Advertisement

உனக்கானவன் உனக்கே 
உன்னவன் – 10
மனம் முழுக்க குழப்பங்களுடன் மறுநாள் விடியலை எதிர்கொண்டான் ஏ.கே….. காலை எழும்போதே நிவேதிதா இன்று வருவதாய் கூறியது நினைவில் வந்தது…… 
அவள் எப்பொழுதும் பெங்களூருவில் இருந்து காரில்தான் வருவாள்…… எனவே பொதுவாக ஆறிலிருந்து ஏழு மணிக்குள் வந்துவிடுவாள்…… இப்பொழுது மணியைப் பார்த்தான் ஏ.கே…… ஐந்தே முக்கால்….. எழுந்து ஜாகிங் செல்ல ரெடியாகி கீழே சென்றான்……. அப்பொழுதுதான் மீரா குளித்துவிட்டு பூஜை அறையை நோக்கி சென்றாள்…….
மீராவிற்கு ஏனோ மனம் மிகவும் சஞ்சலப்பட்டது….. நேற்று நிரஞ்சன் கூறிய தகவலால் இப்படி ஆகியிருக்கலாம்…… அல்லது…… பழைய நினைவுகளின் தாக்கமாக இருக்கலாம்…… என எண்ணியவள்…… பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட ஆரம்பித்தாள்…… ஏனோ அப்பொழுதும் மனம் அமைதியடைய மறுத்தது…… அமைதியாக அமர்ந்து கண்மூடி பாட ஆரம்பித்தாள்…… 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
பாடலை பாடி முடித்து…… வணங்கி எழுந்த மீராவின் பின் நின்றிருந்தான் ஏ.கே…… அவனைப் பார்த்தவள் புன்னகையுடன் “குட்மார்னிங் கிருஷ்……” என…… அவனோ அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்……. “என்னாச்சு…… ஏன் இப்படி பாக்கறீங்க……” எனவும்……
“பாட்டு…… ரொம்ப அழகா பாடுன மீரா…… ஆனா…… உனக்கு நெஜமாவே எந்த குறையும் இல்லையா…..?” என கேட்க…….
ஒரு நிமிடம் அதிர்ந்தவள்….. ‘எனக்கு குறை இல்லையா……? என் குறையை சொன்னா…..’ என யோசித்தவள்…… சட்டென நினைவை நிறுத்தி….. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு……. “எனக்கா….? எனக்கு குறை இருக்குன்னு சொன்னா…. உங்க பார்வையில குறை இருக்குன்னு சொல்லிடுவாங்க கிருஷ்… பாத்து…… எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பார்த்து கன்சல் பண்ணிக்கோங்க……….” என்று எப்பொழுதும்போல் புன்னகையுடன் கேலியாக கூற…….
“ம்ஹூம்……. உனக்கு எந்த குறையும் இல்லை என்று நினைக்கிற போது ரொம்ப சந்தோஷமா இருக்கு……” என்றான் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து…… அவனுக்கு இப்பொழுதும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது…… ‘எல்லாரும் மனசு கஷ்டமா இருந்தா….. அழுவாங்க…… புலம்புவாங்க……. திட்டுவாங்க…… ஆனா…… இவ என்னடான்னா குறை ஒன்றும் இல்லைன்னு பாட்டு படிக்கிறா…… சரி உண்மையிலேயே குறை எதுவும் இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா……. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நக்கலா பேசி சமாளிக்கிறா…….. இதுல கேள்வி கேட்டதும் அந்த முகத்தில் வந்த ரியாக்ஷன்……. கண்டிப்பா அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு……. அன்னைக்கு கூட நாம கேட்டதுக்கு எங்க அம்மாவுக்கு கூட சொல்லாத விஷயம்னு சொன்னாலே……. அப்படி என்னதான் இவளுக்கு உள்ள இரகசியம்  இருக்கோ……. தெரிஞ்சுக்கிறேன்………” என மனதிற்குள்ளே பேசிக்கொண்டிருக்க…….
“கிருஷ்……. என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க…..” எனக் கேட்டாள்……. ‘ஏன் இவர் நேத்துல இருந்து ஒரு மாதிரி பேசுறாரு…..?’ என நினைத்துக் கொண்டிருந்தாள்……
“ஒன்னுமில்ல….. நான் ஜாக்கிங் போய்ட்டு வந்துடறேன்……” என்றபடி வெளியேறி சென்றுவிட்டான் ஏ.கே…….
மீரா தோட்டத்திற்கு சென்று பூக்களைப் பறித்து வந்து தொடுத்துக் கொண்டிருந்தாள்…….. அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க……. திரும்பி பார்த்தாள்……. அங்கே ஒரு மாடர்ன் யுவதி நின்றுகொண்டிருந்தாள்…. முழுக்கை சட்டை…… அந்த சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் போடாமல் விடப்பட்டு இருக்க…… அந்த வெளிர் நீல நிற பேண்டின் இரு முட்டிகளிலும் கிழிந்து காணப்பட்டது…… அரை அடி கூந்தல் அவிழ்த்து விடப்பட்டு இருக்க….. கண்களில் குளிர் கண்ணாடியுடன்…. 5 இன்ச் ஹீல்ஸ் அணிந்திருந்தாள்…… வெகு தோரணையுடன் இயல்பாகவும் வீட்டினுள் நுழைந்து சோபாவில் அமர்ந்தாள்…….
எதிரில் இருந்த மீராவை பார்த்து……. “எக்ஸ்கியூஸ்மீ…… யார் நீ…..?” என விரல்களை சுண்டி கேட்க……
மீரா வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு “நான் மீரா……” என்றாள்….
“மீரான்னா…..? இங்க என்ன பண்ற நீ……..?” எனவும்……
தன் பொறுமையை இழுத்து பிடித்தபடி…… “மதி ஆன்ட்டியோட கேர்டேக்கர்…….” என்றவுடன்…… அவளது அலட்சிய பாவம் மேலும் கூடியது……
“ஓ…… வேலக்காரியா……? என் கார்ல பேக் எல்லாம் இருக்கு….. போய் எடுத்துட்டு வா…….” எனவும்……. மீராவின் பொறுமை பறந்துவிட்டது…..  
“சுந்தரண்ணா……..” என சத்தம் போட்டு அழைக்க…. எதிரில் இருந்தவள் அதிர்ந்து நிமிர…… சுந்தர் வேகமாக உள்ளே வந்தார்……. ‘வந்ததிலிருந்து அதிர்ந்து கூட பேசாதவள்…… இன்று ஏன் இவ்வாறு சத்தமாக கூப்பிட்டாள்…….?’ என்ற கேள்வியோடு அரக்கப் பறக்க பதறியபடி உள்ளே வந்த சுந்தர்……. “என்னாச்சும்மா……..” என்றவரிடம்……. “இந்தம்மா லக்கேஜ் எல்லாம் அவங்க கார்ல இருக்காம்…… எடுத்துட்டு வந்து கொடுங்க…….” என்றவள்…… அவரை அனுப்பிவிட்டு “நான் யாருக்கு வேலைக்காரியா இருக்கணும்…… யாருக்காக நான் வேலை செய்யணும்றத…… நான் மட்டும் தான் முடிவு பண்ணுவேன்…….” என நிவேதிதாவை பார்த்துக் கூறிவிட்டு……. எழுந்து சென்று விட்டாள்…….   
மீரா கூறி சென்றதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள் நிவேதிதா…… ஆனால் அந்த அதிர்ச்சி சில நொடிகளிலேயே கோபமாக மாறியது……. ‘எவ்வளவு தைரியம் இருந்தா இவ என்னை இப்படி பேசியிருப்பா……? இவள…… ஹூம்…… எங்க போய்ட போறா…… பாத்துக்கலாம்……’ என முதலில் கோபமாக எண்ணியவள்…… பின்னர் அலட்சியமாகவே நினைத்தாள்……..
தன் அறைக்கு வந்த மீராவிற்கு மன கொதிப்பை அடக்கும் முடியவில்லை…….. ‘எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அவ பேக்கை எடுத்துட்டு வர சொல்லுவா……. அவள…… அப்படியே விட்டுட்டு வந்து இருக்க கூடாது…… ஏதாவது பண்ணியிருக்கணும்……’ என நினைத்தவள்…… ‘ம்ப்ச்…… இப்போ என்ன நெனச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது……. இனிமே ஏதாவது பண்ணட்டும்…….. அப்ப பாத்துக்கலாம்……..’ என விட்டுவிட்டு…… மீண்டும் கீழே இறங்கி வந்தாள்……
ஜாக்கிங் சென்றிருந்த ஏ.கே மீண்டும் திரும்பி இருந்தான்…… மதியரசியும் எழுந்து வந்திருந்தார்…… மீராவை பார்த்த மதி “மீரா…… இவ என் அண்ணன் பொண்ணு நிவேதிதா……. வேதி இவ பேரு மீரா…….. என்ன பார்த்துக் கொள்வதற்காக புதுசா அப்பாயின்ட் பண்ணியிருக்க பொண்ணு…….” என இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தார் மதியரசி….. மீராவும் அமைதியாக இருக்க…… நிவேதிதாவும் அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்…… இதைப்பார்த்த ஏ.கேவிற்கும்…… மதியரசிக்கும்…… இவர்கள் இருவரின் நடுவில் ஏதோ ஒன்று நடந்திருப்பது புரிந்தது……   
“கண்ணா…… நீயும் வேதியம் போயி ரெடி ஆயிட்டு வாங்க……. சாப்பிடலாம்……” எனக்கூறி மதியரசி இருவரையும் மேலே அனுப்பி வைத்தார்……
“ஆன்ட்டி……. நான் கொஞ்ச நேரம் தோட்டத்துல இருந்துட்டு வர்றேன்……..” எனக்கூறி வெளியேறினால் மீரா……
சிறிதுநேரம் தோட்டத்தில் உலாவிய மீராவை ஜானகி வந்து அழைத்தார்…… “என்ன ஜானகியம்மா……”
“உங்கள் அம்மா சாப்பிட வர சொன்னாங்கம்மா……”
“ஓ…… வரேன்மா…….” என்றபடி வீட்டின் உள்ளே சென்றாள் மீரா……  
அவள் வீட்டினுள் நுழைய…… எப்பொழுதும் போல ஏ.கேவும், மதியரசியும் அவளுக்காக காத்திருந்தனர்……. மீரா சென்று உணவு மேசையின் முன் அமரும் வேளை படிகளில் இருந்து இறங்கி வந்தாள் நிவேதிதா…….. “ஏய்……. நீ என்ன இங்க உட்கார போற…….. லேபர்சுக்கு எல்லாம் சாப்பாடு அந்தப்பக்கம்……. அங்க போ……..” என திமிராய் கூறவும்…… அவளை வெடுக்கென திரும்பி முறைத்தவள்……. பேசாமல் விருவிருவென மாடி ஏறி அறைக்கு சென்றுவிட்டாள்…….  
மீரா அவ்வாறு சென்றதும் ஏ.கே “வேதி…… உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா…….? சாப்பிட வந்தவங்க கிட்ட இப்படியா பேசுவ…… போய் அவ கிட்ட மன்னிப்பு கேட்டு சாப்பிட கூப்பிட்டுட்டு வா…….” என கோபமாக கூற…….
“வாட்……. நான் போய் அவகிட்ட மன்னிப்பு கேட்கணுமா…….. ஒரு வேலைக்காரி கிட்ட…… என்ன பேசுறீங்க அத்தான் நீங்க…… என்னால எல்லா முடியாது…….” என அவளும் கோபமாகவே சொல்லிவிட…….
“அப்ப எனக்கும் சாப்பாடு வேணாம்……..” என்றபடி எழுந்து கொண்டான்…… 
மதியரசிதான் “கண்ணா….. உன் கோபத்தை சாப்பாடு நிலை காட்டாத……. சாப்பிட்டு போ……” என எவ்வளவோ கெஞ்சியும்…. ஏ.கே மனம் இரங்காமல் சென்றுவிட்டான்……. மதியரசி வேதியிடம் சென்று பேசலாம் என்றாலோ…… அவள் யார் பேச்சையும் கேட்க மாட்டாள் என்பது நன்றாக தெரிந்தது தான் என்பதால் அமைதியாக சென்றுவிட்டார்……..
சில நிமிடங்களிலேயே…… ஏ.கே மீண்டும் திரும்பி வந்து வற்புறுத்தி தன் தாயை உணவு உண்ண வைத்தான்……
   
“நீயும் சாப்பிடு கண்ணா…..” என மதியரசி எவ்வளவோ கூறியும்…….
“இல்லம்மா……. நீங்க சாப்பிடுங்க….. நம் இரவு கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிடறேன்…..” என மறுத்துவிட்டான்……. ஆனால் இவை அனைத்திற்கும் காரணமான நிவேதிதா நன்றாக உண்டுவிட்டு இரவு பயணத்தின் காரணமாக தன் அறைக்கு ஓய்வெடுக்க சென்று விட்டாள்…….  
மதியரசி ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு…… மீராவின் அறையை நோக்கி சென்றான் ஏ.கே…….. கதவைத் திறந்த மீராவிடம் “சாப்பிட வா மீரா…….” என அழைக்க…….
“ஏன்……? முன்னாடி வேலைக்காரங்களோடு உட்கார்ந்து சாப்பிட சொன்னா……. இப்போ வந்தா பிச்சைக்காரன் கூட உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்லுவாளா…….?” என கோபமாக கேட்க……
“மீரா…… ஏன் நீ இப்படி எல்லாம் பேசுற…….?” என்னை இயலாமையுடன் கேட்க……
‘எய்தவன் எங்கேயோ இருக்க….. அம்பு அழுது என்ன பயன்……’ என நினைத்தவள்…….. “சாரி கிருஷ்…… நான் இப்ப ரொம்ப டிப்ரசன்ல இருக்கேன்……. ப்ளீஸ்…… எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்…… இப்ப கிளம்புங்க…….” என…….
“மீரா……. நீ டேப்லெட் எடுத்துக்கணும் மீரா……. வந்து சாப்பிடு ப்ளீஸ்……” என கெஞ்ச……
“ஒரு வேளைக்கு டேப்லெட் சாப்பிடலைன்னா ஒன்னும் செத்துட மாட்டேன்…… ப்ளீஸ் லீவ் மீ அலோன்……” என்று கூறி விட்டு கதவை சாத்தி விட்டாள்…….
அறை வாசலில் நின்றிருந்தவனுக்கு கோபம் தலைக்கேறியது……. ஆனாலும்…… டேப்லெட் எடுத்துக்காம இருந்தா ஏதாவது ஆகிவிடுமோ என பயந்தான்……. அதனால் அறை வாசலில் இருந்தபடியே “மீரா…… நீ சாப்பிடல நானும் சாப்பிட மாட்டேன்…….” எனக் கூறிவிட்டு நிற்காமல் அலுவலகம் சென்றுவிட்டான்………  
மீராவிற்கு கோபம் குறைய மறுத்தது…… ‘உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பார்த்து இப்படி சொல்லி இருப்பா…… யார் என்னன்னு தெரியாதவங்க கூட சாப்பாடுன்னு கேட்டா உட்கார வச்சு பரிமாறனு சொல்லுவாங்க……. ஆனா இவ…… நான் சாப்பிடப் போகும் போது என்ன அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்…….’ என நினைத்து கொதித்துக் கொண்டே இருந்தாள்…… 
சிறிது நேரம் கழித்து…… தலை சுற்றுவது போல உணர்ந்தாள் மீரா……. ஆனாலும் கீழே இறங்கி போய் சாப்பிட பிடிக்காமல் அப்படியே கட்டிலில் சரிந்து படுத்து விட்டாள்……
அலுவலகம் சென்று ஏ.கேவிற்கு கோபம் கனன்று கொண்டிருந்தது…….. அவன் நினைவில் ‘மீரா…… மீரா……. மீரா…….’ இதைத்தவிர வேறு சிந்தனையே ஓட மறுத்தது……. எப்படியும் இரண்டு மணி நேரம் தாக்குப் பிடித்தவன்…… அதற்கு மேல் தாங்க முடியாமல் வீட்டிற்கு கிளம்பி சென்றான்…….
செல்லும் வழியெல்லாம் ‘இவை ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறா……? எதுவும் ஆயிடுச்சின்னா என்ன பண்றது…….’ என நினைத்துக் கொண்டே வந்தான்……. அப்போது ஏ.கேவின் மொபைல் அழைக்க…… அதைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் சத்யா வீட்டிற்கு வருவதாக கூறியது நினைவு வந்தது…….
“ஹலோ……”
“எங்கடா இருக்க……” என சத்யா கேட்க…..
“ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் மச்சி…….”
“சரி……. நான் வீட்லதான் இருக்கேன் வா…….” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்……. 
ஐயோ என்றிருந்தது ஏ.கேவிற்கு……. ‘இப்ப இவன வேற சமாளிச்சா வேணுமா…….’ என்று எண்ணியபடியே வீட்டை நோக்கி சென்றான்…….
ஹாலில் அமர்ந்து சத்யாவும் மதியரசியும் பேசிக்கொண்டிருந்தனர்…. ஏ.கே ஜானகியை அழைத்து “மீரா சாப்பிட்டாளா…….?” என விசாரித்தான்…… அவர் இல்லை எனவும்…… “அவளைப் போய் கூட்டிட்டு வாங்கம்மா……” என அனுப்பி வைத்தான்…….
ஜானகி அம்மா மீராவிடம் சென்று “தம்பி உங்களை கூட்டிட்டு வர சொல்லுச்சும்மா……..” எனவும்…… அவரிடம் மறுத்துப் பேச மனமின்றி கீழே இறங்கிச் சென்றாள் மீரா……     
மாடிப்படிகளில் இறங்கி வரும் போதே மீராவிற்கு தலைசுற்றியது…… ஓரளவு தன்னை சமாளித்து வந்தவள் பாதி படிகளிலேயே மயங்க…… அங்கிருந்த மூவரும் திகைத்தனர்…… நல்லவேளையாக அவள் பின்னாடி வந்த ஜானகியம்மா அவளை தாங்கிப் பிடித்தார்……..
தன்னை நிலைப்படுத்திய மூவரும் மீராவை நோக்கி ஓடிவந்தனர்……. சத்யா மீராவின் கன்னத்தை தட்டி “சந்தியா…… சந்தியா……” என அழைக்க……. மெதுவாக கண் திறந்தவள் மீண்டும் மயக்க நிலையை அடைந்தாள்……..
மீரா நிவேதிதாவின் பாதை இனிமேல் எப்படி அமையும்……? மீரா ஏன் மயக்கமுற்றாள்……? சத்யா ஏன் மீராவை சந்தியா என அழைத்தான்……? ஏ.கேவின் காதல் இனி என்னவாகும்…….? காத்திருந்து காண்போம்……..  

Advertisement