Advertisement

அவருக்கு ஆதரவாக கந்தசாமி நண்பர்கள் குடும்பத்திலுள்ள ஒரு நண்பரின் மனைவி மட்டும் கந்தசாமி இடம் “மித்ரன் அம்மா சொல்வதும் சரிதானே., நீங்க அதை யோசிக்க வேண்டாமா”., என்று சொன்னார்.,

மித்ரன் நண்பனாகிய அவர் மகன் தான் “அம்மா நீங்க பேசாம இருங்க.,  இது மித்ரனோட  லைப் நீங்க பேசக்கூடாது”.,  என்று சொல்லி அவரை வாயடைக்க வைத்தான்.

இரவு உணவு நேரம் நெருங்கும் சமயத்தில் மித்ரனின் தந்தை சாருவின் தந்தைக்கு அழைத்தார்., அவர்கள் போனை எதிர்பார்த்து இருந்ததால் உடனே எடுப்பதை விட இரண்டு மூன்று ரீங் போகவும் எடுத்தவர்.,  “சொல்லுங்க சார்” என்று தொடங்கினார்.

“இனிமேல் என்ன சார் ன்னு ட்டு.,  சமந்தினே கூப்பிடுங்க”., என்று கந்தசாமி சொல்ல  அதற்குள்.,  அவரின் மனைவி முறைப்பதை கண்டவர் மெதுவாக பேச தொடங்கினார்.,  “பொண்ணுக்கு பிடிச்சிருக்கு இல்ல”.,  என்று கேட்டார்.

” அவளுக்கும் சம்மதம் தான் சம்மந்தி” சொல்லிவிட்டார்., இதை சொன்னவுடன் இங்கு மித்ரனின் தாய்க்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை., போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் அனைவரும் கேட்கும் படி இருந்தது., “சரி மற்ற விஷயத்தை எல்லாம் எப்ப பேசலாம்” என்று கந்தசாமி கேட்டார்.

சாருவின் தந்தையோ “நீங்க எப்போ சொல்றீங்களோ., அப்போ பேசிக்கலாம் நீங்க தான் சொல்லணும்., இதுல நாங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.,  நீங்க எப்ப வரீங்க.., எப்ப முறைப்படி பேசலாம்னு சொன்னீங்கன்னா.., நான் ரெடி பண்ணுவேன்”  என்று பெண்ணை பெற்றவராக சிவசங்கர் சொன்னார்.

கந்தசாமியும் “சரி  வீட்ல பேசிட்டு உங்களுக்கு முடிந்த அளவு நைட் கால் பண்ணி சொல்கிறேன்., இல்ல னா  காலைல சொல்றேன்” என்று சொன்னார்.

கந்தசாமி நண்பர்கள்தான் அவர் போனை வைத்தவுடன் “எதுக்கு நல்ல காரியத்தை தள்ளிப் போடனும்.,  நாளைக்கே போய் பார்த்து பேசிட்டு வந்துருவோம்., அதுக்கப்புறம் தேதி குறிக்கிறது எல்லாம் எப்ப வசப்படும் னு பார்த்து குறிக்கலாம்”,  என்று பேசிக் கொண்டார்கள்…

மித்ரன் இன் சகோதரியும்.,  சகோதரி கணவனும்., நாளைக்கு எப்ப போனும் னு சொன்னீங்கன்னா தான்., எல்லாருமா சேர்ந்து ஹாஸ்பிடலில் ஜூனியர் அ விட்டுட்டு நாமலெல்லாம் போக முடியும்.,   அதனால் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

அதே சமயம்  தாய்க்கு அதில் விருப்பமில்லை என்பதை அறிந்த மித்ரனின் அக்கா தான்., “அம்மா ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..,  தம்பிக்கு புடிச்சிருக்கு ன்னு விடுங்க.., வாழ போறது அவன் தான்.., அவனுக்கே புடிச்சிருக்கு ன்னு சொல்லும் போது., நீங்க ஏன் யோசிக்கீங்க.,  அவங்க நல்லபடியா வாழட்டுமே..,  அவனுக்கு  புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்க..,  அந்த பொண்ணு ஒர்க் பண்ற பொண்ணு தானே..,  புரிஞ்சிப்பாங்க”.., என்று சொன்னாள்.,

” சரி சரி என்னமோ பண்ணுங்க”., திருப்தி இல்லாவிட்டாலும் பிள்ளைகளின் சொல்லுக்கும் நண்பர்கள் நண்பர்களின் மனைவி., என அனைவரும் சேர்ந்து சொல்வதால் அது மட்டுமல்லாமல் மித்ரனின் நண்பர்கள் “கண்டிப்பாக உடனடியாக பேசி முடிக்க வேண்டும்., என்று பேசினர்.

“சரி அவனுக்கும் வயசு ஆயிடுச்சு.,  இன்னும் தள்ளிப் போடக் கூடாது” என்ற பேச்சோடு வேறுவழியின்றி போவது போலவே சம்மதித்தார்..,

அப்போது மறுபடியும் கந்தசாமி அவர் மனைவியிடம் “நீ வேற ஏதும் எதிர்பார்க்கிறீயா., படிப்பு மட்டும் தான் காரணமா சொல்றியா.,  இல்ல வேற எதுவும் பெரிய வசதி அந்த மாதிரி எதுவும் சொல்கிறாயா”., என்று வேண்டுமென்றே கேட்டார்.

அதற்கு  “நான் அப்படிப்பட்டவ கிடையாது”., என்றார்.  டாக்டர் பொண்ணு அப்படின்னு மட்டும் தான் யோசிச்சேன் ஆனா நான் அந்த மாதிரிலாம் யோசிக்கலை”., என்று சொன்னார்.,

“சரி விடு அவனுக்கு புடிச்சிருக்கு., அந்த பொண்ணு ஒர்க் பண்றவ தானே., எல்லாம் புரிஞ்சி நடந்துக்குவாங்க.,  நல்ல குடும்பம் எல்லாம் சரியா வருது., அப்படியே பேசி முடிப்போம்”., என்று சொன்னார்.

அம்மாவும் “சரி., அது தான் முடிவு பண்ணிட்டீங்களே… நாளைக்கே  போகலாம்” என்றார்.

மகிழ்ச்சி என்பதைவிட மித்ரன்  முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை தான்., அவன் நண்பர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் கலைந்து சென்று முன்புற தோட்டத்தில் அமர்ந்து பேசத் தொடங்க., சிறியவர்கள் வீட்டிற்குள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது..,

மித்திரனின் நண்பர்கள் தான் “நீயும்  சனா வ பார்த்ததுக்கு அப்புறம் உள்ள சிட்டி ரோபோ  மாதிரி இருக்குற டா.. கண்ணுல காதல் வழியுது., பொண்ணு  பாக்குற வரைக்கும் எப்படி  இருந்த.,  பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து ஆளே மாறிட்ட  பாரேன்” என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.

இதைக் கேட்டும் கேட்காதபடி நண்பர்களுக்கு முதுகில் தட்டிவிட்டு செல்லை எடுத்து தைரியமாக அவள் போட்டோவை ஸ்கிரீன் சேவாராக வைத்தான்., பிறகு நண்பர்களிடம் ” எனக்கு பார்த்த உடனே பிடிச்சது அவ்வளவு தான்., மிஸ் பண்ணக்கூடாது னு தோணுச்சு., வேற யாரும் என்னோட லைப் க்கு சூட் ஆவாங்க னு தோணலை.. அது தான் இந்த பொண்ண முடிக்கனும் நினைச்சேன்., இந்த காதல் மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை.., அதுல எத்தனை பேர் ஜெயிச்சிருக்காங்க. எனக்கு காதல் வேண்டாம் என்னை புரிஞ்சி நடந்துக்கிற ஒரு லைப் பாட்னர் போதும்.., அது கண்டிப்பா இந்த பொண்ணா தான் இருக்கும்”., என்றான்.

“சரிடா.. அப்ப இதுக்கு பேர் என்ன”., என்று நண்பன் ஒருவன் செல்லில் அவன் செட் செய்த அவளது போட்டோவை காட்டினான்.

போட்டோவை  பார்த்த நண்பர்கள் “அடப்பாவி இன்னும் பேசியே முடிக்கலை., அதுகுள்ள ஸ்கீரின் சேவர் நடத்துடா., நடத்து., என்று சொன்னான். அவர்கள் நண்பர்களில் ஒருவன் தான் “நான் சொல்லல டா.,  அந்த போட்டோவ டெலிட் பண்ணி இருக்கவே மாட்டான்னு.,  பார்த்தீங்களா., எவ்வளவு ரகசியமாக உள்ள வச்சு இருக்கான்” என்று சொன்னான்.

இனிமேல் யாரிடம் என்ன சொல்லவேண்டி கிடக்கு ஓப்பனாவே வச்சிருக்கேன் போன்ல.,  என்று சொல்ல அனைவரும் சிரித்து கொண்டனர் அங்கு மகிழ்ச்சி நிரம்பி இருந்ததாக வரப்பட்டது..

சாரு சம்மதம் சொன்னதாக சொல்லி விட்டாலும்., சாருவின் தாய்க்கு தான் மறுபடியும் யோசனையாகவே இருந்தது. “நிஜமாவே சம்மதம் தானே.,  கடைசி நேரத்தில் வேண்டான்னு சொல்ல மாட்டியே” என்று கேட்டார்.

“அதெல்லாம் சொல்ல மாட்டேம்மா.,  நான்தான் ஓகே னு சொன்னேன்”., சென்றாள்.

அவளும் பேசிவிட்டு தன் அறைக்குச் சென்றவள். தன் போனில் இருந்த அவனது புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். மனதிற்குள் ஏதோ நிறைவாக உணர்ந்தாள்.,  அதுமட்டுமல்லாமல் அந்த நிமிடம் அவள் மனதிற்குள் செய்து கொண்ட முடிவு ‘எந்த சூழ்நிலையிலும் வெறுக்க மாட்டேன்.,  புரிந்து கொண்ட  நல்ல வாழ்க்கை துணையாக இருப்பேன்…  எந்த சூழ்நிலையிலும் அவன் பேச்சை மறுத்துப் பேச மாட்டேன்., மற்றவர்கள் முன்னிலையில் விட்டு கொடுக்காத நல்ல துணையாக இருப்பேன்”., என்று உறுதி எடுத்துக் கொண்டதை போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாள்…

அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தனர்., அவளுக்காகவே வீட்டில்  மூவருமே இருந்தனர்., ஏனெனில் அவள் எப்போதும் தனியாக இருக்கிறேன் என்று தானே வர மறுக்கிறாள்., அதற்காகவாவது வீட்டில் இருப்போம் என்று அவள் வருகையை எதிர்பார்த்து வீட்டில் பெற்றவர்கள் இருந்ததால்.., அன்று அனைவரோடும் வீட்டில் சந்தோஷமாகவே தனது நேரத்தை கழித்தாள்.,

நீண்ட நாளுக்கு பிறகு தாயின் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள்., அவள் அம்மாவும் தலையை கோதி கொடுத்தப்படி  அவளிடம் கேள்வி கேட்டார்., அவளும் தன் பதில்களை சொல்லிக் கொண்டிருக்க., அதே நேரம் கந்தசாமியிடம் இருந்து அழைப்பு வந்தது.,

தாங்கள் அனைவரும் நாளை அவர்கள் வீட்டிற்கு வருவதாக சொல்ல மிகவும் சந்தோஷமாக உணர்ந்தனர்., மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டனர். எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டார். அவர்கள் நண்பர்கள் குடும்பம் அனைவரும் வருவதாக  சொல்லி விட்டனர்.,  அதுமட்டுமல்லாமல் “வந்து நான் பேசி முடித்துக் கொண்டு பின்பு தேதி குறிக்க வேண்டும்., அதனால் அதற்கான ஏற்பாடுகளில் சேர்த்து செய்வோம்” என்று சொன்னார். “கல்யாணத்தை ரொம்ப தள்ளிப்போட வேண்டாம்., சீக்கிரமாக முடிக்கலாம்” என்று சொன்னார்.

சாருவின் தந்தைதான் “அவளோட வேலை” என்று மெதுவாக இழுத்தார்.

“அது நம்ம கல்யாண பேசும் போது பேசிக்கலாம்., என்ன பண்ணலாம்னு.,  உடனே வேலையை விட முடியாது.,  அதுக்கு நம்ம எதாவது அரேஞ்ச் பண்ணிக் கொள்ளலாம்.., அல்லது பிள்ளைங்க பேசிப்பாங்க., அவங்களோட விஷயத்தை”..,  என்று சொன்னார்.

Advertisement