Advertisement

“இன்று ஒரு மேஜர் ஆபரேஷன்.,   கொஞ்சம் வயசானவர் வேற”., என்றான்.

” அதெல்லாம் ஒன்னும் இல்ல.., கண்டிப்பா நீங்க சக்ஸஸ்ஸா முடிப்பீங்க.,   நம்பிக்கையோடு போங்க”., என்று சொல்லி அவன் கழுத்தில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுத்து நெற்றியில் முத்தம் வைத்து., அனுப்பி வைத்தாள்.., அவனும் அதை மகிழ்ச்சியாக உணர்ந்தான்…

மாலை நேரம் மித்ரனின் அக்கா பிள்ளைகளோடு நேரம் கழிக்க தொடங்கியிருந்தாள்., முடிந்த அளவு பிள்ளைகளோடு விளையாடுவது.,  பிள்ளைகளுக்கு எதில் ஈடுபாடு அதிகம் என்று கேட்டு அதில் ஈடுபட வைப்பது என்று பிள்ளைகளை மாற்றிக் கொண்டிருந்தாள்..,

ஏனெனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிள்ளைகளின் பழக்க வழக்கம் எப்படி இருந்தது என்பதை கண்டவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.,  ஹோம் டியூஷன் வந்து  பாடம் முடித்து விட்டு செல்லும் வரை படிக்கும் அறையில் இருக்கும் பிள்ளைகள்.., அவர்கள் சென்ற உடனே அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு டிவியின் முன்ன அமருவார்கள்.., அதன் பிறகு இரவு தூங்கப் போகும் வரை டிவி தான்.., அது போலவே காலையில் பெற்றவர்கள் முதலிலே கிளம்பி விட பள்ளிக்கு கிளம்பி தயாராகி வந்து டிவி முன் அமருபவர்கள் பள்ளிக்கு பஸ்  வரும் வரை டிவியில் தான் இருப்பார்கள்.,

இதை பார்த்த அவளுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.., அதன் பிறகு பிள்ளைகளிடம் பேச்சுக் கொடுக்க..,  அவர்களும் உற்சாகமாக பேச., இவளும் பிள்ளைகளிடம் நன்கு பேசத் தொடங்கினாள்.,  அதன் பிறகு அவர்களுக்கு எதில் ஈடுபாடு ஜாஸ்தி என்பதை அவர்களிடமே விசாரிக்க தொடங்கியிருந்தாள்.,

ஒருவனுக்கு வரைவது மிகப்பிடிக்கும்.,  மற்றொருவனுக்கோ சிறுசிறு பொருட்களை வைத்து மட்டுமில்லாமல்  எந்த பொருள் கிடைத்தாலும்.., அதை வைத்து அதை அழகான கிராப்ட்டாகவோ இல்லை.,   அவனுக்கு பிடித்த பொருளை உருவாக்குவது அவனுக்கு பிடித்த விஷயம்..,

எனவே அவர்களுக்கு அதற்கு தகுந்தார் போல வீடியோக்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து தேவையான பொருளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொடுத்திருந்தாள்.,  அதன் பிறகு பிள்ளைகளின் நேரம் அவளுடன் தொடங்கியது.,

அவளே  வேலையில் இருந்தால் கூட பிள்ளைகள் அவளை தேடி வந்து நிற்க தொடங்கியிருந்தனர்.., வீட்டில் இவளுக்கும் பிள்ளைகளுக்குமான  உலகம் தனியே உருவாகிக் கொண்டிருந்தது..,

அதை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்.,  வேலைக்கு செல்லும் அந்த டாக்டர்களை தவிர…

அனைவரும் அவளிடம் சாதாரணமாக பேசினாலும்.,  மித்ரனின் அம்மா மட்டும் இவளாகவே வழியே சென்று பேசினாலும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேலே பேசுவது கிடையாது..,

இதற்கிடையில் ஒரு நாள் அவர்கள் நண்பர்கள் வீட்டுக்கு இடையே வைக்கும் கெட் டூ கெதர் பங்க்ஷன் நடந்தது.., அன்று அனைவரும் மருத்துவமனையை பற்றியும் அவர்கள் தொழிலைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க இவள் அமைதியாக ஒரு ஓரம் அமர்ந்து இருந்தாள்., அப்போது பெண்கள் எல்லாம் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..,

மித்ரனின் அம்மா வேண்டுமென்றே மெடிகல் பீல்டு தவிர வேறு எதைப் பற்றியும் பேசாமல் பேசிக் கொண்டே சென்றார்.,  மற்றவர்களின் பேச்சும் அதிலேயே இருந்தது.

மருத்துவமனை மருத்துவமனை சார்ந்த மற்ற விஷயங்கள்.., அவர்களது தொழில் எப்படி முன்னேற்றுவது.., மருத்துவமனை இன்னும் எப்படி எல்லாம் முன்னேற்றப் பார்க்க வேண்டும்.., ஊழியர்களிடம் ஏதும் குறை இருக்கிறதா என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்..,

சாருவை பொறுத்தவரை அவள் இங்கு வந்த பிறகு முதல் முறையாக அவர்களின் சந்திப்பு நிகழும் போது  ஒன்றாக இருப்பதால் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..,

அமைதியாக தலையிடாமல் பார்த்துக் கொண்டாள்., ஆனால் எதுவும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.,

மித்ரனின் நண்பர்களின் பிள்ளைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க.., அதே நேரம் சிறுசிறு பொருட்களை வைத்தும்  அதற்கென வழங்கிய சில பொருட்களை வைத்து மித்ரனின் அக்காவின் பெரிய மகன் உருவாக்கியிருந்த ரோபோட்டை எடுத்து சென்று அனைவரிடமும் அவன் காட்டினான்.

மித்ரனின் அத்தான் தான் “அழகா  இருக்குடா” என்று பாராட்டினார்., அக்காவும் முதல் முறையாக தன் மகனின் திறமையை கண்டு அவளுக்கு சந்தோஷமாகவே இருந்தது..,

“ரொம்ப அழகா இருக்கு டா., எப்படா செஞ்ச”., என்ன.? எப்படி.?என்று அவள் கேள்வி கேட்டாள்.

அவனோ “அத்தை வாங்கி தந்தாங்க., அத்தை கேட்டாங்க என்ன புடிக்கும் அப்படின்னு கேட்டாங்க.,  எனக்கு இதெல்லாம் செய்ய பிடிக்கும் னு சொன்னேன்..,  டிவி ரொம்ப பார்க்கக்கூடாது சொன்னாங்க.,  அப்புறம் ஸ்கூல் பத்தி   கேட்டாங்க..,  நான் ஸ்கூல்ல கிராப்ட் செய்வது பற்றி கிளாஸ் நடக்கும் அப்படின்னு சொன்னேன்.., அப்பவும் அத்தை சொன்னாங்க.., உனக்கு அதை எல்லாம் நான் வீட்ல வீடியோஸ் எடுத்து தரேன் படிக்கிறியா.,  அப்படின்னு கேட்டாங்க., நானும் சரி சொன்னேன், அத்தை எடுத்துத் தந்தாங்க., அதுக்கப்புறம் திங்ஸ் எல்லாமே ஆர்டர் போட்டு வாங்கி கொடுத்தாங்க”.., என்று சொன்னான்.

மித்ரனின் அக்காவோ கையை பிடித்துக் கொண்டு.., “ஐயோ சாரு என் பிள்ளை இப்படி செய்வான் னு., நான் எதிர்பார்க்கவே இல்ல, என்ன அழகா செஞ்சிருக்கான்”., என்று சொல்லி  பெரியவனை பாராட்டி கொண்டிருந்ததை பார்த்து சிறியவன் ஓடிச்சென்று தான் வரைந்த ஓவியங்களையும்., அவனுக்கு என வாங்கிக் கொடுத்திருந்த சிறிய சிறிய ஓவிய புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து காட்டினான்.,

“இதெல்லாம் நான் கலர் பண்ணது தெரியுமா ம்மா”., என்று காட்ட மித்ரனின் அக்காவும்., அக்கா கணவரும் “ரொம்ப சந்தோஷம்மா சாரு.., எங்க பிள்ளைங்க ஸ்கூல் விட்டு வந்து டியூஷன்.., அப்புறம் டிவி..,  நாங்க வரதுக்குள்ள சிலநாள் தூங்கிடுவாங்க..,  கவனிக்க முடியாமல் இருக்கும்.,  இப்ப பாரு எவ்வளவு அழகாக சமத்தா அவங்கவங்க வேலைய பார்த்துக்கறாங்க..,  ரொம்ப டிவி பாக்குறது இல்லையே நான் கூட நினைச்சேன்”என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.,

சாருவோ.,   “அண்ணி ஏன் இப்படிலாம் பேசுறீங்க.., அதெல்லாம் ஒன்னும் இல்ல.,   எனக்கும் குழந்தைங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண மாதிரி இருக்கும்., நாங்க மூணு பேரு தானே வீட்டில் இருக்கிறோம்..,  எங்களுக்கு புடிச்ச மாதிரி டைம் ஸ்பென்ட் பண்ணிக்கிறோம்”.., என்று சொன்னாள்.

குழந்தைகள் அவளை பழையபடி “அத்தை வாங்க.., நம்ம நேற்று பாதியில் விட்டது இருக்கு.., இவங்க எல்லாம் பேசிட்டு தானே இருக்காங்க.., இந்த குட்டீஸ் எல்லாம் வரமாட்டாங்க வாங்க”.,  என்றனர்.

இரண்டு வயது 21/2 வயதில் இருந்த மித்ரனின் நண்பர்களின் பிள்ளைகளை பார்த்து சொல்லி விட்டு அவளை இழுத்துக் கொண்டு அவர்களுக்கு என ஒதுக்கி இருந்த அறைக்குள் சென்றனர்.

இதெல்லாம்  சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய எதுவும் சொல்லவில்லை…

அனைவரும் மித்ரனிடம் “டேய் நாங்க எல்லாம் பாராட்டிட்டு இருக்கோம்., நீ வாயை திறக்காமல் இருக்க”..,  என்று நண்பர்களும் அவன் அக்கா., அத்தானும்., நண்பர்களின் மனைவிகளும் கேட்டனர்.

அவனோ “எனக்கு ஏற்கனவே தெரியும்.,  சாரு எல்லாம் சொல்லிட்டா., அவ எதையும் சொல்லாமல் இருக்க மாட்டா”..,  என்று தங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது.,  என்பதை ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்திருந்தான்..

அதுவரை மருத்துவமனை பற்றி பேச்சு இருந்தாலும்..,  அப்போது பிள்ளைகளைப் பற்றி பேச்சு வர.,  ‘குழந்தைகளை பாராட்டவும்.., அதோடு சேர்த்து சாருவையும் பாராட்டியதோடு.,  எல்லாரும் நல்லபடியா பிள்ளைகளை பார்த்து நடத்துறா’.,  என்று சொல்லி  பேசிக்கொண்டிருந்தனர்.,

மித்திரனின் அம்மாவின் முகம் சற்றே மாறியது.,  குழந்தைகளுக்காக ஏதோ வெளியில் எடுக்க வந்த சாருவின் கவனத்தில் அவரின் முகம் மாற்றம் பட்டது..,  ‘மற்றவர்களெல்லாம் சிரித்துக் கொண்டிருக்க இவரின் முகம் மட்டும் ஏன் இப்படி மாறி இருக்கிறது’., என்று தோன்றும் போதே அவள் அறியாமல் அவள் மனதிற்குள் ஒரு படபடப்பு.., வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு வந்தது….

‘எப்போதும் அவர்கள் பார்ப்பது உதாசீன பார்வை தானே.., ஆனால் இன்று இந்த பார்வைக்கு அர்த்தம் என்ன..,  ஏன் மனதிற்குள் இத்தனை  படபடப்பு என்று நினைக்கும் போதே..,  அவள் அறியாமல் மனதில் ஒரு பயம் கவ்வியது’.

பரமபதத்தில் எத்தனைபேர் ஆடினாலும் பகடையின் முடிவு தான் ஆட்டத்தின் காய்களை நகர்த்தி செல்கிறது.,  சில நேரங்களில் சில மனிதர்கள்  பகடையாக மாறி எல்லோர் வாழ்க்கையையும் சேர்த்து உருட்ட தொடங்குகிறார்கள்“.

Advertisement