Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 12
உன்னையும்… உன் நினைவையும்
என் மனமென்னும் சிப்பிக்குள்
முத்தாக சேமித்து வைத்தேன்……
அந்த முத்துப் பெட்டகம் உன் கை
பட்டால் மட்டுமே திறப்பேன் என அடம்
பிடித்துக் கொண்டிருக்கிறது…… அதன்
ஒளி வீச்சை உலகறிய காட்ட வேணும்
என் காதலை ஏற்றுக் கொள்வாயா……?
என் கண்மணி…!!!
“எனக்கு பிடிச்ச முதல் பொண்ணு மீரா தான்டா….. கண்டிப்பா அவ நல்லவளா தான் இருப்பா…… அவ எனக்கானவடா…..” என கண்களில் கனவு மிதக்க கூறினான் ஏ.கே…….
“டேய் டேய்…… கனவு கினவு காணப் போயிடாத…… பசிக்குது…… வாடா போய் சாப்புடலாம்…..” என அழைத்து சென்றவன்…… “மச்சான் அவளுக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்ன……. அது என்ன பிரச்சனைன்னு…….” என முடிக்காமல் சத்யா நிறுத்த…….
“மச்சி…… அவளுக்கு என்ன பிரச்னைன்னு எனக்கு தெரியாது……. ஆனா…… அப்புடி ஒரு பிரச்சனை அவ வாழ்க்கையில வரலைன்னா அவ இங்க வந்திருக்க மாட்டாடா……. எனக்கானவள என்கிட்ட கொண்டுவந்து சேக்ககூட அவ லைப்ல இந்த பிரச்சனை வந்திருக்கலாம்…….. அவ எனக்கினவடா……. எனக்கு மட்டும் தான்…….. எனக்கே எனக்கு மட்டும்…….” என்றான் விளக்கமாக…….
இருவரும் பேசிக்கொண்டே கீழிறங்கி செல்ல…… மதியரசியும் நிவேதிதாவும் டைனிங் டேபிளில் இவர்களுக்காக காத்திருந்தனர்…… மீரா ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள்…….
ஏ.கே அமைதியாக டைனிங் டேபிளில் அமர……. சத்யா மீராவிடம் சென்று “சந்தியா வா….. நீயும் வந்து சாப்பிடு……” என அழைக்க……. “நான் சாப்பிட்டுட்டேன் அண்ணா…… நீங்க போய் சாப்பிட்டு வாங்க…… நான் தோட்டத்துல வெயிட் பண்றேன்……” என்று கூறியபடி எழுந்து சென்றுவிட்டாள்…….
மற்ற நால்வரும் அமர்ந்து உணவு உண்ணும்போது மதியரசி “உனக்கு எங்கப்பா போஸ்டிங் போட்டுருக்காங்க…… நம்ம ஊருக்கு வாங்கல போலவே……. ஏம்பா……? அந்த ஊருக்கு போகனும்ன்னு அப்படி என்ன அவசியம்……” என வினவ……
“மதுரைல தான்மா…… தாத்தா இறந்துட்டார்…. பாட்டி ஊரவிட்டு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்க…… உடம்பு வேற இப்போ ரொம்ப மோசமாகிட்டே வருது…… வேலை எதுவும் செய்ய முடியல…… அதான்மா… மதுரைக்கு போனா அவங்க கூட இருந்து பாத்துக்கலாம்ல……” என விளக்கினான் சத்யா……
“அப்போ அம்மா…… கலையரசி மட்டும் இங்க இருப்பாளா……? இல்ல அவளையும் உன் கூடவே கூட்டிட்டு போக போறியாப்பா……?”
“அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒத்து வராதும்மா…… அதனால அம்மா இங்கயே இருந்துடறதா சொல்லிட்டாங்க…… நான் மட்டும் தான் போறேன்……”
மதியரசி ஒரு நிமிடம் யோசித்தவர் “சத்யா உன்கூட கொஞ்சம் தனியா பேசனும்…… சாப்பிட்டு என் ரூமுக்கு வாப்பா……” என்றவர் எழுந்து சென்றுவிட……
சத்யா ஏ.கேவை பார்த்து “மச்சி…… அம்மா இப்ப எதுக்கு என்கூட தனியா பேசனும்ன்னு சொல்லி கூப்பிடறாங்க…… உனக்கு ஏதாவது தெரியுமா……?” என்றான் யோசனையுடன்……
அவனை பார்த்து சிரித்தவன் “மச்சான் நீ மதுரைக்கு போறேன்னு சொன்ன….. மதுரையில இப்ப அவங்களுக்கு தெரிய வேண்டியது ஒன்னே ஒன்னு தான்…… அவங்கள இங்க வந்ததில் இருந்து குழப்பிட்டே இருக்கா……. மது ஆன்ட்டிகிட்ட அம்மா கேட்டதுக்கு அவங்க இப்போதைக்கு எந்த கேள்விக்கும் பதில் என்கிட்ட இருந்து கிடைக்காது…… அவ எனக்கு ரொம்ப முக்கியம்… இப்போ உடம்பு சரியில்லாம இருக்கா…… அவள நல்லபடியா பாத்துக்கோ…… சீக்கிரமே உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்ன்னு சொல்லிட்டாங்க…… சோ…… என்னோட கேள்வி அத்தனையுமே அம்மா மனசுலயும் இருக்கு… நான் உன்கிட்ட என்ன ஹெல்ப் கேட்டேனோ அததான் அம்மாவும் கேட்பாங்க…… மச்சி உன்னோட பொறுப்பு கூடிட்டே போகுது…… சீக்கிரமா மீரா யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லப்பாரு……” என ஏ.கே கூற……
“டேய்….. அப்போ ஆக மொத்தத்துல என்ன நீங்க என் வேலைய பாக்க விடமாட்டிங்க…… அப்புடித்தான……ஆமா அது யாருடா மது ஆன்ட்டி……?”
“அவங்க அம்மாவோட பிரண்டு மச்சி…… அவங்கதான் மீராவ இங்க அனுப்பி வச்சாங்க…… ஆனா அவ யாரு என்னன்னு எவ்வளவு கேட்டும் சொல்லவேயில்ல…… கண்ணுக்கு தெரியாத ஏதோ மறைந்து இருக்கு…… கண்டுபிடிக்கனும்டா அத……” என்றான் ஏ.கே……
“கண்டுபிடிச்சுடலாம் மச்சான்…… நான் இருக்கேன்ல…… கவலையே படாத… மதுரைக்கு போய் ஒரு மாதத்துக்குள்ள நீ கேட்ட… கேக்காத அத்தன டீடெல்ய்சும் உன் டேபிள் மேல இருக்கும்…… ஓ.கே……” என நம்பிக்கையுடன் கூற……
“மச்சான்…… நீ ஒரு காமெடி பீஸ்டா…… தயவு செய்து இப்புடியெல்லாம் பண்ணாத ஓ.கேவா……” என சிரித்துக்கொண்டே கூற……
“டேய்…… ஒரு ஏ.சி.பி.கிட்ட பேசிக்கிட்டு இருக்கங்கறத மறந்துடாதடா…… இன்னும் ரெண்டு வாரத்துல சார்ஜ் எடுத்துட்டா நான் ஏ.சி.பிடா……” என கடுப்புடன் கூற……
“நீ ஏ.சி இல்லடா பி.சி ஆககூட லாயக்கே இல்லாதவன்……” என மேலும் கலாய்க்க……
“டேய்…… நீ வேணா பாரு ஒருநாள் இல்ல ஒருநாள் உன்ன போலீஸ் அரஸ்ட் பண்ண போறாங்க….. அப்போ நான் வந்து உன்ன காப்பாத்த போறேன்…. அப்ப தான் என் அருமயே உனக்கு தெரியும்……” என……
“அப்புடி ஒரு நெலம என் லைப்ல வந்தா நான் சூசைட் பண்ணி செத்துடுவேன் மச்சி…… நீ அப்பவும் வந்து ஏதாவது காமெடி பண்ணிட்டு இருப்ப…… உனக்கு எவன்டா மச்சான் போலீஸ்ல வேல கொடுத்தது…… நீ வேணா பாரு நீ வடிவேலு மாதிரி காமெடி போலீஸாதான் இருக்கப்போற……” என மேலும் மேலும் கலாய்க்க……
“நான் அம்மாட்ட போய் உன்ன சொல்லித் தர்றேன் பாரு…….” என சிறு குழந்தை போல கூறிவிட்டு சென்றவன் திரும்பி வந்து “போய் முதல்ல உன் லவ்வ அவகிட்ட சொல்லி….. அவளையும் உன்ன லவ் பண்ண வைக்கிற வழியபாரு…… உன் மாமன் மக நிவேதிதா ரொம்ப நேரமா நாம பேசறத ஒட்டு கேட்டுக்கிட்டு நிக்கிறா……” என அவன் காதோடு சொல்லிவிட்டு மதியரசியின் அறைக்கு சென்றான்…..
ஏ.கே சிரித்துக்கொண்டே தோட்டத்தின் புறம் சென்றான்…… அவன் மனதில் இரவு அவளுடன் தோட்டத்தில் நின்று புறாவை ரசித்தது நினைவில் வந்து நின்றது…… அவளது ரசனையும் அதை தொடர்ந்த அவளது பேச்சும் நினைவு வர… யாருக்கு ரசிக்க தெரியாது….? நீ இங்க வந்ததிலிருந்து உன்ன ரசிக்கறத மட்டுமே வேலையா வச்சிருக்கற என்ன பாத்து உங்களுக்கு ரசிக்கத் தெரியுமான்னு கேட்டுட்டியேடி…… இனி என் முதல் வேலயே உன்ன என்ன லவ் பண்ண வைக்கிறது மட்டும் தான்….. என நினைத்தவன் மீராவை தேடிச் செல்ல…… மீரா முல்லை பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் சாய்ந்து கண்மூடியபடி அமர்ந்திருந்தாள்…… அதைக் கண்ட ஏ.கே அவள் அருகில் சென்று நின்று அவளை ரசித்துக் கொண்டிருந்தான்……
உள்ளுணர்வு ஏதோ சொல்ல மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் மீரா…… அங்கே நின்று கொண்டிருந்த ஏ.கேவை கண்டதும் “கிருஷ்……” என அழைக்க…… அவனிடம் இருந்து எந்தவொரு எதிரொலியும் இல்லாமல் போனது… மீண்டும் “கிருஷ்….. என்ன பண்ணறீங்க…… ஏன் இப்படி பாக்குறீங்க…..” என கொஞ்சம் சத்தமாக கேட்க……
“ரசிச்சுட்டு இருக்கேன்……” என்றான் கண்களில் ரசனையுடன் கனவில் பேசுபவன் போல காற்றாய் வந்தது அவனது குரல்……
“என்ன……?” என்றாள் முகத்தை சுருக்கியபடி குழப்பமாக மீரா……
அவள் முகச்சுணக்கம் கண்டு தன்நிலை அடைந்தவன் “என்ன…..?” என்றான்……
“என்ன பாத்துட்டு இருந்தீங்க கிருஷ்……” என கேட்க……
“ஒன்னுமில்லயே…… அது…. உன் கண்ணு எப்புடி இவ்ளோ பெருசா இருக்கு மீரா……” என……
அவனை பார்த்து சிரித்தவள் “உங்களுக்கு ஞானக்கண் இருக்குன்ற விசயத்தை நீங்க இதுவரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லையே கிருஷ்…” என கேலியாக கேட்க……
“என்னது….. ஞானக்கண்ணா….. எனக்கு எங்க இருக்கு….?” என சந்தேகமாக கேட்க………
“பின்ன எப்புடி கிருஷ்…… மூடியிருந்த என்னோட கண் பெரிசா இருக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சது……?” என வினவ…….
‘சே…. இவ்வளவு கேவலமா பல்பு வாங்கிட்டியேடா அரவிந்த்…… நோ….. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல…… சமாளி…… சமாளி…….’ என தனக்கு தானே கூறிக்கொண்டவன்…… மீராவிடம் அருகே சென்று நின்றவன் “நீயும் நானும் அன்னைக்கு இங்க நின்னு புறாவ பாத்துட்டு இருந்தோமே அத நினச்சுட்டு இருந்தேன்…… என் வாழ்க்கையில ஒரு பொண்ணு கூட நடந்த பர்ஸ்ட் மோஸ்ட் பியூட்டிபுல் மொமன்ட் அதுதான்…….” என அவள் கண்ணை பார்த்துக் கொண்டே காதல் தழும்பிய குரலில் கூறினான் ஏ.கே……
தன் கண் முன்னே காதல் கண்களிலும் குரலிலும் நிரம்ப பேசிக் கொண்டிருந்தவனை கண்கள் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா……. தான் பேசி முடித்த பின்பும் அதே நிலையில் இருந்த மீராவை பார்த்து சிரித்துக் கொண்டவன் “மீரா……” என முகத்திற்கு முன் தன் கைகளை ஆட்டி ஏ.கே அழைக்க……… “ஹாங்…… என்ன…… என்ன…..” என பதறியவளை பார்த்து சிரித்துக்கொண்டே……
“ஏய்…… நீ கே.பி.சுந்தரம்பாள் அம்மா ஃபேனா…..? என்;ன என்னன்னு அடுக்கிக்கிட்டே போற…..” என ஏ.கே நக்கலுடன் கேட்க……
“நக்கலு……” என….
“இல்லம்மா விக்கலு…. ஹாக்” என விக்கிக் காண்பிக்க……
“ஈஈஈஈஈஈ…………..” என தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி சிரித்தவள்……. “உங்க மொக்க காமெடிக்கு சிரிச்சுட்டேன்…… இப்போவாச்சும் என்ன விசயம்ன்னு சொல்றீங்களா…..?” என கேட்க……
“ம்….. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்…….” என மீண்டும் சிரிப்புடன் கூற…….
“ஐய்யோ……. என்னாச்சு கிருஷ் உங்களுக்கு…… நல்லாதானே இருந்தீங்க……. இப்ப ஏன் மெண்டல் மாதிரி பேசுறீங்க…… ஒழுங்கா என்ன விசயம்ன்னு சொல்லுங்க……”
“சரி….. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனும்……”
“ம்…… கேளுங்க……”
“உண்மைய சொல்லுவியா……?” என அவளை கூர்மையுடன் பார்த்தபடி கேட்க………
“எனக்கு என்ன பிரச்சனைன்றத தவற வேற என்ன வேண்டுமானாலும் கேளுங்க…… உண்மையான பதில் சொல்றேன்……” என அவளும் அதே கூர்மையுடன் பதில் கூறினாள்……
“அப்போ நான் அந்த கேள்வி கேட்டா……?” பதில் அறியும் ஆவலுடன் கேட்டான் ஏ.கே……
“உண்மையும் கிடைக்காது……. பொய்யும் கிடைக்காது……” என அலட்சியமாக பதில் கூறினாள் மீரா……
“வேற…..”
“அமைதி மட்டும் தான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலா கிடைக்கும்……” என்றவள் “இதுதான் நீங்க கேக்க போற கேள்வின்னா……. ஐ ஹேவ் டூ லீவ்” என்றவள் எழப்போக……
“நான் அதக் கேக்க வரல……” எனவும் மீண்டும் அமர…. “உன்ன சத்யா சந்தியான்னு சொல்றானே….. நீ ஏன் எங்ககிட்ட உன்பேர் மீரான்னு சொன்ன……” எனக் கேட்டான்……
“இவ்ளோதானா……” என சிரித்தவள்…… “அப்பாவுக்கு கிருஷ்ணர்ன்னா ரொம்ப பிடிக்கும்…… அவர் மேல பக்தியோட இருந்த மீரா மாதிரி நானும் இருக்கனும்ன்னு மீரான்னு பேர் வச்சாரு…… ஆனா அம்மாக்கு பாட்டி பேர வைக்கனும்ன்னு ஆசை…… என் பாட்டி பேரு சந்திரம்மா…… சந்திர மீரான்னு வைக்கறதா இருந்ததாம்…… அப்பறம் பேசி சந்தியமீரான்னு வச்சுட்டாங்க…… பாட்டி பேருன்னு நெனச்சு வச்சதால வீட்ல எல்லாரும் மீரான்னு கூப்பிடுவாங்க….. வெளியில சந்தியான்னு கூப்பிடுவாங்க…… அவ்வளவுதான் கதை முடிஞ்சுடுச்சு….. இதுதான் என் பேரோட ரகசியம்…… பரம ரகசியம்…… யாருக்கும் சொல்லக்கூடாது…… ஓ.கே…..” என காதருகில் நின்று ரகசியம் போல சொல்ல……
அதைக் கேட்டு சிரித்தவன் “சரி…. நீ மட்டும் என்ன கிருஷ்ன்னு கூப்பிடுறேல…… அதேபோல நானும் உன்ன யாரும் கூப்பிடாதது மாதிரி ஒரு பேர் வைக்கட்டுமா……?” என கேட்க……
“அட…… காசா….? பணமா….? யாரோ வச்ச பேரு…… அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வச்சாங்க…. அத நாம நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்குவோம்…… அவ்வளவு தான……” என அசட்டையாக கூறியவள் “ஆமா….. என்ன பேரு வச்சு கூப்பிடுவீங்க……” என ஆர்வமாக கேட்க…… அவன் ஏதோ கூற வர “வெயிட் வெயிட்…..” என நிறுத்தியவள்…. “நாயே…. பேயே…… காட்டேரி…… குட்டிசாத்தான்……. இப்புடியெல்லாம் கூப்பிடலாம்ன்னு பிளான் பண்ணாதீங்க….” என…..
“ம்…… உன்ன போய் அப்புடியெல்லாம் கூப்பிடுவேனா…… வேணா மோகினி பிசாசுன்னு கூப்பிடலாம்….. ஆனா என்ன மோகினி கேட்டா கோவிச்சுக்கப் போகுதுங்க…….” என சுற்றும் முற்றும் பார்த்து பயந்தது போல கூறினான்……
“ஆமா ஆமா…… பாத்து இவன் தான்டி என்ன அந்த ரத்தக்காட்டேரின்னு சொன்னான்…… அப்புடின்னு அவங்க பிரண்ட்ஸ எல்லாம் கூட்டிட்டு வந்து பிடிச்சு உங்க தலமேல ஏறி உக்காந்துற போகுதுங்க…… பத்தரமா இருந்துக்கோங்க……” என நக்கலுடன் கூறியபடி நொடித்துக் கொண்டு திரும்பி அமர……
அதை பார்த்து சிரித்துக் கொண்டே “அப்ப உனக்கு என்ன பேரு வச்சேன்னு தெரிய வேணாமா…..?” என கேட்க……
“ம்….. சொல்லுங்க சொல்லுங்க…… எனக்கு காது ரொம்ப நல்லாவே கேக்கும்……” என திரும்பி அமர்ந்தபடியே கூற…….
“ம்…… ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்……” எனவும்……
திரும்பி அமர்ந்தவள் “சாமி நீங்க சொல்லவே வேணாம்….. ஆனா ப்ளீஸ் மொக்க போடுறத பர்ஸ்ட் நிப்பாட்டுங்க…… தாங்க முடியல……” என கையெடுத்துக் கும்பிட….. ஏ.கே சிரித்துவிட்டான்…… அதை பார்த்து மீராவும் சிரிக்க….. இருவரும் நகைப்பதை பார்த்து வெந்து கொண்டிருந்தாள் நிவேதிதா……
தன் அத்தானும் அவனது நண்பன் சத்யாவும் பேசியதை மறைந்திருந்து கேட்டவள்…… தனக்கு தெரிந்த தகவலை அபியிடம் கூற….. அவள் மீராவின் போட்டோவை அனுப்புமாறு கேட்க…… அதை எடுப்பதற்காக தன் அறையின் பால்கனிக்கு வந்தவள் அங்கே ஏ.கேவுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த மீராவை கண்களாலேயே சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்க…… அதே நேரம் வீட்டினுள்ளிருந்து வெளிப்பட்டான் சத்யா…… அவனை கண்ட ஏ.கே அவனிடம் சென்று என்னவென்று விசாரிக்க……..
“அது வந்து மச்சான்……” என்றவன் நிமிர்ந்து வானத்தைப் பார்க்க…… சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன்…… இவனும் மேலே பார்த்துவிட்டு ஒன்றும் தெரியாததால் சிறிது கடுப்பாக…… அந்த நேரம் மீண்டும் பழையபடி ஒழுங்காக நின்று “இதுதான் மச்சி நடந்துச்சு…….” என……
ஏ.கேவிற்கு தலையும் புரியவில்லை…… காலும் புரியவில்லை…… “என்னடா சொல்ற…… என்ன நடந்துச்சு……” என புரியாமல் கேட்க……
“ம்…… இப்ப நான் மேல பாத்து ஒரு பிளாஸ்பேக் புரஜெக்டர் இல்லாம காட்டுனனே அதான்……” என……
“டேய்…. நேரங்கெட்ட நேரத்துல காமெடி பண்ணாதேன்னு எத்தன தடவ உங்கிட்ட சொல்லிருக்கேன்….. திருந்தவே மாட்டியாடா நீ……” என பொரிய ஆரம்பிக்க……
“டேய் கடுப்பேத்தாத…… நீதான் நான் போறதுக்கு முன்னாடியே எதுக்கு அம்மா கூப்பிட்டாங்கன்னு சொல்லிட்ட…… அப்பறம் என்னமோ ஒன்னுமே தெரியாத பச்சபுள்ள மாதிரி என்ன நடந்துச்சுன்னு வந்து நிக்கிற…… போடா…… நீ சொன்னதுதான்…… ஆனா….. அவ யாரு என்னன்னு கூட தெரிய வேணாம்….. அவளுக்கு என்ன மெடிக்கல் பிராப்ளம்ன்னு மட்டும் தெரிஞ்சா போதும்…… அத மட்டும் கண்டுபிடிச்சு சொல்லுப்பான்னு சொன்னாங்க….” என்றுவிட்டு “நான் சந்தியாட்ட பேசிட்டு கிளம்பறேன் மச்சான்….. கால் பண்றேன்……” என…… அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு வீட்டினுள்ளே சென்றான் ஏ.கே……
மீராவிடம் சென்ற சத்யா “சந்தியா….. நான் கிளம்பறேன்மா……” என கூற…..
“போய்ட்டு வாங்கண்ணா……” என புன்னகையுடன் கூறினாள் மீரா……
“உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் நான் உன்கூட இருப்பேன்…… நீ எப்ப என்ன பிரச்சனைன்னாலும் எனக்கு கால்பண்ணுமா…..” என கூறி வாஞ்சையுடன் தலையை தடவி விடை பெற்றான் சத்யா……
“கண்டிப்பாண்ணா…..” என்றபடி இவளும் விடைகொடுக்க…… சத்யா மீராவின் தலையில் கை வைத்தபடி நின்ற காட்சியை புகைப்படம் எடுத்தது நிரஞ்சனாவின் மொபைல்……
மீராவின் பிரச்சனை என்னவென்று தெரிந்தபின் கிருஷ் இதே அளவு காதலை அவளிடம் கொண்டிருப்பானா…….? அபி மீரா யாரென கண்டறிவாளா…..? அப்படி கண்டுபிடித்தால் அதன் மூலம் நிவேதிதா மீராவிற்கு தொல்லை கொடுப்பாளா……? சத்யா மீராவை பற்றிய உண்மையை கூறும்போது கிருஷின் நிலை என்ன…..? மீராவின் நிலை என்ன…….? காத்திருந்து காண்போம்…….

Advertisement