Advertisement

சாருவிற்கு மனம் வலி சூழ்ந்தது போல.,  ஒரு விரக்தி தோன்றியது., சற்று நேரம் எதுவும் பேசாமல் மித்ரனின் அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றாள்….

சாருவின் அம்மாவும் “அவங்க சொல்றது சரிதான் டி., நீ ஒரு வருஷத்துக்கு பெங்களூரிலேயே போய் இரு., அப்பத்தான் உனக்கும் புத்தி வரும்.,  தனியா இருந்தா தான் குடும்பம் னா என்ன.., தொழில் என்றால் என்ன அப்படிங்கிற புத்தி வரும்.,   இங்க  வீட்டுக்கு வரலாம் யோசிக்காத.,  எப்போ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சோ., அப்போவே உனக்கும்  அந்த குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது..,  நீ அந்த வீட்டுக்கு வரணும் அப்படின்னா., மாப்பிள்ளையோட கூட வரணும் அப்பதான் அந்த வீட்டுக்கு வரலாம்.,  இல்ல னா  நீ வரணும்னு அவசியம் கிடையாது., நீ பெங்களூருக்கு போ”.., என்று சாருவின் அம்மா வாயாலேயே சொல்ல வைத்தார் மித்ரனின் அம்மா…

வீட்டில் உள்ளவர்கள் யாரும் பேசவில்லை.,  ஏனெனில் மித்ரனின் அம்மாவின் பேச்சு அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது., எதையோ கேட்க வந்த அவள் அக்காவிடம் “உன் வேலையே பாத்துட்டு போ.., அவன் லைஃப் முக்கியம்.,  பீல்டு முக்கியம் நினைக்கிறவங்க வாய்திறந்து பேச கூடாது”.,  என்று சொல்லவும் வேறு யாரும் எதுவும் பேசவில்லை அமைதியாகி விட்டனர்.,

மித்ரன் தான் நிமிர்ந்து பார்த்து “நான் பேசலாம் இல்ல..,  இது என் லைஃப்.,  என்  பீல்டு தானே.,  நான் பேசலாமா”., என்று கேட்டான்…

“ஆமா.,  பேசு.,  என்ன பேச நினைக்கிறாயோ பேசு”., என்று சொன்னார்..

“எந்த கோர்ஸ் எடுத்து இருக்கீங்க”என்று தன் படிப்பு சம்பந்தமாக கேட்டான்.

அவரும்  லண்டனில் அவனுக்கு கிடைத்து இருக்கும் படிப்பை பற்றி சொல்லி விட்டு அதற்கான அழைப்பையும் அவனிடம் கொடுத்தார்.,

” இது எப்ப அப்ளை பண்ணுனீங்க” என்று கேட்டான்., திருமணத்திற்கு ஒரு வாரத்திருக்கு முன்பு என்பதை அதில் தேதி குறிப்பிட்டு இருக்க.,  இவனுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.,

” சோ நீங்க இதெல்லாம் ஏற்கனவே முடிவு பண்ணிட்டு தான்..,  எல்லாம் பண்ணி இருக்கீங்க இல்ல”.., என்று கேட்டான்.

சுற்றி இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை., ஆனால் தேதியை பார்த்தவனுக்கும் அதை கொடுத்தவருக்கும்  புரிந்திருந்தது.,

“இதுல என்ன தப்பு இருக்கு” என்று மித்ரனின் அம்மா கேட்டார்.

“தப்பே இல்லை” என்று அவனும் பதில்  சொல்லியபடி., “சரி வேற என்ன பண்ணி இருக்கீங்க” என்று கேட்டான்.,

நீ இப்போ 1மன்த் இந்த பேஷண்ட்டுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்.,  அதுக்கப்புறம் உன் கோஸ் படிப்பதற்காக நீ பாரின் போகனும்.,  சிக்ஸ் மன்த் கோர்ஸ்., 2மன்த் டிரைனிங்.,  நீ ரிட்டன் வந்ததுக்கப்புறம் ஹாஸ்பிடல்ல பழையபடி நீ தான்  உன் பேரைக் காப்பாத்தணும்.., அதுக்குதான் மீதி இருக்க மூணு மாசம்., ஒரு வருஷம் உனக்கும் சாருக்கும் பிரிவு..,  அவ இங்க வரக்கூடாது., நீ அங்க போக கூடாது.,  ரெண்டு பேரும் போன்ல பேசிக்கக்கூடாது.,  வாட்ஸ் அப் வீடியோ கால் எதிலேயும் கவனத்தை செலுத்த கூடாது..,  உனக்கு உன் படிப்பு மட்டும்தான் முக்கியம் அதை மட்டும் மைண்ட் பண்ணி நல்ல நிலைக்கு முன்னேற நெனச்சே னா.,  உன் பீல்டு உனக்கு முக்கியம் நினைச்சா.,  நீ போ…,  இல்ல எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம்., என் பொண்டாட்டி பின்னாடி தான் போகவேண்டும் னா., தாராளமா போ..,  என்று சொன்னார்.,

மித்ரன் நிமிர்ந்து கலங்கிய கண்களுடன் சாருவை பார்க்க..,

” நான் என்ன செய்யணும் அத மட்டும் சொல்லுங்க..,  என்று அவனிடம் கேட்டாள்.

மித்ரன் அம்மா “அதை நான் சொல்றேன்” என்று சொன்னார்.,

அவரை பார்த்து கையை காட்டி., உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது., நான் கேட்டது என் ஹஸ்பென்ட் ட்ட.,  அவர் பதில் சொல்லட்டும் நான் பார்த்துக்கிறேன்”., என்று சொன்னாள்.

மித்ரனின் அம்மா., சாருவின் அம்மாவிடம் “பார்த்தீங்களா உங்க பொண்ணு  அத்தனை பேர் முன்னாடி எப்படி திமிரா பேசுற பார்த்தீர்களா “என்று சொல்ல அவரை திரும்பி பார்த்து அமைதியாக பார்வை பார்த்தவள்.,

மித்ரனிடம் சென்று நின்றாள்., “என்ன செய்யணும்” என்று கேட்டு விட்டு “ஒரு வருஷம் பிரிந்து இருக்கலாமா” என்று கேட்கவும் இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை., அவன் கண்ணை மட்டும் பார்த்தவள் வேறு ஏதும் சொல்லாமல் மாடிக்கு சென்று  அவர்களது அறையில் இருந்து அவளுக்கு செல்ல தேவையான உடைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு கீழே வந்தவள்., அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்த லாப்டாப்பில் அலுவலகத்திற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு.,  அதையும் எடுத்து  அதற்கான பையில் வைத்து இரண்டு பைகளையும் எடுத்து வைத்தவள்.,  தனது போனில் இருந்து கால் டாக்ஸிக்கு போன் செய்து விட்டு., எங்கே வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டாள்.

பிறகு நிதானமாக மித்திரனின் அருகில் சென்றவள்.,அவன் அமர்ந்திருந்த சோபாவின் அருகில் முட்டி போட்டு அவன் முன்பு நின்றாள்.., அவன் கலங்கிய கண்களோடு அவளையே பார்த்துக் கொண்டிருக்க..,  அவன் கையோடு கைகோர்த்து மிகவும் மெதுவான குரலில் அவர்கள் இருவர்  மட்டும் பேசிக்கொள்ளும் குரலில் பேசினாள்.,

“மித்து மா” என  அழைக்க மெதுவாக நிமிர்ந்து அவள் கண்ணோடு கண் பார்த்தான். மித்து என்று அழைப்பது அவர்களுடைய தனிப்பட்ட நேரத்தில் தான் மற்ற நேரங்களில் அழைப்பது கிடையாது.,

“நீங்க என்னோட மித்ரன் யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்”., என்றவள்.

அவளது சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து அவன் கலங்கிய கண்களை நிதானமாக துடைத்து விட்டாள்..

இடதுகையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்., வலது கையால் மெதுவாக முகத்தையும் சேர்த்து துடைத்து.,  அவன் கலைந்திருந்த தலையை அழகாக கோதிக் கொடுத்தவள்.., அவன் முகத்தை பார்த்தபடியே நீங்க எனக்கு மட்டும் தான் உங்கள யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..,  நீங்க இப்போ ஏதோ ஒரு சூழ்நிலை சந்தர்ப்பத்தில் மாட்டிக்கிட்டீங்க.,   உங்களால பதில் பேச முடியல.., எனக்கு தெரியும் இந்த கோர்ஸ் எந்த அளவுக்கு முக்கியம் இல்ல னு.,  நீங்க பேசும் போதே நான் புரிஞ்சுகிட்டேன்.,   அவங்க எதுக்கு பண்ணுனாங்க.., ஏன் பண்ணினாங்க..,  எதுவும் கேட்க போறதில்லை.,  இந்த பிரிவு கூட நமக்குள்ள இருக்குற அன்பை கூடுமே ஒழிய குறைக்காது., அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..,  ஒரு வருஷம் தானே பார்க்கலாம்”., என்று சொன்னாள்.

அவன் அவள் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க துவங்கும் போது அவன் கண்ணை துடைத்து விட்டவள்., “எத்தனையோ வீட்டுல பாரின் ல வொர்க் பண்ணுறவங்க எல்லாம் இப்படித்தான் பிரிஞ்சி இருக்காங்க., அப்படி நினைச்சிக்கோங்க..,   அவங்க சொன்னாப்ல நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சிட போறது கிடையாது..,  அவங்க சொல்ற ஹாஸ்பிடல் காரணம்  சும்மா சொத்தை காரணம்.., அது எல்லாருக்கும் தெரியும்.,  யாரும் உங்கள தப்பா நினைக்க மாட்டாங்க.., உங்கள பத்தி புரிஞ்சவங்க யாரும் உங்கள தப்பா நினைக்க மாட்டாங்க சரியா”.., என்றாள்.

“யாரும் நம்மள தப்பா நினைப்பாங்க.., அப்படி பேசினாங்க., இப்படி பேசினாங்க னு நினைக்காதீங்க..,   நம்மள பத்தி புரிஞ்சிக்கிட்டவங்க., யார் என்ன சொன்னாலும் நம்மள தப்பா நெனைக்க மாட்டாங்க.., சந்தோஷமா இருங்க.., என் மித்து எப்பவும் சிரிச்ச முகமா இருக்கணும்.., இந்த மாதிரி கலங்க கூடாது.,  நான் எப்பவும் மித்ரன் ஓட ஒய்ஃப் தான்  சரியா.., சந்தோஷமா இருக்கணும்”.., என்று சொன்னாள்.

வெளியே கார் வந்து நிற்கவும் சரியாக இருக்க.., எழுந்தவள்.,  நிதானமாக மறுபடியும் அவன் தலையை கோதி கொடுத்து அவன் நெற்றியில் அத்தனை பேர் முன்னிலையில் அழுத்தமாக முத்தம் பதித்து விட்டு கிளம்பி போக திரும்பினாள்.

அவள் கையை பிடித்து அவள் உள்ளங்கை ரெண்டிலும் சேர்த்து பிடித்தபடி அதில் முகத்தை புதைத்துக்கொண்ட மித்ரன்.., அவள் கைக்குள் உதடு குவித்து முத்தம் வைத்து அனுப்பி வைத்தான்..,

அவளும் வெளியே வந்து காரில் ஏறும்போது வாசலுக்கு நேராக அமர்ந்திருந்தவனை திரும்பிப் பார்த்துவிட்டு தான் ஏறி சென்றாள்.

இனி அவள் வாழ்க்கை பெங்களூரிலும்.,  இவனது வாழ்க்கை படிப்பு மருத்துவம் என்ற நிலையிலும் மாறி இருந்தது.,

அவள் கார் அங்கிருந்து கிளம்பி செல்லவும் கோபத்தில் இருந்த மித்ரன்  ஹாலில்., டீபாய்., மற்றும் சில பொருட்களை தூக்கி வீசி அனைத்தையும்  நொறுக்கி எடுத்து வீட்டை கலவர பூமியாக மாற்றி இருந்தான்.,

எப்போதும் கோபத்தை வெளிப்படையாக காட்டாதவன்., இப்படி வெறி கொண்டு உடைத்து எடுக்க வீட்டினர் அதிர்ச்சியோடு இருந்தனர். இதற்கு முன் இப்படி ஒரு சூழலில் அவன் இப்படியெல்லாம் நடக்கவில்லையே என்று தோன்றியது…

அவர்கள் அமர்ந்திருந்த இடமே போர்களம் போல தெரிந்தது.,  சாருவின் அம்மாவிற்கு ‘இவர்கள் பேச்சைக் கேட்டு நாம் அவசரப்பட்டு அவளிடம் பேசி விட்டோமோ’ என்று முதல்முறையாக தோன்றியது…

பகடை உருட்டிய கைகளே பாம்பாக மாறி கொட்டினாலும்., அருகில் இருக்கும் சிறு சிறு ஏணிகள் போதும் மீண்டும் இலக்கை அடைய ஓடுவதற்கு.

Advertisement