Advertisement

         “டேய் இவன் உண்மையிலேயே ரோபோ தானா., இல்ல சனா வ பார்த்ததுக்கு அப்புறமா மாறின சிட்டி ரோபோ வா டா”., என்று கேட்டான்.,

“டேய் நீங்க வேற சும்மா இருங்கடா.,  அவன்  காதுல விழுந்துருச்சி  நம்மள மேல இருந்து தள்ளி விட்டுட போறான்”., என்று மூவரும் அவர்களுக்குள் சந்தோஷத்தோடு பேசிக்கொண்டனர்.,

“ஆனாலும் இவன் இவ்வளவு அழுத்தமாய் இருந்திருக்க வேண்டாம்., இதை முதலிலேயே சொல்லி இருந்தான் னா., இந் நேரத்துக்குள்ள கல்யாணத்தை பேசி முடித்து இருக்கலாம்”., என்று சொல்லி பேசிக்கொண்டனர்…..

“நான் உண்டு.,  என் வேலை உண்டு அப்படின்னு தான் இருப்பேன்., மேக்ஸிமம் டைம் ஹாஸ்பிடல்ல  ஸ்பென்ட் பண்ணுவேன்., கேஸ் இருக்குறத பொருத்து டைம் ஆகும்., ஏதாவது பெரிய மேஜர் ஆபரேஷன் அப்படி னா மட்டும் தான் வீட்டில்  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சரியா ஆப்ரேஷன் டைம் க்கு போவேன்., அன்னைக்கு மத்த கேஸ் பார்க்க மாட்டேன்.,  டாக்டர்ஸ் தொழில் பற்றி உனக்கு தெரியாம இருக்காது.., உங்க வீட்லையும்  இருக்காங்க.,  சோ கொஞ்சம் டைட்டான வொர்க் தான்., முடிஞ்ச அளவு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண பார்க்கிறேன்.,  புரிஞ்சிப்ப னு நினைக்கிறேன்.., இல்ல என்னால அப்படி எல்லாம் முடியாது அப்படின்னு நினைச்சா இப்பவே சொல்லிரு”., என்றான்.

“ம்ம்ம்… முழுசா சொல்லி முடிஞ்சிருங்க”.., என்றாள்… இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி தான் பேசிக்கொண்டு இருந்தனர்.,

“ஒருவேளை நீ மேரேஜ் க்கு சம்மதிச்சா., ஒர்க் பண்றதும்.,  ஒர்க் பண்ணாம இருக்குறதும் உன் இஷ்டம் தான்.., நான் எதுவும் சொல்ல மாட்டேன்”., என்றான்.

ம்ம்ம்.. என்ற சத்தம் மட்டும் அவளிடம் இருந்து வந்தது.

வீட்ல உள்ளவங்க மீட் பண்ணிக்கிட்டா.,   காலையில் ப்ரேக்பாஸ்ட் டைமா இருக்கும்., அவசர ஒர்க் இருக்கிறவங்க பிரேக்பாஸ்ட் கூட முடிக்காமல் போயிடுவாங்க., அந்த மாதிரி சிட்டுவேஷன் ல., மேக்சிமம் டின்னர் டைம் ல தான் பார்க்க முடியும்., அப்பாவோட பிரெண்ட்ஸ் சேர்ந்து தான் இந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சது.,  நாலு பேர் சேர்ந்து மன்த்லி ஒன்ஸ் கண்டிப்பா ஒரு கெட் டூ கெதர் வச்சுப்பாங்க., அதான் எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் பார்க்கறதுக்கும்.,   பேசுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.., ஹாஸ்பிட்டல் ல பார்த்தா கூட ரொம்ப பேசமுடியாது”., என்றான் அவள் முகத்தை பார்த்த படி…,

“புரியுது.., வேலைக்கு அப்புறம் தான் எல்லாமே”… என்றாள்.

“எல்லார் வீட்டையும் பொருத்தவரைக்கும்.,  எல்லாரும் செட்டில் இப்ப கல்யாணம் பண்ணாமல் இருக்குறது நான் ஒருத்தன் தான்.,  எங்க வீட்டுல எனக்கு ஒரு அக்கா மட்டும் தான்., அக்கா வீட்டுல ஒன்னா தான்  இருக்காங்க.,  அக்கா ஹஸ்பென்ட் ம் டாக்டர் தான்.,  அவங்க நேட்டிவ் சவுத் சைடுல உள்ள ஊரில் தான் அத்தான் பேமிலி இருக்கிறாங்க.,    பக்கத்துல பக்கத்துல தான் அப்பாவோட பிரெண்ட்ஸ் வீடும்.,  இப்ப இங்கே எல்லார் பேமிலியை பொருத்தவரை க்கும்.,  நீ மட்டும் தான் வேற பீல்ட்.., சோ உனக்கு எந்த பீல் ம் வராது தானே.,  அதற்காகத்தான் நான் இது எல்லாத்தையும் சொல்றேன்”., என்றான்.

“அப்படி எல்லாம் பீல் பண்ண மாட்டேன்., என்னோட லைப் ஸ்டைல் அ பார்த்து மத்தவங்க யாரும் பீல் பண்ணாமல் இருந்தா., ஒகே தான்” என்றாள்.

“ம்ஹூம்.. நீ பீல் பண்ண மாட்ட னா., எனக்கு ஒகே தான்.,  ஹாஸ்பிடல்ல ரோபோ னு சொல்லுவாங்க அந்த அளவுக்கு என்னோட  ஒர்க் ல்ல நான் கரெக்டா இருப்பேன்.,  ஒர்க் டென்ஷன் உனக்கும் புரியும் னு நினைக்கிறேன்.,  என்னோட ஒர்க் புரிஞ்சுக்கிற வொய்ப் ஆ நீ இருப்பேன்னு நம்புறேன்., உனக்கு ஓகே தானே” என்று தயக்கமான குரலில் கேட்டான்…

தலையை ஆட்டிய படி  அவள் அவளை பற்றியும் சொன்னாள்., “எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல பட் எங்க வீட்ல யாரும் இல்ல அப்படின்னு ஒரு பீல் இருந்துட்டே இருந்துச்சு., நான் வளர்ந்தது படிச்சது எல்லாமே முக்காவாசி ஹாஸ்டல் தான்.., லீவுக்கு மட்டும் தான் வீட்டுக்கு வந்துட்டு போவேன்.,  அதனால தான் நானும் மெடிக்கல் பீல்டு வேண்டாம் அப்படி நினைத்தேன்., அதற்கான மெயின் ரீஸன்” என்றவள் சொல்லி அமைதியாகவும்

“சோ., இப்போ அங்கே அதே மாதிரி ஒரு நிலை  வருதேன்னு யோசிக்கிறயா”., என்று கேட்டான்.,  அவன் முகத்தை பார்க்கவே கஷ்டமாக தான் இருந்தது.,  ஏனெனில் முகம் சற்று நேரத்தில் வாடினர் போல தோன்றியது., அவன் கண்களில் எதிர்பார்ப்பு இருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.,

“நான் அப்படி சொல்லல., நான் உங்களுக்காக சில விஷயங்களை அஜெஸ்ட் பண்ணி போகலாம்., எங்க அம்மா அப்பா தம்பி  எல்லாரும் பிஸியா இருக்காங்க., அதுக்காக நான் யாரையும் வெறுத்தது இல்லையே., யாரையும் விட்டுட்டு இருக்கலையே.,  வெளியூர் ல என்னோட ஒர்க்.,  நான் வெளியூரில் இருக்கிறேன் அவ்வளவு தான்., இப்பவும் அலெயன்ஸ் அப்படி இப்படின்னு பேசினாங்க அது தான்.,  நான் புது பிராஜெக்ட் ல சைன் பண்ணி இருக்கேன்.,  சிக்ஸ் டூ எய்ட் மன்த் ஆகும்., இப்ப தான் டூ மன்த்ஸ் முடிஞ்சிருக்கேன்., என்னோட ஒர்க்கை விட்டுட்டு உடனே என்னால வர முடியாது.,அது மட்டும் தான்” என்றாள்.

அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன்., எங்க வீட்டுல மத்தவங்க தான் இருக்க மாட்டாங்க.,  வீட்ல எப்பவுமே ஆள்  இருப்பாங்க., வீட்டை புல்லா பார்த்துக்கிறது க்கு ஒரு ஆன்ட்டி இருப்பாங்க., அவங்க ரொம்ப நாளா இருக்காங்க… அக்கா பிள்ளைங்கள வளர்த்தது கூட அவங்க தான்., அப்புறம் சமையல் பண்றவங்க, தோட்டத்தை மெயின்டென் பண்ணுறவங்க., மற்ற வேலை செய்றவங்க எல்லாரும் எப்படியும் நாலு பேராவது இருப்பார்கள்.,  என்னால முடிஞ்ச அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ண பார்க்குறேன்.,  அதுமட்டுமில்லாம அக்கா பசங்க ரெண்டு பேரும்  ஸ்கூல் போற நேரம் தவிர வீட்டில் தான்  இருப்பாங்க., எங்கேயும் போக மாட்டாங்க., ஹோம் டியூசனுக்கு ஆள் வருவாங்க”என்று சொன்னான்.

அவன் தன்னை சமாதானப்படுத்த சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்., “பிரச்சனை இல்ல., எனக்கு ஒர்க் இருக்கும்”என்று சொன்னாள்.

“அது உன் இஷ்டம் தான்., நீ வேலை பார்ப்பதும்., பார்க்காமல் இருப்பதும்” என்று சொன்னான்.

” நான் பேசிட்டு சொல்றேன்., எனக்கு வொர்க் பிரம் ஹோம் குடுப்பாங்களா., என்னன்னு தெரியாது.,  சிலருக்கு  கொடுக்குறாங்க..,   இருக்குற வொர்க் முடிச்சிட்டு அதுக்கப்புறம் தான் நான் சென்னைக்கு வரமுடியும்” என்று சொன்னான்.,

அவனும் சிரித்தபடி “வெயிட் பண்றேன்., ஆனால்  அப்பாட்ட சொன்னவுடனே மேரேஜ் தான் ஏற்பாடு பண்ணுவாங்க” என்று சொன்னான்.

அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தபடி “நானும் கேட்கிறேன்” என்று சொன்னபடி அமைதியாக இருந்தாள்.

” வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தார்களா”., என்று அவன் கேட்டான்.

” பேச்சு எடுத்தாலே வேண்டாம்னு சொல்லிடுவேன்.,  இன்னைக்கு கூட தம்பி கட்டாயப்படுத்தி தான் வர சொன்னான்.,  அப்பா ரொம்ப தேடுறாங்க.  நான் ரெண்டு மாசமா வரல.,  அட்லீஸ்ட் மன்த்லி ஒன்ஸ் வருவேன் இந்த தடவை வரலைன்னு எல்லாருக்குமே டென்ஷன் ஆயிடுச்சு.,  சமாதானப்படுத்த கூப்பிட்டு இருக்காங்க” என்றாள்.

அவன் சிரித்தபடி “நான் இறங்கின உடனே அப்பாட்ட பேசுறேன்., நீ வீட்டுக்கு போறதுக்குள்ள எங்க அப்பா உங்க அப்பாட்ட பேசிருவாங்க சரிதானே”., என்று சொன்னான்.

ம்ம்ம்.,  என்றபடி தலையாட்டியவள் அமைதியாக இருந்தாள். அவன் லேசாக பக்கவாட்டில் திரும்பி நண்பர்களை பார்க்க அவர்கள் எதோ மூவரும் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்தவன்., “அப்பா ட்ட பேசலாம் டா”., என்றான்.

“அப்போ ஓகே வா டா” என்று நண்பர்கள் கேட்டனர்.,

இவன் சிரித்த படி  அவர்களை மட்டுமே பார்த்து இருந்தான். சற்று நேரத்தில் அவள் பக்கமாக திரும்பியவன் “ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறைய பேசியிருக்கேன்., உன்னை மிஸ் பண்ணிற கூடாது னு”., என்றவன் அவள் கையோடு கைகோர்த்து அழுத்தமாக  அவள் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்.,  அவன் கையை தொட்டவுடன் விலக்க நினைத்தவளை பார்த்த படி கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு அவள் மட்டும் கேட்கும்படி பக்கவாட்டில் சரிந்து “இன்னைக்கு பிடித்த கையை.., என்னோட கடைசி நிமிஷம் வரைக்கும் விட மாட்டேன்.,  என்னை நம்பலாம்”., என்று சொன்னான்.

அவன் தொட்டதில் நடுங்க தொடங்கிய கையை அழுத்தி ஆறுதல் கொடுத்தவனை பார்க்கும் போது கண்ணும் சேர்ந்து கலங்குவது போல தோன்றியது., கட்டுப்படுத்திய படி நிமிர்ந்து அவனை பார்க்கும் போது அவனும் அவள் கண்ணோடு கண் சேரப் பார்த்திருந்தான்…

விதியின் விளையாட்டு வெற்றிகரமாக தொடங்கியது., பரமபதத்தில் பகடையை  உருட்டி தாயம் போட முயற்சிக்கிறது வாழ்க்கை., ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு., சற்றே போராட வேண்டும். இலக்கை அடைய“…

Advertisement