Advertisement

5

கண்கள் கோர்த்த பின்பு
                 கரம்கோர்த்த விரல்களில்
                  நுனியில் உன்
                  ஸ்பரிசம் மிச்சம்
                  வைத்து சென்றிருக்கிறது.,
                  உன் காதல் சொன்ன
                  விழிகளின் மிச்சத்தை., 
               

விமானம் இறங்கி கீழே வந்தவுடன் முதல் வேலையாக தனது செல்போனை ஆன் செய்தவன்., விமானத்தை விட்டு வெளியே வந்து அங்கு நிற்கும் வண்டியில் ஏறி வெளியே வருவதற்குள் தந்தைக்கு போன் செய்திருந்தான்..

“அப்பா எனக்கு அந்தப் பொண்ண பேசி முடித்து விடுங்க., இப்போ உடனே அவங்க வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிடுங்க” என்று சொன்னான்.

அதைக்கேட்ட கந்தசாமிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.  “சரிடா சொல்லிடறேன்., அம்மா கிட்ட  பேசிட்டு போன் பேச வா” என்று கேட்டார்.

“இல்லப்பா நீங்க முதல்ல அவங்க வீட்டில சொல்லுங்க., அவங்க வீட்டுலயும்  எல்லாத்தையும் பேசணும் இல்ல..,  அதுக்குள்ள இங்க அம்மா கிட்ட பேசிடலாம்.,  நானும் இப்ப வந்துடுவேன்., வந்தவுடனே அம்மாட்ட சேர்ந்தே பேசலாம்”., என்று சொன்னான்.

“சரிப்பா நான் இப்ப சொல்லிட்டு., உனக்கு கூப்பிடுறேன்”., என்று  சொன்னார்..

வெளியே வருவதற்கு முன் அவள் கையில் இருந்த போனை வாங்கியவன்., அவள் செல்லை  ஓபன் செய்து தன் எண்ணிற்கு அழைப்பு விடுத்து., கட் செய்து அவள் கையில் கொடுத்து., “என் நம்பருக்கு ரிங் கொடுத்து வைத்திருப்பேன் டைம் கிடைக்கும் போது பேசலாம்.., நோட் பண்ணிக்கோ”.,  அவள் நம்பர் இது தானா என்பதே கேட்டு தெளிவு செய்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்…

அங்கிருந்து கிளம்புவதற்கு முன் தன் நண்பர்களை ஏற்கனவே  அறிமுகம் செய்து வைத்திருந்ததால் சிரித்தபடி அனைவரும் விடைபெற்று வெளியே வரவும்.,

அவன் “அவளிடம் யார் வந்திருக்கிறார்கள்” என்று கேட்டான்.

“தம்பி வந்திருக்கிறான்” என்று சொன்னவுடன்., “சரி நீ போ” என்று சொல்லி அவள் முன்னே அவள் தம்பியுடன் செல்வதை பார்த்த பிறகு அங்கிருந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றான்.

அவன் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே அவனது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.,  “அவங்க வீட்ல சொல்லிட்டேன்டா., நீ வந்து உங்க அம்மா கிட்ட பேசினதுக்கு அப்புறம் மத்தத பேசி முடிவு பண்ணிட்டு அவங்க பட்ட பேசுவோம்”., என்று சொன்னார்.,  அவனும் சரி என்றான்..

அதற்குள் சாருவின் தந்தை அவள் தம்பிக்கு அழைத்து சொன்னார். அவள் தம்பி அவளை அழைத்துக் கொண்டு செல்லும் போதே விஷயத்தைச் சொல்ல மித்ரனின் அப்பா பேசி விட்டார்., என்பதை அவளும் உணர்ந்து கொண்டாள்..

மறுபடியும் மித்ரனுக்கு அழைத்த மித்ரனின் தந்தை “வீட்டில் அம்மா அக்கா எல்லாரும் வந்து விட்டாங்க., நான் சொல்லிடுறேன்”., அப்போ தான் அவருடைய நண்பர்களையும் சொல்லி அவர்களும் வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.,  “நீ உன் நண்பர்களோடு வீடு வந்து சேரு., அனைவரும் வீட்டில் இருக்கும் போதே பேசி முடித்துக் கொள்ளலாம்., நீ தான் பேச வேண்டியவன்.,  நீ தான் பேசிக் கொள்ள வேண்டும்”., என்று சொன்னார்.

“ஏம்பா நீங்க பேச மாட்டீங்களா” என்று கேட்டான்.

” நான் பேசுவேன்.,  ஆனா உங்க அம்மா எவ்வளவு கேள்வி கேட்டாலும் உன்னோட பதில்  தானே., அவளுக்கு வேணும்., நீ தான் ஹேன்டில் பண்ணனும்”.,  என்று சொன்னார்.

ஓகே பா பாத்துக்கலாம் நீங்களும் பேசுங்கள்., நாம் மட்டும் பேசினால் அம்மா வேற மாதிரி சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க., அதனால நானும் பேசுறேன்., நீங்களும் பேசுங்க., என்று சொன்னான்.

மித்ரனின் அருகிலிருந்த அவன் நண்பர்கள் “நாங்கல்லாம் எதுக்குடா இருக்கோம்., எல்லாரும் சேர்ந்து பேசிக்கலாம் விடு” என்று சொன்னார்கள். அதன்பிறகு வீடு நோக்கி அவர்களின் பயணம் சென்றது..

சாருவைஅழைத்துக் கொண்டு செல்லும் போதே அவள் தம்பி அவளிடம் கேட்க., அவள் “எனக்கு ஓகே” என்று சொல்லிவிட்டாள்.

அதை அவன் எதிர் பார்க்கவில்லை என்பதால் ஒரு நிமிடம் “சாரு நெஜமா தான் சொல்றியா.,  உனக்கு ஓகேவா” என்று ஒரு முறைக்கு இருமுறை கேட்டுக்கொண்டு பின்னே தந்தைக்கு போன் செய்து தெரிவிக்கவும்., அங்கும் அனைவருக்கும் சந்தோஷம் தான்., இவள் படிப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை., என்பதைத் தவிர மற்றபடி அவர்கள் வீட்டிலும் எந்தவிதத்திலும் குறைவு கிடையாது..,  நிறைவாகவே செய்ய முடியும்., அதுமட்டுமல்லாமல் அவர்கள் மூவரும் மருத்துவர்கள்., வீட்டிற்கு வரும் மருமகனும் மருத்துவர் என்பது அவர்களுக்கு பெருமையே.., எனவே சந்தோஷமாக அவர்களும் சம்மதித்தனர்.

டாக்டர் கந்தசாமி வீட்டில் பேசிவிட்டு சொல்வதாக சொன்னதால் அவர் சொல்லும் போது நம்முடைய சம்மதத்தை தெரிவித்துக் கொள்ளலாம் என்று சாருவின் அம்மா சொல்லியிருந்ததால் அவரின் போனுக்காக  காத்திருந்தனர்.

மித்ரன்  வீடு திரும்பும் போதே வீட்டில் அனைவரும் இருப்பது தெரிந்தது.,  சாதாரணமாகவே உள்ளே சென்றவன் அனைவரையும் பார்த்து சிரித்தபடி அவன் அப்பாவின் அருகில் அமர்ந்தான்.

நண்பர்களும் அங்கிருந்தே இருக்கைகளை இழுத்துப்போட்டு அமர.,  மித்ரன் தாய் தான் சற்று கோபத்தோடு “என்ன மித்ரா அப்பா இப்படி சொல்றாங்க.,  அந்த பொண்ணையே பேசி முடிக்கலாம் னு., சொன்னீயாம்.,  என்னடா இது நம்ம குடும்பத்துல எல்லாரும் டாக்டர்தான்., அதுக்கு ஏத்தாற் போல  வீட்டுக்கு வந்திருக்க மருமகன் மருமகள் ல இருந்து எல்லாரும் டாக்டர்., நீ என்ன டாக்டர் வேண்டாம்னு சொல்லிட்டு.., இந்த பொண்ண  பண்ணிக்கிறேன் னு சொல்ற.,  அழகான டாக்டர் பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்”., என்று சொல்ல…

பேசும் போது தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தவன். “எல்லாரும் டாக்டரா இருந்தா எனக்கு வர வொய்ப் ம்  டாக்டரா தான் இருக்கனும் என்ற கட்டாயமா ம்மா” என்று கேட்டான்.

“என்னடா இது.,  நம்ம குடும்பத்துல எல்லாரும் அப்படித்தானே இருக்கனும் னு பார்த்து கல்யாணம் பண்ணினோம்.,  இது என்ன புதுசா நீ சொல்ற”.,என்று கேட்டார்.

அவனோ “அம்மா புரிஞ்சுக்கோங்க.,  எனக்கு புடிச்ச பொண்ணு தான் என் லைஃப்ல..,  லைஃப் பார்ட்னரா வரமுடியும்.,  படிப்பு வச்சு முடிவு பண்ண முடியாது.,  இவளும் எந்த விதத்திலும் குறையில்லை.,  எம்.ஈ  படிச்ச பொண்ணு தானே”.,  என்று கேட்டான்.

“ஏன்டா உன் பீல்ட் என்ன.., அவ பீல்ட் என்ன., அது மட்டுமில்லாம அந்த பொண்ணுக்கு மெடிக்கல் பீல்டு பிடிக்காதாம்”., என்றார்.

” சரிமா மெடிகல் பீல்டு பிடிக்கலை னு.,  அப்பா அம்மாவ விட்டுட்டு ஓடியாப் போயிட்டா.., இல்லை எல்லாம் விட்டுட்டு போயிட்டாளா., இல்ல இல்ல..,  மெடிகல் பீல்டு அப்படிங்கறத  பிடிக்குது., பிடிக்கலை.,  ங்கிறது வேற விஷயம்., எனக்கு பொண்ணு புடிச்சிருக்கு அவ்வளவு தான்., இப்ப நீங்க தான் முடிவு பண்ணணும்”.,  என்று சொன்னான்.

‘இத்தனை பேரை பக்கத்துல வச்சுட்டு பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேனே.,  வேற வழி இல்லாம பேசி முடிக்க வேண்டியது வந்துவிடுமோ’ என்று நினைத்தவர் யோசனையோடு தயங்கினார்.

கந்தசாமியின் நண்பர்களும் அவர்கள் வீட்டினரும் மட்டும் தான் அவன் தான் பிடிச்சிருக்கு னு., சொல்லுறானே., வயசு வேற ஏறிட்டுப் போகுது.., சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை பண்ணுங்க., நல்ல காரியத்தை தள்ளி போடக்கூடாது” என்று சொன்னார்கள்.,

மித்ரனின் தாய்க்கு சம்மதமில்லை என்பதை மித்ரன் கண்டுகொண்டான். இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.., தன் வாழ்க்கையில்  பெற்றவர்களாக சந்தோஷத்தை மட்டும் விரும்புவார்கள்.,  என்று எண்ணி விட்டான்.,

கந்தசாமியும் அவர் மனைவியிடம் “நீ இப்படி யோசிக்கிற., அவனுக்கு புடிச்சிருக்குன்னு சொல்றான்., பேசி முடிக்கலாம்.,பேசிட்டு  முடிவு செய்வோம்” என்று சொன்னார்.,

“அந்த பொண்ணுக்கு பிடிக்கலை., என்று சொல்லும் பாருங்க” என்று சொன்னார்.

மித்ரன் மனதிற்குள் சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன். “அம்மா ஏன் நீங்களா இப்படி யோசிக்கிறீங்க., ஒருவேளை அவளுக்கு படிக்கப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்., கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு  அந்த பொண்ணு சொல்லல்ல இல்ல”., என்று அவளை சந்தித்ததே தெரியாமலே.,  காட்டிக் கொள்ளாமலேயே பேசினான்.

இதை ஏற்கனவே நண்பர்களிடம் சொல்லி இருந்ததால் நண்பர்களும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.,  ஏன் கந்தசாமிக்கும் தெரியாது., ஏர்போர்ட்டில் வெளியே நடந்து வரும் போதே அவளிடமும் சொல்லியிருந்தான்., நண்பர்களிடம் சொல்லி இருந்தான்., இங்கு சந்தித்ததை வீட்டில் தெரியப்படுத்திக் கொள்ள வேண்டாமென்று…

மித்ரன் தாய் கந்தசாமி இடம் “முதல்ல பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணுங்க.,  போன் பண்ணி பொண்ணுக்கு சம்மதமா., என்னன்னு கேளுங்க.,  பொண்ணு சம்மதம் இல்லை னு சொல்லிட்டா., அதுக்கு மேல கட்டாயப்படுத்தக்கூடாது., அதுக்கு மேல எதையும் வச்சுக்க கூடாது” என்று சொன்னார்.

Advertisement