Advertisement

உனக்கானவன் உனக்கே 
உன்னவன் – 11
மீரா மயக்கம் வந்து சரிந்ததும் பதற்றத்துடன் ஓடிவந்த மூவரும் அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்……. “ஜானகி போய் தண்ணி எடுத்துட்டு வா…….” இன்னும் ஜானகி அம்மாவை அனுப்பிவைத்த மதி……. “முதல்ல தூக்குங்க அவள…… போயி ரூம்ல படுக்க வைங்க……” என கூற……
சத்யாவும் “தூக்கு மச்சி……” என்றபடி மாடியேறி சென்று…… மீராவின் அறை வாசலை திறந்து வைக்க… ஏ.கே அவளை கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தான்……. ஜானகியம்மா தண்ணீருடன் வரவும்….. மீராவை கட்டிலில் கிடத்தி… அவள் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க….. மெதுவாகக் கண்களைத் திறந்தவளுக்கு உடல் நடுங்கியது…….
அனைவரும் பதற்றத்துடன் என்னவென்று விசாரிக்க……. மாத்திரைகள் நிரம்பிய டப்பாவின் புறம் கை நீட்டினாள்…… அதைக்கண்ட ஏ.கே “ஜானகியம்மா நீங்க போய் சாப்பாடு எடுத்துட்டு வாங்க……” என கூறி அவரை அனுப்பிவிட்டு…… அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு மீராவை நெருங்கினான்……
தன் நடுங்கிய கரங்களால் அதை வாங்கிப் பிரித்தவள்…… அதிலிருந்து ஒரு மாத்திரையை மட்டும் எடுத்து விழுங்கினாள்……. சிறிது நேரம் கழித்து நடுக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்க……. சாப்பாட்டுத் தட்டை எடுத்து அவள் முன் நீட்டினான் ஏ.கே…….
அதைப்பார்த்த அவள் முகத்தை திருப்பிக்கொள்ள……. “நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியில இருங்க…….” என மற்றவர்களை அனுப்பியவன்…… கதவைத் தாளிட்டு விட்டு மீராவின் முன் வந்து அமர்ந்தான்……. “இப்ப நீயா சாப்பிடல….. நானே உனக்கு ஊட்டி விட வேண்டிவரும்……” என்றான் ஒருவித அழுத்தத்துடன்……
“ம்ப்ச்….. எனக்கு பிடிக்கல… நீங்க ஃபர்ஸ்ட் கிளம்புங்க……” என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு……
“ஏய்…… என்ன கோபப்படுத்தாத…… நான் இதுக்குதான் அப்பவே சொன்னேன் சாப்பிட்டு மாத்திரை சாப்பிடுன்னு….. அப்ப என்ன சொன்ன…… ம்ப்ச்…… தேவையில்லாததை எல்லாம் பேச வேண்டாம்… நீ இப்ப சாப்பிடு……” எனவும்……
“என்ன சொன்னே……. ஒருநாள் சாப்பிடலைன்னா ஒன்னும் செத்துட மாட்டேன்னு சொன்னேன்….. இப்பவும் அதைத்தான் சொல்றேன்…… கிளம்புங்க……” என்றாள் கோபமாக…….
“ஏய்…… என் கோபத்த மேலும் மேலும் கிளறிக்கொண்டே இருக்காத……. பேசாம சாப்பிடு…….” என ஏ.கேவும் கோபமாக கூற…….
“………….”
அவள் அமைதியை கண்டவன்…….. “மீரா……. நீ சாப்பிடற வர நானும் சாப்பிட மாட்டேன்……. சாப்பிடுவது சாப்பிடாதது உன்னோட இஷ்டம்……” என்றவன் தட்டை வைத்துவிட்டு வேகமாக வெளியேறி விட்டான்…….   
மீராவிற்கு மனம் ஆற மறுத்தது……. இருந்தாலும் ஏ.கேவும் சாப்பிட மாட்டேன் என்பது நினைவு வர…… அமைதியாக யோசிக்க முயன்றாள்……. காலை ஏ.கே கூறிய “மீரா….. நீ சாப்பிடல நானும் சாப்பிட மாட்டேன்” என்ற வார்த்தை நினைவிற்கு வர……… ‘அப்போ……. அவர் காலையிலிருந்தே சாப்பிடலையா…….?’ இருக்கட்டும் எனக்கு என்ன வந்தது…… ஆனா…… அவர் ஏன் சாப்பிடாம இருக்கணும்……. யோசித்துக் கொண்டிருக்கும்போதே…… சத்யாவை பார்த்த நியாபகம் வந்தது…… இவங்க எப்படி இங்கே வந்தாங்க……? என்று கேள்வி தோன்ற…… பதில் அறிந்துகொள்ளும் ஆவலில் வேகமாக எழுந்தாள்……. நிற்கமுடியாமல் எழுந்த வேகத்திலேயே மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்……
“வேதி……. ஏன் சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்குற……. அவ ஏற்கனவே உடம்பு சரியில்லாதவ……. நீ சொன்ன வார்த்தையால் அவ சாப்பிடாம இருக்கா…. அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா யார் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துப்பா……. நீ போய் ஒரு வார்த்த மன்னிப்பு கேட்டா குறைஞ்சு போய்விட மாட்ட…..” என கோபத்துடன் கூற……
“நீங்க சொன்னதையே சொல்லாதீங்க அத்தான்… நாம் போய் அவ கிட்ட மன்னிப்பு கேட்கணுமா…… என்னால முடியாது…… அவ சாப்பிட்டா சாப்பிடட்டும்….  இல்லைனா அவ செத்தால் சாகட்டும்……” எனக் கூற……….
“வேதி……. அது……” என்று பேசிக்கொண்டே கையை அவள் புறம் நீட்ட……. அவன் கையை வெடுக்கென தட்டி விட்டவள்……..
“போயும் போயும் அவகிட்ட…… ஒரு வேலக்காரிகிட்ட……. நான் மன்னிப்பு கேக்கனுமா……?” என அதே கோபத்துடன் திருப்பி கேட்டாள் நிவேதிதா……..
“ஏய்…….. ஒரு உயிர்டி….. அவ தான் அவ பிடிவாதத்த விடலைன்னா….. நீ அதுக்கும் மேல…… உயிரோட மதிப்ப மொதல்ல தெரிஞ்சுக்கடி…. அவகிட்ட நீ மன்னிப்பு கேக்க வேணாம்….. அவள சாப்பிட மட்டும் வை….. ப்ளீஸ்……” என……
நிவேதிதா ஒரு ஏளன புன்னகையுடன் அவளை நோக்கி…… “இந்தளவுக்கு அவளுக்கு நீங்க சப்போர்ட் பண்ற அளவுக்கு அவ உங்களுக்கு என்ன குடுத்தா அத்தான்……..” என கூறி முடியும் முன் அவள் கன்னத்தில் அறைந்தான் ஏ.கே……
மீராவின் அறையிலிருந்து வந்ததிலிருந்து நிவேதிதாவுடன் வாதம் புரிந்து கொண்டிருக்கிறான்….. ஆனால் அவளோ…… அவனது கூற்றிற்கு செவிசாய்க்காமல் தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தாள்….. ஆனாலும் அவளை அறைந்தது   அவனுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது…… எவ்வளவு கோபம் இருந்தாலும் நிதானத்தை கைவிடாதவன் ஏ.கே……. அப்படியிருக்க…… அதுவும் நிவேதிதாவை…… இனி என்ன நடக்கப் போகிறதோ என நினைத்துக்கொண்டே நிவேதிதாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்……. அவன் நினைத்தது சரியே என்பது போல காளி அவதாரம் எடுத்தபடி முன் நின்றிருந்தாள் நிவேதிதா………
“ச்சீ……. போடி….” 
என வெறுப்புடன் கூறியவன் சென்றுவிட…… கோபத்தில் கனன்று கொண்டிருந்தாள் நிவேதிதா…….
‘அவளுக்காக என்னையே அடிக்கறீங்களா…….? நான் யார்ன்னு உங்களுக்கு காட்டறேன்…..?  அதுக்கு முன்னாடி அவ யாருன்னு கண்டுபிடிக்கிறேன்……. இவ்வளவு திமிரா இருக்கான்னா அவ கண்டிப்பா வேலைக்காரியா இருக்க மாட்டா…… அவ யாருன்னு நான் கண்டுபிடிச்சே ஆகணும்…….’ என நினைத்தவள்……. உடனே தன் தோழிக்கு அழைத்தாள்……..
“அபி…….”
“ம்……. என்ன மேடம் எப்பவுமே கால் பண்ண மாட்டீங்க இன்னைக்கு நீங்களாவே கால் பண்ணி இருக்கீங்க…….”
“ஏய்……. சும்மா கோபப்படுத்தாதே சொல்லிட்டேன்…….. எனக்கு ஒரு பொண்ணோட ஃபுல் டீடைல்ஸ் வேணும்…….. எவ்வளவு நாளில் முடியும்..” என…….
“ஹேய்….. ரிலாக்ஸ்…… அந்த பொண்ணு யாரு…..? எந்த ஊரு…..? என்ன டீடைல் வேணும்…….? இதெல்லாம் சொல்லு ஒரு ஒன் மந்த்ல கண்டுபிடித்துவிடலாம்……” 
“ஆனா இந்த எந்த டீடெயில் எனக்கு தெரியாது…….”
“ஏய்……. இந்த டீடைல்ம் தெரியாம எப்படி கண்டு பிடிக்கிறது…… நீ பர்ஸ்ட் அவ போட்டோவும் டீடெயில்ஸ் சென்ட் பண்ணு……. அப்புறம்தான் எப்படி ஸ்டார்ட் பண்றது என்று அதை யோசிக்கலாம்…….”
“ஏய்…… எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல……. நாம ஃபோட்டோவை எப்படியாவது இன்னைக்குள்ள சென்ட் பண்ணி விடுறேன்……. அப்புறம் அவளை பத்தி நான் எனக்கு தெரிஞ்ச டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி அனுப்புறேன்…… உடனே புரோசீட் பண்ணி கண்டுபிடிக்க பாரு…….” என்றவள் மொபைலை அனைத்து விட்டு…… போட்டோ எப்படி எடுக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்…….   
‘நம சாப்பிடலைன்னா…… நமக்கு மட்டும் இல்லாம இங்க இருக்கறவங்களுக்கும் பிரச்சனை வரும்…… நமக்கு ஏதாவது ஒன்னுன்னா நாளைக்கு இவங்கள கேள்வி கேட்பாங்க…….. நம்ம இருக்க பிரச்சனைக்காக இங்க வந்து……. இவங்கள பிரச்சனையில சிக்க வைக்கனுமா…….?’ என யோசித்தவள்……. அமைதியாக சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கி சென்றாள் மீரா…….
மீரா இறங்கி சென்ற அதே நேரம் ஏ.கே மாடிப்படிகளில் கோபமாக ஏறி சென்றான்……. அவனை கண்டவள் “கிருஷ்……..” என…… அவனோ எதையுமே கண்டுகொள்ளாமல் விறுவிறுவென சென்றுவிட்டான்……..
‘நாம சாப்பிடாததால கோபமா இருக்காறோ……? ஆனா……. ஏன்…..? சரி பாப்போம்……” என்றுவிட்டு கீழே சென்றவள் “என்னன்ணா…… எப்படி இருக்கீங்க……” என சத்யாவிடம் கேட்க……
அவளை பார்த்தவன்….. “நான் நல்லாதான் இருக்கேன்……. நீ தான் எப்புடியோ இருக்க மாதிரி தெரியுது சந்தியா…….” என்றான் ஒரு மாதிரி குரலில்…….
“அடடா……. எப்புடிணா இருக்கேன்…… நல்லா இல்லயா…..? ம்…… நான் வேணும்ணா போய் டிரஸ் மாத்திட்டு வரவா…..?” என சீரியஸான குரலில் கேட்க……..
“ம்……. இன்னும் கொஞ்சம் பெட்டரா சமாளிச்சு இருக்கலாம்……..”
“சொதப்பிட்டேனா…..?”
“ம்…. லைட்டா…..”
புன்னகைத்தவள்….. “கீதா எப்படி இருக்கா……?” என….
“அப்போ….. உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ சொல்லமாட்ட……” என்றான் அவன் அதிலேயே நின்றபடி…..
“எனக்கு என்ண்ணா பிரச்சனை……. கீதா எப்புடி இருக்கா……?” என மீண்டும் கேட்க……
“ம்…… நல்லா இருக்கா…… மேரேஜ் ஆகிடுச்சு……. ஒரு பையன் இருக்கான்……” என்றான் சத்யா……
“அட…… பாத்தீங்களா….. கல்யாணத்துக்கு கூட கூப்பிடவே இல்ல……” என வருத்தப்படவும்……
“அப்படிலாம் இல்லம்மா…… அது….. அவசரமா பண்ணியதால கீதா பிரண்ட்ஸ் யாரையுமே கூப்பிட முடியலமா……” என……..
“அப்படி என்னண்ணா அவசரம்……”
“அப்பா….. ரொம்ப மோசமான நிலமைல ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணிருந்தோம்……. கீதா கல்யாணத்த பாக்கணும்ன்னு சொன்னாங்க……. சோ…..”
“மாப்ள யாருண்ணா…….?”
“என் அத்த பையன்தான்மா……..”
“ஓ…….” அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் ஒரு சில நொடிகள் மௌனத்தில் கழிய……. மீராவே அதை களைத்தாள்……
“பையன் போட்டோ இருக்காண்ணா…… காட்டுங்களேன் பாப்போம்…….” என கேட்கவும் தன் மொபைலில் இருந்த படத்தை எடுத்து காட்டினான் சத்யா……
அதை கண்டவள் “ரொம்ப அழகா இருக்காண்ணா குட்டி பையன்….. அப்புடியே கீதா முகச்சாயல்……” எனவும்……
“பையன் அழகுன்னு சொல்லுமா……. அதுக்காக கீதா மாதிரி அழகுன்னு சொல்லாத……. அத கேட்டா அவனே அவனுக்கு தண்டனை கொடுத்துப்பான்……..”
“ஏண்ணா……..”
“பின்ன அவள மாதிரி இருக்கான்னா……. அப்போ பெரிய பையனானா இவள மாதிரி அசிங்கமா மாறிடுவோமோன்னு பயந்துடமாட்டானா……..?” என சத்யா கிண்டல் குரலில் கூற…….
“நீங்க மாறவே இல்ல…… கீதா மட்டும் இப்ப இருந்தான்னா சண்டகாட்சி பாத்திருப்பேன்……. சே….. ஐ ரியலி மிஸ்ட் தேட்…..” என வருத்தத்துடன் கூற…..
“உனக்கு ஏம்மா இந்த கொலவெறி…… நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கனும் நீ அத சிப்ஸ் சாப்பிட்டுட்டே வேடிக்கை பாக்கனும்…… ம்…… நல்லா வருவமா…..” என்றான்……
அவன் கூறிய விதத்தில் சிரித்தவள் “கீதாவ ஒருநாள் கூட்டிட்டு வாங்கண்ணா…….” என மீரா கூற……
“கண்டிப்பாம்மா……. அடுத்த வாரம் கீதா வர்றா…. அப்போ நான் கூட்டிட்டு வர்றேன்…….” 
அப்போது மீனம்மாள் வந்து “சாப்பாடு ரெடியா இருக்கு…… சாப்பிட வாங்க” என அழைக்க……
“வாங்கண்ணா……” என மீராவும் அழைக்க…..
“அரவிந்த் நிவேதிதாகிட்ட பேசிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனான்…… இன்னும் காணோம்…… அவனும் வந்துடட்டும் சேர்ந்து சாப்பிடலாம்……” என்று மறுத்தான் சத்யா…..
“ஆனா….. அவர் நான் வரும்போதே மேல போய்ட்டாரேண்ணா…….” 
“என்ன……?” என குழப்பத்துடன் கேட்டவன் “சரி நான் போய் பாத்துட்டு வர்றேன்……” என்றுவிட்டு மாடியேறி செல்ல……. மதி நிவேதிதாவை சமாதானம் செய்து கீழே அழைத்து வந்தார்…….
அரவிந்தின் அறைக்கு சென்ற சத்யா கட்டிலில் அமர்ந்து தலையில் கை வைத்தபடி தலைகுனிந்து இருந்ததை பார்த்து தன் நண்பனை எண்ணி கவலைகொண்டான்…….
“மச்சி….. செம டோஸ் போல…… எங்க……” என அவனது முகத்தை நிமிர்த்தி எதையோ தீவிரமாக தேடினான்…….
“ம்ப்ச்…… என்னடா காணோம்…….?” என எரிச்சலுடன் கேட்டான் ஏ.கே…….
“அதுவா மச்சி……. என் லவ்வர நீ எப்புடி வேலக்காரங்களோட சாப்பிட சொல்லலாம்ன்னு நீ நிவேதிதாகிட்ட கேட்டியா……? இல்லையான்னு தேடறேன்…….” என சீரியஸாக கூற……
“அது என் மூஞ்சில எழுதியா ஒட்டிருக்கும்……. போடா……. நான் இருக்குற கடுப்புல…..” என்றான் கோபமாக…..
“ஆமா மச்சி….. மூஞ்சில எழுதிதான் இருக்கும்…… ஆனா…… உன்ன பாத்தா நீ மீராவ லவ் பண்ணறத இன்னும் நிவேதிதாகிட்ட சொல்லல…….” என……
“எப்புடி சொல்ற……..?”
“அதான் சொன்னேனேடா நீ சொல்லியிருந்தா உன் மூஞ்சில எழுதியிருக்கும்ன்னு…….” என்றான் சத்யா கிண்டலாக……
“……..”
அவன் அமைதியாக இருக்கவும் “நீ இப்ப எப்புடின்னு கேட்டுருக்கனும்…… மச்சி கேளேன்……” என…….
“கேக்கலைன்னா விடவா போற……. சொல்லித்தொல…….” என்றான் ஏ.கே இயல்பு நிலையை அடைந்து……
“அது…… நீ மீராவ லவ் பண்றேன்னு சொன்ன உடனே……. ஏன்டா…..! நான் ஒருத்தி இங்க உனக்காக காத்துட்டு இருக்கேன்…… நீ இன்னொருத்திய லவ் பண்றேன்னு என்கிட்டயே சொல்றியான்னு கேட்டு…..” என்றவன் எழுந்து சென்று தள்ளி நின்று கொண்டு…… “கன்னத்தில நல்லா அவ கைய வச்சு எழுதியிருப்பா…….” என சத்யா கூறவும்….. ஏ.கே அவனை துரத்தவும் சரியாக இருந்தது…..
சிறிது நேரம் கழித்து களைத்து கட்டிலில் விழுந்த இருவரும் சிரித்துக் கொண்டனர்……
அப்போது ஏ.கே “டேய்……. நீ மட்டும் எப்படிடா சிரிச்சுட்டே இருக்க……..”
“மச்சி…….. நான் லவ் பண்ணல மச்சி……. நீ லவ் பண்ற மச்சி……. அதான் நான் சிரிக்கிறேன்…… நீ அத பார்த்து காண்டாகுற…….” என்றான் மீண்டும் சிரித்துக்கொண்டே சத்யா…….. 
“எது எப்புடியோ மச்சான்….. வேதிக்கு மட்டும் நான் மீராவ லவ் பண்றேன்னு தெரிஞ்சது……..” என முடிக்காமல் நிறுத்த…….
“நான் சொன்னது தான் மச்சி நடக்கும்……” என்றான் சத்யா தோள்களை குலுக்கியபடி கூலாக……..
அதை பார்த்தவன் “கண்டிப்பா மச்சி……. அதுக்கும் முன்னாடி மீராவுக்கு என்ன ப்ராப்லம்ன்னு கண்டுபிடிக்கனும் மச்சி……” என்றான் ஏ.கே தீவிரமாக…..
“ஆமா மச்சி…… சிஸ்டர் எங்க……? ஆளையே காணோம்……?” என…….
“வேதி அவ ரூம்ல இருக்காடா……”
“வேதியா……? டேய்… நான் கேட்டது மீராவ……” 
“ஏய்….. விளையாடுறியா…? கீழே மயங்கி விழுந்தாளே……. அவதான் மீரா……” 
“என்னது……? அவ மீராவா….? டேய்…. அவ சந்தியாடா……” என்றான் குழப்பமாக…..
“என்ன…..? சந்தியாவா…..? அவள உனக்கு முன்னாடியே தெரியுமா…..? அதான் அவ மயங்கினப்போ சந்தியான்னு கூப்பிட்டியா…….?” என வரிசையாக கேட்க……
“என் தங்கச்சி கீதா பாட்டி வீட்ல இருந்து படிச்சான்னு சொன்னேனேடா…… அவகூட தான் சந்தியாவும் படிச்சா……. நான் மதுரைக்கு போகும் போதெல்லாம் அவள பாப்பேன்…….” என…….
“பின்ன ஏன்டா அவ மீரான்னு சொல்லி இங்க வந்திருக்கா…….? அவகிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு…… இவ யார்…..? ஏன் இங்க வந்தா…..? அவளுக்கு என்ன பிரச்சனை……? எல்லாம் தெரிஞ்சுக்கனும்…… ஆமா…. நீ எப்போ மதுரைக்கு கிளம்பற……?” என கேட்டான் ஏ.கே……
“இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்புறேன்டா…….”
“சரி….. நீ போனதும் நான் சொன்னத விசாரிச்சு சொல்லு…….” என…..
“மச்சி……. சந்தியா ரொம்ப நல்லவடா…… கீதா சொன்னத வச்சு பாத்தா அவ உனக்கு கிடச்சா…… யூ ஆர் சோ லக்கிடா…..” என்றான்…….
எங்கே தன் நண்பன் சந்தியாவை தவறாக எண்ணி விடுவானோ……? தன் தங்கையின் கூற்று உண்மை எனில்…… அப்புடி ஒரு பொண்ணுக்கு தன்னோட நண்பன் கொடுத்து வச்சிருக்கனும் என நினைத்தே அவ்வாறு கூறினான்……..
ஆனால் ஏ.கேவோ “மச்சி….. என் மனசுல மொதமொதல்ல ஒரு பொண்ணு இடம் பிடிச்சுருக்கா…… கண்டிப்பா அவ தப்பானவளா இருக்க மாட்டாடா…….. என்னைக்கு இருந்தாலும்…… ஷீ இஸ் த ஒன் இன் மை லைப் மச்சி………” என்றான் மனமாற……..
“டேய்….. போதும்டா…… கனவு கினவு காண போயிடாத……. பசிக்குது…… வா…. போய் சாப்புடலாம்……” என கூறியபடி கீழே அழைத்து சென்றான்……..
நிவேதிதாவின் தோழி அபி முதலில் மீரா யாரென கண்டுபிடிப்பாளா……? இல்லை சத்யா கண்டுபிடிப்பானா……..? உண்மை தெரியவந்தால் ஏ.கே இதேபோல் மீராவை காதலிப்பானா……..? காத்திருந்து காண்போம்………..

Advertisement