Advertisement

“அதெல்லாம் இருக்கு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு வந்து இருக்கோம்., இப்போதும் இங்கே உள்ள கேஸையும்  ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு தான் உள்ளே வந்திருக்கோம்” என்றனர்.

“ஓகே” என்று சொன்னதோடு  “என்ன விஷயம் எல்லோரும் மொத்தமா வந்துருக்கீங்க”., என்றான்.

ஒருவன்  மித்ரனின் தந்தைக்கு  போன் செய்ய.,  அவர் அனுப்பி வைத்ததை  சொல்லி விட்டு போன் வைக்க.,  இவர்கள் அனைவரும் சேர்ந்து “நீ செல்லை ஓபன் பண்ணி பாரு., அப்பா பொண்ணு போட்டோ அனுப்பிட்டார்” என்று சொன்னார்கள்.

“அதுக்கு தான்., நீங்கள் அத்தனை பேரும் வந்தீங்களா” என்று அவன் கேட்டான்.

“பின்ன இந்த ரோபோ  மூஞ்சி பொண்ண பாத்த உடனே எப்படி மாறுது னு நாங்க பார்க்க வேண்டாமா..,   என்று கேட்டனர்.

“ரொம்ப பில்டப் பண்றீங்கடா.,  பொண்ணு பாக்க கோரமா இருக்க போகுது.,  நான் பாத்துட்டு பிடிக்கலைன்னு சொல்ல போறேன்”., என்று சொன்னான்.

“நீ பாரு.,  நீ பார்த்ததுக்கு அப்புறம் நாங்க சொல்றோம்” என்று சொன்னார்கள்…….

“ஏன்டா.,ஏற்கனவே பொண்ணு போட்டோவை எல்லாரும் பாத்துட்டீங்களா என்ன”., என்று கேட்டான்.

” இல்ல இல்ல., அப்பா யாரிடமும்மே காட்டலை உனக்குத்தான் முதலில் அனுப்பி இருக்காரு., இனிமேல் தான் அம்மாவுக்கு.,  அக்காவுக்கு காமிப்பாங்க., சீக்கிரம் பாரு”..,  என்றனர்.

அவன் நிதானமாக போன் எடுத்து பார்வையிட தயாராக இருந்தான்., அவனுக்கு எந்தவித எண்ணமும் தோன்றவில்லை., ‘ஓகே னா ஓகே சொல்ல போறேன்., இல்லைன்னா இல்லைன்னு சொல்ல போறேன்’  என்ற எண்ணத்தோடு தான் போட்டோவை பார்த்தான்.  முதல் முதலாக பார்த்த உடன் பார்வை  எடுக்காமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்., அவன் முகத்தில் வந்து போன மாற்றத்திற்க்கு என்ன அர்த்தம் என்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புரியாவிட்டாலும்..,  அவனுக்கு பெண் பிடித்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்ட அடுத்த நிமிடம்., அத்தனை பேரும் சேர்ந்து போட்ட சத்தத்தில் நோயாளிகளை அனுப்ப அறைக்கு வெளியில் காத்திருந்த நர்ஸ் அவசரமாக உள்ளே வந்து எட்டிப் பார்த்து விட்டு சென்றார்.

“ஒன்னு இல்ல., ஒன்னு இல்ல நீங்க போங்க” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு மறுபடியும் அத்தனை பேரும் கத்திவிட்டு “உனக்கு பொண்ணு புடிச்சிருக்கு அப்படித்தானே., உன் முகத்திலே அப்படி ஒரு வெளிச்சம் தெரியுது” என்று சொல்லவும்.,
“போங்கடா., நீங்களும் உங்க கண்டுபிடிப்பும்” என்று சொல்லிவிட்டு “ஓகே பொண்ணு புடிச்சிருக்கு.., பிடிக்கலைன்னு சொல்ல மாட்டேன்.., ஆனா அதுக்காக முகத்தில் வெளிச்சம் தெரியுதுன்னு சொல்வதெல்லாம் ஓவரா தெரியல.., நல்ல சினிமா பார்ப்பீங்களா எல்லோரும்” என்று அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

“அப்போ ஓகே.., அப்பா ட்ட ஓகே சொல்லிடலாம் இல்லே”., என்று கேட்டனர்.

” ஓகே ஓகே” என்றான்.

“நீ பார்த்த முதல் பொண்ணையே புடிச்சி இருக்குன்னு சொல்லிட்ட டா” என்று சொன்னார்கள்.

அவன் சிரித்தபடி அமைதியாக இருக்க மற்றொருவனும் “நேத்து சொன்ன மாதிரி.,  பார்த்தவுடனே மனசில் பச்சக்கென்று ஒட்டிக் கிச்சா”.., என்று கேட்டான்.

அவனும் சிரித்தபடி “ஒட்டிகிச்சு., ஒட்டிக்கிச்சு., போங்கடா”  என்று சொன்னான்…..

அவர்கள் சென்றவுடன் ஒரு 10 நிமிடத்திற்கு யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று சொன்னவன்., மறுபடியும் ஒரு முறை அவளது போட்டோவை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டே இருந்தான்.,  அவனை அறியாமல் அவன் உதடுகள் விசில் சத்தத்தை மெதுவாக வெளியிட்டது.,  பின் தான் இருப்பது மருத்துவமனை என்று நினைவில் கட்டுப்படுத்தி கொண்டவன்.,  “இது என்ன டீன் ஏஜ் பசங்க மாதிரி., இப்படி ஒரு பீல் வருது’ என்று தன்னைத் தானே கொட்டிக் கொண்டவன்., அதன்பிறகு வேலையை கவனிக்க தொடங்கினான்.

ஆனாலும் அவன் அறியாமல் இடையிடையே அந்த போட்டோவை எடுத்து பார்ப்பது தவறவில்லை ஆனால் அதை யாரும் கண்டு விடக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்து கொண்டான்…

இரு வீட்டிலும் பிள்ளைகளுக்கு பிடித்து விட்டது என்றவுடன் மிகவும் சந்தோஷப் பட்டனர்., அதேநேரம் போட்டோ கொடுத்தவரிடம் மற்ற விவரங்கள் தருமாறு கேட்க  அவர் “மாலை நேரத்திற்குள் தருவதாக இரு வீட்டிலும் சொல்லி வைத்தனர்.”  எல்லோரும் ஆளுக்கு ஒரு எண்ணத்தில் இருக்க அதற்குள் திருமண தகவல் நிலையத்திலிருந்து “எப்படியோ பேப்பர் சில காணாமல் போயிருப்பதால் அதோடு போயிருக்கலாம் என்றும்.,  போட்டோவிற்கு பின்னே பெற்றோரின் போன் நம்பர் இருக்கும்., அதில் இருவருமே பேசிக் கொள்ளுங்கள்”., என்று சொன்னார்கள்.

மித்திரனின் தந்தை., சாருவின் தந்தைக்கு அலைபேசியில் அழைத்தார்.,  அதன் பிறகு அவர்கள் பேசிக்கொள்ள தொடங்க முதலில் தாங்கள் யாரென்று ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்., அதன்பிறகு சுற்றியுள்ள நிலவரங்கள் எல்லாம் விசாரித்து விட்டு தொழில் எப்படி போகிறது என்பதை விசாரித்த பிறகு அவர்களின் பிள்ளைகளின் திருமணத்தை பற்றி பேச தொடங்கும் போது தான் இரு வீட்டு பெற்றோருக்கும் எதிர்பார்ப்பு தவிடு பொடி ஆகியது., இவர்கள் கேட்டபடி கிடைக்காமல் மாற்றி கொடுத்திருந்த நடுவில்  உள்ளவர் தவறை இவர்கள் என்ன செய்வது என்பதில் குழம்பிப் போயினர்., ஆனால் “பிள்ளைகள் இருவருக்கும் பிடித்துவிட்டது., என்ன செய்ய”., என்று மித்திரனின் தந்தை கேட்டார்.

சாருவின் தந்தையும் அது தான் யோசனையாக இருக்கிறது., சரி வீட்டில் மற்ற விவரங்களை சொல்லி பேசுவோம்.,  அதற்கு மேற்கொண்டும் பிள்ளைகள் இருவரும் சரி என்றால் பேசி முடித்து விடலாம் என்று அவர்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.,

மித்ரன் குடும்பத்தில் பெண் மருத்துவர் ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது சிவ சங்கருக்கு சற்று உறுத்தலாக தான் இருந்தது., ஆனாலும் மகளுக்கு பிடித்துவிட்டது என்று தெரிந்த நொடியிலிருந்து என்ன செய்வது என்பதில் குழப்பமாக இருந்தது.

அதுபோல தான் மித்திரன் தந்தைக்கும் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெண் மருத்துவர் இல்லையே என்பதில் மித்ரனின் தந்தை குழம்பிப் போனார்.

எப்படி வீட்டில் சொல்வது என்ற எண்ணத்தோடு மாலை சற்று சீக்கிரம் வரும்படி சொல்ல எல்லோரும் திருமணம் விஷயம் தான் பேசப் போகிறார்கள் என்று குதித்துக் கொண்டு கிளம்பி ஓடினர்.  அன்று மட்டும் பயிற்சி மருத்துவர்களை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அனைவருமே வீடு சென்று சேர்ந்தனர்.  ஒரே வீட்டில் நான்கு பேர் குடும்பங்களில் உள்ள அனைவரும் சேர்ந்து இருக்க..,  மித்ரனின் தந்தை அப்போது தான் நடுவில் போட்டோ கொடுத்த நண்பர் மேல் தான் தவறு என்று நடந்த குழப்பத்தை சொல்லி இப்பொழுது என்ன செய்ய என்றவர்.,

சாருவை பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்ல., அத்தனை பேருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி., மித்ரனுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி.,  பெண் மருத்துவர் இல்லை என்பது ஒருபுறமிருக்க., அவளுக்கு மருத்துவம் பிடிக்காது., என்பது மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது.

பெண்ணின் தாய் தந்தை மருத்துவர்கள் தான்.,  தம்பியும் கடைசி வருடம் படித்துக் கொண்டிருப்பவன்.,  பெண்ணுக்கு மட்டும் மருத்துவம் படிக்க பிடிக்காமல் அவள் ஆசைப்பட்டு எடுத்து படித்த படிப்பு பற்றியும்.,  பெங்களூரில் பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பதை பற்றியும் பேசிக்கொண்டிருக்க..,  மற்றவர்கள் “மித்ரனுக்கு பிடித்திருந்தால் பேசலாம்” என்று சொன்னார்கள்.

மித்ரன் தாயோ “முடியாது  அனைவர் வீட்டிலும் மருத்துவர்கள் ஆகவே இருக்க.,  ஒருத்தி மட்டும் வேறாக இருந்தால் சரிவராது.,  குடும்பத்தோடு ஒத்துப்போகாது,  அதனால் இந்தப் பெண் வேண்டாம்., வேறு பார்க்கலாம்” என்று சொன்னார்.

மித்ரனுக்கு தாயை  எதிர்த்து எதுவும் சொல்ல முடியாமல் ‘தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர்களே வேண்டாம்.,  என்று சொன்ன பிறகு தானே வழியே போய் சொல்வது நன்றாகவா இருக்கும்’ என்ற யோசனையோடு அவ்விடத்தை விட்டு அமைதியாக எழுந்து சென்றான்.

அவன் நண்பர்களுக்கு தான் என்னவோ போல் இருந்தது., அவன் அமைதியாக எழுந்து செல்வதை பார்த்த உடன் அவன் நண்பர்கள் “ஐயோ இதிலென்ன இருக்கு.,  அவனுக்கு புடிச்சிருக்கு., அப்படி இருக்கும் போது நாம படிப்பை பத்தி யோசிக்காம பேசலாமே” என்று சொன்னார்கள்.

அவர்கள் நான்கு குடும்பத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள பெண்மணி மட்டும் “அந்த பொண்ணுக்கு தான் மெடிக்கல் பீல்டு பிடிக்காதாமே.,  அப்படி இருக்கும் போது அந்த பொண்ண கூட்டிட்டு வந்து இங்க வச்சு என்ன பண்ண முடியும்”.,  என்று கேட்டார்.

என்ன செய்ய என்று தெரியாமல் அனைவரும் அமைதி காத்தனர்., “சரி பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு “பொண்ணு போட்டோவை திருப்பி கொடுத்துருங்க” என்று சொன்னார்கள்.

நண்பர்கள் நால்வரும் “இவங்க பொண்ணு போட்டோவை திருப்பி கொடுத்துருவாங்க.,  பொண்ணு போட்டோவை அவன் செல்லில் இருந்து டெலிட் பண்ணுவானா”., என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதுபோலவே அங்கு சாருவுக்கும் இரவு நேரத்தில் தகவல் தெரிவிக்க., சாரு மேற்கொண்டு எதுவும் பேசாமல் சரி என்று அத்தோடு நிறுத்திவிட்டாள். அதன் பிறகு மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..,

அவள் தம்பி இத்தகவல்களை தெரிவிக்க.,  அதன் பிறகு அவளுடைய அம்மா அழைத்துப் பேச.,  இவளோ முடிவாக “தயவுசெய்து இப்போதைக்கு வேற ஏதும்  பேசாதீங்க., என் போட்டோ எந்த மாப்பிள்ளை வீட்டுக்கும் போக கூடாது., இது தான்  ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்.,  இந்த போட்டோ கொடுத்ததோடு நிறுத்திடுங்க.., இனிமேல் எந்த சூழ்நிலையிலும் என் போட்டோ வெளியே போகக்கூடாது..,  போச்சுன்னா அதுக்கு அப்புறம் உங்களுக்கு இருக்கு.., நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.., அதே மாதிரி இனிமேல் மாப்பிள்ளை போட்டோ னு.,  நீங்க எதுவும் எனக்கும் அனுப்பாதீர்கள்”.., என்று சொல்லிவிட்டாள்….

‘சற்று நேரம் எதுவும் ஓடவில்லை.., ஏன் எதையும் விசாரிக்காமல் போட்டோ அனுப்பினார்கள் என்ற படபடப்பு மட்டுமே அவளுக்கு மிஞ்சியது., காலையில் இருந்த சந்தோஷமான மனநிலையும்., மதியம் இருந்த ரெக்கை கட்டி பறக்கும் ஒரு உணர்வும்., மாலை நேரத்தில் மொத்தமாய் அறுந்து விழுந்தது.., திக்கு தெரியாத காட்டில் நிற்பது போல மனதில் அவள் அறியாமல் ஒரு அழுத்தம் உருவானதை அவளால் உணர முடிந்தது..,

சித்துவிடம் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவளால் புரிந்து கொள்ள முடிந்ததால்.,  மெதுவாக கையை பிடித்து அழுத்திக் கொடுத்து., “நீதானே டாக்டர் மாப்பிள்ளை வேண்டான்னு சொன்ன.,  இப்பவும் நீ சரின்னு சொன்னா.., வீட்ல பேச தான் செய்வாங்க., சரின்னு சொல்றியா”., என்று கேட்டதற்கு “விடு இதுக்கு மேல அத பத்தி பேசாத” என்று சொன்னாள்.

பிறகு அவர்கள் வீட்டில் உள்ள எதிர்பார்ப்பையும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவர் பற்றியும் சொல்லிவிட்டு அத்தோடு பேச்சை முடித்து விட்டாள்….

சென்னையிலும் அது போன்ற ஒரு மனநிலையில் தான் மித்ரனும்  இருந்தான். ‘ஏன் தன்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை., தன் வயதிற்கு சரி என்று எண்ண கூடிய பக்குவம் தானே இருக்க வேண்டும்’.., என்று ஒருவித எண்ணம் தோன்றினாலும்.,,

அதன் பிறகு அவன் நண்பர்கள் அழைத்து  “விடுடா  பாத்துக்கலாம்.,  பொண்ணு போட்டோவை டெலிட் பண்ணிடு” என்று சொன்னார்கள்.

திரும்பி அவர்களை பார்த்தவன்., ம்ம்ம்…  என்று சத்தம் மட்டுமே கொடுத்தான் பின்பு அதைப் பற்றி எதுவும் பேசாமல்…,   “இதுக்கு மேல இத பத்தி பேசாதீங்க” என்று சொன்னான்.,

வேண்டு மென்றே வேறொரு திருமணதகவல் நிலையத்தில் இருந்து வந்த பெண்ணின் விவரங்களை தெரிவிக்க மித்ரன் நண்பர்களை கையை உயர்த்தி தடுத்து “ப்ளீஸ் இப்போதைக்கு எதுவும் பேசாதீங்க.., கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு எல்லாத்தையும் யோசிக்கணும்., இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று நிறுத்தி விட்டு அத்தோடு பேச்சை முடித்து விட்டான்.,

நண்பர்களுக்கு புரிந்தது அவன் எதிர்பார்த்தது போல., ‘பார்த்ததும் பிடிக்கவேண்டும் என்ற அந்த எண்ணம்..,   அவனுக்கு இப்போது அந்த பெண்ணை பார்த்ததும் உருவாகி இருக்க வேண்டும்’.,  என்று தோன்றியதால் அதற்கு மேல் யாரும் அதைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை.,

விதி வலியது.., விதியின் வழியில் தான் அனைத்தும் நடக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது“.

Advertisement