Advertisement

  “இல்லடா பார்க்கலாம்., எனக்கு  வொர்க் முடிக்கனும்., நான் அப்படியே னாலும்., சாட்டர்டே மார்னிங்  தான் கிளம்பி வருவேன்., வந்தேன்னா., திருப்பி சன்டே  அங்கிருந்து கிளம்பனும்., அது எதுக்குடா வெட்டி அலைச்சல் வேண்டாம்., லீவு கிடைக்கும் போது வர்றேன் டா”.,  என்று சொல்லிக்கொண்டிருந்தாள்…

“ப்ளீஸ், வாயேன்..,  இந்த தடவை நான் உனக்கு பிளைட் டிக்கெட் போட்டு தாரேன்”., என்றான்.

” ஹாஸ்பிடல்ல நிறைய வருமானம் வருதா என்ன.,  ஃப்லைட் டிக்கெட் எல்லாம் போட்டு தாறேன் னு சொல்ற” என்று கேட்டாள்.

” ஹலோ பிளைட் டிக்கெட் போட முடியாத லெவலுக்கு ஒன்னும் நம்ம கஷ்டப்படலை.,  அதெல்லாம் நல்லவே டிக்கெட் போடலாம்..,  கஞ்சூஸ் சாரு நீ..,  சம்பாதிக்கிற பணம் காலியாகிடக்கூடாது னு.,  பஸ்ல வந்துட்டு போற., நீ வாங்குற சேலரி க்கு., தாராளமா வந்துட்டு போகலாம்.,  நீ சரியான கஞ்சூஸ் ஆ இருக்க”.,  என்று அவள் சிக்கனத்தை குறை சொல்ல தொடங்கியிருந்தான்.,

” போடா போடா..,  நான் சிக்கனமாக இருக்க போய் தான் நீ கேக்குறத எல்லாம் வாங்கி தரேன்., இல்லாம நீ  அது வாங்கிட்டு வர்றியா.,  இது வாங்கிட்டு வருவீயா., கேட்க தெரியுது இல்ல., அப்பப்ப இந்த மாசம்  பிரண்ட்ஸோட ஷாப்பிங் போகனும்.,  கொஞ்சம் காசு அனுப்பு அப்படின்னு சொல்ற இல்ல”.,    என்று சொன்னாள்.,

“சரி சரி தெரியாம சொல்லிட்டேன்., இப்ப   ஃபிளைட் டிக்கெட் போடுறேன்.,  வெள்ளிக்கிழமை ஈவினிங் வீட்டுக்கு  வந்து சேரு.,  சாட்டர்டே இருந்துட்டு., சண்டே  இங்கிருந்து மறுபடி பிளைட் டிக்கெட் போடலாம்., நீ சண்டே நைட்டுக்குள்ள பெங்களூர் போய் சேர்ந்திடலாம்.,  தைரியமா வந்து சேரு” என்று சொன்னான்.

“வரேன் டா., பெருசா இப்பதான் தேடுதோ எல்லாருக்கும்” என்று சொன்னாள்.

“ஏன் வந்துட்டு போயேன்”.,  என்று அவன் மறுபடியும் பேச., அவளுக்கு மே சற்று போய் வந்தால் நல்லது என்பது போல தோன்றியது.., ஏனோ மனதில் அழுத்திய பாரம் இன்று அவனோடு பேசும் போது சற்று குறைந்தது போலவே தோன்றியதால் சரிவர்றேன் என்று சொல்லிவிட்டாள்..,

ப்ளைட் ல் அவ்வப்போது போய் வருவது தான்… இன்று தம்பியை கிண்டல் செய்யவே அப்படி பேசிக்கொண்டு இருந்தாள்.

கந்தசாமியும் அவர் நண்பர்களின் மகன்களை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்., அதாவது மித்ரனின் நண்பர்களிடம்., “ஏதாவது பேசி பார்த்தீர்களா” என்று கேட்டார்.

“அப்பா., ப்ளீஸ் கல்யாணத்தை பத்தி அவன்கிட்ட பேச முடியாது.., இப்பதிக்கு வேண்டாம்., இப்ப பார்க்காதீங்க னு சொல்கிறான்., பொண்ணு அப்படின்னு பேச்சு எடுத்தாலே தயவுசெய்து பேசாதீங்க.,  தயவு செய்து வேண்டாம் சொல்றான்.,  அவனுக்கு அந்த பொண்ணு பார்த்து ரொம்ப  பிடிச்சிருச்சு பா.., எங்களுக்கு தெரியும்., அன்னைக்கு அவன் பேசின விதம்., அவன் முகத்தில் வந்த மாற்றம்., இதெல்லாம் பார்த்ததால் சொல்லுறோம் பா.,   டாக்டர் பொண்ணு தான் வேணும் னு கட்டாயமா விடுங்களேன் பா.., அவனுக்கு புடிச்சிருக்கு னா.,  கல்யாணம் பண்ணி வைத்து விடலாம்”.., என்றான்.

கந்தசாமியும் “எனக்கு அது பிரச்சனை இல்ல., அந்த பொண்ணுக்கு மெடிகல் பீல்டு பிடிக்காது னு சொல்றாங்களே.., அப்படி இருக்கும் போது நம்ம அதையும் யோசிக்கணும் இல்ல., இஷ்டம் இல்லாத பொண்ணை கட்டி வைக்க முடியாது.,  எப்படியும் டாக்டர் னு தெரிஞ்சிருக்கும்., தெரிஞ்ச பிறகு அந்த பொண்ணும் வேண்டாம்னு சொல்லி இருந்துச்சுன்னா..,  ரெண்டு மாசம் ஆகுது நம்ம பேசி.,  அதுக்கப்புறம் அந்தப் பேச்சை விட்டாச்சி.,  இதுக்குள்ள அந்த பொண்ணுக்கு வேற ஏதும் இடம் முடிஞ்சி இருந்துச்சி னா” என்று கேட்டார்.,

“அது உண்மைதான் அப்பா., அவனுக்கு தலையில் என்ன எழுதி இருக்கோ அது நடக்கும்” என்றான்.

” டாக்டர் மாதிரி பேசு டா.,  சாமியார் மாதிரி பேசாதா”., என்று பக்கத்தில் இருந்த நண்பன் அடித்தான்.

டாக்டர் மாதிரி பேசினால் மட்டும் நடந்தருமா என்ன..,  அவனுக்கு பிடிச்ச பொண்ணு வேணும் அப்படின்னா.., இந்த பொண்ண தான் கட்டி வைக்கணும்.., அந்த பொண்ணு சம்மதிக்கணும்.., இதுல எவ்ளோ பிரச்சனை இருக்கு.., நேரில் பார்க்காமல் போட்டோ காமிச்சது எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் குளறுபடி ஆன மாதிரியே தெரியுது.., ஒருவேளை நேரில் பேசி இருந்தா ரெண்டு பேருக்கும் சூட் ஆகி இருக்குமோ.,  கல்யாணம் முடிஞ்சு இருக்குமோ.,  அப்படின்னும் தோணுது..,  அதேநேரத்தில் நேரில் பேசி இருந்தா பிரச்சினை ஆகாமலே சரியாக போய் இருக்குமோ என்று யோசிக்க வைக்குது..,  என்ன பண்றதுன்னு தெரியல” என்று நண்பர்கள் மாறி மாறி புலம்பினர்.

கந்தசாமியும் “எனக்கும் என்ன பண்ணனும் தெரியல.., அவன்கிட்ட பேச கூட பயமா இருக்கு.., சில நேரங்களில் அவன் முகத்தை பார்த்தா ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி இருக்கு..,  அவங்க அம்மா பட்டுன்னு வேண்டாம்னு சொல்லிட்டா., இப்ப நம்ம போய் வேணும்னு சொன்னா.,  அம்மாவும் கோபப்படுவா.,  என்னத்த சொல்ல”.,  என்றார்.

“சரி பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது “அடுத்த வாரம் டெல்லியில் உங்க பிரண்டு கல்யாணத்துக்கு போறீங்க இல்ல..,  போயிட்டு வரும்போது அவன் கிட்ட கொஞ்சம் பேசி பாருங்கப்பா.., என்றார்.

“பேச முடியுமான்னு தெரியல., முடிஞ்சா அளவு ட்ரை பண்றோம்., வெள்ளிக்கிழமை காலைல கல்யாணத்துக்கு போறோம்.,  வெள்ளிக்கிழமை சாயந்திரம் அங்கிருந்து கிளம்பி வந்துருவோம் பார்க்கலாம்.,   அவன்கிட்ட முடிஞ்ச அளவுக்கு பேச முயற்சி பண்ணுறோம்.,  என்ன சொல்லுவானோ அப்படிங்கிறத தான் யோசிக்கிறோம்”., என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

“அம்மா ட்ட இப்பவே எதுவும் சொல்லிடாதீங்க ப்பா., என்றனர்.

“சரி தான் டா.,  கல்யாணத்துக்கு போகும் போது கூட எதுவும் கேட்காதீங்க., மூஞ்சி திருப்புவான்.,  கல்யாணத்துக்கு போயிட்டு வரும் போது நிதானம்மா கேளுங்க., என்ன முடிவு பண்ணுவதா இருந்தாலும் சொல்ல சொல்லுங்க., அவன் ஒருவேளை அந்த பொண்ணு தான் வேணும்னு சொல்லிட்டா னா.., அந்த பொண்ணோட அப்பாட்ட பேசி பார்க்கேன்”., என்றவர்,  முதல்ல விசாரிக்கச் சொல்லனும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிட்டா., இல்லை கல்யாணம் பேசிட்டாங்களா னு., விசாரிக்க ஒரு சொல்லுவோம்., என்றார்.

நண்பர்களில் ஒருவன் “அப்பா நான் சொன்னா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.,  என்றான்.

” என்ன விஷயம் டா”., என்று நண்பர்கள் கேட்டனர்.

“அந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகல பா.,  அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை  பேசி முடிக்கவும் இல்லை”., என்று சொன்னான்.

” உனக்கு எப்படிடா தெரியும்” என்று கேட்டார்.

“அப்பா அவனுக்கு அந்த அளவு பிடித்து இருக்கு.,   நீங்க பொண்ணு வீடு வேண்டாம் அப்படின்னு வீட்டில் பேசும் போது.,  நான் சும்மா அங்கு உள்ள என் பிரண்டு ஒருத்தன் கிட்ட சொல்லி வைத்திருந்தேன்.,   அவன் சொல்லித்தான் தெரியும்., அந்த பொண்ணு  பெங்களூர் ல இருந்து வந்த மாதிரி தெரியல.., அப்படின்னு சொன்னாங்க”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

” டேய் நீ எங்க கூடத்தானே டா இருக்க.,  நீ எப்படா இந்த விசாரணை எல்லாம் பண்ணின”., என்று  மற்ற இரண்டு நண்பர்களும் பிடித்து கேட்டனர்.

“அவன் முகத்தை பார்க்க கஷ்டமா இருந்துச்சு.,  அதனால தான் கேட்டேன்., வேற ஒன்னும் இல்ல., உங்ககிட்ட சொன்னா.,  நீங்க என்ன சொல்றீங்களோ னு  யோசித்தேன்., நீங்களும் இதுக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா.., பஸ்டே  நாம மூணூ பேரும் நேர்ல போய் பேசி இருக்கலாம்”.,  என்று சொன்னான்.

“சரி சரி., இப்போ இவனைப் பிடித்து விசாரிப்போம்.., ஓகே சொல்லிட்டா  அந்த பொண்ணு வீட்ல நாம பேசலாம்., என்னப்பா நீங்க என்ன சொல்றீங்க”., என்று கேட்டனர்.

எனக்கு  சந்தோஷம் தான் பா.,  எப்படினாலும் ஓகே தான்., அவன் சந்தோஷமா இருந்தால் எனக்கு அது போதும்., ஏதோ இவ்வளவு வருஷம் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் னு தள்ளிப் போடவன்., 31வயசு ஆகுது இப்பவாவது சம்மதிச்சு இருக்கானே.,  இதுவே பெரிய விஷயம்”.,என்று சொன்னார்.

மற்ற மூன்று நண்பர்களும் “நாங்களும் அதைத்தான் சொல்றோம்.,  எங்க கல்யாணத்து அப்போ., அவனுக்கு கல்யாணம் பேசும்போது வேண்டாம் வேண்டாம்னு சொன்னான். இப்ப தான் ஒரு வழியாக கல்யாணத்துக்கு சரி சொல்லி இருக்கான்., எங்க பிள்ளைங்க எல்லாம் அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு போயிடும்.,  அவன் இப்பதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சி இருக்கான். இப்ப நம்ம அவனுக்கு பிடிச்ச பொண்ண முடிக்கனும் ப்பா”… என்றனர்.

“இந்த பொண்ணை தானே முதலில் பொண்ணு னு பார்த்துருக்கு  வேற பார்க்க கூட இல்லை யே”., என்றார்.

“அவனுக்கு பிடிச்சி இருக்கு பா., எங்களுக்கு தெரியும்., அவன் சொன்னான் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளனும் னு.,  அப்ப கூட நாங்க கிண்டல் பண்ணினோம்.,  கேட்டதுக்கு ஒட்டிக்கிச்சு  அவன் சொல்லும் போது., அவன் முகத்துல அப்படி ஒரு சிரிப்பு இருந்துச்சு., நாங்க கூட கிண்டல் பண்ணுறதுகாக.,  ரோபோ மாதிரி இருப்ப.,  இப்ப சிரிக்கிறடா., நல்ல சிரிடா., அப்படின்னு சொன்னதுக்கு., சிரிச்சிட்டே இடத்தை காலி பண்ணுங்கன்னு சொன்னான்.,  நாம இவ்வளவு சொல்றோம்,  அவன் செல்லை எடுத்து பார்த்தால் தெரியும்., அந்த பொண்ணோட போட்டோ கண்டிப்பா இருக்கும்.,டெலிட் பண்ணி இருக்க மாட்டான்., எங்களுக்கு தெரிஞ்சு இப்போ செல்ல யாருக்கும் கொடுக்க மாட்டீக்கான்., முன்னாடி நாங்க அவன் செல்லில் இருந்து ஒரு கால் பண்ணனும் னு கேட்டால் தருவான்., இப்ப கேட்டா.,  உன் செல்ல பண்ண வேண்டியதுதானே., இல்ல னா.,  ஹாஸ்பிடல் நம்பரிலிருந்து பண்ணுங்க.,  னு சொல்லுறான்.,  தரவே மாட்டீக்கான்., கண்டிப்பா அந்த பொண்ணோட போட்டோ வச்சிருக்கான்..,  என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

“சரிடா  ஒன்னும் பிரச்சனை இல்ல., நீங்க டெல்லிக்கு கல்யாணத்துக்கு போயிட்டு வரும் போது அவன்கிட்ட கேளுங்க.,   அவன்  சரின்னு சொல்லிட்டா.,  அந்த பொண்ணு வீட்டுல போயி நான் பேசுறேன்.,  அதுக்கு அப்புறம் அம்மா என்ன சொன்னாலும்  பேசி எப்படியாவது சம்பாதிக்க வச்சுக்கலாம்”., என்று முடிவாக பேசி முடித்தார் கந்தசாமி..,

அவருக்கு தெரியும் அவர் மகனின் மனம் எப்படி இருக்கும் என்பதை விட., அவனின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது அவருக்கு ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.  அவனின் அமைதி மற்றும் அவன் மனதை புரிந்து கொள்ளக்கூடிய பெண் வேண்டும் என்று எதிர்பார்ப்பான்., அதுமட்டுமல்லாமல் அவன் சொல்வது போல அவனுக்கு பிடித்திருக்க வேண்டும்., இத்தனை வருடங்கள் திருமணம் வேண்டாம் என்று அவன் இப்பொழுது தான் சரி என்று இருக்கிறான்., இந்த வாய்ப்பை விடக்கூடாது என்பதில் கந்தசாமி முடிவாக இருந்தார்.,

ஏனெனில் மித்ரன் அப்படித்தான் இருந்தான்., இந்த பெண் திருமணத்திற்கு வேண்டாம் என்று நிறுத்திய பிறகு., அவன் மனம் முழுவதும் குழப்பத்தில் இருந்தது.   எப்பொழுதும் புருவங்கள் சுளித்து யோசனையோடு இருந்தான்.

அமைதியாக இருப்பவன்., மேலும் அமைதியை தத்தெடுத்தது போலவே அவனது முகம் காணப்படும்., இப்போது யாரிடமும் அதிகம் பேசமாட்டான்.,  இப்பொழுதெல்லாம் இரவு உறங்கும் நேரம் மட்டுமே வீட்டிற்கு வருவது போல வருகிறான்., அது அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பது தான் மருத்துவமனையில் அவனுக்கு அன்று கேஸ் இல்லை என்றாலும்., மருத்துவமனையில் அவன் அறையில் வந்து அமர்ந்து கொள்வான்.,   யாரையும் அறைக்குள் அனுமதிக்க மாட்டான்.,

இரண்டு மாதத்தில் அவனிடம் தெரிந்த வித்தியாசத்தில் தான்..,  ஒருவேளை அந்தப் பெண்ணை தான் அவனுக்கு பிடித்திருந்தது என்றால்.,  எப்படியாவது வீட்டில் அனைவரிடமும் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். மித்ரன் தந்தை..,

விதியின் கையில் பகடையாக உருட்டப்படும் வாழ்க்கை., ஏறுவதும் இறங்குவதும் விதியோடு போராடும் மதியின் சாமர்த்தியம்”., 

Advertisement