Advertisement

  எல்லா திருமணத்திலும் உள்ள பரபரப்பு அவர்கள் திருமணத்திலும் இருந்தது., அவர்களைப் பொருத்தவரை நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்ததால்.,  ரிசப்ஷன் என்று திருமணத்திற்கு முந்தின நாள் எதுவும் வைக்கவில்லை. காலை திருமணம் முடிந்தவுடன் மாலை வரை வரவேற்பு போல் வைத்துக் கொள்ளலாம். அந்த நேரத்திற்குள் அனைத்தையும் முடித்துக் கொள்ளலாம்., என்று முடிவு செய்திருந்தனர்.

எனவே மாலை நேரம் சாருவின் வீட்டினர் வந்து மண்டபத்தில் சேர்ந்த பிறகும்., நண்பர்கள் குழுவினர் தனியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்க.., பெண்கள் எல்லோரும் சேர்ந்து சாருவின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.,  சாருவோடு  வேலை பார்ப்பவர்களும் வந்திருக்க.,  அங்கு கலகலப்பாக நேரம் சென்றது.., யாரும் எந்தக் குறையும் சொல்லாமல் அப்படியே திருமண நாளும் விடிந்தது…

காலை திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருக்க.,  மித்ரனோ போட்டோ எடுப்பவரிடம் மும்மரமாக பேசிக்கொண்டிருந்தான்.,

நண்பர்கள் தான் “டேய் என்னடா நடக்குது” என்று கேட்டனர்.

“இல்ல ஃபோட்டோ அழகா வரணும் னு சொல்லிட்டு இருக்கேன்” என்று சொல்லி நண்பர்களின் வாயை அடைத்தான்.

நண்பர்களுக்கோ “இவன் ஏதோ சொல்லி இருக்கான் நம்ம ட்ட மட்டும் சொல்ல மாட்டேங்குறான் பாத்தியா” என்று பேசிக்கொண்டார்கள்.,

பின் மணமக்களை அமர்த்தி அவர்களுக்கு செய்யும் சடங்குகள் செய்து.,   தாரைவார்த்துக் கொடுக்கும் சடங்கு முடிந்தது. அக்னி சாட்சியாய் சுற்றமும் நட்பும் சூழ அனைவரின் ஆசீர்வாதத்தோடு சாருவை தன் மனைவியாக்கிக் கொண்டான் மித்ரன்.,  மாங்கல்யம் அனுவித்த பிறகு நடக்கும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தது.,அவள் நெற்றியில் திலகமிட சொல்லும்போது அவளை தோளைச்சுற்றி  தன்னோடு சேர்த்து திலகமிடும் போதும் சரி.., சுற்றி இருந்த தோழமைகளின் செல்போன் அழகாக அந்த காட்சியை தங்களுக்குள் முழுங்கி கொண்டது.

மாலை மாற்றும் போது  மூன்று முறை மாற்ற சொன்னார்கள்., அப்பொழுது மாற்றியவன் மூன்றாவது முறை மாற்றும் போது அவளுக்கு மாலை அணிவித்து விட்டு அவள் கன்னம் பற்றியவன்., அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்..

அனைவர் முன்னிலையிலும் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்ததில்  முகம் சிவக்க தலைகுனிந்து இருந்தவளை கண்டவன்., “இப்ப நீ நிமிர்ந்து பார்க்கல னா இன்னொன்று கொடுப்பேன்” என்றான். அதே நேரத்தில் அவன் முத்தம் பதித்ததை அவசர அவசரமாக அருகில் இருந்த கேமராக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டது.., நண்பர்களின் உற்சாக கூச்சலில் அவளுக்கு மேலும் முகம் சிவக்க தொடங்கியது., அதைப் பார்த்தவன் வாய்விட்டு சிரித்தான்., “இதுக்கே  இவ்வளவு வெக்கப்படுறயே” என்று அத்தனை பேர் முன்னிலையிலும் கேட்டுவிட்டான்…

மணமேடையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிரம்பி இருக்க.., அனைவரும் மகிழ்வோடு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்., அதில் சிறிது எரிச்சலை காட்டும் அளவில் மித்ரனின் அம்மாவின் முகம் மட்டும் தான்., ஆனால் இது எதையும் கவனிக்கும் மனநிலையில் திருமண வீட்டினர் யாருமில்லை…

அதன்பிறகு வந்தவர்களும் உறவினர்களும்., நண்பர்களும் மகிழ்வோடு அவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.,

இருவரின் ஜோடிப் பொருத்தம் மிக அழகாக இருப்பதாக அனைவருமே சொல்லி சென்றனர்., அவ்வப்போது நண்பர்களின் குடும்பத்தினர் யாராவது காலையில் அவன் நெற்றியில் முத்தம் வைத்ததை சொல்லி அவளை கிண்டல் செய்துவிட்டு சென்றனர்.,

மருத்துவமனை ஊழியர்கள் காலை திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்  பார்த்தவர்கள்., மதியத்திற்கு மேல் வந்த ஊழியர்களிடம் சொல்ல.., “யாரு டாக்டரா., அதிசயம் தான்” என்று சொல்லிக் கொண்டனர்., அப்போது அனைவருக்கும் தெரிந்த ஒன்று மிகவும் இஷ்டப்பட்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறான்..,  என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லோர் மனமும்.., மனதார வாழ்த்திவிட்டு தான் சென்றது.,

மாலை வரை அனைத்து விஷயங்களும் முடிக்க., அதன்பின்பு ஒரு முறை சாருவின் வீட்டிற்கு மட்டும் அழைத்து சென்று வந்து விட்டு.., பின்பு மித்ரனின் வீட்டில் அவளை விட்டு விட்டு அனைவரும் கிளம்பினர்.,  சாருவின் தம்பி தான் சாருவை தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு கண் கலங்கியபடி நின்றான்.., நிச்சயதார்த்தத்திலும்., திருமணத்திலும்.,  ஓடி ஓடி அனைத்தும் செய்தான் என்றாலும்.,  எப்பொழுதும் தன் அக்காவை தன் சிறந்த தோழியாக பார்த்த அவனால் இன்று இன்னொரு வீட்டில் விட்டு விட்டு செல்ல தயக்கம் வந்தது.,  தன் அக்காவின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்., வரவைத்த மகிழ்ச்சியோடு அவளை அங்கு விட்டு விட்டு கிளம்பினான்..

மித்ரன் வீட்டிற்கு வந்த பிறகு அவளுக்கு எதுவும் வித்தியாசம் தெரியாத அளவில் அனைவரும் அவளை அன்போடு பார்த்துக் கொண்டனர்., வீட்டில் இருக்கும் ஆட்களை அறிமுகப்படுத்தி வைத்தனர்.,

ஏற்கனவே மித்ரன் சொல்லியிருந்த படி வீட்டில் எப்பொழுதும் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் ஆன்ட்டி., அதன்பிறகு சமையல் செய்யும் அம்மா.,  தோட்டக்காரர்., டிரைவர்., புற வேலை செய்பவர்கள்., என அனைவரையும் காட்டிக் கொடுத்து “உன்னோடு துணையாக எப்பொழுதும் வீட்டில் இருப்பவர்கள்., அதனால் பேசி பழகிக் கொள்” என்று சொல்லி விட்டு அவர்களிடமும் “இவளை பார்த்துக் கொள்வது உங்களுடைய பொறுப்பு” என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

அனைவரும் “அதெல்லாம்   நாங்க பார்த்துக்கொள்ளுவோம் தம்பி.,  நீங்க எதுக்கு யோசிக்கிறீங்க”..,  என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.., அவனுடைய அக்கா பிள்ளைகள் அவளோடு ஒட்டிக்கொள்ள.., அவளுக்கு அங்கு வந்த பிறகு நேரம் நன்றாகவே கழிந்தது..,

அதன்பிறகு நண்பர்களின் மனைவிகள் மித்ரனின் அக்கா என்று அவளுக்கு அன்றைய அவர்களுடைய தனிமை நேரத்திற்காக அவளை தயார் செய்ய..,  அவள் தான் “அதெல்லாம் எதுவும் வேண்டாம்.., நான் சாதாரணமாகவே இருக்கேன்” என்று சொன்னவளை கட்டாயப்படுத்தி புடவை மாற்ற வைத்து அவன் அறைக்கு அனுப்பி வைத்தனர்…

அதேநேரம் மித்ரன் தோட்டத்தில் நண்பர்களுடன் அமர்ந்து இருந்தான். அறைக்குள் வந்தவள் அறையில் யாருமில்லை என்பது தெரியும்.., அதனால் வந்து பார்த்து விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்., அவனுடைய அறை நன்கு பெரியதாக இருந்தது.,  பால்கனி போன்ற பெரிய இடத்தில் ஒரு புறம் ட்ரெட்மில்.,  எக்சைஸ் செய்யும் சைக்கிள் என்று இருக்க.,  மறுபுறம் டீ பாய் ஷேர் என்று இருந்தது..,  அதைப் பார்த்து விட்டு வந்து தான் உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.,

சற்று படபடப்பாக இருந்தாலும் அவளுடைய போன் கையில் இருந்ததால்..,  அதை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.., காலையிலிருந்து நண்பர்களிடம் இருந்து வந்த மெஸேஜ் க்கு பதில் மெசேஜும் செய்யாததால்., அது மட்டும் அல்லாமல் இப்பொழுது பெங்களூர் சென்று சேர்ந்த நண்பர்கள் அவளுக்கு மெசேஜ் செய்திருக்க..,  அனைவருக்கும் பதில் மெசேஜ் செய்து விட்டு அனைத்து வைத்தாள்..,

அங்கு தோட்டத்தில் நண்பர்கள் “டேய் ரூம் க்கு  போகாமல் இங்கே உட்கார்ந்து என்ன செய்ற” என்று கேட்டனர்., அவன் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.,

“டேய் ஏற்கனவே எங்ககிட்ட என்ன எல்லாம் பேசின.,  நாங்கல்லாம் உன்னை பார்த்து வாய் பிளக்குற அளவுக்கு பேசிட்டு..,  இப்போ நல்ல பிள்ளை மாதிரி அமைதியா இங்கு வந்து உட்கார்ந்து இருக்கிறாயா”..,  என்று கேட்டனர். அவர்கள் திருமணம் பேசி முடித்த புதிதில் பேசியிருந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்…

ஒருமுறை பேச்சுவாக்கில் “அவளிடம் பேசினாலே வெட்கப்படுகிறாள்”., என்பதை மித்ரன் சொல்லிவிட்டான்.

நண்பர்கள் எல்லாம் “போச்சா மெதுவாக பேசு.., சத்தமா சொல்லிராத, உங்க அம்மா இதுதான் சாக்குன்னு சொல்லிட்டு., நான் டாக்டர் பொண்ணு தான் பார்க்க சொன்னேன்.., அப்படி இப்படி ன்னு சொல்லி..,  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவாங்கடா” என்றனர்.,

அவனும் “என்கிட்ட மட்டும்  பேசட்டும் நான் வேற மாதிரி சொல்லிடுவேன்” என்றான்.,

“அப்படி என்னடா சொல்லுவ”.., என்று நண்பர்கள் கேட்டனர்.

நண்பர்களுக்கே உண்டான தனிப்பட்ட பேச்சை பேசி சிரித்துக் கொண்டனர்.

அதை சொல்லியே இப்பொழுது “சீக்கிரம் போடா “.,  என்று சொல்லி விரட்டி கொண்டிருந்தனர்…

அனைவருக்கும் மெஸேஜ் செய்துவிட்டு.., போனில் அன்று நண்பர்கள் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவளுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருக்க.., அதை எல்லாம் இப்பொழுது எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் நெற்றியில் முத்தம் வைக்கும் போது இவள் தலைகுனிந்து கண்மூடி.,  வெட்கத்தில் சிவந்த முகத்தோடு இருப்பதை அழகாக புகைப்படங்கள் உள்வாங்கியிருக்க அதை நண்பர்கள் அனுப்பியிருந்தனர்..,  அதைப்பார்த்து கொண்டிருந்தவளுக்கு  மனதிற்குள் மயக்கத்துடன் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது மித்ரன் அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டான்., அவனை கண்டவுடன் எழுந்து நின்றாள்.,

“ஏய் உட்காரு”., என்றவன்  நிதானமாக அவள் அருகில் வந்து அமர்ந்து தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்., பின்பு மெதுவாக பேசத் தொடங்கினான்., “என் மேல எதுவும் கோபமா” என்று கேட்டான்.

இவ்ளோ “எதுக்கு” என்று அவனிடம் திருப்பி கேள்வி கேட்டாள்.,

” இல்ல எல்லார் முன்னாடியும் நெத்தியில கிஸ் பண்ணிட்டேன் வெட்கப்பட்ட ஓகே.., ஆனா கோவப்பட்டு  இருப்பியோ னு எனக்கு ஒரு டவுட்டு அதுக்கு தான் கேட்டேன்”., என்றான்.

சிரித்துக்கொண்டே “இல்லை.,  ஆனா ஸையா  இருந்துச்சு.., எல்லாரும் அதை வச்சு இன்னும் கொஞ்ச நாளைக்கு கிண்டல் பண்ணுவாங்க”., என்று  சிரித்த முகமாக அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..,

“சொன்னா சொல்லிட்டு போகட்டும் அதெல்லாம் யோசிக்கவே கூடாது”.,  என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் காதுக்குள் கதை பேச தொடங்கினான்..,

அவள் அவன் பேசும் கதைகளில் அவசரமாக அவன் வாயை மூட .., அவனோ “என்ன ஆச்சு” என்று கேட்டான்.

“இல்ல ஒன்னும் இல்ல” என்று சொன்னவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள..,  அதன் பின்பு அங்கு கிடைத்த நேரங்களை அவன் தனதாக்கிக் கொள்ள தெரிந்தவனாக அவளை தனக்கானவளாக மாற்றி இருந்தான்.

அவன் மார்பில் சாய்ந்திருந்தவளை  தலையை கோதிக் கொடுத்தபடி.,  அவள் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்., அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் சிரித்தபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்..

பகடையை உருட்டும் விதி பரமபதத்தில் விருவிருப்பாக காய் நகர்த்துகிறது., சற்றே நிதானித்து மீண்டும் உருட்டி போடுகிறது பகடையை ஏணியா., பாம்பா.,

பார்த்து விடலாம்., விதியா மதியா இல்லை சதியா என்று“.

Advertisement