Advertisement

“ஆமாம்”என்று சொல்லிக் கொண்டிருக்க., அவள் பேசுவதையும் அவர்கள் கேட்க நேரிட்டது.,   கல்யாணம் பற்றி பேசக்கூடாது என்று சொல்வதை அவர் கேட்டார்கள்.,

பின்பு அவர்களுக்குள் “பொண்ணு கல்யாணம் வேண்டாம் னு சொல்லுது டா., அந்த பொண்ணுக்கும் மனசுல எண்ணம் எதுவும் இருக்குமோ., என்றவன்., “டேய் அந்த பொண்ணை கூப்பிட்டு பேசுவோமா.., நான் கூப்பிடட்டுமா” என்று கேட்டான்.

“ச்சூப் சத்தம் போடாத.,  அவன் காதுல கேட்டுச்சி ன்னா நம்மள தொலைத்து விடுவான் இல்ல னா., பேசவே மாட்டான்”.,  என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்…

அதே நேரம் அவளும் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வர..,  “இந்த பொண்ணு இங்க தாண்டா வருது” என்று அவர்கள் ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்.,  சரியாக மித்ரன் அமர்ந்திருந்த இடத்தில் அருகில் வந்து நின்றாள்., அவளும் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவில்லை யாரோ என்று நினைத்திருக்க., அவனும் நிமிர்ந்து அவளைப் பார்க்காமல் யாரோ என்று முகம் பதித்த புத்தகத்தோடு நகர்ந்து அவளுக்கு இடம் கொடுத்தான்.

அவளும் அவனுக்கு உள்பக்கமாக சென்று அமர்ந்தாள்., அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் அமர்ந்திருக்க நண்பர்கள் மூவரும் தலையில் அடித்துக் கொண்டார்கள்.,

” டேய் என்னடா., இவன் நிமிர்ந்து கூட பார்க்காமல் நகர்ந்து இடம் கொடுக்கான்.,  தலையை தூக்கி பார்த்தா தெரிஞ்சிருக்கும்., அந்த பொண்ணு அதுக்கு மேல”., என்று சொன்னான்.,

“சத்தம் போடாத கொஞ்ச நேரம் அமைதியாய் இரு.,   அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்., எப்படியும் இறங்குவதற்குள் பேச வைக்கலாம்”.., என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.,

நண்பர்கள் மூவரும் மெதுவாக பேசுவதில்  ஏதோ பேசும் சத்தம் கேட்க.,  மித்திரன் புத்தகத்திலிருந்து தலைய நிமிர்த்தி  பக்கவாட்டு சீட்டில் அமர்ந்திருந்த நண்பர்கள் மூவரையும் திரும்பி பார்த்து “என்னடா இது.,  இப்படி பேசிட்டே இருக்கீங்க.,  எனத்தை தான் பேசுவீங்க மூணு பேரும்” என்று கேட்டான்.

“ஒன்னுமே இல்லடா” என்று மூவரும் ஒன்று போல சொல்ல.,  அவர்களை கடந்து சென்ற ஏர் ஹோஸ்டஸ் சிரித்து விட்டு செல்வதை பார்த்தவன் “தலை எழுத்து உங்க கூட மல்லுக் கட்ட வேண்டும் ன்னு”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்..

சற்று நேரத்திற்கெல்லாம் விமானம் கிளம்பி விட., தனது செல்போனை ஏரோபிளேன் மோடில் போட்டவள்., ஹெட் போனை எடுத்து காதில் வைத்து அவளுக்கு பிடித்த பாடல்களை போட்டு விட்டு  தலை சாய்ந்து கொண்டாள்., அருகிலிருந்த மற்றொரு இருக்கை ஆள் வராமல் இருந்தது.,  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்ததால் ஓடுதளத்தில் ஓடி மெது மெதுவாக மேலே ஏறும் விமானத்திலிருந்து கீழே தெரியும் பெங்களூர் நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்., அவளுக்கு பிடித்த பாடல் ஒருபுறமிருக்க., அழகான இயற்கை சூழ்ந்த பரபரப்பான நகரம் ஒருபுறம் தெரிய.., சற்று நேரத்தில் சாதாரணமாக பறக்க தொடங்க அமைதியாக அமர்ந்திருந்தவளை யாரோ அழைப்பது போல உணர்ந்தவள்.,  ஹெட்போனை காதில் இருந்து உருவிக்கொண்டே.,  திரும்பிப்பார்க்க ஏர்கோஸ்டர்ஸ் சிறிய அளவிலான தண்ணீர் பாட்டிலோடு நின்றார்.

அவள் கவனிக்காததால் அவளை தன் கையிலிருந்த புத்தகத்தை வைத்து தட்டி அழைத்திருந்தவனும் திரும்பியவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க.,  இவளும் முதலில் பாட்டிலை வாங்கியவள்  அவனை தான் பார்த்தாள்.,

ஏர்ஹோஸ்டஸ் முன் எதையும் காட்டிக் கொள்ள முடியாததால் அவரிடம் லேசாக சிரித்தபடி வாங்கிய உடனே அவர் அப்பக்கம் நகரவும்., அவள் பார்வை எல்லாம் அருகில் அமர்ந்திருந்த அவன் மேலேயே இருந்தது.,  நடுவில் ஒரு இருக்கை இருந்தாலும் இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் அளந்து கொண்டிருந்தது முதன்முதலாக நேரில் பார்த்ததால்….

நண்பர்களும் மெதுவாக “டேய் ரெண்டு பேரும் பார்த்துட்டாங்களா” என்று பேசிக்கொண்டனர்.,

பின்பு மெதுவாக நண்பர்களில் ஒருவன் எழுந்து வந்து இருவரையும் பார்த்து  மித்ரனின் தோளில் கையை வைத்து அழுத்தி “எதுவா இருந்தாலும் பேசி முடிச்சிடு., மனசுக்குள்ளே போட்டுக்காத.,  கடவுளா பாத்து ஒரு சந்தர்ப்பம் உனக்கு கொடுத்திருக்கார்.,  இவ்வளவு நேரம் நாங்க கேட்டதுக்கு இறங்கும் போது பதில் சொல்லிரு” என்றபடி அவன் இடத்தில் சென்று அமர்ந்தான்.

அதைக்கேட்டவளுக்கு எதுவும் புரியவில்லை.,  ஆனால் மித்ரன் மனதிற்குள் முடிவு செய்துகொண்டான்.,  ‘இன்று இவளிடம் பேசிவிட வேண்டும்’ என்று.,  முதலில் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தவன் கையில் இருந்த புத்தகத்தை அழுத்திப் பிடித்தபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.,

அவளும் அதை  உணர்ந்து தான் இருந்தாள்.,  போனை பார்த்தவள் பாட்டு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து அனைத்தையும் ஆப் செய்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் குனிந்த படி தன் விரல் நகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு ஜன்னல் வழியே தெரியும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்., அவள் அறியாமல் கண் கலங்க.,  மனம் படபடக்க., கை நடுங்குவது போல உணர்ந்தாள்.

பின்பு மனதை திடப்படுத்திக்கொண்டு கலங்கிய கண்ணை சரி படித்திக்கொண்டே அவனை திரும்பிப் பார்க்க.,  அவனும் அதுவரை அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்., அவள் கண் சிமிட்டி  கண்ணீர் வருவதை அடக்கியவளை கண்டு கொண்டவன்.,  கண்டிப்பாக பேசி முடிவுக்கு வர வேண்டும்., ஏன் என்னைப் பார்த்தவுடன் அவள் அறியாமல் கைகள் நடுங்க வேண்டும்., கண்களும் கலங்க வேண்டும்.,  என்ற எண்ணத்தோடு., நடுவில் இருந்த இருக்கைக்கு மாறி அமர்ந்துகொண்டான்.

அவளுக்கு அவன் அருகில் நெருக்கமாக வந்து அமர மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மித்ரன் ஒரு பெருமூச்சோடு “எனக்கு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லிரு”., என்றான்.,

அவள் அவனை புரியாமல் பார்த்துக் கொண்டே இருக்க., என்னை ஏன் வேண்டாம் னு  சொன்ன”.,  என்று கேட்டவன்.  “மெடிகல் பீல்டு  பிடிக்காட்டிலும் உங்க அம்மா,  அப்பா , தம்பி எல்லாம் டாக்டர் தானே.., அவங்களை உன்னால ஏத்துக்க முடியும் போது.,  ஏன் என்னைய ஏத்துக்க முடியல”., என்று கேட்டான்.

அவனைப் பார்த்தபடி இருந்தவள்., மெதுவாக வாயைத் திறந்து “நான் உங்களை வேண்டாம்னு சொல்லலையே” என்று சொன்னாள்.

இப்பொழுது அவளை கண் சுருக்கி பார்ப்பது அவன் முறை ஆயிற்று., “என்ன சொல்ற எனக்கு புரியல” என்று கேட்டான்…

“நீங்க கேக்குறது தான் எனக்கு புரியல”., என்று அவள் சொன்னாள்.

“என்னை யாருன்னு தெரியுதா” என்றான்.

” உங்களுக்கு என்னைய  எப்படி தெரியும்”.,  என்று இவள் பதில் கேள்வி கேட்டாள்.

“உனக்கு எப்படி என்னைய தெரியுமோ.,  அப்படித்தான் எனக்கும் உன்னை தெரியும்” என்றான்…

அதன்  பிறகு இருவரும் மெதுவான குரலில் அவரவர் வீட்டில் நடந்த சம்பவங்களையும்., வீட்டிலுள்ளவர்கள் சொன்னதை  சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கடைசியாக அவன் அவளிடம் “சரி இப்ப சொல்லு வீட்டிலுள்ளவங்க  சொல்றதெல்லாம் ரெண்டாவது தான்.,  உனக்கு என்னைய பிடிச்சிருக்கா., இல்லையா.,  இப்பவும் மெடிக்கல் பீல்டு வேண்டாம்னு சொல்லுவியா” என்று அவன் கேட்டான்., அவன் குரலில் அப்படி ஒரு அழுத்தம் இருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.,

அவன் கேட்டதற்கு பதில் சொல்வதற்காக அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பிடிச்சவங்களுக்காக  சில விஷயத்தில அட்ஜஸ்ட் பண்ணி போகலாம்” என்று சொன்னாள்., அவன் முகத்தில் லேசான புன்னகை வந்து சென்றது.,

“நம்ம பேசனும்., உனக்கு ஓகேன்னா.,  நான் எங்க அப்பாவை விட்டு உங்க வீட்டுல பேச சொல்றேன்”.,  என்றான்.

நிமிர்ந்து அவனை அழுத்தமான ஒரு பார்வையோடு பார்க்க., அவள் பார்வையை கண்டு கொண்டவன்.,  “எனக்கு புடிச்சிருக்கு நான் இன்னும் உன் போட்டோவ டெலிட் பண்ணாம தான் வச்சிருக்கேன்., நீயும் போட்டோ வைச்சிருக்க தானே”., என்று கேட்டான்., உதடு பிரியாமல் லேசான சிரிப்போடு தலையாட்டினாள்.,

இருவரும் அவர்களை பற்றி பேசிக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தனர். “இந்த டிராவல் டைம் நமக்கான நேரம்…  என்னை பற்றி எல்லாம் சொல்லுறேன்”என்றான்.

அவன் இடம் மாறி நகர்ந்து உட்காரவுமே அவன் நண்பர்கள் இவனை அப்போது திரும்பித் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்தவன் மெதுவாக நண்பர்களை திரும்பிப் பார்த்து  “பேசிட்டு சொல்றேன் டா.,  திரும்பித் திரும்பிப் பார்க்காதீங்க” என்று சொன்னவுடன் அமைதியாகி விட்டனர்.,

பின்பு இவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தான்.  அதற்குள் அங்கு நண்பர்கள் “டேய் அந்த பொண்ணு போட்டோவை பார்த்தா அன்னைக்கு சிரிச்சிட்டே நமட்ட பேசின மாதிரி இன்னைக்கு தான்டா பேசி இருக்கான்”., என்று சொல்லிக் கொண்டனர்.

Advertisement