Advertisement

ஆனால்  எங்களுக்கான அன்பு எங்கம்மா ட்ட இருந்து கிடைக்கல.., நாங்க தப்பா போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க.., என்னையே எடுத்துக்கங்க நானே ஒரு விஷயத்துல அன்புக்காக ஏங்கி தப்பா போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க..,  அந்த மனுஷன் நல்லவரா இருக்க போய்.., என்கிட்ட ரொம்ப அன்பா இருக்க போய்.,  என்னால இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியுது.., அல்லது மிஷின் மாதிரி ஓடிக்கிட்டு இருக்க முடியாதுமா.,

நாங்க மிஷின் மாதிரி ஓடினா.,  எங்களுக்கு கிடைக்குற.,  வாழ்க்கைத்துணை எங்களுக்கு ஏத்தாப்ல ஒரு அன்பான அரவணைப்பை தர்றவங்களா இருந்தா மட்டும் தான் இந்த வாழ்க்கை நல்லா இருக்கும்., சந்தோஷமா இருக்கும்., அந்த விதத்தில் எனக்கு அவர் நல்லபடியாக கிடைச்சிட்டாரு.., தம்பிக்கு சாரு கிடைச்சது நான் உண்மையிலேயே சந்தோஷப்பட்டேன்., அந்த பொண்ணு தம்பிய நல்ல பார்த்துப்பா.., அவனோட டென்ஷனுக்கு., அவள் அவனுக்கு ரிலீப் ஆ இருப்பா னு நினைச்சேன்.,  ஆனா நீங்க எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க.,

உங்களையெல்லாம்  எங்கம்மா சொல்லிக்கிறதுகே வெட்கமா இருக்கு..,  மாமியாரா வரும்போது அந்த கேரக்டர் மாறும் தான்., நீங்க நடந்துகிட்டத  வைத்து அப்படி தான் நினைச்சுட்டேன்., சரி அந்த பொண்ணு கண்டுக்காம போகுது.,  அதனால பிரச்சனை இல்ல நினைச்சேன்.,  ஆனா நீங்க எந்த அளவுக்கு பையன் வாழ்க்கை கெட்டுப் போனாலும் பரவால்ல..,  மருமக நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற ஒரு மாமியாரை இப்பதான் பாக்குறேன்., நினைச்சாலே கஷ்டமா இருக்குமா.., உங்கள மாதிரி ஒரு அம்மாக்கு பிள்ளையா பிறந்தத  நினைக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு”.,  என்றாள்.

“என்னடி ஓவரா பேசுற., உங்கள படிக்க வச்சி வளர்த்து நல்ல வேலைக்கு அனுப்பி னு.,  அதுக்கெல்லாம் எவ்வளவு காசு செலவு பண்ணினேன்., அவ்வளவு காசு என்ன சும்மாவா வந்துச்சி.,  நான் கஷ்டப்பட்டு உழைத்து வந்தது.,  உங்களுக்கு அன்பு கொடுக்கிறேன் பாசத்தை கொடுக்கிறேன் உட்கார்ந்துகிட்டு இருந்தா..,  நீங்க இந்த அளவுக்கு படிச்சு நல்ல நிலைமையில் வந்து உட்கார்ந்து என்னை இப்படி கேள்வி கேட்க மாட்ட இல்ல”.., என்று கத்தி கொண்டிருந்தார் மித்திரனின் அம்மா…

கூலி வேலைக்குப் போறவங்க கூட தம் பிள்ளையை படிக்க வைக்க தான் செய்யுறாங்க., கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளையை முன்னுக்குக் கொண்டு வரணும்னு நினைக்கிறாங்க தான்.., நல்ல பெத்தவங்க  முன்னுக்கு கொண்டு வர நினைப்பாங்க.., ஆனா நீங்க உங்க இஷ்டத்துக்கு படிக்க வைக்க நினைச்சீங்க..,  உங்க ஆசைக்கு படிக்க வைக்க நினைச்சீங்க.., நான் என் தம்பி மேல பாசமா இல்ல நினைக்காதீங்க.., அன்பை வெளிய  காட்டாமல் இருக்கலாம்.., ஆனால் என் தம்பி கண்கலங்கி பார்க்கவே பரிதாபமாக இருக்கிற நிலைமையில, அவன அப்படியே அம்போன்னு விட்டுட்டு எல்லாம் நான் போக முடியாது..,  கண்டிப்பா நான் கேள்வி கேட்கத் தான் செய்வேன்.., எனக்கும் அவனோட லைஃப் முக்கியம்..,   நீங்க ஒரு நல்ல அம்மாவா  இல்லாம இருக்கலாம்.,  ஆனா நான் கண்டிப்பாக நல்ல அக்கா வா இருக்கணும்னு நினைக்கிறேன்., அட்லீஸ்ட் இந்த விஷயத்திலாவது”., என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்று விட்டாள்.,

நாட்கள் அதன் போக்கில் நகர தொடங்கியிருந்தது., கிட்டத்தட்ட இருவரும் பிரிந்து 15 நாட்கள் ஆன நிலையில் மித்ரன் யாருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கவில்லை என்று சொன்னார்களோ..,  அந்த பேஷண்ட்டுக்கு  ட்ரீட்மெண்ட் கொடுக்கும் அத்தனை செலவையும் அவனுடைய பொறுப்பில் ஏற்றுக்கொண்டான்., கேட்டதற்கு “ஆஸ்பத்திரி செலவு என்றால் அத்தனை பேருக்கும் அதில் பங்கு வரக்கூடியது அதில் யாரும் என்னால் நஷ்ட பட்டதாக இருக்க வேண்டாம்”., என்று பொதுவில் சொல்லி அனுப்பி இருந்தான்.,

இதைக்கேட்ட மித்ரன் அம்மா சாதாரணமாக தோளைக் குலுக்கியபடி “அவன் இஷ்டம் செய்யட்டும்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் மொத்த செலவையும் அவனே ஏற்றான்.

அங்குள்ள ஸ்டாப்ஸ் தான் பேசிக்கொண்டார்கள்., “டாக்டர் கல்யாணத்துக்கு அப்புறம் தான் கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தாரு.,  அந்த பெரிய டாக்டருக்கு ஏன் தான் இப்படி ஒரு புத்தியோ..,  பொண்டாட்டிய பிரிச்சிட்டு பார்த்தியா”., என்றார்கள்.

பிரித்து வைத்தது ஓரளவுக்கு ஆங்காங்கு தெரிய தொடங்கியிருந்தது.  “என்ன பொம்பளையோம்மா” என்று  யாருக்கும் தெரியாத அளவிற்கு பேசிக்கொண்டார்கள்.,

” இந்த பொம்பள புத்திய பாரு., நல்ல மனுஷன் இப்ப தான் சிரிச்சே பார்த்தோம்.,  அதுக்குள்ள பழையபடி  ரோபோ வா மாத்திருச்சி., முந்தியாவது அட்லீஸ்ட் முகத்துல ஒரு அமைதி இருக்கும்., இப்ப கோபம் மட்டும் தான் இருக்கு.., படுபாவி பொம்பள”.,  என்று சொல்லி ஆளாளுக்கு திட்ட தொடங்கியிருந்தனர்.,

இது தெரிந்தாலும் மித்ரனின் அம்மா சாதாரணமாகத்தான் இருந்திருப்பார்.,  மகனின் வாழ்க்கையை விட சம்பாத்தியம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் சுயநலவாதி..,  இது போன்ற மாமியார்கள்    நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.,   சாருவை போல பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.., வெளியில் சொல்லாமல் வீட்டில் கட்டுப்பட்டு வாழ்ந்துகொண்டு…

இன்னும் 15 நாட்களில் அவன் மேற்படிப்புக்காக லண்டனுக்கு செல்ல வேண்டும். அது தொடர்பாக பேசும் போது மித்ரனின் அப்பா “செலவுக்கு எதுவும் பணம் வேண்டுமா” என்று கேட்டார்.

“இவ்வளவு நாள் வாங்கின சம்பளம் பத்திரமா வச்சிருக்கேன் பா.., அதை யூஸ் பண்ணிக்கிறேன்., இனிமேலும் உங்க ரூபாயோ.,  உங்க வீட்டம்மா சம்பாத்தியத்திலோ.,   நான் படிக்கணும் அவசியமில்லை..,  இது எனக்கு தேவை இல்லாத கோர்ஸ் தான்., ஆனால் சீட் வாங்கியாச்சு.., கிடைச்ச சீட்ட மிஸ் பண்ண கூடாது.., இந்த சீட்டை நான்  வாங்காம இருந்திருந்தா.., இந்த இடத்துல வேற யாராவது படிச்சி இருப்பாங்க.., என்னால ஒரு சீட்டுக்கு வீணாக கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் போறேன்.., ஆனா அவங்க சொன்னதுக்கு கட்டு பட்டு எல்லாம் ஒன்னும் நான் போகல அதை ஞாபகம் வச்சுக்கோங்க.., என்கிட்ட பணம் இருக்குது., அது போதும்..,  என்னால எப்படி சமாளிக்க முடியுமா நான் சமாளிச்சுக்கறேன்.,  யாரு ரூபாயும் எனக்கு தேவையில்லை”., என்று கோபமாகவே பதில் சொன்னான்.,

மித்திரனின் அக்கா தான்., “நான் தரட்டுமா” என்று கேட்டாள்.

சிரித்துக்கொண்டே “ஏன் எனக்கு வேலை கிடைக்காதா.,  அப்படின்னா பார்ட் டைம் வேலை பாத்துட்டு படிச்சிப்பேன்., நீ உன் வேலையை பாரு., உன் குடும்பத்தை பாரு..,  என்ன பாத்துக்க., எனக்கு தெரியும் இனிமேல் யாருகிட்டயும் நான் எதுவும் வாங்குவதா இல்லை.,  எனக்கு தேவையும் இல்லை”., என்று சொல்லிவிட்டான்.

இன்னும் 15 நாட்களில் கிளம்பும் சூழ்நிலையில் மித்ரன் இடையில் ஒருநாள் அவன் அக்காவை அழைத்து.., “போகும் போது ரூமை பூட்டி விட்டு சாவியை தந்துட்டு போறேன்., வீக்லி ஒன்ஸ் ரூம்மை கிளீன்  பண்ணி வை., உன்னால முடிஞ்சா டைம் இருந்தா..,  வேற யாருக்கும் சாவி கொடுக்கக் கூடாது”என்று அழுத்தி சொன்னான்.

“நீ சொல்றது புரியுதா கொடுக்கமாட்டேன்” என்று சொன்னான்…

சாரு பெங்களூர் வந்து பதினைந்து நாட்கள் கடந்து விட்டது..,

இதே நேரத்தில் அவளும் வந்த முதல் நாள் சித்துவிடம் சொல்லி வருத்தப் பட்டதோடு சரி.., அதன் பிறகு அதை பற்றி பேசவே மாட்டாள்.  ஆனால் அவ்வப்போது தன் போனில் இருக்கும் மித்ரன் போட்டோவை  மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பாள்.,

மனதை யார் முன்னிலையிலும் காட்டவே மாட்டாள்., தனிமையில் அழுத நாட்களும் உண்டு.  தன் மன பாரத்தை எல்லாம் தன் கண்ணீரில் கரைத்தாலும் மற்றவர்கள் முன்னிலையில் தைரியமாகவே காட்டிக்கொண்டாள்.,

அப்படி ஒரு நாள் அமைதியாக அமர்ந்து ஏதோ யோசனையில் அமர்ந்திருக்கும் போது அலுவலகத்தில் வைத்து.,  “நீ உன் ஹஸ்பென்ட் ட்ட  அவ்வளவு நம்பிக்கை கொடுத்துட்டு., அவ்வளவு ஆறுதல் சொல்லிட்டு., அவர் அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும் னு சொல்லிட்டு வந்துட்டு.., நீ வந்து இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தா என்ன அர்த்தம்.,  எனக்கு தெரிஞ்சு நீ வந்த நாளிலிருந்து ஒழுங்காக சாப்பிடல”., என்றாள்.

“பசி எடுக்க மாட்டேங்குது.,  நீ சும்மா இரு., பசிச்சா  சாப்பாடு சாப்பிட மாட்டேனா”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

சும்மா சொல்லாத பசிச்சா சாப்பிட மாட்டேனா னு சொல்லுற.,  இங்க பாரு வந்து பதினைந்து நாள் தான் ஆகுது., எப்படி இருக்க தெரியுமா.,  முகமெல்லாம் வெளிரி போய் இருக்கு., டாக்டர் ட்ட போலாமா., இல்ல வேற ஏதாவது யோசிச்சி பீல் பண்றியா”..,  என்று கேட்டாள்.,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன்., நீ ப்ரீயா விடு யோசிக்காத..,  இன்னும் 15 நாள் தான் இருக்கு., இங்கிருந்து கிளம்பிடுவாங்க லண்டனுக்கு போயிட்டு.,  எய்ட்மன்த் கழிச்சுத்தான் வருவாங்க”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..,

மனம் முழுவதும் அவன் நினைவை   கொண்டு இருந்தவளுக்கு தன் உடல் நிலையை கவனிக்க  முடியவில்லை.

உருட்டி போடும் பகடையில் எப்பொழுதும் ஒருவருக்கு மட்டுமே  சாதகமாக விழுந்து ஒருவரை தூக்கிவிடாது.,  அடுத்த நிமிடம் அடுத்தவரையும் அதே போல தூக்கிவிட எத்தனை நேரம் ஆகும்..,  பாம்பு கொத்தினாலும் அதிர்ஷ்டக் காற்று இலேசாக வீசினால் கூட போதும்., பெரிய ஏணியை கொண்டு வந்து வைக்கக்கூடும் பகடையின் விழும் எண்கள்“.,

Advertisement