Advertisement

7

கைப்பிடித்து நடக்கும் நேரங்கள் 
எல்லாம் கனவுகள் கைசேர்ந்ததாய் 
கனவு காண்கிறேன்

விரல்களை கோர்த்துக் கொள்ளும் 
இந்த நிமிடங்கள் தான் விலகாமல் 
இருக்க வேண்டும் என்று 
வரம் கேட்கிறேன்… 

உள்ளங்கைகள் உரசும் போது 
கைரேகைகள் என்ன பேசிக் 
கொண்டதோ., 
நம் விதியை பற்றியா., 
அதை அறியாமல் தான்…, 

வரம் கேட்கிறோமா.,

  நீயும் நானும்   வசந்தத்தை

மட்டும் வாழ்க்கையாக.., 

திருமணத்திற்கு பிறகான நாள்கள் மயில் இறகால் வருடியது போல இதமாகவே சென்றது.,  ஏற்கனவே அவரவர் சூழ்நிலைகளை இருவருக்கும் தெளிவுபடுத்தி இருந்ததால் நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது..,

திருமணம் முடிந்த பத்து நாட்கள் கழித்து தான் ஹனிமூன் போவதாக முடிவு செய்திருந்தான் மித்ரன்.,

எனவே அந்த பத்து நாட்களுக்குள்  திருமண நாளை தவிர்த்து மீதி இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தான்.,  அந்த சமயத்தில் சாருவின் வீட்டிற்கு சென்று வர வேண்டியது நண்பர்கள் அனைவரோடும் சேர்ந்து வெளியில் ஒரு விருந்து என அத்தோடு முடித்துக் கொண்டனர்.,

அவன் மருத்துவமனை செல்ல தொடங்கிய நாளிலிருந்து இவளும் தன்னுடைய வேலையை வீட்டிலிருந்து செய்யத் தொடங்கினாள். பகல் பொழுதில் யாரும் அதிகமாக வீட்டில் இல்லாததால் அவனுண்டு அவன் வேலையுண்டு ன்னு இருப்பாள்., வீட்டில் உள்ளவர்களோடு அவள் பழகிய விதம் வீட்டில் உள்ளவர்களை அவளோடு நெருங்க வைத்தது..,

அனைவருக்கும் அவளது பழக்கமும் அவளது பேச்சும் மிகவும் பிடித்துப்போக யாரும் இல்லாத நேரம் அவள் தனிமை உணராதபடி வீட்டில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டனர்…

அனைத்து பொறுப்புகளையும் எடுத்து பார்த்துக்கொண்ட ஆன்ட்டி சாருவிடம் “மித்ரனுக்கு ஏற்ற மனைவி நீதானம்மா.,  என்று சொன்னார்.., அது மட்டுமல்லாமல் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட  வயது வரை மட்டும் தான் நான் பார்த்துக் கொண்டேன்.,  அதாவது பள்ளி செல்லும் வயது வரை.,   பள்ளி சென்ற பிறகு டியூஷனுக்கு ஏற்பாடு செய்வார்கள்., டிரைவர்  கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வருவாங்க.., மத்தபடி வீட்ல சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கனும் அவ்வளவு தான்.., அவங்க பிள்ளைங்க கூட  ரொம்ப நேரம் செலவழித்தது கிடையாது.., அதனால பிள்ளைங்க ரெண்டுமே ரொம்ப யார் கூடயும் ஒட்டாது.., அது மாதிரியே இப்போ வரைக்கும் பார்த்தா  இந்த பிள்ளைகளும் அப்படி யே தான் இருக்கு.,  டாக்டர் மாப்பிள்ளை தான் வேணும்னு கேட்டாங்க.,  அதுவும்  வீட்டோட மாப்பிள்ளை வேணும் அப்படின்னு சொல்லி பார்த்தாங்க..,  ஹாஸ்பிடல் எல்லாம் இருக்கு அதனால வீட்டுல இருந்தா நல்லா இருக்கும் னு சொன்னாங்க..,  அந்த தம்பி ஓரளவுக்கு நல்ல குடும்பம் நல்ல குணம் அப்படி ங்க போய் வந்துருச்சு.., ஆனா இவங்க பொண்ணு அந்த ஊருக்கு ஒரு தடவை கூட அனுப்பவில்லை.., கல்யாணம் முடிஞ்ச புதுசில போயிட்டு வந்தது தான் மத்தபடி தம்பி தான் அப்பப்போ ஊருக்கு போயிட்டு வரும்.., காலைல பிளைட்டில் போவாங்க.,  நைட் வீட்டுக்கு திரும்பி வந்துரு வாங்க., இந்த இரண்டு பிள்ளைகளும் பிறந்தாங்க., நான் தான் பார்த்தேன்., அதே மாதிரி ஸ்கூல் போற வரைக்கும் தான்.,  எப்பவாது பிள்ளைகளை கூட்டிட்டு போய் காட்டிட்டு வருவாங்க..,  அல்லது அவங்க பெத்தவங்க  வந்து பார்த்துட்டு போவாங்க.., மிஷின் வாழ்க்கை தான்., அப்படித்தான்  மித்ரன் க்கும்  ஒரு பொண்ணு வரும்னு நினைச்சேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்..,

அவளும் சிரித்தபடி கேட்பாளே ஒழிய அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல மாட்டாள்., வாய்மூடி மௌனியாக வே இருப்பாள்., சித்து சொல்லி அனுப்பியது தான்.., “யாரும் வீட்ல உள்ளவங்க எதுவும்  அடுத்தவங்கள குறை சொல்லி பேசினால் கூட நீ வாயை திறக்கக் கூடாது.., திறந்து நீ எதாவது பேசினால் அதை வச்சு உன்னை மாட்டி விட்டு அவங்க நல்ல பெயர் வாங்க பார்ப்பாங்க.., அதனால எப்பவுமே எவ்வளவு தான் நல்ல பழகுறவங்களா இருந்தாலும்  சும்மா வாய் விடாதே” என்று சொன்ன அறிவுரையின் பேரில் கேட்டுக் கொண்டாள்…

மித்ரனின் அம்மாவோ மாமியார் என்ற தோரணையை காட்டினார்., அதிகம் பேசுவதில்லை..,  பொதுவாக வீட்டில் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்ற சூழலில் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை..,

காலை மித்ரன் மருத்துவமனை கிளம்பும் வரை அவனோடு சுற்றிக் கொண்டிருப்பாள்.,  காலை உணவை அவன் சாப்பிடாமல் போக விடமாட்டாள். எப்படியாவது கட்டாயப்படுத்தி அவனை சாப்பிட வைத்து அனுப்புவாள்., அத்தோடு மதிய உணவிற்கு முடிந்தால் மட்டுமே வருவான்.., இல்லையெனில் அங்கிருந்த அனைவருக்கும் சாப்பாடு போய்விடும்..,  அத்தோடு அவனும் சாப்பிட்டு கொள்வான் என்று தெரியும் மற்றபடி வேறு ஏதும் கண்டுகொள்ள மாட்டாள்.,

இரவு உணவு கண்டிப்பாக மித்ரன் சாருவும் சேர்ந்து தான் உண்பார்கள்.,  மற்றபடி அவனுடைய வேலையில் இவள் எந்த விதத்திலும் குறுக்கிடுவது கிடையாது.,  முதல்நாள் மருத்துவமனைக்குச் செல்லும்போது மித்ரன் சாருவிடம் சொன்னது தான்., அன்று காலை எழும்பும் போது சாரு என்று அவளை தன் அணைப்பில் வைத்தபடி பேசிக் கொண்டிருந்தவன்.,

“சொல்லுங்க” என்றாள்..,

நான் இன்னிலிருந்து ஹாஸ்பிடல் போயிருவேன்., அங்க போயிட்டேன்னா.,  வொர்க் ரொம்ப டைட்டா  இருக்கும்.., ஏன்னா நம்ம  கோவா போற நாளில் யாருக்கும்  அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்., அர்ஜென்ட் கேஸ் இருந்தா அதையும் சேர்த்து இப்ப பார்க்க வேண்டியது இருக்கும்.., அது தான் கொஞ்சம் டைட்டா இருக்கு.., வீட்டுக்கு வரதுக்கு லேட்டாகும்..,  இருந்துப்ப இல்ல” என்று கேட்டான்.

அவளோ “நான் என்ன சின்ன குழந்தையா.., இருந்துப்பேன்  நீங்க போயிட்டு வாங்க”.., என்று சொன்னாள்.

“சாரு தப்பா நினைக்க மாட்ட இல்ல..,  இன்னொரு விஷயம்”.,என்று சொன்னான்.

“தப்பா நினைக்க என்ன இருக்கு சொல்லுங்க” என்று கேட்டாள்.

” இல்ல ஹாஸ்பிடல் ல இருக்கும் போது பொதுவா நான் போன் அட்டென்ட் பண்ண மாட்டேன்., முக்கியமான விஷயம் இல்ல முக்கியமான நபர் அதுவும் வொர்க் பேஸ் அப்படி னா., மட்டும்தான் போன் எடுப்பேன்..,  சப்போஸ் நீ போன் பண்ணி நான் எடுக்கலைன்னா தப்பா எடுத்துக்காத..,  வேலையா இருக்கும் போது போன் அட்டென்ட் பண்ண மாட்டேன்”., என்று சொன்னாள்.

“நான் போன் பண்ண மாட்டேன் மா.,  அப்படி எதுவும் ரொம்ப இம்ஃபாட்டன் னா ஒரு மெசேஜ் போடுறேன்., அதுக்கு மேல என்ன வந்தற போகுது”.,  என்று சிரித்தபடி சொன்னாள்.

இவனும் சிரித்தபடி “ரொம்ப  இம்ஃபாட்டன் னா., கூட சொல்ல மாட்டியா” என்று கேட்டான்.,

“உங்களை தொந்தரவு பண்ணுற மாதிரி போன்னு இல்ல எந்த ஒரு விஷயமும் பண்ண மாட்டேன்.., அவ்வளவு தான்.., அதையும் மீறி பேசனும் னா.,  நைட் வந்ததுக்கு அப்புறம் உங்க காது ஜவ்வு கிழியுற அளவுக்கு  பேசி முடித்து விடுவேன்” என்று சொன்னாள்.

அவனும் சிரித்துக் கொண்டே “அப்ப சரி” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

இதோ அவனும் மருத்துவமனை செல்ல தொடங்கி 4 நாட்கள் ஆகிவிட்டது.,  இவள் அவள் சொன்ன சொல்லை காப்பாற்றுகிறாள்.,

அது போல அவன் கிளம்பும் போதெல்லாம் இவளைப் பார்த்து சிரித்தபடி “உனக்கு கோவம் வராதா” என்று கேட்டான்.

” எதுக்கு கோவப் படனும்” என்று கேட்டாள்.

“இல்ல கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுங்க.,  எல்லாம் எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போங்க னு சொல்லுவாங்க.,  சீக்கிரம் வா.,  வெளியே போலாம் ன்னு சொல்லுவாங்களே.., உனக்கு  கேட்கணும்னு தோணலையா”., என்று கேட்டான்.

“உங்க வேலைய பத்தி தெரிஞ்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..,  புரியுது., அதையும் மீறி கேட்கிற அளவுக்கு கேட்கணும் னு தோணலை., ஏன்னா எனக்கு வேலை பெண்டு கழண்டு போற அளவு இருக்கு” என்று சொன்னாள்.

அவனும் சிரித்தபடி “சரி ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத., கொஞ்சம் பகல்ல டைம் கிடைச்சா ரெஸ்ட் எடு”., என்று சொன்னபடி கிளம்பி இருந்தான்.

இப்போதெல்லாம் காலையில் சிரித்த முகமாக அவனை அனுப்பி கொண்டிருக்கிறாள்.,

அவன் அவளை அப்படி பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக இரண்டு மூன்று முறை அவளிடம் சொல்லி இருக்கிறான்.,

“காலையில் சிரிச்சிட்டே இருக்கியா.,  உன்ன பார்த்துட்டு போனா..,  ஹாஸ்பிடல்ல என்னமோ எனக்கு வேலை ஸ்பீடா ஓடுற மாதிரி ஒரு பீல்.., எல்லாம் நல்லா பேசுற மாதிரி எனக்கு ஒரு பீலிங்”., என்று சொல்லி அவளிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தான்…

Advertisement