Advertisement

9

தோள் சாயும் போது தோழியாய் 
மடி சாயும்போது தாயாய் 
உன் அணைப்பில் 
எனை சேயாய்…

ஒவ்வொரு நிமிடமும் 
உருமாற்றிக் கொண்டிருந்தவளே
நான் உருக்குலைந்து போவேனோ 
நீயற்ற தனிமையிலே..,

ஏர்போர்ட்டில் கண்கலங்க அமர்ந்திருந்தவளுக்கு நினைவு முழுவதும் மித்ரனைச்  சுற்றி வந்தது., ஏன் அத்தனை பேரும் பதில் எதுவும் பேசாமல் இருந்தார்கள் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.., ஏதோ திட்டமிட்டு செய்தது என்பது அனைவருக்குமே புரிந்து இருக்கக்கூடும்., ஆனால் ஏன் அத்தனை பேரும் அமைதி காத்தனர்., இதில் தன் அம்மா எங்கே வந்தார். தன் அம்மாவிடம் என்ன சொல்லப்பட்டது’., என்று எதுவும் புரியாமல் தன்னையே குழப்பிக் கொண்டிருந்தாள்.

காரில் வரும் போதே ஆன்லைனில்  பெங்களூருக்கு பிளைட் டிக்கெட் தேடினாள்., மாலை பிளைட் ல., இருக்க..,  எடுத்துக்கொண்டாள்.

காலை சாப்பிட்டது தான்., மதியம் சாப்பிடும் நேரத்திற்கு முன்னே  பிரச்சனை என்பதால் சாப்பிடவும் இல்லை.., அங்கிருந்து கிளம்பும் போது தண்ணீர் கூட குடிக்கவில்லை.., எனவே ஏர்போர்ட்டில் வந்து தான் தண்ணீரை வாங்கிக் கொண்டு அமர்ந்தாள்.,  சாப்பிடாமல் இருந்தது சற்று என்னவோ செய்தது போல தோன்றினாலும்.,  மித்ரனின் நினைப்பிற்கு முன்னால் பசி மந்தித்து போனது போலவே உணர்ந்தாள்…

அது போல வீட்டில் அனைத்தையும் போட்டு உடைத்தவன்., தன் அறைக்குச் சென்று கதவை பூட்டி விட்டு., தன் படுக்கையில் விழுந்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.., பழைய நினைவுகள் அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது..,

‘ஏன் தன் மீது அன்பு வைப்பவர்கள் மட்டும் தனக்கு நிலைப்பதில்லை.., ஏன் தன் மீது அன்பு வைப்பவர்களை தன் அம்மா ஒதுக்க நினைக்கிறார்’ என்று மனதிற்குள் கேள்விகளை கேட்டுக் கொண்டான். ஆனால் அவனுக்கு பதில் தான் தெரியவில்லை.., கண்டிப்பாக இதில் ஏதோ இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு இருந்துகொண்டே இருந்தது.

தற்போது இருக்கும் நிலையில் எங்கும் வெளியில் செல்லவோ.., யார் முகத்தையும் பார்க்கவோ..,  பிடிக்காததால் அப்படியே கண்கலங்க எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டே இருந்தான்., அவன் நண்பர்கள் வந்து உணவு உண்ண  அலைபேசியில் அழைக்க.,  வேண்டாம் என்றான்.

” தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க., இன்னைக்கு ஒரு நாளைக்கு உங்க ஹாஸ்பிடலுக்கு லீவ் சொல்லிருங்க.,  இதுக்கும் சேர்த்து நாளைக்கு நான் வேலை பார்த்து கொடுத்திடுவேன்” என்று பிரித்துப் பேச தொடங்கினான்.

மனதில் இருந்த கோபம் எல்லாம் ஒரு புறம் ஏறிக்கொண்டிருந்தது., தன் கோபம் என்று வெடிக்குமோ என்ற பயம் அவனுக்கு தோன்றியது.., இத்தனை வருடங்கள் கட்டிக்காத்த பழக்கம் அத்தனையும் ஒரே நாளில் வெடித்து விடுமோ.,  என்ற எண்ணமும் தோன்றிக்கொண்டே இருந்தது. அவனே அவனை  நிதானப் படுத்திக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டிருந்தான்.,  சாருவின் தலையணையை அணைத்து கொண்டு அவளைப் பற்றிய நினைவுகளோடு.,  பழைய நினைவுகளும் சேர  அப்படியே உறங்கிப் போன அவன் கனவில் ஏதேதோ தோன்றி அவனை தொடர்ந்து கண் மூட விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது..,

மித்ரன் உணவு உண்ண வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எல்லோரும் மருத்துவமனைக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர்., அதே நேரம் மித்ரனின் அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.,

“நீ கொஞ்சம் கூட மாறல.,  இருபத்தி மூணு வயசுல அவனை எப்படி நடத்தினயோ அதே  மாதிரி தான் நடத்துற., அவனுக்கு இப்போ 31 வயசாகுது..,  இப்பவும் அப்படித்தான்  இருக்க..,  அவன் ஒன்னும் சின்ன பையன் கிடையாது, அவனுக்குன்னு  குடும்பம் ஆகுது., அவங்க ரெண்டு பேரையும் பிரித்து வைக்கிற தால உனக்கு என்ன லாபம்.,  ஏன்  அநியாயம் பண்ற..,  அவன ஒரு தடவை கூட நிம்மதியா இருக்க விட மாட்டியா”.,  என்று கோபத்துடன் கேட்டார்.,

“உங்களுக்கு என்ன தெரியும் நான் அவனோட நிம்மதிக்காக தான் பண்றேன்.., மெடிக்கல் பீல்டு ல உள்ள பொண்ண கல்யாணம் பண்ணி இருந்தா., நான் எதுக்கு பேச போறேன்., ஏதோ அந்த பில்டு பத்தி தெரிஞ்ச பொண்ணுக்கு தான் அதுல முன்னேறனும் என்கிற முனைப்போடு..,  அவனை முன்னுக்கு கொண்டு வருவா.,  இவளுக்கு என்ன தெரியும். அது மட்டுமில்லாம நான் வேண்டா ன்னு சொன்ன பொண்ண தானே நீங்க எல்லாம் சேர்ந்து முடிச்சிங்க”.,என்று கத்த தொடங்கினாள்.,

அதே நேரம் அவன் நண்பர்கள் “அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.,  அவனுக்கு அந்த பொண்ணு புடிச்சிருக்கு.,  ரொம்ப புடிச்சு இருந்துச்சு., அதனால தான் படிப்பு அதைப் பத்தி எல்லாம் யோசிக்கலை அவனுக்கு பிடித்திருக்கும் போது அவனோட சந்தோஷம் தானே முக்கியம்., அதை மட்டும் தான் யோசிக்கணும்.., நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுரிங்க”., என்றனர்.,

“உங்க வேலைய பாருங்கடா..,  உங்களுக்கு நான் திரும்பத் திரும்ப சொல்றேன்.., நம்ம லெவலில் இருந்து நம்ம கொஞ்சம் கூட இறங்க கூடாது., அதுவும் இல்லாம மெடிகல் பீல்டு அப்படின்னா.,  மெடிகல் பீல்ட  மட்டும் தான் யோசிக்கணும்.., வேற பீல்டு அ உள்ள விடக் கூடாது ன்னு நினைக்கிறேன்.,  நீங்க எப்படி சப்போர்ட் பண்ணி பேசலாம்”., என்றார்.

மறுபடியும் மித்ரன் அப்பா., “நான் திரும்ப கேட்கிறேன்., அவன் உன் இஷ்டப்படி பி.ஜி பண்ணனும் ங்கிறது காக தானே., அவன் எந்த அளவுக்கு குளோஸ் ஆ இருந்தான் னு  தெரிஞ்சும் பக்கத்துல இருக்க விடாமல் விரட்டி விட்ட”.,  என்று கோபத்தோடு கத்தினார்.,

“இங்க பாருங்க திரும்பத் திரும்ப உங்க பிள்ள பண்ணுறது எல்லாம் சரி னு பேசாதீங்க., எனக்கு தெரியும் அவன எப்படி கொண்டு வரணும் னு., என் புள்ளையோட லைஃப் எப்படி இருக்கனும் னு.,  ஒரு அம்மாவா நான் ஆயிரம் கனவுகளோடு இருக்கேன்., என் கனவுகளுக்கு ஏத்த மாதிரி  பிள்ளையை கொண்டு வரணும்னு நினைக்கிறது தப்பா”.., என்றார்.

“ஒரு அம்மாவா., உன் கனவ,  உன் பிள்ளை மேல திணிக்காத..,  உனக்கு மெடிக்கல் பில்டு கொண்டு வரனும் னு ஆசைப்பட்ட..,  வேண்டாம் சொன்னவனை பிடிச்சு படிக்க வச்சாச்சு.., உனக்கு பிடிச்ச லைன்ல தான் அவனை பிஜி பண்ண வைக்கணும் நினைச்ச..,  அதையும்  பண்ண வச்சாச்சு.., எல்லாத்தையும்   உன் இஷ்ட படி செய்தாச்சி., அவன் ஆசைப்பட்ட மாதிரி  ஃபாரின்ல ஜாப் கெடைச்ச ப்ப., நீ நம்ம ஹாஸ்பிடல்ல தான் வொர்க் பண்ணனும்னு சொன்ன.., அவனும் அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கான்..,  இப்ப திடீர்னு என்ன ஃபாரின் படிப்பு…,  அதுவும் அவன் படிப்புக்கு தேவையே இல்லை..,  அப்படி இருக்கும் போது நீ எதுக்கு  இத படிச்சே ஆகணும் ங்கிற.,  படிப்ப சாக்கு சொல்லி எட்டு மாசம் பிரிச்சு வைக்கிற.., அது மட்டுமில்லாமல் கூட நாலு மாசம் ஏதோ கணக்கு பண்ணி ஒரு வருஷமா ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சு இருக்கே..,  என்ன ரீசன்”., என்று மித்ரனின் அப்பா  கேட்டார்.

உதாசீன பார்வையோடு., நக்கலான சிரிப்போடு அவன் அப்பாவிடம் பதில் சொன்னார்.,  “என் புள்ளைக்கு என்ன பண்ணனும்னு, எனக்கு தெரியும்.  எனக்கு புடிச்ச பொண்ண அவன் கல்யாணம் பண்ணி இருக்கணும்., எனக்கு புடிச்ச மாதிரி அவன  கொண்டு போகணும்னு நினைச்சேன்., என்றார் திமிராக.

“திரும்பு திரும்ப அதையே பேசிகிட்டு இருக்காத.,  வாழ போறது அவன்., நீ என்ன  பேசிகிட்டு இருக்க”., என்று கோபமாக கேட்டார்.

“இங்க பாருங்க நான் நினைச்ச  மாதிரி தான்., என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தேன்., நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை என் மகளுக்கு வரணும்னு நினைச்சேனோ அந்த மாதிரி  மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சேன்., யாராவது ஏதாவது குறை சொல்ல முடியுமா உங்களால.., ஏன் இங்க இருக்கிறவங்க எல்லாரும் ஒரே பீல்டு இல்ல., அதே மாதிரி எல்லார் குடும்பத்துக்கும் வந்திருக்காங்க..,  யார்கிட்டயாவது  குறை சொல்ல முடியுமா”., என்றார்.

“சரி இப்ப இந்த பொண்ணு மெடிக்கல் பில்டு  இல்லங்கிறத தவிர., வேற என்ன குறை கண்டுபிடித்த அதை சொல்லு இப்ப”.., என்று கேட்டார் மித்ரன் அப்பா.

” இப்ப பிரச்சினை இல்லாம இருக்கலாம்., ஆனா பின்னாடி கண்டிப்பா பிரச்சினை வரும்., அப்படி வரும் போது பிரிவதை விட இப்பவே புரிஞ்சுட்டா ரொம்ப ஈசி இல்ல., அதுக்கு தான்”., என்று சொன்னார்.

“எப்பவோ ஏதோ வரும் னு., நீயா யோசிச்சி.,  இப்பவே செய்வியா..,  அவங்களுக்கு அப்பவும் பிரச்சனை வரும்னு உனக்கு எப்படி தெரியும்.., அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போறாங்க., அப்படி இருக்கும் போது உனக்கு என்ன வந்துச்சு”., என்று சொன்னார்.

Advertisement