளவுக்கு பார்த்துக் கொண்டாள் மீரா……
அவளது ஆசையும் தன் வாழ்வில் நிறைவேறவே போவதில்லை என்பது அவள் வாழ்வில் வெகு தாமதமாகத் தான் தெரிந்தது…… காதல் என்ற ஒரு பாகம் அவள் வாழ்வில் அறிச்சுவடி கூட எழுதப்படாமலே போனது…… அவள் அதன் பின் தனக்கு வரப்போகும் கணவன் மூலம் மட்டுமே காதல் என்பது கிடைக்கும் என எண்ணி தனக்கு வரப்போகும் கணவன் வாழ்வில் திகட்;ட திகட்ட காதலை அள்ளி வழங்கும் கணவனை இறைவனிடம் வேண்டினாள்…… ஆனால் அவள் வாழ்வில் அதுவும் நிகழவில்லை……
தன் காதலை கூறியபின்பும் வெகு நேரமாக அசைவின்றி நின்று கொண்டிருந்தவளை உலுக்கி தான் சுயநினைவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது ஏ.கேவிற்கு…….. “ஹா……… ம்…… என்ன……?” என மீரா கேட்க……
“ஏய்…… ஏன் இப்புடி பேயடிச்ச மாதிரி நிக்கிற…….” என சிரித்துக் கொண்டே கேட்கவும்……… ‘நான் தான் இவ்வளவு நேரம் கனவு கண்டேனோ……?’ என எண்ணிய மீரா…….. “ம்…… ஒன்னுமில்ல…. சும்மா… ஏதோ யோசனை…… கிளம்புவோமா….?” எனக் கூறி இரண்டடி எடுத்து வைக்க…….
அவள் கரத்தை பற்றி தன்புறம் திருப்பியவன் “நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாம போனா எப்படி தியா……? பதில் சொல்லு…… சேர்ந்து சந்தோசமா போவோம்…..” என கண்களில் குறும்பு மின்ன கூற…..
‘அப்போ நான் இவ்வளவு நேரமா கண்டது கனவில்ல……’ என ஐயம் திரிபற உணர்ந்தவள்…….. அவன் கண்களை நேராக பார்த்து “நான் ஏன்…….? எப்போ…..? உங்க வீட்டுக்கு வந்தேன்னு உங்களுக்கு தெரியுமா கிருஷ்…..” என கேட்க…..
“ம்ஹ_ம்… தெரியாது… அண்ட் எனக்கு அது தேவையும் இல்ல….. நீ என்ன லவ் பண்றையா………? இல்லையா……? அது மட்டும் போதும்…….” என….. அவன் கண்களில் இவள் என்னை மறுக்க மாட்டாள் என்ற உறுதி தெரிய…….
ஒரு நிமிடம் கண்களை மூடியவள்….. தன்னை நிதானித்துக் கொண்டு “ஒரு விசயத்த கேக்காமலே இது எனக்கு தேவையில்லைன்னு சொல்லிட முடியாதுங்க…….. நான் சொல்றத…..”
“ம்ஹ_ம்……. நீ என்ன லவ் பண்றேன்ற வார்த்தைய தவற என் காது வேற எந்த வார்த்தையையும் கேட்காது…… சோ……… நீங்க இன்னைக்கு சொல்லித்தான் ஆகனும் மேடம்……” என்றான் ஏ.கே அவளது பேச்சை பாதியிலேயே இடைவெட்டியபடி……
ஒரு பெருமூச்சை விட்டவள் “சொல்றேன்……” என வலியா……? வேதனையா…….? என பிரித்தறிய முடியாத ஒரு புன்னகையை சிந்தியவள் “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு கிருஷ்…..” என…… அதிர்ச்சியாகி நிற்பது ஏ.கேவின் முறையாயிற்று……. ஆனால் வெகுவிரைவிலேயே தன்னை மீட்டுக் கொண்டவன் “எ….. எ…. என்… என்..ன சொ..ன்.ன…..?” என்றான் திக்கித் திணறியபடி……
“நீங்க சரியாதான் கேட்டீங்க கிருஷ்…….” என மீரா கூற….
“சரியாதான் கேட்டேன்னா…….. என்ன கேட்டேன்……. எனக்கு புரியல….” என கோபத்துடன் கத்த……. அங்கிருந்த சிலர் திரும்பி பார்த்தனர்……
“கத்தாதீங்க கிருஷ்…….. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு….. அவ்வளவுதான்…..” என்றபடி மீரா கோவிலை விட்டு வெளியேற…… வேறு வழியின்றி ஏ.கேவும் வந்து காரை எடுக்க…… பயணம் மீண்டும் அமைதியுடன் ஆரம்பமானது…….
மௌனம் என்பது மிகவும் வித்தியாசமானது…… நாம் வேண்டியபோது வரமாகவும் நமக்கு வேண்டாதபோது சாபமாகவும் மாறிவிடக் கூடியது……
மௌனம் நம் சந்தோசத்தை விட துக்கத்தையும்……. வேண்டும் என எண்ணுவதை விட வேண்டாம் என எண்ணுவதையுமே அதிகமாக கொடுக்கக் கூடியதாக இருக்கும்…….
இவர்கள் இருவரின் இடையில் நடந்த மௌன யுத்தம்……. அவரவர் மனதில் பெரும் புயலையே மையம் கொள்ள வைத்திருந்தது………..
ஏ.கேவின் காதல் என்னவாகும்……..? ஏன் மீராவிற்கு காதல் கிடைக்காமல் போனது……..? காத்திருந்து காண்போம்……..

Advertisement