Advertisement

“இங்க பாருங்க மெடிக்கல் பீல்டு ல உள்ள பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரமுடியும்., வரணும்”., என்றார்.

“அறிவுகெட்ட தனமா பேசாத ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.,  படிச்ச பொம்பளை மாதிரி நடந்துக்குற.,  அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு., வேற ஃபீல்டுனாளும் அவன் பிடித்து தான் கல்யாணம் பண்ணியிருக்கான். திரும்பத்திரும்ப பையன் வாழ்க்கையில் நீ தலையிடாத., அவன் போன தடவை அமைதியா போன மாதிரி.,  இந்த தடவை போக மாட்டான்., அப்புறம் அவன் உன்னை ஒதுக்க ஆரம்பிச்சான்னா.,  நீ ரொம்ப கீழே இறங்கி போயிடுவ., அதை நியாபகம் வச்சுக்கோ”., என்று சொன்னார்.

“அவனாவது எனை ஒதுக்குறதாவது., நான் சொன்னதை அப்படியே கேட்பான்.,  எனக்கு தெரியும் அவனை எப்படி நான் சொன்னபடி கேட்க வைக்கிறது னு.,  எனக்கு தெரியும்”., என்று திமிரோடு பதிலளித்தார்.,

“பட்டா தான் உனக்கெல்லாம் புத்தி வரும்” என்றார்.

“இந்த ஃபீல்டுல இருந்தால் தான் சம்பாதிக்க முடியும்., இந்த லைன் ல எடுத்து படிச்சாதான் சம்பாதிக்க முடியும் தெரிஞ்சு தான் அவனை அந்த லைன்ல படிக்க வெச்சேன்.., இப்போ இந்த பொண்ணு வந்தாப்ல அவனோட ஃபீல்டுல உள்ள முன்னேற்றங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது.., அவன் மேலும் மேலும் முன்னேறினா தான்.,  நிறைய சம்பாதிக்க முடியும்”., என்றார் மித்ரன் அம்மா.

” இருக்கிற பணம் போதும்., இருக்கிற பணத்தை காப்பாற்ற  நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கணும்.., நீ இந்த பாடு படுத்தினா.,  அவனுக்கு நாளைக்கு ஏதோ ஒன்னு னா.,   இந்த பணத்தை வைத்து என்ன செய்வ..,  தூக்கிட்டு போக போறயா.., இல்ல நாளைக்கு உனக்கு ஏதோ ஒன்னு னா.,  என்ன பண்ணுவ..,

நீ நல்ல மாமியாரா இல்லைன்னு எனக்கு தெரியும்.., கல்யாணம் ஆனா அப்பவே நான் கண்டுபிடிச்சிட்டேன்.

எப்பவுமே எல்லாரும் சொல்லுவாங்க., அம்மாவாக இருக்கும் போது நல்லவங்களா இருப்பாங்க.., ஆனா மாமியாரா இருக்கும் போது மோசமா இருப்பாங்க., னு சொல்லி  கேள்விப்பட்டிருக்கேன்., ஆனா நீ உன் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு நல்ல மாமியாராக இல்ல.., நீ பெத்த பிள்ளைக்கு நல்ல அம்மாவும் இல்ல.,  இப்படியா புள்ள வாழ்க்கை கெடுக்க நினைப்ப.,

உன்ன எல்லாம் மனுஷியாக மதிக்க கூட என்னால முடியல”., என்று மித்ரனின் அப்பா கோபத்தோடு கத்தினார்.

“இங்க பாருங்க., என் புள்ளைங்க லைப்..  நான் தான் முடிவு பண்ணனும்”., என்றார் மித்ரன் அம்மா.,

” எனக்கும் அவன் பிள்ளை தான்.,  அவன் வாழ்க்கை எனக்கு முக்கியம்., நீ நெனைக்கிற மாதிரிலாம் ஒன்னும் பண்ண முடியாது., உன் வேலை எதுவோ  அத பாத்துட்டு போ”.., என்று அவரும் பதிலுக்கு கத்த., அங்கு ஒரு சண்டை வரும் சூழல் வர மித்ரனின் அக்கா தான் இருவரையும் சமாதானப் படுத்தினாள்.,

“அப்பா அப்பா பேசாதீங்க.,  விடுங்கப்பா” என்று சொன்னவள்.,

“அம்மா தயவு செய்து தம்பி வாழ்க்கையில் விளையாடாதீங்க.,  உங்க பேச்சை கேட்டுட்டு.,  நான் சரி சரி னு போறேன்..,  என்  ஹஸ்பண்ட் வந்து எனக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுத்து போறாரு..,  ஆனா அதுவும் என்னைக்கும் எப்பவும் ஒன்று போல இருக்கும் நினைக்காதீங்க..,  என்னைக்காவது ஒரு பிரச்சினை வந்தா., அன்றைய  நிலைமைக்கு ரொம்ப மோசமா கேவலப்பட்டு போயிடுவீங்க.,

எல்லாரும் அமைதியா இருக்காங்க., ஏன் தெரியுமா.,   நீங்க எவ்வளவு மோசமாக இறங்கி பேசுவீங்கன்னு தெரியும்.., நாங்க ஏதாவது சப்போர்ட் பண்ணி பேசினா.., அந்த பொண்ணு லைஃப்ல உங்க மூஞ்சில முழிக்க விரும்பாத அசிங்கப்படுத்தி விடுவீங்கனு தெரியும்.,  அது மட்டுமில்லாமல் நீங்க அசிங்கப்படுத்த போய் தான்.,  ஏற்கனவே மித்ரன் விட்டு ஒரு ஆளு காணாம போச்சு.., அதே மாதிரி இந்த பொண்ணையும் கண் காணாமல் ஆகிவிடுமோ.,  ன்ற பயத்தில் தான் நாங்க யாரும் பேசாமல் இருந்தோம்..,  ஆனால் தயவு செய்து சொல்றேன்., மாற முயற்சி பண்ணுங்க.,

எல்லாருக்கும் அவங்க வங்க பிள்ளைகள் மேல  பொசசிவ்னஸ் இருக்கும்.,  ஆனா நீங்க இதுக்கு பேரு பொசசிவ்னஸ் என்று சொல்லாதீங்க.., நீங்க சொல்ற மாதிரி உங்களுக்கு ஏத்தாப்பல ஆடனும் அப்படின்னு நினைக்கிறீங்க., உங்க பேச்சை மட்டும் கேட்கணும்னு நினைக்கிறீங்க.,  சொல்றத மட்டும் கேட்டு நடக்கணும் நினைக்கிறீங்க..,

அதெல்லாம் தப்புமா அவனுக்கு ஒரு மனசு இருக்கு அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு., எப்பவும் உங்க பேச்சை கேட்டுட்டு இருக்கமாட்டான்., அதையும் தெரிஞ்சுக்கோங்க.,

இன்னிக்கு என்ன ஆச்சு ஹாஸ்பிடல்ல.., ஒண்ணுமே கிடையாது.  நீங்க தான் ஏதோ பிளான் பண்ணி அந்த  பேசன்ட்க்கு அப்பாயிண்ட்மென்ட் மேட்டர் ல பண்ணி இருக்கீங்க., அதை கண்டுபிடிக்க முடியாது நினைச்சிங்களா., இதுவரைக்கும் மித்ரன் கண்டுபிடிக்காமல் இருப்பான் நினைச்சிங்களா..,  இதுக்குள்ள எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கும்..,

ஆனா அவன்  உங்கள அசிங்கப்படுத்த கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் அமைதியா இருந்திருப்பான்.,  நீங்க வேணா ஹாஸ்பிட்டல் அத்தனை பேர் முன்னாடி அவன அசிங்கப்படுத்தினீங்க., ஸ்டாப்ஸ் முன்னாடி அசிங்கப்படுத்தினீங்க., அவன் திரும்பி உங்கள் அசிங்கப்படுத்தி இருந்தான்னா..,  பெரிய டாக்டரா உங்க பேரு கெட்டுப் போயிருக்கும்., அந்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கான்., உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியா இருக்கான்..,

இங்க வந்தும் நீங்களும் உங்க இஷ்டத்துக்கு  பேசினீங்க.., நடந்துகிட்டீங்க.,   எல்லாத்துக்கும் அமைதியா இருக்கான் னு யோசிக்காதீங்க.,  இது என்னைக்கும் ஒன்று போல இருக்காது., உங்களை தூக்கி எறிஞ்சிட்டு போக அவனுக்கு ரொம்ப நேரம் ஆகாது., ஒரு அளவுக்குதான் அவனும்  அமைதியா போவான் அதுக்கு மேல போச்சு தூக்கி வீசிட்டு போயிட்டே இருப்பான்”… என்றாள்.

மித்ரன் அப்பாவோ… ” இவளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது”., என்றார்.

“பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது., பணத்துக்கும் மேல அவன் எதிர்பார்க்கிறான்.,  அது தான் அன்பு..,  அவனோட வாழ்க்கை முழுக்க எதிர்பார்க்கிறது அன்பு மட்டும் தான்.., நீங்க எதிர்பார்க்கிற மாதிரி பணத்தை இல்லை..,  அவன் படிச்ச படிப்புக்கு எந்த ஹாஸ்பிடலில் வேலைக்கு போனாலும் அவனுக்கு கை நிறைய  சேலரி கிடைக்கும்.., உங்க ஹாஸ்பிட்டலில் கொடுக்கிற பணம் தான் பணம் நினைக்காதீங்க.,  அவன் வேலை பாக்குற சேலரி போதும் அவனுக்கும்.,  அவன் வொய்ப்க்கும்., அப்படி ஒரு நினைப்பு வந்தா.,  தூக்கி வீசிட்டு போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் நினைக்கிறீங்க.,

இப்பவும் அமைதியா இருக்கான்.,  காரணம் இல்லாமல் இருக்காது., கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு புரியும் அவன் எதிர்பார்க்கிறது.,  பணத்தை இல்ல வெறும் அன்பு மட்டும் தான்.,  அவன் கிட்ட அன்பா இருக்குற எல்லாத்தையும் பிரிக்கணும் நினைக்கிறீங்க., ஏன் ஏன் இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு..,

நீங்க தான் மிஷின் மாதிரி இருக்குறீங்க.., நீங்க தான் என்னையும் மிஷின் மாதிரி வளத்து இருக்கீங்க.., நான் என்னைக்காவது என் பிள்ளைங்க ட்ட அன்பா பேசி பாத்து இருக்கீங்களா..,  நான் அந்த லட்சணத்தில் தான் இருக்கேன்., எனக்கு சில நேரம் கில்டியா  ஃபீல் பண்றேன்.., சாரு என் பிள்ளைங்க ட்ட.,  அப்படி நடந்துக்கிட்டா.,  பசங்க ரெண்டும்.,  எப்பவுமே என்கிட்ட பேசும் போதும் சரி.., அவர் ட்ட பேசும் போதும் சரி..,  அத்தை சொல்லிக் கொடுத்தாங்க.,  அப்படின்னு சொல்லுவாங்க., அப்படி ஒரு பொண்ணுமா., எப்படி மா இப்படி பண்ண முடிஞ்சது உங்களால..,

உங்களுக்கு ஏன் மா அப்படி ஒரு ஆதங்கம்., பிரிச்சி வைக்கணும் னு எண்ணம்.,  அன்பா இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்க இல்லை ன்னு., நீங்க நினைச்சீங்கன்னா.,   பணம் பணம்னு பறக்கிற உங்களைவிட மோசமானவங்க உலகத்திலேயே இருக்க முடியாது..,

இதோ எல்லாரும் தான் இருக்காங்க அப்பா பிரண்ட்ஸ்  எல்லாரும் தான் இருக்காங்க.., எல்லாரும் எப்படி இருக்காங்க இஷ்டம்னா வேலைக்கு வா.,  இல்லை னா வீட்ல இரு., அப்படி தான் அவங்க மருமக கிட்ட சொல்லி இருக்காங்க..,  ஆனா பெரிய ஃபேமிலி தெரிஞ்சு டாக்டர் பொண்ணு வேணும்னு கேட்டு கல்யாணம் பண்ணுனதால  அந்த பொண்ணுங்களும் சரின்னு சொல்லிட்டு போவாங்க.., ஆனா அதுக்காக யாரும் கட்டாயப்படுத்தலை.,

டாக்டர் பொண்ண கல்யாணம் பண்ணி அவனும் மிஷின் மாதிரி வாழனும் நினைக்கிறீங்களா.,  நாளைக்கு எங்களை மாதிரி.., அதாவது என்னையும் மித்ரன் மாதிரி எங்க பிள்ளைகளும் கஷ்டப்படணும் நினைக்கிறீங்களா.., அன்புக்காக ஏங்கி நிற்கனும்  நினைக்கிறீங்களா.., எனக்கும் ஒரு ஸ்டேஜ்ல அன்பா இருக்கிறது ரொம்ப பிடிக்கும்.., அவரு என் கிட்ட அன்பா இருக்க போய் என்னால இப்ப நிம்மதியா வொர்க் பண்ண முடியுது.., என் பிள்ளைகளுக்கு என்கிட்ட இருந்து சரியான அன்பு கிடைக்கலை., ஆனால் என் வீட்டுக்காரர் ட்ட இருந்து அதுக்கு ஏத்தாப்ல அன்பு என் பிள்ளைக்கு கிடைச்சிருது.,

Advertisement