Advertisement

18

   நினைவுகள் எல்லாம் 
   நீயே இருக்க., 
   நிஜங்களும் 
   நீயாய்  மாற., 

  வாழ்க்கை என்னும் 
  பூந்தோட்டத்தில் வரமாய் 
  வந்தவளே (வந்தவனே)

துணையைப் பொறுத்தே 
வாழ்க்கை அமையும் 
என்பது எத்தனை நிதர்சனமோ.,

அத்தனை நிதர்சனம் 
நீயும் நானும் வாழும் 
வாழ்க்கையில் காதல் 
பொங்கிப் பெருகி வளர்வதும்
நம்மால் தான் என்பது

கொச்சின் சென்று இறங்கியவர்களை அழைத்து செல்ல சந்தோஷ் காருடன் காத்திருந்தான்.,

இரவு நெருங்குவதற்குள் கொச்சின் வந்து சேர்ந்து விட., சித்து பெங்களூர் போய் சேர்ந்ததை  போன் செய்து கேட்டுக்கொண்டனர்.,

அதன் பிறகு அவன் காரும் அவன் ஏற்றி அனுப்பிய பொருள்களும் மறுநாள் காலை நேரத்தில் வந்து சேர்ந்தது.,

வந்தவர்களுக்கு இரவு உணவை சந்தோஷ் வீட்டில் முடித்துவிட்டு  அவர்கள் பேசிக்கொண்டே சற்று நேரத்தைக் கழித்து விட்டனர்.,  அதன்பிறகே அவரவர் தூக்கத்தை தேடிச்செல்ல அதற்குள் குழந்தை ஏற்கனவே தூங்கியிருந்ததால் சாரு அவனிடம் கேட்டாள்.,

“என் மேல எதுவும் கோவமா” என்றாள். “என்னால தான் தனியா வந்துட்டோம் ன்னு ஃபீல் பண்றீங்களா” என்று கேட்டாள்.

மித்திரன் தான் “அதெல்லாம் ஒன்னும் இல்லடா., நார்மலாகவே ஊருல பெரியவங்க எல்லாம் சொல்லுவாங்க எலி வளையானாலும் தனி வளை  வேண்டும் அப்படின்னு.., அதுதான் உண்மை  சாதாரண வாழ்க்கைனாலும்., அது நமக்கான தனிப்பட்ட வாழ்க்கையா இருக்கணும்.,

அவங்களோட டாமினேஷன் ல இருக்க முடியாது.,  அன்பானவங்களா  இருந்தா  அவங்க கூட சேர்ந்து ஒன்னா அஜெஸ்ட் பண்ணி போறது வேற.., மனசுல கொஞ்சம் கூட அன்பே இல்லாமல் மனசுக்குள்ள கோபமும் வன்மமும் வச்சிட்டு இருக்கவங்க கூட ரொம்ப நாள் சேர்ந்து வாழ முடியாது.,

வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் எல்லாருக்கும் அடிச்சு சொல்லிக் கொடுக்கிற பாடம் இது., நிறைய பேர் புரிஞ்சுக்கவே இல்ல அப்படி தான் இதுவும் விடு இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம்”., என்று சொன்னான்.

“நெஜமா உங்களுக்கு வருத்தம் இல்லை தானே” என்று கேட்டாள்.

“நிஜமா வருத்தமே இல்லை.., ஹாப்பியா இருக்கேன் சரியா.., நீ நான் நம்ம பாப்பா இது தான் நம்ம வாழ்க்கை”.,  என்று சொல்லி அவளை ஆறுதல் படுத்தினான்…

“ஆமா இன்னை இவ்வளவு பேசின… இத முதலிலே உன்னோட எதிர்ப்பை காட்டி இருந்தா… நல்லாயிருந்துருக்கும் இல்ல” என்றான்.

“எதிர்த்து பேசியோ., கோபப்பட்டோ தான்  அன்பையோ அனுசரிப்பையோ வாங்க கூடாது… இது வாழ்க்கை., ஜஸ்ட் லைக் தட் ன்னு., இன்னையோட முடியுறது கிடையாது., என்னைக்காவது ஒருத்தரை ஒருத்தர் பார்க்க வேண்டியது வரும்., அப்ப எப்படி பேஸ் பண்ணுறது”., என்றாள்.

“ம்ம்ம்… புரியுது”.., என்றான்.

“எவ்வளவு தான் இருந்தாலும் அவங்க உங்க அம்மா., அந்த உறவில் எப்பவும் மாற்றம் கிடையாது., ஸோ இனி குறை சொல்ல வேண்டாம்., விடுங்க”., என்றாள்.

“அவங்க என்ன பண்ணுனாங்க ன்னு தெரிஞ்சா., நீ இப்படி பேச மாட்ட” என்றான்.

“அவங்க முடிவு நம்ம வாழ்க்கை முறையை மாற்றாத வரைக்கும் கண்டுக்காம போக கத்துக்கனும்., இப்ப தான் நீங்க கரெக்டா முடிச்சிட்டீங்க இல்ல., ஸோ வேண்டாம்”., அவன் மார்பில் தலைச்சாய்த்து கண்மூட தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

“குழந்தை பிறந்த பெண்களை ஓய்வு வேண்டும் என்று வெளியே விடமாட்டார்கள். ஆனால் இன்னைக்கு உன்னால பிள்ளைய தூக்கிட்டு அலைய வைச்சிட்ட.. நாளைக்கு நல்ல சூடு தண்ணீர் ஊற்றி விடனும்… உனக்காக அவளுடைய அலுப்பை உன்ட்ட காட்டலை போல” என்று சந்தோஷ் வீட்டில் சாப்பிடும் போது அம்மா சொல்லிக் கொண்டு இருந்தது நினைவு வந்தது.

அந்த நேரத்தில் வந்த உடனே அவளும் குளித்து., பிள்ளைக்கும் உடல் துடைத்து., பசியாற்றி தூங்க வைக்க அவர்கள் வீட்டில் இருந்தாள்.

இப்போது அவள் முகம் பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மறுநாள் பொருட்கள் எல்லாம் அதன்தன் இடத்தில் வைக்க அவர்களுக்கான  அழகான இல்லம் சிறப்பாக உருவானது.

அதன் பிறகு 10 நாள்களுக்குள் அவனுக்கான வேலையை சந்தோஷ் வேலை செய்யும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்து கொண்டான்.,

அவன் படித்த படிப்பு மற்றும் அவனுடைய எக்ஸ்பீரியன்ஸ் பற்றி ஏற்கனவே சந்தோஷ் சொல்லி இருந்ததால் அவனுடைய சர்டிபிகேட்டை வேண்டாம் என்று வீட்டில் போட்டு விட்டு வந்தாலும் அவனைப் பற்றி அறிந்த டாக்டர்கள் என்ற முறையில்..,

அவனுடைய வேலையை தான் செய்ய சொன்னார்கள்., இவன் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும்.,

அங்கு உள்ளவர்கள் “ஒரு சிறந்த மருத்துவரை இழக்க நாங்கள் தயாராக இல்லை., நீங்கள் எத்தனை அர்ப்பணிப்புள்ள டாக்டர் என்று எங்களுக்கு தெரியும்”., என்றனர்.

எப்போதும் போல அதே வேலை என்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்., அவன் அம்மாவிடம் அப்படி பேசி விட்டு இங்கு வந்து அதே வேலையை செய்வது அங்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது., சந்தோஷ் மனதை மாற்றினான்.,

“படிச்ச  சர்டிபிகேட் கொடுத்துட்டா ஒண்ணும் பண்ண முடியாது.., படிப்பு உன்னோட திறமை எல்லாம் உன்னோடு தான் இருக்கும்.., ரொம்ப யோசிக்காதே”., என்றான்.

மருத்துவமனைக்கு சென்று வரும் நேரங்களை ஒரு குறிப்பிட்ட நேரங்களுக்குள் மாற்றிக்கொண்டனர்.,  அவனுக்கு அறுவை சிகிச்சை இருக்கும் நேரங்கள் தவிர மீதி நாட்கள் எல்லாம் எப்போதும் போல குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்று வைத்துக் கொண்டு மீதி நேரங்களை குடும்பத்துடன் செலவிட தொடங்கியிருந்தான்.,

குழந்தைக்கு ஐந்து மாதம் நிறைவடைந்திருந்தாலும்  சாருவும் வேலையை வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும்., சில  நாள்களில் அலுவலகம் சென்று வர தொடங்கி இருந்தாள்.,

அப்போது குழந்தையை சந்தோஷ் அம்மா முழுவதும் பொறுப்பெடுத்துக் கொள்ள தொடங்கியிருந்தார்….

இதற்கிடையில் சித்துவிற்கு நல்ல மாப்பிள்ளை வீடு அமைந்திருப்பதாக சித்துவின் அம்மா  போன் செய்து சொன்னார்.

நிச்சயதார்த்தத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்., சித்துவும் அடிக்கடி போனில் பேசும் போது சொல்வது தான் இருந்தாலும் சித்துவின் அம்மா சொன்னவுடன் கண்டிப்பாக நிச்சயதார்த்தத்திற்கு வருவோம் நீங்கள் சொல்லாவிட்டாலும் வந்து விடுவோம் என்று  சாரு சொல்லிக்கொண்டிருந்தாள்.

அப்போது தான் சித்துவிற்கு “ஏதாவது நல்லதாக திருமணத்திற்கு செய்ய வேண்டும்” என்று சொல்லும் போது

மித்ரன் தன்னுடைய  எண்ணத்தை சொன்னான்., “தோழியாக இருந்தாலும் உனக்காக அத்தனை பொறுப்பெடுத்து பார்த்துக் கொண்டாள்., அதனால் அவளை அப்படியெல்லாம் விட முடியாது நல்ல நட்பிற்கு இலக்கணமாய் இருந்த பெண்ணிற்கு ஒரு சகோதரனாய் இருந்து நான் செய்ய வேண்டியது செய்கிறேன்” என்று சொன்னான்.

அது போலவே சித்துவின் கல்யாணம் பெங்களூரில் நடைபெற நிச்சயதார்த்தத்திற்கு சாதாரணமாக சென்று வந்திருந்தாலும்., திருமணத்திற்கு சந்தோஷ் குடும்பமும் மித்திரன் குடும்பமும் வந்திருந்தார்கள்.

இங்கிருந்து மித்ரனின் அக்காவும் சாருவின்  தம்பியும் வந்திருந்தார்கள்.,  அதற்குள் குழந்தைக்கு ஏழு மாதம் ஆகியிருக்க அனைவரிடமும் கைபோட்டு தூக்கம் சொல்லும் அளவிற்கு வந்திருந்தாள்.,

மித்ரனை  விட்டு அங்கு இங்கு நகராமல்  கழுத்தை கட்டிக் கொண்டே இருக்கும் மித்ரனின் மகளை பார்க்கும்போது அங்கு அனைவருக்கும் சிரிப்புதான் வந்தது.,

அத்தனை பேரும் சந்தோஷமாக சித்துவின் திருமணத்தில் கலந்துகொண்டு ஒரு சகோதரனாக செய்ய வேண்டிய அனைத்தையும் மித்ரன் முன்னின்று செய்ய சித்துன் குடும்பத்தினர் தான் அவற்றை பெற்று கொள்ள தயங்கினாலும் யாரும் எதிர்பாராத அளவிற்கு செய்து வைத்தான்.,

அங்கு அனைவருக்குமே மகிழ்ச்சி.,  அவள் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அவளுக்கு வேறு உடன் பிறந்தவர் யாரும் இல்லை., ஆனால் அனைத்தையும் மித்ரன் எடுத்து செய்ய உண்மையிலே தனக்கு உடன் பிறந்த ஒரு சகோதரன் இருந்தால் கூட இந்த அளவிற்கு தனக்காக பார்த்து செய்திருப்பானா என்ற எண்ணம் வரும் அளவிற்கு நன்றாகவே செய்தான்….

வாழ்க்கை வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு.., வாழ தெரியாதவர்களுக்கு தான் சாபம்“., ஆகிப் போகிறது…

நான்கு வருடங்களுக்குப் பிறகு

சென்னையில் மித்ரனின் அக்கா வீட்டிற்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு போராடிக் கொண்டிருந்தார்கள்.,

“கிளம்புற  ஐடியா இருக்கா இல்லையா.,  அப்பாவும்., பொண்ணும் வீட்டை  சுத்திக்கிட்டே இருக்கீங்க.,  கிளம்பலை னா., எனக்கு ஒன்னும் இல்ல.,  நான் நல்லதா போச்சு னு., இங்கேயே உட்கார்ந்துப்பேன்”., என்று சொன்னாள்.

மித்ரனின் அக்கா தான் “முதல்ல நீ இந்த பாலைக் குடி அதுக்கப்புறம்  கிளம்பறதை பற்றி யோசிக்கலாம்.,  பிளைட் க்கு டைம் இருக்கு.., அதுக்குள்ள அவங்க அப்பாவும் பொண்ணும் கிளம்பிடுவாங்க.,  இந்த பால் குடிச்சிட்டு கிளம்பு”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

அவளோ “போங்க அண்ணி., உங்க தம்பி கூட., உங்க தம்பி பொண்ணும் சத்தம் போட்டுட்டு  இருக்கு.., கூட இந்த பசங்க ரெண்டு பேரும் கொஞ்சமா லூட்டி அடிக்கிறாங்க பாருங்க.., வீட்டு ஹாலே தலைகீழா மாறிட்டு”., என்று அவளிடம் புகழ் அளித்துக் கொண்டிருந்தாள்.

மித்ரனின் அக்கா பிள்ளைகள் இருவரும் மகளோடு விளையாடிக் கொண்டிருக்க மித்ரன் அவர்கள் மூவரும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.,

இன்னும் சற்று நேரத்தில் ஏர்போர்ட் செல்ல வேண்டும்., அங்கிருந்து எப்பொழுதும் போல கொச்சினுக்கு தான்.,

இப்போது இங்கு வந்திருப்பது மித்ரனின் இரண்டாவது மகனின் பெயர் சூட்டு விழாவிற்கு தான் வந்திருந்தார்கள்., தன் மகள் வயிற்றில் இருக்கும்போது கவனிக்காதது எல்லாத்தையும் சேர்த்து நல்ல தகப்பனாக இரண்டாவது பிள்ளைக்கு அழகாக கவனித்துக் கொண்டான் மித்ரன்.

அக்கா அவள் ஆசைப்படியே இரண்டாவது டெலிவரியை அவள் தான் பார்த்தாள் என்றாலும் கொச்சினுக்கு வந்து பார்த்து கொடுத்தாள்., இரண்டாவது குழந்தை நார்மலாக பிரிந்திருக்க அதுவே மிகுந்த சந்தோஷமாக உணர்ந்தனர்.,

அவர்கள் திட்டமிட்டது போல இரண்டாவது மகனுக்கு சந்துரு என்றே பெயர் வைத்திருந்தார்….

இதோ இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மகனுக்கு சந்துரு என்ற பெயர் வைத்திருந்தனர்.,

சந்தோஷ் வந்தவன்  முதல் நாள் கிளம்பி இருந்தான்., இரண்டு நாள் இருந்துவிட்டு இவர்கள் வருவதாக சொல்லி இருந்ததால் அவன் மட்டும் பெயர் சூட்டு விழாவிற்கு குடும்பத்தினரோடு வந்து இருந்துவிட்டு பெயர் சூட்டு விழா முடிந்த மறுநாள் காலையிலேயே கிளம்பி இருந்தான்., அவனது சொந்த வேலை காரணமாக…

‌      இப்பொழுதும் சாருவின் தம்பியிடம் போட்டி போட்டுக்கொண்டு சந்தோஷ் தாய்மாமா கட்டு அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான்.,

“அது எப்படி நீங்களே இந்த பிள்ளைக்கும் செய்வீங்க” என்றான்.

” இப்ப என்னடா இன்னொரு குழந்தை பிறக்கும் அதுக்கு நீ செய்” என்று சொன்னான்.

மித்ரன் “டேய் என்ன பாத்தா எப்படி தெரியுது., ரெண்டு பிள்ளைங்க தான்”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

“நீ தானடா நிறைய பிள்ளை வேணும் சொல்லுவ., பைனல் இயர் படிக்கும்போதே” என்றான்.,

” அடப்பாவி இன்னுமா., அதெல்லாம் ஞாபகம் வச்சிருக்க” என்று இவன் கேட்டான்

“இவன் கணக்குப்படி ஒரு அரை டஸன் போட்டு வச்சிருந்தான் படிக்கும் போது” என்று சொல்லி அனைவரும் காலைவார..,

அனைவரும் அவனை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.,

மித்ரன் அம்மா யாரோ போல வந்து கலந்து கொண்டு சென்றிருந்தார்., சாருவின் அம்மாவிடம் சாரு என்னவென்றால் என்னவென்று கேட்கும் நிலையில் வைத்திருந்தாள்.அதற்குமேல் ஒட்டவில்லை.,

இதோ இப்போது மித்ரன் அக்கா வீட்டில் தான் அனைவரும் இருக்கின்றனர்.,  மித்ரன் வீட்டிற்கு செல்லவில்லை.,

மித்ரனின் அப்பாதான் பிள்ளைகள் இருவரும் இங்கிருக்க.., அவரும் இங்கு வந்து இரண்டு நாட்களாக இங்கு தான் இருக்கிறார்.,

பேரனை கையில் வைத்துக் கொண்டிருந்தவர்., “பக்கத்திலிருந்து வளர்க்கிற பாக்கியத்தை கொடுக்க மாட்டீங்களா” என்று வருத்தப்பட்டார்..

“இப்ப என்ன பா டிக்கெட் போடுறேன் கொச்சினுக்கு வந்துடுங்க” என்று சொன்னான்.

“போடா எப்பவும் போல அப்பப்போ வந்து பிள்ளைகளை காட்டிட்டு போ.,அப்போ தான் பிள்ளைக்கு என்னை மறக்காம இருக்கும்” என்று சொல்லி சந்தோஷமாக பேரனை உச்சி முகர்ந்து மருமகள் கையில் கொடுத்தவர்.,

பின்பு பேத்தியை அழைத்து அருகே வைத்து அவளுடைய மழலை பேச்சில் தன் மனதை கரைத்துக் கொண்டிருந்தார்….

வரமாக கிடைத்த வாழ்க்கையை வாழ தெரிய வேண்டும்.,  சுற்றியுள்ளவர்கள் கல்லெறிய தான் செய்வார்கள்., நாம் தான் பாதுகாப்பாக தப்பி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.,  வாழ்க்கையை வரமாய் மாற்றுவதும்  சாபமாய் மாற்றுவதும் வாழ்க்கை துணையை பொறுத்து தான்“…

நமது வாழ்க்கைக்கும் பரமபதத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு.,  அதனால் தான் ஒவ்வொரு முறையும் பரமபதத்தில் பகடை உருட்டும் விஷயங்களை கொண்டு வந்தேன்.

வாழ்வில் ஏற்றங்களும் இறக்கங்களும் உண்டு என்பதை சொல்வதற்கு தான் பரமபதத்தை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்., வாழ்க்கை என்பது கட்டம் கட்டமாக நகரும் ஒரு சிறு விளையாட்டு தான்., அதில் நாம் செல்லும் பாதையில் ஏணிகளும் இருக்கலாம்.., நம்மை கீழிறக்கும் பாம்புகளும் இருக்கலாம்., 

எது வந்தாலும் எதிர்த்துப் போரிட்டு இலக்கை அடைய வேண்டும் என்பதே பரமபதம் நமக்குச் சொல்லித் தரும் உண்மை.., புரிந்து கொண்டால் வாழ்க்கை நிச்சயம் வெற்றி தான்., அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திப்போம்

இந்தக் கதையை பொறுத்தவரை நிறைய பேருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கலாம்., ஒரு கணவன் மனைவியால் இந்த அளவிற்கு விட்டுக்கொடுத்து போக முடியுமா..,ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியுமா என்று., கண்டிப்பாக எல்லா இடங்களிலும் சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.,

ஆனால் வாழ்க்கை துணையில் ஒருவர் விட்டுக் கொடுக்காத போது மற்றவர்  விட்டுக்கொடுத்து போனால் அவ்விடத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு குறைவு., “இரு கை தட்டினால் தான் ஓசை.”,

இருவரும் விட்டுக் கொடுத்துப் போவார்கள் என்பது ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே நடக்கக்கூடிய விஷயம்.,  ஆனால் முடிந்த அளவு வாழ்க்கைத்துணையில்  ஒருவர் விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன ஒருவர் விட்டுக் கொடுக்கலாம்.,

“விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” இது அனுபவத்தில் நிறைய விஷயங்களில் அனைவருக்கும் பாடம் கிடைத்திருக்கும்.  தன் துணை விட்டுக் கொடுக்கவில்லை என்று அவரிடம்(அவளிடம்) கோபப்படுவதை விட..,

நான் விட்டுக் கொடுத்து போகிறேன் என்ற முடிவோடு விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன்., வாழ்க்கை கண்டிப்பாக நல்லபடியாக இருக்கும்., ஏதோ ஒரு நேரத்தில் விட்டுக் கொடுக்கும் இடங்களில் விரக்தி வரலாம் அப்போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள்.., நாம் தாண்ட வேண்டிய தடை இது என்று.., நிச்சயமாக நம்மால் ஜெயிக்க முடியும்.,

            வாழ்க்கை வசந்தமாகட்டும் அனைவருக்கும்  வாழ்த்துக்கள் 

என்றும் அன்புடன்.,

ஆதிபிரபா.,

Advertisement