Advertisement

“உன் பொண்டாட்டி  பின்னாடி போறேன்னு சொன்னா.,  உனக்கு கோவம் வருது., டாக்டர் தொழில் எவ்வளவு முக்கியமானது னு தெரியாதா.., இவ்வளவு நாள் இப்படியா இருந்த., இப்ப தானே இப்படி இருக்க..,  உன் பொண்டாட்டிய சொன்னா உனக்கு எவ்ளோ கோவம் வருது..,  ஏன் அப்படி மயக்கி வைத்திருக்காளோ” என்று மறுபடியும் பேசினார்.

“அம்மா தயவு செய்து அவளை பத்தி பேசாதீங்க., இதுக்கும் அவளுக்கும் எந்த சமந்தமும் கிடையாது., என்றான். அடக்கப்பட்ட கோபத்தோடு..,

மற்றவர்களும் தேவையில்லாம ஆஸ்பத்திரியில் வைத்து பேச வேண்டாம் என்று சொல்லி தான் அவர்கள் அனைவரையும் இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.,

இதைக் கேட்டவுடன் சாருவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது., அவர்களிடம் வேலை பார்ப்பவர்களின் முன்னிலையில் அதுவும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அல்லது மற்றவர்கள் முன்னிலையில்  இத்தனை முறை அப்படி பேசியிருக்க வேண்டாம்.,

மனைவியின் பின்னால் அலைபவன் என்று சொல்வதை  இப்போது வரை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.., ஆனால் அதை சொல்வது வீடாக இருந்தால் ஆம் என்று சொல்பவர்களும் உண்டு..,

வெளியிடங்களில் வேலை பார்க்கும் இடங்களில் சொல்வதை எந்த ஆணும் ஏற்றுக்கொள்வதில்லை..,

இப்பொழுது மித்ரனின் மனநிலை என்று என்ன என்று தெரியாமல் பார்த்துக் கொண்டே நின்றாள்.,

அங்கு மறுபடியும் இதே பேச்சு வர மித்ரன் கோபப்பட்டான். மித்ரன் அம்மாவோ சாருவே   கைகாட்டி “எல்லாத்துக்கும் காரணம் இவ  தான்.., இவ என்னைக் இந்த வீட்டுக்குள்ள வந்தாலோ., அன்னைக்கே என் பிள்ளை மாறிவிட்டான்” என்று சொன்னார்.,

அத்தனை பேருக்கும் அதிர்ச்சி “எதுக்கு இப்ப தேவையில்லாமல் சாருவைப்  பத்தி பேசுற”என்று சொல்லி மித்திரனின் அப்பா கேட்டார்.

“எல்லாம் இவளால் வந்தது.,  என் பிள்ளை அவன் பீல்டு ல பெரிய ஆளாகனும் னு பார்த்தா., இப்ப என் பிள்ளை பெயர் கெட்டு போயிடும் போல., எல்லாம் இவளால எல்லாம் கெட்டு போயிடும் போல” என்று சொன்னார்.,

முதல் முதலாக சாருவுக்கு அதிர்ச்சியாக இருந்தது., அதற்கிடையில் சாருவின் வீட்டினர் வந்து இறங்க மித்ரனின் அப்பா தான் “என்ன ஆச்சு” என்று சாருவின் பெற்றோர்களை பார்த்து கேட்டு விட்டு..,  “வாங்க” என்று வரவேற்றார்.,

சாருவின் அப்பா அம்மாவையும் மித்ரனின் அம்மா தான் போன் செய்து அழைத்திருந்தார்.,

அவர்கள் உள்ளே வந்தவுடன் மித்ரனின் அம்மா.., “எல்லாம் உங்க பொண்ணால வந்துச்சு.,  உங்க பொண்ணுக்கு மெடிகல் பீல்டு பிடிக்காதுன்னு தெரிஞ்சும்., நீங்க எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சி கல்யாணம் பண்ணி வச்சீங்க..,  இப்ப பாருங்க என் பையன ஒழுங்கா வேலை கூட பாக்க கூட மாட்டீங்கா..,  இவ்வளவு நாள் ஹாஸ்பிட்டலில் எந்த பிரச்சனையும் வந்தது இல்ல.., இவன் வேற மாதிரி பொய் சொல்றான்”., என்று சொல்ல சாருவிற்க்கு புரிந்து போனது.,

இவங்க ஏதோ பிரச்சினை பண்ணப் பார்க்குறாங்க., அப்படின்னு மனசுக்குள்ள நினைத்தவளால்.,  வெளியே சொல்ல முடியாதே..,  என்று நினைத்துக் கொண்டாள்.,

அதே நேரம் மித்ரனின் அக்கா அதையே  நினைத்தபடி “அம்மா தேவையில்லாமல் பேசாதீர்கள்”.,

“அந்த பேஷன்ட்டு க்கு ஹாஸ்பிட்டல் செலவுல எல்லாத்தையும் பார்க்க சொல்லியாச்சு.., எதுக்கு தேவை இல்லாம சாருவை இழுக்குறிங்க.., சாரு எப்பவும் வீட்ல தான் இருக்கிறா.,  வீட்டை விட்டு வெளியே போய் என்னைக்கு பார்த்தீங்க”.,  என்று சாருக்காக.,பேசினாள்.

“ஏன் உன்னையும் மயக்கி வைச்சுட்டாளே., எப்படி ங்க பொண்ணு இப்படி எல்லாத்தையும் பண்ணி வைக்கிறா”.,   என்று ஒரு மாதிரி பேசினார்.

முதன் முதலாக சாரு அம்மா என்ன ஏது என்று கேட்காமல் சாருவை பிடித்து அத்தனை பேர் முன்னிலையில் சத்தம் போடத் தொடங்கினார்.,

உன்னைத்  திரும்பத் திரும்பக் கேட்டுட்டு தானே கல்யாணம் பண்ணி வச்சோம்.,  பஸ்டே மெடிக்கல் பீல்டு  பண்ண மாட்டேனு  சொல்ல வேண்டியது தானே., அதை விட்டுட்டு   சரி சரின்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு., இப்போ இங்க வந்து அவங்களை வேலை பார்க்க விடாம பண்றியா.,  அவங்க என்ன ஸ்பெஷல் னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணின.,   அவங்க பீல்டுல அவங்க முன்னுக்கு வர வேண்டாமா.., இது போட்டியான உலகம்..,  அவங்கவங்க முன்னுக்கு வரணும் னு தான் எல்லாரும் நினைப்பாங்க.,  உன்ன மாதிரி ஒரு பிள்ளை பெற்றதுக்கு., நான் இப்ப ரொம்ப வருத்தப்படுறேன்.., உன்ன அப்பவே மண்டையில் தட்டி கொண்டு போய் மெடிக்கல் காலேஜ்ல விட்டிருந்தா., இப்ப நீ ஒழுங்கா இருப்ப.., நீ ஆசை படுற னு உன் இஷ்டம் னு விட்டது தான் தப்பா போச்சு”., என்றார்.

முதல் முதலாக அவள் அம்மா மீதும் கோபம் வந்தது. “அம்மா என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதீங்க..,  அவங்க தான் சொல்றாங்கன்னா நீங்களும் யோசிக்காமல் பேசாதீங்க., மி த்து சொன்னாங்களா உங்ககிட்ட..,  என் வைஃப் என்ன வேலைக்கு போக விட மாட்டீக்கா னு சொன்னாங்களா..,  இல்ல சீக்கிரம் வாங்க ன்னு சொன்னேன் என்னைக்காவது சொல்லி இருக்காங்களா..,  இல்ல இல்ல..,
அவங்க சொன்னா நீங்க நம்புங்க சரியா.,  மத்தவங்க சொல்றது எல்லாம் நீங்க நம்பாதீங்க..,  என் மேல தப்பு இருக்கு னா.,  நான்  தப்புன்னு ஒத்துக்க அடம் புடிக்க மாட்டேன்.,  தயவு செய்து தெரிஞ்சா பேசுங்க”.,  என்றாள்.,

அப்பாவும் தம்பியும் எதுவும் பேசாமல் அவளையே பார்த்து இருந்தார்கள். அப்பாவும் கோபமாக இருப்பது புரிந்தது.,  தம்பியும் கோபமாக இருப்பது புரிந்தது.,

அதற்குள் மித்ரனின் அம்மா சாருவின் அம்மாவிடம் “இங்க பாருங்க என் பையன் இந்த பீல்டுல பெரிய டாக்டர் ஆ வரணும்னு நான் ஆசைப்படறேன்., உங்க பொண்ணு பக்கத்திலேயே இருந்தானா., என் பையனை லைஃப்ல முன்னேறவே விட மாட்டா.., இவங்க ட்ட இருப்பது வெறும் ஈர்ப்பு தான்.. கொஞ்ச நாளில் பிரச்சனை தான் வரும்., அப்ப வருத்த படுவதை விட இப்போ நீங்க தான் இப்ப முடிவு பண்ணனும்., நான் என்ன பண்ணனும்.,  நீங்க என்ன பண்ணனும்”., என்று  சொன்னவுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி..,

‘அய்யோ மித்ரன் வாழ்க்கை ல மறுபடியும் இவங்க பிரச்சனை ஆரம்பிக்காங்க… வார்த்தை கூட மாறாமல் அதே வார்த்தை., மறுபடியும் ஒரு பிரிவை மித்ரன் தாங்குவானா”.,   என்று பார்த்து இருந்தனர்.

மித்ரனின் அப்பா “ஏய் என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா.., நீ பார்த்தியா சாரு சொல்லி கொடுத்தா னு.,   இல்ல ல., நீ  சீன் கிரியேட் பண்ணாத வாயை மூடு”., என்று சொன்னார்.,

“நீங்க பேசாதீங்க., இது என் பையனோட லைஃப்.., அவன் பீல்டு ல முன்னுக்கு வரணும்னு நினைக்கிறேன்”.,  என்று சொல்ல மித்ரன் அமைதியாக இருந்தான்.,

கண்கலங்கி தலைகுனிந்து இருந்தவன் நிமிரவே இல்லை.,  அவனது மனது முழுவதும் ஹாஸ்பிட்டலில் வைத்து அம்மா பேசியதிலிருந்தது., அங்கு காத்திருந்த பேஷன்ட் மட்டுமல்லாமல் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி பேசியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

அவன் மனம் பல வருடங்களுக்கு முன் தான் சந்திந்த இதே போன்ற ஒரு நிகழ்வை நினைக்கவும்… மேலும் கண்  கலங்கியது.,

இங்க பாருங்க என்று சொல்லி சாருவின் அம்மாவிடம் பேச தொடங்கினார் மித்ரனின் அம்மா.,

நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்கோங்க.,  இப்போ அவன் பீல்டு ல அவன்  பிரச்சினையில் இருக்கும் போது., இந்த பிரச்சினையை சரி பண்ணனும்., அது மட்டும் இல்லாமல் அவனுக்கு இன்னொரு கோர்ஸ் படிக்க  இடம் கிடைச்சிருக்கு”  ஒரு ஆறு மாச கோர்ஸ்., டிரைனிங் இரண்டு மாசம்., அதையும் முடிச்சிட்டு வரட்டும்.,  லண்டனில் தான் கோர்ஸ் பண்ணனும்..,   முடிச்சிட்டு வரட்டும்., இன்னும் கொஞ்சம் அவன் ஸ்டாண்டர்ட் ஆகட்டும்., குறைந்தது ஒரு வருஷத்திற்கு இரண்டு பேரும் பிரிஞ்சி இருக்கட்டும்”., என்றார்.

ஆள்ஆளுக்கு அங்கு பேசத் தொடங்க., சமந்தப்பட்ட இருவரும் வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை.,

மறுபடியும் மித்ரன் அம்மாவே.,  அது வரைக்கும் உங்க பொண்ண பழையபடி போய் பெங்களூரிலேயே இருக்க சொல்லுங்க.., இவன் அதுக்குள்ள இந்த படிப்பு.,  அவனோட பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வரட்டும்.,  அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்.,

அதுக்கப்புறமும் உங்க பொண்ணுக்கும்.,  என் பையனுக்கும் அவங்க இரண்டு பேரும் எப்படி லைப்  இருக்கணும் னு நினைக்குறாங்களோ அது படி இருக்கட்டும்.,   அதுக்கு அப்புறம் யோசிக்கலாம்., ஆனால் நான் சொல்றேன் என் பையன் கண்டிப்பா நான் சொல்றது தான் கேட்பான்.,   நான் என் பிள்ளைய அப்படித்தான் வளர்ந்திருக்கேன்.., மெடிக்கல் பீல்டு  குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும்  தெய்வமாக மதிக்க தொழில்..,  இந்த தொழில விட வேற எதுவும் முக்கியம் கிடையாது.,  நீங்களும் டாக்டர் ஃபேமிலி தான் உங்களுக்கு தெரியாதது இல்லை” என்றார்.,

Advertisement