Advertisement

         அதுவே சாருவின் தந்தைக்கும் சரியாக பட சரி என்று சம்மதித்தார். எனவே மறுநாள் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வருவதாக சொல்ல அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய சாருவின் தந்தை மற்றவர்களை தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். வீட்டில் சந்தோஷம் களைகட்டத் தொடங்கியிருந்தது. சாருவின் அம்மாவிற்கு தான் இவள் டாக்டர் மாப்பிள்ளைக்கு சம்மதித்தால் என்பதை நம்பவே முடியவில்லை.,

இவள் வந்தவுடன் ஏற்கனவே சித்துவிற்கு போன் செய்திருந்தாள். பின்பு இரவு தூங்க போகும் நேரம் என்பதால் சித்துவே சாருவிற்கு அழைக்க போனை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள். “அம்மா சித்து கிட்ட இருந்து போன்., பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சித்தோடு பேச அறைக்கு சென்றாள்.

அம்மா தான் “முதலில் சித்து ட்ட சொல்லுடி” என்று சொன்னார்.

சரி என்றபடி தன் அறைக்கு சென்றவள் தன் தோழியிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள். அவளிடமும் ஏற்கனவே மாலை விமானத்தில் சந்தித்ததை சொல்லவில்லை., அவன்தான் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறானே..,

ஏனோ அவளுக்கு மனம் முழுவதும் சந்தோஷ உணர்வு தலை தூக்கியது., தான் எடுத்த உறுதி மொழிகளை மீண்டும் ஒரு முறை யோசித்து கொண்டாள். ‘தன்னை பிடித்திருக்க போய் தான் வீட்டிற்கு சென்ற உடனே பேசி முடித்து எல்லா வேலைகளையும் உடனே செய்ய வைத்து விட்டான்.  என்பதை நினைக்கும் போது ஒரு பெண்ணாக அவளுக்கு பெருமை மிகுந்த சந்தோஷமே கிடைத்தது., அதே நேரம் அவளும் அதேதான் யோசித்துக் கொண்டிருந்தாள்., தனக்கும் அவனை பார்த்தவுடன் எப்படி அந்தளவிற்கு பிடித்தது.,  அதுபோல தானே அவனுக்கும்  பார்த்தவுடன் மிகவும் பிடித்திருக்கிறது.,  என்று இருவரின் எண்ணமே ஒத்துப்போக அதுவே சந்தோஷத்தை கொடுத்தது..,  அதேநேரம் விமானத்தில் தான் பார்த்த பார்வைக்கு எனக்கும் உன்னை பிடிக்கும் என்று சொன்னது., அவன் பார்வையிலேயே அவன் பரிதவிப்பை புரிந்து கொண்ட விதத்தையும் யோசிக்கும்போது கண்டிப்பாக இது நல்ல புரிதல் உள்ள வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவளால் உணர முடிந்தது.., புரிதல் உள்ள வாழ்க்கை தான் எப்பேர்ப்பட்ட விஷயங்களையும் எளிதாக கொண்டு செல்லும்., எந்தவித சூழ்நிலையும் சமாளிக்கும் விதத்தையும் கற்றுக்கொடுக்கும்..,

காலை விடிந்து எழும்போது வீட்டில் எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்ததை கண்டவளுக்கு., சற்று ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. இரவு தந்தை பரபரப்பாக இருந்தது என்ன காலை இத்தனை அமைதியாக இருப்பது என்ன.,  என்ற யோசனையோடு இருந்தவளை அவள் அம்மா தான் “சீக்கிரம் குளித்துவிட்டு கிளம்பு” என்று சொன்னார்.

” எங்கம்மா ” என்றாள்.

” உனக்கு தெரியாது இல்ல., நைட்டு உன்கிட்ட நாங்க சொல்லலை..,  கொஞ்சம் லேட் நைட் தான் போன் வந்துச்சு.., அவங்க நிறைய பேர் இருக்காங்க., வீட்டுக்கு வந்து பாக்குறத விட நம்ம கோயில்ல வச்சு பார்க்கலாம் னு சொல்லிட்டாங்க..,  அதனால இப்போ  கோவிலுக்கு போகிறோம்”., என்று சொல்லி சென்னையின் மத்தியில் உள்ள ஒரு ஆலயத்தை சொல்லி.,  “அங்கு வைத்து பேசிக்கலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.,  அவங்களுக்கு தெரிஞ்ச ஜோசியர் கூட்டிட்டு வரேம் ன்னு சொன்னாங்க., அங்க வச்சே நாளெல்லாம் குறிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க.,  நிச்சயதார்த்தம் தான் நம்ம வீட்டு சைடில் இருந்து கிராண்டா பண்றோம்., கல்யாணம் அவங்க வீட்டுல இருந்து பண்ணுவாங்க” என்று பேசிய அனைத்தையும் சொன்னார்.

“இது எப்போ பேசினீங்க”., என்று கேட்டாள்.

” நீ சித்து கூட பேசிட்டு அப்படியே தூங்க போயிட்ட., அவங்க பேசிட்டு வச்சு கொஞ்ச நேரத்திலேயே ஒருமணி நேரத்துக்குள்ள மறுபடி கூப்பிட்டு சொல்லிட்டாங்க”., என்று சொன்னார்.

“சரி  சீக்கிரம் கிளம்பு., நம்ம நாலு பேரு தான்., அவங்க தான் நிறைய பேரு வருவாங்க.., என்று சொன்னார்.

ம்ம்ம்  என்றபடி கிளம்ப சென்றாள். நல்லபடியாக ரெடி ஆகு என்று சொன்னார்.

குளித்து தலை உலர்த்தி கொண்டிருந்தவளிடம்… “நல்ல புடவையை கட்டு” என்றார்.. அவள் ஏதோ பதில் சொல்ல தொடங்கும் முன்…

“இன்னைக்கு ஒரு நாளைக்கு கட்டிக்கோ.,   சுடிதார் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வேறு வழியின்றி அவளுக்கு பிடித்த வண்ணமாக தேர்ந்தெடுத்து புடவை அணிந்து கொண்டாள்.

சாருவிற்கு பின்னலிட்டு  தம்பி வாங்கி வந்திருந்த பூவை எடுத்து தலையில் வைத்து விட்டார்.  மிதமான ஒப்பனையில் கிளம்பினாள்.  மனதின் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது போல அத்தனை அழகாக தெரிந்தாள்.,

அவள் தம்பியோ  “பயங்கரமா  கிளம்பியிருக்க.,  சரி மாப்ள பயத்துல மயக்கம் தான்”., என்றான்…
“டேய்… போடா” என்றவள் “அம்மா பயங்கரமாவா இருக்கேன்” என்றாள்..

“அவன் கிண்டல் பண்ணுறான் டா.., அழகா இருக்க” என்றார்.  அவர்களுடைய காரில் கிளம்பி பிள்ளைகள் இருவரின் பேச்சு சிரிப்போடு., அவர்கள் சொன்ன கோயிலுக்கு சென்று சேர்ந்தனர்..,

இவர்கள் செல்லும் போது அவர்களும் வந்திருந்ததால் முதலில் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

மித்ரனின் பார்வை முழுவதும் அவளிடமே இருந்தது., அவளோ  ஏற்கனவே படபடப்போடு இருந்தாள்., அவள் தம்பியை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டாள்.

அவனோ “சாரு நான் போய் பேசிட்டு வரேன்”., என்றான்.

இவளோ பயந்து போய் “என்கூட கொஞ்ச நேரம் இரு டா., ப்ளீஸ் ” என்றாள்.

மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கிறது உன்னைய தான்.,  நீ என்னையும் சேர்த்து உன்கூட  இருக்க  வைக்கிற.,  என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

“நீ பேசாம இருக்க மாட்டியா” என்றாள்.

அங்கு பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்க., இங்கு சிறியவர்கள் அனைவரும் சேர்ந்து பேசத் தொடங்கினர்., இவளிடம் வந்து வீட்டு பெண்கள் உட்பட அனைவரும்  சாதாரணமாகத்தான் பேசினார்கள். ஆனால் மித்ரனின் தாயின் முகத்தில் தெரிந்த பாவங்களை கண்டவுடன் அவளுக்கு சற்று யோசனையாகவே இருந்தது., ஒருவேளை திருமணத்தில் இஷ்டம் இல்லையோ., என்பது போல தோன்றினாலும், மற்றவர்கள் முகமெல்லாம் சந்தோஷமாக இருப்பதை கண்டவள்  அமைதியாகிவிட்டாள்.

அதற்குள் அங்கு வந்திருந்த ஜோசியரை வைத்து திருமணம் நிச்சயதார்த்தம் பற்றிய அனைத்தும் குறித்துக் கொண்டார்கள்.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் என்றும்.,  பின் திருமணம் என்றும் பேச்சு இருந்தாலும்.., இன்னும் சரியாக ஒரு மாதத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடும் என்பது போல தேதி குறித்து இருந்தார்கள்.

அப்போதுதான் கந்தசாமி அவளின் வேலைப் பற்றி கேட்டார். அவளும் முதல் நாள் அவள் அப்பாவிடம் சொல்லி இருந்ததால்.,  அனைத்தையும் சொன்னார்.

கந்தசாமி நண்பர் ஒருவர் தான்., அதுதான் இப்போது சாப்ட்வேரில் இருக்கவங்க எல்லாருமே ஒர்க் ப்ரம் வாங்கிக்கிறாங்களே., அந்த மாதிரி வாங்கிக்க ரெடி பண்ண சொல்லுங்க., ஒன்னும் பிரச்சனை இல்ல., நீ கேட்டு பாரு மா என்று அவளிடமே சொல்ல.,  இவளும் தலையாட்டிக் கொண்டாள்., வேறு எதுவும் சொல்லவில்லை., அனைத்தும் பேசி முடித்ததும்.,   எதுவுமே தெரியாதவன் போல தன் அக்காவை  விட்டே போன் நம்பர் வாங்க செய்தான்.,

இவ்வளோ மனதிற்குள் ‘அடப்பாவி நேற்றுதான் போனை கையிலிருந்து பிடுங்கி போன் நம்பரை நோட் பண்ணினாங்க.,  அதுக்குள்ள போன் நம்பர் தெரியாத மாதிரியே கேட்கிறார்களே’., என்று யோசித்து கொண்டாலும் அவன் அக்காவிடம் போன் நம்பரை கொடுத்தபடி மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ மற்றவர்களை சுற்றி பார்த்துவிட்டு மெதுவாக அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு., சும்மா என்று மெதுவாக வாயை அசைத்து காட்டினான்.,  புரிந்து கொண்டவளாக தலையை குனிந்து கொண்டாள்.,

மித்ரன் தாயை தவிர மற்ற அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு உணர்ந்தனர்., அவளிடம் பேசிய போது அவள் பேசும் விதம் அனைவருக்குமே பிடித்து இருந்தது. அவளது நிதானமும்.,  அமைதியான பதிலும்., அனைவருக்கும்  சந்தோஷமாக இருந்தனர். மித்ரனின் அக்கா பிள்ளைகள் இருவரும் அவளிடம் அன்றே நன்கு நெருங்கி பேச தொடங்கியிருந்தனர்.

அனைவரும் அங்கிருந்து கிளம்ப மித்ரன் போன் செய்வதாக சைகை காட்டி விட்டு சென்றான்., இவளும் யாருமறியாமல் தலையை அசைத்துக்கொண்டே கிளம்பினாள்.,

காரில் செல்லும்போதே சாருவின் வீட்டில் மாப்பிள்ளை வீட்டாரை பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டு சென்றனர்.

அது போலவே அங்கும் இவர்கள் வீட்டினரை பற்றி பெருமையாக பேசிக் கொண்டே சென்றனர்.

கந்தசாமி திருமணம் நடத்தும் மேனேஜ்மெண்ட் அலுவலகத்திற்கு உடனே தொடர்பு கொண்டு தேதியை சொல்லி., திருமணம் அதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று சொன்னவர்., மண்டபம் பெயர் சொல்லி அந்த மண்டபத்தை புக் செய்யுங்கள் என்று சொன்னார். ஏற்கனவே இவர்கள் வீட்டு விசேஷம் அனைத்திற்கும் அவர்கள்தான் செய்து கொடுப்பார்கள்., எனவே அதற்கு தகுந்த ஏற்பாடுகளை அவர்கள் செய்வதாக சொன்னார்கள். மித்ரனின் முகத்திலும் விரிந்த சிரிப்பு ஒன்றே காணமுடிந்தது..

பரமபதத்தில் ஏணியில் ஏறிவிட்டதாக நினைத்து சந்தோஷம் அடைய போகும் வழியில் இறக்கி விட காத்திருக்கும் பாம்புவிதியும் அதுபோல தான்ஏற்றி விடுகிறது என்று இருமாந்து விட முடியாது., எங்காவது இறக்கி விட்டு விடும்., பரமபதத்தில் மட்டும் இலக்கை அடையும் வரை பொறுமையாக செல்ல வேண்டும்.. இதுவும் விதியும் ஒன்றாகும்“…,

 

Advertisement