ஆனால் சாருவின் அம்மா கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டான்., “உங்க பிள்ளையவ நீங்க புரிஞ்சிக்கலை இதுல பேத்திய மட்டும் வேணுமா” என்று கேட்டான்.
அவர்கள் சரி கிளம்பலாம் என்று சொல்லி கிளம்ப தொடங்க., மித்ரன் நாங்களும் இப்ப கிளம்பிருவோம் என்று சொன்னான்., சாருவின் அம்மாவிடம் கம்பீரமாகவும்., சாருவின் அப்பாவிடமும் சாதாரணமாக பேசினான்.
மித்ரன் அப்பா தான் “சாப்பிட்டுட்டு போங்க” என்று சொல்லி பிடித்து அமர வைத்தார்.,
அதேநேரம் அனைவரையும் சாப்பிட சொல்ல சாப்பாடு தயார் பண்ணலாம் என்று சொல்லும் போது மித்ரன் இங்கு சாப்பிட மாட்டோம் என்று சொன்னான்.
மித்ரனின் அக்கா தான் “சரிடா யார் வீட்டிலும் சாப்பிட வேண்டாம்., நான் சாப்பாடு ஆர்டர் பண்ணுறேன்., என் மருமக வந்து இருக்கா., அதனால தான்., இப்போ வெளியே ஆர்டர் பண்றேன்., இப்போ வந்துரும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று சொன்னாள்.
மித்ரனின் அம்மா தான் மறுபடியும் சாருவிடம் பேச துவங்கினார்.
“நீ பாதியிலே பேச்சை விட்டுட்டு போய்ட்ட” என்றார்.
” நீங்க தான் கேள்வி கேட்காம அப்படி நிப்பாட்டிடீங்க., அதனால நான் பேசல இப்ப கேளுங்க” என்று சொன்னாள்.
“என் பையனை எப்படி மயக்கி வைத்திருக்க” என்று கேட்டார்.
“உங்க பையனா., எப்ப கல்யாணம் ஆச்சோ அப்பவே என் புருஷன்” என்று திருத்திக் கொடுத்தாள்.
“என்ன வாய் ஜாஸ்தியா போகுது” என்றார்., அவனுக்கு போன் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கேன்., எவ்வளவு தைரியம் இருந்தா நீ அவனுக்கு போன் பேசி கூப்பிட்டு இருப்ப”., என்றார்.
“என் புருஷன் ட்ட பேசுறதுக்கு., நான் எதுக்கு பயப்படனும்., நான் எதுக்கு தைரியத்தை துணைக்கு கூப்பிடனும்., அவர் ட்ட பேசுவதற்கு., எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.,
ஆக்சுவலா நான் தப்பு பண்ணிட்டேன்.., பிரக்னன்சி டெஸ்ட் பாஸிட்டிவ் னு தெரிஞ்ச உடனே அவருக்கு போன் பண்ணி சொல்லி இருக்கணும்.., அது தான் தப்பு பண்ணிட்டேன், சரி உங்க பேச்சை மீறக்கூடாது., படிக்க போயிட்டு வரட்டும் னு வெயிட் பண்ணலாம் னு நினைச்சேன் இல்ல., அது தான் தப்பு அப்பவே சொல்லியிருந்தா கதை வேற மாதிரி போயிருக்கும் இல்ல”.., என்று அவளும் பதிலுக்கு பேசத் தொடங்கினாள்.
“நீ ரொம்ப பேசுற.., வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுறியா”., என்று அதட்டி பேசினார்.
அவள் சொன்னாள் நீங்கள் உங்க வயசுக்கு உரிய தன்மையுடன் நடந்துக்கிட்டா நல்லா இருக்கும்., நான் எதுக்கு எதிர்த்துப் பேச போறேன்.., நீங்க பண்ணுனது எல்லாமே வில்லத்தனமான காரியம்., நல்ல அம்மாவாவும் நீங்க நடந்துகிடல., நல்ல மாமியாராக நீங்க நடந்துக்கலை., கண்டிப்பா நீங்க நல்ல பாட்டியாவும் நடந்துக்க மாட்டீங்க., னு உங்களுக்கு தெரியும்.,
இனி மேல் நீங்க பேசக்கூடாது., பேசினாலும் கேட்க தயாராக இல்லை., இது எங்க வாழ்க்கை எங்க குடும்பம் நாங்க பாத்துக்குவோம்., அவர் என் புருஷன் அவரை போன் பண்ணி கூப்பிட்டு இருக்கேன்., அதில் எந்த தப்பும் இல்லை” என்று சற்று அழுத்தமாகவே சொன்னாள்
” அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல பிரண்ட்ஷிப்பை எப்படி உங்களால் பிரிக்க மனசு வந்துச்சோ., உங்க பையன் கேட்க மாட்டாரு., கண்டிப்பா சந்தோஷ் ண்ணா கேட்க மாட்டாங்க.., ஆனா நான் கேட்பேன் அவ்ளோ ஆத்மார்த்தமான நட்பு பிரிக்கிற நல்ல எண்ணங்களோட வந்துட்டீங்களோ., அப்பவே தெரியுது நீங்க எவ்ளோ நல்லவங்க”., என்று சொன்னவள்.
” இனிமேலும் எதுவும் சூழ்ச்சி பண்ணலாம் நினைக்காதீங்க., உங்களுடைய எந்த சூழ்ச்சியும் எங்களுக்கு பலிக்காது., என்று கோபத்தோடு சற்று அழுத்தமாக சொன்னாள்.
“என்ன நடந்துச்சுன்னு தெரியாது., ஏன் எதுக்கு என்ன உடனே வர சொன்னாங்க, எதுவும் எனக்குத் தெரியாது.., ஆனா நீங்க ஏதோ இங்கே மறுபடியும் ப்ளான் பண்ணி இருக்கீங்க ன்னு தெரியுது.., அதனால தான் இவங்க இப்போ எடுத்த முடிவுக்கு வீட்டிலுள்ள எல்லாரும் சம்மதிச்சு இருக்காங்க.., இனிமேலாவது உங்க பையனை நல்லபடியாக வாழ விடுங்க.., ஒரு அம்மாவா யோசிங்க பையனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு”., என்றாள்..,
அவன் அம்மாவும் பதிலுக்கு கத்தி பேசத்தொடங்கினார்., “என்ன பார்த்தா உனக்கு எப்படி இருக்கு., என்ன பாத்து எப்படி நீ இப்படி பேசலாம்”., என்று பேச தொடங்கினார்.
அதுவரை அமைதியாக இருந்த மித்ரனின் அக்கா கணவர் “நான் கொஞ்சம் பேசலாமா” என்றார்.,
இவர் என்ன பேசப் போகிறார் என்ற யோசனையோடு அனைவரும் பார்க்க மித்ரனின் அக்காவிடம் நேரடியாக சொன்னார்., “இனிமேல் நம்ம இந்த வீட்டில் இருக்கணும்னு ஆசை படுறீயா” என்று கேட்டார்.,
சற்று யோசனையாக பார்க்க “நம்ம தனியா போயிறலாம்., அதுதான் நமக்கு நல்லது., உன் தம்பி இல்லாத வீட்டில் இனிமேல் இங்கே நான் இருக்க முடியாது., உன் தம்பி இருக்கும் போது நான் இங்கே இருக்கிறது வேற.., உன் தம்பி இல்லாதப்ப நான் இந்த வீட்டில் இருந்தா., எனக்குத்தான் அசிங்கம்.., நீதான் முடிவு பண்ணனும்., நீ சரின்னு சொன்னா என் கூடவா..,
இல்ல னா., நான் என் பையன்களை கூட்டிட்டு தனியாக போகிறேன்” என்று சொன்னார்.
“சரி வேற வீடு பாருங்க போயிடலாம்” என்று சொன்னாள்.
அதேநேரம் மித்ரனின் அப்பா “டேய் என்னடா ஆளாளுக்கு என்னை விட்டுட்டு போறேன் னு சொல்லுறீங்க., நான் மட்டும் இந்த வீட்ல எப்படி இருப்பேன்., என் பிள்ளைகள் இல்லாத வீடு எனக்கும் வேண்டாம்” என்று சொன்னார்.
மித்ரன் “சரிப்பா என்கூட வந்துடுங்க” என்று கூப்பிட்டான்.
அவன் அக்காவும் “என் கூட இருக்க மாட்டீங்களா” என்று சொன்னார்….
மித்ரனின் அம்மா கோபமாக கத்தினார் “என்ன எல்லாரும் சேர்ந்து விளையாடுறீங்களா.., ஆளாளுக்கு நான் போறேன்., நீ போறீங்க., போனா இந்த வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க னு நினைக்கிறீர்களா., நான் இருப்பேன்”., என்று சொன்னார்.
மித்ரனின் அப்பா அவன் அம்மாவிடம் “நீ மட்டும் தான் இருப்ப., வேற யாரும் இருக்க மாட்டாங்க.., மனுஷங்களோட மனசை புரிஞ்சுக்க தெரியாத நீ எல்லாம் எப்படி இருந்தாலும் ஒண்ணு தான்”., என்று கூறினார்.,
“தனியா போக கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக தான் நான் இங்கே இருக்கேன்., இந்த வீட்ல இருப்பேன் இல்லனா என் பிள்ளை ரெண்டும் நீங்க வாங்கப்பா நீங்க வாங்கப்பா னு கூப்பிடுது.., போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்., ஆனால் காலம் போன கடைசியில பிரிந்து இருக்காங்க ன்னு சொன்னா அசிங்கம்., ன்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த வீட்ல இருக்கேன்., இனி நீ யாரோ நான் யாரோ அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ..,
ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கோம் அவ்வளவு தான்., மத்தபடி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது., எப்ப என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருக்க கூடாதுன்னு உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும் னு முடிவு பண்ணினயோ அப்பவே நீ இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே..,
மித்ரன் அம்மா “ஒஒ அப்போ அந்தளவுக்கு போயிருச்சா., உங்களுக்கு”., என்று கேட்டார்.
“என்ன அந்த அளவுக்கு போயிருச்சா., பிராப்பர்டி எல்லாம் என் பேரில் தான் இருக்கு., என் பிள்ளைகளுக்கு கொடுக்க மாட்டேன் னு., நீ சொல்ல முடியாது.., உன் பேர்ல இருக்குது நீ வச்சுக்கோ.., யாருக்கும் கொடுத்தாலும் சரி, இல்ல தூக்கி தூரப் போட்டு போனாலும் சரி.., அதை பற்றிய பிரச்சினை கிடையாது..,
ரொம்ப ஓவரா பேசாத., காலம் போன கடைசியில் டைவர்ஸ் காக கோர்ட் வாசலில் போய் நிக்க வச்சுறாத., இந்த வயசுல டைவர்ஸ் ன்னா அசிங்கம்., ஞாபகம் வச்சுக்கோ” என்று சொல்லி சத்தம் போடவும் அமைதியாகிப் போனார்.
அதுவும் சாருவின் அம்மா அப்பாவின் முன்னிலையிலும்., நண்பர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலும்., மருமகன் மருமகள் முன்னிலையிலும் தன்னை இப்படி சொல்லிவிட்டாரே என்று ஒரு நிமிடம் தலை குனிந்தார்.,
அதன் பிறகு ஆர்டர் செய்த உணவு வந்திருக்க அனைவரும் உண்ட பிறகு சாருவின் வீட்டினர் கிளம்பினர்.
சாருவின் அம்மா அவளின் கையை பிடித்துக் கொண்டு “மன்னிச்சிடு உனக்கு அம்மாவ மன்னிக்கலாம் அப்படின்னு தோணுச்சுன்னா சொல்லு வரேன்” என்று சொன்னார்.
சாருவின் தம்பியோ நீங்க விரட்டி விட்டாலும் நான் இனிமேல் வருவேன்., நீ வராத ன்னு சொன்னாலும் நான் வருவேன்., பாப்பா பார்க்க வருவேன்., உன் வீட்டில் தங்க கூடாதுன்னு சொன்னா சந்தோஷ் அண்ணா வீட்டில் இருந்துக்கிறேன்., கண்டிப்பா வருவேன்” என்று சொல்லி போகும் போது சாருவை குழந்தையோடு சேர்த்து பிடித்துக் கொண்டு “மன்னிச்சிடு சாரு ரியலி வெரி ஸாரி” என்று சொல்லிவிட்டு சென்றான்.,
அது போல போகும் போது சாருவின் அப்பா ஏற்கனவே எந்த விஷயத்திலும் அதிகம் தலையிடாமல் பட்டும் படாமலும் இருந்தார் ., போகும் போது மகளின் தலையை தடவி கொடுத்தபடி பேத்தியின் கையில் முத்தம் கொடுத்து விட்டு “அப்பாவையும் மன்னிச்சிடு மா” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.,
அதன் பிறகு அவர்களும் கிளம்பலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
போகும் போது ஏர்போர்ட்டில் விட்டு விட்டு போகலாம் என்று சொன்னான். சித்து தான் “பிரச்சனை இல்ல நான் போயிருவேன்”., என்று சொன்னாள்.
“நான் உனக்கு இந்த இப்பதான் பிளைட் டிக்கெட் போட்டேன்., உன்னையே ஏத்தி விட்டுட்டு நாங்க போறோம்” என்று சொன்னான்.,
” 2 மணிக்கு இங்கிருந்து கிளம்பினா சரியா இருக்கும்” என்றான்.
“நான் பார்த்துக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல., மெதுவா தான் போவேன்” என்று சொல்லி பேசியபடி அங்கிருந்து விடைபெற்று கிளம்ப தொடங்கினான்.
அதே நேரம் சந்தோஷ் இடம் இருந்து அழைப்பு வர “சந்தோஷ் கிளம்பிட்டோம்., சித்து ஏர்போர்ட் ல விட்டுட்டு., நேரே கொச்சின் தான் ., வர மிட்நைட் ஆகும்” என்று சொன்னான்.
அவன் தான் “ப்லைட் ல வந்துருடா., காரில் எப்படி குழந்தைய வைச்சிட்டு இவ்வளவு நேரம் டிராவல் பண்ண முடியும்” என்று கேட்டான்.,
“சரி யோசிச்சு சொல்றேன்” என்று சொல்லி விட்டு இங்கு டிரைவர் யாராவது கிடைப்பார்களா என்று கேட்டுக் கொண்டிருந்தான்…
நண்பர்கள் மூலமாக ஒரு டிரைவர் ஏற்பாடு செய்ய மித்ரனின் காரை டிரைவரின் கையில் கொடுத்து விட்டு அவனும் சாருவும் குழந்தையோடு., சித்துவை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்றனர்., அங்கு சித்துவிற்கு பெங்களூர் பிலைட் ஏற்றியவர்கள்., அதன் பின்பு அவர்கள் கொச்சின் நோக்கி கிளம்பினர்.
அவர்களுடைய கொச்சின் வாழ்க்கை அவர்களுக்காக காத்து நின்றது…