Advertisement

அவர்கள் குறிப்பிட்ட நாளில் கோவாவிற்க்கு செல்ல கிளம்பினர்.,

அப்போது அவன் அக்கா தான் “அஞ்சு நாள் நல்ல டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்கடா.., அப்புறம் வந்தா மிஷின் மாதிரி இருக்கும்..,  ஓட வேண்டியது வரும்.,  அதனால ஹாப்பியா  என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்று சொன்னாள்.

அக்காவும் அக்காவின் கணவரும் அவர்களை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு வந்தனர்….

திருமணம் முடிந்து 12  நாட்கள் கடந்து இருந்த நிலையில் கோவா வந்த பிறகு அவர்களுக்கான அன்னியோன்னியம் கூடியது போல உணர்ந்தனர்.,

ஒருவரின் பார்வையில் ஒருவர் அவர்களைப் பற்றி என்ன யோசிக்கிறார்கள்., என்று ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்திருந்தனர்..

ஒருவருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்த பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து கொள்ளலாம்.., என்று சாருவின் மூலம் தெரிந்து கொண்டான் மித்ரன்.,

ஏனெனில் அவன் பார்வையின் பொருள் புரிந்து  அவள் நடந்து கொள்ளும் விதம் அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.,  ‘இதுக்காகத்தான் இத்தனை வருஷம் கல்யாணம் வேண்டாம் தோணுச்சு போல.,  இப்படி ஒருத்தியை கல்யாணம் பண்ணனும் னு  இவளுக்காக தான் வெயிட் பண்ணினேனோ.,  என்னவோ’.., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..

அப்போதும் தன் துறையில் எத்தனை போட்டிகள் இருக்கிறது என்பதை இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது சொல்லிக் கொண்டிருப்பான்..,

அவளது வேலைகளைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்வான்., புரிகிறதோ இல்லையோ அவள் சொல்வதை அறிந்து கொள்ள முயற்சி செய்வான்.,  அவளுடைய பிராஜெக்ட் எப்படி இருக்கும்., எதற்காக செய்து கொடுப்பார்கள்., எப்படிப்பட்ட பிராஜெக்ட் எல்லாம்கம்பெனிக்கு வரும் என்பதைப் பற்றி தெளிவாக சொல்வாள்.,  சில விஷயங்கள் புரியும் சில விஷயங்கள் புரிய விட்டால் மீண்டும் கேட்டு தெரிந்து கொள்வான்…

தங்களுக்கான எதிர்காலத்தைப் பற்றி பலமுறை இருவரும் பேசிக் கொண்டனர்..,  அப்படித்தான் ஒருநாள் அவனது கையணைவில் வைத்துக்கொண்டு “சாரு சாரு” என்றான்.

அவன் தோளில் சாய்ந்து இருந்தவள் மெதுவாக “சொல்லுங்க” என்றாள்.

“சரி நான் உன்கிட்ட ஒண்ணு சொன்னேனே ஞாபகம் இருக்கா” என்று கேட்டான்.

“என்னது., நிறைய சொன்னீங்க கரெக்டா என்னன்னு சொல்லுங்க “என்று கேட்டாள்.

“பஸ்ட் வெட்டிங் டே க்கு., பேபி வேண்டும் சொன்னேன்ல” என்றான்.

“ஆமா சொன்னிங்க.., அதுக்கு என்ன இப்போ” என்றாள் அவனை பார்த்து சிரித்த படி.,

அவனும் “பேர் செலக்ட் பண்ணி விடுவோமா பேபிக்கு”.,  என்றான்.

இவளோ அவனை நிமிர்ந்து பார்த்து “கல்யாணம் முடிந்து பதினைந்தாவது நாள்.,  குழந்தைக்கு பெயர் தேடுபவர்கள் நாமாகத்தான் இருப்போம்”., என்று சொன்னாள்.,

அவன் சிரித்துக் கொண்டே “சும்மா  நம்ம செலக்ட் பண்ணலாமே” என்றான்.

இவளும் “சரி சொல்லுங்க.. எந்த மாதிரி பேர் வைக்கனும்”., என்று கேட்டாள்.,

“உனக்கு எதுவும் தோணலையா., என்று கேட்டான்.,

” நீங்க தான் முடிவு பண்ணனும்.,  உங்களுக்கு எந்த பேர் பிடித்திருக்கோ.,  அந்த பெயர் தான் வைக்கணும்”., என்று இவளும் சிரித்த படி அவனிடம் சொன்னாள்.

அவனும் “பொண்ணு பிறந்தா என் பெயர்  ஆரம்பிக்கிற எழுத்தில் வைக்கணும்., பையன் பிறந்தால் உன் பேர் ஆரம்பிக்கும் எழுத்தில் வைக்கணும்” என்று சொன்னான்.

இவளும் சரி என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.,  அத்தோடு இவள் தான் “பொண்ணு பிறந்தா மிருதுளா சரியா” என்றாள்.,

அவனும், “ஓகே பையன் பிறந்தா சந்துரு” என்றான்.

இருவரும் பேசி முடிவு செய்து கொண்டனர்., ஏதோ நாளையே அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போவது போல  இருவரும் பெயர் வைக்க தேர்ந்தெடுப்பது போலவும் பேசிக்கொண்டிருந்தனர்.,

அவனோ தேர்தெடுத்த  பெயரை திரும்ப திரும்ப சொல்லி பார்த்துக்கொள்ள இவளுக்கு தான் தோன்றியது., இப்போது திருமணமாகி இத்தனை நாள்களில் கேட்காத ஒன்றை கடவுளிடம் கேட்டாள். “கடவுளே கண்டிப்பா பேபி கொடுத்துரு..,  இவரு ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காரு.,  அவரை ஏமாற்றக்கூடாது.., கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் சொன்ன விஷயம் இது ஒன்று தான்..,  ஃபர்ஸ்ட் வெட்டிங் டே க்கு பேபி இருக்கணும்னு.., அவரது நண்பர்களின் பிள்ளைகளெல்லாம் ஓடி விளையாடிக் கொண்டிருக்க.,  ஏன் திருமணம் செய்யாமல் போனோம்., குழந்தை சீக்கிரம் வேண்டும் என்ற நினைப்பா.., ஏதோ ஒன்று அவனை தாக்கி இருக்கக்கூடும்.., அதுதான் அவன் மனம் இப்படி எதிர்ப்பார்க்கிறது., என்பதை புரிந்துகொண்டவளாக யோசித்துக் கொண்டிருந்தாள்.., அதை அவனிடம் கேட்கவும் செய்தாள்.,

“ஏன் உங்களுக்கு இப்படி ஒரு தாட் வந்தது.,  கண்டிப்பா உடனே குழந்தை வேணும் ன்னு”..,   என்று கேட்டாள்.,

“இல்லை சாரு., ஆக்சுவலா எனக்கு கல்யாணத்துல பெரிய ஈடுபாடு இல்லை..,  நான் எடுத்த மேஜர் ல., என்னோட பீல்டு  ல நான் கொஞ்சம் ஸ்டாண்ட் ஆகணும்..,  அப்படின்னு யோசிச்சு கல்யாணத்தை தள்ளிப் போட்டேன்., பிரண்ட்ஸ் கல்யாணம் முடியும் போதெல்லாம் மேரேஜ் தள்ளிப் போடுங்க னு சொன்னது நான் தான்..,  அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு நினைக்கும் போது எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கனும் சொல்லும் போதும்.,  ஏனோ பெரிசா ஈடுபாடு வரலை..,  சிக்ஸ் மந்த்ஸ் முன்னாடி மறுபடியும் கேட்கும் போது தான் சரி பாருங்க ன்னு., சொன்னேன்.., அப்பவும் என் மைண்ட்ல ஏதோ ஒரு பயம் இருந்துச்சி எப்படின்னா..,  ஹாஸ்பிடல்ல ஒரு தடவை  நான் கேட்டது.., யாருக்கும் தெரியாது.., ஸ்டாப்ஸ் நான்  கிராஸ் பண்ணி போகும் போது பேசிட்டு இருந்தது.., ஏன் இந்த டாக்டர் க்கு கல்யாணம் ஆகலைன்னு..,  அவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே.., என்று சொல்லும் போது ஒரு ஸ்டாப் வந்து ஈஸியா சொல்லிட்டாங்க.., அவருக்கு ஏதாவது ப்ராப்ளமா இருக்குமா இருக்கும் ன்னு., அதனால தான் கல்யாணம் ஆகல போல அப்படின்னு சொல்லிட்டாங்க.., அதுக்கு இன்னொரு ஸ்டாப் சொல்றாங்க.,  அதான் மெடிக்கல் பில்டு எவ்வளவு விஷயங்கள் இருக்கு.., டெஸ்ட் டியூப் பேபி…, தத்து எடுக்கறது.., அப்படின்னு நிறைய நிறைய பிரக்னன்சி மெத்தட் பத்தி பேசிட்டு இருந்தாங்க..,  அப்போ முடிவு பண்ணினேன்.,  கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும் அப்டின்னு.., என்ன நான் பீல்டு ல முன்னுக்கு வரணும்னு நினைச்சு கல்யாணம் பண்ணாமல் இருக்க.., என்னமோ என்று பெரிய குறை இருக்கிற மாதிரி அவங்க பேசத் தொடங்கிட்டாங்க., அதுக்காக நான்   அவங்கிட்ட போய் பைட் பண்ணவும் முடியாது..,  அவங்ககிட்ட போய்  சொல்லி.., நான் இப்படித்தான் அப்படின்னு நிரூபிக்கவும் அவசியமில்லை.., ஒதுங்கி விடலாம்..,  ஆனால் எனக்கு பின்னாடி இதே மாதிரி தான் பேசுவாங்க எல்லாரும்.,  அப்படிங்கிற தோனுச்சி., அது தான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவுக்கே வந்தேன்”.., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

முதல் முதலாக அவனது மனநிலையை நன்கு புரிந்து கொண்டவளாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…..

ஹனிமூன் முடித்துக்கொண்டு இருவரும் சென்னை வந்த பிறகு நாள்கள் பழையபடி வேகமாக ஓடத் தொடங்கியது..,

காலை மருத்துவமனை சென்றால் இரவு எப்படியும் வருவதற்கு பத்து மணியைத் தாண்டிவிடும்., ஏதாவது ஆப்பரேஷன் மாலை நேரத்தில் இருந்தால் கண்டிப்பாக அன்று இரவு 11 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவான்., அப்போது மட்டும் அவனே அவளுக்கு அழைத்துச் செல்வான்.,  “எனக்காக வெயிட் பண்ணாத சாப்பிடு.,  நாங்க கேண்டீன்ல சாப்பிடுவேன்” என்று சொல்வான்.,

ஆபரேஷன் இருக்கும் நாட்களில் மதிய நேரம் சற்று ஓய்வெடுக்க வீட்டிற்கு வருவான்.., காலையில் அதிகமான கேஸை பார்க்காமல்.., முடிந்த அளவு மதியம் வந்து ஒரு மணி நேரம் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு அதன் பிறகு மாலை நேர ஆபரேஷனுக்கு செல்வான்.,

அன்றும் அப்படித்தான் வந்திருந்தவன்., வேலையில் இருந்தவளை “ரொம்ப வேலை இருக்கா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.,

“என்னம்மா சொல்லுங்க”  என்று கேட்டான்.

“அவனோ கொஞ்ச நேரம் ரூம்க்கு உன்னோட வேலையை எடுத்துட்டு வா”., என்றான்.,

“என்ன விஷயம்., திடீர் னு”., என்று கேட்டாள்.

அவனோ  “ரூம்ல வந்து ஒர்க் பண்ணு” என்று சொன்னான்.

இவளும் அவளுடைய லேப்டாப்பை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றாள் அங்கு செல்லவும்..,

“கொஞ்ச நேரம் நான் உன் மடியில் படுத்துக்க வா” என்று சொல்லி அவள் மடியில் படுத்து அவள் இடுப்பை காட்டிக் கொண்டு தூங்கியவன் நன்கு  தூங்கிய பிறகு.., அவன் தலையை எடுத்து தலையணையில் வைத்து விட்டு..,  அறையிலுள்ள பால்கனியில் இருந்து வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.,

அவன் எழும்பிய பிறகு அவனுக்கு தேவையான அனைத்தையும் கவனித்து அவன் ஆபரேஷனுக்கு செல்லும் போது அவனின் படபடப்பை பார்த்து விட்டு என்ன என்று கேட்டாள்.

Advertisement